இதற்கிடையே நமது மக்கள் பழமை கை வைத்தியங்களான வேப்பிலை,மஞ்சள் தான் இதற்கு மருந்து என வீடுகளில் புழங்க ஆரம்பித்துவிட்டனர். இந்தியாவில் விஷகிருமிகள் தாக்குதல் மற்ற நாடுகளை விட மிக மிக குறைவு என்பதே உண்மை.
உலக வரலாற்றில் மனித குலத்தை அவ்வப்போது ஆட்டிப்படைப்பது,இந்த நுண் கிருமி(virus) மற்றும் நுண் உயிரி(bacteria)களே.40 அல்லது 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை மனிதர்கள் மீது படையெடுக்கும். காலரா மற்றும் மலேரியா பாட்டீரியாவால் வருவது, டைபாய்டு மற்றும் காய்ச்சல் வருவது வைரஸ் ஆல் என கண்டறியப்பட்டுள்ளது.
பெரும்பாலான சாதாரண வியாதிகளுக்கு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு,மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. எய்ட்ஸ் ,புற்று மரண வியாதிகளுக்கு இன்னும் தடுப்பூசி கண்டறிய முடியவில்லை,
அது போன்று தான் இந்த கொரானா நுண்கிருமி உள்ளது.காலரா போன்ற வயிற்றுப் போக்குக்கு வேப்பிலை மருந்தாக இருக்கும் என நினைத்து அதை பன்னெடுங்காலமாக இந்தியர்கள் பயன் படுத்தி வருகின்றனர்,அது போன்று தான் கொரானா இருக்கும் எனும் நினைப்பில் தற்போது வீடு தோறும் வேப்பிலைகளை கட்ட ஆரம்பிக்கின்றனர்.
வேப்பிலை என்றதும் நம் மக்களுக்கு மாரியம்மன் நினைவு வந்துவிடும்.ஆனால் நோயின் தாக்கம் அதிகமாகிறதே தவிற குறைந்தபாடில்லை.சரி ,அந்த மாரியம்மனை வணங்கினால் சரியாகிவிடும் என நினைப்பவர்கள்,இன்னும் ஏன் தங்கள் நிலைகளை மாற்றிக்கொள்ள வில்லை? .....சரியான கல்வியறிவு இல்லை.
இதை எந்த அரசியல் தலைவர்களும் உணர்ந்த பாடில்லை. காரணம் சரியான படிப்பறிவு தந்தால் வெய்யிலாளி இனங்கள் தங்களை எதிர்க்க நேரிடும் என்பதால். உலகில் கடவுள் நம்பிக்கை கொண்ட நாட்டுமக்கள் நிலையும் இதே போன்றுதான்.
No comments:
Post a Comment