Wednesday, November 11, 2020

ஏ.அ-39

 

பள்ளி நாட்களில் புத்தரைப்பற்றிய பாட நூல் நமக்கு இருக்கும்.அந்நூலில் புத்தர் தன் 30 வயதில் போதி மரத்தடியில் ஞானோதயம் பெற்றார்என படித்திருப்போம். பல ஆண்டுகளாக இப்படித்தான் படித்திருப்போம். நாமும் ஞானோதயம் என்றால் என்ன என ஆசிரியர்களை கேட்டிருக்க மாட்டோம். ஆசிரியர்களும் ஞானோதயம் என்றால் சுய சிந்தனை,பகுத்தறிவு என நமக்கு சொல்ல மாட்டார்கள்.

அந்நாளில் நான், போதி மரம் என்றால் மனிதனுக்கு அறிவு புகட்டும் மரம் என நினைத்திருந்தேன். அதாவது புத்தர் போதி மரத்தடியில் தவமிருந்த காரணத்தாலே அவருக்கு அறிவு வந்தது என நினைத்திருந்தேன். வெகு நாட்களாக போதி மரம் என்றால் எப்படி இருக்கும் என யாரும் எனக்கு சொல்லியது இல்லை.

30 வயதில் புத்தர் ஞானோதயம் பெற்றதாக சொல்லப்பட்ட அந்த போதி மரத்தை புத்த கயா சுற்றுலா சென்ற போது பார்த்தேன்...... அது அரச மரம்! நிழலுக்காக புத்தர் இளப்பாறிய மரம் அவ்வளவே! புத்தர் ஒரு அரசர்,அந்த மரத்தின் கீழ் ஓய்வு பெற்றதால் அரசமரம் என பெயர் வந்திருக்கும்

No comments: