14-குந்தியின் சுயம்வரம்
குந்தி,சுயம்வரத்திற்கு குழுமியிருந்த பன்னாட்டு
இளவரசர்கள் மத்தியில்,அவையில் ஒரு வினா எழுப்புகிறாள்.குந்தி
படித்தவள் ,வரலாறு தெரிந்தவள்.முன்னாளில் நடந்த அகலிகை கதையில்
உள்ள ஆணாதிக்கத்தினால் ஏற்பட்ட ஒரு நெருடலான செய்தியை எடுத்துரைத்து அதற்கு சரியான
விடையை எந்த இளவரசன் கூறுகிறானோ அவனுக்கே மாலையிடுவேன் என தன் நிபந்தனையை
விதிக்கிறாள் ;இதற்கு அவையில் உள்ள அத்தனை இளவரசர்களும்
சம்மதித்தனர்.
இதோ அந்த வினா.‘அகலிகை, கணவனுக்கு
துரோகம் செய்தவள் கணவன் இட்ட சாபாத்தால் கல்லானாள்,அந்த
களங்க முற்றவளுக்கு ராமன் சாப விமோசனம் தந்தது நியாமா?’
சுயம் வரத்திற்கு வந்த இளவரசர்கள் ஒவ்வொருவரும் ஒரு விடை
தந்தார்கள்,
அதில் பாண்டு சொன்ன விடை குந்திக்கு பிடித்திருந்தது.
பாண்டு கூறியதாவது,
அந்த இருட்டு நேரத்தில் தன் அருகில் கணவனைத் தவிர வேறு யார்
படுக்கமுடியும்? அந்த எண்ணத்தில் அகலிகை மறு எண்ணம்
கொள்ளவில்லை. அந்நேரத்தில் இந்திரன் வெளியேறும்போது தன் கணவர் கண்டு கோபம்
கொண்டபோது தான்,தான் சோரம் அடைந்ததை எண்ணி வருந்தினாள்;அதற்குள் கணவனின் சாபம் முந்திக் கொண்டது.தன் மனமறியாமல் செய்த தவறுகளை இந்த சமுகம் மன்னித்துதான்
ஆகவேண்டும்.’
திருமணத்திற்கு முன், தான் இழைத்த தவறை பின்னாளில் தனக்கு
வரப்போகும் கணவன் உணர்ந்தறிவானானால், குந்திக்கு இந்த பதில் சாதகமாக அமையும்,
என்று எண்ணி தனக்கு சரியான புருஷன் பாண்டுவே! என
தீர்மானித்து அவனுக்கே மாலையிடுகிறாள்.
பாண்டுவையும்,குந்தியையும் அஸ்த்தினாபுர மக்களும்,
அரண்மனை வாசிகளான சத்தியவதி, பீஷ்மன், திருதராஷ்ட்ரன், காந்தாரி, விதுரன்
ஆகியோர் வரவேற்கின்றனர். குந்தி, தன் மூத்தவர்களான பீஷ்மன்,
ராஜமாதா, திருதராஷ்ட்ரன், மற்றும் தன் ஓரகத்தி காந்தாரி யின் பாதங்கள் தொட்டு வணங்குகிறாள்.
(இந்த ஆசி பெறும்
நிகழ்ச்சி,அஸ்த்தினாபுரம் அரண்மனை வாசிகளுக்கு ஆச்சரியத்தை
ஏற்படுத்தியது.பெரியவர்களை மதிக்கிறோம் என்பதை வெளிக்காட்டுவதில் யது குல மக்களின்
கலாச்சார வெளிப்பாடுதான் பெரியவர்களின் பாதம் தொட்டு வணங்கும் பழக்கம்.இந்த
கலாச்சாரத்தை யதுகுல இளவரசியான,குந்தியின் வாயிலாக,யாருக்கும் தலைவணங்காத சத்ரிய குல மக்களுக்கு ஒரு புதிய பழக்கமாக தோன்றியது..
யாருக்கு தலைவணங்க வேண்டும்?,யாரை எதிர்க்க
வேண்டும்? என பிராமண குருவான பரசுராமனிடம் பாடம் கற்ற
பீஷ்மன்,இந்த கலாச்சாரத்தை திருதராஷ்ட்ரனுக்கும் அவன்
பிள்ளைகளான கவுரவர்களுக்கும் சொல்லித்தர ஆசைப்பட்டான்,ஆனால் பீஷ்மனின்
அறிவுரைகள் கவுரவர்களிடையே
எடுபடவில்லை)
15-மாற்று மனைவியான மாதுரி
பாண்டு அரண்மனை நுழைந்தவுடன் அவனுக்கு போர்க்கள பணி
காத்திருந்தது.பக்கத்து நாட்டு மன்னன் சல்லியன் போருக்கு அழைக்கிறான். எனவே படை
பரிவாரங்களுடன் போருக்கு புறப்படுகின்றான்.அங்கே அந்நாட்டு மன்னனை வெற்றி கொள்கிறான்.
அப்போது அந்நாட்டு இளவரசியான மாதுரியை (மைத்ரி)மணமுடிக்கிறான்.போருக்குப்
பின் மீண்டும் அஸ்த்தினாபுரம் வரும் பாண்டுவையும் மாதுரியையும் பார்த்த மக்களும்
அரண்மனை வாசிகளும் அதிர்ச்சியுற்றனர். பாண்டுவுக்கு இன்னொரு மனைவியா? குந்தி அதிர்ச்சி அடையவில்லை. மாறாக அவர்களை அன்புடன் வரவேற்கின்றாள்.
குந்தியும்,‘போருக்குப் போகும் சத்திரியன் எதிரியை
வென்றால் அந்நாட்டு இளவரசியை மணமுடிப்பது இயல்பானது தானே!ஒரு சத்ரிய அரசனுக்கு
அவன் விரும்பினால் எத்தனை மனைவிகளையும் ஏற்கலாம். இது சத்ரிய தர்மம்.’என சொல்லி முடிக்கிறாள்.அரண்மனை வாசிகளும் அமைதியானார்கள்.
மாலை நேரம் பாண்டு,குந்தி மற்றும் மாதுரி மூவரும் தேனிலவு காண
சுற்றுலா செல்கின்றனர்.அந்நேரம் ஒரு மானைப் பார்க்கின்றாள் மாதுரி.அந்த மானின்
தோல் தனக்கு வேண்டும் என கணவனைப் பார்த்து
கேட்கிறாள். இதைக்கேட்ட குந்தி அதிர்ச்சி அடைந்தாள்
‘ஒரு உயிரைக் கொன்று அதன் தோலை அணிவது பாவமான
செயல் இது வேண்டாம் மாதுரி’
என கூறுவதைக் கேட்ட மாதுரி,
‘மிருகங்களை வேட்டையாடுவது சத்தரியர்களின்
பொழுது போக்கு.இது பாவமல்ல. ஆனால் யது குலத்தவர் வேட்டைக்கு செல்ல மாட்டார்கள்,
மிருகங்களைக் கண்டு அஞ்சுவது தங்கள் குலத்தவரின் குணம்’ இதைக்கேட்ட குந்தி உணர்வற்றுப் போனாள்.
(சாதிகளை ஒன்றிணைக்க,என்னதான் பல சாதிகளை இணைத்துக் கதைப்
பின்னப்பட்டாலும் சாதிய வேற்றுமைகள் அன்றே தலைதூக்க ஆரம்பித்துள்ளன.)
இவர்கள் உரையாடலை கேட்க மனமில்லாமல் பாண்டு அந்த மான்மீது
அம்பை எய்துகிறான்.ஆனால் அது மானல்ல;ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் காட்சி
.தொலைவில் இருந்து பார்த்ததால் மாதுரியின் கண்ணுக்கு அது மானைப்போல்
தோற்றமளித்துள்ளது.அது ஒரு இடமாறு தோற்றப்பிழை.
அம்பு பட்ட அந்த
மனிதன் ஒரு ரிஷி, என்பதும் அவன் தன் இணையோடு
புணர்ந்திருக்கும் நேரம்;எய்த அம்பினால் இருவருமே
இறந்துபோகும் நிலைக்கு வந்துவிடுகின்றனர். அந்த ரிஷி,இறக்கும்
தருவாயில்,‘உனக்கு பெண்ணோடு இணையும் பாக்கியமே கிட்டாது; பெண்ணை புணரும்
காலத்தில் நீ மரணத்தை பெறுவாயாக’ என சாபமிட்டு ,இறந்து போகிறான்.
(பாண்டு ஆண்மையற்றவன் என கதை சொன்னால் கதையில் சுவாரசியம்
இருக்காது,எனவே இந்த முனிவன் சாபத்தினால் பெண்ணை புணரும்போது மரணம் நிகழும் என
மக்கள் மனதை திசை திருப்ப இவ்வாறு புனையப்பட்டுள்ளது என்பதை வாசகர்கள்
அறியவேண்டும்)
16- பாண்டுவிற்கு முடி சூட்டுதல்
அருகில் இருந்த குந்தி இந்த சாபத்தை நன்கு உள்வாங்கிக்
கொண்டாள்.ஆனால் மாதுரி இதை சட்டை செய்ய வில்லை.எப்படியும் கணவனான பாண்டுவுடன்
உடலின்பம் காண்பதில் குறியாக இருந்தாள்.அரண்மனை அடைந்த மூவரும் காட்டில் கண்ட
காட்சிகளை அரண்மனை வாசிகளுக்கு விவரித்துக் கூறினர்.
பண்டுவிற்கு முடிசூட்டும் வைபவம் நடக்கிறது. ஒரு நாட்டின்
மன்னன் முடி சூட்டிக்ககொண்ட பின் சாம்ராச்சிய விரிவாக்கம் செய்வது மன்னர்குல
மரபு.அந்த மரபு படி பாண்டு அடுத்த நாள் திக் விஜயம் புறப்படத் தயாராகிறான்.
சகுனி,திருதராஷ்ட்ரனான தன் மைத்துணன், அஸ்த்தினாபுர மன்னனாக முடிசூட்ட தன் சாணக்கியத்தானத்தை விவரிக்கின்றான். அதாவது,
பாண்டு அஸ்த்தினாபுரத்தின் மன்னனாக முடி சூட்ட வேண்டும்;
முடிசூட்டியவுடன் பாண்டு எட்டு திக்கும் சென்று தன்
சமஸ்த்தானத்தை விரிவு படுத்த வேண்டும் அதாவது அஸ்வமேத யாகம் செய்ய வேண்டும். அதுவரை
திருதராஷ்ட்ரன் அஸ்தினாபுரத்தின் அரசனாக இருக்க வேண்டும் எனும் யோசனையை சகுனி
முன்வைக்கிறான், திருதராஷ்ட்ரன் ஏற்றுக்கொண்டான், பாண்டுவும் உடன் பட்டான்.
17-பாண்டுவின் அஸ்வமேத யாகம்
அஸ்வமேதயாகம் செய்தவர்கள் நாடு திரும்புவது அவ்வளவு சுலபமான
காரியமல்ல எனும் குறுக்கு புத்தியுடன் சகுனி திட்டம் தீட்டுவதை பாண்டு
பொருட்படுத்த வில்லை. ஒரு வகையில் அண்ணன் திருதராஷ்ட்ரனை திருப்தி படுத்தும்
விதமாக இச்செயல் அமைந்துவிட்டதை எண்ணி மனதுக்குள் மகிழ்ச்சி அடைகிறான்.
தன் மனைவி குந்தி இதைப்பற்றி கேட்டபோது ‘திருமணமான மகிழ்ச்சி கூட நிலைத்திருக்க வில்லை அதற்குள் அஸ்வமேத யாகம்
தேவையா?’ தன் இரண்டு மனைவிகளான யதுகுல இளவரசியையும், சத்திரியகுல
சல்லியன் மகள் மாத்திரையையும் சமாதானப் படுத்துகிறான் பாண்டு.
பாண்டு திக் விஜயம் முடிந்து அஸ்த்தினாபுரம்
திரும்புகிறான்.சகுனி இதை எதிர்பார்க்க வில்லை .ஏதாவது ஒரு நாட்டில் போரிடும் போது
இவன் இறந்து போக வாய்ப்பு இருந்திருக்கும் ;ஆனால் அப்படி ஏதும் நடைபெறாதது சகுனிக்கு
ஒரு பெரிய ஏமாற்றமே.
மீண்டும் பாண்டுவிடம் அரசாட்சியை தன் அண்ணன் திருதராஷ்ட்ரன்
ஒப்படைக்க வேண்ட்டும்; ஆனால் இதில் திருதராஷ்ட்ரனுக்கு விருப்பம்
இருக்காது என பாண்டுவிற்கு நன்கு தெரியும்.
இதை எப்படி சமாளிப்பது என சகுனியிடம் அலோசனை பெறுகிறான்
பாண்டு.ஆனால் சகுனி பாண்டுவிற்கு பரிந்து பேசுவதுபோல் பேசி, ‘எனக்கு எதற்கு வம்பு,அவர்கள் அண்ணன் தம்பி விவகாரம் ,இதில் அன்னியனான எனக்கு என்ன வேலை;நான் பேசாமல்
கானகம் செல்கிறேன்’ என பாண்டு காதுபட தன் வேலையாளிடம்
பேசுகிறான்.
இதனை கேட்டிருந்த பாண்டு, ‘இது கூட நல்ல
யோசனையாக தோன்றுகிறது, நான் கானகம் சென்று அமைதியான வாழ்க்கை
வாழப்போகிறேன்’ என சகுனியிடம் தெரிவிக்கிறான். சகுனி சும்மா
பதறுவது போல் நடித்து
‘அப்படி யொல்லாம் செய்யாதே நீ உன் உரிமையை
விட்டுக் கொடுக்காதே’ என உசுப்பேற்றுகிறான்.
ஆனால் பாண்டு கானகம் செல்வது உறுதியாகிவிட்டது. தன்
மனைவிகள் இருவரிடமும் இதனை தெரிவிக்கிறான்.
‘நீங்கள் கானகம் சென்றால் எங்களுக்கு
இங்கென்ன வேலை?
நாங்களும் உங்களோடு கானகம் வருகிறோம்’ என குந்தியும்
மாத்ரியும் தெரிவிக்கின்றனர். மூவரும் கானகம் செல்கின்றனர்.
இதற்கிடையே திருதராஷ்ட்ரனுக்கு கல்யாணம் ஆகி பல ஆண்டுகள்
ஆகியும் ஒரு வாரிசு தோன்றாத நிலை கண்டு ராஜமாத கவலை கொள்கிறாள்.
இதற்கு வழக்கம் போல் வியாசரின் ஆலோசனையை நாடுகிறாள்.
வியாசரும் அரண்மனை விஜயம் செய்து காந்தாரியின்
பிள்ளை பேறுவிற்கு ஆசிர்வதிக்கிறான்.
வியாசரின் அருளாசிப்படி(?) காந்தாரி கர்பமானாள் .இந்த குதுகல செய்தி
காட்டில் இருக்கும் பாண்டுவிற்கு எட்டியது.பாண்டுவும் தன் மனைவி குந்தியிடம் இந்த
செய்தியை தெரிவிக்கிறான்.
18-பாண்டவர்கள் தோற்றம்
பாண்டு மனைவியோடு உடலுறவு கொண்டால் மரணம் நிகழும் எனும்
ரிஷியின் சாபம் நினைவுக்கு வருகிறது.பாண்டுவிற்கு சாஸ்த்திர சடங்குகளில் நம்பிக்கை
உண்டு என்பது குந்திக்கு தெரியும்.அதை பயன் படுத்தி கணவனான பாண்டுவிற்கும்
பாதிப்பு வராமல் குழந்தையை எப்படி பெறுவது என தனக்கு மந்திரங்கள் தெரியும் என தன்
சாதுரிய பேச்சால் நம்ப வைக்கிறாள்.
குந்தியின் நடத்தையை கொச்சை படுத்துவது பாவம் என மக்களை
நம்ப வைக்க புரோகிதர்கள் படாத பாடுபட்டு புதிய புனைக்கதைகளை மக்களிடையே விதைத்தனர்
அது இன்று வரை முட்டாள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை நாம் எல்லோரும்
அறிவோம்.
தாம்பத்தியத்தில் முன் அனுபவம் பெற்ற குந்திக்கு ,
அஸ்த்தினாபுர அரண்மனையில் பாண்டுவை தனிமையில் சந்திக்க
வேண்டும் ஆர்வம் அதிகமாகிட்டது.அதை பக்குவமாக தவிர்த்த பாண்டு உடலியல் ரீதியாக
பாண்டுக்கு தகுதி இல்லை என்பதை குந்தி உணர்ந்தாள்.
தன்னை எப்பொழுதும் நோட்டமிடும் ஒரு பிராமண இளைஞனை பாண்டு
புணரச் சொன்னதை பின்னாளில் தனக்கு
மருமகளாக திரவுபதி வந்த போது இந்த
செய்தியினை திரவுபதியாடம் பகிர்ந்து கொள்கிறாள். அரண்மனையில்
தன்னை நாடி,நம்பி வந்த இரண்டு மனைவிகளின் உடல் ரீதியான
உணர்வுகளை புரிந்தவன் பாண்டு.இதற்கு சரியான வழி ஒன்று அண்ணனுக்கு அரசாட்ச்சியை
விட்டுக் கொடுத்தது போலவும் இருக்கும்,மனைவிகளின் ஆசைகளை
பூர்த்தி செய்ய வனவாசம் வழிவகுக்கும் என பாண்டு கணக்கு போட்டான்.
19-பாண்டவர்கள் தோற்றத்தின் மூலம்
எனவே இரண்டு மனைவிகளையும் அழைத்துக்கொண்டு பாண்டு வனவசாம்
சென்றான்.குந்தியின் உடலுறவு உந்துதலுக்கு பாண்டு உத்தாலகர் கதையை
சொல்லி கணவன் சம்மதத்துடன் மனைவி
விருப்பப் பட்ட பிற ஆண்களுடன் சங்கமிக்கலாம்,எனும் பாண்டுவின் புரிதலுக்கு ஏற்ப மூன்று
பிள்ளைகளை பெற்றாள்.
இதைக் கண்ணுற்ற மாதுரி, “கொண்டவனைப்
புணராமல் கண்டவனோடு சேர்ந்து குழந்தைகளைப் பெறுவது பாவமல்லவா?”
என குந்தியைப் பார்த்து வினவுகிறாள். அப்பொழுது தம்
கணவருக்கு கானகத்தில் முனிவனிட்ட சாபம் உள்ளதே, என கணவனின்
இயலாமையை மறைக்க கதை அளக்கப்பட்டது.
(கணவனின் இயலாமையை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு என பெரும்பாலும்
மனைவிகள் வெளியில் சொல்வதில்லை. அந்நாளில் மட்டுமல்ல, இந்நாளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழத்தான் செய்கின்றன. இத்தகைய செயல்
பெண்ணாதிக்கத் தன்மைக்கு வழிவகுக்கும்)
இதனால் நம்முடைய பூவுக்கும் பொட்டுக்கும் களங்கம் ஏற்படுமே
என்கிற அச்ச உணர்வினால் தாம் அவ்வாறு செய்ய நேரிட்டது; என மாத்ரிக்கு குந்தி விளக்கமளிக்கிறாள்
(குந்தி மூன்று குழந்தைகளை பெற்றாள்.தமிழில் மொழி மாற்றம்
செய்த புலவர்கள் சோரம் போகும் பெண்களின் கதையை உட்கார்ந்து கேட்கமாட்டார்கள்
தமிழர்கள் எனவே அதை மறைத்து குந்தி புனிதமானவள் போல் சித்தரிக்க மந்திரம் சபித்து
பிள்ளை பெற்றாள் என கதை புனையப்பட்டது,இப்பொழுது பலரும் வட மொழி கற்று உண்மை கதை
என்ன வென்று உண்மை மறைக்கமல் உரை எழுதப்படுகிறது.)
மாத்தரிக்கு,‘தானும் குழந்தை பெற வேண்டும்.ஆனால் நீங்கள்
என்னை என் கணவரிடம் நெருங்க விடமாட்டாமல் தடுக்கின்றீர்’ என
குந்தியிடம் சண்டை போடுகிறாள்.
குந்தியோ,‘நமக்கு பூவும் பொட்டும் தான் அவசியம்;அதற்கு கணவனின் அயுள் நீடிக்க வேண்டும்.ரிஷியின் சாபத்தை என்றைக்கும்
நினைவில் கொள்’ என தன் சக்களத்தி மாத்திரிக்கு
எடுத்துரைக்கின்றாள். மலடி என்கிற பெயர் நீங்க வேண்டுமே, என்ன
செய்ய?
‘தான் கொண்ட
மாற்று வழி ஒன்றுதான் நீ குழந்தை பெறுவதற்கு சிறந்த வழி’என்கிறாள். அரை மனதுடன் மாத்தரி அந்த யோசனையை ஏற்கிறாள்.அவளும் நகுலன்
.சகாதேவன் என இரண்டு பிள்ளைகளை பெற்றாள்.ஐந்து பிள்ளைகளும் தனக்கு பிறந்த
பிள்ளைகளாக உலகுக்கு அறிவிக்கும் பொருட்டு கானகத்தில் தனியாக குடில் அமைத்து சாஸ்திர
சடங்குகள் வேதங்கள் அனைத்தும் பாண்டு சொல்லித் தருகிறான்.
பிராமணர்களின் நெருக்கும் குந்திக்கு உண்டு, இதனால் ‘சாஸ்த்திரங்களையும் சடங்குகளையும் பின் பற்றுவது ஒரு பெண்ணுக்கு அழகு
சேர்க்கும்’ எனும்
உபதேசத்தை மனதில் பதியவைத்துக் கொண்டவள்.
ராராயணத்தில் எப்படி சீதையை வைத்து வர்மாக்களை வழிக்கு
கொண்டுவர முயற்ச்சித்தார்களோ, அதே போன்று மகாபாரததத்தில் குந்தியை சாஸ்த்திரங்களையும்,
சடங்குகளையும் சொல்லி மூளைச்சலவை செய்து முரட்டுத் தனமான சந்திர
குலத்தையும், சூரிய குலத்தையும் யது குலத்தையும் (குரு
குலம்) பெரும்பான்மை சமுகமான மீனவர்களையும் ஒன்றிணைத்து பிராமணர்களின்
பாதுகாவலர்களாக மாற்றுகின்றனர். மகாபாரத கதை முழுக்க பிராமணர்களின் இந்த
தன்னலத்தேட்டை (Exploitation) காணலாம்.
சத்திரியர்கள் முறையாக திருமணம் செய்து கொள்வதே எதற்கு எனில் அரியணை ஏற அடுத்த வாரிசை உருவாக்கத்தான்,குந்திக்கு முந்தியவள் ஓரகத்தியான காந்தாரி இன்னும் வாரிசை பெற்றுக் கொள்ளவில்லை. திருதராஷ்ட்ரனுக்கும் தன் மனைவியான காந்தாரி வாக்குறுதி தந்ததுபோல் இன்னும் ஒரு குழந்தையைக் கூட பெற்றுத் தரவில்லை என வருத்தம் அதிகமாகிவிட்டது.
‘100 பிள்ளைகளைப்
பெற்றுத் தருகிறேன் என சொன்னாயே என்னஆச்சு?’ தினமும் கணவன் மனைவிக்குமிடையே சச்சரவுகள் நடந்தவண்ணம் உள்ளன. ஒருநாள்,காமத்தின் உச்சத்திற்கு போன திருதராட்டிரன் காந்தாரியைப்
பார்த்து,
“இந்த நேரத்தில் என்னால் சும்மா இருக்க முடியாது,உன் தாதிகளில் ஒருத்தியை என் படுக்கை அறைக்கு அனுப்பு”
ஊராளப்பட்ட மன்னனான தன் மணாளனின் ஆசையை மனைவியான மகாராணி காந்தாரியால்
நிறை வேற்றாமல் இருக்க முடியுமா? தன் தாதிகளில் ஒருத்தியை அனுப்பினாள்,அந்த தாதிக்கு அன்று மன்னனை புணர்ந்த நேரம்,யுயட்சு
எனும் புத்திரன் பிறக்கின்றான், பின்னாளில்
இவன் 18-ம் போர் துவக்கத்தில் பாண்டவர்களோடு அணி சேருகின்றான்.
(காலங்காலமாக
செவி வழி கேட்டுவந்த நாட்டு மக்கள் தங்கள் மனதுக் கேற்ற வாறு மட்டுமல்ல தங்கள் இன,
குல தர்மம் இப்படி இருப்பது தான் ஏற்புடையதாக இருக்கவேண்டும் ,தங்கள் இன பழக்க வழக்கங்கள் வர்மாக்களைப் போல் அமையவேண்டும் என யது குல மக்கள் விரும்பினர்.
எனவே குந்தி எப்படி குழந்தை பெற்றாள் என்பதை கொச்சை படுத்த விரும்பாத இனம்,மந்திரம் எனும் புரியாத சொல்லை பயன்படுத்தி குழந்தை பெறுவது என்று
சொன்னால் பாமர மக்களின் நம்பகத் தன்மையைப் பெறலாம்.அதுவே தம் குல கவுரவத்தை
காக்கும் விதமாக அமையும் என எண்ணி மகாபாரத கதை முழுக்க மந்திரம்,தவம், தர்மம்,ரிஷி மூலம் நதி
மூலத்தை அறிய முற்படக்கூடாது எனும் விதிகளை அமைத்துக் கொண்டனர். )
20-கவுரவர்கள் தோற்றம்
தன் இளைய ஓரகத்தி குந்தி குழந்தை பெற்றாள் எனும் சேதி காந்தாரிக்கு, மூத்தவளான தனக்கு இன்னும் குழந்தை பேறு
இல்லையேஎன கோபமும் பொறாமையும் கொள்கிறாள். திருதராஷ்ட்ரனும்,
‘15 மாதமாக கர்பமாக இருக்கிறேன் என சொல்லி
இந்த குருடனை ஏமாற்றுகிறாயா?’ காந்தாரியை வார்த்தைகளால்
பொசுக்குகிறான், திருதராஷ்ட்ரன்.இதனால் இன்றும் ‘பக்கத்து வீட்டுக்காரி பிள்ளை பெற்றாள் என்பதற்காக,எதிர்த்த
வீட்டுக்காரி கல்லெடுத்து இடித்துக் கொண்டாள்’ எனும்
சொல்லாடல் கிராமங்களில் புழங்குகிறது.
இதன் விளைவாக காந்தாரிக்கு அவ்வப்போது பிரசவ வலி தோன்றி
தோன்றி மறைகிறது. ஆவேசமடைந்த திருதராஷ்ட்டரன் காந்தாரியின் வயிற்றில்
உதைக்கிறான்.பிண்டம் பீரிட்டு விழுந்தது. அதுவே பிள்ளைகள் நூறானது.
(இது அறிவியல் சிந்தனைக்கு அப்பாற்பட்டது, இருப்பினும்
நிறைய குழந்தைகள் பெற்றாள் என்பதை ஒரு சுவாரசியத்திற்காக 100 குழந்தைகள் பெற்றாள்
காந்தாரி என வழக்கமாகிவிட்டது.)
21-துரியோதனன் தோற்றம்
முதல் குழந்தை பிறந்தது;அதற்குள் அரண்மனை
புரோகிதர்கள்,‘இந்த குழந்தை பிறந்த நேரம் சரியில்லை
அஸ்தினாபுரத்து அரண்மனையில் சத்திரியரின் சந்திர குலத்தில் உதித்த,இவன் நாட்டு மக்களுக்கே
அச்சுறுத்தலாக விளங்குவான், குறிப்பாக அந்தணர்களுக்கு ஆகாது,இதை அழிப்பதே மேல்’
என கூறுகின்றனர்.
(முடிந்து போன கதைக்கு புரோகிதம் புனிதமானது, என மக்களை
நம்ப வைக்க பின்னாளில் இடைச் செறுகலாக நுழைக்கப் பட்டதாக இருக்கலாம்)
திருதராஷ்ட்ரன் காதுக்கு எட்டிய இந்த செய்தி கேட்டு அவன்
வாட்டமுற்றான்.அருகிலிருந்த சகுனி தன் மைத்துணனைப் பார்த்து ‘இதையெல்லாம் நம்பாதே, இந்நேரத்தில் உலகில் எத்தனையோ
குழந்தைகள் பிறக்கின்றது ,அவையெல்லாவற்றையும் அழிக்க
முடியுமா?’
சகுனியின் பகுத்தறிவு சிந்தனை திருதராஷ்ட்ரனை சிந்திக்க
வைத்தது.
(அன்றே திட்டம் தீட்டினர்;இந்த பிரமணர்கள்.
இறைவழி சித்தாந்தத்தை எதிர்க்கும் இந்த திருதராஷ்ட்ரன் வகையறாக்களை ஒழித்தால் தான், தாம் தொடர்ந்து இந்நாட்டில் பிழைப்பை நடத்த முடியும்.
திருதராஷ்டரன் வகையராக்களை அநியாயக்காரர்கள், அரக்கர்கள், அதர்மகாரர்கள் என வர்னிக்கப்பட்டனர். பாமர மக்களும் இதை
நம்பினர், தன் இன மக்களை தாங்களே எதிர்ப்பதா எனும் குறைந்த
பட்ச இன உணர்வு சிந்தனை கூட இல்லை. இன்றளவும்
இல்லை என்பது தான் சோகம்.)
குழந்தையை என்ன செய்யலாம் ராஜமாதாவான சத்தியவதி பீஷ்மனை
ஆலோசனை கேட்கிறாள். ‘அரசனின் ஆணை என்னவோ அதுவே ஆண்டவனின் ஆணை
ராஜமாதா,முடிவு எடுக்கும் அதிகாரத்தை மன்னரிடமே விட்டு விடுவோம்’ என பீஷ்மன் கூறுவதைக் கேட்ட ராஜமாதா சமாதானமடைந்தாள்.
குழந்தையை திருதராஷ்ட்ரன் கையில்
ஒப்படைக்கப்பட்டது.தவமிருந்து தான் பெற்ற குழந்தையை கொல்ல மனம் வரவில்லை. ராஜமாதாவை
அருகில் அழைக்கிறான் திருதராஷ்ட்ரன்.அவனுக்கு சந்தேகம் தானும் குருடன்,தனக்கு பிறந்த குழந்தையும் குருடாக இருக்குமோ?,
‘ராஜமாதா! என் குழந்தைக்கு கண் தெரியுமா?
இல்லை என்னைப் போல் குருடானாகிவிடுவானா? பார்த்து
சொல்லுங்கள்’
‘குழந்தை உன்னைப்பார்த்து சிரிக்கிறது
திருதராஷ்ட்ரா’ இதைக் கேட்ட திருதராஷ்ட்ரன் பூரிப்படைந்தான்.’
தன் மகன் சகல பாக்கியங்களையும் பெற்று பெறுவாழ்வு வாழ்வான்; என வாழ்த்துகிறேன். இவனுக்கு துரியோதனன்,என
பேர் சூட்டுகிறேன்’
(அது சரி, சத்ரியர்களுக்கு, முனிவர்,ரிஷி மற்றும்
புரோகிதர் இவர்கள் மீது மட்டும் மதிப்பும் மரியாதையும் ஏற்படுகிறதே ஏன்?ராமாயண மற்றும் மகாபாரத கதைகள் முழுக்க இந்த நிஜங்களை காணலாம். சத்ரியர்களுக்கு
மிருகங்களாக இருந்தாலும், எதிர்க்கும் மனிதர்களாகட்டும்
எதிர்க்க வேண்டும்,அடக்க வேண்டும், வெற்றிகொள்ள
வேண்டும் அல்லது செத்து மடிய வேண்டும் எனும் வேட்கை இருந்து கொண்டே இருக்கும்,இது ரத்தத்தில் ஊறிய குணம்.
இதை நன்கு உணர்ந்தவர்கள் பிராமணர்கள், பாமர மக்களை தன்னலத்தேட்டம்(exploiting humanbeings) கொண்டவர்கள்,அதே நேரத்தில் அவர்களின் குடும்ப நலனில் அக்கறை கொண்டவர்கள் போல்
நடிப்பர். தன் இனம்,தன் சொந்தம்,அந்நிய
இனத்தை எதிர்க்கும் குணம்,அடங்கிப்போகிறவர்களை காப்பாற்றும்
குணம் ,சம்பரதாயம் சடங்கு என எண்ணாமல் பகுத்தறிந்து
செயல்படும் விதம்; இதுவும் சத்ரிய குணம்தான்,
ஆனால் இந்த குணம் கொண்டவர்களை அரக்கர் இனம் அல்லது ராட்சச
குணம் என சத்ரிய இனமக்களாகவே வேறுபடுத்தினர். இன்றும் இது காணப்படுகிறது. ராமாயணத்தில், ராவணன், .மாகாபாரதத்தில், கம்சன்,
இரணியன், திருதராஷ்ட்ரன், துரியோதனன், ஜராசந்தன், சிசுபாலன், போன்றோர், இது போன்ற சுய சிந்தனையாளர்கள் வரலாறு
படைத்தனர். அந்நாள் முதல் இந்நாள் வரை பெண்களில் யாரும் கடவுள் கொள்கைகளை
எதிர்த்தவர்களாக (பகுத்தறிவாளர்களாக) வாழ்ந்ததே இல்லை. உலகில் எங்கும்
காணமுடியாது. ஏன்?)
பாண்டுவிற்கு,குந்தி மற்றும் மாதுரி மூலம் மொத்தம் 5
புதல்வர்கள் ஆனார்கள்.இவர்களே பஞ்ச பாண்டவர்கள் என்றழைக்கப்பட்டனர். குந்தி
அய்வரையும் தன் புதல்வர்களாக நேசித்தாள்;அப்படியே
பராமரித்தாள்.ஆனால் மாதுரி தன் வயிற்றில் பிறந்த நகுலன்,
சகாதேவன் ஆகிய இருவரை மட்டுமே தன் குழந்தைகளாக நேசித்தாள்.
அஸ்த்தினாபுரம் அரண்மனையில் ஆனந்தம் தழுவியது.ஆனால் வெகு
நாட்கள் நீடிக்க வில்லை.சுய சிந்தனையற்ற திருதராஷ்ட்ரனும் காந்தாரியும் சகுனியின்
சூழ்ச்சி வலையில் விழுந்தனர்.திருதராஷ்ட்ரன் அரசனாவதற்கு சாஸ்த்திர சம்பரதாயங்கள்
ஏற்க வில்லை.காரணம் அவன் ஒரு பிறவிக் குருடன்.
கண்பார்வைதான் இல்லையே தவிற எதையும் நுணுக்கமாக காலை
எடுத்துவைக்கும் பழக்கமுள்ளவன் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என சரியாக
கணிக்கத்தெரிந்தவன்.
குருடன் என்றால் எதற்கும் உதவாதவன் என யாரும் முடிவு
கட்டக்கூடாது என்பதில் கவனமாக செயல்படுவதில் புத்திசாலி. வஸ்த்திரம் கொண்டு
நேத்ரம் மறைத்த தன் மனைவி வியக்கும் அளவுக்கு, ஒருநாள் தன்
மனைவியை தன் முன் நிறுத்தி அவள் தலைமேல் ஒரு கனியை வைத்து தன் வாளால் அக்கனியை
இரண்டாக பிளந்தான்,மனைவிக்கு யாதொரு சேதமும்
ஏற்படவில்லை.இதனைக் கண்ட அரண்மனை வாசிகள் அசந்து விட்டனர்.
அழகும்,அறிவும்,வீரமும் ஒரு
சேரப் பெற்ற காந்தாரி,காந்தார நாட்டின் இளவரசி.தன் தமக்கையை
எண்ணி நாளும் பூரிப்படைந்த சகுனி, ஒரு குருடனுக்கு மனைவி
யானதை அவனால் கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை. குருட்டு மைத்துணனை உறவாடிக்
கெடுப்பதில் தன் வாழ் நாளை அஸ்த்தினாபுர அரண்மனையில் செலவிடுகிறான்.
சகுனியின் கெடுமதி திட்டங்களை பீஷ்மன் நன்கு
அறிவான்.ஆயினும், தன் மகனின் மனைவியின் தம்பி என்கிற
முறையில் சகுனிக்கு உரிய மரியாதை தருவதில் தவறுவதில்லை.
திருதராஷ்ட்ரனுக்கும் காந்தாரிக்கும் சகுனியின் பேச்சும்
நடவடிக்கையும் சில நேரங்களில் எரிச்சல் ஊட்டுவதாக அமைந்தாலும்,தங்கள் எதிர்காலம் சிறப்படைய சகுனி சொல்லும் யோசனைகளை நிராகரிக்க
முடியவில்லை.
தினமும் திருதராஷ்ட்ரன் பிள்ளைகள் சக்ரவத்தியின் பிள்ளைகள்
எனும் நினைப்பில் நடத்தும் ஊர் தகராறுகள் அரண்மனைக்கு வந்த வண்ணம் உள்ளன.100
பிள்ளைகள் என்பதால் ஒவ்வொரு பிள்ளைகள் மீதும் தனித்தனியக கவனம் செலுத்த
முடியவில்லை.துரியோதனன் வைத்தே சட்டம் என்று ஆகிவிட்டது.
ஒரு நாள் மீன் சந்தையில் தகராறு விளைவித்தனர்.அவர்கள் மீன்
கூடைகளை போட்டு உடைத்தனர்.இந்த தகராரில் துரியாதனனுக்கு சிறு காயம் ஏற்பட்டது. கண்களற்ற
திருநராஷ்ட்ரனுக்கு காயங்களை கண்கூடாக பார்க்க முடியவில்லை.
இருப்பினும் பிள்ளையின் உடலிலிருந்து ரத்தம் சிந்தியது
என்பதை கேட்ட திருதராஷ்ட்ரனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.திருதராஷட்ரன் உடல்
நடுங்கியது,‘சத்ரியனான என் ரத்தம் சிதறி மண்ணில் படுவதா?அதற்கு காரணமானவர்களை அழைத்து வாருங்கள், அவர்களுக்கு
தக்க தண்டனை வழங்க வேண்டும்’ என அரசவையில் கர்ஜித்தான்.
மீனவர்கள் அழைத்து வரப்பட்டனர். ‘அஸ்த்தினாபுரத்தின் வருங்கால மன்னன் துரியோதனன் அவன் உயிருக்கே
உத்தரவாதமில்லை என்கிறபோது அதற்கு காரணமானவர்களுக்கு மரண தண்டனை வழங்கி
தீர்ப்பளிக்கிறேன்’ என்று அவையில் சொன்ன போது தீர்ப்பைக் கண்டு
அனைவரும் நடுங்கிவிட்டனர்.
ராஜமாதா சத்தியவதி பீஷ்மனிடம் முறையிடுகிறாள், ‘பீஷ்மா,திருதராஷ்ட்ரனுக்கு நீ எடுத்துச்
சொல்லக்கூடாதா?’
அப்போது பீஷ்மன்,
‘அரசன் இட்ட கட்டளை ஆண்டவன் இட்ட
கட்டளையாகும்,இதில் நாம் தலையிட முடியாது ராஜமாதா!’ என பீஷ்மன் கூறுவதைக் கேட்ட,ராஜமாதா,
‘நான் அந்த காயத்தை பார்த்தேன், சிறு காயம்தான் உடலில் பட்டுள்ளது அதற்கு இவ்வளவு பெரிய தண்டனை கூடாது’
என திருதராஷ்ட்ரனிடம் பாட்டி என்கிற முறையில்
வேண்டுகிறாள்.
இந்த நேரம் பார்த்து, சகுனி,‘ராஜமாதா மீனவ
இனம் என்பதால் தன் இன மக்களை காப்பாற்ற
நினைக்கிறார்’ என்று இறங்கி வந்த திருதராஷ்ட்ரன் மனதை திசைத்
திருப்புகிறான். எனினும் தண்டனையின் அளவு அதிகம் என்பதை சூழ்நிலையை கொண்டு உணர்ந்த
திருதராஷ்ட்ரன்,அவர்கள் அனைவரையும் நாடுகடத்த
உத்ரவிடுகிறான்.இருப்பினும் சத்தியவதி மனம் நிம்மதி அடையவில்லை.
விதுரன் ஆலோசனையுடன் காட்டில் தவ வாழ்க்கை வாழும் பாண்டுவை
மீண்டும் அஸ்த்தினாபுரம் அழைத்துவந்து அவனை அரியணை ஏற்ற நினைக்கிறாள்.
***
22-பாண்டு,மாத்ரி மரணம்
கானகத்தில் 5குழந்தைகளும் பாண்டுவின் அறவழி சிந்தனையில்
வளர்கின்றன.ஒரு நாள்,குழந்தைகள் குதுகலாமாக விளையாடிய மாலை
நேரத்தில் மாதுரி பாண்டுவோடு சல்லாபிக்க விரும்புகிறாள். அதற்கு தோதாக பாண்டுவை
தனிமை இடத்தில் அழைத்துச் செல்கிறாள்.இந்த செய்தியை நகுலன்,ஓடிவந்து
சமயல் வேலையில் ஈடுபட்டிருந்த குந்தியைப் பார்த்து கூறுகிறான்.
குந்திக்கு கானகத்தில் பாண்டுவிற்கு முனிவர் இட்ட சாபம் நினைவுக்கு வருகிறது. பதறிப்போன
குந்தி கணவர் பாண்டுவைத் தேடி அலைகின்றாள்.சத்யவதியும் விதூரனும் காடெல்லாம்
அலைந்து திரிந்து பாண்டு இருக்கும் இடம் கண்டறிந்தனர்.மூவரும் கண்ட காட்சி,
அவர்களுக்கு பேரதிர்ச்சி உண்டாக்கியது.பாண்டுவும் மாதுரியும் கட்டிப் புரண்ட
நிலையில் மரணத்தை தழுவினர்.
(மனிதர்கள் இனப்பெருக்க உணர்வு நிலை என்பது உலகிலேயே பேரின்ப
நிலையை அடையும் ஒரு நிலை.நிலையற்ற மனித வாழ்வில்,அதுமட்டுமே
நிலை.ஆணும் பெண்ணும் இணைந்த நிலையில் இருக்கும் போது அதை பிரிக்க நினைப்பவர்கள்
வாழ்வில் பெரும் துயரத்திற்கு ஆளாவார்கள் என்பதை உணர்த்தவே இந்த பாண்டு மாதுரி
கதையை இங்கே விவரித்துள்ளார்கள்.
மனிதர்கள்,மிருகங்கள் புணர்வதை காணலாம் ஆனால் அவைகளை பிரிக்க
முயலுபவர்கள்,மற்றும் மனிதர்கள் புணர்வதை கண்ணால் காண முயற்ச்சிப்பவர்கள் ஆகிய இரண்டுவகை மனிதர்களையும் பெரிய பாவிகள்
என்று உப நிடதங்களில் சேர்க்கப்பட்டது.
இன்றளவும் மக்களால் இந்த தர்ம சிந்தனை பராமரிக்கப்படுகிறது.)
அஸ்த்தினாபுரத்தில் சகுனி தன் தமக்கை காந்தாரி மற்றும்
திருதராஷ்ட்ரனை அழைத்து,‘ சத்தியவதி விதுரனுடன் காட்டுக்கு ஏன்
சென்றாள் தெரியுமா?பாண்டுவின் புதல்வர்களை அழைத்து வந்து
அவர்களில் தர்மனை அஸ்த்தினாபுரத்து அரசனாக அமரச் செய்ய வேண்டும் எனும் நோக்கமே!’
இதைக் கேட்ட திருதராஷ்ட்ரன்,
‘இதை நான் ஏற்க மாட்டேன்,என் மகன் துரியோதனனை நான் அரியணை ஏற்றுவேன்’ என
சூளுரைக்கிறான்.
****************
பாண்டு மரண சம்பவம் ராஜமாதாவை வெகுவாக பாதித்தது,ஏமாற்றம் அடைந்த சத்தியவதி தான் துறவரம் மேற் கொள்ளப் போவதாகவும், இந்த காட்டில் உள்ள முனிவரின் ஆசிரமத்தில் இனி எஞ்சிய காலத்தை கழிக்க விரும்புவதாகவும் விதுரனிடம்
கூறுகிறாள்.தான் அணிந்திருந்த ராஜமாதாவுக்குரிய மணி மாலையை கழட்டி கொடுத்து
விடுகிறாள்.
மேலும் பாண்டுவின் அய்ந்து புதல்வர்களில் மூத்தவனான
யுதிஷ்ட்ரனை அஸ்த்தினாபுரத்து எதிர்கால மன்னனாக
அரியணை அமரச் செய்யும் பொறுப்பை விதுரனிடம் ஒப்படைக்கிறாள்.
*******
குந்தியுடன் அய்ந்து புதல்வர்கள் மற்றும் விதுரன் ஆகியோர்
அஸ்த்தினாபுரம் அரண்மனையில் நுழைகின்றனர். பீஷ்மன், திருதராஷ்ட்ரன்,
காந்தாரி எதிர்கொண்டு அழைக்கின்றனர். அப்பொழுது, குந்தி,
‘நான் உங்களிடம் தஞ்சமடைந்துள்ளேன், எனக்கும் என் அய்ந்து புதல்வர்களுக்கும் ஆதரவளியுங்கள்’ என்று சொல்லிவிட்டு பீஷ்மனின் பாதம் தொட்டு வணங்குகிறாள்.
பீஷ்மன்,‘அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, அஸ்தினாபுரத்தின் அரண்மனையில் உனக்கும் உன் புதல்வர்களுக்கும் அதிகாரம் உள்ளது’ எனக் கூறுகிறான்.
பின்பு குந்தி, திருதராஷ்ட்ரன், காந்தாரி
ஆகியோரின் பாதம் தொட்டு வணங்குகிறாள். அவர்களும் வாழ்த்துகின்றனர்.
பின்பு தன் பிள்ளைகளையும் பெரியவர்கள் பாதம் தொட்டு வணங்க
வேண்டும்,என குந்தி சொன்னவுடன்,பாண்டவர்களும் தன் கொள்ளுத் தாத்தா,பெரியப்பா,பெரியம்மா ஆகியோரின் பாதம் தொட்டு ஆசி பெற்றனர்.
(திட்டமிட்டு,குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளை
பெற்றதினால் குந்தி தன் அய்ந்து புதல்வர்களையும் மக்களால் நேசிக்கப்படும் பிள்ளைகளாக
உருவாக்க முடிந்தது.ஆனால் எதையும் திட்டமிடாமல், ஆத்திரமும்,
பேராசையும் மனதில் கொண்டு முரட்டுத் தனத்தையே மூலதனமாக ஆக்கி
திருதராஷ்ட்ரனும் காந்தாரியும் எண்ணற்ற பிள்ளைகள் பெற்றதினால் கட்டுப்பாட்டுடன்
பிள்ளைகளை வளர்த்தெடுப்பதில் பெரும் சிரமத்திற்கு ஆளானதை மகாபாரதம் கதையை
முழுவதும் படித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
தான் பெற்ற குழந்தைகளை தனித்தன்மையுடன் வளர்க்க வேண்டும் என
ஒரு தாய்க்குறிய தன்னலத் தேட்டை குந்தியிடம் நிறைந்து காணப்பட்டது. விட்டுக் கொடுக்காத
குணம்,தவறுகளை உணரத் தெரியாத இனம்,என்ன தவறு செய்கிறோம் என புரிந்து கொள்ள முயற்சிக்காமல் தான் இழைத்த
தவறுக்கு மன்னிப்பு கோரத் தெரியாத இனம்,சக மனிதனையும்
எதிரியாக்கி அவனுக்கு அடிபணிய மறுக்கும் குணம் இவையெல்லாம் சத்தரிய குணங்கள்.இதனை
நன்கு உணர்ந்த யாதவ குல குந்தி,அத்தகைய குணங்கள் தான் பெற்ற
ஐந்து பிள்ளைகளுக்கும் நேரக்கூடாது என எண்ணினாள்.
அதற்கு தனிக் குடித்தனம் தான் லாயக்கு என தீர்மானித்தாள்.ஆனால்
ஒரே அரண்மனையில் தன் மூத்தோர் இருக்கையில் தனிக்குடித்தனம் சாத்தியமில்லை என்பதையும் குந்தி அறிவாள்.)
இந்நிகழ்ச்சிக்குப் பின் பாண்டவர்களை, துரியோதனன் மற்றும் அவன் தம்பிமார்கள் எதிர்கொண்டு நிற்கின்றனர். அப்பொழுது
துரியோதனன்,
‘நாங்கள் இந்நாட்டு மன்னரின் இளவரசர்கள்
எங்கள் முன் நாட்டு மக்கள் அணைவரும் அடி பணிய வேண்டும்.’ என
கூறுவதைக் கேட்ட பீஷ்மன்,
‘துரியோதனா! அவ்வாறு பேசுதல் தவறு, உங்களோடு சேர்த்து பாண்டவர்கள் மொத்தம் 105 சகோதரர்கள். உங்களில் மூத்தவன்
தர்மன். குடும்பத்தில் மூத்தவர்களை வணங்குவது, சத்திரியர்களின்
மரபு.எனவே நீங்கள் அனைவரும் தர்மனை வணங்குங்கள்.’ என
கட்டளையிடுகிறான்.
துரியோதனன் முதலில் வேண்டா வெறுப்பாக தன் இடது கரத்தால்
தர்மனின் பாதம் தொட்டு வணங்குகிறான். மற்றவர்களும்
அவ்வாறே செய்கின்றனர். தன் தாய்மாமன் சகுனியின் ஆலோசனையின் பேரில்,
‘பங்காளிப் பிள்ளைகளோடு விரோதம்
பாராட்டக்கூடாது, நட்புமுறையில் அவர்களை பழிவாங்க வேண்டும்’
எனும் விஷ விதையை துரியோதன்
மனதில் விதைக்கிறான்.
இதனை உள் வாங்கிக்கொண்ட துரியோதனன், முதலில் தன்னை எப்பொழுதும் முறைத்துக் கொண்டிருக்கும் பீமனை உறவாடி
கெடுக்க நினைக்கிறான்.
23-பீமனின் மரணம்
எப்பொழுதும் தின்று கொண்டிருக்கும் பீமனைப் பார்த்து, ‘உனக்கு நல்ல விருந்து வைக்கிறேன் வா’ என அழைக்கிறான்,
ஊதுரியோதனன்.
வயிறுபுடைக்க உணவைக் கொடுத்து பீமனை உல்லாசமாக சென்று வரலாம் என அழைத்து கொண்டு ஒரு
கிணற்றில் தள்ளி விடுகிறான்.
சகுனியும் துரியோதனனும் பீமன் அணிந்திருந்த விலையுயர்ந்த
ஆபரணக்களை எடுத்துக் கொண்டு அரண்மனைக்கு திரும்புகின்றனர். பீமனைத்தேடி அலைந்த
குந்தி துரியோதனன் பீமனைக் கொன்றிருக்கலாம் என யூகிக்கிறாள்.
இருந்தாலும் யாரை நொந்து கொள்வது ?தன் பிள்ளை பீமனை உயிருடன் மீட்பதில் தோல்வி கண்டதை பார்த்த அரண்மனைப்
புரோகிதர்கள்,அவன் இறந்திருக்கலாம் அவன் ஆன்மா சாந்தியடைய
சில சடங்குகள் செய்ய வேண்டும் என ஆலோசனை கூறுகின்றனர்.
அதாவது ஒருவன் இறந்துவிட்ட பிறகு அவன் இறந்த 13-ம் நாள்
பிராமணர்களுக்கு விருந்து அளிக்க வேண்டும்.அதற்கு பிரம்ம விருந்து என்று
பெயர்.மனிதர்களின் வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் இயற்கையானது ஒன்றுதான். அதில்
சாஸ்த்திரங்களை புகுத்தி,சடங்குகளை நிரப்பி அர்த்தமுள்ளதாக ஆக்க
வேண்டும்.அதன் மூலம் பிராமணர்கள்,தங்கள் வாழ்வாதாங்களை பெருக்குவதற்கு கணக்கு போட்டனர்.அன்று போட்ட கணக்கு
இன்று வரை அது சடங்கு,சம்ப்ரதாயம் என தொடர்வதுதான்
சோகம்.
பீமன் கிணற்றிலிருந்து தப்பிக்கிறான்.13 நாட்கள் ஒரு
அரண்மனைப் புரோகிதன் வீட்டில் தங்கி பின் பிரம்ம போஜனத்திற்கு அழைத்து
வரப்படுகிறான். அசுரத்தனமாக உணவுண்ணும் ஒருவனை அனைவரும் உற்று நோக்குகின்றனர், அவனே பீமன் என உணர்கின்றனர். எப்படி உயிர் பெற்றான் என அனவரும் வினவ தன்னை
ஒரு நாகப்பாம்பு காப்பாற்றியதாக கூறுகிறான்.
அஸ்த்தினாபுரத்தில் இனி தங்கி இருந்தால் தன் பிள்ளைகளுக்கு
பாதுகாப்பு இருக்காது என எண்ணி குந்தி,அரண்மனையை விட்டு பிள்ளைகளுடன்
வெளியேறுகிறாள். அந்நேரத்தில் பீஷ்மன் குந்தியை தடுத்து நிறுத்துகிறான்,
“சந்திரகுலத்தை அஸ்த்தினாபுறத்தில் நிலை நிறுத்த அரும்பாடு
பட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் சிறந்த பண்புகளைப் பெற்ற பாண்டுவின் புதல்வர்கள்
அஸ்த்தினாபுரத்தை விட்டு நீ வெளியேறினால்,எல்லாம் வீணாகிவிடும்”,என பீஷ்மன் குந்தியைப் பார்த்து,
‘அரண்மனையை விட்டு போகவேண்டாம்,’என வேண்டுகோள் விடுக்கிறான்.
சந்திரகுலத்தின் மூத்தவரும் சகல பராக்கிரமங்களையும் பெற்ற
பீஷ்மன் வார்த்தைகளை யாரும் தட்ட முடியாது;குந்தியும் அவன் கோரிக்கைக்கு இணங்கினாள்.சந்திர
குல மன்னர்களில் திருதராஷ்ட்ரன் மூத்தவன்,அவனுக்குப்பின்
அரியணை ஏறும் தகுதி, இளையவன் பாண்டுவின் மகனான யுதிஸ்ட்ரனுக்கு
(தர்மன்)தான்.
சத்ரியகுலத்தில் மூத்தவனுக்கு குழந்தை பிந்தி பிறந்ததால், இளையவன் பிள்ளை மூத்தவன் என்கிற முறையில், பட்டத்துக்கு
உரியவனாகிறான். அந்தவகையில் பாண்டுவின் மகனான தர்மனுக்கே இளவரசன் பட்டம் சூட்ட
வேண்டும்.
இந்த உண்மையை திருதராஷ்ட்ரனுக்கு பீஷ்மன்
எடுத்துரைக்கின்றான்.ஆனால் தன் மகனுக்கே இளவரசர் பட்டம் சூட்டவேண்டும் என
பிதாமகரிடம் கோரிக்கை வைக்கிறான் திருதராஷ்ட்ரன்‘.துரியோதனனுக்கு,பெரியவர்களை மதிக்கும் குணம் இல்லை’ .என்கிறான்
பீஷ்மன்.
அப்போது திருதராஷ்ட்ரன்,‘அவன் பாலகன்
அவனுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை அரியணை ஏற்றினால் காலப்போக்கில் எல்லாம்
சரியாகிவிடும்’
‘பக்குவம் இல்லா பாலகனுக்கு எப்படி முடி
சூட்டுவாய்?’ என பீஷ்மன் வினவியபோது,
‘பிதாமகரே என்னை மன்னியுங்கள்,எனக்கு புத்திர பாசம் கண்ணை மறைக்கிறது.என்ன செய்வதென்றே தெரியவில்லை’
24-கவுரவர்கள் குருகுல வாசம்
அந்நேரத்தில் பீஷ்மன், திருதராஷ்ட்ரனிடம், ‘உன்னுடைய
மகன்கள் அனைவரும் 12 ஆண்டு காலம் துரோணாச்சாரியரிடம் கல்வி பயில வேண்டும்.அந்த கால
கட்டத்தில் உமக்கும் உன் மகன்களுக்கும் தொடர்பு இருக்க கூடாது.’எனும் நிபந்தனையை விதிக்கிறான்.105 பேரும் துரோணரின்
குருகுலத்தில் சேர்க்கப்படுகின்றனர்
25-சகுனி வெளியேற்றம்
அஸ்த்தினாபுரம் அரண்மனையில் எப்பொழுது சகுனி காலை வைத்தானோ, அப்பொழுதிலிருந்து, அஸ்த்தினாபுரத்தில் தினமும்
பிரச்சினைகள், எதாவது ஒரு வகையில் வந்த வண்ணம் உள்ளன. இந்த
உண்மையை பீஷ்மன் நன்கு உணர்ந்துள்ளான். ஆனால் வீட்டுக்கு வந்த விருந்தினரை எப்படி
வெளியேற்றுவது?இதில் நீண்ட நாள் குழப்பம் பீஷ்மனுக்கு
இருந்தது.
ஒற்றர்கள் மூலம் காந்தார மன்னனுக்கு பீஷ்மன் தகவல்
அனுப்புகிறான்,காந்தார இளவரசனான சகுனிக்கு முடிசூட்ட
ஏற்பாடு செய்யுமாறு ரகசியமாக காய் நகர்த்துகிறான்.சகுனிக்கே தெரியாமல் காந்தார
தூதுவர்கள் அஸ்த்தினாபுரம் வந்துள்ளதை கண்ட சகுனிக்கு அதிர்ச்சியும்
ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.
அப்பொழுது, பீஷ்மன், சகுனியைப் பார்த்து,
‘காந்தார இளவரசே! உனக்கு பொறுப்புகள் காத்துக் கொண்டிருக்கிறது,உடனே காந்தாரம் சென்று முடி சூட்டிக் கொள்ளவும்,அதற்கான
ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன, விரைந்து செல்.’ என உரத்துக் கூறுவதைக் கேட்ட சகுனி
‘வீட்டுக்கு வந்த விருந்தினரை வலிந்து
வெளியேற்றுவது சத்திரிய குலத்திற்கு
அழகல்லவே?’
என சகுனி கூறுவதைக் கேட்ட பீஷ்மன்,
‘இளவரசே! தங்களை வலிந்து வெளியேற்ற வில்லை,சிறப்பான ஏற்பாடுகள் செய்து விருந்தினரை வழி அனுப்புகிறேன்.’ இதைக் கேட்ட சகுனி வாயடைந்து போனான். அஸ்த்தினாபுரத்தை விட்டு வெளியேற
தயாராகிவிட்டான்.
திருதராஷ்ட்டரனுக்குப் பிறகு அஸ்தினாபுரத்தின் அரண்மனையின்
ஆட்சிக் கட்டிலுக்கு, அடுத்த வாரிசு யார் என்பதில் போட்டி
நிலவுகிறது.அப்பொழுது பீஷ்மன்,
‘முதலில் 105 பிள்ளைகளும் குருகுலம் சென்று ,
12 ஆண்டுகள் பயில வேண்டும் அதன்பிறகு அரண்மனை திரும்ப வேண்டும்.அப்பொழுது தகுதி பெற்ற இளவரசர்களில் ஒருவரை அரியணை ஏற்றலாம்’ என்று அவையில் எடுத்துரைக்கிறான்.105 புதல்வர்களும் பெரியவர்களிடம் பாதம்
தொட்டு வணங்கி வாழ்த்துப் பெற்று,அனைவரும் குருகுலம்
சென்றனர்.
துரோணாச்சாரியின் குருகுலத்தில் 105 புதல்வர்களுக்கும்,மன்னர் ஆட்சி முறையில் மக்களின் குறைதீர்க்க வல்ல ஆளுமை,மற்றும் எதிரியை போர்க்களத்தில் எப்படி சந்திப்பது,போர்
தளவாடங்களை எப்படி பயன் படுத்துவது போன்ற மன்னர்குல பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
குறிப்பாக அபோதைய இந்திய போர்க் களத்தின் புதுமையான
ஆயுதமான வில்வித்தையை அனைவருக்கும் பயிற்றுவிக்கப்பட்டது. இதில் தலை சிறந்த
மாணவனாக அர்ச்சுனன்,தேர்வாகிறான்.இது துரியோதனனுக்கு பொறாமை
ஏற்படுத்துயது.
26-ஏகலைவன்
அர்ச்சுனனின் தாக்குதல் குறியீட்டை முன்னமே ஒரு அம்பு
தாக்கியதை கண்ட துரோனாச்சாரிக்கு
ஆச்சர்யம்.இவ்வளவு துல்லியமான தனூர் வித்தையை பயன்படுத்தியவன் யாராக இருக்கும்? என அனைவரும் தலையை பிச்சிக் கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு சிறுவன் அங்கே வெளிப்படுகிறான்.அவன் அந்த வனத்தில் வாழும் ஒரு வேடனின்
மகன் எனவும் அவன் பெயர் ஏகலைவன் எனவும், தந்தையின் பெயர் நிஷாதன்
எனவும் அவன் வாயிலாக துரோணர் அறிகிறான்.
இந்த தனூர் வித்தையை எவ்வாறு ஏகலைவன் கற்றான் என துரோணர்
வினவியபோது, ஏகலைவன் அந்த வனத்தின் அடர்ந்த பகுதிக்கு அழைத்துச் செல்கிறான்.அங்கே
துரோணரின் சிலை இருப்பதைக் கண்டு துரோணர் ஆச்சரியப்பட்டான், ‘இங்கே எதற்கு என் சிலையை வைத்துள்ளாய்?
‘தாங்கள் கவுரவர்களுக்கு சொல்லித்தரும் கலையை
மறைந்திருந்து,உள் வாங்கி கிரகித்துக்கொண்டு நான் நிறுவிய
தங்கள் சிலை முன் சமர்பிப்பேன்’ மேலும் ஏகலைவன், ‘தங்களை என் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டேன்’
அதிர்ச்சி அடைந்த துரோணர்,தன்னுடைய அரிய
கலையான தனுர் வித்தையை குருதட்சணை தராமல் ஒருவன் பெற்றது எவ்வாறு நியாமாகும்?இது துரோணருக்கு ஏகலைவன் இழைத்த துரோகமாக நினைக்கிறார்.
கல்வி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டு பிரச்சினை அப்பொழுதே
ஆரம்பித்து விட்டது. ‘கல்வியை மறைந்திருந்து கற்ற ஒரு இழி
மகனுக்கு இவ்வளவு திறமை உள்ளதென்றால், முறையாக நம்மை போல்
குருகுலம் சேர்ந்து கல்வி பயின்றிருந்தால் இன்னும் எவ்வளவு வித்தையை கற்றிருப்பான்’என துரியோதனன் ஆச்சர்யப்படுகிறான்.
இவனை நட்பு கொண்டு தாம் அஸ்தினாபுரம் அழைத்துச் சென்றால்,தன்னுடைய எதிரியான அர்ச்சுனனை ஒழிக்க இவன் நமக்கு பயன் படுவான் என
துரியோதனன் நினைக்கிறான். துரோணரைப் பார்த்தவுடன், ஏகலைவன்
தன் மானசீக குருவை பாதம் தொட்டு வணங்கினான்.துரோணருக்கு,
அவன் தலையைத் தொட்டு ஆசிர்வதிக்க மனம் மறுக்கிறது.
‘ஒரு நீசன் தன் வித்தையை தனக்கு தெரியாமல்
கற்றானா?’ துரோணருக்கு சீரணிக்க முடியவில்லை; ஏகலைவனுக்கு ,தகுந்த தண்டனையை வழங்க மனதுக்குள்
கணக்குப் போட்டான்.
தன்னை ஆசிர்வதிக்க தன் மானசீக குரு தயங்குவதை எண்ணி ஏகலைவன்
கலக்கமுற்றான்.அப்பொழுது,துரோணர்,
‘ஏகலைவா! எனக்கு தெரியமல் நீ கற்ற வித்தைக்கு
குரு தட்சணையாக உனது வலதுகரத்தின் கட்டை விரலை எனக்கு காணிக்கையாக்குவாயாக!’
என தன் வயிற்றறெரிச்சலை வெளிப்படுத்தும் விதமாக நிபந்தனை
விதித்தான். ஏகலைவன் சற்றும் சிந்திக்காமல் தன்னிடம் உள்ள சிறு கத்தியை இடது
கையில் பிடித்து வலது கரத்தின் கட்டை விரலை துண்டித்தான்.
ஒரு நீசன் என குருகுல வாசிகளால் சித்தரிக்கப்பட்டவனின்
துணிச்சலும் குரு பக்தியும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ஒரு நாட்டின் அரசன் அவன் குடி மக்களில் யாரிடம் எந்த திறமை
உளதென கண்டறிந்து அதை இல்லாத மற்ற குடிகளுக்கு பரவச்செய்வதே,அவன் ஒரு நேர்மையான அரசன் என அவன் குடிகளால் புகழப்படுவான்;இதற்கு அந்நாட்டு அரசன் இட ஒதுக்கீடு முறையை நாடு முழுக்க அமல் படுத்த
வேண்டும்.இந்த இட ஒதுக்கீடுமுறை, இன்னும் முழுமைப் பெறவில்லை
என்பது தான் இன்றளவும் உள்ள சோகம்.
27-குரு குல வாசத்தில் சேர ~சாதி’
தான் தகுதி
இதே கால கட்டத்தில்,கர்னன் தன் தனூர் வித்தையை வெளிப்படுத்த
விரும்புகிறான். துரோணரின் குருகுலத்தில் சேர விரும்புகிறான். துரியோதனனும் நண்பன்
எனும் முறையில் கர்னனை குருகுலத்தில் சேர்த்துக்கொள்ள, துரோரணரிடம்
விண்ணப்பிக்கிறான்.
துரோணரோ, சத்ரியர்களுக்கு மட்டுமே தான் தனூர்
வித்தையை சொல்லித்தர கடமைப்பட்டுள்ளேன், ‘நீ சத்ரியனா? அப்படியானால் உன் தாய் தந்தையர் யார் எனக் கூறு?மற்ற
இனத்தவருக்கு நான் சொல்லித்தர முடியாது’ என கர்னனைப்
பார்த்து
திட்டவட்டமாக கூறிவிட்டான். கர்னனோ, ஆர்வமுள்ளவர்கள், யார் கல்வி பயின்றால் என்ன? இங்கே சாதி வேறுபாட்டுக்கு என்ன வேலை? என கர்னன்
கேட்கும் கேள்விக்கு துரோரணரின் பதில் எங்கும் பதியப்படவில்லை. ஒரு வேளை இக்கால
அரசியலுக்கு துரோரணரின் பதில் ஒத்துவராது என சமுக ஆர்வலர்கள் அந்த உரையாடலை நீக்கிவிட்டுருப்பார்கள்,
எனத் தோன்றுகிறது.
கர்னன் இறுதியாக,‘நீங்கள் எனக்கு சொல்லித்தர வில்லையென்றால்
வேறு குருவே உலகில் இல்லையா? நான் எப்படியும் இந்த தனுர்
வித்தையை முறையாக பயின்று வருவேன்’என சபதமிட்டு, அங்கிருந்து வெளியேறி, அனைவருக்கும் மூத்த குருவான
பரசுராமனிடம் சென்று விண்ணப்பிக்கிறான்.
பரசுராமன், அந்தணர்களுக்கு மட்டுமே சகல வித்தைகளையும்
பயிற்றுவிப்பான், மற்ற இனத்தவரை தன் குருகுலத்தில்
சேர்க்கமாட்டான். இதை நன்கு உணர்ந்த கர்னன், தான் அந்தணர்
வேடமிட்டு பரசுராமனிடம் சென்று தனுர் வித்தையை கற்றுத்தரும்படி வேண்டுகிறான்.
‘உண்மையிலேயே நீ அந்தணன் என்றால் இன்றே நீ
என் குருகுலத்தில் சேரலாம்’என கர்னனைப் பார்த்து பரசுராமன்
உத்தரவிடுகிறான்.
(இனம் பார்த்து ,மொழி
பார்த்து,குணம்பார்த்து அந்த கால பிராமணர்கள் இந்தியாவில்
உள்ள மக்களுக்கு கல்வி பயிற்று வித்தார்கள், என்பதற்கு
ஏகலைவன்,மற்றும் கர்னனின் கதைகள் சான்றாக விளங்குகின்றது.
இன்றும் இனவாரி ஒதுக்கீட்டிற்காக ஒடுக்கப்பட்ட மற்றும்
தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இன்றும் அரசிலில்
பிராமணர்களின் ஆதிக்கம் கொடி கட்டி பறக்கிறது என்பதற்கு 3000-ம் ஆண்டுகளின் முந்தய
கதை நமக்கு விளக்குகிறது. )
பரசுராமனிடம் அந்தணர் வேடமிட்டு கர்னன்
செல்கிறான்.பரசுராமன் அதை நம்புகிறான். தனூர் வித்தையை கற்றுத்தருகிறான். கர்னன்
சகல வித்தைகளிலும் தேர்ச்சி பெறுகிறான். ஒருநாள் ஆசிரமத்தில் பரசுராமன் சற்று
களைப்பாக இருந்தான்.அப்பொழுது கர்னனை அழைத்த பரசுராமன்,
‘உன் மடியைக்காட்டு,நான்
சற்று இளைப்பாற வேண்டும்’ என பணிக்கிறான்.குருவின்
கட்டளையேற்று கர்னன் தன் மடி மீது பரசுராமனின் தலையை வைத்துக் கொண்டான். அயர்ந்து
தூங்கிவிட்டான். அப்பொழுது எதிர்பாராதவிதமாக ஒரு வண்டு கர்னனை தாக்குகிறது. தான்
அசைந்தால் எங்கே குருவின் தூக்கம் கலைந்து விடுமோ என பயந்து அந்த வண்டின் கடியை
பொருத்துக் கொள்கிறான் கர்னன்.தூக்கத்திலிருந்து விழித்த பரசுராமன் தன் அருகே
ரத்தவாடை அடிப்பதை
உணர்கிறான். இதைப்பற்றி கர்னனிடம் வினவுகிறான்,பரசுராமன்.
அப்போது, கர்னன்,‘எங்கே தங்கள்
தூக்கம் கலைந்து விடுமோ எனும் அச்சத்தில்
நான் வலியை பொருத்துக் கொண்டேன்,குருவே!’ என கர்னன் விளக்கம் அளித்தவுடன் ,கோபத்தின்
உச்சிக்கே சென்றான் பரசுராமன்.
‘ஒரு சத்ரியனுக்குத்தான் வலி பொருத்துக்
கொள்ளும் மனப்பக்குவம் உண்டு,நீ சத்ரியனா?’என வினவினான் .தான் பொய் பேசி மாட்டிக் கொண்டதை எண்ணி பரசுராமனிடம்
மன்னிப்பு கோருகிறான் கர்னன்.
‘நான் ஒரு சூத புத்திரன்.எனக்கு தனூர் வித்தை
கற்க ஆசை மேலிட்டது.தாங்கள் அந்தணனை மட்டுமே குருகுலம் சேர்ப்பீர்கள் அதனால் தான்
பொய்யுரைத்தேன்,என்னை மன்னியுங்கள்’
அப்பொழுது பரசுராமன், தன்னிடம் கற்ற தனூர் வித்தையை இனி
பயன்படுத்தக்கூடாது அல்லது மறந்து விடவேண்டும் எனும் வாக்குறுதி பெற்றுக் கொள்கிறான்.
28-துரோணரின் குரு காணிக்கை கோரிக்கை
இதற்கிடையே 12 ஆண்டுகள் கல்வி பயின்றதை முன்னிட்டு
குருவிற்கு நன்றி சொல்ல,105 பேரை அழைத்துக் கொண்டு ,பீஷ்மன் துரோணரிடம் செல்கின்றான்.
‘குரு காணிக்கையாக தங்களுக்கு எதாவது செய்ய
வேண்டும் என்ன வேண்டும் குருவே’என பீஷ்மன் பணிந்து
கேட்கிறான்.என்ன வேண்டுமானாலும் காணிக்கை தருவதாக வாக்களிக்கிறான்.
(அல்லது இந்த குரு காணிக்கை பெற துரோணரே அஸ்த்தினாபுரம்
அரண்மனை நோக்கி வருகிறார்.அதாவது திருதராஷ்ட்ரன், அஸ்த்தினாபுரம்
சாம்ராச்சியத்திற்கு அடுத்த வாரிசு பிரகடனப்படுத்த போவதை கேள்வியுற்று துரோணர்
அரண்மனை வருகிறார்.(தன்னிடம் குருகுலம் பயின்ற மாணவர்கள் யார் அரியணை
ஏறுகிறாரோ,அவர் அதற்கு முன்,குருவிற்கு குருதட்சணை
தரவேண்டும் என்பது பிராமணர்கள் வகுத்த நியதி.குரு தட்ஷனை கேட்கிறார்.)
அப்பொழுது,பாஞ்சால மன்னனை கைது செய்து தன்காலடியில் விழச் சொய்ய வேண்டும் என பீஷ்மனிடம் நிபந்நனை விதிக்கிறான்,துரோணர்.
பீஷ்மன் வினவுகிறான். அப்பொழுது துரோணர்,’நானும் பாஞ்சால மன்னனும் பாலிய நண்பர்கள்,இருவரும் பரத்வாஜர் குரு குலத்தில் கல்வி பயின்றோம்,அப்பொழுது துருபதன் தங்கையான பாஞ்சால இளவரசியை ஒருவருக் கொருவர் விரும்பினோம்,பாஞ்சால மன்னன் இந்த காதலை ஏற்கவில்லை.
ஆனால் இளவரசன் துருபதன் ஆதரவு அளித்து திருமணத்தை நடத்தி
வைத்தான்‘.என்ன வேண்டுமானாலும் கேள் நண்பா, அதை, நான் சீதனமாக தருகிறேன் என உத்ரவாதமளித்தான்’.
‘அப்படி எதுவும் வேண்டாம்’ எனச்சொல்லி நான்,என் மனைவியுடன் வெளியேறினேன்.சில காலம் மகிழ்ச்சியாக
வாழ்ந்தோம்,அதன் விளைவாக எங்களுக்கு அஸ்வத்தாமன் எனும் அழகற்ற மகன்
பிறந்தான்.வறுமை வாட்டியது.அப்பொழுது என் மனைவி,
‘என் அண்ணன் இப்பொழுது பாஞ்சால தேசத்து மன்னன், அவர்தான்
என்ன,உதவி வேண்டுமானாலும் செய்வதாகக் கூறினாரே அவரிடம் போகலாம் வாருங்கள்’ என,என்னை
வற்புறுத்தி அழைத்துச் சென்றாள்.
நாங்களும் குழந்தையுடன் அரண்மனைக்கு சென்றோம்.மிக்க
மரியாதையுடன் அரண்மனை காவலர்கள் அழைத்துச் சென்றனர்,ஆனால் அவன் எங்களை நடத்திய
விதம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
‘பால பருவத்தில் எதோ விளையாட்டுக்கு
சொல்லியிருப்பேன் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு வருவதா? உனக்கு வெட்காமாக
இல்லை?’என சபையில் அசிங்கப்படுத்தினான்.
‘நான் தலைகுனிவோடு திரும்பினேன்.மனம்
இன்றளவும் சமாதானம் அடையவில்லை. இப்பொழுது அவனை என் காலடியில் விழச்சொல்ல முடியுமா?’
என துரோணர் சொல்லி முடித்தவுடன்,
‘இது ஒரு சாதாரண விஷயம், இவ்வளவுதானே! இதோ நானே அந்த குருவின் ஆணையை ஏற்கிறேன், உடனே புறப்படுகிறேன்’ என சொல்லிவிட்டு துரியோதனன்
நொடியில் புறப்பட்டான்.(இதன் தொடரை புதிய அஞ்சல்-6ல் காணவும்)
No comments:
Post a Comment