Thursday, October 22, 2020

ஏ.அ-22

 

இவையெல்லாம் நமக்கு கிடைக்க வில்லை,பனை ஓலை சேகரிப்பில் கிடைத்தது 1330 குறட்கள் மட்டுமே.இவையனைத்தையும் பரிமேலழகர் தொகுத்து கூடவே ஒரு கடவுள் வாழ்த்து அதிகாரத்தையும் (10 குறள்) சேர்த்து விட்டார். உண்மையில் 1320 குறட்கள் மட்டுமே பயனுள்ளது. குறட்பா என்தால் திருக்குறள் என பெயரிட்டார். திருவள்ளுவர் எழுதியதாக உலகுக்கு சொல்லிவிட்டார். பரிமேலழகர் காலம் கிபி 10 ம் நூற்றாண்டு.அதையே பின்பற்றி நாமும் திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார் என சொல்லித்திரிகிறோம்.

கம்பன் காலத்துக்குப்பின் (12ம் நூற்றாண்டு) பரிமேலழகர் காலத்தில் குறள் தொகுப்பை ஒருவரே எழுதியிருப்பார், அவர் திருவள்ளுவராக இருக்கட்டும் என தமிழுக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்து அவருக்கு தாடி குடுமி வைத்து 20ம்  நூற்றாண்டில் இப்போது காணப்படுவது போல் உருவம் தீட்டினர்.

இந்த திருக்குறளை நான் அறவழி சிந்தனைக்கு உட்படுத்தி, ‘பகுத்தறிவாளர் பார்வையில் (திருக்) குறள் எனும் நூலை உருவாக்கியுள்ளேன்.அதில் 90 குறட்பாக்கள் மட்டுமே அருவ சிந்த்னையை தூண்டுவதால் அவைகளை மாணவர்கள் கற்க தகுதியற்ற குறட்கள்என பிரித்துவிட்டேன். மேலும் பதின்ம வயது மாணவர்கள் கற்க இன்பத்துப்பால் என கூறப்படும் காமத்துப்பால் குறட்களை நீக்கி விட்டேன்.இக்கால வரைமுறையற்ற இளவயது மாணவர்கள் காதல் மோகத்தால் கெட்டு சீரழிவதை தடுக்கவே அவ்வாறு செய்தேன்.மொத்த குறள்களையும் கல்லூரி மாணவர்கள் கற்கலாம்.

No comments: