மூன்று ஆண்டுகள் ஆய்வுக்குப்பின் கடவுள் இல்லை எனும் முடிவுக்கு வந்தேன்.
45 வருடங்களாகிறது. கோயில் சென்றதில்லை, கடவுளை வழிபட்டது இல்லை.
எனக்கு சில பிரச்சினைகள் வந்தது,கடவுளை வணங்காததால் தான் எனக்கு பிரச்சினைகள் வருகிறது என நான் நம்புவதில்லை. பிரச்சினைகள் வரும், தானாக கடந்து போகும்.அல்லது நான் பிரச்சினைகளை கடந்து விடுவேன்.
1972 நவம்பரிலிருந்து 1975ம் ஆண்டு வரை பகுத்தறிவு வளர்க்கும் நூல்களை நூலகங்களில் தேடிப்பிடித்து படிப்பேன். அதே கால கட்டத்தில் ஆனந்தவிகடன் வாரப்பத்ரிக்கையில் பகுத்தறிவு வளர்கும் தொடர்கள் வரும்,என் மனதை தொட்ட வார்தைகள் இதோ.
ஆசைகள் ,எண்ணங்கள் யாவும் மனதில் உள்ளவரை அந்த எண்ணங்களுக்கு வசீகரம் இருக்கும்,அது வாய்விட்டு வரும்போது அதன் வசீகரம் போய்விடும்.எண்ணங்கள் ஈடேறாது.
God was created by rogue-இதன் பொருள், ‘ கடவுள் ஒரு அய்யோக்கியனால் உருவாக்கப்பட்டது’ இதில் எவ்வளவு பெரிய சிந்தனை உள்ளது? என்னை சிந்திக்கவைத்த பெரிய வார்த்தைகளே இவைதான். ரூசோ எனும் ஜெர்மனி தத்துவ ஞானி சொன்ன வார்த்தைகள் என படித்திருந்தேன்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? மனிதனை கடவுள் படைக்க வில்லை,மனிதன் தான் கடவுளை படைத்தான்,அவனுடைய சுய வளர்ச்சிக்காக, உழைக்கும் மக்களை ஏய்த்து பிழைக்க மட்டுமே கடவுள் படைக்கப்பட்டார்.
அன்றிலிருந்து என் மனதில் வாழ்ந்து வந்த கடவுள் உருவத்தை துடைத் தெறிந்தேன்,
அப்பத்தான் பள்ளிக்கூட ஆசிரியர்கள் சொன்ன ‘தன்னம்பிக்கை’ என் மனதில் நுழைந்தது. அறச்சிந்தனைகள் மனதில் வளர்ந்தது. மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு அறச்சிந்தனைகளே முக்கியம் என்பதை உணர்ந்தேன். அதற்கு வலிமையான உடல் அவசியம் என்பதையும் உணர்ந்தேன்.(sound mind lies in sound body)
No comments:
Post a Comment