Sunday, December 13, 2020

ஏ.அ-55

 

இப்பொழுது நான் வாழும் வாழ்க்கை என் 25 வயதில் மேற்கொண்டது. அப்பொழுது எனக்கு வேலை கிடைக்க வில்லை,வேலை கிடைத்து 5 ஆண்டுகள் கழித்து 1980 ல் கலயாணம் ஆனது.

மனைவிக்கு கடவுள் வழிபாடு பழக்கம் இருந்தும்,என் மனம் மாறவில்லை, மனைவியின் கடவுள் வழிபாட்டில் நான் தலையிடவில்லை,பிள்ளைகள் தோன்றி வளர்ந்து படித்து தெளிவு ஏற்பட்ட பின் என்னை கேள்வி கேட்டார்கள்,

அப்பா, நீங்கள் கோயிலுக்குப் போவதில்லை,ஆனால் அம்மா எங்களை கோயிலுக்கு அழைக்கின்றாரே, நாங்கள் என்ன செய்வது?’

இந்த வயதில் தாய் சொல்லைக்கேட்டு நடப்பது தான் உங்களுக்கு நல்லது,நான், என் தாய் உள்ளவரை நான் பூஜை செய்தேன்,என் தாய் இறந்து போனதற்கு கடவுளால் தடுக்க முடியவில்லை, முடியாத கடவுளை வணங்கி பிரயோஜனம் இல்லை என உணர்ந்தேன்,எனவே நான் சுயமாக கடவுளை வணங்குவதில்லை என முடிவெடுத்தேன்.

இப்பொழுதெல்லாம் பிள்ளைகளை என் மனைவி கோயிலுக்கு அழைப்பதில்லை,அவளும் கோயிலுக்கு செல்வதில்லை.வீட்டிலும் பூஜைகள் செய்வதில்லை. வீட்டுக்கு வந்த மருமகள்களும் அப்படியே பழகிக் கொண்டார்கள்.

சரி,பேரன் பேத்திகளை எப்படி வளர்ப்பது? கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு பூஜைசெய்வது மூலம் கடவுள் நம்மை காப்பாற்றுவார் எனும் எண்ணத்தை குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும்,இது பகுத்தறிவாளர் சிந்தனை.

கடவுள் மறுப்பாளர் மனதில் இது போன்று சிந்தனை எழாது

No comments: