உலகெங்கும் வாழும் வெய்யிலாளி மக்களின் கொள்கை.அது ஏன் மழுங்கி விட்டது. மாசே துங்ககுக்கு பின் ஒரு இளைஞன் கூட உருவாக வில்லை.தற்பொழுது வட கொரியா அதிபராக ‘கிம் ஜோங் உன்’ துடிப்பாக உள்ளார்.இவர் மாசேதுங் உருவம் போல் தோற்றமளிக்கின்றார். வட கொரியாவை தொடர்ந்து கம்போடியாவிலும் கெமர் ரூச் சர்வாதிகார ஆட்சிக்குப்பின் போல்பாட் தலைமையில் பொதுவுடை ஆட்சி நடைபெற்றது, தற்போது ராணுவ ஆட்சி நடக்கின்றது.பொது உடைமை கொள்கைகளை ஊடகங்கள் விரும்புவதில்லை, ஊடகங்களை நடத்தும் தனி முதலாளிகள் பெரும் பணக்காரர்களே, அதனால் அது மக்களிடம் சென்றடைய வில்லை.
ஊடக முதலாளிகள், நிழலாளிகள்தானே? மற்ற நாடுகளுக்கு பரவாமல் பார்த்துக் கொள்கின்றனர். குறிப்பா முதலாளி நாடுகளின் தலைவனான அமெரிக்கா, இல்லாத கடவுளின் ஆதரவாளன். அதே எண்ணம் கொண்ட இஸ்லாமிய நாடுகளும் முதலாளித்துவ நாடுகளே.
சீனாவின் அசுர பலத்தைக் கண்டு தற்போது எல்லா வல்லரசுகளும் அஞ்சுகின்றன.தன்னுடைய பொது உடைமை கொள்கைகளை வட கொரியாவில் மட்டுமே பரவச் செய்ய முடிந்தது.தென்கொரியாவை தன்னுடைய முதலாளித்துவ கொள்கைக்கு அமரிக்கா அடிமையாக்கிவிட்டது.. சீனாவிற்கு எல்லையோர நாடுகள் என சொல்லிக்கொள்ள வட கொரியா,திபெத், மற்றும் இந்தியாவின் எல்லையோர மாநிலமான அருணாச்சல பிரதேசம் மட்டுமே