Friday, October 23, 2020

ஏ.அ-23

 

1-   வால்மீகி ராமாயணம் 3000 ஆண்டுகளுக்கு முந்தையது. சமத்கிருதத்தில் எழுதப்பட்ட ஓலைச்சுவடி.கம்ப ராமாயணம் 800 ஆண்டுகளுக்கு முந்தையது

2- இந்திய மொழிகளில் எழுதப்பட்ட முதலாவது தமிழ் நூல் கம்ப ராமாயணம், 800 ஆண்டுகளுக்கு முந்தையது.பின்னாளில் துளசிதாசர் இந்தியில் எழுதினார்.இது 300 ஆண்டுகளுக்கு முந்தையது

3-   சரி, இந்த மூன்று இனங்களுக்கும்(பார்ப்பனர்,சத்ரியர் மற்றும் வைசியர்) சோறு படைப்பது யார்? வெய்யிலாளிகள் தான். வெய்யிலாளிகளை மூளைச்சலவை செய்வது எப்படி? அதற்குத்தான் பொது வழிபாட்டுத் தலங்கள் உருவாக்கப்பட்டது. பொது வழிபாட்டுத் தலங்களை அமைத்து கடவுளர் சிலைகளை நிறுவி அதற்கு கும்ப அபிஷேகம் செய்ய வேண்டும் என விதிகளை வகுத்துக் கொண்டனர்.

4-   உழைப்பாளிகள் குடும்பத்தோடு கோயிலுக்கு வந்து சாமி சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்தால் வீட்டில் பால் பொங்கும் என சொன்ன பார்பனர்களை நம்பி உணவுப்பொருட்களை வீணாக்குகின்றனர்..

பாலபிஷேகம்,அன்னபிஷேகம்,புஷ்ப்பபிஷேகம் என்பது மட்டுமல்ல கர்ப கிரகத்தில் ஒரு சிலையை நிறுவி விட்டு, இன்னொரு உலோகத்தாலான (பஞ்ச உலோகம்) சிலைக்கு தங்க நகைகளை அணிவித்து, மலர்களால் அலங்கரித்து ஊர்த் தெருக்களில் உழைப்பாளிகளில் சத்திரியர்களைக் கொண்டு பல்லக்கு சுமக்க வைத்தனர், பல்லக்கில் பார்ப்பனர்களும் உட்கார்ந்தால் தான் தட்டில் விழும் இளிச்சவாய்த் தமிழர்களின் காசு கிடைக்கும்.அதே இளிச்சவாய்த் தமிழர்களின் தோள்கள் மீது இன்றும் பல்லக்கு சவாரி செய்வதை எந்த அரசும் கண்டு கொள்வதில்லை,ஏன் சுமக்க வேண்டும் என்று எந்த உழைப்பாளியும் சிந்திப்பதில்லை

No comments: