Monday, November 2, 2020

ஏ.அ-30

 

இந்தியாவின் வலிமையான எதிர்ப்பால் அருணாச்சலத்தில் சீனாவால் நுழைய முடியவில்லை. திபெத் மக்களின் மூட நம்பிக்கைகளை கண்டு சீனா எரிச்சலடைந்து வருகிறது.கடந்த 60 ஆண்டுகளாக சீன படைகள் திபெத்தில் ஊடுருவி ஆட்சி அதிகாரத்தில் தலையிடுகிறது.

இதனால் திபெத் மக்களின் தனித்தன்மையான மூட நம்பிக்கைகள் கேள்விக்குரியாயின. புத்த மதம் என்பது இந்து மத மூட நம்பிக்கைகளை எதிர்த்து புத்தரால் ஆரம்பிக்கப்பட்டது. புத்தரின் கொள்கைகளான உருவ வழிபாடு மறுத்தலை புறந்தள்ளி,புத்தரையே சிலைவடித்து(கடவுளாக்கி) வணங்க ஆரம்பித்தனர். இதனால் மீண்டும் புத்த மத மக்கள் மூட நம்பிக்கைகளுக்கு தங்களை உட்படுத்திக் கொண்டனர்.

சிலைமுன் கற்பூரம் தீபாரதனை செய்வது இல்லையே தவிர,மற்ற அருவ சிந்தனைகளை இந்து மத மக்களைப்போல்  போல் பழகிக் கொண்டனர்.

திபேத்தியர்,உடல் நிலை பாதிக்கப்பட்டால் மருத்துவரை தேடி செல்ல மாட்டார்கள்,புத்தரே தங்கள் உடல்களை பாதுகாப்பார் எனும் நம்பிக்கையோடு வாழ்க்கையை முடித்துக்கொள்வர். இது சீன ஆட்சியாளர்களுக்கு எரிச்சலைத்தருகிறது.

கம்யூனிச(பொது உடைமை) நாடுகளைப்போல் மற்ற நாடுகள் தங்கள் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை மாறுதல் செய்ய வேண்டும்.துடிப்புள்ள மாணவர்களை உருவாக்கினால் அவர்களிலிருத்து மாசேதுங்போல், அல்லது பிடல்காஸ்ட்ரோ போல் அல்லது கிம் ஜோங் உன் போல் பொது உடைமை தலைவர்கள் உருவாகலாம்.அப்பொழுது உலக மக்களின் சமுக ஏற்றத் தாழ்வுகளை களையமுடியும். அடிப்படை கட்டமைப்புகளை மாற்ற மாணவர் பாடத் திட்டங்களை மாறுதல் செய்வதே சிறந்த வழி.

No comments: