சீனாவுக்கு முன் லெனின் ஒருங்கிணைந்த ரஷ்யாவை நிலை நாட்டி வல்லரசாக ஆக்கினாலும் ,லெனினின் கடவுள் மறுப்புக்கொள்கையில் நாட்டமில்லா நாடுகள் பின்னாளில் பிரிந்து விட்டன என்பதை விட 1990களில் தலைமை ஏற்ற கொர்பாச்சேவ் பிரிந்து போக அனுமதித்து விட்டார்.என்றே கூறலாம்.தற்போது ரஷ்யா மட்டுமே வல்லரசாக திகழ்கிறது.
பெரியார் காலத்தில் நான்கு மொழி மாநிலம், சென்னை மாகாணமாக (Madras state) இருந்தது. நான்கு மொழி மக்களையும் ஒன்றிணைக்கும் விதமாக ‘திராவிடர்கள்’ என அழைத்து திராவிடத்தை நிலை நாட்டினார். தமிழர்களைத்தவிர யாரும் திராவிடத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மொழிவாரி மாநிலம் அமைத்த பின் எஞ்சியது ‘மெட்ராஸ் மாகாணம்’ பின்னாளில் அண்ணா முதல்வர் பொறுப்பேற்ற போது,(1968) தமிழ் நாடு என மாற்றினார்.
தமிழர்களை திராவிடர் என நம்ப வைத்து தமிழ் நாட்டை தெலுங்கர்கள் ஆளும் மாநிலமாக மாற்றியது தான் பெரியாரின் தந்திரம், பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்த காலத்தில் பெரியாரின் கடவுள் மறுப்பு இயக்கம் பிசுபிசுத்து விட்டது. அண்ணா, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என முழக்கமிட்டார்.இது மக்களிடம் ஓட்டு வாங்க பயன்பட்டது.
பெரியார் சாகும் வரை கடவுள் மறுப்பு சிந்தனையில் வாழ்ந்தாலும்,இதை சமுக இயக்கமாக மாற்ற முடியவில்லை. எந்த வீட்டிலும் கடவுள் மறுப்பு சிந்தனை இல்லை. கருணாநிதி போன்ற ஆண்கள் கடவுள் இல்லை என மேடையில் முழங்கினார். ஆனால் வீட்டில் முழங்க முடியவில்லை, நெடுஞ்செழியன் வீட்டிலும் இதே நிலைதான்.