. கோயிலுக்கு முன் உண்டியல் கட்டிவைப்பதும் கர்ப கிரகத்தை இருட்டாக்கி அங்கே சிலைகளை நிறுவி அதற்கு வெளிச்சம் போட்டுக்காட்ட கற்பூர தீபாரதனை செய்வதற்கு பணத்தை புரோகிதர் தட்டில் போடுவதும் ஒரு சடங்காகிப் போனது. நாளடைவில் அர்ச்சகர் தட்டில் காசு போடுவது கட்டாயமாகிவிட்டது.
கிறித்துவ சர்ச்சுகளில் கூட பாவ மன்னிப்புக்கு காசு போடும் பழக்கம் இந்தியர்களிடையே வந்துவிட்டது. உண்டியல் வைப்பதும் பணம் வசூல் செய்வதும் இஸ்லாமியரிடையே காண முடிவதில்லை. மத வழிபாடுகளில் ஒழுக்க கட்டுப்பாடுகள் அதிகம் காணப்படுவது இஸ்லாம் மதத்தில் தான். சுய சிந்தனையற்ற மனிதர்களுக்கு மத ஒழுக்கமே சிறந்த தாக தெரிகிறது.
ஆறறிவு கொண்ட மனிதர்களுக்கு சுய சிந்தனை அவசியம். ஆனால் அப்படி சிந்திக்காமல்,காலம் காலமாக பெரியோர்கள்,முன்னோர்கள் காட்டியே வழியே வாழப்பழகிக் கொண்டால் பிரச்சினை இருக்காது எனும் நம்பிக்கையில் இளைஞர்கள் பழகிக் கொள்கின்றனர். இதனால் மனிதர்களிடையே ஒட்டுண்ணிகள் வளர ஆம்பித்து விட்டனர். இதன் விளைவாக கடவுளை வணங்க கூட பொது வழி பாட்டுத்தலங்களில் இடைத்தரகர்கள் உருவாகி விட்டனர்.
கடவுளை வணங்க பொது வழிபாட்டுத் தலங்களுக்கு வருபவர்களை விட, அங்கே இருக்கும் இடைத்தரகர்கள் வாழும் வாழ்க்கை வசதியாக உள்ளன. இதற்காகவே பொது வழிபாட்டுத்தலங்களை மூட வேண்டும் என ஏழாம் அறிவு இயக்கம் வலியுறுத்துகிறது. கம்யூனிச நாடுகளில் பொது வழி பாட்டுத்தலங்களை காண முடியாது.
No comments:
Post a Comment