1- மேலை நாடுகளில் உள்ள பொது வழிபாட்டுத் தலங்களில் சிலை ஊர்வலம், பாதிரியர்கள், மற்றும் இமாம்களை பல்லக்கில் வைத்து சுமப்பதில்லை, அவர்கள் அறிவாளிகளாகவும் மகிழ்ச்சியாகவும் வாழத்தானே செய்கின்றனர். இங்கு இதைப்பற்றி பேசினால் நமது கலாச்சாரம் வேறு,அவர்கள் கலாச்சாரம் வேறு என நம்மவர்கள் திசை திருப்புவர்.நம்மில் கலாச்சார புரட்சி ஏற்படுவது எப்பொழுது?
2- உலகில் கலாச்சார புரட்சி ஏற்படுத்திய முதல் மாமனிதர் சீனாவின் மாசேதுங் மட்டுமே.1950 களில் ஆரம்பித்து 1975ல் கலாச்சார புரட்சி முடிவுக்கு வந்தது, இன்றும் அதன் தாக்கம் தொடர்கிறது. மக்களை பொது உடைமை சிந்தனைக்கு கொண்டு சென்று வெற்றயடைந்த மக்கள் தலைவர் மாசே துங்க மட்டுமே.
3- காரல் ஹூன்ரிச் மார்க்ஸ் 1818 ம் வருடம் மே 5 ம் தேதி பிறந்தவர்.யூதர்.இவருடைய தந்தை ஒரு வழக்குறைஞர்,பின்னாளில் இவரும் வழக்குறைஞர் பட்டம்பெற்றார்.சுரங்கத்தொழிலாளர்களும்,பஞ்சாலைத்தொழிலாளர்களும் வறுமையில் வாழ்வதும் அவர்கள் முதலாளிகள் செல்வச் செழிப்பில் உலா வருவதையும் கண்ணுற்ற மார்க்சு தொழிலாளர் சங்கம் ஆரம்பித்தார். பத்திரிக்கைகளுக்கு தொழிலாளர் நலம் சார்ந்த கட்டுரைகள் வெளியிட்டதில் மக்களின் கவனத்தை ஈர்த்தார்,தனது 29 வயதில் அவர் எழுதிய நூல் ஒன்று அரசாங்கத்தையே உலுக்கியது. தனது 50 வயதில்(1867) ‘மூலதனம்’(capitol) எனும் தத்துவ நூலை வெளியிட்டார். இன்றளவும் அந்நூல் உலக பொதுவுடைமை தத்துவங்களை பறைசாற்றும் வேத நூலாக விளங்குகிறது.1883 ம் ஆண்டு மார்ச் 14ந்தேதி சாய்வு நாற்காலியில் படித்துக்கொண்டே இறந்து போனார்.
No comments:
Post a Comment