Monday, November 25, 2019

இ.பி.15


           58-திருடு போனா நாலாயிரம் ரூபாய்                

அப்படி கணக்கு பார்க்கும் போது என்னிடம் ரூ 4000.00த்தை காணவில்லை.
அப்பொழுது எனக்கு மாத சம்பளம் ரூ.225.00 என்று உத்தரவு வழங்கப்பட்டது.நான் முதல் மாத சம்பளம் கூட வாங்கவில்லை.காணாமல் போன அந்த பெரும் தொகை எனக்கு மிக்க அதிர்ச்சியைத் தந்தது.நண்பர் ஆனந்திடம் இதை தெரிவித்தேன்.நான் இந்த வேலையைய விட்டுவிடலாம் என்றிருக்கின்றேன்.என்றேன்.
ஏய்,!அப்படியெல்லாம் செய்துவிடாதேஎன்று சொல்லிவிட்டு,மேலும்,‘இரு, நான் விசாரிக்கின்றேன்.என்றார்.சில மணி நேரம் எனக்கு எந்த வேலையையும் செய்ய முடியல.இந்த சேதியைக் கேட்டறிந்த,அங்கே குழுமியிருந்த விவசாயிகள்,

அய்யா,நாங்கள் எல்லாரும் சேர்ந்து உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை சரிசெய்து விடுகின்றோம். வேலையை விட்டுப் போகாதீங்க,மறுபடியும் இங்கே ஒரு அதிகாரியைப் போட 10 நாட்கள் அகிவிடும், எங்களுக்குத்தான் கஷ்டம்,நஷ்டம் எல்லாமேஎன்றனர்.
 அதில் ஒரு பேருந்து வழித்தட தொழிலதிபர், ‘உங்களுக்கு ஏற்பட்டுள்ள  நட்டத்தை நான் ஏற்கின்றேன்,’எனச் சொல்லி ரூ 5000.00க்கான 100.ரூபாய் நோட்டுகளை என்னிடம் கொடுக்க வந்தார்.நான் மறுத்தேன். சார் தற்சமயம் ஏற்பட்டிருக்கும் இழப்பை சரி செய்து கொள்ளுங்கள்,பின்னாளில் சரி செய்த பிறகு எனக்கு தாருங்கள் என்று ரூபாய் 5000 க்கான தாள்களை என்னிடம் கொடுத்தார்.நாலாயிரம் போதும் என ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுத்தேன்.
             
                     திருடுபோன 4ஆயிரம் கிடைத்தது

ஓரிரு நாட்கள் சென்றிருக்கும்.நண்பர் ஆனந்து என்னிடம் வந்து, ‘உங்கள் பணம் எங்கும்

போகலை,இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டேன்என்றார்

 எனக்கு ஒன்றும் புரியல, ‘எப்படி?’
உங்கள் உதவியாளரின் நடவடிக்கைகளை கவனித்தேன்.அவன் தினமும் பின்புறம் உள்ள குப்பை மேட்டில் சிறு நீர் கழிக்க செல்வான்,அப்பொழுது அந்த குப்பைகளை கிளறி விட்டு பின் மூடுவான்,இவன் ஏன் குப்பையை கிளற வேண்டும்?’ என என்னுள் சந்தேகம் வந்தது.
அவன் சிறு நீர் கழித்து விட்டு வந்த உடன் சில நொடிகள் கழித்து நான் அந்த குப்பைகளை கிளறினேன். அப்பொழுது அங்கே கத்தையாக 100 ருபாய் நோட்டுகள் இருப்பதை கண்டேன். அதை மூடிவிட்டு வந்து விட்டேன்.
இன்னொரு முறை அவன் கிளறும்போது கையும் களவுமாக பிடிக்கலாம் என்று வந்து விட்டேன்என்றான்.

அடப்பாவி...!என அதிர்ச்சி அடைந்தேன்.
 பொறுமையா.. இரு ..விசாரிக்கலாம்..
அன்றிரவு வேலை முடிந்ததும்,நண்பர் ஆனந்த அந்த உதவியாளரை அழைத்து வந்தார்.

நான், அவனைப் பார்த்து,  உனக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது?’ அவன் பேசாமல் நின்றிருந்தான்.
நீ எதுவும் பேசவில்லை என்றால் நான் உன்னை போலிசில் ஒப்படைப்பதை விடுவதை விட எனக்கு வேறு வழி தெரியவில்லைஎன்றேன்.அவன்,
அப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள் சார்,நான் உண்மையை சொல்கிறேன்என்றான்.சொல்லி விட்டு,அவன் மேலும் தொடர்கிறான்,

நீங்கள் கட்டிடத்திற்கு வெளியே நின்று வேலை பார்க்கும் போது,என்னிடம் மேசை அறையைத் திறந்து ரப்பர் ஸ்டேம்ப்எடுத்துவரச் சொல்வீர்கள்,அந்த சமயத்தில் மேசை அறையில் இருந்த இன்னொரு சாவியை எடுத்துக் கொண்டேன்.நீங்கள் மேசை அறையை பூட்டிவிட்டு வெளியே செல்லும் போது,சிறிது சிறிதாக பணத்தை எடுத்துவிடுவேன்,அப்படி எடுத்ததுதான் இந்த ரூ 4000.00 என்றான்.அந்த பணத்தை அவனிடமிருந்து வாங்கிக்கொண்டு, ‘சரி, நீபோகலாம், எனக்கு நீ தேவை இல்லை சொல்லிவிட்டு,
அவனுக்கு relieving உத்தரவை எழுதி கொடுத்து

நீ போய் மண்டல அலுவலரிடம் சென்று வேறு எங்கேயாவது வேலை வாங்கிக் கொள்என்றேன்.சரி.. என்று சொல்லி விட்டு கடிதத்தை பெற்றுக் கொண்டு  அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.
 அப்பொழுதெல்லாம் காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில் கிடங்கு மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையப் பொறுப்பாளர்கள் மாதாந்திர கூட்டம் நடைபெறும்.அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட என்னைப் பார்த்து மண்டல மேலாளர்,

நீ எப்படி ஒரு ஊழியரை எனக்கு தெரியாமல்,சொல்லமல் விடுவிக்கலாம்?’ என்றார்.
நான் நடந்தவற்றை சொன்னேன், ‘இதையெல்லாம் சொல்லி ஒரு அறிக்கை சமர்பித்தால் அவன் வேலையில் நீடிப்பது கஷ்ட்டமாகிவிடும்,எனது நம்பிக்கை இழந்தவனை வைத்து நான் எப்படி சார், வேலை வாங்குவது?என்னை நம்பி பல லட்ச ரூபாய் பெறுமானமுள்ள சொத்துக்களை கொடுத்துள்ளீர்கள், அதற்கு நான் மட்டுமே பொறுப்பு,எனவே அவனோடு தொடர்ந்து பணி செய்ய சொன்னால் என்னால் நிம்மதியாக பணியாற்ற முடியாது சார்! எனவே தான் அப்படி செய்ய நேர்ந்தது.
எனது விளக்கத்தை கேட்ட மண்டல மேலாளர், ‘ சரி உன் விளக்கத்தை ஏற்றுக் கொள்கின்றேன்,இனி அப்படி செய்யாதேஎன்று என்னை அமரவைத்தார்.
                       *********

1976 ஏப்ரல் மாதம் முடியும் போது,நெல் வரத்தும் முடிந்து விட்டது.கணக்கு வழக்குகள் எல்லாம் முடிந்து விட்டது.எனக்கு வழங்கப்பட்ட பணத்துக்கு அதிகப்படியான 64 மூட்டைகளை நிறுவனத்திற்கு வழங்கினேன்,இதற்காக எனக்கு incentive bonus ஆக ரூபாய் 4000.00 வழங்கப்பட்டது.
நான் வாங்கிய முதல் சம்பளத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதை, எனக்குள் ஒரு சுய சிந்தனையை உருவாக்கிக் கொண்டேன்.
நான் 1976 ஜனவரி 10 தேதி என்றாலும் பள்ளிப்பட்டில் பணிக்கு சேர்ந்த 12 தேதியிலிருந்து சம்பளம் வழங்கினார்கள்.மார்ச் 1 ந் தேதி 1½ மாத சம்பளத்தை வாங்கிக்கொண்டு நான் என் கிராமத்திற்கு சென்றேன்.
ஆரணி கடைத்தெருவில் ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டேன்,ஓரு மூட்டை யூரியா வாங்கிக் கொண்டேன்,அப்போதைய ஒரு மூட்டை யூரியா விலை ரூ.75 ரூபாய் என நினைவு.சைக்கிளில் வைத்து ஊருக்கு சென்றவுடன்,

அண்ணா,என் முதல் மாத சம்பளத்தில் ஒரு மூட்டை யூரியா வாங்கியுள்ளேன் அண்ணா!,அதை நமது நெல் பயிருக்கு தெளியுங்கள், என்றேன்,மிகுந்த மகிழ்ச்சி அடைந்த என் அண்ணா.
ஆமாண்டா.முதல் சம்பளத்தில்  உரம் வாங்குவது ஒரு சிறப்பான விஷயம்,நல்லது,’ என்றார்.
அந்த ஆண்டு நெல் விளைச்சல் அமோகமாக இருந்தது,என் அண்ணாவுக்கு,மிகுந்த மகிழ்ச்சி,அதை கண்டு நானும் ஆனந்தப்பட்டேன்!

அதே நேரத்தில் வீட்டின் சுவரில் stand அடித்து மாட்டி விடப்பட்டிருந்த என் அம்மாவின் படம் மழையில் நனைந்து சீரழிந்து போனதைக் கண்டு மனம் வேதனை அடைந்தது.அம்மா, படத்தை மாட்டிவிட மழையாலும் வெய்யிலாலும் பாதிப்பு இல்லாத ஒரு சிறிய கல் வீடு கட்டணும் அண்ணா! அண்ணா மவுனமாக இருந்தார்.சிறிது நேரம் கழித்து, ‘நமது நிலம் பேங்கில் அடமானப்பட்டு நாளாகி விட்டது,அது ஏலம் போகும் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்,அதை மீட்க எதாவது செய்யணும்டா

அதுக்கு,எவ்வளவு பணம் செலவாகும்ணா?’
நான் போய் கேட்டுட்டு வர்ரேன்
சரிண்ணா, கேட்டு வையுங்க,நான் போய்ட்டு அடுத்த வாரம் வர்ரேன்
பிப்பரவரி மாதம்(மார்ச் முதல் தேதி) சம்பளம் வாங்கினேன்,எனக்கு கல்லூரி நட்களில் இருந்து ஒரு ஆசை இருந்தது,அப்போ எல்லாரும் தங்க பிரேம் போட்ட மடக்கு கருப்பு குளிர் கண் கண்ணாடி போட்டுருப்பார்கள்.அது பர்மா பசாரில்தான் கிடைக்கும்.நானும் அதைவாங்க பர்மா பசாருக்கு போனேன்.முதல் கடையிலேயே அந்த கண்ணாடியைப் பார்த்தேன்.

என்ன விலை?’
‘60 ரூபாய்
60 ரூபாய் கொடுத்து வாங்கி கண்களில் அணிந்தேன்.
கண்களில் அணிந்து கொண்டு திரும்பி படியிலிருந்து காலை எடுத்து தரையில் வைத்தேன்.தரை, படியை விட மேலே இருப்பது போல் தோன்றியது,ஒரு காலை வெகுவாக மேலே தூக்கி வைத்து நடக்க எத்தனித்தேன்,கீழே விழாத குறைதான்.உடனே நான், ‘இந்த கண்ணாடி சரியில்லை,வேற கொடுங்கள் என்றேன்
வேற இல்லை!
இதை எடுத்துக்கொண்டு பணத்தை திருப்பி கொடுங்கள்’ ‘அதெல்லாம் தர முடியாது
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, ‘சே,என்ன இது ஆசையாய் வாங்கியது இப்படி ஆகிவிட்டதே!
நான் மீண்டும் அந்த கடையில் இருப்பவனை கெஞ்சிப் பார்த்தேன்,ஒன்றும் அவன் மனசு இறங்க வில்லை,அந்த கண்ணாடியை அவன் கண்முன்னே அருகில் உள்ள ஒரு கல்லை எடுத்து நறுக்கிப் போட்டேன்,அந்த பிரேமை அவன் மூஞ்சியில் வீசிவிட்டு வந்து விட்டேன். அதன் பிறகு எனக்கு அந்த கருப்பு கண்ணாடி அணியும் ஆசையே போய்விட்டது.
              
                  59-நிலத்தைதை மீட்டேன்.

என்னிடம் ரூ 5000.00 இருந்தது,நான் ஆரணி கூட்டுறவு வங்கிக்கு சென்றேன்.வட்டியெல்லாம் சேர்த்து ரூ.4900 ஆனது அந்த நிலத்தை மீட்டு விட்டேன்.அண்ணாவுக்கும் மாமாவுக்கும் ஒரு நிம்மதி. நாங்கள் பயிர் செய்து கொண்டிருந்த 1½ ஏக்கர் நிலம் எங்க அத்தைக்கு சொந்தமானது,எனவே எங்க மாமா நிம்மதி அடைந்தார்.எங்கள் குடும்பமே அந்த நிலத்தை பயிரிட்டு வளர்ந்தது.
அதே நேரத்தில் தாங்கலில் 3 ஏக்கர் நிலம் ஆரணி வேலப்ப செட்டியாருக்கு சொந்தமானது.அதில் பயிரிட்டு ஆண்டுக்கு 8 மூட்டை நெல்லை அந்த செட்டியாருக்கு கொடுத்து விட்டு மீதம் ஒரு 50 அல்லது 60 மூட்டை நெல்லை நாங்கள் உண்டு வாழ்ந்தோம்.
அதன் பின் விவசாயத்திற்கு தேவையான உரம் வாங்க என்னிடம் தேவையான பணத்தை எங்க அண்ணா கேட்டு வாங்கிவிடுவார்.1976,77,78 ல் நல்ல விளைச்சல். கடனெல்லாம் அடைந்து விட்டது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் அந்த தாங்கல் நிலத்தை நம்பி எங்கள் குடும்பம் வளர்ச்சி அடைந்தது,
அடுத்த சில ஆண்டுகளில், செட்டியாரின் வாரிசுகள் அந்த 3 ஏக்கர் நிலத்தை எங்களிடம் இருந்து எடுத்துக் கொண்டார்கள்.பிழைப்புக்கு வேறு வழியில்லை! வீட்டை சுற்றி யுள்ள தோட்டப் பயிர்விளையும் நிலத்தை நம்பிதான் வாழவேண்டும் .
                          *****
               
                          60-ஏப்ரல் பூலானேன்

பள்ளிப்பட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கிவந்த அரிசி ஆலை கட்டிட த்தில் தங்கி இருந்த போது.பக்கத்தில் ஊர்மக்கள் குடிநீர் அருந்தும்   கிணற்றில் குளிக்க அதன் உரிமையாளரான திரு குப்பா ரெட்டி அனுமதி அளித்திருந்தார்.நான் படிக்கட்டில் இறங்கி குளித்தேன்.இதை கவனித்த மக்கள், ‘அய்யா,நாங்கள் குடிக்க இந்த நீரைத்தான் பயன்படுத்துகிறோம்.தயவு செய்து மேலே வந்து குளியுங்கள்,நாங்கள் வேண்டுமானால் நீரை சேந்தி தருகிறோம்,குளியுங்கள்’ என்றனர். நான் மேலே வந்து விட்டேன்.அது முதல் நான் மேலே இருந்து ஒரு கயிற்றால் வாளியை கட்டி நீரை இழுத்து குளித்து முடித்து விடுவேன்,அதன் பிறகு ஊர்மக்கள் வந்து நீரை எடுத்து செல்வார்கள்.

அன்று ஏப்ரல் 1-ந்தேதி,வழக்கம் போல்,காலை பள்ளிப்பட்டு பேருந்து நிலையம் அருகே சிற்றுண்டி முடித்து விட்டு என் அலுவலகம் அமைந்துள்ள இடம் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன்,வழியில் ஒரு பெண்ணின் குரல் கேட்டு திரும்பினேன் அவளைப் பார்க்க அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்தாள்,மொத்தத்தில் சினிமா நடிகையைப் போல் தோற்றமளித்தாள்.  ஏங்க..!,நீங்க குளிக்கிற இடத்துல உங்க பாக்கிட்ல இருந்து 10 ரூபா விழுந்திட்டாப்பல,இந்தாங்க...
அப்படியா..!
ஆங்....!.ஆசையைப்பாரு,ஏப்ரல் பூல்!’ இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவள் அம்மாவும் சிரித்துவிட்டாள்.
நான் எனக்குள் வெட்கப்பட்டுக் கொண்டு நடந்தேன்.
இரண்டு மூன்று நாள் கழித்து,நான் இரவு சாப்பிடப்போகும் நேரத்தை அறிந்து கொண்டு,என் அலுவலகம் அருகே அமைந்துள்ள அவளுடைய நண்பர் வீட்டில்(திரு குப்பா ரெட்டி வீடு) இருந்து என் முன்னே நடந்தாள்.என்னைவிட வேகமாக நடந்து அவள் வீட்டிற்குள் சென்றாள்.
நான் அவள் வீட்டை கடக்கும் போது அவளுடைய புடவையை அவிழ்த்து கீழே போட்டு விட்டு சரி செய்வது போல் பாவனை செய்தாள்.நான் பார்த்தும் பார்க்காதவாறு கடந்து சென்று விட்டேன்.இரவு சாப்பாட்டை முடித்து திரும்பி வந்த போது அவளும் அவள் அம்மாவும் சேர்ந்து என்னை அழைத்தார்கள்

தினமும் சாப்பாட்டிற்கு ஏன் அவ்வளவு தூரம் போறீங்க?எங்க வீட்டிலேயே சாப்பிடலாமே.!’‘சரி!என செல்லிவிட்டு நான் நண்பர் ஆனந்திடம் இந்த சேதியை தெரிவித்தேன்.அவன்,
நீ ..வெளியூர் ஆள் என உன்னை மடக்கப் பார்க்றாங்க, போய் மாட்டிக்காதே,காலையில வேணா டிபன்சாப்பிடு,ஆட்டுக்கறி தேசை ஆப்பம் இதெல்லாம் அங்கே நல்லா இருக்கும்,சாப்பிட்டு அதோடு வந்துவிடு..
நான் மிகவும் ஒல்லியாக இருப்பேன்,என்னுடைய மொத்த எடையே 57 கிலோ தான்,உயரம் 5 அடி 10 அங்குலம்.குண்டாக வேண்டும் என்பது என் ஆசை, தினமும் ஆட்டுக்றி சாப்பிட்டால் குண்டாகிவிடலாம் என கணக்குப் போட்டு காலை அங்கே சாப்பிடுவது என தீர்மானித்தேன்.
நிறைய ஆண்கள் அவரவர்களுக்கு வேண்டிய இட்லி, தோசை,ஆப்பம்,என சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்,  

 நான் உள்ளே நுழைந்ததும் மரியதை நிமித்தமாக ஒரு சிலர் எழுந்து கொண்டனர். எனக்கு ஏன் உள்ளே போனோம் என ஆகிவிட்டது.உடனே அந்த பெண்ணின் அம்மா, ‘சாரை, உள்ளே அழைத்து உட்காரவைத்து அவருக்கு வேண்டியதை வைஎன்று கூறினார்.
வீட்டின் உள் அறையில் எனக்கு ஒரு பாய்போட்டு அமரவைத்தாள்.இலை போட்டு இட்லி கறிக்குருமா வைத்தாள்.நான் அவள் முகத்தை பார்த்தேன், ‘ம்.. சாப்டுங்கோ...!என்னையே பார்க்றீங்க!’

உன் பேரென்ன?’
ரத்னா
எனக்கு சாப்பிட பிடிக்க வில்லை,வாய் குமட்டுகிறது. ஏதோ வேண்டா வெறுப்பாக ஒரு அரை இட்லி புட்டு வாயில் வைத்தேன்.
அவள், ‘என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?’
நான், ‘............................’
யோசித்து சொல்றேன்
‘சாப்பிடுங்க..,அப்படியே வச்சிட்டீங்க...!’
எனக்கு வாய் குமட்டுது......இதை எப்படி அவளிடம் சொல்வது?
ஒரு முழு இட்லியை எப்படியோ சாப்பிட்டு விட்டு எழுந்து விட்டேன்.

நடந்தவற்றை நண்பன் ஆனந்திடம் சொன்னேன்.
அவன்,‘டேய், அவளை கல்யாணம் எல்லாம் பண்ணிக்காதடா, எங்க அண்ணன் அவளை காதலித்து ஏமாற்றி விட்டான். அவள் வயிற்றில் வளர்ந்த கருவை கலைக்க நிறைய செலவு செய்தான்.
நீ யார் பெற்ற பிள்ளையோ?எனக்கு தெரிந்த உண்மைகளை உனக்கு சொல்லாமல் இருக்க என் மனம் இடம் தர வில்லை! சொல்லிவிட்டேன், இனி உன் இஷ்ட்டம்
நான் அவள் வீட்டுக்கு சென்று சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.
இதற்கிடையே நான் வைத்திருந்த நெல் மூட்டைகளை கோயம்புத்தூர் அரவை முகவர்களுக்கு அனுப்ப ஒரு பிரதிநிதி வந்திருந்தார்.அவர் அந்த பெண்ணின் வீட்டுக்கு எதிரே இருந்த ஒரு லாட்ஜில்(Central Lodge) அறை எடுத்து தங்கினார்.என்னையும் அவரோடு தங்கவைத்துக் கொண்டார்.

அந்த பெண்ணின் அம்மா என்னை அழைத்து, ‘நீ,என் பொண்ணை கட்டிக்காட்டி போங்கோ,ஆனால் சாப்பிட வரலாமே,வாங்க சாப்பிடுங்கோ!’.நான் மவுனமானேன்.
ஒரு நாள் இரவு 7.30 மணி இருக்கும் .அவள் மட்டும் தனியாக இருந்தாள்.என்னை அழைத்தாள்.போனேன், நான் அவளை கட்டி அணைத்தேன்.
நான் படுக்கச் சொன்னேன், ‘முடியாது, என்னை கட்டிக்கிறேன்னு சொல்லுங்கோ, படுக்கிறேன் என்றாள்.
என் இதயம் பட படத்தது.என்னால் முடியாது.. என்று விலகி விட்டேன். அன்று இரவு 10 மணிக்கு ஆல்இந்திய ரேடியோவில் புதன் கிழமை தோறும் பழைய பாடல்கள் ஒலி பரப்பில்,
உன்னை சொல்லி குற்ற மில்லை..என்னை சொல்லி குற்றமில்லை ..எனும் பாடல் பாடிக் கொண்டிருந்தது.
நான் லாட்ஜின் வாசலிலும்,அவள், அவள் வீட்டின் வாசலிலும் அந்த பாடலை கேட்டுக் கொண்டிருந்தோம்....
            

No comments: