Tuesday, January 10, 2017

அ.கா.வ.தொ-14



110-கர்னனின் வீழ்ச்சி
அ.கு-
(கர்னன் இன்னும் சில நொடிகளில் மரணிக்கப் போவது உறுதி,கிருஷ்னன் திட்டமிடுகிறான்.
அதற்கு முன் கர்னனை போர்க்களத்தில் தனியே சந்திக்க விரும்புகிறான்.கர்னன் தன் அத்தையின் மகன் எனும் பாசம் இருக்கத்தான் செய்கிறது.
இருப்பினும் தன் பங்காளிகளான பாண்டவர்களை அடிமைப்படுத்தி வாழ வைக்கவேண்டும் எனும் துரியனின் அதர்ம குணத்திற்கு துணைபோவதால்,அவன் அழிவுக்கு வழி கோலுகிறது.)

கர்ன்னனை நெருங்கிய கிருஷ்னன்,
ஒரு கலையை கற்கும் முன் அதன் நோக்கத்தை தன் குருவிடம் தெரிவித்து அந்த கலையை பயின்றிருக்கவேண்டும்.அர்ச்சுனனை கொல்வதற்காகவே அந்தக்கலையை பயின்றாய்,அவன் அதர்மக்காரன் எனில் உனக்கு அந்தக்கலைகைகூடியிருக்கும்.

இதிலிருந்தே தெரியவேண்டாமாகர்னா,உன் உயிர்காக்கும் நோக்கமும்,தவறானது என்று.

மேலும்  கிருஷ்னன், ‘கர்னா இந்த போர் நடக்க வில்லை என்றால்,ஒரு பெண்ணின் ஆடைகளை அவையில் களையலாம் என்பது தர்மச் செயலாகிவிடும்.ஒரு பெண்ணின் மானத்தை காக்கத் தவறிய அதர்மக்காரனுக்கு எதிரானது இந்த போர்.அந்த நேரத்தில் நீ அவையில் அமர்ந்திருந்தது மட்டுமல்ல

திரவுபதியை ஒரு வேசி என சாடினாய்,அவளை மானபங்கப்படுத்துவது தவறில்லை என வாதிட்டாய்.செஞ்சோற்றுக்கடன் தீர்ப்பது ஒரு தர்மச்செயல்தான்,

ஆனால் பட்ட கடனுக்காக அதர்மக்காரனை காப்பேன் என சபதம் எடுப்பது உன் மரணத்திற்கு வழி வகுக்காதா?ஆனால் நீ இருக்கும் வரை துரியனை கொல்ல முடியாது

சரி கிருஷ்னா,தவறான நோக்கத்திற்கு நான் வளர்க்கப்பட்டேன் என்பதை  நான் உணர்கிறேன்,நான் இருக்கும் வரை என் நண்பனுக்கு மரணம் நிகழக்கூடாது என நான் சபதம் இட்டு நண்பனிடம் தெரிவித்தேன் ,அந்தவகையில் என் நண்பனுக்கு முன் நான் மரணத்தை ஏற்கிறேன்.

கிருஷ்னன் அர்ச்சுனனிடம் செல்கிறான், அந்தேரம் கர்னன் தன் தேர் சக்கரத்தை மேலேற்றுகிறான்,அந்நேரம் பார்த்து அர்ச்சுனனிடம், ‘இன்னும் என்ன யோசனை பார்த்தா,இதுதான் தருணம் கர்னனை கொல் ,பாவத்தை நான் ஏற்கிறேன்.

அர்ச்சுனன் அம்புகள் கர்னனின் மார்பைத் துளைக்கிறது.
கர்னனின் மரண நிகழ்வு கதை கேட்பவர்களுக்கு சுவாரசியம் தட்டுவதற்காக மிகைப்படுத்தப் படுகிறது. அதாவது,

கர்னன் உயிர் பிரியவில்லை,அவன் செய்த தர்மம் தலை காக்கிறது என திரித்துக் கூறப்படுகிறது.

கிருஷ்னன் மீண்டும் கர்னனிடம் செல்கிறான்.அப்பொது கர்னன், ‘நான் இறந்து கொண்டு இருக்கிறேன் என்னிடம் என்ன இருக்கிறது நான் தானமளிக்க? கிருஷ்னா!’
‘உன் தர்மம் தலை காக்கிறது கர்னா,எஞ்சியிருக்கும் உன் உடம்பின் ரத்தத்தை தானமாக கொடு? அப்பொழுது தான் நீ சொர்கம் அடைவாய்’

கர்னனின் போர்த்திறமைக்கு நிகராக யாரும் இல்லை என்பது கிருஷ்னனுக்குத் தெரியும்.கர்னனின் உடலில் இறுதிச் சொட்டு ரத்தம் கூட இருக்கக் கூடாது  எனும் ரத்தவெறி கொண்டு கிருஷ்னன் அலைகிறான்.

கிருஷ்னனுடைய அதர்மச் செயல்களையெல்லாம் தர்மச் செயலாக திரித்துக் கூறப்படுகிறது.கதைகேட்ட அறம் காக்கும் சத்ரியர்களுக்கு அறவழியைக்காப்பதே தங்கள் கடமையாக கருதிய காரணத்தால் தங்கள் இனமானதுரியன்களை அழிக்க கிருஷ்னனுக்கு துணை நின்றனர்,இன்றும் நிற்கின்றனர்.
எஞ்சியிருக்கும் ரத்தத்தையும் தான மளிக்கிறான்.அந்நேரம் குந்தி
,

இறந்து கொண்டிருக்கும் கர்னனை காணவருகிறாள்.தன் மடிமீது தன் மகன் கர்ன்னனின் தலையை வைத்துக்கொண்டு

மகனே மாண்டுபோனாயா?’ என ஓலமிட்டு அழுகிறாள்.  பாண்டவர்களும் கிருஷ்னனும் சுற்றி நிற்கின்றனர். என்னம்மா சொல்கிறீர்கள் கர்னன் தங்கள் மகனா? இது எப்படிம்மா?’ பாண்டவர்கள் ஐவரும் தனித்தனியே தன் அம்மா குந்தியை கேட்கின்றனர்.
தனக்கு சுயவரம் நடக்குமுன் சூர்யவர்மனோடு இணையும் சூழல் ஏற்பட்டுவிட்டது.அதன் காரணமாக பிறந்த குழந்தையை ஆற்றில் ஒரு பரிசல் மூலம் மிதக்க விட்டேன்.

குந்தி தன் கதையை சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் ராதையும்,கர்னனின் மனைவியான சுபாங்கியும் வருகின்றனர்.
குந்தியின் மடியில் கர்னன் தலை வைத்திருப்பதைப் பார்த்த ராதை அதிர்ச்சியானாள். அப்போது,
ராஜமாதா!,கர்னன் தங்கள் மகனா,அய்யோ! நான் எப்படியெல்லாம் என் மகனை வளர்தேன்,அவனுக்கு எதுபிடிக்கும்? எது பிடிக்காது? என எனக்குத்தானே தெரியும்,என் மகனை அநியாயமாக கொன்று விட்டீர்களே!

குந்தியும் ராதையின் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் விம்முகிறாள்.அப்பொழுது கர்னன், ராதையை நோக்கி,

தாயே தாங்கள்தான் என்றைக்கும் எனக்கு நிரந்தரத்தாய்,என்னை தாழ்ச்சிகுலம் சார்ந்தவன் என இதுவரை என்னை தூற்றியது,நான் உயர்குடியில் பிறந்தவன் என்பதற்கு ஆதாரத்தாய் தான் குந்தி,என்றைக்குமே தாங்கள் தான் எனக்குத் தாயே!

கர்னன்உயிர் பிரிகிறது.சரி இப்பொழுது கடைசியாக கார்னன் தானமளித்தானே அது அவன் தலையைக் காக்க வில்லையே ஏன்? இதிலிருந்து என்ன தெரிகிறது?

தானம் அளித்தால்  தர்மம் தலை காக்காது,இருப்பினும் உழைப்பாளியின் பொருளாதாரத்தை சுரண்ட இதைவிட(கர்னனின் கதையைவிட) சிறந்த தருணம் பிராமணர்களுக்கு கிடைக்காது.கர்னன் இறந்து விட்டான்.

கர்னனின் இறுதிச்சடங்கு பாண்டவர்களால் நிறைவேற்றப் படுகிறது.

துரியனுக்கு கர்னன் மாண்டுபோனது பெரிய ஏமாற்றத்தை அளித்தது.அடுத்த நாள் போருக்கு அவன் தயாராகவேண்டும்.அந்நேரத்தில் காட்டில் தனித்து இருக்கும் துரியனை அஸ்வத்தாமன் காணவருகிறான்.

துரியனைப் பார்த்த அஸ்வத்தாமன், ‘துரியோதனா நான் இருக்கிறேன்,உனக்காக என் உயிரைக்கொடுத்து போரில் உனக்கு வெற்றியை ஈட்டித்தருவேன்.வா போகலாம் அரண்மனைக்கு

துரியன் வர மறுக்கிறான் , ‘நீ போ அஸ்வத்தாமா,உன் உயிர் எனக்கு எதற்கு? நான் உயிருக்கு உயிராக நேசித்த என் மித்தரன் மாண்டுபோனான்,அவன் குந்தியின் புதல்வனாம்,என் சத்ருக்களின் மூத்தவனாம்,அதை மனதில் வைத்துக்கொண்டு என் சத்துருக்களான பாண்டவர்களில் ஒருவனைக்கூட அவன் கொல்ல வில்லை,எனக்கு என் நன்பனே துரோகம் இழைத்து விட்டான்,நீ மட்டும் எம் மாத்திரம்?
நீ கூட மனதில் எதையாவது மறைத்து என்னிடம் உறவாடலாம் யார்கண்டது?(காண்க விஜய் தொலைத்தொடர் எண்-254,சீசன்-1) 

மீண்டும் அஸ்வத்தாமன், ‘துரியோதனா என்னை என்ன ஈனப்பிறவி என நினைத்தாயா?என்னிடம் உள்ள பிரம்மாஸ்த்திரத்தைக் கொண்டு இந்த குருச்சேத்ரத்தையே நிர்மூலமாக்குகிறேன் பார்என கூறிக்கொண்டு அவன் தன் வில்லை எடுத்தான்.அப்போது துரியன்,

வேண்டாம் அஸ்வத்தாமா? நீ போகலாம்,நான் தனி ஒருவன் ,அந்த சூழ்ச்சிக்கார பாண்டவர்களை மல்லுக்கு இழுத்து வீழ்த்துவேன்,இது சத்யம்

படைவீட்டில்(போர்க்களத்தில்) சகுனி தனியாக யோசித்துக் கொண்டிருக்கிறான்.அந்நேரம் காந்தாரி தன் மகன் துரியனைத்தேடி வருகிறாள்,ஆனால்  சகுனியை சந்திக்கிறாள்.
சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் தன் அக்கா போர்க்களத்திற்கு வருவது சகுனிக்கு சற்று அதிர்ச்சி.

காந்தாரி தன் தம்பியை நம்பி மோசம் போனதாக சகுனியை குற்றம் சாட்டுகிறாள்.அதிர்ந்து போன சகுனி, ‘என்னக்கா,மாமா கண் தெரியாதவர்,அதற்காக தன் கண்களை வஸ்திரம் கொண்டு நேத்ரத்தை மறைத்து வாழும் தங்களின் பிள்ளைகளை அஸ்த்தினாபுரம் அரியணை எற்ற வேண்டும் எனும் ஒரே நோக்கில்
நான் என் காலமெல்லாம் உழைத்தேனே,என்னையா சந்தேகம் கொள்கின்றாய் அக்கா?

என் பிள்ளைகளை அரியணை யேற்ற நாடகம் போட்டாய் உன் அக்காவுக்கு குருடனை கணவனாக்கி விட்டார்களே எனும் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டாய்,குருடனுக்கு வாழ்கைப்பட்டது என் தலை எழுத்து எனக்கு கிடைத்த வாழ்க்கைக்கு ஏற்றார் போலத்தானே நான் வாழ முடியும்? என் பிள்ளைகளை அரியணை ஏற்ற துடித்தாயே,அறவழி சிந்தனைகளை ஊட்டி வளர்த்தாயா?

பங்காளிகளை பகையாளிகளாக்கி என் குலத்தையே அழிவுக்கு கொண்டுவந்து விட்டாயே!

ஆம் நாடகம் போட்டேன். அழகும் அறிவும் நிறைந்த என் அக்கா,நீங்கள்,காந்தார நாட்டு இளவரசி,தங்களுக்கு நேர்ந்த கொடுமைக்கு காரணமான பீஷ்மனை பழிவாங்க நாடகம் போட்டேன்.
நம் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற நம் தந்தை எனக்களித்த பகடையைக் கொண்டு பகைவர்களை நாசமாக்கினேன்.

எல்லாம் முடிந்து விட்டது சகுனி,ரிஷி வியாசர் எனக்கு ஒரு வரம் தந்துள்ளார்.இனி அதை பிரயோகிக்கப் போகிறேன்.

என்ன வரம் அக்கா?’சகுனி முகம் மலர கேட்டான்.

என் மைந்தர்கள் 99 பேரை போரில் பறிகொடுத்தேன் அதன் விளைவாக என்னுள்ளே ஒரு சக்தி பிறந்துள்ளது,அது என் தவ வாழ்க்கைக்கு கிடைத்தது,அதை என் தலைமகன் துரியனுள் செலுத்த வேண்டும் ,அதை எவ்வாறு செய்வதென்றுதான் எனக்குத் தெரியவில்லை சகுனி.

இந்த செய்தி எனக்குமிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது அக்கா

ரிஷி வியாசர் ஒரு தத்துவம் கூறினார்.

எதைப்பற்றி அக்கா?’

ஒரு மனிதன் எதை நினைத்து மோகம் கொள்கிறானோ அதை அவன் தன் வாழ்நாளின் இறுதி கட்டத்தில் அடைந்தே தீருவான் என்றார்.

அப்படியானால் அது உன்னுள் இருக்கிறது அக்கா

எப்படி?’

உன் கண் பார்வையின் ஆற்றலை நீ மறைத்தாய்.அதனால் அது உன்னுள் பெரும் ஆற்றலாக உறைந்துள்ளது,அக்கா,நீ உன் மகனை வெறும் கண்கொண்டு தரிசித்தால் உன் பார்வை பட்ட இடமெல்லாம் உன் மகன் உடல் சாகா வரம் பெறும்.

அப்படியா சகுனி? அப்படியானால் என் மகன் எங்கே?இப்போதே நான் என் மகனைப்பார்க்க வேண்டும்

அஸ்வத்தாமன் இந்த சேதியை கேட்டவுடன்,துரியனைத்தேடி புறப்பட்டான்.ஒரு குளத்தில் மூழ்கி இருந்த துரியனை கண்டு ,

துரியோதனா! உன் தாய் உன்னை காணவேண்டும் என்கிறார்,
அவளுள் ஒரு பிரத்யோகமான ஆற்றல் உறைந்துள்ளதாம் ,அதை உன்னுள் செலுத்தவேண்டும் என்கிறார்,வெற்றுடலுடன் உன் தாயைக் காணவா

சகுனி,  கிருஷ்னனை சந்திக்கச் செல்கிறான்.பாண்டவர்களோடு கிருஷ்னன்,கர்னனின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு பாண்டவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறிக்கொண்டிருக்கிறான்.அப்பொழுது கிருஷ்னன், ‘என்ன மாமா அவர்களே இங்கே தாங்கள் வந்திருப்பது நல்ல செய்தியுடன் இருக்காது என நினைக்கிறேன்

112-சகுனியின் இறுதி முயற்சி

யது குல மன்னா!,வாசுதேவ கிருஷ்னா! நாளை துரியனுடன் பாண்டவர்கள் போர் புரியவேண்டும் அதை நினைவு படுத்தவே வந்தேன்மேலும் தெரிவிக்கிறான் , ‘தங்களிடம் தனியாக பேசவேண்டும்

வாருங்கள் பேசுவோம்
தனி அறைக்கு இருவரும் செல்கின்றனர்.
நாம் இருவருமே தந்திரமும்,சூழ்ச்சியும் நிறைந்தவர்கள்சகுனி பேச ஆரம்பித்தான், ‘தாங்களும் இப்போரில் ஆயுதம் ஏந்தமாட்டேன் என கூறிவிட்டீர்கள்,எனக்கோ இனி ஆயுதம் ஏந்தி போர்புரியும் உடல்பலம் இல்லை,எனவே நாம் இருவரும் பகடை ஆடி யார் வெற்றி பெறுகிறோமோ அவர்கள் அஸ்த்தினாபுர அரண்மனையில் துரியனுக்கு முடி சூட்ட வேண்டும்.

தன் சகோதரி மைந்தனை அரியணை ஏற்றுவதில் தனக்கிருக்கும் பகடை ஆடும் வல்லமையில் எப்படியும் வெற்றிபெறுவோம் எனும் நம்பிக்கையில் இது போன்று ஒரு சவாலை கிருஷ்னன் முன் வைக்கிறான் சகுனி.

சகுனியின் திட்டத்தை புரிந்துகொண்ட கிருஷ்னன், ‘அப்படி வேண்டாம் மாமா,பகடையில் நான் தோல்வி யுற்றால் நான் அக்னிஸ்நானம்(தீக்குளித்தல்)செய்வேன்,தாங்கள் தோல்வியுற்றால்  நீங்கள் அக்னி ஸ்நானம் செய்யவேண்டும்,இதற்கு தாங்கள் உடன் பட்டால் ஆட்டத்தை துவங்கலாம்

சில நொடிகள் யோசித்த சகுனி, ‘சரிஎன்றான்.

ஆட்டத்தை யார் துவங்குவது என சகுனி வினவியபோது, ‘தாங்களே ஆடுங்கள் மாமா என கிருஷ்னன் கூறினான்.
தான் விரும்பியபடியெல்லாம் எனக்கு பகடை வெற்றியைத் தேடித்தரும் என கிருஷ்னனிடம் தெரிவிக்கிறான்.

‘அப்படியானால் ஆடுங்கள் மாமா’
ஆட்டத்தில் நானே முன்னேறுகிறேன்,தாங்கள் பின் தங்கி யுள்ளீர்களே!வாசுதேவா.

சரி,தாங்கள் இங்கே முன்னேறுங்கள்,நாளை போர்க்களத்தில் துரியன் முன்னேற முடியுமா என யோசித்தீர்களா?

ஏன் என்ன ஆயிற்று ?’

கிருஷ்னன், காந்தாரி துரியன் சந்திப்பை பற்றி விவரிக்கிறான்.

கதை கேட்பவர்களுக்கு சுவாரசியம் குறையக்கூடாது எனும் நோக்கில் துரியனுக்கு தாய் கண்வழியே உடல் பலம் கூட்டப்படுவதாக திரித்து கூறப்படுகிறது.இதோ,

துரியன் தன் தாயின் தவ வலிமையை ஒன்று திரட்டி அவள் கண் வழியே தன் மகனுக்கு செலுத்தினாள்,ஆனால் தன் தாயின் முன் தன்னுடைய இனப்பெறுக்க உறுப்பு அமைந்துள்ள இடுப்பு பகுதியை இலை கொண்டு மறைத்து விடுகிறான்.போர் புரிய இடுப்பிற்கு மேலேதானே பாதுகாப்பு தேவை படுகிறது,போர் தர்ம படி இடுப்புக்கு கீழே தாக்க கூடாதே.என தனக்கு தானே ஒரு கணக்குப் போட்டுக்கொண்டான்.
                               
தாயின் முன்னே தன்னை முழு நிர்வாணப்படுத்த அவனால் முடியவில்லை.வெட்கம் தடுக்கிறது.மானம் போன பின் ஒருவன் வாழ்ந்தால் என்ன? செத்தால் என்ன?

லவுகீக வாழ்க்கையில் ஆண் ,பெண் ஒருவருக்கொருவர் நிர்வாணப்படுத்துதல் என்பது பாவ செயல் என அறிவுறுத்தப்பட்டதே இதற்கு  காரணம்.குழந்தைப்பருவத்தை கடந்த ஆணோ அல்லது பெண்ணோ தன் பெற்றவர்களின் கண்  பார்வை படுவது பாவம் ,அதே போல் பெற்றோர்களின் நிர்வாணங்களை பதின்ம பருவ குழந்தைகள் காண தோற்றமளிப்பதும் பாவச் செயல் என அறவழியை வகுத்துக்கொண்டது மனித இனம்.
அந்த வகையில் தன் முழு நிர்வாண தோற்றத்தில் தாயின் தவ வலிமையை அவள் கண்வழியே துரியனால் பெற முடியவல்லை.

இந்த தகவலை சூதாட்டத்தின் போது கிருஷ்னன் மூலமாக சகுனி அறிகிறான்.சகுனி அலறிக்கொண்டு துரியனைத்தேடி ஓடுகிறான்.கிருஷ்னன் பகடைக்காய்களை சுக்கு நூறாக உடைத்துப்போடுகிறான்.இனி சகுனி பகடை ஆடவே முடியாது.

வழியில் அஸ்வத்தாமனை சகுனி காண்கிறான், ‘என்ன ஆயிற்று அஸ்வத்தாமா? துரியன் முழு பலத்தை தன் தாயிடமிருந்து பெற்றானா?’

இல்லை சகுனி, துரியன் தன் இடுப்புப் பகுதியை இலைகொண்டு மறைத்துவிட்டான்.

துரியனை சகுனி காண்கிறான், ‘என்ன காரியம் செய்தாய் துரியா! உன் இடுப்பை ஏன் மறைத்தாய்?

என்ன மாமா என் உடல் முன்னிலும் பல மடங்கு பலம் பெற்றுள்ளதே,இடுப்புக்கீழ் எதிரிகளை தாக்கக் கூடாது என்பது போர் விதியாச்சே

உலகம் தெரியாத அப்பாவியாக விளங்குவதாக துரியனை நினைத்து,சகுனி வேதனைப்படுகிறான்.பாண்டவர்களும் கிருஷ்னனும் தர்மத்தை காக்கவந்தவர்கள் என உலகை ஏமாற்றும் நாடகம் போடுகின்றனர்,ஆனால் அவர் நடப்பது அத்தனையும் அதர்ம வழியில்தானே?அந்த யாதவ குல கிருஷ்னனின் சூழ்ச்சிதான் இது,’என சகுனி தீர்மானிக்கிறான்.

தன் மகனுக்கு தன்னுடைய தவவலிமை மூலம் பெற்ற ஆற்றலை தன் மகனுக்கு முழுவதும் சென்றடையவில்லை எனும் செய்தி அறிந்த குந்தி ,தன் தம்பியின் ஆதரவை நாடுகிறாள்.

சகுனி! நீதான் என் மகனை காப்பாற்ற வழி சொல்ல வேண்டும்.

      113-அக்கா மகனை காப்பாற்ற மாமனின் கடைசி முயற்சி

கிருஷ்னனின் அண்ணன் பலராமன், சகுனிக்கு நண்பன், அந்த வகையில் தன் நண்பனுக்கு ஓலை எழுதுகிறான்.அதாவது துரியோதனனுக்கும் பீமனுக்கும் நடக்கும் மல்யுத்த போட்டியில் கிருஷ்னன் எந்த வகையிலும் பீமனுக்கு உதவ கூடாது எனும் வகையில் ஒரு கடிதம் எழுதி அதை அஸ்வத்தாமனிடம் கொடுத்து பலராமனிடம் சேர்க்கும் படி கேட்டுக் கொள்கிறான்.


114-பலராமன்,கிருஷ்னனுக்கு அறிவுரை

பலராமனும் ,கிருஷ்னனை அழைத்து மிகவும் பக்குவமாக எடுத்து உரைக்கிறான். கிருஷ்னா,உன் பராக்கிரமத்தை நான் அறிவேன்.குரு வம்சம் சத்ரியர்கள் நிறுவியது.அரக்கத்தனத்தோடு நடக்கும் துரியனை அழிப்பதால் அந்த வம்சமே அழியும் நிலைக்கு வந்துவிடும்.ஒரு குலத்தை அழித்த பாவம் உனக்கு வேண்டாம் கிருஷ்னா!.

பலராமன் கூறுவதை கவனமாக கேட்ட கிருஷ்னன்,அண்ணன் சொல்வதில் அர்த்தம் இருக்கும் என நினைத்து பலராமன் கருத்துக்கு உடன் படுகிறான்.

                              115-18-ம் போர்

அன்று காலை பீமனின் கதையை பாஞ்சாலி தொட்டுத்தூக்கி,அவனிடம் கொடுத்து, துரியனை ஒழித்துவிட்டுத்தான் வரவேண்டும் என வாழ்த்தி அனுப்புகிறாள்.

அதே போல் துரியன் தன் அன்னை காந்தாரியிடம் ஆசி பெற்று போர்க்களம் வருகிறான்.போர்க்களத்தில் பாண்டவர்கள்,கிருஷ்னன் மற்றும் கவுரவர்கள் படையில் சல்லியன்,சகுனி,துரியன் மட்டுமே உள்ளனர்.போர்க்களத்தில் வீரர்கள் இருதரப்பிலும் மோதி எல்லாரும் மரணம் தழுவும் நிலைக்கு வந்துவிட்டனர்.

துரியனும் பீமனும் மல்லுகட்டுகின்றனர்.பின் கதாயுதம் மூலம் தாக்கிக் கொள்கின்றனர்.
                             
துரியனின் உடல் மீது படும் பீமனின் கதாயுதம் பட்டுத் தெரிக்கின்றது.துரியன் தன் உடலை, உடற் பயிற்சி மூலம் இரும்பு போல் மாற்றியுள்ளான்.இது தான் உண்மை!

துரியனுக்கும் பீமனுக்கும் மல்யுத்தம்,கதாயுதப்போர் என மாறிமாறி நடக்கிறது.

(இப்பொழுது நாம் பார்க்கும் கராத்தே,குங்பு போன்ற பயிற்சிகள் மூலம் உடல் பலத்தை கூட்ட முடியும் என உள்ளது போல், அந்நாளில் துரியன் மற்றும் பீமன் ஆகியோரின் உடல் அமைப்புகளை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்)

சூரிய உதயத்தில் துவங்கிய போர் பீமனுக்கும் துரியனுக்கும் தொடர்ந்து நடக்கிறது.
துரியனை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியமாக தெரியவில்லை.பீமன் துவண்டு விட்டான், தர்மனும் மற்ற தம்பிமார்களும் கிருஷ்னனை ஆலோசிக்கின்றனர்.~துரியனை வீழ்த்த முடியும் ஆனால் சூழ்ச்சமத்தோடு போரிடவேண்டும்.
நான் என் அண்ணன் பலராமனுக்கு இந்த போரில் யாருக்கும் உதவ கூடாது என சத்யமளித்துள்ளேன்.எனவே என்னால் ஒன்றும் செய்யமுடியாது’,என கூறிவிட்டான்.

116-சகுனி வதம்

மேலும் கிருஷ்னன் கூறும்போது, ‘இந்நேரத்தில் துரியனை மட்டுமே தாக்குவது நம் குறிக்கோளாக இருக்க கூடாது பார்த்தா!

துரியனின் உயிருக்கு உயிரான மாமாவை நீங்கள் தாக்க வேண்டும், அப்போது துரியனின் மனம் சிதைவடையும்.துரியனின் தாக்குதல் குறிக்கோள் சிதறுமானால் அவனை வீழ்த்துவது எளிதாகும்

அர்ச்சுனன் அருகே இருந்த நகுலன் சகாதேவர்கள் சகுனியை தாக்க தயாராகிவிட்டார்கள்.சகுனி எட்டுத்திக்கும் ஓடுகிறான்.துரியனை அழைக்கிறான்,பீமனை தாக்குவதை நிறுத்திவிட்டு தன் மாமனை காப்பாற்ற ஓடுகிறான்.துரியனுக்கு இரு முனை தாக்குதலை சமாளிப்பது சற்று சிரமமான  காரியமாகிவிட்டது.

துரியனுக்கு சகுனியை நெருங்க முடியாத அளவுக்கு தன் அம்புகளால் தடுப்புகளை அர்ச்சுனன் ஏற்படுத்துகிறான்.சகுனி  பாண்டவர்களால் சுற்றி வளைக்கப்படுகிறான் ,அப்போது சகுனி நிராயுதபாணியாக மாறுகிறான்.எனவே சகுனியை ஆயுதங்களால் தாக்குவது என்பது முடியாத காரியம்.

நிராயுத பாணியான சகுனியிடம் ஆயுங்களை தந்து போரிட சொல்கின்றனர்,நகுலன் சகாதேவர்கள்.ஆனால் சகுனி அந்த ஆயுதங்களை முறித்து எரிந்து விடுகிறான்.அப்போது அர்ச்சுனன், ‘மாமா போர்க்களத்தில் ஒன்று போரிடவேண்டும் அல்லது செத்து மடியவேண்டும் அதுதான் சத்ரிய தர்மம்.’

சகுனி, ‘அந்த தர்மம் எல்லாம் எனக்கு வேண்டாம் மருமகனே நான் உங்களுக்கும் மாமன் தானே
?,என்னை விட்டுவிடுங்களேன்,நான் எங்கேயாவது போய் பிழைத்துக் கொள்கிறேன்’ 

‘அதெப்படி முடியும் மாமா?,குரு வம்சம் அழியும் அளவுக்கு திட்டங்களை வகுத்தவர் நீங்கள்,
ஒன்று போரிட்டு எங்களை வெல்லுங்கள்,அல்லது நீங்கள் மரணத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.அதுதான் தர்மம்’அர்ச்சுனன் சொல்லி முடித்ததும் நகுலன் தன் கையால் தாக்கி சகுனியை சாய்க்கிறான்.

அர்ச்சுனன் அம்பு பிடியை தளர்த்தி துரியன் சகுனியை தேடி வருவதற்குள் சகுனி மரணத்தை தழுவுகிறான்.துரியனுக்கு சகுனியுன் மரணம் பெறும் கலக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

இந்த செய்தி பாஞ்சாலிக்கு போனது.துர்ச்சாதனனைக் கொன்று பீமனின் ஆதரவால் சபதத்தை முடித்தாள்,ஆனால் துரியனை கொல்ல முடியவில்லை எனில் மீண்டும் அவன் விஸ்வரூபம் எடுத்து,தன்னை அசிங்கப்படுத்த துணிவான்,அவனை ஒழிக்க கிருஷ்னனின் செயல் திட்டம் உதவும் அதே நேரத்தில் ,அவள்  கிருஷ்னனின் நிலை அறிந்து மேலும் அவனுக்கு நெருக்குதல் தர விரும்பவில்லை.

117-துரியனைக் கொல்ல துரவுபதியின் இறுதி முயற்சி

சூத்ரதாரியான பலராமனை திரவுபதி நேரில் அணுகுகிறாள்.பலராமன் பேசும்போது,‘பாஞ்சாலி! துரியனுக்கு என்று சில தர்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன.அவன் பக்கமும் நியாயங்கள் உள்ளன.ஒரே அடியாக அவனை அதர்மக்காரன் என ஒதுக்க முடியாது.அவனை அழிக்க முடியாத அளவுக்கு தன் உடல் பலத்தை கூட்டி விட்டான்.அது வீரத்தின் அறிகுறி.சூழ்ச்சியால் வீரத்தை அழிப்பது என்பது சத்ரியர்களின் எதிரிகளான யாதவர்களை கேலிக்கு ஆளாக்கிவிடும்.

மேலும் பலராமன் தன்னை உதவிகேட்டு நாடிவந்த ஒரு சத்ரியப்பெண்ணான பாஞ்சாலிக்கு உதவ விரும்புகிறான் .அது எவ்வாறு சாத்யப்படும் என தனக்குத்தானே பாஞ்சாலி முன் கேட்டுக்கொள்கிறான்.

பலராமன் பாஞ்சாலிக்கு அண்ணன் முறையாகிறது,அந்த வகையில், ‘அண்ணா,தங்களின் சங்கடம் எனக்கு புரிகிறது.எங்கள் பக்கமும் அதர்மம் இருப்பதாகவே இருக்கட்டும்,ஆனால் துரியனை துவம்சம் புரியாமல் விட்டால் ஒரு பெண்ணான என்னை மான பங்கப்படுத்திய அவன் செயல் தர்மமாகிவிடாதா?

‘நீ சொல்வது,உண்மைதானம்மா!’ மேலும் அவன் தொடர்ந்தான்,

‘துரியனின் உடல் பலம் பொருந்தியதாக உள்ளது,அவனை கொல்வது அவ்வளவு எளிதான செயல் இல்லை எனினும் என்னதான் ஒருவன் பல சாலியாக இருந்தாலும் அவன்  உடலின் பலவீனமான பகுதிகள் இருக்கத்தான் செய்கின்றன,அவனை வதைப்பதற்கு அது போதும்’

பாஞ்சாலி ஏதோ புரிந்தவளாக,சரி அண்ணா,தங்கள் யோசனைக்கு,நன்றி.’என கூறிவிட்டு உடனே தூதுவனை நோக்கிச் செல்கிறாள்.தூதுவனோடு,போர்க்களம் செல்கிறாள்.அங்கே பீமன் துரியனால் வீழ்த்தப் பட்டிருப்பதைப் பார்த்து பதறி போனாள்.திரவுபதியைப் பார்த்த அர்ச்சுனன் பலராமனைப் பார்த்தாயா,ஏதாவது யோசனை கூறினரா?’

திவுபதி, அர்ச்சுனன் செவி வழியே ரகசியமாக கீழ்கண்டவாறு கூறினாள்,

தன் தாயிடமிருந்து தாயின் தவ வலிமையை பெற துரியன் நினைத்தப்போது,அவன் வெட்கத்தால் தன் பிறப்புறுப்பை மறைத்தான்,அதுவே அவன் பலவீனம்

அர்ச்சுனன்,பீமனைப்பார்த்து, ‘அண்ணா,துரியன் அரசவையில் தன் தொடையை தட்டி அங்கே பாஞ்சாலி அமரவேண்டும் என அழைத்தானே அதுவே அவன் பலவீனம் அண்ணா!

                           118-துரியன் வீழ்ச்சி

பீமன் உடனே புரிந்துகொண்டு துரியனின் தொடை இடுக்கு வழியே ஒரு குத்து விட்டான்.துரியன் சரிந்தான்.இருப்பினும் அவன் உயிர் பிரியவில்லை.செய்தியறிந்த அஸ்வத்தாமன்,துரியனைக் கண்டு துடித்துப்போறான்.நண்பா,நான் என்ன செய்யவேண்டும் சொல் என் உயிரைத் தந்தாவது உன் உயிரை மீட்பேன்,இது சத்யம்.

குந்தியைக் காண பாஞ்சாலி அஸ்த்தினாபுரம் செல்கிறாள்.அங்கே ~காந்தாரியைக் காணலாம் வா என பாஞ்சாலியை குந்தி அழைக்கிறாள்.இருவரும் காந்தாரியை நேரில் சந்திக்கின்றனர்.குந்தி காந்தாரியைப் பார்த்து,வணக்கம் தெரிவிக்கிறாள், ‘அக்கா திவுபதியும் நானும் வந்துள்ளோம்

அப்போது காந்தாரி, ‘என் பிள்ளைகள் ஒருவனைக்கூட உயிரோடு விடாமல் என் வம்சத்தையே அழித்த மாபாவிகளே எதற்காக இங்கே வந்தீர்கள்?

‘அக்கா! என் பிள்ளைகள் என சொல்லாதீர்கள் நம் பிள்ளைகள் என்று சொல்லுங்கள்’

‘நல்லவளைப் போல் நடித்தே என் பிள்ளைகளை ஒழித்து உன் பிள்ளைகளை வாழ வைத்தாய் இங்கே வா!,என் முன்னே வா’
காந்தாரி,உக்கிரத்தில் தாண்டவமாடினாள்.
குந்தி காந்தாரியை நோக்கி முன்னேறுகிறாள், காந்தாரியின் வன்மம் குந்தியை அழித்துவிடும் என பாஞ்சாலி அஞ்சுகிறாள்
,தன் மாமியாரைத்  தடுக்கிறாள்,அதையும் மீறி காந்தாரி முன்னே குந்தி நிற்கிறாள்.

குந்தி, காந்தாரி முன் நின்று கொண்டு, ‘அக்கா!’ என ஓலமிட்டு அழுகிறாள்.

காந்தாரி அருகில் உள்ள வாளை எடுத்து குந்தி கழுத்தை வெட்ட அருகே நோக்குகிறாள்.சற்று யோசித்தவளாக கழுத்தின் மீது வைத்த வாளை கீழே போடுகிறாள்.காந்தாரி குலுங்கி அழுகிறாள்,அப்போது, பாஞ்சாலி, ‘அத்தை என்னை மன்னித்துவிடுங்கள்’ என்கிறாள்.காந்தாரியோ வார்த்தைகளை நெருப்பாக கக்குகிறாள்.

‘தவறு செய்யும் ஆண்களை மன்னிக்க முடியாத,தெரியாத மாபாவிடி நீ!,நீ எல்லாம் ஒரு பெண்ணா? என் குலத்தை அழிக்க வந்தவளே!உனக்கும் நீ பெற்ற பிள்ளைகள் இருக்கிறார்கள்,அவர்களை இழந்து வாடும் காலம் உனக்கு வெகு தூரத்தில் இல்லை,நீ இதை உணர்வாய்,என்னைப்போல் பிள்ளைகளை இழந்து வாடுவாய்,போ’

பாதிக்கப்பட்ட பெண்ணின்  சாபம் தன்னை பாதிக்கும் என்பதை உணர்ந்து திரவுபதி வெம்புகிறாள்.
****
துரியனுக்கு உற்ற துணை என நம்பியவர்களெல்லாம் மாண்டு போனார்கள்,சூழ்ச்சியால் போர் தர்மத்தை மீறி தன்னை அழித்த  பாண்டவர்களை கொன்றால்தான் தனக்கு நிம்மதியான மரணம் நிகழும் என அஸ்வத்தாமனைப் பார்த்து ஈனஸ்வரத்தில் உதவி கேட்கிறான். 

நண்பா! நீ சொல்வது உண்மையானால், என் எதிரிகளான அதர்மக்காரர்களான பாண்டவர்களை கொன்றுவிட்டு வா!,அப்போது தான் என் உயிர் பிரியும்

அஸ்வத்தாமன் பாண்டவர்களை நோக்கி ,புயலெனப்பறந்தான். படைவீட்டில்  பாண்டவர்கள் ,உப பாண்டவர்கள் மற்றும் துரவுபதி ஆகியோர் தங்கி இருந்தனர்.முன்னிருட்டு நேரம்.அப்போது தர்மன் துரவுபதியைப் பார்த்தது, ‘திரவுபதி, இப்பொழுது  போர் முடிவுக்கு வந்துவிட்டது,நாம் அனைவரும் அஸ்த்தினாபுரம் செல்வோம்,அங்கே நாம் நம் அன்னையின் ஆசி பெற வேண்டும்.

நான் என் பிள்ளைகளோடு இங்கேயே இருக்கிறேன்,தாங்கள் செல்லுங்கள் என்கிறாள்

அதெப்டி, நீ இல்லமல் நாங்கள் எவ்வாறு செல்வது?,இந்த தர்ம போர் உன்னால்தானே முடிவுக்கு வந்தது?’

உப பாண்டவர்களும், ‘நீங்கள் தந்தையர்களோடு செல்லுங்கள் அம்மா,நாங்கள் இங்கே பாதுகாப்பாக உள்ளோம்

சரி என சம்மதம் தெரிவித்து,பாண்டவர்களோடு அஸ்த்தினாபுரம் செல்கிறாள் பாஞ்சாலி.

119-உப பாண்டவர்கள் மரணம்

இரவு நேரம்,படைவீட்டில் தூங்கிக்கொண்டு இருப்பது பாண்டவர்கள் என நினைத்து அஸ்வத்தாமன் தன் வாளால்  தூங்கிக் கொண்டிருக்கும் உப பாண்டவர்களை  வெட்டி சாய்க்கிறான்.
                         
ஏதோ நினைத்தவளாக பாஞ்சாலி பாதி வழியில் திரும்பி தன் மகன்கள் இருக்கும் படைவீட்டை நோக்கி ஓடி வருகிறாள்.பாண்டவர்களும் பின் தொடர்கின்றனர்.அங்கே தன் மகன்கள் கொலையுண்டிருப்பதை பார்த்த பாஞ்சாலி துடித்துப் போகிறாள்.

கிருஷ்னன் கூறிய வார்த்தைகள் அவள் நினைவுக்கு வருகிறது, ‘பாஞ்சாலி உன் பிடிவாத குணத்தால் குருவம்சமே அழியும்,உன் கணவர்கள் ஐவர் மட்டுமே உயிர் பிழைப்பர்

அடுத்து,காந்தாரி இட்ட சாபம் நினைவுக்கு வருகிறது, ‘நான் என் பிள்ளைகளை இழந்து தவிப்பது போல் உனக்கும் என் நிலை வரும்

தங்கள் பிள்ளைகளை அழித்து வம்சத்தையே முடிவுக்கு கொண்டுவந்த அஸ்வத்தாமனை நோக்கி பாண்டவர்கள் வருகின்றனர்.

அந்நேரம் அஸ்வத்தாமன் ,துரியனிடம் பாண்டவர்ளை வெட்டி சாய்த்துவிட்டதாக ரத்தம் தோய்ந்த வாளை காட்டுகிறான்.செய்தி கேட்ட துரியனின் மனம் அமைதியடைகிறது,அவன் உயிர் பிரிகிறது.

துரியனுக்கு அஸ்வத்தாமன் தீமூட்ட தயாராகிறான்.அப்போது அர்ச்சுனன், அஸ்வத்தாமன் மீது தொடுக்கும் அம்பு அவன் கைகளை துண்டிக்கிறது, அப்போது அர்ச்சுனன்,

‘மாண்டு போனது எங்கள் சகோதரன் அவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நாங்களே உரிமை பெற்றவர்கள்,எங்கள் சகோதரன் சிதைக்கு தீ மூட்ட நீ யார்?’

அஸ்வத்தாமன், ‘நான் தான் உங்களை என் வாளால் வெட்டி போட்டேனே! நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?’

அட மூடனே,நீ கொலை செய்தது எங்கள் பிள்ளைகளை.’

நானும் நல்ல காரியம் தான் செய்திருக்கிறேன்,உங்களோடு உங்கள் வம்சம் அழிந்தது,இனி உங்கள் குலம் தழைக்க ஒருவரும் இல்லைஎன அஸ்வத்தாமன் ஏளனமாக சிரித்தான்.

அப்போது பீமன், ‘அட ஈனனே,எங்கள் குலம் தழைக்குமடா!எங்கள் குல வாரிசு அபிமன்யு மனைவியின் வயிற்றில் வளறுதடாஎன சொல்லிக்கொண்டு அஸ்வத்தாமனை கொல்ல கழுத்தை நெறிக்கிறான் பீமன்.
                                     
120-அஸ்வத்தாமன் வீழ்ச்சி

அப்போது,அஸ்வத்தாமன்,‘உன்னால் என்னை கொல்ல முடியாது.என்னிடம் உள்ள பிரம்மாஸ்த்திரம் உங்கள் வாரிசை அழிக்கும்என் சொல்லிக் கொண்டே தன்னிடம் உள்ள பிரம்மாஸ்த்திரத்தை ஏவுகிறான்.

பாண்டவர்கள் மிரண்டு போனார்கள்.என்ன செய்வதென்று தெரியாமல் திணறுகின்றனர்.துரவுபதி கிருஷ்னனை தேடுகிறாள்,பாண்டவர்களில் அர்ச்சுனனுக்கு மட்டுமே பிரம்மாஸ்த்திரம் ஏவ தெரியும்.மற்ற பாண்டவர்கள் பதிலுக்கு பிரம்மாஸ்த்திரம் ஏவ அர்ச்சுனனை வற்புறுத்துகின்றனர்.

ஒரு பிர்மாஸ்த்திரத்தை அழிக்க இன்னொரு பிரம்மாஸ்த்திரமா? வேண்டாமண்ண உலகத்தில் இச்செயல் பேரழிவை ஏற்படுத்தும் அண்ணா

கிருஷ்னன்,எங்கிருந்தோ வந்தான், ‘என்ன நடக்கிறது இங்கே?அர்ச்சுனா உனக்கென்ன புத்தி கெட்டுப்போச்சா?

ஒரு பிரம்மாஸ்த்திரத்துக்கு இன்னொரு எதிர் பிரம்மாஸ்த்திரம் எப்படி தீர்வாகும்?

அர்ச்சுனன் பிர்மாஸ்த்திரத்தை திரும்ப பெற்றான்,ஆனால் அஸ்த்தாமன் பிரம்மாஸ்த்திரத்தை திரும்ப பெறும் ஞானம் பெற்றவனில்லை,அது உத்தரையின் வயிற்றைத்தாக்கும் திறம் கொண்டது.கிருஷ்னனின் வட்டெரியும் ஆற்றலால் அஸ்வத்தாமனின் அஸ்த்திரத்தை செயலற்றதாக்கி விடுகிறான்.

அஸ்வத்தாமனுக்கு மரணதண்டணை,அளிக்க கிருஷ்னன் விரும்பவில்லை,   தீரா வியாதியால் அவதியுறுவதுதான் அவன் பாவ செயலுக்கு தண்டனை என கிருஷ்னன் சபிக்கிறான்.காரணம் அவன் பிராமணன்,அவன் செய்ய்யும் பாவ காரியங்களுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது என்பது பிராமணர்கள் வகுத்துக்கொண்ட இன பாதுகாப்பு கொள்கை(மனு தர்மம்)   


அசுவத்தாமன் வீழ்ச்சிக்குப்பின் மாண்டு கிடக்கும் துரியனுக்கு,இறுதிச் சடங்கு செய்ய உடன் பங்காளிகள் என்கிற முறையில் தயாராகின்றனர்.

                                 121-போகி

போர் துவங்கியது,மார்கழி மாதம் 11ம் நாள் .18-ம் நாள் அத்தினாபுரம் மக்களுக்கு விடுதலை கிடைத்த நாள் .துரியனின் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்த நாள்11+18=29.துரியனை எரிக்க மக்கள் ஆரவாரம் கொண்டனர்.பீமன் அதற்கான அறிவிப்பு வெளியிடுகிறான்.`~மேளதாளங்களோடு,பழய எண்ணங்களான,அடிமை,அச்சம்,பயம்,தீய எண்ணம் ஆகியவக்றை சேர்த்தே எரிக்க வேண்டும் அதுதான் போகி பண்டிகையாக இந்திய மக்கள் மேளம் கொட்டி கொண்டாடுவது.

அடுத்து அத்தினாபுரம் பாண்டவர் வசம் வந்துவிட்டதை போர்க்களத்தில் அம்பு படுக்கையில் வீழ்ந்து கிடக்கும் பீஷஃமன் கேள்வியுற்று அவன் உயிர் ஆனந்தமாக பிரிகிறது.

122-மகா சங்ரந்தி பொங்கல்,ஒரு தேசியத்திருவிழா!

தங்கள் தாத்தா மரணத்தை அவர் விரும்பியவாறு அத்தினாபுரம் எழுச்சிநாளாக மார்கழி 30-ம் நாள் அதாவது தை முதல்நாளாக கொண்டாட பாண்டவர்கள் விரும்பினர்.அதுதான் இந்திய மக்கள் கொண்டாட்டம் மகா சங்ரந்தி .சங்கரம் என்றால் அழிவு,
மகா சங்கரம் எனில் பேரழி.ஒரு அழிவின் முடிவில்தானே ஜனனம் (தோற்றம்) உண்டாகும் .தமிழகத்தில் இப்பண்டிகை தை முதல் நாளை தமிழர் திருநாளாளக பின்னாளில் மாற்றப்பட்டது.மொழி மாற்றம் அடைந்த பிற மாநில மக்கள் மகரசங்ரந்தியாக தை முதல் நாளை கொண்டாடுகின்றனர்.

மகாபாரத கதையில் வரும் மாபெரும் வீரனான சத்ரிய வம்சத்தின் தூண் என பாரட்டப்படும் பீட்மன்,கவுவர்,மற்றும் பாண்டவர்களின் தாத்தா,பிதாமகர் என அழைக்கப்படுவர்.வீரத்தின் விளைநிலமே அவர்தான்.வில்லாலும்,வாளாலும் வேலாலும் வீழ்த்தமுடியாத உடல் வலிமை பெற்ற அந்த காலத்திய,புருஸலி.

அர்ச்சுனன் தன் வில்லாற்றலால் தன் தாத்தாவை வீழ்ச்சியுறச் செய்தாலும்,அத்தினாபுரம் சமத்தானம் பங்காளிகள் சண்டையிட்டு அழியக்கூடாது எனும் வைராக்கியம் கொண்டதால் பீட்மன் உயிர் ஊசலாடுகிறது.

போர் துவங்கி 10-ம் நாள் வீழ்ச்சியுற்ற பீட்மன்,18-ம் நாள் துரியன் மாண்டபிறகு (அதுதான் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது)19-ம் நாள் அதாவது தை முதல் தேதியை நாடு முழுவதும் வாழும் சத்ரியர்கள்(பின்னாளில் பல மொழி கொண்ட சத்ரியர்களாக மாறிவிட்டனர்,ஆனால் பீடமனின் மரணத்தை விழாவாக இன்றளவும் மகாசங்ரந்தியாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது,
அதற்கு ஆதாரமாக ஆங்கில நாளேட்டில்(TIMES OF INDIA,Dt 15.01.2016,திரு.யோகி அசுவினி எழுதிய the speaking tree- longer,brighter days with makara sankranthi,எனும் தலைப்பில் கீழ்கண்டவாறு எழுதுகிறார்)
Makara Sankranthi was of special significance in the ancient world, for it corresponded with the onset of the apparent northward movement of the sun- uttarayan ,in Sanskrit.souternmost latitude in suns trajectory as the Tropic of Capricorn by modern scientists after the constellation Capricornus (Makar,in Sanscrit)in which the sun entered at the point,marking the beginning of the auspicious period when the days would become longer and brighter.Bishma Pithamah in the Mahabaratha,is believed to have waited  for this day to leave his body to facilitate his moksha.

(இதன் தமிழாக்கம்-சூரியனின் தென் திசையிலிருந்து வடதிசை நோக்கி பயணிக்கும் நாளை பழங்கால உலகின் முக்கிய நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதை அருவடைத்திருநாளாகவும் உலகின் பல நாடுகளில்(சூரியன் தனுசு ராசியிலிருந்து,மகர ராசிக்குள் சஞ்சரிக்கும் நாள்) வெவ்வேறு மாதங்களில் அறுவடைத்திருநாள் மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும் மக்கள் கொண்டாடுகின்றனர்.

மங்கலகரமான துவக்க நாளாளகவும் ஒளிபொருந்திய நாளாகவும் மக்கள் நம்புகின்றனர்.மகாபாரதத்தில் பீட்ம பிதாமகன், தன் உடலிலிருந்து உயிர் பிரிய,அந்த ஒளி பொருந்திய நாளுக்காக காத்திருந்தான் என திரு.யோகி அசுவினி தெரிவிக்கிறார்(இது மூட நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்கிற எண்ணத்தில் கூறுகிறார்.)

ஆனால் அப்படியல்ல,பீட்மன் அந்த நாளுக்காக காத்திருக்க வில்லை,அவன் லட்சியமான அத்தினாபுரத்தை தன் வாரிசுகள் மட்டுமே( பாண்டவர் அல்லது கவுரவர்)ஆளவேண்டும் அதை கண்ணால் பார்த்து உயிர் போகவேண்டும் எனும் எண்ணம் கொண்டவன்,அதனாலேயே அந்நாளை மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாடுகின்றனர்.    

(இந்துக்களின் பண்டிகைகள் அனைத்தும் சத்ரியரின் அல்லது அரக்கர்களின் அழிவில்தான் கொண்டாடப்படுகிறது,தீபாவளியைப்போல(நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாள்)    

போகி என்பது துரியனின் வீழ்ச்சி நாள்,பொங்கல் என்பது அத்தினாபுரம்(பீஷஃமனின் மகிழ்ச்சி) எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
காலங்கள் மாற மக்கள் எண்ணங்கள் மாறி விட்டது,அவரவர் எண்ணங்களுக்கு ஏற்றவாறு பண்டிகைக் காலங்களுக்கு புதுபுது புராணங்களை உருவாக்கிக் கொண்டனர்.    

இப்பொழுது புரிகிறதா இந்தியர்களின் பண்டிகைக் காலங்கள், மூட நம்பிக்கைகள் மகாபாரத காலத்துடையது என்று?தமிழ் மக்கள் அறுவடைத் திருநாளாக பின்னாளில் மாற்றிக் கொண்டனர்
           (இதன் தொடரை புதிய அஞ்சல்-15ல் காணவும்
                      

No comments: