Saturday, December 19, 2020

ஏ.அ-59

 

அந்த குடும்பத்தில் இரண்டு அண்ணன் தம்பிகள்,அண்ணன் தம்பியை அழைத்து ஒரு வேலை பணிக்கின்றார், தம்பி அந்த பணி நிமித்தம் பற்றி கேட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்ல எத்தனிக்கின்றார்,அண்ணன் தரையில் வெண் பஞ்சு மெத்தையில் அமந்திருக்கின்றார்,தம்பி,அண்ணன் முன்  தலை வணங்கி  இடது  கையை வயிற்றை ஒட்டி மடக்கி, வலது கையால் வாய் பொத்தி குனிகிறார்,அண்ணன் ஆசிர்வாதம் செய்கின்றார்.தம்பி விர்ரென புறப்பட்டு சென்றார்.

அதே நாளில் அதே வீட்டில் மாலை நான் கண்ட இன்னொரு காட்சி என்னை அசத்தி விட்டது. நான் என் இருக்கையில் அமர்ந்துள்ளேன், என் முன்னே போடப்பட்ட சோபாவில் அந்த குடும்பத்து தலைவி அமர்ந்துள்ளார்.தன் பிள்ளையோடு எதோ குடும்ப மற்றும் வியாபார பிரச்சினையை அளவளாவிக் கொண்டிருக்கின்றார்,அந்த தலைவியின் மருமகள் அந்ந மாமியாரின் காலருகே அமர்கின்றார்,உடனே அந்த மாமியாரின் கால் மற்றும் பாதங்களை பிடித்து விடுகின்றார்.

இவையெல்லாம் தன்னிச்சையாகவே நடக்கின்றன, யாரும் யாரையும்  அழைத்து என் காலை பிடித்துவிடு என சொல்லவே இல்லை. இவையெல்லாம் அந்த சமுகத்தின் கலாச்சாரம் என்பதை பின்னால் தெரிந்து கொண்டேன்.

இது ஒரு நல்ல குடும்ப கலாச்சாரமாகவே எனக்கு தோன்றுகிறது. குடும்ப அமைதிக்கு வழி வகுக்கும். பெரியவர்களின் சொல் கேட்டு நடக்கும் குணம் வளரும்.

No comments: