75-துரியோதனன் கந்தர்வர்களிடத்தில் சிறை
துரியோதனன்கள்,பாண்டவர்கள் கூடாரமிட்ட நதியின் எதிர்
கரையில் கூடாரமிட்டுக் கொண்டனர்.ஒருநாள்
வனத்தில் கந்தர்வர்கள் துரியோதனன் தங்கி
இருக்கும் குளக்கரையில் நீர் அருந்த வருகின்றனர்.இதைக் கண்ட துரியோதனன்,‘நாங்கள் இந்தாட்டு இளவரசர்கள், எங்கள் குளத்தில்
எங்களை கேட்காமல் நீங்கள் எப்படி நீர் அருந்தலாம்? நீங்கள்
யார்?
கந்தர்வர்கள் இத்தகவலை கந்தர்வ தலைவனுக்கு தெரிவிக்கின்றனர், கந்தர்வ தலைவன் துரியோதனனை, பார்த்து ,
‘இது எங்கள் நாடு,நாங்கள்
காலம் காலமாக வாழ்ந்து வருகிறோம்,எங்கள் பராக்கிரமத்தைப் பற்றி தெரியாமல் பேசி விட்டாய் அட அற்பனே உன்னை
என்ன செய்கிறேன் பார்.’ என வாளை உருவினான்,கந்தர்வ தலைவன்.
துரியோதனனோ தன் பலத்தை காட்ட இரு தரப்பினருக்கும் சண்டை
மூண்டது.இறுதியில் துரியோதனன் கந்தர்வர்களிடம் சிறைபட்டான்.
இந்த தகவல் அருகில் தங்கி இருக்கும் தர்மனுக்கு கிடைக்கிறது.தர்மனுக்கு
தன் பெரியப்பா மகனான தன் தம்பி, ஆபத்தில் மாட்டிக்கொண்டது பற்றி கேள்வி
பட்டவுடன் மனம் வேதனை அடைகிறது.
~தானாட
மறந்தாலும் தன் சதை ஆட மறக்காது’ எனும் பழமொழி இதற்கு பொருந்தும்.
உடனே தர்மன்,தன் தம்பிகளான பீமன் மற்றும் அர்ச்சுனனிடம்
ஆலோசனை பெறுகிறான். பீமன்,
‘அண்ணா, நாம் ஏன் அவனை
காப்பாற்ற வேண்டும். நம்மை காட்டுக்கு அனுப்பிய அந்த கயவன் எக்கேடு கெட்டால்
நமக்கென்ன?, வேண்டாம் அண்ணா,நாம் அவனை
காப்பாற்ற வேண்டாம்.’என கூறுவதைக் கேட்ட தர்மன்,
‘பீமா,என்னதான்
இருந்தாலும் அவன் ,நம் தம்பி,பெரியப்பா
மகன்,நாளைக்கு எதாவது ஒன்று ஆகிவிட்டால் நம் பெரியப்பா
மற்றும் பெரியம்மா முகத்தில் நாம் எப்படி விழிப்பது?
குருவம்சத்தின் வாரிசுகளில் அவனும் ஒருவன்,முதன்மையானவன் கூட.ஒரு அன்னியனிடம் நம் பங்காளி மாட்டிக் கொண்டால் நாம்
எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்.?
அது நம் சத்ரிய இனத்துக்கே இழுக்கல்லவா?அவனை நாம் காப்பாற்றுவதே உசிதம்,உடனே புறப்படுவோம்,
இல்லை யென்றால் நீங்கள் இங்கேயே இருங்கள்,நான்
போய் துரியோதனனை மீட்டு வருகிறேன்.’என தர்மன் புறப்பட
ஆயத்தமானான்.
உடனே அர்ச்சுனன்,‘பீமனண்ணா,அண்ணன்
ஆணையிட்டு விட்டார்,நாம் உடனே நம் துரியோதனனை மீட்டு வருவோம்,வாருங்கள்’
அர்ச்சுனன்,கந்தர்வ தலைவனை சந்திக்கிறான். அவனோ,வந்திருப்பது பாண்டவர்கள் என தெரிந்து கொண்டு,
‘அர்ச்சுனா!,தர்மத்தின்
தலைவனான,தர்மனின் தம்பிகளா நீங்கள்,உங்களை
காப்பதுதானே எங்கள் கடமை,பாண்டவர்களை எதிர்த்து கந்தர்வர்கள்
போர் புரிவதா? இது வேண்டாம்.நாங்கள் இப்பொழுதே துரியோதனனை
விடுவிக்கின்றோம்’ என சொல்லி துரியோதனனை விடுவிக்கின்றனர்.
‘ஒரு சத்ரியனுக்கு இந்த அவமானம் தேவையா? நான் இப்போதே தீயில் விழுந்து என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்’,
சகுனியும்,துர்ச்சாதனனும் துரியோதனனை எவ்வளவோ சமாதனப் படுத்துகின்றனர்,
துரியோதனன் மனம் சமாதானம் அடையவில்லை. மாறாக தீயில் விழுந்து விடுகிறான், துரியோதனன்.
ஆனால், சத்ரியர்களின் காவலனான,சத்ரிய புருஷன்,
‘துரியோதனா! நீ ஒரு சத்ரியன்,ஆயிரம் யானைகளின் பலம் கொண்ட உன் தந்தை திருதராஷ்ட்ரனுக்கு பிறந்த மகன்
ஒரு கோழையைப் போல் தற்கொலை செய்துகொள்வதா? வேண்டாம்
துரியோதனா? இன்னும் நீ சாதிக்கப்போவது ஏராளம் உள்ளன.நீ திரும்பி போ’ என சத்ரிய தேவன் துரியன் தற்கொலை புரிவதை தடுத்து நிறுத்துகிறான்.
துரியோதனன் கூடாரத்துக்கு திரும்புகிறான். துரியோதனன்
மனதில் கொழுந்து விட்டெரியும் பொறாமைத் தீ அணையாமல் பார்த்துக் கொள்கிறான்,சகுனி.அவ்வப்போது அவன் மனம் குளிர திட்டங்கள் தீட்டிக் கொண்டே
இருக்கிறான்.
இதை அறிந்த சகுனி, ‘மருமகனே!, பாண்டவர்களை
சும்மா விடக்கூடாது,காட்டில் தனித்து வாழும் துரவுபதிக்கு
நாம் தொல்லை கொடுத்தே ஆகவேண்டும் அதற்கு ஒரு திட்டம் வைத்துள்ளேன்’ என தன் மருமகன்களிடம் திட்டத்தை விவரிக்கின்றான் சகுனி.
‘உங்களின்(கவுரவர்களின்) ஒரே தங்கையான துர்ச்சடையின் கணவன், ஜெயத்ரதன்,ஒரு
பெண் பித்தன்,அவன் துரவுபதியை இன்னும் கண்ணால் காணவில்லை,
76-ஜெயத்ரதன்
காட்டில் தனியே தனித்து வாழும் திரவபதியை ஜெயத்ரதனுக்கு
காண்பித்து விட்டால் அவளை அடையாமல் விடமாட்டான். நாம் பாண்டவர்களுக்கு செய்யும்
மிகப்பெரிய தொல்லையே இதுதான்’
இதை கேட்ட துர்ச்சாதனன், ‘ஆகா,சரியான யோசனை மாமா1 இதை உடனே
செயல் படுத்தலாம்,’ என ஆவலோடு வாய் பிளக்கிறான்.
ஜெயத்ரதனுக்கு தகவல் அனுப்பபடுகிறது. அவனும் சகுனியை
சந்தித்து ஆலோசனை பெறுகிறான்.உடனே திரவுபதி இருக்கும் இடத்திற்கு ஜெயத்தரதன்
விரைகிறான். திரவுபதியை காண்கிறான். அவள் அழகில் சொக்கிப் போகிறான். திரவுபதியைப்
பார்த்து ஜெயத்ரதன்,
‘உன் உடல் வாகும் உன் அங்க அவையங்களும் என்னை
இப்பொழுதே வாரி அணைக்க தோன்றுகிறதே திரவுபதி,5 பேரோடு
என்னையும் சேர்த்துக்கொள் அல்லது இந்த பஞ்ச பிசனாரிகளை உதறிவிட்டு என்னோடு வா,என் ரதத்தில் ஏறு,உன்னை என் தேசத்து
ராணியாக்குகிறேன்,பாண்டவர்கள் உன்னை தேடி வருமுன் உடனே
ரதத்தில் ஏறு’என துரிதப்படுத்தினான்.
‘அடே மூடனே,நான் உன் மனைவியின் அண்ணி,உனக்கு நான் தங்கை
முறை,என்னை நீ,அடைய நினைக்கிறாயே உனக்கு
என்ன அறிவு மங்கி விட்டதா?என் கணவர்கள் இதை பார்த்தால் உன் தலை இப்போதே மண்ணில் உருளும்,நீ இங்கிருந்து
போய்விடு’ என எச்சரிக்கிறாள்.ஆனால் அவன் இதையெல்லாம் கேட்கும் மன நிலையில் இல்லை.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே பீமன் வந்து
விடுகிறான்,பீமன் எச்சரிக்கிறான் அவன் கேட்கும் நிலையில் இல்லை.பீமன் ஜெயத்ரதனை
வதம் செய்ய முற்படுகிறான், ஆனால் துரவுபதி தடுக்கிறாள்,
‘இவன் உங்கள் தங்கை துர்ச்சடையின் கணவன்,மூடன்.இவனை கொன்று விட்டால் ஒரு பாவமும் அறியாத உங்கள் தங்கை பூவும்,பொட்டும் இழப்பாள்,இவனை மன்னித்து விடுங்கள்’
இதற்கிடையே தர்மன் முதலானோர் வந்துவிடவே,ஜெயத்தரதனுக்கு எதாவது ஒரு சிறு தண்டனை வழங்க தீர்மானிக்கின்றனர். திரவுபதியிடமே,
‘என்ன தண்டனை வழங்கலாம்?’ என கேட்கின்றனர்.
‘தலையில் ஐந்து குடுமிகள் வைத்து மொட்டை
அடித்துவிடுங்கள்,அவமானத்தால் இவன் வெளியில் தலைகாட்டவே
கூடாது.’எனக் கூறுகிறாள்.அப்படியே செய்யப்பட்டது.
ஒரு நாள் துரியோதனன் காட்டு வழியே வருகிறான்,ஜெயத்ரதன் சிவனை வேண்டி தவம் கொள்ளும் கோலத்தை காண்கிறான்,
‘மைத்துனரே,ஏன் இந்த
கோலம்?’
‘என்னை அசிங்கப்படுத்திய,அவமானப்படுத்திய அந்த திரவ்பதியையும்,பாண்டவர்களையும்
பழிவாங்காமல் விடமாட்டேன்,நான் சிவனை வேண்டி தவமிருக்கிறேன்,எப்படியும் வரம் பெற்றுவிடுவேன் அதன் பிறகுதான் நாடு திரும்புவேன்,நீ செல் மைத்துனரே’ஜெயத்ரதன் தவத்தில் ஆழ்ந்துவிட்டான்
பாண்டவர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கவேண்டும் அல்லது
அழிக்க வேண்டும் என்பது துரியோதனனின் சபதம் அதற்கு சகுனி பக்கபலமாக திட்டங்களை
தீட்டிக்கொண்டே இருக்கிறான்.
77-துர்வாசர்
ஜெயத்ரதன் திட்டம் தோல்வியில் முடிந்தவுடன், அடுத்து தூர்வாசரை பாண்டவர்களிடம் அனுப்பி வைக்க சகுனி ஏற்பாடு செய்கிறான்.துர்வாசர்
அல்லது தூர்வாசர் என அழைக்கப்படும் முனிவர் சத்ரியர்களின் குரு. முன்
கோபக்காரர்,தன்னை கோவப் படுத்துபவரை சட்டென்று சபித்துவிடுவார்.பிராமணர்களைப் பார்த்து
பிராமணர்களைப் போல் துறவு வாழ்க்கையை மேற் கொண்ட சத்ரியர்களில் முதன்மையான
முனிவர்களில் இவர் இரண்டாமவர்,இதற்கு முன் ராமாயண கால விசுவாமித்ரர்,
சகுனி மற்றும் துரியனின் தூண்டுதலால் தூர்வாசர் தன் சீடர்களுடன்
வனத்தில் ஓடும் ஆற்றின் மருக்கரையில் தங்கி இருக்கும் பாண்டவர்களை தேடி
செல்கின்றான்.தர்மனைப் பார்த்து துர்வாசர்,
‘குந்தி
மைந்தனே! இன்று தங்கள் இல்லத்தில்தான் எங்களுக்கு மதிய உணவு,நாங்கள்
குளித்துவிட்டு வருகிறோம் அதற்குள் விருந்தை தயார்செய்து வை’ என சொல்லிவிட்டு குளிக்கச் சென்று விட்டார்கள்.
துர்வாசர் வந்து தன்னிடம் விருந்துக்கு ஏற்பாடு செய்ய
சொன்னதை தன் மனைவியான திரவுபதியிடம் தர்மன் சொல்கிறான்.அப்போது திடுக்கிட்ட
துரவுபதி,
‘என்ன இப்படி செய்துவிட்டீர்கள்,தங்களுக்கு உணவு பரிமாறிவிட்டு பாத்திரத்தை கழுவி கவிழ்த்து விட்டேனே ,மீண்டும் நாளைக்குத்தான் உணவு தயார் செய்ய முடியும் .அந்த முனிவர் கோபக்காரராச்சே,உடனே சாபமிட்டுவிடுவாரே, என்ன செய்வது?’ செய்வதறியாது பாஞ்சாலி ,
‘அந்த கிருஷ்னன் ,என்னால்
எதையும் செய்யமுடியும் என வாய் சவடால் விடுவானே அவனை அழைப்போம் எதாவது வழி
சொல்லுவான்’
அந்நேரம் கிருஷ்னன் அங்கு வந்து சேறுகிறான்.பாஞ்சாலி , ‘கிருஷ்னா எனக்கு நீதான் வழி காட்ட வேண்டும்,துர்வாசருக்கு
விருந்து தயாரிக்க என்னால் இப்பொழுது முடியாது.அவர் பேச்சை நாம் மதிக்கவில்லை
எனில் சாபமிட்டு விடுவாரே,அதிலிருந்து தப்பிக்க வழி காட்டு
கிருஷ்னா’
கிருஷ்னனிடம் விண்ணப்பித்து விட்டு அவன் முகத்தையே பார்த்து
நிற்கிறாள் திரவுபதி. அப்போது கிருஷ்னன், ‘என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்
திரவுபதி?’
‘என்ன கிருஷ்னா,வெறும்
வாய்ப் பேச்சுதானா உன் செயல்?’
‘துர்வாசரிடம் கோபம் மட்டுமே உள்ளது,என்னிடம் அன்பு மட்டுமே உள்ளது இதை வைத்து எதாவது சாதிக்கமுடியமா என
பார்க்கிறேன்’
சொல்லிவிட்டு கிருஷ்னன் துர்வாசரைத் தேடி செல்கிறான்.
சில மணி நேரம் கழித்து கிருஷ்னன் மீண்டும் பாண்டவர்கள்
இருக்குமிடம் தேடி வருகிறான்.அப்போது திரவுபதி ஆவலோடு கிருஷ்னனை பார்த்து
வினவுகிறாள்,
‘என்ன மாயம் செய்தாய் கிருஷ்னா?எங்கே அந்த முனிவர்?’
‘மாயமும் செய்யவில்லை மந்திரமும் செய்யவில்லை,அவரிடம் பணிந்து அன்பாக பேசினேன்.,’ மேலும் திரவுபதியிடம் கிருஷ்னன்
கூறுவதாவது,
‘அய்யா முனிவரே தங்கள் சாபம் பிரசித்தி பெற்றது என்பதை என
நான் அறிவேன்,பாவம் அந்த பாண்டவர்கள் நாதியற்ற நிலையில் உள்ளார்கள். அரண்மனையில்
வாழ வேண்டியவர்கள் விதியின் வசத்தால் வனவாசம் வந்து ஒரு வேளை சோற்றுக்கே நாயாய்
திரிந்து பாடுபடுகின்றனர்.இந்நிலையில் தங்களுக்கு எங்கே அவர்கள் விருந்து தயார் செய்வது?
‘பராக்கிரமம் பொருந்திய கிருஷ்னா,நீயா என்னை தேடிவருவது,இது
நியாயமா? சொல்லி அனுப்பினால் நனே வந்திருப்பேனே,மேலும் முனிவர்,
‘குந்தி மைந்தர்களா இவ்வளவு கஷ்ட்டப்படுவது? கேட்கவே
சங்கடமாக உள்ளதே, ஏன் அவர்கள் பங்காளிகள் அக்கரையில் சந்தோஷமாக இருக்கின்றனரே?
இவர்களும் அரண்மனை வாசிகளாக இருந்தவர்கள் தானே? என்ன ஆயிற்று இவர்களுக்கு? எனக்கு குந்தி
பிள்ளைகள் நன்கு பழக்கமாச்சே ,நானே இப்பொழுது நேரில் வந்து அவர்களுக்கு ஆசி வழங்குகிறேன்.’
‘வேண்டாம் முனிவரே நானே அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன் தங்களுக்கு ஏன் சிரமம் நீங்கள் செல்லுங்கள்’
‘வேண்டாம் முனிவரே நானே அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன் தங்களுக்கு ஏன் சிரமம் நீங்கள் செல்லுங்கள்’
‘இது தான் நடந்தது திரவுபதி ,இங்கே நான் எங்கே என்ன மாயம்
செய்தேன்?அன்பு மட்டுமே செலுத்தினேன் என்பதே
அதன் பொருளாகும்,
அன்பால் முடியாதது எதுவுமே இல்லை அன்புமட்டுமே என் ஆயுதம்.
இப்பொழுது புரிகிறதா?திரவுபதி’(4)
அன்பும் பராக்கிரமும் பொருந்திய அதாவது பிராமணர்களை ஆதரிக்கக் கூடிய ஒரு படைப்பு கிருஷ்னன் மட்டுமே,பின்னாளில் அவனை மாயக் கிருஷ்னனாக மக்கள் வழிபடும் அளவுக்கு கிருஷனவதாரமாக மக்கள் நேசித்தனர்.
அன்பும் பராக்கிரமும் பொருந்திய அதாவது பிராமணர்களை ஆதரிக்கக் கூடிய ஒரு படைப்பு கிருஷ்னன் மட்டுமே,பின்னாளில் அவனை மாயக் கிருஷ்னனாக மக்கள் வழிபடும் அளவுக்கு கிருஷனவதாரமாக மக்கள் நேசித்தனர்.
(பிராமண துறவிகளில் முதன்மையானவர் 1-பரத்வாஜர்,இவர் தான்
பெற்ற அல்லது கற்ற அழிவுக் கலையான தனுர் மற்றும்,வட்டெரிதல்({சக்கரங்களை
சுழற்றி-சதர்சனம்-எதிரியை அழிப்பது போன்ற வித்தைகளில் கைதேர்ந்தவர் இந்த கலையை தன்
மகனான பரசுராமனுக்கு கூட சொல்லித்தரவில்லை மாறாக யாதவனான கிருஷ்னனுக்கு சொல்லி
தருகிறார், காரணம், யாதவர்களில் அறிவுத்திறனும்
புத்தி கூர்மை, பொருமை உள்ளவன் மட்டுமல்ல உடல் பலம்
பொருந்தியவன்.
கிருஷ்னன் தனக்குத் தெரிந்த, தனக்கு மட்டுமே
தெரிந்த வட்டெரி கலையை(அழிவுக்கலை) யாருக்கும் சொல்லித் தரவில்லை.இதனால் கிருஷ்னன்
பலம் பொருந்திய மாயக் கிருஷ்னன் ஆனான்.
சத்ரியர்களுக்கு இந்த கலையை சொல்லி கொடுத்தால் ஆரியர்களை
ஒழித்து, அழிவுப்பாதைக்கு வழி வகுத்துவிடும்’ என்று கணக்கிட்டனர்
ஆரியர் இந்தியாவில் காலூன்ற இந்த கலையை யாதவர்களின் தலைவனான கிருஷ்ன்னுக்கு
சொல்லிக் கொடுத்து சத்ரியர்களை அழித்தனர்..ஆனால் பரசுராமன் மகனான துரோணர் தனக்குத்
தெரிந்த தனூர் வித்தையை சத்ரியர்களில் அரச
பரம்பரைக்கே சொல்லிக் கொடுத்து அதன் மூலம் தங்கள் வாழ்வாதாரங்களை பெருக்கிக் கொள்ளலாம் எனும் கொள்கையை வகுத்தவர்,இன்றும்
இதுதான் நடக்கிறது.
அழிவுக்கலையை சத்ரியர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம் ஆனால்
மறந்தும் எதிரியை அழிக்க அல்லது தாக்க
எந்த ஒரு பிராமணனும் கையில் ஆயுதம்
ஏந்தக்கூடாது எனும் கொள்கையில் பிடிப்பாக இருந்தவர்கள்.
அப்படி இருக்கும் போது ஆயுதம் தாங்கிய ராமன் எப்படி
பிராமணனாக இருக்க முடியும் ? இதிலிருந்து
என்ன தெரிகிறது? ராமனும் சத்ரியனே)ராவணனும் சத்ரியனே!
ருத்ரசேனன் மகள் வயிற்றுப் பேரனும்,கம்சனுக்கு தங்கை மகனுமான கிருஷ்னனை,ஒரு கடவுள்
அவதாரமாக மக்களிடம் பொய்யுரை பரப்பி(கதா காலட்சேபம்) கடைசியில் மனித பிறப்புதான்
கிருஷ்னன் என சொல்லி ஒரு வேடனின் அம்புக்கு பலியாக்கி(10) விடுகின்றனர்-இதைப்பற்றி
பின்னால் கதைக்கப்படும்- ஆக
கிருஷ்னன் குரு வம்சத்தை ச்சார்ந்த யாதவன். பேச்சாற்றல்
மிக்கவன் எதிரிகளையும் தன் வயப்படுத்தும் ஆற்றல் பெற்றவன். ருத்ரசேனனுக்கு உறவு
முறை,அந்த வகையில் இவன் சேனாதி யாகிறான்.
அன்பினால் எதையும் சாதிக்க முடியும் எனும் நம்பிக்கை
உள்ளவன், மகாபாரதத்தில்-கீதையில் பல இடங்களில்
அவனே தன் வாயால் சொல்லி இருக்கிறான்,‘மக்களிடையே அன்பு
செலுத்திதான் சாதிக்கிறேன் மாயம்,மந்திரம் எதுவும் இல்லை’,
ஆனால் கதை கேட்பவர்களின் சுவாரசியம் குறையக்கூடாது
என்பதற்காக மாயக் கிருஷ்னனை ஒரு அவதாரமாக சித்தரித்தனர், அதுவே நிலைத்து விட்டது.
இதைப்பார்த்த சத்ரியர்கள் தங்களும் பிராமணர்கள் போல் துறவு
வாழ்க்கை வாழ ஆசைப்பட்டனர். அதில் முதன்மையானவர் வசிஷ்ட்டர்,விஸ்வாமித்ரர்(ராமாயணத்தில் வருபவர்கள்), அடுத்து துர்வாசர்
மற்றும் ஜமதக்னி முனிவர்-இவர்களுக்கு அழிவுக்கலையைப் பற்றி (எதிரிகளை
தாக்கவல்ல தனூர்,மற்றும் சக்ரம் சுற்றுதல்) தெரியாது சாபம்
கொடுக்க மட்டுமே தெரியும்.
******
(‘அன்பும், தவறு செய்யும் மனிதர்களை மன்னிக்கும்
பண்புதான் உலகில் மக்களை மயங்கச் செய்யும் மிகப் பெரிய ஆயுதங்கள்,இதை உணர முடியாத-தெரியாத அறம் காத்த சத்ரியர்கள் அழிந்தனர்.இதை உணர்ந்தவர்கள் தான்
மிகப்பெரிய மாயம் செய்யும் மனிதர்கள்,அதாவது கடவுளுக்கு சமமானவர்கள்.அல்லது கடவுளானவர்கள்’
மகாபாரதக் கதைகளில் வரும் மாயம் மந்திரம் எனும் சொல்லுக்கு
இதுதான் பொருள்.
இதை சற்றும் உணராத மக்கள் தான் அர்த்தமற்ற சொற்களான
மாயமந்திரங்களான மூட நம்பிக்கைகளில் நம்பிக்கை வைப்பார்கள்,என கண்ணன் மீண்டும்
பாண்டவர்களுக்கு சொல்வது போல் மக்களுக்கு எடுத்துரைக்கின்றான்.. இது
பாண்டவர்களுக்கு புரிகிறது;புரியவேண்டியது
துரியோதனன்களுக்குத்தான்.துரியோதனன்களுக்கு புரிந்துவிட்டால் மகாபாரதமே இல்லையே!
இன்றும் இந்நிலைதான்.
(அட்சய பாத்திரத்தில் ஒரு பருக்கை இருந்தது அதுவே
தூர்வாசருக்கு வயிறு நிரம்ப கிருஷ்னன் அமுது படைத்தான் என்பதன் பொருளே, இருப்பதை
கொண்டுபகிர்ந்து உண்ணும் பக்குவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் பாங்குதான்.
மக்களின் கற்பனைக்கு ஏற்ப மிகைப்படுத்தி கூறப்பட்டது.
78-அட்சய பாத்திரம்
அட்சய
பாத்திரம் என ஒன்று உலகில் கிடையாது.பிச்சை எடுக்கும் பாத்திரம் அது ,இதற்கு உணவு
வைத்திருப்பவரிடம் சென்று பசி போக்க உணவைக் கேட்க வேண்டும்.ஆனால்
அட்சய
பாத்திரம் என்பதற்கு உணவு வைத்திருபோர் உணவில்லா நல்ல மனம் படைத்த மக்களை வலிய
தேடிச்சென்று அந்த பாத்திரத்தில் உணவை வைப்பர்,அதுவே அட்சய பாத்திரம்.
சுருங்கச்
சொன்னால் நாம் நடக்கும் விதத்தில் நடந்து கொண்டால்(மனிதர்களிடம் அன்பும் கருணையும்
காட்டும் மனிதர்கள்)உணவு தாம் இருக்கும்
இடம் தேடி வரும் அதன் பேரு தான் அட்சய பாத்திரம்.
கதை சொன்னவர்களின் தன் பேச்சாற்றலால் கதை கேட்கும்
பாமரமக்களை திசை திருப்ப மாயம் மந்திரம்,அட்சய
பாத்திரம் எனும் சொற்களை கையாண்டனர்.அன்று இருந்த அட்சய பாத்திரம் இன்று
ஏன் இல்லை? அதன் உட்பொருளே மேலே விவரித்த நிகழ்ச்சியிலிருது வாசகர்கள் புரிந்து
கொள்ளலாம்.)
*************
இதற்கிடையே சுபத்திரைக்கு அபிமன்யு
பிறக்கிறான்.அவனுக்கு போர்க் களப்பயிற்சியை கிருஷ்னன் சொல்லித் தருகிறான்.
சத்ரியர்கள் என்றைக்குமே யாதவர்களை போர்க் களப் பயிற்சியில்
தங்களுக்கு சமமாக மதிப்பதே இல்லை.
பாண்டவர்களே அரைச் சத்ரியர்கள்தான், அதாவது யாதவப் பெண்ணான குந்திக்கும் சத்ரியனான பாண்டுவிற்கும் பிறந்தவர்கள்.
யாதவப் பெண் சுபத்திரைக்கும் அரை சத்ரியனான அர்ச்சுனனுக்கும் பிறந்தவன்
அபிமன்யு.அவனுக்கு பிராமண குருவான துரோணர் தனது குருகுலத்தில் சேர்க்க மறுக்கிறார்,
அதனால்தான் யாதவனான கிருஷ்னன் தன் தங்கை மைந்தனுக்கு போர்க்கள
பயிற்சி அளிக்க முன் வருகிறான்.
*******
கானகத்தில் வசிக்கும் பாண்டவர்களுக்கு 12 வருடங்கள்
முடிந்து விட்டது. அடுத்து ஒரு வருடம் தலைமறைவு(அக்கியாத
வாசம்) வாழ்க்கை வாழவேண்டும்.அவ்வாறு காட்டில் திரியும் போது,திரவுபதி ஒரு மரத்தில் நெல்லிக்கனி பார்க்கிறாள்அதைஉண்பதற்கு ஆசைப்பட்டாள்
உடனே,அர்ச்சுனன் அந்த நெல்லிக்கனியை தன் வில் அம்பால் கீழே
வீழ்த்துகிறான்.
அப்போது அங்கே வந்த கிருஷ்னன்,‘இந்தக்கனி அமித்திர முனிவருக்கு சொந்தம் அதை யாராவது உண்டால் அவர்
சாபத்திற்கு ஆளாக நேரிடும்.’
இதைக்கேட்ட பாண்டவர்கள் பயந்து விட்டனர்,
‘இப்பொழுது என்ன செய்வது கிருஷ்னா?எதாவது பரிகாரம் சொல்’என தர்மன் கேட்கின்றான்.
அதற்கு கிருஷ்னன்,‘நீங்கள் இதுவரை வெளிப்படுத்தாத ஆசைகள்
இருந்தால் அதை வெளிப்படையாக சொல்லிவிடுங்கள், அப்பொழுது
அந்தக்கனி தானாகவே மரத்தில் ஒட்டிக் கொள்ளும்’
(கிருஷ்னன்,இங்கே பாண்டவர்கள் மத்தியில் அருவ சிந்தனையை
விதைக்கிறான்.முனிவரின் சாபம் மனிதர்களை
அழித்துவிடும் என ஏன் சொல்லப்படுகிறது எனில் அப்பொழுதுதான் மனிதர்களில் சாதுக்களாக
வாழ்பவர்களை நிம்மதியாக வாழவைக்க முடியும் . ‘சாபம்’ எனும் அருவத்தை முரட்டு மனிதர்கள் மனதில் விதைத்தது,பிராமணர்கள்,அவர்களின் பாதுகாவலனனா கிருஷ்னன் அருவ
சிந்தனைகளை யாதவர்களுக்கு மனதில் பதியவைக்கிறான்.)
இது கதையில் வரும் கற்பனை.ஆனால் இதில் ஒரு உண்மை மக்களுக்கு
வெளிப்படுத்த நினைத்த கிருஷ்னன் கையாளும் யுக்தி தான் அது.
ஆறுபேரில் தர்மன் முதற் கொண்டு தன் மறைமுக ஆசைகளை
மறைக்காமல் சொல்கின்றனர்.
தர்மன் தான் நாடாளவேண்டும் எனும் ஆசையை கூறுகிறான்,மற்ற நால்வரும் தங்கள் எதிரிகள் யார் அவர்களை எப்படி ஒழிக்கவேண்டும் என
கூறுகின்றனர். இறுதியாக பாஞ்சாலி பாண்டவர்களை தன் உயிராக நினைத்து அவர்களை காலம்
முழுவதும் புணரவேண்டும் என கூறுகிறாள்;அப்பொழுதும் அக்கனி
மரத்தில் ஒட்டிக் கொள்ளவில்லை.
அப்போது கிருஷ்னன்,திரவுபதியைப் பார்த்து,
‘உன் உள் மனம் ஏதோ மறைக்கிறது திரவபதி,அதை வெளிப்படுத்து’ கிருஷ்னன்,திவுபதியின்
ஆராதனைக் குரியவன், திரவுபதி,
‘கிருஷ்னன், என் மானசீக
புருஷன்’,எனும் உண்மையை உரை(டை)க்கிறாள்.
(காண்க-வில்லி பாரதம்,ஆரண்ய காண்டம்) இதைக்
கேட்ட பாண்டவர்கள் அதிர்ந்து விட்டனர்.சுதாரித்துக் கொண்ட கிருஷ்னன், பாஞ்சாலியை இக்கட்டிலிருந்து காக்கும் பொருட்டு,‘கஷ்ட்டத்தில்
உள்ளவர்கள் யாராகிலும் என்னை நினைத்து, ‘கிருஷ்னார்ப்ணம்’,என கூறினால் அவர்களுக்கு உதவ ஓடோடி வருவேன் அந்த வகையில் என் அன்புக்கு உரியவள் பாஞ்சாலி’
‘ஐம்புலன்களும்போல் ஐவரும் பதிகள்
ஆகவும் இன்னம்வே றொருவன்
எம்பெருங்கொழுநன் ஆவதற்கும் உருகும்
இறைவனே எனது பேர் இதயம்
அம்புவி தனில்பெண் பிறந்தவர் எவர்க்கும்
ஆடவர்
இலாமையான் அல்லல்
நம்புதற்குளதோ?’ என்றனள் வசிட்டன்
நல்லற
மனைவியே அனையாள்
(வில்லி பாரதம்-பழம் பொருந்து சருக்கம்,பா-21)
இங்கே கிருஷ்னன் கூறுவதும் உண்மைதான்,அவன் எங்குமே,‘ நான் மாயம் செய்தது இல்லை,ஏனெனில் அப்படியொன்றும் உலகில் இல்லை,அன்பை மட்டுமே
பொழிகிறேன் அதுவே மாயம் என நம் மக்கள்
நம்புகின்றனர்’(6)
மகாபாரத கதைகளில் பல இடங்களில் இப்படித்தான் கிருஷ்னன்
கூறுகிறான்,கதை கேட்கும் நாம் தான் அவனை மாயக்கிருஷ்னனாக பார்ப்பதில்
ஆர்வம் காட்டுகிறோம்.
திரவுபதி ஐந்து கணவர்களை விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை
என்பது உண்மைதான்,ஆனால் கிடைத்த கணவன்களை தன் பெண்ணாதிக்க
சக்திக்கு தீனி போடுகிறாள்.ஐவரையும் ஆசைதீர அனுபவிக்க திட்டம் தீட்டுகிறாள்,கிருஷ்னன் தன் நண்பன் நாரதனுடன் சேர்ந்து கொண்டு பாண்டவர்கள் ஐவரையும் பாஞ்சாலி
தனித்தனியே முழுமையாக அனுபவிக்க வேண்டும்,
அதன் விளைவாக ஆண்டுக்கு ஒருவரிடம் ஐந்துபேரையும் தனித்தனி
கணவனாக அடைந்து,
பாஞ்சாலி ஐந்தாண்டுகளில் அனுபவத்ததின் விளைவு ஐந்து
பிள்ளைகளை பெற்றெடுக்கிறாள்.
குந்தி இளவயதில் செய்த தவறுக்கு சமமான ஒரு பெண் நம்
மருமகளாக வைத்துக்கொண்டால் தன் தவறு அடிபட்டுப்போய்விடும் எனும் நம்பிக்கையில் தன்
ஐந்து பிள்ளைகளையும் ஒரு பெண் மணந்து கொண்டால் ஒன்றும் குறைவோ அல்லது குற்றமோ
நிகழாது எனும் கணக்குப் போடுகிறாள் குந்தி.
(இந்த எண்ணத்தாலேயே குந்திக்கு கவுரவர்களிடத்தில்
அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட்டது.பின் வரும் பக்கங்களில் குந்தியைப்பற்றிய பெண்ணாதிக்க
குணங்களை அவள் வாயாயலே சொல்லக் கேட்கலாம்-மூலம் தெலுங்கு மொழிபெயர்ப்பு நூலான துரவுபதி,
ஆசிரியர் யாரலகட்டா,லட்சுமி பிரசாத்)
திரவுபதி மேல் ஐந்து கணவர்களை திணித்தாலும் தனக்கும் அதில்
நாட்டமுண்டு என்பதை அவளுக்கு பிறவிகள் தோறும் ஐந்து பேரை புணரும் ஆசை
விட்டபாடில்லை, என்பதை வியாசர் வர்னிக்கிறார்.
79-நளாயினி-இந்திரசேனா-திரவுபதி
முற்பிறவிகளில் இவள், நளாயினியாகவும், கணவன்
மவுலிக முனிவன் குட்டரோகியாக இருந்த போதிலும்,நளாயினியின்
காம வெறியின் முன்னால் புழுத்துபோன உடலையும் ஆசையுடன் தழுவ நேரிட்டது என
கூறுகின்றார் வியாசர் (வில்லி பாரதமும் இதை விளம்புகிறது) அது மட்டுமல்ல ‘ஒரே நேரத்தில் ஐந்து ஆண்களுடன் புணரவேண்டும் எனும் அவா மேலிட்டதால்’ அந்த மவுலிக முனிவர் மனைவியின் ஆசையை நிறைவேற்ற ஐந்து முகம் கொண்டக் கணவனாக
மாறி அவள் ஆசையை நிறைவேற்றுவார்.
நளாயினி இறந்த பின் அடுத்த பிறவியில் அதே எண்ணம் கொண்ட
இந்திர சேனா வாக பிறந்தவள் முன்னம் இருந்த உறவில் அதே மவுலிக முனிவரையோ அல்லது
அந்த எண்ணம் கொண்ட ஒரு புருஷனை அடைய நளாயினி ஆசைப்பட்டாள்.அது நிறைவேற முடியாமல்
போனது,அடுத்த பிறவியில் திரவுபதியாக தோன்றி ஐவரை மணப்பேன் என சபதம்
மேற்கொண்டு இறந்து போகிறாள்.
அவள்தான் பாஞ்சாலி.முற்பிறவி,மறுபிறவி எல்லாம் பாமரனை ஏமாற்றும் கட்டுக்கதை, பாஞ்சாலி
தன் பெண்ணாதிக்க வெறியை நாகரிகமான முறையில் வெளிப்படுத்த புனரப்பட்ட கதை தான் இந்த
மறுபிறவி கற்பனை)
********
பாண்டவர்களோடு பாஞ்சாலி காட்டில் சுற்றி சுற்றி களைப்பு
ஏற்படுகிறது நாக்கு நீர் வறட்சி கொள்கிறது.
அப்போது தர்மன் சகாதேவனிடம்,‘இங்கே அருகில்
நீர் நிலைகள் உள்ளதா பார்த்துவா, துரவுபதிக்கு தாகம்
அதிகமாகிவிட்டது’
நீர் உள்ளதா என பார்த்துவர போனவன் வரவே இல்லை.நெடு நேரமாகியும்
சகாதேவன் வராததைக் கண்டு, நகுலனை அனுப்புகிறான், அவனும் திரும்ப வில்லை, அடுத்தடுத்து, அர்ச்சுனன், பீமன் என போனவர்கள் வரவே இல்லை. தர்மனும்
திரவுபதியும் மற்ற நால்வரையும் தேடி போனார்கள்.குளத்தை ஒட்டிய கரையில் நால்வரும்
இறந்து போயிருப்பதைக் கண்டு இருவரும் கதறுகின்றனர்.
பாண்டவர்களுக்கு வனத்தில் வாழ்ந்த 12 ஆண்டுகளில்
அடுத்தடுத்து தொல்லைகள் தரவேண்டும் ,அதில் அவர்கள் மாண்டு போகும் சூழலையே
உருவாக்க திட்டம் தீட்டி தோல்வியில் முடிந்து போனதால் ,அவர்கள்
வாழும் எல்லையறுகே உள்ள நீர் நிலைகளில் விஷம் கலக்க தீர்மானிக்கப்பட்டு அவ்வாறே
அந்த குளத்தில் சகுனி ஆட்கள் விஷம்
கலக்கின்றனர்.அங்கே வாழும் காட்டுவாசிகள் அதை தடுக்க முடியாது பாண்டவர்களின்
ஆதரவாளர்களான காட்டரசன், இந்த உண்மையை தர்மனுக்கு தெரிவிக்கின்றான்.
‘இந்த குளத்து நீரில் விஷம் கலந்துள்ளது நீரை
அருந்த வேண்டாம் என நான் சொன்னேன், அதையும் மீறி அருந்தினார்கள்,
இறந்து விட்டார்கள்.’ என காட்டரசன்
கூறுகிறான்.
இருப்பினும் தர்மனின் உண்மை குண நலன்கள் எவை எவை என
தெரிந்து கொண்டு இறந்த அந்த நாலவரையும் மீட்டெடுக்கும் காட்டு மூலிகையை தரலாம் என
கணக்குப் போடுகிறான், அப்போது ,
‘தர்மா, நான் கேட்கும்
சில வினாக்களுக்கு பதிலளிப்பாயானால் ,நான் உன் தம்பிகளை
உயிர்ப்பித்து தருகிறேன்.’
‘என்ன வினாக்கள், கேள்
தெரிந்தால் விடையளிக்கிறேன்’
‘இந்த நால்வரில் ஒருவரை மட்டும் என்னால்
உயிர்ப்பிக்க முடியும் உனக்கு யார் வேண்டும்?’
‘நால்வருமே எனக்கு வேண்டிய தம்பிகள் தான், நால்வருமே வேண்டும்’
‘இப்போதைக்கு ஒருவருக்கு மட்டுமே உயிர் தர முடியும் யார் என்று
சொல்லுங்கள்?’
அப்படியானால் என் தாய் குந்திக்கு நான் ஒருவன் உள்ளேன்,எனது சிற்றன்னை பெற்றெடுத்த இரண்டு மகன்களும் என் தம்பிகள் தான், அந்த ஒருவர் எனில் சகாதேவனுக்கு உயிர் கொடுங்கள்’
உங்கள் உயரிய,பரந்த நோக்கு சிந்தனை எனக்கு பிடித்துள்ளது,அப்படியே உயிர்ப்பிக்க மூலிகை மருந்து உள்ளது ,சரி
அடுத்து யார் வேண்டும்?’
‘அடுத்தும் என் இன்னொரு சிற்றன்னை பிள்ளையான நகுலன்
வேண்டும்’ என தர்மன் கூறியதும் ,
‘உன் அறவழி சிந்தனை எனக்கு மிகவும்
பிடித்துள்ளது, எனவே நால்வரையும் உயிர்ப்பிக்க மருந்து
தருகிறேன்’
நால்வர்களும் மீண்டும் உயிர் பெற்று எழுந்தனர்,ஆறுபேரும் அந்த காட்டரசனுக்கு நன்றி சொல்லி விடை பெற்றனர்.மக்களுக்கு
தர்மசிந்தனை ஊட்ட வேண்டும் எனும் நோக்கில் இந்த கதை தர்மன் மூலமாக
விவரிக்கப்படுகிறது.
81-விராட பருவம்
13-ம் வருடம் பாண்டவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டும்,அதற்கு என்ன செய்யலாம் என யோசிக்கும் போது வியாசர் கண்ணில் படுகிறார்,அவரின் யோசனைப்படி பாண்டவர்கள் மத்திய தேசத்து அரண்மனையில் மாறுவேடம் தரித்து
ஒரு வருடம் கழித்து விடுங்கள் எனும் யோசனையை ஏற்று அங்கே செல்கின்னர். வந்திருப்பது
பாண்டவர்கள் என தெரியாத விராட மன்னன்,அவர்கள் வாளிப்பான உடல்
அம்சங்களைப் பார்த்து அரண்மனையில் அவரவர் விருப்பங்களுக்கு ஏற்ப வேலை அளிக்கிறான்.
தர்மன்,-கங்கன் ஆகவும்
(அரசருக்கு ஆலோசகர்), பீமன் சமயல் காரனாகவும்,
அர்ச்சுனன் பெண் வேடம் தரித்து, பிரகனளையாகவும் (இளவரசி உத்தரைக்கு
நட்டுவாங்கம்),
நகுலன் குதிரை லாயத்திலும்,
சகாதேவன், கோசாலையில் (பசுக்களை பராமரித்தல்) பணியாளராகவும்
பாஞ்சாலி, சைலந்திரியாக ராணிக்கு
தாதியகவும் பணியில் சேர்கின்றனர்.
இதற்கிடையே பக்கத்து நாட்டு மன்னன் மத்திய நாட்டு பசுக்களை
கவர்ந்து போகிறான் ,விராட மன்னன் அந்த பசுக்களை மீட்டெடுக்கும்
கட்டாயத்திற்கு ஆளாகின்றான். கங்னாக இருக்கும் தர்மன் தேரோட்டியாக அரசனுடன் சென்று
அந்தப் போரில் விராட மன்னன் வெல்கிறான்.
82-கீசகன் வதம்
அரண்மனையில் அரசியும் பணிப் பெண்ணான சைலந்திரி (பாஞ்சாலி)யும்
தனித்து இருக்கின்றனர். அந்நேரம் பார்த்து அரசியின் தம்பி கீசகன்
அரண்மனைக்கு வருகிறான். பணிப் பெண்ணாக இருக்கும் பாஞ்சாலியின் பேரழகில் மயங்கிப் போகிறான்.சர்வ
பலம் பெற்ற கீசகன் அந்த பணிப் பெண்ணை அடைய
முற்படுகிறான். அதற்கு தன் அக்காவின் உதவியை நாடுகிறான்.
அந்நாளில் அரண்மனைப் பணிப் பெண்களை தாதி எனவும்,தாசி எனவும் அழைக்கப்படுவர், அதாவது அரசரோ அல்லது
இளவரசரோ தனது காமத்திற்கு இரையாக்க விரும்பினால் அந்த பெண்கள் மறுப்பேதும்
தெரிவிக்க மாட்டார்கள், மறுப்பும் தெரிவிக்க கூடாது. இது அரச
குல மரபு.
திரவுபதி தான் சைலந்திரியாக வேடமிட்டுள்ளாள் என்பதை கீசகன்
தன் ஒற்றன் மூலம் அறிந்து கொள்கிறான். தன் ஆசைக்கு இணங்கவில்லை எனில்
‘தங்களின் தலைமறைவு வாழ்க்கையை துரியோதனனுக்கு
தெரியப்படுத்தி விடுவேன்’ என திரவுபதியை கீசகன்
மிரட்டுகிறான்.
சைலந்திரியாகவே தான் இருக்க விரும்புவதாகவும், ‘தங்கள் இச்சைக்கு இணங்குகிறேன்’ என திரவுபதி
கீசகனுக்கு வாக்களிக்கின்றாள். அதை நம்பிய கீசகன் திரவுபதி வருகைக்காக தனி அறையில்
காத்திருக்கின்றான்.
அந்த எண்ணத்தில் தனித்திருக்கும் கீசகனுக்கு பணிவிடை செய்ய
அரசியார் சைலந்த்ரியை பணிக்கிறாள். கீசகனின்
அற்ப குணத்தை அறிந்த சைலந்திரி அரசியாரிடம், வேறு தாதியை அனுப்ப வேண்டுகிறாள்,மறுத்து பார்க்கிறாள் முடியவில்லை.
இந்த இக்கட்டான ,தர்ம சங்கடமான சூழலை தன் கணவர்களில்
கீசகனுக்கு சமமான பல முள்ள தன் பீமனிடம் ஆலோசிக்கின்றாள்.பீமன் சைலந்திரி போல்
வேடமிட்டு கீசகனுக்கு பணிவிடை செய்ய
போகிறான். திரவுபதியும் பீமனுக்கு அருகில் மறைந்து கொள்கிறாள். கீசகனுக்கு
காமம் தலைக் கேறியது அவனுடைய ஆசை வார்த்தைகளுக்கு ஒளிந்திருக்கும் திரவுபதி
பதிலளிக்கின்றாள்.
மிகுந்த ஆவலோடு திரவுபதி வேடத்திலிருக்கும் பீமனை
தீண்டுகிறான் கீசகன்.சட்டென்று பீமனைத்
தீண்டிய கீசகனை ஒரு நொடியில் கீழே வீழ்த்துகிறான்.இருவரும் கட்டி புரண்டு சண்டை
இடுகின்றனர்.இறுதியில் பீமனால் கீசகன் வதம் செய்யப்படுகிறான்.
83-விராட போர்
கீசகன் மரணம் அஸ்த்தினாபுரத்தில் அதிர்ச்சி
ஏற்படுத்துகிறது.கீசகனை வெல்ல அவனைப் போல் சம பலம் கொண்ட துரியோதனன்,மற்றும் பீமானால் மட்டுமே முடியும்.அப்படி இருக்கும் போது கீசகனை பீமன்
தான் கொன்றிருக்க முடியும் என சகுனி தீர்மானிக்கிறான்.
அப்படியானால் தாம் உடனே விராட நாட்டின் மீது போர் தொடுக்க
வேண்டும் என துரியோதனன், துர்ச்சாதனன் மற்றும் கர்னன் ஆகியோர்
தீர்மானிக்கின்றனர்.அதற்கு மன்னர் திருதராஷ்ட்ரன் அனுமதி பெற வேண்டும்,என சகுனி எடுத்துரைக்கின்றான்.
மூவரும் மன்னரைப் பார்த்து போர் தொடுக்க அனுமதி
கேட்டனர்.மன்னர் போருக்கு சம்மதித்தார்.
அரசவையில் தீர்மானிக்கப்பட்டது.பீஷ்மன் தலைமையில்
போர்படைகள் விராட தேசத்தை நோக்கி புறப்பட்டன.விராட மன்னன் அண்டை நாட்டுடன் போர்
புரிந்து ,வெற்றிக் களிப்பில் போர் களத்தில் இருக்கின்றான்.இதற்கிடையே
இளவரசன் உத்ரன் மற்றும் பிரகனளையாக வேடமேற்றிருக்கும் அர்ச்சுனன் மட்டுமே
அரண்மனையில் இருக்கின்றனர்.
அஸ்த்தினாபுர படை பலத்தைப்பற்றி உத்ரனுக்கு தெரியும்
தன்னால் அதை எதிர்த்து போர் புரியமுடியாது என பிரகனளையிடம் புலம்புகிறான்.
‘நான் தேரோட்டுகிறேன், நீங்கள்
ரதத்தில் அமர்ந்து வாருங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்,தைரியமாக வாருங்கள், அனைத்தையும் நான் சமாளிக்கிறேன்’,என உத்ரனுக்கு அர்ச்சுனன் தைரிய மூட்டுகிறான்.
போர்களத்தில், பீஷ்மன், துரோணர்,
கிருபாச்சாரி, துரியோதனன், துர்ச்சாதனன், கர்னன், மற்றும்
சகுனி ஆகியோர் தத்தம் படை பரிவாரங்களுடன் அணிவகுத்து நிற்கின்றனர்,
படைகளை பார்த்தவுடன் உத்ரன் மிரண்டு போகிறான், போர்க்களத்தை விட்டு ஓடுகிறான். பிரகனளை உத்தரனை ஒடிப்போய் இழுத்து வந்து,
‘நீங்கள் தேரோட்டுங்கள்,நான் போர் புரிகிறேன்’ என கூறி தேரை
வன்னிமரத்தடிக்கு ஒட்டச் சொல்கிறான்.
(விராட அரண்மனைக்குள் நுழையுமுன் பாண்டவர்கள், தங்கள் ஆயுதங்களை வன்னி மரத்தின் மேலே பதுக்கி வைத்து விட்டனர். மாறுவேடம்
தரித்து போனவர்கள். இன்று அந்த ஆயுதங்களை பயன் படுத்தும் நேரம் வந்து விட்டது.)
உத்ரனுக்கு சந்தேகம்,
‘நீ ஒரு பெண்ணாக இருக்கின்றாய் நீ எப்படி
போர் புரிய முடியும்? அதுவும் எதிரணியில் இருப்பவர்கள்
மாவீரர்கள்,அவர்கள் ஒரு அலியை எதிர்து போர் புரிய மாட்டார்களே!’
பிரகனளையாக இருக்கும் அர்ச்சுனன்,‘இல்லை நான் அலி அல்ல,நான் தான் மாறுவேடத்தில்
இருக்கும் அர்ச்சுனன். அக்கியாத வாசம் நேற்றோடு முடிந்து விட்டது,இனி நான் என் வேடத்தை கலைத்து போர் புரியலாம்.
அரண்மனையில் இருக்கும் கங்கன்,எனது பெரிய அண்ணன் தர்மன்,சமயல் வேலை செய்யும்
அண்ணன் பீமன்,குதிரை லாயத்தில் இருக்கும் தம்பி நகுலன்,கோசாலையில் இருப்பது இன்னொரு தம்பி சகாதேவன் மற்றும் அரசியாராகிய உங்கள்
தாய்க்கு பணிவிடை செய்யும் சைலேந்திரிதான் திரவுபதி.
எனவே நீங்கள் எங்களுக்கு ஒரு ஆண்டு காலம் அடைக்கலம் தந்த
நன்றிக் கடனுக்காக நான் விராட தேசத்துக்காக போர் புரிவது என் கடமை’ என அர்ச்சுனன் உத்தரனிடம் தெரிவிக்கிறான்.
வன்னி மரத்திலிருந்து தன்னுடைய காண்டீபத்தை எடுத்த
அர்ச்சுனன், போர் புரிய ஆரம்பித்தான்,இதை கண்ட
துரியோதனன் ஒரு அலியை எதிர்த்து தான் போர் புரிய மாட்டேன் என காணாமல் போய்
விட்டான்.
தான் கற்ற தனூர் வித்தையால் எதிரிகளான தன் குல பெரியோர்களை
மயக்க மடையச் செய்த அர்ச்சுனன்,உத்தரனைப்பார்த்து,
‘நீங்கள் போய் பீஷமரைத்தவிர மற்ற தலைவர்களின்
ஆடைகளை களைந்து வாருங்கள் உத்தரை தன் பொம்மைகளுக்கு ஆடை கேட்டாள்’ என வேண்டுகிறான்.
உத்தரன், அர்ச்சுனன் காலில் விழுந்து வணங்குகிறான், ‘என் நாட்டு மானத்தை காப்பாற்றிய தங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன் என
கண்ணீர் வடிக்கிறான்.’ அர்ச்சுனனோ,
‘தாங்கள் அப்படி செய்யக்கூடாது,நீங்கள் இந்நாட்டு இளவரசர். அரண்மனைக்கு சென்றதும் தாங்கள்தான் போர்
புரிந்ததாகவும் போரில் ‘முழு வெற்றி பெற்றேன்’ என தங்கள் தந்தையிடம் கூறவேண்டும்’ என உத்தரவாதம்
வாங்கிக் கொண்டு அரண்மனை திரும்புகின்றனர்.
இதற்கிடையே விராட மன்னன் தர்மனுடன் அரண்மனை திரும்புகிறான்,பிள்ளை போர்களம் சென்றதைக்கேட்டு அரசியாரிடம் கோபம் கொள்கிறான். கங்கனாக இருக்கும் தர்மன்,இடைமறித்து,
‘பிரகனளை எல்லாம் பார்த்துக் கொள்வான், கவலையை விடுங்கள் மன்னா’என கூறி முடிக்கும் முன் அரசன்
தன் கையில் பட்ட ஆயுதத்தை எடுத்து கங்கன முகத்தில் வீசுகிறான்,
‘ஒரு அலியினால் என்ன செய்துவிட முடியும் ? என்ன உளருகிறாய் கங்கா?’
ரத்தம் வடிவதைப் பார்த்த சைலேந்திரி, உடனே ஒரு பாத்திரம்
கொண்டு, தர்மனின் உதிரம் தரையில் விழாமல் தாங்கிக் கொள்கிறாள். இதைக் கண்ட அரசன்,
‘என்ன ஒரு வேலைக்காரன் மேல் அவ்வளவு அக்கரை?அவன் உதிரம் துடைக்க
அவ்வளவு பதற்றம் ஏன்?’ என சைலந்திரியைப் பார்த்து மன்னன் வினவுகிறான்.
சைலந்திரியோ, ‘அவரை யார் என நினைத்துக் கொண்டீர்கள் மன்னா?
அவர் உதிரம் தரையில் பட்டால் அந்த நாடு அழியும்,எங்களுக்கு அடைக்கலம் தந்த ஒரு
நாடு அழிவதை நாங்கள் விரும்ப வில்லை’ இவ்வாறு சைலேந்திரி சொன்னதும், அர்ச்சுனன்
உத்தரனைப் பார்த்து உண்மையை வெளிப்படுத்த வேண்டாம் என சைகை மூலம் தெரிவிக்கிறான்.
ஆனால் அதையும் மீறி உத்தரன் தன் தந்தையிடம்,
~தந்தையே,நம்மீது போருக்கு வந்த கவுரவர்களை,எதிர்த்து நான் போர் புரியவில்லை,இதோ பிரகளையாக இருக்கும்
அர்ச்சுனன் தான் கவுரவர்களை எதிர்த்து போரிட்டு போரில் கவுரவர்களை புறமுதுகிட்டு ஓடச்செய்தார்.’ உண்மையை கூறிவிடுகிறான் .உண்மை நிலை உணர்ந்த அரசன்,
‘என்னை மன்னியுங்கள் தர்மரே,உண்மை நிலை உணராது ,நான் தங்களை
ஒரு வேலைக் காரனைவிட கேவலமாக நடத்தினேன்.என்னை மன்னியுங்கள் சக்ரவர்த்தியாரே’
தர்மனோ, ‘நீங்கள் உங்கள் கடமையைத்தான்
செய்தீர்கள்,எங்களுக்கு ஒரு ஆண்டு காலம் அடைக்கலம் தந்த உங்களுக்கு நாங்கள்
நன்றிக்கடன் பட்டுள்ளோம்’ என கூறியதைக் கேட்ட விராட மன்னன்,
‘இல்லை இதற்கு எதிர் உபகாரமாக என் மகள் உத்திரையை
அரச்சுனனுக்கு மண முடிக்க ஆசைப் படுகிறேன்’ என கூறுகிறான்.உடனே அர்ச்சுனன்,
‘மன்னா,உத்திரை என்
மகள் போன்றவள், வேண்டுமானால் என் மகன் அபிமன்யுவிற்கு
மண முடித்து மருமகளாக ஏற்கிறேன்’ என கூறுகிறான்.
மச்சிய (மத்திய) தேசத்து மன்னனுக்கும் இதில் பூரண உடன்பாடு.
84-அபிமன்யு திருமணம்
13 ஆண்டுகளாக 5 உப பாண்டவர்களும், சுபத்திரை மகன் அபிமன்யுவும் துவாரகையில் கிருஷ்னன் அரவணைப்பில் வாழ்ந்து
வருகின்றனர்.
(உப பாண்டவர்கள் விராட தேசத்து அரண்மனையில், தங்கள் தாத்தா பாட்டி அரவணைப்பில் வளர்ந்த தாக இன்னொரு கதையும் உண்டு)
அவர்களை திரவுபதி இருக்கும் இடமான விராட மன்னன் அரண்மனைக்கு
கிருஷ்னன் அழைத்து வருகின்றான்.
‘இதுவரை நாம் நம் அன்னையை பார்த்ததே இல்லை,
நம்மை அடையாளம் கண்டு கொள்வார்களா அண்ணா?’ என
தர்மனின் புதல்வனைப் பார்த்து மற்றவர்கள் கேட்கின்றனர்.
‘ஒரு தாய்க்கு தான் பெற்ற பிள்ளைகளை எவ்வளவு
நாள் கழித்து பார்த்தாலும்,அவர்கள் முக ரேகையைப்
பார்த்து அடையாளம் கொள்வாள் தம்பிகளே,அந்த ஆற்றல் ஒரு தாய்க்கு உண்டு’
ஆறு பேரும், திரவுபதி ,சுபத்திரை
மற்றும் கிருஷ்னன் உள்ள இடத்திற்கு வருகின்றனர். அப்போது கிருஷ்னன் துரவுபதியிடம்,
‘துரவுபதி.இப்பொழுது ஆறு பேர் உன்னிடம் ஆசி
வாங்க வருகின்றனர்.இதில் நீ யாருக்கு முதலில் ஆசி வாங்க விரும்புகிறாய் ? எங்கே அவனை முதலில் அழை பார்க்கலாம்’
‘அபிமன்யு,என் செல்வமே!,என் கண்ணே! வா’ என ஆசையுடன் தன் சக்களத்தியின் மகனான,
அபிமன்யுவை அழைத்து,உச்சி மோந்து,‘நீடூழி வாழ்க ‘ என்கிறாள்.
இதை கவனித்த கிருஷ்னன்,‘என்ன துரவுபதி, உன் வாழ்த்தில் ஒரு உத்வேகம் இல்லையே! அபிமன்யு எப்படிப்பட்ட வீரன்,அவன் சாதிக்கப் போவது, நீ வழங்கும் வாழ்த்தில் தான்
அமைந்துள்ளது,வெறும் உணர்ச்சியற்ற வாழ்த்து அவனுக்கு எப்படி
பயன்படும்,எதிர் வரும் போர்க்களத்தில் இவன் வெற்றி வாகை சூட
வேண்டாமா?’
திரவுபதி கிருஷ்னனின் வார்த்தைகளில் ஏதோ அர்த்தம் உள்ளதை
உணர்ந்து உள் வாங்கிக் கொண்டாள்.
‘மகனே! உன் தந்தையின் வீரம் இந்த உலகம்
அறியும், அவருக்கு பிறந்த நீ பகைவர்களிடத்தில் உன்
பராக்கிரமத்தை காட்ட வேண்டும்.
காண்டீபனின் மகன் அபிமன்யு என்பதை நிலை நாட்ட வேண்டும்’ திரவுபதி மீண்டும் அபிமன்யுவை அழைத்து வாழ்த்தினாள்.
அடுத்து தர்மனுக்குப் பிறந்த தன் மகனை அழைத்து
வாழ்த்தினாள்.
‘எப்படியம்மா என்னை அடையாளம் கண்டீர்கள்’
‘ஒரு தாய், தான்
யாருக்குப் பிள்ளை பெற்றோம் எனும் உண்மையை வெளிப்படுத்த,
அவள் பெற்ற பிள்ளைகள் தானே சாட்சி,ஒரு தந்தையின் முக ரேகை
அவள் பெற்ற பிள்ளைகளின் முகத்தில் தெரியுமே என் செல்வங்களே,
நீங்கள் ஆறு பேரும்,தங்கள் தந்தையர் போல் சிறப்புற வாழ
வாழ்த்துகிறேன்’
அபிமன்யு திருமணம்
அபிமன்யுவிற்கு திருமணம், அஸ்த்தினா புரத்திற்கு தூதுவன்
மூலம் திருமண அழைப்பு அனுப்புவது என பாண்டவர்கள் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. திருமண
ஓலை அஸ்த்தினாபுரத்திற்கு அனுப்பப்பட்டது.
அஸ்த்தினாபுரத்தில் அரசவை கூடுகிறது. அபிமன்யு
திருமணத்திற்கு போகக்கூடாது என துரியோதனன் அவையில் தெரிவிக்கிறான்.
அப்போது பீஷ்மன், ‘அதெப்படி இத்தனை பெரியவர்கள் இருக்கும்
போது நீ திருமணத்திற்கு போகக்கூடாது என உத்தரவு போடும் அதிகாரம் மன்னர் இருக்க
உனக்கு யார் கொடுத்தது?
85-பகையாளியாகிய பங்காளிகள்
பிதா மகர்,தந்தை திருதராஷ்ட்ரன்,சித்தப்பா
விதுரன்,ராஜகுரு துரோணாச்சாரி, மற்றும்
குலகுரு கிருபாச்சாரி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்த துரியோதனன்,
‘உங்களில் நான் இதுவரை யாரிடமும் மரியாதை
குறைவாகவோ,அல்லது தரம் தாழ்த்தியோ நான் இதுவரை பேசியதில்லை,
ஆனால் பாண்டவர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என நீங்கள் யாரவது
கூறும்போது மட்டும் உணர்ச்சி வயப்பட்டு விடுகிறேன் ஏன் ?
என்னை குழந்தைப் பருவத்திலிருந்து நீங்கள் வளர்த்தீர்கள்,கொஞ்சும் போதும் விளையாடும் போதும் என்னை அஸ்த்தினாபுர இளவரசே! என
பாராட்டி வளர்த்தீர்கள்,வளர்க்கும் போதே என்னை இந்த
அரண்மனையில் நீ மன்னரின் மகன் மட்டுமே,இந்த அரண்மனைக்கு
இளவரசன் பாண்டுவின் மூத்த புதல்வன் தான்
இளவரசன் என என்றாவது ஒரு நாள் சொல்லி வளர்த்திருந்தால் எனக்கு ஏன் இந்த பாண்டவர்
வெறுப்பு எண்ணம் வரப்போகிறது? சொல்லுங்கள் தாத்தா!, சொல்லுங்கள் தந்தையே!, சொல்லுங்கள், சித்தப்பா!, சொல்லுங்கள் குல குருவே!, சொல்லுங்கள் ராஜ குருவே1 ‘
(இதிலிருந்து என்ன தெரிகிறது,ஒரு மனிதன்
எப்படி சமுகத்தில் தோற்றமளிக்கிறான் ,அவன் நல்லவனாகவும்
அதர்மக்காரனாகவும் மாற வளர்ப்புதான் காரணம் என தெரிகிறதா!)
அப்பொது பீஷ்மர்,‘இப்படி பேசுவதால் உன் பக்கம் நியாயம் உள்ளது
என நினைக்க முடியாது.குழந்தை பருவத்தில் உன்னை செல்லம் கொடுத்து
கெடுத்தார்கள்.அதற்காக குடும்ப நியாயம் என ஒன்று உள்ளதே அது நீ நினைவில்
கொள்ளவேண்டும் துரியோதனா!’
அப்பொது துரியோதனன், ‘காலத்திற்கு ஏற்றாற் போல் வயதுக்கு
ஏற்றாற்போல் எல்லாம் என்னால் என் குணங்களை மாற்றிக் கொள்ள முடியாது. அது சத்ரிய
குணமு மல்ல,’மேலும் துரியோதனன்,
‘ஒருவர் தன் பிள்ளைக்கு திருமணம் நடக்கிறது
எனில் தன் சொந்தங்களை நேரில் வந்து அழைக்க
வேண்டும் ,அதுதானே முறை?
அதுதானே நியாயம்?அதைவிடுத்து கேவலம் ஒரு தூதுவன் மூலம்
மணவோலை கொடுத்தனுப்பினால் அந்த திருமணத்திற்கு நாம் செல்வ்வதா? கூடாது தந்தையே!’
(இன்றும் நம் குடும்பங்களில் இது போன்ற பிரச்சினைகள் இருக்கத்தானே செய்கிறது, மகாபாரதம் நடந்த கதைதானே!)
அபிமன்யுக்கு விராட மன்னன் மகளான உத்திரையுடன் திருமணம் நடக்கிறது.
பன்னாட்டு மன்னர்களும் வந்திருந்து மண மக்களை வாழ்த்தினர்,அஸ்த்தினாபுரத்திலிருந்து யாரும் வரவில்லை.
திருமணத்தன்றே, துருபதன், அவன் மகன்
திரிஷ்ட்ட தூமனன் ஆகியோர் அஸ்த்தினாபுரத்தின் மீது போர் தொடுக்க வேண்டும் என
பிரச்சினையை அவையின் முன் வைக்கின்றனர். பீமனும் துடிக்கின்றான்.
அப்போது அவையில் கிருஷ்னன், ‘பாண்டவர்களாகியநீங்கள்,
நிபந்தனையுடன் கூடிய வனவாசத்தை இப்பொழுது முடித்துள்ளீர்கள். உடனே ஒரு சுப காரியம்
நடந்துள்ளது. இப்பொழுது ஒரு போர் அவசியமா? சற்று யோசித்து பாருங்கள்.’ என கிருஷ்னன் அவையில் தெரிவித்தான்.
திருபதன் ஆவேசமடைந்தான்,‘கண்ணா !,யது குல மன்னா! சத்ரியர்கள் வைராக்கியத்தை கொச்சை படுத்தாதே, என்னை அசிங்கப்படுத்திய, அவமானப்படுத்திய, பீஷ்மனை பழி வாங்கவே நான் தவமிருந்து
ஒரு புத்திரனை பெற்றுள்ளேன். அவனை கொல்வதற்குள் எனக்கு வயதாகிப்போய்
போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன்.’ என சொல்லி முடிப்பதற்குள்,
பீமன்,‘கிருஷ்னா,நான் எனது
திரவுபதியின் கூந்தலை முடிக்க, துர்ச்சாதனன் மார்பை
கிழிக்க வேண்டும்,
இப்படி சமாதானம் பேசினால் திரவுபதியின் சபதத்தை எவ்வாறு
முடிப்பது?
அப்போது கிருஷ்னன், ‘பாண்டவர்களின் சபதத்தை நான் கொச்சைப்படுத்த
விரும்ப வில்லை. திரவுபதி தன் சபதத்தை நிறைவேற்றிக் கொள்ள துர்ச்சாதனனை
கொல்லட்டும், சிகண்டி தன் சபதத்தை நிறைவேற்றிக் கொள்ள
பீஷ்மனை கொல்லட்டும், துஷ்டதூமணன், தன்
பிறப்பின் லட்சியமான துரோணரைக் கொல்லட்டும், பீமன் தன்
பங்காளியான- எதிரியான துரியோதனனை கொல்லட்டும்,
மாறாக பாண்டவ-கவுரவ தலைவர்கள் போரிட்டு சாகட்டும், இதைப்பற்றி நான் கவலை கொள்ள எனக்கு என்ன இருக்கிறது?நான் ஏன் கவலை கொள்ள வேண்டும்?’ மேலும் தொடர்கிறான்
கிருஷ்னன், ‘துருபதரே, நான் கவலைப் படுவதெல்லாம்,
ஏதுமறியா மக்கள், உங்கள் சத்ரிய
வைராக்கியத்தால் மாண்டுபோக நேரிடும் அது தான்
என் கவலை. அதற்காக நாம் கவுரவர்களிடத்தில் சமாதான தூது அனுப்பி இதையெல்லாம்
எடுத்துச் சொல்லி,
போர் என்றால் பல உயிர்கள் மடியும்,போரை தடுக்க வழி இருக்குமா என கேட்போம்’
‘அப்படியானால்,இந்திரபிஸ்த்தத்தை
எங்களுக்கு தாருங்கள் என துரியோதனனிடம் பிச்சை கேட்கச் சொல்கிறீர்களா கிருஷ்னா?’ பீமன் பேச்சில் வெப்பம் அதிகரித்தது.
‘மனித குல வாழ்க்கையின் அஸ்த்திவாரங்களே,
அன்பு, பாசம்,உபயம்,நியாயம்,போன்றவைகள் தர்மம் ஆகும்.மாறாக மனித குல அழிவின்
அஸ்த்திவாரங்களான,வீரம்,வெற்றி,தோல்வி,வைராக்கியம்,சபதம்
என்பதற்கு நான் எப்படி முக்கியத்துவம் தர முடியும் ?’
கிருஷ்னன் பீமனுக்கு சொல்வது போல் மக்களுக்கு சொல்கிறான்.
(இதுபோன்ற கிருஷ்னனின்
அறிவுரைகள் மகாபாரத கதைகளில் ஆங்காங்கே காணப்படும். ஆனால் திருபதன்களும்
துரியோதனன்களும் இதற்கு செவி சாய்த்ததாக எங்கும் காணமுடியாது.
எதையொல்லாம் நம்மவர்களால் பின்பற்ற முடியவில்லையோ அல்லது
முடியாதோ அதையெல்லாம் கடவுள் விட்ட வழி என ஒதுக்கிவிடுவோம் அது தான் கடவுள் அதாவது
நம்மால் நாசுக்கா, இங்கிதாமா பழகத்தெரியாது. அதனால் தான்
அப்படி பட்ட மனிதர்களை நய வஞ்சகர்கள் என்கிறோம்,நயமாக பேசி
பின் சொன்ன சொல்லை காப்பாற்றாத சிரிதும் கவலை யற்ற மனிதர்கள் தான் (followers of god) பொய்யர்கள்.)
இறுதியாக துருபதன்,அஸ்த்தினாபுரத்திற்கு தூதுவனை
அனுப்ப ஒத்துக் கொள்கிறான்.அதன் படி ஒரு தூதுவன் அஸ்த்தினாபுரம் நோக்கி
விரைகிறான். அஸ்த்தினாபுர அரசவையில் தர்மனின்
தூதுவன் வரவேற்கப்படுகிறான். அப்போது
திருதராஷ்ட்ரன்,
‘வந்த நோக்கமென்ன?’
‘மாமன்னர் திருதராஷ்ட்ரரின் ஆசிர்வாதம் வேண்டி இளவரசர்
தர்மர் தூது அனுப்பியுள்ளார்’
‘என் ஆசிர்வாதம் என் தம்பி பாண்டுவின் புத்ரர்களுக்கு
என்றும் உண்டு, வந்த நோக்கத்தை தெரிவி’
‘தங்கள் கட்டளைப்படி 12 ஆண்டுகள் வனவாசமும், ஓராண்டு அக்யாதவாசமும் முடிந்து
விட்டது,மன்னர் விரும்பினால், தான் நேரில் வந்து இந்திரபிரஸ்த்த
மணிமுடியை மன்னரிடம் வந்து பெற்றுக் கொள்வாதாக இளவரசர் தர்மர் தெரிவிக்கச்
சொன்னார்’
‘இல்லை, நிபந்தனைப்படி பாண்டவர்கள் அக்யாதவாசம் முடிக்கவில்லை,முடிய ஒருநாள் இருக்கும் போதே,
அர்ச்சுனனை நான் நேரில் கண்டதால் அக்யாதவாசம் முறிந்து விட்டது, எனவே நியாயப்படி பாண்டவர்கள்
மீண்டும் 12 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும்’
துரியோதனன் அவையில் தூதுவனிடம் கர்ஜிக்கிறான்,
‘போய் தர்மனிடம் சொல்’
‘துரியோதனா,மன்னர்தான் தூதுவனுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்,
நீ இடையில் புகுந்து பேசுவது
நியாயம் அல்ல’ பீஷ்மன் சொன்னவுடன்,துரியோதனன் அமர்ந்து
விட்டான்.ஆனால் மன்னரிடம் எந்த பதிலும் இல்லை.
மீண்டும் தூதுவன் ,‘மன்னா தங்கள் பதில் என்ன? நான் தர்மனிடம் என்ன கூறுவது?’
‘நான் எனது தூதுவனை அனுப்புகிறேன், நீ போகலாம்’
இரவெல்லாம் காந்தாரியுடன்
திருதராஷ்ட்ரன் கலந்தா லோசிக்கிறான்.திருதராஷ்ட்ரனால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை இறுதியாக, காந்தாரி கூறுகிறாள், ‘மன்னரே, தர்மனை அழைத்து இந்திர
பிரஸ்த்தத்தை கொடுத்துவிடுங்கள், அதுதான் நமக்கு நல்லது’
‘காந்தாரி!நான் ஒரு பெரியப்பா என தர்மன் என்னை மதித்து வந்து
கேட்டிருந்தால் நான் இந்திரபிரஸ்த்தம் தந்திருப்பேன்,என்னை மதிக்காத சிறுவனுக்கு, நான் தூதுவன் மூலம்
இந்தரபிரஸ்த்தம் தருவதா !இது நல்லதாக எனக்கு தெரியவில்லை’.
*****************
ஒரு சத்ரியன், இன்னொரு
சத்ரியனுக்கு தலை வணங்கமாட்டான், ஒவ்வொரு சத்திரியனும் தன்னை அரசனாக நினைத்துக் கொள்வதுதான் இதற்கு
காரணம்.மூர்கத்தனம் (வீரம்?) தன் மானமும் சுயமரியாதையும் மட்டுமே அவன் சொத்து. இதற்கு
ரஜோகுணம் என்று பெயர்.
அது அண்ணனுக்கு தம்பியாக
இருக்கட்டும், அல்லது தம்பிக்கு அண்ணனாக இருக்கட்டும், அல்லது தந்தைக்கு மகனாக
இருக்கட்டும், மகனுக்கு தந்தையாக இருக்கட்டும்.இதனாலே நாளடைவில் மற்ற
இனங்களோடு போட்டியிட்டு முன்னுக்கு வர முடியாமல் அந்த இனம் அழிவுக்கே
வந்துவிட்டது.
******************
திருதராஷ்ட்ரனின், தேரோட்டியான, சஞ்சயன் அழைக்கப்படுகிறான். ‘சஞ்சயா என் நிலைமையை பார்த்தாயா? இந்த அஸ்த்தினாபுரம் எதிர்காலம்
என்ன ஆகுமோ என நினைத்தால் எனக்கு தூக்கமே வரவில்லை சஞ்சயா நான் என்ன செய்வேன்? எனக்குப் பின் என் மகன் அரியணை
ஏறவேண்டும்.என் தம்பி மகன் பாண்டுவின் மூத்த புதல்வன் தர்மன் என் மகனை விட
மூத்தவன் அவனுக்கும் அஸ்த்தினாபுர அரியணை ஏற உரிமை பெற்றவன். இருவரும் ஒருவருக்கு
ஒருவர் விட்டுக் கொடுக்கும் மன நிலையில் இல்லை.நான் என்ன செய்வது?
86-சஞ்சயன் தூது
இந்நிலையில் தர்மனின் தூதுவனுக்கு நான்
என்ன பதில் கூறுவது என தெரியாமல் அந்த தூதுவனை அனுப்பி விட்டேன்,எதற்கும் சஞ்சயனை மறு தூது
அனுப்பினால் அஸ்த்தினாபுரத்தின் விசுவாசியான நீ இதற்கு ஒரு முடிவு காண்பாய் எனும்
நினைப்பில் ,நான் உன்னை என் தூதுவனாக தர்மனிடம் அனுப்புகிறேன்,சென்றுவா சஞ்சயா வெற்றியுடன் வா’
அமைதியாக கேட்டுக் கொண்ட சஞ்சயன், ‘தர்மனையும்,அவன் தம்பிகளையும்,நமது கவுரவர்களையும் என்
மார்மீதும்,தோள் மீதும் சுமந்தேன்,
அவர்களெல்லாம் இப்பொழுது என் பேச்சை
கேட்கும் நிலையிலா இருப்பார்கள்?, இருப்பினும் என் மன்னருக்காக சமாதான தூதுவனாக நான்
தர்மனிடம் செல்கிறேன், வருகிறேன் மன்னா’ சஞ்சயன் விடைபெற்றான்.
பாஞ்சால அரண்மனையில் துருபதன், பாண்டவர்கள், மற்றும் கிருஷ்னன் ஆகியோர்
வீற்றிருக்கின்றனர். சஞ்சயன் அங்கே பிரவேசிக்கின்றான். குழந்தை பருவத்திலிருந்து
பாண்டவர்கள் சஞ்சயனோடு விளையாடியவர்கள். தர்மன் பாசத்தோடு சஞ்சயனை வரவேற்றதில், சஞ்சயன் நெகிழ்ந்து போனான்.
அஸ்த்தினாபுரத்தில் உள்ள சொந்தங் களையெல்லாம்
தர்மன் நலம் விசாரித்தான்,
தம்பி துர்ச்சாதனன் உட்பட. சஞ்ஞயன், ‘அனைவரும் நலமாக உள்ளனர்,தர்மரே,’ அப்போது தர்மன்,
‘பெரியப்பா என்ன சொல்கிறார்? இந்தரபிரஸ்த்தம் மணி மகுடத்தை
எங்களுக்கு தரும் மன நிலையில் உள்ளாரா?’
இடைமறித்த கிருஷ்னன்,‘நீங்கள் கொண்டுவந்த செய்தி, அஸ்த்தினாபுர மன்னருடையாதா? அல்லது துரியோதனன் தந்தையுடையாதா? அல்லது பாண்டவர்களின் பெரியப் பாவுடையதா?’
‘வாசுதேவ கிருஷ்னா! அனைத்தும் தாங்கள் அறிந்ததுதானே? மூவரும் ஒருவர்தானே?இப்படி கேள்வி கேட்டால் நான்
எப்படி பதில் சொல்வது?’
‘பெரியப்பாவுக்கு ஒரு நியாயம்?மன்னருக்கு ஒரு நியாயம்? துரியோதனன் அப்பா என்கிற முறையில்
ஒரு நியாயம்?’ அர்ச்சுனன் குறுக்கிட்டான்.
அப்போது தர்மன், ‘அமைதிக்கும் உடன் படுவோம், போர் என்றாலும் சரி, இந்திரபிஸ்த்தம் வேண்டி போர் வேண்டு
மானாலும் செய்ய நாங்கள் தயார்’ என மன்னரிடம் தெரிவியுங்கள்.
சஞ்ஞயன் அஸ்த்தினாபுரம்
திரும்பினான் தர்மனின் அமைதி மற்றும் போர் உடன் படிக்கையை திருதராஷ்ட்ரனிடம்
தெரிவிக்கிறான்..
அ.கு-
(மகாபாரதத்தில்,அன்பு, பாசம், பரிவு, மனிதநேயம், உணர்த்தும் தர்ம வழியே மனித குலம்
தழைக்க உதவும் ,அதற்கு பழிவாங்கும் குணம் கொண்ட சத்திரியர்களை திருத்த
வேண்டும் திருந்ததாத சத்ரியர்களை அழிக்க வேண்டும் இதுவே யதுகுல மன்னனை (யசோத
கிருஷ்னனை) இறைநிலைக்கு உயர்த்தியது. திருந்தாத மனிதர்களை கொல்வதுதான் கடவுள்
கொள்கையா?)
போருக்கு உடன்பாடில்லாத கிருஷ்னன்,
தர்மனிடம்,‘தர்மரே, தாங்கள் விரும்பினால் நானே அஸ்த்தினாபுரம் நேரில் செல்லட்டுமா?
கவுரவர்களிடத்தில் சமாதானத்தை வலியுறுத்துவோம்’
துருபதன், அவன் வாரிசுகளான துஷ்ட்டதூமனன் ,சிகண்டி மற்றும் திரவுபதி ஆகியோர்
கிருஷ்னன் அஸ்த்தினாபுரத்திற்கு சமாதானத்தூது செல்லப்போவதை அறிந்து
விசனப்படுகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு சபதம் நிறை வேறாமல் இருக்கிறது. துருபதனுக்கு
அஸ்த்தினாபுரத்தை அடிமைப்படுத்த வேண்டும் ,
துஷ்ட்டதூமன் துரோணரை அடக்க
வேண்டும்,சிகண்டி பீஷ்மனைப் பழி வாங்க வேண்டும்,துரவுபதி தன்னை மானபங்கப் படுத்தியவன்
மார்பை கிழிக்க வேண்டும் அதற்காகவே இன்னும் அவள் கூந்தல் முடியப்படாமல் உள்ளது.
‘கிருஷ்னன் தூது சென்றால் நாம் போட்ட சபதம் என்ன ஆவது?’துருபதனை தன் வாரிசுகள் வாட்டி
எடுக்கின்றனர். ‘சரி கிருஷ்னனையே நேரில் சென்று விளக்கம் பெறுவோம்’
கிருஷ்னன் தனித்து
அமர்ந்திருக்கிறான். துருபதனும் அவன் பிள்ளைகளும்
உள்ளை நுழைகின்றனர்.
‘என்ன ஏதோ பிரச்சினை போல் தெரிகிறதே?’
‘ஆம் கிருஷ்னா, தாங்கள் அஸ்த்தினாபுரம் சமாதானத்தூது செல்லப்போவதாக
அறிந்தோம்’
‘நான் சமாதானம் என்று சொல்வது பாண்டவர்களுக்கு துரியோதனன்
இருக்க இடம் தர மறுக்கிறான் இருவரும் தனித்தனியே மோதிக்கொண்டால் எனக்கு ஒன்றும்
பிரச்சினை இல்லை.ஆனால் இரு நாட்டு பிரஜைகளும் அல்லவா போரில் உயிர் துறக்க நேரும்
அதை தவிர்க்க,சமாதானமான முறையில் துரியோதனனிடம் பாண்டவர்களுக்கு
இந்திரபிரஸ்த்தம் தர வாய்ப்பு உள்ளதா என அறிவதற்கு செல்கிறேன் இதில் உங்களுக்கு
என்ன பிரச்சினை?’
துருபதன்கள் தாங்கள் போட்ட பழி
தீர்க்கும் சபதங்களைப்பற்றி விவரித்தார்கள்.சமாதானம் என்று ஆகிவிட்டால் தாங்கள்
பழி தீர்க்க வழி இல்லாமல் போய்விடுமே? என்பது தான் எங்கள் கவலை என் கிருஷ்ன னிடம் தெரிவித்தனர்.
அப்போது கிருஷ்னன்,‘உங்களுக்கு உள்ள பிரச்சினை
தனிப்பட்ட நபர் தொடர்புடையது அதற்கு நீங்கள் தனித்தனியே போராட வேண்டியதுதான். உங்களுக்காக
இரு தரப்புக்கும் போர் மூண்டால் யாது மறியா உயிர்கள் தானே மாண்டு போகும்? அது தேவையா?
கிருஷ்னனை விட்டு துருபதன்கள்
திருப்தி இல்லாமல் வெளியேறுகின்றனர். கிருஷ்னன் அறையை விட்டு வெளியே வந்ததும்,அங்கே அபிமன்யு நின்று
கொண்டிருந்தான். அப்போது அவன் கிருஷ்னனிடம்,
‘மாமா தாங்கள் சாமாதானத் தூது ஏன் செல்ல வேண்டும்? பராக்கிரமம் பொருந்திய
பெரியப்பாக்களும், சித்தப்பாக்களும் உள்ளனரே, நாம் நினைத்தால் அஸ்த்தினாபுரத்தை
போருக்கு அழைத்து வெற்றி கொள்ளலாமே?
‘அபிமன்யு, நீ சிறியவன் உனது ஐயத்தை போக்கவேண்டியது என் கடமை’
(அந்நேரம் இருவரின்
உரையாடல்களையும் பின்னிருந்து ஐவரும் கேட்டுக் கொண்டிருந்தனர்)
மேலும் கிருஷ்னன் அபிமன்யுவிற்கு
அஸ்த்தினாபுரத்திருக்கும் ஒவ்வொருவரின் பராக்கிரமத்தையும் விவரிக்கின்றான்,
ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்கிறேன்
கேள், ‘உன் கொள்ளுத்தாத்தா பீஷ்மன் இருக்கின்றாரே, அவர் இச்சை வரம் பெற்றவர், அவரை யாராலும் கொல்ல முடியாது.அவரே
விரும்பினால் மட்டுமே அவர் உயிர் போகும். அவர் பல தேச மன்னர்களை அடக்கி வெற்றி
கண்டவர்,
அடுத்து துரோணர் இருக்கின்றாரே
அவர்தான் எல்லாருக்கும் குரு, குல குரு,அவரிடம் வித்தைகளை கற்றவர்கள் தான் உன் சித்தபாக்களும்,பெரியப்பாக்களும்.அவரை வெல்ல
யாராலும் முடியாது.
அடுத்து உன் பெரியப்ப துரியோதனன் இருக்கின்றாரே அவன் மார்பு
வைரம் பாய்ந்தது,அவன் மார்பை யாரும் துளைக்க
முடியாது.
அதைவிட அங்கே கர்னன் இருக்கின்றான்
அவனை வில்வித்தையில் வெற்றி பெற யாராலும் முடியாது,
அவ்வளவு ஏன் சிறந்த வில்லாளன் எனப்
பெயரெடுத்த உன் அப்பனானலேயே முடியாது.’
‘அதெப்படி கர்னனுக்கு மட்டும் அப்படி யொரு ஆற்றல்
வந்தது?’அவரிடம் இருந்த கவச குண்டலம் தான் தானமாகப் பெறப்பட்டதே’
சொல்கிறேன் கேள்,‘காண்டவபிரஸ்த்தம் இதற்கு முன் நாகப்பாம்புகள் நிறைந்த
வனமாக இருந்தது அதை அழிக்க அப்போது அர்ச்சுனன் காட்டை அழிக்க அக்னி அஸ்த்திரத்தை
பிரயோகித்தான். அப்போது தன் வாரிசுகளை இழந்த ஒரு நாகப் பாம்பு தன் முன்னோரான
நாகராஜனிடம் இதற்கெல்லாம் காரணமான அர்ச்சுனனை நான் அழிக்க வேண்டும் அதற்கு வழி
சொல்லுங்கள்’ என கேட்டது,அப்போது,‘அர்ச்சுனன் சிவனிடம் வரம் பெற்றவன் அவனை அழிக்க
முடியாது’எனக் கூறி
‘நீ சிவனிடமே
தவமிருந்துஇதற்கு ஒரு வழி கேள்,அவர் கூறுவார்’ என சொன்னதை கேட்டு அந்த நாகம் சிவனிடம்
சென்றது.சிவன், அப்போது,
‘அவன் எதிரியான கர்னனிடம் நீ தஞ்சம் அடைந்தால் உனக்கு
அவன் அர்ச்சுனனை அழிக்கும் ஆற்றல் தருவான்’. எனவே கர்னனிடம் பலம் பொருந்திய நாகாஸ்த்திரம் இருப்பதை மறந்து விடாதே’
ஆசிரியர் கருத்து-
(வாசகர்கள் இங்கே ஒன்று நினைவில்
கொள்ள வேண்டும்.நாகபாம்பு கொடிய விஷமுள்ளது.அந்நாளில் இந்தியர்கள் தங்கள் குல
தெய்வங்களாக இயற்கை சக்திகளான தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றிலிருந்து
தப்பிப் பதற்காக அவைகளை தெய்வங்களாக மதித்து வழி பட்டனர். அந்த வகையில்
விலங்கினங்களில் முதன்மையானது பாம்பு. இதில் கொடிய விஷமுள்ள பாம்பு நாகப்பாம்பு. அவைகளை
வணங்கினால் தம் உயிர் பிழைக்கலாம் எனும் மூட நம்பிக்கை இன்றளவும் இது நீடிக்கிறதே.
பாம்பைப் போன்று விலங்குகளான நாய் (பைரவர்),யானை (பிள்ளையார்), பசு(காமதேனு), காளை (நந்தி மயில், சேவல், சிங்கம் (துர்கையின் வாகனம்),புலி (அய்யப்பபனின் வாகனம்) பன்றி, குதிரை,எலி,ஆகிய விலங்கினங்களை வணங்கும்
பழக்கம் உள்ளது, அதேபோன்று தாவர வகைகளில் ஆலமரம்,அரசமரம்,வேம்பு
போன்றவைகளை வணங்கும் பழக்கம் இன்றளவும் உள்ளதே!,
அரச மரத்துக்கும், வேம்புக்கும் திருமணம் செய்து வைக்கும் பழக்கம்
இன்றளவும் உள்ளதே.உலகில் முதன் முதலாக சித்து வேலைகளில் ஈடுபட்டு மக்களை தான்
கடவுள் அவதாரம் என நம்ப வைத்தவர்கள் கிருஷ்னன் ,ஏசு கிறித்து,அடுத்து முகமது நபி.)
கல்வியில் சிறந்த மக்கள் தோன்றிய 19
மற்றும் 20-ம் நூற்றாண்டுகளிலும்,சித்து வேலைகளில் ஈடுபட்டு மக்களை
ஏமாற்றும் ஏராளமான சித்தர்கள் 1-ராமகிருஷ்ன பரம அம்சர்,2-விவேகநந்தர்,3-ரமணர்,4-பிரம்மானந்தா,5-பிரேமானந்தா,6-பங்காரு,7-கல்கி,8-நித்தியாநந்தா 9-சங்கராச்சாரியார் 10-கல்கி,11-சாய்பாபா
போன்றோர்,இவர்களின் அறிவுரைகள்,அறவுரைகள் குடும்பஸ்தனுக்கு ஒரு நன்மையும் இல்லை
என்பதை எந்த குடும்பஸ்த்தனும் நம்பியதாக தெரியவில்லை.)
அபிமன்யு சந்தேகத்தை நிவர்த்தி
செய்வது போலவும் அதை விவரிக்கும் போது எதிரிகளின் பராக்கிரத்தை விவரித்தால் தன்
தரப்பு வீரத்தால் இறுமாப்பு கொள்ளும் வீரர்களை மட்டுப்படுத்த முடியும் எனும்
மனிதர்களின் உளவியல் நுட்பம் அறிந்தவன் கிருஷ்னன்.
87-கிருஷ்னனின் தூது
No comments:
Post a Comment