இப்பொழுதெல்லாம்,மனிதன் நூல்களை தேடிப்போக வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது, சட்டைப் பையில் வைத்துள்ள செல்லிடப்பேசியில் அனைத்து விதமான நூல்களும் இலவசமாக படிக்க முடிகிறது. படிப்பதற்கு ஆர்வம் தான் தேவைப்படுகிறது.
நான் ஜூலை-ஆகத்து2019 ல் மகன் வினோத் வீட்டில் 20 நாட்கள் தங்கி,பிரான்சு நாட்டில் ஈபில் கோபுரம் மற்றும் அருகில் இத்தாலியில் உள்ள ரோமா நகரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பு குழைத்து கட்டப்பட்ட உலக அதிசயங்களான மிகப் பெரிய உள் விளையாட்டரங்கம், (கொலாசியம்)பழைமையான கட்டிடக்கலைக் கொண்டது. கண்டு ரசித்தேன்.ரோமில் இருந்து 300 கிமி தொலைவில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான பைசா நகரத்து பளிங்கு கல்லால் ஆன சாய் நிலை கோபுரம்,இது அருகில் உள்ள சர்ச்சுக்காக கட்டப்ட்ட மணி கூண்டு.இவைகளை கண்டு களித்தோம்.சாய்ந்த நிலையிலும் அந்த கோபுரத்தின் மீது கீறலோ,ஓட்டையோ,விரிசலோ காண முடியவில்லை, அதனால்தான் அது உலக அதிசயமாக திகழ்கிறது.
பிரான்சின் டொலூசு எனும் நகரத்தில் பழம்பெரும் கட்டிடங்களை உள்ளடங்கிய தொழில் நகரம் உள்ளது,மாலை நேரத்தில் அங்கே உள்ள பூங்காவில் ஊர்மக்கள் உலா வருகின்றனர்.அந்த பூங்காவில் ஆறு அடி உயரமுள்ள 3 அடி அகலம் கொண்ட புத்தக அலமாரியில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அங்கே வருபவர்கள் வெட்டியாக பொழுதை கழிக்காமல் அந்த நூல்களை படித்து விட்டு ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டு செல்கின்றனர்.என்ன ஒரு நாகரிகம்? பழம்பெரு நாடு என நாம் பெருமை படுவதில் அர்த்தமே இல்லை.
தமிழ் இலக்கியங்கள் என சொல்லப்படும் எல்லா நூல்களுமே அருவ சிந்தனைகளை தூண்டும் மூட நம்பிக்கை நூல்கள் தான்.அவற்றுள் சிறந்தவை, பொருளியல் தன்மை கொண்டவை மற்றும் அறச்சிந்தனை வளர்க்கும் நூல்களாக திகழ்பவை திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரம் என சொல்லலாம் நிகழ்கால நூல்கள் என்பது பாரதிதாசன் கவிதைத் தொகுப்புகள் மற்றும் அவர் எழுதிய கட்டுரைகளை குறிப்பிடலாம்.
திருக்குறள் என்பது பல தரப்பட்ட கருத்துக்கள் உள்ளடங்கிய ஒரு நூல்.பல புலவர்களால் அறவழி சிந்தனைகளை குறள் மூலம் வகுத்துள்ளனர்.குறட்பா என்பது 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களிடையே பேச்சு வழக்காக, கருத்து பரிமாற்றம் கொண்டதாக இருந்துள்ளது
No comments:
Post a Comment