Thursday, November 12, 2020

ஏ.அ-40

 

மெய்ப்பொருள் காண்பதறிவு என நமக்கு சொல்ல மாட்டார்கள்,காரணம் ஆசிரியர்களும் அருவ வழிபாட்டாளர்களே,கடவுள் இல்லை எனும் முடிவுக்கு வர மாட்டார்கள். அரசாங்க கல்விக்கூடங்களில் சம்பளத்திற்கு பணியாற்றும் ஆசிரியர்கள் அவர்களின் சொந்த கருத்துகளை மாணவரிடையே புகுத்தமுடியாது. அவர்கள் வேலைக்கே உலை வைப்பது போலாகிவிடும்.

புத்த மத மக்களையும் காலப்போக்கில் பார்ப்பனர்கள் அவர்கள் கருத்துக்கு ஒத்துவருவது போல் மாற்றிக் கொண்டார்கள்.

உலகில் தோன்றிய கடவுள் மறுப்பாளர்களுக்கு புத்தருக்கு 30 வயதிலும், காரல் மார்க்சுக்கு 30 வயதிலும் லெனினுக்கு 20 வயதிலும் மாசே துங்குக்கு 19 வயதிலும்,பெரியாருக்கு 19 வயதிலும் எனக்கு 21 வயதிலும் சுய சிந்தனை தோன்றியது.அதாவது ஞானோதயம் வந்தது.

அதே நேரத்தில் கடவுள் சிந்தனையாளராக  விவேகநந்தருக்கு 18 வயதிலும் கண்ணதாசனுக்கு 30 வயதிலும் தோன்றியது. பிரபலம் அல்லாத பெரும்பாலான மக்கள் இளைய பருவத்தில் இறை நம்பிக்கை இல்லாமல் வளர்ந்தாலும் பின்னாளில் மணமானவுடன் கடவுளை வணங்க ஆரம்பித்து விடுவார்கள்.

ஆனால் இளமையில் கடவுள் நம்பிக்கையாளராக இருந்து பின் ஞானோதயம் (அறிவு வளர்ச்சி) பெற்றவர்கள் சாகும் வரை இறை மறுப்பாளராகவே வாழ்வர். காரல் மார்க்சு, லெனின்,மாசேதுங், பிடல் காஸ்ட்ரோ,பெரியார், கிம் ஜாங் உன்,இவருக்கு முன் இவருடைய தந்தை, (கிம் ஜாங் இல்,கொரிய அதிபராக வாழ்ந்து இறந்த போது அந்நாட்டு மக்கள் கண்ணீர் விட்டு அழுத காட்சியை உலகமே கண்டு வியந்தது) போன்றோர்களை உதாரணமாக காட்டலாம். 

No comments: