மூன்று வேளை உணவு உண்கிறோம், படிக்கின்றோம்,கிடைத்த வேலையை செய்கின்றோம். நண்பர்களுடன் உறவுகளுடன் உறவாடுகிறோம், பணம் ,சொத்து என சேர்க்கின்றோம்,கடவுளை வணங்குகின்றோம், சுற்றுலா செல்கின்றோம், மகிழ்கின்றோம், நோய்வாய்ப்படு இறுதியாக மரணிக்கின்றோம், இங்கே தன்னம்பிக்கை எங்கே வருகின்றது?
இங்கேதான் சுயமாக சிந்திக்க வேண்டும். நாம் படிக்கும் பாடங்களில்,இலக்கியங்களில் முன்னாளில் இறைவனை காண்பது எப்படி? இறைவனை வணங்குவது எப்படி? என தேவாரம்,திருவாசகம், திருக்குறள்,நாலடியார் போன்ற நூல்களில் நன்கு விவரிக்கப்பட்டுள்ளன.
இவைகளையெல்லாம் நாம் நடைமுறைப்படுத்த நினைக்கும் போது நமக்கு ஏமாற்றங்களே மிஞ்சும். எந்த பாடல் பாடி இறைவனை தொழுதாலும் நாம் நினைக்கும் இறைவன் நம்முன்னே தோன்ற மாட்டார். இதை யாரிடம் சொல்லி நம் சந்தேகங்களுக்கு தீர்வு காண்பது?
இதை ஆசிரியரிடம் கேட்டால், நீ உன் தொழுகையை சிரத்தையுடன் செய்தால் சாத்தியமாகும் என சொல்லி மேலும் நம்மை மன நோயாளியாக மாற்றிவிடுவர். இப்படி மன நோயாளிகளாக மாறியவர்கள் தான் ராமகிருஷ்ண பரமம்சர்,விவேகாநந்தர் போன்ற (ஆன்மிக) மூட நம்பிக்கையாளர்கள். இன்றளவும் நம் மக்களின் நிலமை இதே நிலைதான்.
No comments:
Post a Comment