Wednesday, December 30, 2020

ஏ.அ-64

சீனாவுக்கு முன் லெனின் ஒருங்கிணைந்த ரஷ்யாவை நிலை நாட்டி வல்லரசாக ஆக்கினாலும் ,லெனினின் கடவுள் மறுப்புக்கொள்கையில் நாட்டமில்லா நாடுகள் பின்னாளில் பிரிந்து விட்டன என்பதை விட 1990களில் தலைமை ஏற்ற கொர்பாச்சேவ் பிரிந்து போக அனுமதித்து விட்டார்.என்றே கூறலாம்.தற்போது ரஷ்யா மட்டுமே வல்லரசாக திகழ்கிறது.

பெரியார் காலத்தில் நான்கு மொழி மாநிலம், சென்னை மாகாணமாக (Madras state) இருந்தது. நான்கு மொழி மக்களையும் ஒன்றிணைக்கும் விதமாக திராவிடர்கள்என அழைத்து திராவிடத்தை நிலை நாட்டினார். தமிழர்களைத்தவிர யாரும் திராவிடத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மொழிவாரி மாநிலம்  அமைத்த பின் எஞ்சியது மெட்ராஸ் மாகாணம்பின்னாளில் அண்ணா முதல்வர் பொறுப்பேற்ற போது,(1968) தமிழ் நாடு என மாற்றினார். 

தமிழர்களை திராவிடர் என நம்ப வைத்து தமிழ் நாட்டை தெலுங்கர்கள் ஆளும் மாநிலமாக மாற்றியது தான் பெரியாரின் தந்திரம், பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்த காலத்தில் பெரியாரின் கடவுள் மறுப்பு இயக்கம் பிசுபிசுத்து விட்டது. அண்ணா, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்என முழக்கமிட்டார்.இது மக்களிடம் ஓட்டு வாங்க பயன்பட்டது.

பெரியார் சாகும் வரை கடவுள் மறுப்பு சிந்தனையில் வாழ்ந்தாலும்,இதை சமுக இயக்கமாக மாற்ற முடியவில்லை. எந்த வீட்டிலும் கடவுள் மறுப்பு சிந்தனை இல்லை. கருணாநிதி போன்ற ஆண்கள்  கடவுள் இல்லை என மேடையில் முழங்கினார். ஆனால் வீட்டில் முழங்க முடியவில்லை, நெடுஞ்செழியன் வீட்டிலும் இதே நிலைதான்.

 

Tuesday, December 29, 2020

ஏ.அ- 63

 

இவ்வுலகில் பெரியாருக்கு முன் தோன்றிய ஐரோப்பிய கண்டத்தின் காரல்மார்க்சு (1818,மே 5,மரணம் 1883,மார்ச் 14.) தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர பாடுபட்டார், ‘மூலதனம்(das capital) எனும் தன் நூலில் பஞ்சாலைத் தொழிலாளர்களைப் பற்றி  விவரிக்கின்றார். இந்த தொழிலில் தான் வயலில் (வெய்யிலில்) பஞ்சை விளைவித்து,அதை ஆலைக்கு எடுத்துச் சென்று(நிழலில்) ஆடையாக மாற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் ஆலை முதலாளிகளின் வாழ்க்கைத் தரத்தோடு ஒப்பிட்டு எவ்வளவு கீழ் நிலை வாழ்க்கை வாழ்கின்றனர் என்பதை விவரிக்கின்றார்.

மூலதனம் எனும் நூலை அவரது நண்பர் பிரட்ரிக் எங்கல் வெளியிடுகிறார்,அப்போது தான் காரல் மார்க்சு ஒரு தத்துவ ஞானி என உலகிற்கு தெரியவந்தது.மூலதனம் நூலை என் 60 வயதில்தான் படிக்க நேர்ந்தது. 5 தொகுப்புகளை (volume) க் கொண்டது. இவருடைய கருத்துகள் ஏழாம் அறிவு இயக்கத்தின் கருத்துகளோடு ஒத்துப்போகிறது.

இவ்வுலகில் காரல் மார்க்சின் கொள்கைகளை முழுமையாக உள் வாங்கி 25 ஆண்டுகளில் ஒரு வல்லரசை நிறுவியவர் சீனாவின் மாசே துங் மட்டுமே,அவரைத்தொடர்ந்து க்யூபா நாட்டின் பிடல் காஸ்ட்ரோ.

Sunday, December 27, 2020

ஏ.அ-62

 

என்ன செய்தார்,பெரியார்? தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கப்பட்டவர்களை கடவுள் இல்லை,அந்த கற்சிலையை ஏன் நீங்கள் பார்க்க வேண்டும்? என சொல்வதற்கு பதிலாக வாங்கள்,கோயிலுக்குள் போகலாம் என கோயிலுக்குள் நுழைய முற்பட்டார்.நிலைமையை முன்கூட்டியே உணர்ந்த காவல்துறை பெரியாரையும் மற்றவரையும் கைது செய்தனர்.ஏன் இந்த நாடகம்?

கோயில்களை கட்டிக் கொடுத்து விட்டு, அர்ச்சகர்களை கற்சிலைகளுக்கு ஆராதனை செய்யட்டும் என அனுமதித்து விட்டு, வெய்யிலாளிகளில் ஒரு பிரிவினரை உள்ளே நுழையலாம்( வன்னியர்) மற்றவர்களெல்லாம் (பறையர் மற்றும் பஞ்சமர்) வெளியே நிற்க வேண்டும் என சொல்லிவிட்டனர்.உடனே வெய்யிலாளி இனத்தில் இரு பிரிவுகளாக பிரிந்து கோயில்களுக்கு முன் சண்டை இடுவதை ஆதிக்க சாதிகள் வேடிக்கை பார்த்தனர்.இதில் பெரியாரின் நயவஞ்சக செயல் கண்டிக்கத்தக்கது. பெரியார் என்ன செய்திருக்க வேண்டும்?

இரு பிரிவு வெய்யிலாளிகளையும் அழைத்து,’கடவுளே இல்லை,கோயில்களில் இருக்கும் கற்சிலைகளுக்கு உயிரோட்டம் இல்லை,அவை வெறும் கற்கள்,நீங்கள் யாரும் கோயிலுக்கு செல்ல வேண்டாம்,

அங்கே தட்டேந்தி நிற்கும் அர்ச்சகர்களுக்கு காசு போட வேண்டாம்.மொத்தத்தில் கோயிலுக்கே செல்ல வேண்டாம், கோயில்களை மூடுங்கள்.என போராடியிருக்க வேண்டும். இதை செய்திருந்தால் பெரியார் உண்மையிலேயே பகுத்தறிவாளிதான். இது போன்று கோயில்களை மூடும் போராட்டம் நடத்தியிருந்தால், அவர் சார்ந்த இன (தெலுங்கர்கள்) மக்கள் எதிர்ப்பு அதிகம் இருக்கும் என உணர்ந்து அந்த போராட்டத்தை பெரியார் முன்னெடுக்க வில்லை. இது பெரியாரின் நயவஞ்சக செயல்தானே?

Tuesday, December 22, 2020

ஏ.அ=61

 

பொது வழிபாட்டுத்தலங்களை உருவாக்கி கடவுளை வணங்கச்சொல்வது மனிதனுள் இருக்கும் கும்பல் (குழு) குணத்தை வளர்க்க உதவும்.ஒரு கும்பல் குணம் இன்னொரு கும்பல் குணத்தை ஏற்காது.இதனாலேயே உலகில் பல்வேறு குணம் கொண்ட மதங்கள் உருவாயின, சாதிகள் உருவாயின.

சாதிகளே கூடாது என சொல்லும் சாதிய தலைவர்கள், பொது வழி பாட்டுத்தலங்கள வேண்டாமென்று சொல்ல மாட்டார்கள்.கடவுள் மறுப்பு சிந்தனையாளர் என சொல்லிக்கொள்ளும் பெரியாரும் பொது வழி பாட்டுத்தலங்கள் வேண்டாமென்று சொன்னதே இல்லை.ஆனால் ஏழாம் அறிவு இயக்கம் சொல்கிறது. மக்கள் சுய சிந்தனையாளர்களாகி விட்டால் தலைவர்களுக்கு வேலையே இல்லையே. சுயமாக சிந்திக்காத தொண்டர்கள்தான் வேண்டுமென்பர் அரசியல் கட்சித்தலைவர்கள். 

பெரியார் அவர்காலத்தில்,கடவுள் இல்லை என்றுதான் சொல்ல முடிந்தது.கோயில்கள் வேண்டாமென்று சொன்னதே இல்லை.மாறாக பார்ப்பனர்கள் வெய்யிலாளி இனங்களில் விதம் பிரித்து, பறையர்களையும்,பஞ்சமர்களையும்  கோயில்களுக்குள் வரக்கூடாது என சொல்லி வந்தனர், இதனை தலைமேல் ஏற்றுக்கொண்டு, வெய்யிலாளி இனங்களில் இன்னொரு பிரிவினரான வன்னியர்களை கோயில்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் காவல் போட்டனர்.

இதை உணர்ந்த பெரியார் கடவுள் முன் மனிதர்களை சமமாக பார்க்க வேண்டுமே தவிர உழைப்பாளி மட்டம் என்றும்,ஏமாற்றி பிழைக்கும் நிழலாளிகள் எப்படி உயர்ந்தவர்களாக இருக்க முடியும்? என வினவினார்.இதனை எதிர்க்க மக்களை ஒன்று திரட்டினார்.

Monday, December 21, 2020

ஏ.அ-60

 

அப்போது நான், நம் தமிழ் குடும்பங்களின் உறவு முறைகளை நினைக்க தோன்றியது.பெரியவர்களின் சொல் கேட்டு தமிழர்கள் நடந்தாலும்,அண்ணன் தம்பிகளின் உறவுகளில் விரிசல் ஏற்படுவதை நான் உணர்ந்தேன். இதற்கு காரணம் தமிழர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் தங்களை ராஜ பரம்பரையை சேர்ந்த சத்ரியர்கள் எனும் ரத்தத்தில் ஊரிய குணம் கொண்டவர்கள் என தோன்றுகிறது.

மேலும் நமது தமிழ் மக்கள் (வன்னியர்,நாடார் மற்றும் பறையர்) உலகில் வெய்யிலாளி இனத்தைச் சார்ந்தவர்கள்.ஆதிக்க சாதிகளான முதலியார், பிள்ளைமார், செட்டியார் முதலானோர் நிழலாளி வர்கத்தை சார்ந்த தமிழர்கள்.இதில் செட்டியர், வன்னியர் மற்றும் பறையர்கள் எல்லா இந்திய மொழிகளிலும் பரவி உள்ளனர்.

தமிழர்கள் மட்டுமே சிவ வழி பாட்டாளர்கள்,அதை தெரிவிக்க நெற்றியில் சாம்பலை பூசிக் கொள்வர்..வட தமிழ் நாட்டு வன்னியர்கள் விஷ்னு வழி பாட்டாளர்கள்,அதை தெரிவிக்க நெற்றியில்  நாமம் போடுவார்கள்.கல்வியறிவற்ற வெய்ய‍லாளி இன மக்களின் கடவுள் வழிபாடு  இந்த சிவ-விஷ்ணு வழிபாட்டு முறையே காரணம்.மேலும் கடவுள் வழிபாடு என்பது மனிதனுள் இருக்கும் வியாபார குணமே.அவரவர் விட்டில் கடவுளை வணங்கலாம் என இந்த வெய்யிலாளி இனங்களுக்கு யாரும் சொல்ல வில்லை.