Thursday, November 5, 2020

ஏ.அ-33

 

60 ஆண்டுகளில் மனிதர்களுக்கு மூன்றாம் தலைமுறை துவங்குகிறது.ஒரு தலைமுறை என்பது 30 ஆண்டுகள்.எந்த மனிதனும் மூன்றாம் தலைமுறையில் பாதியளவே வாழ்க்கையை துய்க்க இயலும்,அதாவது 75 ஆண்டுகள் வரை மட்டுமே.அதன் பிறகு வாழ ஆசைப்படுவது என்பது உறவினர்களின் வெறுப்பை தேடித்தரும்,கால கட்டமாகும்.

முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை அனுபவங்களையும் பட்டறிவையும் தன் பிள்ளைகளுக்கும் பேரன் பேத்திகளுக்கும் நேரம் கிடைக்கும் போது அமைதியான முறையில் சொல்லி விளக்க வேண்டும்.அதுவே ஒரு மனிதனின் வாழ்க்கை நெறிமுறையை முழுமையாக்கும்.

என் வாழ்நாளில் நான் பட்ட மான அவமானங்களை என்னுடைய பட்டறிவாகவும் அதுவே மனிதனின் இரண்டாம் நிலை அறிவான ஏழாம் அறிவுக்கு கொண்டு சென்று என் 60 வயதில் ஏழாம் அறிவு இயக்கம் எனும் வலைதளத்தை உருவாக்கினேன். இதற்கு என் மகன்கள் பெரிதும் உதவினர்.

என் வலைதள முகவரி 2008 செப்டம்பரில் உருவாக்கப்பட்டது.www.thiru-rationalism.blogspot.in இதுவே என் வலைதள முகவரி.

மனிதனுக்கு இருக்கும் முதல் நிலை அறிவு என்பதுதான் ஆறாம் அறிவு.உலகில் 90 சதவிகித மக்கள் இந்த ஆறாம் அறிவை சுயமாக பயன் படுத்துவதில்லை. இங்கே தான் ஒரு மனிதனின் உழைப்பின் மூலம் வரும் பணம் காசை இன்னொரு மனிதன் அபகரிக்கும் நிலை ஏற்படுகிறது.ஆறறிவு கொண்ட மனிதன் பிறர் சொல்லும் வாரத்தைகளில் உண்மையுள்ளதா என சீர்தூக்கி பார்க்கவேண்டும்.

ஆனால் அவ்வாறு செய்ய இயலாத மனிதர்கள் தான் ஆறாம் அறிவு மனிதர்கள்.

No comments: