Sunday, October 18, 2020

ஏ.அ-18

கேள்வியுற்ற கிருஷ்ண தேவராயர்,விஸ்வநாத நாயுடு தலைமையில் பள்ளர் ,மல்லர் அருந்ததியர் போன்ற மக்களை படை வீரர்களுக்கு உதவியாக இருக்க அனுப்பிவைத்தார். நாளடைவில் அவர்களுடைய உறவினர்கள் தமிழகம் முழுவதும் வந்து குடியேறிவிட்டனர்.மதுரையை தலைநகராக கொண்டு திருமலை நாயுடு(நாயக்கர்) 400 ஆண்டுகளுக்கு முன் ஆண்டார். இன்று தமிழக அரசியலில் களமிறங்கி தமிழகத்தை ஆளத்துடிக்கும் வைக்கோ, விஜயகாந்த் போன்றோர் தெலுங்கர்களே.

பெரியாருக்கு முன் ஒன்றிணைந்த நான்கு மாநிலங்களையும் முதல்வர் பொறுப்பு வகித்தவர்கள் தெலுங்கர்களே.குமாரசாமி ராஜா,ஓமந்தூர் ராமசாமி ரெட்டி,பிரகாசம் நாயுடு போன்றோர், தமிழ் நாட்டில் தெலுங்கர்கள் காலூன்ற வழி வகுத்தவர்கள்.இன்றும் ஆந்திர மாநிலத்தில் ராயலசீமா ராஜாக்கள்,கம்ம நாயுடுகள், தெலுங்கானா ரெட்டிகள் போன்ற சாதிகள் பலம் வாய்ந்தவையாக திகழ்கின்றன..

இந்தியாவில் மொழி வாரி மாநிலங்கள் தோன்றிய பின் சாதி வாரி மாநிலங்கள் தோன்றின. அரியானா, உத்தர்பிரதேசம்,பிகார் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநில மக்கள்  யாவரும் பயன்படுத்தும் இந்தி மொழியும் அதன் எழுத்து வடிவங்களும் ஒன்றே.ஆனால் அவைகள் நான்காக ஏன் பிரிந்தன? எல்லாம் சாதிய பாகுபாடுதான்.

நான்கு மாநிலங்களிலும் வெய்யிலாளி இனங்களான யாதவர்கள் எனும் இடையர்கள் அதிகம் காணப்பட்டாலும் அதே வெய்யிலாளி இனமான குர்மிக்கள் பிகாரில் அதிகம் வாழ்கின்றனர்.உத்தர பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் உள்ளனர். அரியானாவிலும் மத்திய பிரதேசத்திலும் சவுத்தாலா (சத்ரியர்) மற்றும் சிங் சாதிகள் (இவர்கள் தமிழ் நாட்டில் உள்ள வன்னியர்களைப் போன்றவர்கள்) அதிகம் வாழ்கின்றனர்.மொழிவாரி மாநிலம் மாறி சாதி வாரி மாநிலங்களாக மாறிவிட்டன,ராஜஸ்த்தானில் ராஜபுத்திர இன மக்கள் அதிகம் இருப்பதால் அது சாதி சார்ந்த மாநிலமாகிவிட்டது.குஜராத்தில் படேல் இன மக்கள் அதிகம் வாழ்வதால் அதுவும் சாதி சார்ந்த மாநிலமாக மாறிவிட்டது.

 

No comments: