இந்தியாவில் தான் வேப்பிலை வைத்தியர்,வேப்பிலை மருத்துவர்,வேப்பிலை பிரதமர்,வேப்பிலை முதல்வர் என இன்றளவும் நிலைமாறாமல் உள்ளனர். பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் அடிப்படை அறிவு சிந்தனை இல்லை.நாம் படித்தது,படிப்பது எல்லாம் மூட நம்பிக்கை கொண்ட இலக்கியங்கள். அவைகளைப் படித்து புலவர் பட்டங்கள் பெற்று அதே கருத்தை மாணவர்களுக்கு சொன்னால்,அறிவியல் சிந்தனை எப்படி வரும்?
மேடைகள் தோறும் தமிழ் இலக்கியங்கள் பெருமையைப் பற்றி பேசி காலத்தை வீணடிப்பதே அரசியல் தலைவர்களின் பொழுது போக்கு. நிஜங்களைப்பற்றி பேசுபவர்களுக்கு.
‘அவன் லூசு, பைத்தியக்காரன், பொழைக்க தெரியாதவன்’ எனும் பட்டப்பேர்தான் மிஞ்சும். என்னையும் சமுகம் அப்படித்தான் அழைக்கும்.
இதற்கெல்லாம் அஞ்சினால் ஒரு காரல் மார்க்சோ, மாசே துங்கோ, பெரியாரோ உருவாகியிருக்க முடியுமா? தன்னம்பிக்கை உள்ளவர்களே சமுக சிந்தனை உள்ளவர்களாக மாறமுடியும். நாம் படிக்கும் காலத்தில் ஆசிரியர்கள் எந்திரத்தனமாக ‘நீங்கெல்லாம் உங்கள் மனதிற்குள் தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்துவார்கள்.
ஆனால் அப்பொழுதெல்லாம் ஆசிரியர்கள், தன்னம்பிக்கை என்றால் என்ன ? என நம்மை சிந்திக்க வைக்க மாட்டார்கள். தன்னை நம்பறது என்றால் என்ன? மனதிற்குள் வாழும் கடவுளை அல்லது பேய் பிசாசு போன்ற மூட நம்பிக்கைகளை நம்பு அல்லது வெளியேற்று என ஒரு ஆசிரியரும் சொன்னதில்லை. அப்பதானே ஒருவனால் தன்னை நம்ப முடியும்? பள்ளிப் பருவத்திலிருந்தே எனக்கு இந்த ‘தன்னம்பிக்கை’ பற்றிய சிந்தனை இருந்து கொண்டே இருக்கும்.
No comments:
Post a Comment