Wednesday, October 14, 2020

ஏ.அ-15

 

மாணவர்களுக்கு தமிழ் இலக்கியங்களை சொல்லித்தரும் ஆசிரியர்களுக்கு, திருக்குறளில் வரும் சிற்றினம் சேராமைஅதிகாரத்தை சிறிய சாதி அல்லது கீழ் சாதி அல்லது ஒடுக்கப்பட்ட சாதிகள் என பொருள் படும்படி மாணவர்களுக்கு சொல்லித்தர கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

திருக்குறள் மட்டுமல்ல உலக நீதி, நாலடியரில் வரும் சிற்றின சொல்லும் கீழ் சாதி அல்லது தீண்டத்தகாத சாதி கொண்டவர்கள் என மாணவர்களுக்கு சொல்லக்கூடாது என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

இதன் காரணமாக தமிழக கிராம தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் செருப்பு போட்டு நடக்க தைரியம் வந்தது.

பெரியாரின் திராவிட இயக்கம்,அவர் தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டிருந்தாலும், தமிழ் நாட்டு மக்கள் மட்டுமே திராவிட சிந்தனைகளை ஏற்றுக் கொண்டனர். ஆனால் குடும்ப உறுப்பினர்களுக்கு பகுத்தறிவு சிந்தனைகளை எவ்வாறு புகட்டுவது என சொல்ல தவறிவிட்டார் அல்லது சொல்லத் தெரியவில்லை எனக்கூட சொல்லலாம்.காரணம்,தனக்கென பெரியார் குடும்ப அமைப்பை ஏற்படுத்திக்கொள்ள வில்லை, அதாவது மகன், மருமகள், மகள், மருமகன் என தோன்றியிருந்தால் அவருடைய கடவுள் மறுப்பு சிந்தனை தோல்வி கண்டிருக்கும்,அல்லது கடவுள் மறுப்பு சிந்தனையை குடும்ப உறுப்பினர்களிடையே எப்படி பயன்படுத்துவது என சிந்தித்திருப்பார்.இதன் காரணமாக தமிழர் குடும்பங்களில் கடவுள் மறுப்பு சிந்தனை மறைந்து விட்டது. 1930களில் இருந்த தென்னிந்தியா பின்னாளில் மொழி வாரியாக மாதிலங்கள் பிரியும் என சமுதாயத் தலைவர்களுக்கு எண்ணத் தோன்றவில்லை.

தீண்டாமையும் வேண்டாம்,தீண்டுதலும் வேண்டாம்,ஏழாம் அறிவு இயக்கம் இதைத்தான் வலியுறுத்துகிறது...கணவன் மனைவி தீண்டிக்கொண்டால் போதும்,தாயும் சேயும் தீண்டிக்கொண்டால் போதும்..

No comments: