இப்பொழுது வட கொரியாவை ஆண்டு கொண்டிருக்கும் கி.ஜோ.உன் வட கொரியாவின் மூன்றாம் தலைமுறை.அந்நாட்டு மக்கள் மன்னராட்சியை விரும்புகின்றனர்,
மன்னராட்சியில் ஜனநாயகம் தழைப்பது என்பது அபூர்வம்.ஆனால் மக்கள் சுதந்திர வாழ்க்கையில் இந்த மன்னர் தலையிடுவதில்லை.அந்நாட்டில் பொது உடைமை கொள்கை இருக்க வேண்டும் என மன்னர் விரும்புகிறார், மக்களும் மன்னரை நேசிக்கின்றனர். தனக்கென சொத்து சேர்த்துக் கொள்ளாத கொரிய நாட்டு மன்னர்கள்.
அம்மா அப்பா நினைவு நாள்
எனக்குள் ஒரு மூட நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது.எங்க அம்மா இறந்த பின் ஆண்டுதோறும் அம்மாவின் நினைவு நாளை அனுசரிக்க வேண்டும் என்பது எனது ஆசை.அம்மா இறந்த அடுத்த 1973ம் ஆண்டு அம்மா இறந்த அதே நாளில் திதி,வரவில்லை.மாறாக ஒரு 20 நாட்கள் தள்ளி அன்று தான் அம்மாவுக்கு திதி கொடுக்க வேண்டும் என என் அண்ணாவிடம் அய்யர் சொல்லி அனுப்பினார். நானும் சரி வரட்டும் நாம் ஏன் இந்த நாளை தள்ளி நினைவுநாள் அனுசரிக்க வேண்டும் என தெரிந்து கொள்ள விரும்பினேன்.
அய்யரும் வந்தார். நான், ‘அய்யரே, உலகமெங்கும் இறந்தவர்களின் நினைவு நாளை அதே நாளில் ஆண்டுதோறும் அனுசரிக்கின்றனர்,ஆனால் இந்து மதம் மட்டும் ஏன் திதி என சொல்லி நாளை தள்ளி அனுசரிக்கின்றனர்?’
அதற்கு அவர்,’இறந்தவர்கள் இறந்த நாளில் தோன்றும் வளர் பிறையோ அல்லது தேய் பிறையோ அடுத்த ஆண்டு அதே மாதத்தில் வரும் வளர்பிறையில் வரும் நாளை திதி என்போம்,அன்று (அம்மா இறந்தது,தேய்பிறை தசமி) வளர்பிறை வரும் நாளை அனுசரிப்பது என்பது காலம் கலமாக முன்னோர்கள் வகுத்த விதி’ என்றார்.
நானும் அவர் சொல்வதை ஏற்றுக் கொண்டேன். ஆனால் அடுத்த ஆண்டு 1974 ல் வரும் கார்த்திகை மாதம் வளர்பிறையில் தசமி திதி அன்று காத்திருந்தேன். அய்யர் வரவே இல்லை.. நாங்களே நடுவீட்டில் இலைபோட்டு உறவினர்களுக்கு உணவளித்து விரதத்தை முடித்தோம். ஆனால் அய்யர் கார்த்திகை திதி தேய்பிறை தசமி திதியன்று வந்தார்.
‘சென்ற ஆண்டு வளர்பிறை தசமி என்றீர்கள்,இந்த ஆண்டு தேய்பிறை தசமி அன்று வந்துள்ளீர்கள் ஏன்?’
No comments:
Post a Comment