Friday, November 15, 2019

இ.பி-12


            45-குலவிளக்கு சாய்ந்து விட்டது.

அம்மாவின் வாயிலிருந்து வார்த்தை வரவில்லை.வாய் விழுந்து விட்டது.
இரவு 12 மணி .நான் தூங்கப்போய் விட்டேன்.ஒரு மணி  இருக்கும், என் அண்ணா, என்னிடம் வந்து,
தம்பி,! நம் ‘குலவிளக்கு’ சாய்ந்து விட்டதடா..!என்று என்னை கட்டிக் கொண்டு அழுதார்,அப்போது இரவு சரியாக 1 மணி.வியாழன் விடியற்காலை.(1972-நவம்பர்.16 ம் நாள்)
ஒரு மாதமாக அழுது கொண்டிருந்ததால்,அண்ணா சொல்லி அழும்போது,எனக்கு அழுகையே வரவில்லை!
ஒரு ஆத்மா அணைந்து விட்டது,ஆன்மா விலகி காற்றோடு கலந்து விட்டது.
                 
                   46-இறையறுள் என்றால் என்ன?

தமிழ் இலக்கியங்கள், புலவர்கள், வேதங்கள், உபநிடதங்கள், உலகின் எல்லா வேத நூல்களும், இறை வழிபாட்டை எப்படி நடத்த வேண்டும் என கூறுகின்றன.
அப்படி வழிபட்டால் இறையருள் கிடைப்பது உறுதி! என படித்துள்ளேன்.
‘இறையறுள் பெற்றவன் என்றால் மனிதன் அவன் எண்ணும் எண்ணங்கள் நிறைவேறும் என்பதுத்தானே? நானும் ராமலிங்க அடிகளார் இறைவனை வழி பட்டது போல் தான் வழி பட்டேன். என் வேண்டுதலை மட்டும் ஏன் இறைவன் செவி சாய்க்கவில்ல?
என் 21 வயதில் நான் சுய சிந்தனையாளனாக மாறினேன்!
புத்தனுக்கே தன் 30-ம் வயதில் தான் ஞானோதயம்(சுய சிந்தனை) வந்ததாக சொல்வார்கள்.என் தாயின் மரணம் என்னை 21 வயதில் சுய சிந்தனை மனிதனாக மாற்றியது.                             
ஆமா,இறைவன் இருந்தாதனே, செவி சாய்க்கிறதுக்கு.?
அதன் பின் நான், கடவுள் உண்மையில் இருக்கின்றாரா? இல்லையா? வேதங்கள் சொல்வதெல்லாம் பொய்யா?
வேதங்களை கடவுள் எழுதினாரா?அல்லது பழைய நூல்களெல்லாம் எப்படி புனித நூலாகி விட்டது?
மனிதர்கள், மனிதர்களை ஏமாற்ற படைக்கப் பட்டதுதான் வேதங்களா?
தான் பிழைக்க,கடவுளை படைத்துக் கொண்டவன்  அய்யோக்கியன்.
“God was created by the rogue”-Rousoue
கடவுளைப் பற்றிய என் ஆய்வுகள் தொடர்ந்தது என் 24 வயது வரை, அதாவது அம்மா இறந்து 3 ஆண்டுகள் நடந்தது.கடவுள் இல்லை என்று முடிவுக்கு வந்தேன். இன்றளவும் இதே நிலைதான்.
                          *****
               
                       47-குப்பி வீட்டு வகையறா

1973 துவக்கத்தில் ஒரு நாள் மாலை நான் கல்லூரியிலிருந்து ஆரணி வழியாக வீடு வந்து கொண்டிருக்கின்றேன். அப்பொழுது ஒரு குடிகாரன் என்னை வழி மறித்தான்.நான் ஓட்டி வந்த சைக்கிளை பிடுங்கிக் கொண்டான்.அந்த சைக்கிளை தூக்கி போட்டு உடைத்தான். இவன் பங்காளிகள் படைபலம் கொண்டவன்.
உனக்கு சைக்கிள் ஒரு கேடா,இனிமேல் நீ சைக்கிளில் போய் படிக்கக்கூடாது.’ என சொல்லிக் கொண்டே என் சைக்கிளை தூக்கிப்போட்டு உடைத்து இரண்டு சக்கரங்களையும் தனித்தனியே பிரித்து விட்டான்.நான் அழுது கொண்டே என் அண்ணாவிடம் நடந்தவற்றை சொன்னேன்.
என் அண்ணா புத்தி சாலித்தனமாக ஒரு முடிவு எடுத்தார்.இதில் நாம் நேரடியாக அவனிடம் மோதக்கூடாது,இந்த சேதியை எங்கள் சொந்தங்கள் அதிகம் வாழும் மல்லியங்குப்பம்கிரமத்தில்(இந்த கிராமம் என் அம்மாவுக்கு அம்மா ஊர், தாயாதிகள் அதிகம் உள்ள கிராமம்)  உள்ள பெரியவர்களிடத்தில் புகார் அளித்தார்.
அடுத்த நாள் ஆரணி கடைத்தெருவுக்கு வரும் எங்கள் கிராமத்தினரை மடக்கி அடிக்க ஆரம்பித்தனர்.ஊரே மிரண்டு விட்டது.இது இரண்டு அல்லது மூன்று நாட்கள் நீடித்தது.
எங்கள் ஊர் மக்கள் என்னிடம் வந்தனர்.என்ன நடந்தது என விசாரித்தனர்.சைக்கிளை உடைத்தவன் எங்கள் அண்ணாவிடம் மன்னிப்பு கேட்டான். ஆனால் எங்கள் அண்ணா, ‘உடைந்த சைக்கிளை ரிப்பேர் செய்து கொடு,அது மட்டுமல்ல என் தம்பியிடம் மன்னிப்பு கேள்என்றார்.
அதன் பிறகு தான் ஊர் மக்களுக்கு தெரிந்தது, ‘குப்பி வீட்டு பசங்க ஜனக்கட்டு கொண்டவர்கள் என்று.(குப்பி என்பது எங்கள்  பாட்டி பெயர்) இன்று வரை எங்களிடம் யாரும் வம்புதும்புக்கு வரமாட்டார்கள்.
               *************

           48-கல்லூரியில் முதல் நிலை மாணவன்

நான் எப்படி பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்தேன் என விளக்குவது இங்கு நல்லது என நினைக்கிறேன்.அப்போதெல்லாம் முதலாண்டில் தேர்வு கிடையாது.இரண்டாம் ஆண்டில் மொழிபாடங்களான தமிழ் மற்றும் ஆங்கில தேர்வு எழுத வேண்டும்.
ஆங்கில கட்டுரைகள்,வினா விடைகளை ஒரு வெள்ளை தாளில் எழுதிக் கொள்வேன்.காலை 8 மணிக்கு வீட்டிலிருந்து கல்லூரிக்கு  புறப்பட்டால் 9.30க்கு எல்லாம் பொன்னேரி கலைக் கல்லூரிக்கு சென்று விடுவேன்.
அப்போது சைக்கிளின் முன் கைப்பிடியில் பொறுத்தப்பட்ட ஒரு கேரியரில் கட்டுரை எழுதிய தாளை பதித்து விடுவேன்,அதை பார்த்து கல்லூரி அடைவதற்குள் மனனம் செய்து விடுவேன்.எனவே தேர்வு எழுதி வெற்றி பெறுவது என்பது எனக்கு சுலபாமாகிவிட்டது.

எல்லா பாடத்திட்டங்களிலும்A ,A+ எடுத்து விட்டேன்.மொழி பாடத்தில்C,C+ எடுக்க முடிந்தது,காரணம் என் கையெழுத்து தான்.எப்படித்தான் என் கையெழுத்தை புரிந்து எனக்கு மதிப்பெண் தந்தார்களோ தெரியவில்லை.
நான் இரண்டாம் ஆண்டு செல்லும் போது என்னோடு  பாப்பான்கண்டிகையில்(பின்னாளில் அய்யர் கண்டிகை என பெயர் மாற்றம் செய்து கொண்டனர்) திரு துரைக்கண் எனும் நண்பர் என்னோடு சேர்ந்து கல்லூரிக்கு சைக்கிளில் வருவார்.இவர் அய்யர் கண்டிகையிலிருந்து மேற்கே 5 கல் தொலைவில் உள்ள பாஞ்சாலை எனும் கிராமத்திலிருந்து வரவேண்டும்.இவர் தினமும் சைக்கிளில் வரமாட்டார்.வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாள் தான் வருவார் மற்ற நாட்களில் பேருந்தில் வந்து விடுவார்.

மூன்றாம் ஆண்டு கடைசி 3 மாதங்கள் பொன்னேரியில் ஒரு  வீடு வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். என்னோடு திரு துரைக்கண் தங்கிவிட்டார். அவர்தான் சமையல் செய்வார்.நன்கு சமைப்பார். இப்போது திரு துரைக்கண், சென்னையில் பூக்கடை முகவராகி பெரும் செல்வந்தராக சென்னையில் வாழ்கிறார்.
   
                49-எங்கள் கிராமத்தின் முதல் அறிவியல் பட்டதாரி

1973-ல் இளங்கலை அறிவியல் பட்டதாரி ஆனேன். அம்மா இறந்த பின் விவசாயம் மூலம் நல்ல வருவாய். .என் பெரிய அண்ணா முழு நேர குடிகாரராக மாறிவிட்டார்.அண்ணா குடிப்பதால் குடும்பத்தில் நிம்மதி போய்விட்டது.
தினமும் ஜாதி மல்லி,கனகாம்பரம் போன்ற பூக்களைப் பறித்து சென்னை பூக்கடைக்கு அண்ணா எடுத்துச் செல்வார்.வரும்போதே குடித்து விட்டு வருவார்.எதாவது உளறிக்கொண்டே இருப்பார்.இது எனக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது.எனக்கு மட்டுமல்ல குடும்பத்தில் அனைவருக்குமே எரிச்சலைத்தது

No comments: