Monday, October 19, 2020

ஏ.அ-19

 

ஆந்திராவில் அதுபோன்று சாதி வாரி மாநிலம் வேண்டும் என ரெட்டி இன மக்கள் 50 வருடங்களாக போராடி கம்மநாயுடுகள் அதிகம் வாழும் ஆந்திரத்திலிருந்து தெலுங்கானா பிரிந்து ரெட்டிகள் மாநிலமாக மாறிவிட்டது.

ஆந்திரத்தின் தென் மேற்கு மாவட்டங்களான கடப்பா,கர்னூல்,சித்தூர் தெலுங்கு வன்னியர்கள் (ராஜா மற்றும் வர்மாக்கள்) அக்னி குல சத்ரியர்களாக வாழ்கின்றனர்,தமிழ் நாட்டின் வட மாவட்டங்களான விழுப்புரம்,சேலம்,தர்மபுரி, கிருஷ்ணகிரி,வேலூர் ,காஞ்சி புரம்,திருவள்ளூரில் வன்னியகுல சத்ரியர்கள் அதிகம் வாழ்கின்றனர்,இவர்களுக்கு ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? நாம கையை உழைத்தால் கஞ்சி என வானம் பார்த்த பூமியில் வாழும் மனிதர்கள்.வெய்யிலாளி இன மக்கள்.

வெய்யிலாளி இன மக்கள் தனி மாநிலம் கோரமாட்டார்கள், தங்களை தாங்களே ஆளத்தெரியாத மக்கள்.யாராவது நிழலாளி மக்களில் யாரோ ஒரு தலைவர்  போராட்டத்தை தூண்டி விட்டால் ஆட்டு மந்தைகள் போல் கலந்து கொண்டு,காவல் துறையிடம் அடி உதை வாங்கி வருவார்கள்.உலகெங்கும் உள்ள வெய்யிலாளி இன மக்கள் நிலை இப்படித்தான் உள்ளன.

No comments: