காந்தாரத்தை தலைமை இடமாக கொண்டு சத்ரியர்கள் வாழ்ந்து வந்தனர்.ஆரப்பா மொகஞ்சாதோரோ ,சிந்து சமவெளி நாகரிகம் என பள்ளி பாடத்தில் படித்திருப்போம்,அது தமிழர் நாகரிகம் தான்.
தமிழை தாய் மொழியாக இல்லாத வரலாற்று அறிஞர்களுக்கு தமிழர் நாகரிகம் என சொல்ல மனம் இல்லை,அதற்கு திராவிடம் என பெயர் சூட்டினர். இப்பொழுதும் தமிழை முன்னிறுத்த மனமில்லா தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கு அரசியல்வாதிகள் திராவிட மண்,திராவிட இனம் என சொல்லி மக்களை குழப்புகின்றனர்.
இந்தியாவெங்கும் அகழ்வாரய்ச்சி, மற்றும் கல் வெட்டு,தாமிர பத்திரம் எல்லாவற்றிலும் தமிழ் வட்டெழுத்து மற்றும் சமத்கிருத நெட்டெழுத்துக்களே, இதை தமிழ் பிராமி ஸ்கிரிப்ட் என அழைப்பர். இந்தியாவில் மொத்தம் இந்தி உட்பட18 அங்கிகரிக்கப்பட்ட மொழிகள் உள்ளன.தமிழ் வட்டெழுத்து,சமத்கிருதம் நெட்டெழுத்து ஏன்?
தமிழர்கள் கற்பாறையில் எழுத்துக்களாக தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தினர்,இது கற்கால நாகரிகம்.பின்னாளில் தோன்றிய மொழி சமத்கிருதம்,இம்மொழி இனத்தவர் பனை ஓலையில் எழுத்துக்களை எழுதி தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தினர்.அதனால் பனை ஓலையில் குறுக்காக கோடு கிழிக்க முடியாது காரணம்,பனை ஓலையில் படுத்த வாக்கில் நரம்புகள் இருப்பதால் ஓலை கிழிந்து விடும்,எனவே சமத்கிருத எழுத்துக்கள் நெடுவாட்டில் உருவாக்கினர்.இதிலிருந்து என்ன தெரிகிறது?
No comments:
Post a Comment