1- காரல் மார்க்சு இறந்து 10 ஆண்டுகள் கழித்து அவர் எழுதிய ‘மூலதனம்’ நூலை அவரது நண்பர் எங்கர்சால் வெளியிட்டார்.அந்நூல் உலகின் பலரது கவனத்தை ஈர்த்தது,குறிப்பா ரஷ்ய புரட்சியாளர் திரு லெனின் படித்தார்.ரஷ்யா பொது உடைமை நாடாக உருவெடுத்தது..முதலாம் உலகப்போரில்(1919) ரஷ்யாவின் USSR எனும் ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யாவின் வெற்றி,உலக வல்லரசு எனும் அங்கீகாரத்தை பெற்றது. அதன் பிறகு 1930களில் மாசே துங், ரஷ்ய அதிபரை சந்தித்து ஆட்சி மாற்றத்திற்கு காரணங்களை கேட்டறிந்தார். அந்நாளில் சீன மக்களை கடும் பஞ்சம் வாட்டியெடுத்தது. விவசாயிகள், பருவ மழை தவறியதால் தங்கள் நிலத்தில் குறைவாக விளைந்த உணவு தானியங்களை பூர்ஷ்வா அரசுக்கு அளித்து விட்டு தங்கள் குடும்ப உறுப்பினர்களை பசியில் வாட விட்டனர்.
2- பட்டிணியைப் போக்க மக்கள் களிமண்ணையும் அரிசித்தவிட்டையும் பிசைந்து வெய்யிலில் காயவைத்து உரலில் இடித்து புடைத்து கஞ்சி காய்த்து குடித்து வந்ந்தனர்,என தன் வரலாற்று குறிப்பில் மாசேதுங் குறிப்பிடுகிறார். விவசாயிகளை துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் ஏந்தி அரசுக்கு எதிராக போராட வைத்தார்.இதற்காக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி 25 ஆயிரம் மக்களை ஒன்று திரட்டி 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பல நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார்.பசியாலும் பட்டிணியாலும் பல உயிர்களை இழந்து சில ஆயிரம் மக்கள் மட்டுமே வட சீனாவை சென்றடைந்தனர்,. மக்களுக்கு போராடும் உணர்வை ஊட்டி வளர்த்தார்.
No comments:
Post a Comment