நான் தினமும் ஆரணி நூலகம் சென்று தினசரிகளை பார்த்து வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு பணி வேண்டி விண்ணப்பிப்பேன். அப்படி விண்ணப்பித்த போது தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அந்த வேலையும் போய்விட்டது, 20 நாட்களில் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். பின்னர் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் வேலைகிடைத்து சில அனுபவங்கள் கிடைத்தது.
பணியில் பயிற்சி (in service training) யின் போது 1984 (june &july) டெல்லி அருகே உள்ள ஹாப்பூர் எனும் நகரத்தில் 2 மாத பயிற்சி,பயிற்சி காலத்தில் உத்தர பிரதேசம் முழுவதும் 10 நாள் சுற்றுலாவில் பெற்ற அனுபவங்கள்
1989 ல் பம்பாய் சென்று 15 நாட்கள் தங்கி தமிழக அரசு சார்பாக பருப்பு கொள்முதல்,அப்போது ஜலகோவன்(பம்பாயில் இருந்து 400 கி.மி) எனும் ஊரில் 10 நாட்கள் வியாபாரி வீட்டில் தங்கியபோது கிடைத்த அனுபவம்,
1992ல் ஆந்திராவில் உள்ள விஜயவாடா எனும் நகரத்தில் 2 மாதங்கள் தங்கி காகிநாடா, ராஜமந்திரி, மிரியால் குடா, ஐதராபாத் அருகே நலகொண்டா சூரியாபெட் நகரங்களில் தங்கி ரயில் வேகன் மற்றும் லாரிகளில் அரிசி அனுப்பிய அனுபவங்கள்,1993ல் உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் 2 மாதங்கள் தங்கி வேகனில் பருப்பு அனுப்பிய அனுபவம், 1995-96ல் பம்பாய், கான்பூர், கல்கட்டா போன்ற நகரங்களில் தங்கி பருப்பு அனுப்பிய அனுபவங்கள் எல்லாம் ஒன்று திரட்டி
ஓய்வு பெற்ற 2007 ம் ஆண்டில் என் பகுத்தறிவு சிந்தனைகளை கொண்டு 2008ல் ‘ஏழாம் அறிவு இயக்கம்’ சமூக இணைய தளத்தில் வலைதளத்தை ஆரம்பித்தேன். www.thiru-rationalism.blogspot.in
இன்று வரை உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் பார்வைக்கு இந்த வலைதளம் உள்ளது.
No comments:
Post a Comment