Tuesday, January 10, 2017

அ.கா.வ.தொ-6



29-துரியோதனன் சிறை

பாஞ்சால மன்னனை போரில் வென்று குருகாணிக்கையாக துருபதனை துரோணர் காலடியில் சரண்டையச்செய்யும் நிகழ்ச்சியை, பாண்டவரோடு கவுரவர்கள் சென்றால் அந்த கூட்டுப் படை  வெற்றியில் தர்மனுக்கு தான் அஸ்த்தினாபுரம் இளவரசானாக முடிசூட்டும் வாய்பு கிடைத்துவிடும், எனவே 100 பேர் கொண்ட தங்கள் படையே துருபதனை வெல்ல போதுமானது என துரியாதனன் கணக்குப் போட்டு உடனே பாஞ்சாலம் நோக்கி புறப்பட்டான். 

போன வேகத்தில் பாஞ்சால மன்னனிடம் துரியோதனன்,சிறைப்பட்டான்,
அதுமட்டுமல்ல துரியோதனன் சார்ந்த குலத்தை துருபதன்,இழித்தும் பழித்தும் பேசினான்.

30-துருபதன் சிறை

இந்ததகவல் குருகுலத்தில் இருந்த அர்ச்சுனனுக்கு எட்டியது.தான் சார்ந்த சந்திர வம்சத்தை பழித்துப் பேசிய துருபதனை கொல்வேன் என உணர்ச்சி வசப்பட்ட அர்ச்சுனன்,
அண்ணன் துரியோதனனை நான்மீட்டு வருகிறேன்,எனக்கு அனுமதி தாருங்கள்என பீஷ்மனிடம் கேட்கிறான்.அருகில் இருந்த தருமன்,
உணர்ச்சி வேகத்தில் கோவப்பட்டு அவனை கொன்று விடாதே,அர்ச்சுனா,தாத்தா சொல்வது போல் அவனை சிறைப்பிடித்து அழைத்துவா?’

துருபதனை சிறைபிடித்து அஸ்த்தினாபுரம் திரும்புகையில்,பாண்டவர்களை வழி மறித்து துரியோதனன் தலைமையில் கவுரவர்கள் நிற்கின்றனர்..இந்நிலையில் அஸ்த்தினாபுரம் சென்றால் அஸ்த்தினாபுரத்து இளவரசாக தர்மனை முடிசூட்டும் நிலை ஏற்படும்,எனவே தன்னோடு போர்புரிய அர்ச்சுனனை வம்புக்கு இழுக்கிறான் துரியோதனன்,தன்னை வென்று விட்டு அஸ்தினாபுரம் செல்ல வேண்டும் என்று சொன்னதைக் கேட்ட தர்மன்,~பாண்டவர்கள் மற்றும் கவுரவர்களுக்கிடையே சண்டை மூண்டால் அது சந்திர குலத்திற்கே இழுக்கு என தர்மன் சொல்வதை துரியோதனன் ஏற்க மறுக்கிறான்.தர்மன் மீண்டும் கூறுகிறான்,

நாமெல்லோரும் அஸ்த்தினாபுரம் சென்று அங்கே மன்னரின் சொல்லுக்கு கட்டுபடுவோம்,அவர் யாரை இளவரசராக பட்டம் சூட்டுகிறாரோ அவரையே அஸ்தினாபுரம் இளவரசாக ஏற்போம் என சொன்னதை துரியோதனன் ஏற்றான்.காரணம் தன் அப்பா தன்னைத்தான் நியமிப்பார் எனும் பாசப்பிணைப்பில் இந்த சம்மத வார்த்தையை ஏற்றுக்கொள்கிறான்.


31-துரோணரின் பிராமண விரோதகொள்கை

தான் கற்ற தனூர் வித்தையால் பாஞ்சால மன்னனை நேருக்கு நேர் சண்டையிட்டு அர்ச்சுனன் சிறை பிடித்து துரோணரின் காலடியில் விழவைக்கிறான்.இப்பொழுது துரோணரின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டான் பாஞ்சால மன்னன்.துரோணர் அப்பொழுது,

பாஞ்சால தேசத்தின் வட பாதியை என் மகன் அஸ்வத்தாமன் ஆளட்டும்;தென் பாதியை நீ,ஆண்டு கொள்என கட்டளையிட்டான். பாஞ்சாலமன்னன் வெட்கத்தால் தலை குனிந்து நாடு திரும்பினான்.இதில் துரியோதனனுக்கும் அவமானமாகிவிட்டது.துரோணர் தனக்கு துரோகம் இழைத்து விட்டதாகக் கருதுகிறான். சரியன போர் பயிற்சியை தனக்கு துரோணர் அளிக்கவில்லை என மனதில் வஞ்சம் கொள்கிறான்.அது மட்டுமல்ல,பிராமணர்கள் தங்கள் பகைவர்களை நேருக்கு நேர் சந்திக்க மாட்டார்கள்,என்பதற்கு துருபதன்-துரோணர் கதை ஒரு உதாரணம்.

இளவயதில் தான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற தவறிய துருபதன்,சத்ரிய இனத்து மக்களிடையே இருக்கும் பகையை தங்கள் எதிரியை பழி தீர்த்துக்கொள்ள தகுந்த தருணம் வரும் வரை காத்திருப்பார்கள்.

தன்னிடம் கல்வி மற்றும் வித்தைகள் பயின்றவனிடம் குரு காணிக்கையாக தன் பகைவனான,ஒரு நாட்டின் அரசனையே தன்னிடம் சரண்டையச்செய்து, அதன் மூலம் தன் தேவைகளான தன் மகன் அஸ்வத்தாமனுக்கு,  தன் எதிரியே பாதாபிஷேகம் செய்து அரியணை ஏறச் செய்து,  வஞ்சத்தை பூர்த்தி செய்துகொண்ட துரோணர் ஒரு மிகப்பெரிய சாணக்கியன் என்பதை நிருபித்தான்.

தன் சீடர்களில்,அர்ச்சுனன் சர்வ ஆற்றலும் பெற்று திகழ்வதை.தன் மகன் அஸ்வத்தாமானால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.காட்டில் வேடன் ஏகலைவன் அர்ச்சுனனை விட வல்லமை படைத்தவனாக விளங்கினான் என்பதை தன் தந்தையால் சகித்துக் கொள்ள முடியாமல் அவனுடைய வலது கை பெறு விரலை குரு காணிக்கையாக பெற்றதை தன் தந்தையின் கீழ்த்தரமான செயலாக அஸ்வத்தாமன் நினைத்து,தன் தந்தை துரோணரை எதிர்க்கிறான்.

தன் பிள்ளை மீது பாசம் இல்லை என தந்தையை நிந்திக்கிறான். தனக்கு பிரம்மாஸ்த்திர வித்தையை கற்றுத்தரவேண்டும், அவ்வாறு சொல்லித்தரவில்லை எனில் அப்பன்-பிள்ளை உறவே தேவையில்லை  என தந்தை துரோணரிடம் பாசத்தை விலை பேசுகிறான். அது மட்டுமல்ல பிரம்மாஸ்த்திரத்தை அர்ச்சுனனுக்கு மட்டும் பிரத்யோகமாக கற்றுக்க கொடுத்தது எந்த வகையில் நியாயம்? என வாதிடுகிறான்.
                   **********

(இங்குதான் பிராமணர்களின் சாணக்கியத்தனத்தை துரோணர் தன் பிள்ளை அஸ்வத்தாமன் மூலம் உலகுக்கு விளக்குகிறான். ஆரியர்கள் இந்தியாவில் நுழையும் தருவாயில், பிராமணர்களுக்கெல்லாம் தலைமை ஏற்று வழி நடத்தியவர் பரத்வாஜர் எனும் சர்வ வல்லமை படைத்த பிராமணர். இவருக்கு மட்டுமே தெரிந்த வட்டெரிதல் (சுதர்சன சக்ரம்)  மற்றும் வில் வித்தையை தன் இனத்தின் தற்காப்பிற்காக ஒரு சில சீடர்களுக்கு சொல்லி கொடுத்தார்.

அவர்களுள், பரசுராமர் முதன்மையானவர். பரத்வாஜரின் மகன். அந்நாளில் பிராமணர்களுக்கு ஆதரவளித்தவர்களை சத்ரியர்கள் என அழைக்கப்பட்டனர். அப்படி அழைக்கப்பட்ட சத்ரியரில் சந்திரகுல வம்சத்தைச் சார்ந்த சந்தனுவுக்கு மகனாக பிறந்த தேவ விரதன் பரசுராமனை குருவாக ஏற்று சகல வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தான்
அவன் தான் பின்னாளில் பீஷ்மன் என அழைக்கப்பட்டான்.

பிராமணர்கள்,தங்களின் முழு பாதுகாப்பிற்கு சத்ரியர்களை மட்டும் நம்பத் தயாரில்லை,சக மனிதர்களை அடிமைப்படுத்தி ஆள துடிக்கும் சத்ரியர்கள்,தங்களையும் நேரம் வந்தால் சத்ரியர்கள் கவிழ்த்து விடுவார்கள்,இதை தவிர்க்க சத்ரியர்களுக்கு சமமாக யாதவர்களையும் தங்கள் ஆதரவாளர்களாக மாற்ற திட்டமிட்டனர்,அதன் விளைவே சர்வ பலம் பொருந்திய யாதவ தனைவனாக விளங்கும் கிருஷ்னனுக்கு மட்டும் பேரழிவு ஆயுதமான, வட்டெரியும் (சுதர்சன சக்ரம்)கலையை பரசுராமன் சொல்லித் தந்தான்.இதனால் மொத்த இன மக்களையும் தங்கள் துதிபாடிகளக மாற்றிவிட்டனர்.
                    ********

அஸ்த்தினாபுரம் அரண்மனை திரும்பிய பாண்டவர்களும் கவுரவர்களும் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பழக முடியவில்லை. போரில் பாண்டவர்கள் வென்றதை துரியோதனனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அன்று இரவு முழுவதும் தங்கள் தந்தையான திருதராஷ்ட்ரனிடம் துரியோதனனுக்குத் தான் இளவரசு பட்டம் சூட்ட வேண்டும் என கவுரவர்கள் விவாதம் செய்தனர்.
இங்கே சகுனியிடம் ஆலோசனையை பெருகின்றனர்.அப்போது சகுனி,‘தர்மனுக்கு முடி சூட்டுவது போல் சூட்டி பின் அவர்களை சத்ரிய சம்பரதாயமான வாரணாவனம் அனுப்பி,அங்கே மாய மாளிகை அமைத்து, பாண்டவர்களை அழித்துவிடலாம் என திட்டம் தீட்டுகின்றனர். இதற்கு திருதராஷ்டரன் ஏற்றுக் கொள்ளவில்லை. தம்பி மகன்களை கொலைசெய்யும் திட்டமான பாவ செயலை செய்ய விரும்ப வில்லை.

32-தர்மனுக்கு பட்டாபிஷேகம்

தன் மகன்களை அனுப்பிவிட்டு, தம்பி மகன்களான பாண்டவர்களை அழைக்கச் சொல்கிறான், திருதராஷ்ட்ரன். பெரியப்பாவை வணங்கி முன் நிற்கும் பாண்டவர்களை ,நோக்கி திருதராஷ்ட்ரன், ‘தர்மா !உனக்கு நாளை பட்டாபிஷேகம் நடத்த முடிவெடுத்துள்ளேன். தயாராயிரு என இது ஒரு அரச கட்டளை என கூறி முடிக்கிறான். வாய் ஏதும் பேச முடியாமல் தன் தாய் குந்தியிடம் இந்த சேதியை பாண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

பட்டாபிஷேகத்திற்கு உண்டான ஆடை ஆபரணங்களை தாய் குந்தியின் ஆசிர்வாதம் வேண்டி அரண்மனை பணியாள் எடுத்துவருகின்றாள்.அந்த ஆபரணங்களை எடுத்துக்கொண்டு குந்தி, தன் மூத்த ஓரகத்தியான காந்தாரியிடம் ஆசி வாங்க  எடுத்து வருகிறாள்.அப்போது குந்தி,

அக்கா,தர்மனுக்கு நாளை முடிசூட்டு விழா,தாங்கள் தான் இந்த ஆபரணங்களுக்கு ஆசி வழங்க தகுதியானவர், எனவே ஆசிர்வாதம் அளியுங்கள்என காந்தாரியிடம் வேண்டுகிறாள்.அப்பொழுது காந்தாரி,

எனக்கென்ன கண்ணா தெரியுது? நான் ஆசிர்வாதம் வழங்க, நீயே அதை செய் குந்திஎன முகத்தில் அடித்தால் போல் கூறிவிட்டாள்.

அக்கா,என் மகன்கள் போரில் வெற்றி பெற்றதை உங்கள் மனது ஏற்றுக் கொள்ளவில்லையா?’ என குந்தி சொன்னவுடன்,காந்தாரி, ‘அப்படி இல்லை குந்தி, என் மகன்கள் தோல்வியை என்னால் தாங்க முடியவில்லைமேலும், காந்தாரி கூறிய தத்துவம் குந்தியை யோசிக்க வைக்கிற

மகிழ்ச்சியான தருணங்களில் சத்ரிய உறவு முறைகள் ஒன்று கூடுவதில்லை, துக்க நிகழ்ச்சிதான் உறவுகளை ஒன்றிணைக்கிறது

தன் மகன் தர்மனுக்கு,முடிசூட்டும் நிகழ்ச்சிக்கு தன்னுடைய சொந்தங்களை அஸ்த்தினாபுரம் வரவழைத்தாள் குந்தி.  கவுரவர்களின் தங்கையான துர்ச்சடை, பள்ளித் தோழியான சுபத்திரையை குந்திக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள்.
அப்பொழுது  சுபத்திரை, கிருஷ்னன் மற்றும் பலராமன் மூவரும் நந்த கோபாலின்  பிள்ளைகள் என ‍அறிந்து ஆச்சர்யம் அடைகிறாள், நந்த கோபாலின்  தங்கையான குந்தி. ‘எவ்வளவு உயரம் வளர்ந்து விட்டாய் சுபத்திரை?’ என  ஆரத் தழுவி உச்சிமோந்தாள்.

இதைக் கண்ணுற்ற ‍ அர்ச்சுனன்,சுபத்திரையின் அழகில் சொக்கிப் போனான்.சுபத்திரையும் அர்ச்சுனனை வைத்த கண் விலகாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்,சுபத்திரையோடு அர்ச்சுனன், ஆடல்பாடல் கலைகளில் ஈடுபட்டான்.

அனைவரும் மகிழ்ந்திருக்கும் வேளையில் அங்கே துரியோதனன் மற்றும் கர்னன் குழுவினர் வந்து சேர்ந்தனர்.அர்ச்சுனனின் ஆடலையும் பாடலையும் பார்த்த துரியோதனன், மனதில் வேற்றுமை கொண்டான்.

‘ஒரு சத்ரியனுக்கு ஆடுவதும் பாடுவதும் அழகல்ல.இவன் உண்மையான சத்ரியனாக இருந்தால் இவ்வாறு செய்வானா?என் சித்தப்பா பாண்டு சந்திர குல சத்ரியனாக இருந்தாலும் அவர் மனைவியும் சித்தியுமான குந்தி யது குலத்தை (குரு வம்சம்) சேர்ந்வள் தானே? அதுதான் இவனுக்கு ஆடவும் தெரியுது,பாடவும் தெரியுது,

என ஏளனமாக பேசியதைக் கேட்ட மற்றவர்கள் சிரித்து விட்டனர்,இதை கேள்வியுற்ற குந்தியும் அவள் புதல்வர்களும் கூனிக் குறுகி விட்டனர்.


33-சத்ரியர்- ஒரு தேசிய இனம்

அப்போதே சாதிய உணர்வுகள் தலைதூக்கிவிட்டன, அதையும் மீறி பல சாதிகள் போற்றும் மகாபாரத கதைகள் இந்தியாவின் இதிகாசங்கள்.இப்பொழுதும் சத்திரியர்கள் (வன்னிய வர்மாக்கள்) தம் குல மக்களை கூத்தாட (நாடகம் ,சினிமா மற்றும் இசைத்துறை போன்ற வைகளில்) விடமாட்டார்கள். ஆனால் ரசிக்கவும் கலைஞர்களுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து ஆடல்பாடல் கலைகளை சத்திரியர்கள் வளர்த்தனர்.

இதிலிருந்து என்ன தெரிகிறது ?சந்திர குல சத்திரியரும்,சூரிய குல சத்திரியரும் வன்னியர் இனம் என தெரிகிறதா? அதவது  ராவண மற்றும் துரியோதன வம்சம் என தெரிகிறதா?

34-வன்னியர்கள், தமிழுக்கு மட்டுமே சொந்தமல்ல

3000-ம் ஆண்டுகளா இதிகாச இந்தியாவில் பரவி உள்ள இனங்களில் மொழி வாரியாக பிரிந்து இருந்தாலும் வன்னிய இன மக்களின் சத்ரிய குணங் கொண்டவர்களே, தேசம் முழுவதும் பரவியுள்ள ஒரு தேசிய இனம். 

பிள்ளைமார்கள் மற்றும் நாடார்கள் மட்டுமே தமிழினம், அதாவது வன்னியர்கள்,
தமிழை மட்டுமே தாய் மொழியாக கொண்டவர்கள் இல்லை;
பிராமணர்களைப் போல்,இடையர்களைப் போல்,வைசியர்களைப் போல்,தலித்துகளைப் போல் வன்னியர்களும் பல மொழிகளுக்கு சொந்தக்காரர்கள்
அப்போ தமிழ்நாட்டில் தமிழைத்தாய் மொழியாக கொண்டவர்கள் யார் ? ஒரு வினா எழுமே!

அந்த இனம் தமிழ் இலக்கியங்களைப் படைத்த அகத்தியர் வழித் தோன்றல்களான பிள்ளைமார்கள். இதில் பல உட்பிரிவுகள் தோன்றிவிட்டன, அதாவது, முதலியார், (சைவம்,அசைவம்) வேளாளர், செங்குந்தர், உடையார், மூப்பனார், அகமுடி முதலியார். போன்றோர்.வெய்யிலிளி இனமான நாடார்களின் உழைப்பை சுரண்டுபவர்கள். 

எந்த மொழி பேசினாலும் அக்கினிகுலச்(சூரிய வம்சம்) சத்திரியர் முன் கோபிகளாகவும் துரியோதனனைப் போல்  பங்காளிகளை  பகையாளிகளாக்கியும் வாழ் நாள் முழுவதும் சண்டையிட்டு வாழ்ந்து கொண்டிருப்பர்.

-தமிழில் வன்னியகுல சத்ரியர்,மலையாளத்தில் நாயர் மற்றும் வர்மா,கன்னடத்தில் கவுடா,தெலுங்கில் ராஜா,அல்லது அக்கினிகுல சத்தரியர்.ஒடிசா மற்றும் மகராஷ்ட்ராவில்  நாயக், ராஜஸ்த்தானில் ராஜபுத்திரர்கள்.பஞ்சாப்  மத்தய பிரதேசத்தில் சிங்,மற்றும் உத்ரபிர தேசத்தில் குர்மிக்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.)
பாஞ்சால மன்னர்களுக்கும், அஸ்த்தினாபுர மன்னர்களுக்கும் தீரா பகை யுண்டு. திருதராஷ்ட்ரனின் தந்தையான விசித்திர வீரனை எல்லை தாண்டி வந்தான் என்பதற்காக சிறை பிடித்தான் பாஞ்சால மன்னன் ,அதை கேள்வியுற்ற சர்வ பராக்கிரமசாலியன பீஷ்மன் தன் அப்பாவின் மகனான விசித்திர வீரனை மீட்பதில் ஒரு கவுரவப் பிரச்சினை மட்டுமல்ல தான் ஆட மறந்தாலும் தன் சதை ஆட மறக்காது எனும் சொல்லாடலுக்கு வலு சேர்க்கும் விதமாக பாஞ்சாலம் சென்று தன் தம்பியை மீட்டான் .

(அந்நாளில் ஆரியர்கள் இந்தியாவில் வாழ்ந்த பல குரு நில மன்னர்களை தங்கள் வாழ்வாதாரம் பெருக்கிக் கொள்ள ‍ அண்டை  நாட்டு அரசர்களை ஒற்றுமையுடன் வாழ விட்டதே இல்லை என்பதற்கு மகாபாரத  கதைகளின் மூலம் நாம் ஏராளமான  சான்றுகளை பெறலாம்)

35-பீஷ்மனின் காசி விஜயம்

அஸ்த்தினாபுர சத்ரியர்களுக்கும்,பாஞ்சால நாட்டு சத்ரியார்களுக்கும் பகை கெள்ள இன்னொரு சான்று,அதாவது பீஷ்மன் தன் தம்பி விசித்திர வீரனுக்கு காசி ராஜனிடம் பெண் கேட்க ராஜ மாதா அனுப்புகிறாள்.அங்கே பெண் கேட்கச் சென்ற பீஷ்மனுக்கும் காசி ராஜனின் மூத்த மகளான அம்பைக்கும் வாக்குவாதம் நடக்கிறது.

‘ஒரு சத்ரியன் என்கிற முறையில் பீஷ்மன் தன்னை மனைவியாக்கிக் கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.ஆனால் ஒரு சாதி கெட்ட விசித்திர வீரனுக்கு தான் மனைவியாக மாட்டேன்’ என உறுதிபட அம்பை, பீஷ்மனிடம் கூறிவிட்டாள்.

தான் பிரம்மச்சாரியம் கடைபிடிப்பதால் தன்னால் அம்பையை திருமணம் செய்ய முடியாது என பீஷ்மன் திட்டவட்டமாக கூறிவிட்டான்.தன் மகளின் பிடிவாதம் அறிந்த காசி ராஜன்,மற்ற இரண்டு பெண்களையும் பீஷ்மனோடு அனுப்பி விட்டான்.


36-அம்பையின் சபதம்

அம்பை மட்டும் மனதில் வன்மம் கொண்டாள்.தன்னை அவமானப்படுத்திய பீஷ்மனை பழி வாங்கியே தீருவேன் என சபதம் கொண்டாள்.பரம்பரை பரம்பரையாக அண்டை நாட்டுடன்  பகைமை தொடர்ந்தால் தான் தாங்கள்(ஆரியர்கள்) கொண்டாட்டமாக வாழமுடியும் என ஆரியர்களின் சதித் திட்டம், என்பது, கதை கேட்கும் பாமர மக்கள் உணரவில்லை. அல்லது உணரத் தெரியவில்லை. 

பீஷ்மன் இருக்கும் வரை அவனை யாரும் கொல்ல முடியாது என கதை கட்டி விட்டார்கள்.அடுத்த பிறவியில் (தலை முறை?) தான் கொல்ல முடியும் என்பதால் அம்பை பாஞ்சால மன்னன் குடும்பத்தில்,சிகண்டியாக அவதரிப்பதாக கதை கட்டி விட்டார்கள்.

பாஞ்சால மன்னனை, அர்ச்சுனன் சிறைபடுத்தியது மட்டுமல்ல, தன்னுடைய பாலிய நண்பனான,துரோணரிடம் கொடுத்த வாக்குறுதி தவறியதற்காக தன்னுடைய நாட்டை தன்னிடமிருந்து பறித்து  தனக்கே பாதி நாட்டை பிரித்து பிச்சை போடுவது போல் போட்டதை துருபதனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இரவெல்லாம் தூக்கமில்லாமல் மன உளைச்சலில் அலைந்தான்.இதற்கு ஒரு தீர்வு காண சர்வ வல்லமை படைத்த ஒரு முனிவரால் தான் முடியும் என தன் ராஜகுரு சொன்னதை கேட்டு யாஜர் எனும் முனிவரிடம் செல்கின்றான்,துருபதன்.
அ.கு-

(வியாசர் மற்றும் யாசர்- மகாபாரத கதைகளில் வரும் முக்கிய கதா பாத்தரங்களுக்கு தந்தையாவார்கள்-அப்பொழுது ராஜ குல பெண்டிர்,விதவையானால்,அல்லது மலடியானால் வாரிசுவேண்டி ரிஷிகளிடம் புணர்ந்து வாரிசுகளை பெற்றுக் கொள்ளலாம் என பிராமணர்களால் ராஜ நீதி வகுக்கப்பட்டது, அதன்படி ராஜமாதா சத்யவதியின் வேண்டு கோளுக்கிணங்க காசியப்ப ராசனின் மகள்களும், விசித்திர வீரனின் கைம் பெண்களுமான,  அம்பிகா மற்றும் அம்பலிகா, வியாசரோடு புணர்ந்து பிறந்தவர்கள்தான் திருதராஷ்ட்ரன், பாண்டு, மற்றும் விதுரன்.)
அதேபோன்று,துருபதனும் தன்னை பழி வாங்கிய துரோணரை பழி வாங்க சர்வவல்லமை படைத்த ஒரு மகனும்,பாண்டவர்களை மணந்து,குரு வம்சத்து,சந்திர குலத்தை சீர் குலைக்க   ஒரு மகளும் யாசர் மூலம் பிறக்க யாசரை வேண்டி வடபுலம் நோக்கி பயணிக்கிறான்.

37-பாண்டவர்கள் வாரணா வனவாசம்

இதற்கிடையே தர்மனை பலத்த சூழ்ச்சிகளுக்கிடையே அஸ்த்தினாபுரத்தின் இளவரசானாக திருதராஷ்ட்ரன் பிரகடனப்படுத்துகிறான். இது சகுனியின் திட்டம். மூத்தவன் திருதராஷ்ட்ரனாக இருந்தாலும் இளையவன் பாண்டுவின் பிள்ளைகளில் தர்மனே அனைவருக்கும் மூத்தவன்,என்பதால் திருராஷ்ட்ரன் அவ்வாறு செயல்பட வேண்டியுள்ளது. தன் மகன் துரியோதனன் அரியணை ஏற வேண்டும் என்பதே திருதராஷ்ட்ரன் விருப்பம்.இதற்காக பாண்டவர்களை கொன்று விடலாம் எனும் சகுனியின் திட்டத்திற்கு திருதராஷ்ட்ரன் இணங்க மறுக்கிறான். தம்பி மகன்களை கொன்ற பழி பாவம் தனக்கு வேண்டாம் என்கிறான்.
                                    
இருப்பினும் துரியோதனனும், சகுனியும் இணைந்து ஒரு சதி திட்டம் தீட்டுகின்றனர். அதாவது தர்மனுக்கு பட்டம் சூட்டியவுடன் வாரணாவனம் செல்ல வேண்டும் அங்கு உள்ள சிவனை வணங்க வேண்டும் ;இது அஸ்த்தினாபுர சத்ரியர்களின் குல வழக்கு என பாண்டவர்களை நம்ப வைக்கின்றனர். வாரணவனம் சென்றவர்கள் திரும்பி வர முடியாத அளவுக்கு சகுனியும் துரியோதனனும் கொலைத் திட்டங்களை தீட்டுகின்றனர்.

இதை கவனித்த அருகில் இருந்த கர்னன்,‘அர்ச்சுனன்,ஒரு சிறந்த வில்வித்தை வீரன்,ஒரு வீரனை போர்க்களத்தில் சந்தித்து வெல்வதுதான் சத்ரிய தர்மம்,எனவே எனக்கு அந்த வாய்ப்பைத் தாருங்கள் என சகுனியிடம் கேட்கிறான்.

அப்பொழுது சகுனி,‘கர்னா,நீ ஏற்கனவே அசிங்கப்பட்டது போதாதா? இன்னொரு முறை நீ அவனை போருக்கு இழுத்தால் உனக்கு குலப் பெருமை இல்லை என ஏளனப்படுத்தி விடுவா   ர்கள். உன்னால் மட்டுமே அர்ச்சுனனை  வெல்ல முடியும்,ஆனால் இப்போழுது வேண்டாம்என கர்னனை அமைதிப்படுத்தி விட்டனர். 

பாண்டவர்கள் ஐவருடன் குந்தியும் சேர்ந்து வாரணாவனம் செல்கின்றனர். போகும் முன் பீஷ்மன்,திருதராஷ்ட்ரன்,காந்தாரி போன்ற மூத்தவர்களின் பாதம் தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெற்று புறப்படுகின்றனர். அங்கு அவர்கள் தங்குவதற்கு சகுனியின் சூழ்ச்சியால் மாய குடில் அமைக்கப்படுகிறது.
                   ******
சகுனி யின் திட்டமான, தன் தம்பியின் பிள்ளைகளைக் கொன்று தன் மகனுக்கு முடி சூட்டுவதை,திருதராஷ்ட்ரன் விரும்ப வில்லை,
அது ஒரு பாவமான செயல் என எண்ணுகிறான்.அது மட்டுமல்ல அஸ்த்தினாபுர மக்கள், பாண்டுவின் புதல்வர்கள் மீது நன் மதிப்பு வைத்திருந்தனர்.

38-திருதராஷ்ட்ரன் ஒரு மாற்றுத் திறனாளி

தன் பிள்ளைகள் ஒரு பண்பட்ட நாகரிக  சிந்தனையற்றவர்கள் என திருதராஷ்ட்ரனுக்கு தெரியும்.தனக்கு வாரிசு வேண்டும் என தவமாய் தவமிருந்து பிள்ளைகள் பெற்ற திருதராஷ்ட்ரன், தன்னுடைய பிள்ளைகளை வளர்க்க கவனம் செலுத்த இயலவில்லை.தனக்கு பிறவியிலேயே கண்களிரண்டும் தெரியாது என்பதனால் தன்னை யாரும் எதற்கும் தகுதி யற்றவன் என எண்ணி விடக்கூடாது என்பதை மிக உன்னிப்பாக கவனத்தில் கொண்டு செயல்படுவான்.

அதாவது தான் இருக்கும் இடத்திலிருந்து அரண்மனையின்  எந்த மூலையில் என்ன இருக்கிறது அங்கு செல்ல எத்தனை அடி எடுத்து வைக்க வேண்டும் என கணக்கிட்டு தவறாமல் செல்வான்;

அது மட்டுமல்ல தன்னை நோக்கி யார் வருகிறார்கள் என உணர்ந்து அவர்களைப்  பேர் சொல்லியோ அல்லது உறவு முறை கொண்டோ அழைப்பான். எனவே தன்னை யாராவது குருடன் என கூப்பிட்டால் கோவப்படுவான். திருதராஷ்ட்ரன். தன் பிள்ளைகள் தவறு செய்தார்கள் என யாராவது சுட்டிக்காட்டி திருதராஷ்ட்ரனிடம் புகார் அளித்தால்,புத்ர பாசம் கண்ணை மறைக்கும் எதையும் தீர விசாரிக்காமல் உடனே புகார் சொல்ல வந்தவர்களை விரட்டி விடுவான்;தன் பிள்ளைகள் அஸ்த்தினாபுர மக்களிடையே நல்ல பேர் எடுக்க முடியததற்கு இதுவே காரணம், என்பதை இன்னும் திருதராஷ்ட்ரன் உணர்ந்தவனல்ல.

39-வாரணாவனத்தில் அரக்கு மாளிகை

வாரணவனத்தில் பாண்டவர்கள் தங்கியுள்ள மாளிகையில்,எப்படி யெல்லாம் பாண்டவர்களை அழிக்கும் திட்டங்கள், அஸ்த்தினாபுரத்தில் சகுனியின் தலைமையில், திருதராஷ்ட்ரனுக்கும் காந்தாரிக்கும் தெரியாமல், எவ்வாறு தயாராகின்றது என்பதை அவ்வப்போது அரண்மனை ஒற்றர்கள் மூலம் விதூரன் தெரிந்து கொள்கிறான். அதை அவ்வப்போது தனி ஒற்றனோடு  பாண்டவர்கள் இருக்கும் வாரணவனத்திற்கு எச்சரிக்கை செய்து அனுப்புவான்.

இம்முறை வாரணாவனத்தில் அமைக்கப்பட்ட ‍அரக்கு மாளிகையை நள்ளிரவில் கொளுத்துவது என அ‍ஸ்த்தினாபுரத்தில் சகுனி தலைமையில் தீர்மானிக்கப்பட்டதை விதுரன், ஒற்றன் மூலம் பாண்டவர்களுக்கு தெரிவிப்பதோடு, அங்கிருந்து எப்படி தப்பிப்பது எனும் கலையை ஒற்றன் மூலம் சொல்லி அனுப்புகிறான்.

காலம்காலமாக,அறம் சார்ந்த,உண்மைகளே வெற்றி பெறுகின்றன என்பதற்கு மகாபாரத்தில் ஏராளமான சான்றுகள் உள்ளன.அதில் வாரணவனத்தில் அமைக்கப்பட்ட அரக்கு மாளிகை யாரால்?,யார் சொல்லி?,ஏன் அமைக்கப்பட்டது? போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் போக அப்போது சகுனி மற்றும் துரியோதனன்,யார் அரக்கு மாளிகைக்கு தீ வைக்கின்றாரோ,அவனை அவனுக்கு தெரியாமல்,சாகடிக்க திட்டமிடப்பட்டது. அவ்வாறே நள்ளிரவில் புரோசேனன் அரக்கு மாளிகைக்கு தீ வைத்ததில் அவனே மாட்டிக் கொண்டு இறந்தான் ;என மக்களிடையே பொய்ச் செய்தி பரப்ப பட்டது.

அஸ்தினாபுரம் அரண்மனையில் மக்கள் திரண்டனர், ‘பாண்டவர்கள் மாண்டு  போனதற்கு அரக்கு மாளிகை அமைக்கப்பட்டது தான் காரணம்.எனவே அதற்கு அரசனான திருதராஷ்ட்ரன் பொறுப்பேற்க வேண்டும்’ என  மக்கள் கோஷமிட்டனர். அப்பொழுது, திருதராஷ்ட்ரன்,

‘எனக்கு என் மகனை அரியணை ஏற்ற  ஆசைதான்,அதற்காக என் தம்பி மகன்களை கொலை செய்து விட்டு துரியோதனனுக்கு பட்டம் சூட்ட வேண்டும் என நினைக்கும் ஈனப்பிறவி அல்ல நான்’

திருதராஷ்ட்ரன் அவையோர் முன்னும் அஸ்த்தினாபுர மக்களிடமும் புலம்புவதை பீஷ்மனால் பார்க்க சகிக்கவில்லை.

‘ஒரு அரசன் இறைவனுக்கு சமமானவன்,மக்கள் மன்னனை எதிர்ப்பதா?கூடாது’மேலும் பீஷ்மன் மக்களைப் பார்த்து,

அஸ்த்தினாபுர சந்திர வம்ச சத்ரிய அரசன் மக்களிடம் மண்டியிடுவதா?’ பாண்டவர்களை திருதராஷ்ட்ரன் சதி செய்து கொன்றான் என்பதற்கு ஆதாரம் உள்ளதென யாராவது கூற முடியுமா?அப்படித்தான் அரசன் சதி செய்தான் எனில் அது அரச நீதி யாகும் அதை எதிர்க்க மக்களுக்கு அதிகாரம் இல்லை’ பீஷ்மன் வாளை உருவிக்கொண்டு ஆவேசத்துடன் மக்களை நெருங்குகிறான்.துரோணர், அமைதி காக்கும்படி பீஷ்மரை வேண்டுகிறான்.

பின் பீஷ்மன்,தனியாக திருதராஷ்ட்ரன், சகுனி, மற்றும் துரியோதனன் களுடன்,வாரணவனத்தில் அரக்கு மாளிகை அமைக்கப்பட்டதில் யாருடைய கை வேலைப்பாடு? என ஆலோசிக்கிறான், பல கோணங்களில் சகுனியை மடக்குகிறான்.

40-சகுனி சூழ்ச்சியால் அரக்கு மாளிகை எரிந்தது

பீஷ்மன் சென்றவுடன்,வாரணவனத்தில் அரக்கு மாளிகை அமைத்து பாண்டவர்களை சதி செய்து கொல்வதில் முழு பொறுப்பையும் தான் ஏற்பதாக அறிவிக்கிறான்,சகுனி. இதைகேட்ட திருதராஷ்ட்ரன், ‘மக்களிடையே, மகா பழி பாவத்திற்கு தன்னை ஆளாக்கி விட்டாயே சகுனி? எனக்கு இது தேவையா?’ என சகுனியிடம் வினவியபோது,சகுனி,‘எனக்கு என் சகோதரி மகனான திருதராஷ்ட்ரன் அஸ்த்தினாபுர இளவரசாக பட்டம் சூட்ட வேண்டும்,இதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. என  சொல்லி முடித்தான்.

இதைக்கேட்ட, அங்கே சூழ்ந்திருந்த காந்தாரி, கர்னன், துரியோதனன், துர்ச்சாதனன் போன்றோர் அமைதி காத்தனர்; அனைவரது மனதிலும் இறுக்கம் இருப்பதை மனம் தெளிவாக காட்டியது.சகுனி மட்டுமே சலனமற்று இருந்தான்.
அ.கு-
(பதவி,அதிகாரம் அடைவதில் தர்ம,நியாய வழிகள் கடைபிடிக்க வேண்டும் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதற்கு அந்நாளில் நடந்த மகாபாரத கதைகளே உதாரணம். சொத்துக்கள் அடைவதிலும், சுகங்கள் பெறுவதிலும், அதிக ஆர்வம் கொள்வதால் சொந்தங்களை இழப்பதில் எந்த சமரசமும் தேவை இல்லை என்பதற்கு அன்றே சகுனி திட்ட மிட்டான் அது இன்றளவும் சமுதாயத்தில் தொடர்வது தான் சோகம்.

மகாபாரதம் கற்பனை கதை என ஒதுக்கிவிட முடியாது,இதிகாசம் என ஏளனமாக இருக்க முடியாது மனிதர்களின் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் கபட நாடகம் இன்றும் நாம் கண்கூடாக அறிகிறோம்,நமக்குள்ளே அந்த குணம்  இருப்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.)
                     *********

41-திரவுபதி தோற்றம்

துருபதன்,கடும் தவம் புரிந்து அர்ச்சுனனை மணக்க ஒரு பெண்ணும்,துரோணரைக் கொல்ல ஒரு மகனும் வேண்டி யாஜரிடம் வேண்டுகிறான்.துருபதனுக்காக யாஜரின் அக்னி குண்டத்தில், திரிஷ்ட்ட தூமன் எனும் மகனும், திரவுபதி எனும் மகளும் தோன்றுகின்றனர். திரவ்பதி துர்கையின் மறு அவதாரம்.

(வாசகர்கள் இங்கே முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது,அதாவது இங்கு அக்னி குண்டம் எனில் தீச்சட்டி என  நேரடி பொருள் கொள்ளக்கூடாது. அந்நாளில் கதை கேட்பவர்களுக்கு விரசம் இருந்தால் கதை விகாரம் ஆகிவிடும் எனும் எண்ணத்தில் சில மறைமுக பொருளோடு கதை கூறப்பட்டது.குண்டம்,குந்தி,பெண் இனப்பெறுக்க உறுப்பான யோனிக்கும் குந்தி எனப்பெயர் உண்டு. இவைகள் வடமொழி சொற்கள்.
                                    
குண்டி என்பது தமிழ் படுத்தப்பட்ட சொல்..எனவே குழந்தை இப்பொழுது எப்படி பிறக்கிறதோ அதேபோன்று தான் அந்நாளில் பிறந்தது.அதாவது பெண்ணின் இனப்பெருக்க உருப்பு வழியாகத்தான் குழந்தை பிறக்க முடியும்.
ஆனால் கதா பாத்திரங்களின்  பராக்கிரமத்தை மக்களிடம் கூறும்போது அதற்கு கடவுள் அனுக்கிறகம் எப்படி வருகிறது என்பதை விளக்க, அதற்கு யாகம் வளர்ப்பது தான் சிறந்த வழி என பிராமணர்கள் வகுத்தது.
இது இன்றளவும் பாமர மக்களை ஏமாற்றும் மூட நம்பிக்கை என்பதை இன்றும் நம் உழைப்பாளி மக்கள் நம்பாமல் இருப்பதுதான் சோகம்.

42-பாண்டவர்களுக்கு ஈமக்கிரியை

பாண்டவர்கள் மாண்டனர் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனால் அஸ்த்தினாபுரத்தில் பங்காளிகளான பாண்டவர்களுக்கு  இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்பது சத்ரியர்களின் சம்பரதாய முறை பிராமணர்களால் வகுக்கப்பட்டது. இதற்கு வியாசருக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. ஆனால் வியாசர் நித்திரையில் இருக்கிறார் அவரை எழுப்ப  முடியாது என தூதுவன் கூறிவிடுகிறான்.அடுத்து குந்தியின் தாய் வீட்டு உறவுகளில் யாரையாவது கூப்பிட்டு ஈமக்கிரியை செய்ய வேண்டும்.

அந்த வகையில் துவாரகை ஆண்ட குரு வம்சத்தின் (யது குலம்-யாதவ குலம்) வாரிசும்,குந்தியின் அண்ணன் மகனுமான தன் மாய மந்திங்களில் புகழ் பெற்று விளங்கும், கிருஷ்னனுக்கு அழைப்பு விடுத்து,ஈமச்சடங்கு முடிக்கலாம் என அஸ்த்தினாபுறத்து அரசவையில் தீர்மானிக்கப்பட்டது.கிருஷ்னனை அழைக்க தூதுவன் விரைந்தான்.
அஸ்த்தினாபுரத்திற்கு கிருஷ்னன் வந்தான். ‘பாண்டவர்கள் இறந்தார்கள் என்று எப்படி முடி வெடுத்தீர்கள்?’ என மன்னர் திருதராஷ்ட்ரனை பார்த்து வினவினான்.அதற்கான ஆதாரங்களாக ‍  ஒற்றன் கொடுத்த தகவல்களையும், ‍அவர்கள் அணிந்திருந்த   ‍அணி கலன்களை சாட்சியாகக் காண்பித்தனர்.

அப்போது கர்னன், ‘முன்பொருமுறை அரண்மனை தீ பற்றி எரியும் போது தன்னிடமிருந்த  வருணாயுத பாணத்தால் அந்த  அ‍க்கினியை அழித்தவன் அர்ச்சுனன்,அப்படி இருக்க வாரணாவன மாளிகை பற்றி எரியும் போது அர்ச்சுனன், அந்த நெருப்பை அணைத்திருக்கலாமே? இங்குதான் எனக்கு சந்தேகம் வருகின்றது. எனக்கென்னவோ பாண்டவர்கள் இறந்திருக்க மாட்டார்கள் என தோன்றுகிறது’ என கிருஷ்னனைப் பார்த்து சொல்லி முடித்தான்.

அப்பொழுது,கிருஷ்னன், ‘அக்கினி நினைத்தால் உலகின் அத்தனை நீர் நிலைகளையும் ஆவியாக்கி மேலே அனுப்ப முடியும்,ஏன் அந்த மழைக்கு காரணமான வருணனையே பொசுக்கும் ஆற்றல் அந்த ‍ அக்கினிக்கு உண்டு.எனவே  இது தேவையற்ற சந்தேகம்’

என நேரத்திற்கு தகுந்தாற்போல் தன் பேச்சு சாதுரியத்தால்(எதிரியின்) கர்னனின்  வாயை மூடினான் தந்திரம் தெரிந்த கிருஷ்னன். ஈமக்கிரியை செய்வதுபோல் பாசாங்கு செய்து
அனைவரையும் நிம்மதி அடையச் செய்தான் கிருஷ்னன்

43-பீமன்-இடும்பி திருமணம்

காட்டில் மறைந்து வாழும் பாண்டவர்களில் தனியே பழம் பறிக்கச் சென்ற பீமனை இடும்பன் தங்கை இடும்பி வழி மறிக்கிறாள்.தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறாள், ஆனால் இடும்பி அசுர குலத்தைச் சார்ந்தவள்.எனவே நாங்கள் திருமண ஏற்பாடு செய்ய முடியாது என  குந்தி அறிவித்து விடுகிறாள் .செய்வதறியது திகைத்துப்போன இடும்பி வியாசரை அணுகி முறையிடுகிறாள்.

வியாசர் வார்த்தையை தட்ட  பாண்டவர்களால் முடியாது என நன்கு தெரிந்து வைத்திருந்த இடும்பி பீமனை மணமுடித்தே தீர்வது என அடம் பிடித்து வியாசரை,பாண்டவர்களிடம் அழைத்துச் செல்கிறாள்.

வியாசர், குந்தியிடம்,‘ இடும்பி நற்குலத்தைச் சர்ந்தவள்,இவளை மணமுடித்தால் உங்களுக்கு அவளால் பல நன்மைகள் ஏற்படும் என கூறியதை கேட்ட பாண்டவர்கள் பீமனுக்கு இடும்பியை மணமுடிக்க சம்மதிக்கின்றனர்.

44-கிருஷ்னன்-ருக்மணி திருமணம்

தர்மனின் முடி சூட்டு விழாவில் குந்தியின் அண்ணன் மகள் சுபத்திரையை கண்ட ,அர்ச்சுனன்,காதல் வயப்படுகிறான்.
இதை உணர்ந்த கிருஷ்னன்,இதை பயன் படுத்தி தன் அண்டை நாட்டு சத்ரிய குல இளவரசியான ருக்மணியை தனக்கு  மனைவியாக்க அ‍ர்ச்சுனன் உதவியை நாடுகிறான்.ருக்மணி கிருஷ்னனின் பக்தை.ஆனால் ருக்மணியை பக்கத்து நாட்டு  சத்ரிய மன்னனா ஜராசந்தன்  எனும் பராக்ரமாசாலியின் வளர்ப்பு மகனான சிசு பாலன் என்கிற சத்ரிய இளவரசனுக்கு மணமுடிக்க ருக்மணியின் அண்ணன் ருக்மி தீர்மானிக்கிறான்.,

இதை அறிந்த கிருஷ்னன்,ருக்மணியை கடத்தி வந்து திருமணம் செய்ய திட்டமிடுகிறான், இதற்கு அர்ச்சுனன் உதவியை நாடுகிறான். அர்ச்சுனன் மாறு(பெண்) வேடம் பூண்டு,விதர்ப நாட்டு அரண்மனையில்,  சிசு பாலனுக்கு மண முடிக்க தயாராக இருக்கும் ருக்மணியை அர்ச்சுனன் கடத்தி வந்து கிருஷ்னனிடம் ஒப்படைக்கவேண்டும்.

திட்டமிட்டபடி கோயிலுக்கு வரும் ருக்மணியை கடத்தவேண்டும்.ருக்மணியை கடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. கோயிலுக்கு ருக்மணியின் அண்ணன் ருக்மி காவலாக வருகிறான்.கோயிலின் புறவழியில் குதிரையை நிறுத்திவிட்டு ,கர்ப கிரகத்தில் பெண்வேடமிட்டு இருக்கும் அர்ச்சுனன், ருக்மணியை சந்தித்து கிருஷ்னனின் கடத்தல் நாடகத்தை தெறிவிக்கிறான்.

ருக்மணி மனம் பூரிப்படைகிறது,கோயிலின் முன் வாயிலில் தங்கைக்காக காத்துக் கொண்டிருக்கும் ருக்மியை ஏமாற்றி விட்டு அர்ச்சுனனும் ருக்மணியும் குதிரைமீது ஏறி தப்பிக்கின்றனர். ருக்மணிக்கு,தன் பக்கத்து நாட்டு இளவரசனான சிசு பாலனுக்கு அடுத்த நாள் காலை திருமணம் நடக்க உள்ளது.

இந்நிலையில் ருக்மணியின் அண்ணன், ருக்மிக்கு தன் தங்கை வேற்று சாதி பையனோடு(யாதவன்) ஓடிப்போனாள் என்றால் அந்த அவமானம் தாங்க முடியாமல் தவிக்கிறான்.கிருஷ்னனையும் ருக்மணியையும் துரத்துகிறான் கிருஷ்னனை தன் எதிர் நின்று போரிட்டு ,அதில் வெற்றி பெற்றால், ருக்மணியை அழைத்துச் செல்லலாம் என்கிறான்.ஆனால் கிருஷ்னன் போரிடாமல் ஒரு கோழையைப் போல் ஒடுகிறான்.     

கிருஷ்னனை,ஒரு சிலர் பிராமண குலம் என்பார்கள்,மற்றவர் யாதவ குலம் என்பர்.எது எப்படியோ கிருஷ்னன், மகாபாரதத்தில் கற்பனையாக இணைக்கப்பட்ட கடவுள் அவதாரம்.யாரும்(கடவுள்)கிருஷ்னனை நேரில் பார்த்தது இல்லை. கதையை உன்னிப்பாக படிப்பவர்கள் இதை நன்கு உணரலாம்.கதை கேட்கும் மக்களை மெய்மறக்கச் செய்யும் விநோதமான கதாபாபத்திரம் தேவை ,அந்த வகையில் மக்களின் சுவாரசியத்திற்கு குறைவில்லாமல் கிருஷ்னனின் மாயா ஜாலங்கள் நிறைந்த சேட்டைகள் உயிரூட்டப்பட்டு இன்று அது நிஜமாகிவிட்டது.

கிருஷ்னன்,தன் போச்சுத் திறமையால் சாதுரியமாக பேசி ,எதிரியிடம் அன்பு செலுத்தி காரியங்கள் சாதிப்பான்,மாயம் ,மந்திரம் என்பது எதுவும் இல்லை அன்பினால் சாதிக்க முடியாயதது எதுவும் இல்லை, என கிருஷ்னனே பல இடங்களில் கூறுகிறான்.அதாவது கடவுள் அவதாரம் எனும் பொய் என்பது உண்மையாகிவிட்டது.(1)

அஸ்த்தினாபுரம்,,துவாரகை மற்றும் மதுராவில் பாண்டவர்கள் இறந்து போய் விட்டார்கள் என்பது பொய் எனவும் அவர்கள் விராட மன்னனிடம் தஞ்சமடைந்தனர் எனும் செய்தி பரவ தொடங்கியது. ஆனால் பாஞ்சாலத்தின் துருபத மன்னனுக்கு பாண்டவர்கள் இறந்து விட்டார்கள் எனும் சேதியை கேட்டு மயக்கமடைந்து விட்டான்.

தவமாய்  தவமிருந்து தன் எதிரிகளை கொல்ல சரியான வாரிசுகள் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்திருந்த வேளையில் இதுபோன்று ஒரு செய்தி துருபதனை பெரும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது. ஆனால் அக்கினிக் குண்டத்தில் பிறந்த துருபதன் புதல்வி திரவுபதி பாண்டவர்கள் இறந்தார்கள் எனும் செய்தியை நம்ப மறுக்கிறாள்.தான் நிச்சயம் அர்ச்சுனனை மணந்தே தீருவேன் என தன் மனம் கூறுவதாக தன் தந்தை துருபதனிடம் உறுதிபடக் கூறுகிறாள்.அதைக் கேட்ட துருபதன் ஆனந்தம் அடைந்தான்.

இதற்கிடையே பாண்டவர்கள் இறந்து போனார்கள் அடுத்து தனக்கு இளவரசு பட்டம் சூட்டுவதில் என்ன சிக்கல் வந்துவிடப் போகிறது எனும் எண்ணத்தில் துரியதனன்,தன் நண்பன் கர்னனிடம் சிம்மாசனம் செய்யும் பொறுப்பை ஒப்படைக்கிறான்.

இதை தெரிந்து கொண்ட பீஷ்மர் இது எப்படி முறையாகும் எனும் கோணத்தில் திருதராஷ்ட்ரனிடம் வினவுகிறான்.ஆனால் இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது பெரியப்பா என திருதராஷ்ட்ரன் கூறிவிடுகிறான்.விதுரன் மூலமாக பாண்டவர்கள் உயிருடன் இருக்கின்றனர் எனும் சேதியை மறைக்க வேண்டும் என்பதை மறந்து,உளறி விட்டோமோ என நினைத்து தன் பேச்சை மாற்றுகிறான் பீஷ்மன்.

சத்ரியர் குலத்தில் பிராமணர் ஆதிக்கம் செலுத்தியதின் விளைவு அப்பொழுது பீஷ்மனுக்கு கைகொடுத்தது. அதாவது குடும்பத்தில் ஒருவர் இறந்தால் அடுத்து குடும்பத்தில் நடக்கவிருக்கும் சுப காரியங்களை ஒரு ஆண்டுக்குத் தள்ளிப்போட வேண்டும் எனும் மூடக்கருத்து .அதாவது ஒரு ஆண்டின் முடிவில் அவர்கள் நினைவு நாள் அனுசரித்த பிறகே நல்ல காரியம் நிகழ்த்தப் படவேண்டும் என பீஷ்மன் அவையில் எடுத்துரைக்கின்றான். அதை கேட்ட அவையினர் அமைதியானார்கள்.

ஆனால் பீஷ்மன் அவையை விட்டு அகன்ற பின் துரியோதனன்,தான் அரியணை ஏறும் எண்ணம்ஈடேறாமல் போய்விடுமோ என நினைத்து கொதிப்படைந்தான், கையில் கிடைத்த பொருட்களை யெல்லாம் போட்டு உடைத்தான். திருதராஷ்ட்ரனும் பிள்ளையை சமாதானப்படுத்த தெரியாமல் திணறினான். சகுனி அவன் கோபத்தை தணித்தான்.
ஆக்கப் பொறுத்தாயே துரியோதனா ஆறப் பொறுத்திரு.எல்லாம் நல்லபடி நடக்கும்.என மாமன் சொன்னதைக் கேட்ட துரியோதனன் அமைதியானான்.

45-பகாசூரன் வதம்

கானகத்தில் சுற்றித்திரிந்த பாண்டவர்கள் வியாசரின் அறிவுரை பேரில் ஏகச்சக்காரபுரம் சென்று அங்கே உபாயர் எனும் அந்தணர் வீட்டில் தங்கி பிச்சை எடுத்து பிழைப்பை நடத்துங்கள் என கூறுகிறார். அந்த ஊரில் வாழும் பகாசூரன் எனும் அசுர பலம் கொண்டவன், நித்தமும் ஒவ்வோர் வீட்டிலிருந்தும் சகல மரியதையுடன் சுவையான உணவு செல்ல வேண்டும்,அவ்வாறு வரவில்லை யெனில் அந்த வீட்டுக்கே சென்று அடித்து நொறுக்கிவிடுவான்.

இதற்கு அந்த நாட்டு மன்னனும் அடக்கம்.எனவே செய்வதறியாது அந்தணர் குடும்பம் அரண்டு போய் உள்ளது.இதைக் கேட்ட குந்தி மனம் இறங்கி,
நாங்கள் உங்கள் ஆதரவுடன் உங்கள் இல்லத்தில் தங்கியுள்ளோம்,உங்களுக்கு ஒரு ஆபத்து என்றால் நாங்கள்,எங்களால் ஆன உதவியை செய்கிறோம் கூறுங்கள்என அந்தணர் தம்பதியரை நோக்கி வேண்டுகிறாள்.

அதீதியாய் வந்தவர்களை ஆபத்துக்குதவ அழைப்பது பாவம் என அந்த அந்தணர் தடுக்கிறார்.இருப்பினும் குந்தி,
என் மகன் பீமன், அசுர பலம் கொண்டவன்,என் தந்தை நாகராஜனின் ஆசிபெற்றவன்,ஒரு ஆனையின் பலம் கொண்டவன்.ஆயிரம் பாம்புகளின் ஆற்றல் பெற்றவன் எனவே தாங்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம் இதை எங்கள் கடமையாக கருதுகிறோம்என சொன்னதும் பீமனை, அந்தணர் பகாசூரனிடம் விருந்து எடுத்துச் செல்ல அனுமதி வழங்கினான்.

பீமன் பகாசூரனையும் அழித்தான், ஏகசக்கராபுர, மன்னனும், மக்களும்,இவ்வளவு பல சாலிகளாக திகழ்கிறார்களே! இவர்கள் பாண்டவர்காளாக இருப்பார்களோ? என ஐயுறுகின்றனர்.

46-திருஷ்ட்டதூமனன்-குருகுலவாசம்

திருபத மன்னன்,தன் அக்னி புத்தரி துரவுபதி கொடுத்த வாக்குறுதியில் மகிழ்ந்திருக்கும் வேளையில்,தன் மகன் துஷ்ட்டதியாமனனை தகுந்த குரு விடம் பயிற்சி பெற யாரிடம் அனுப்பலாம் என யோசிக்கும் வேளையில்,தன் அண்ணனை,
துரோணரிடம் கல்வி பயில அ‍னுப்பலாம்,என்று திரவுபதி கூறியதை துருபதன் ஏற்க மறுக்கிறான்.

தவமிருந்து மகனைப்பெற்றது துரோணரைக் கொல்லத்தான்,அவனிடமே கல்வி பயில அ‍னுப்புவதா ?இது இரட்டை துரோகம் ஆகாதா? என்னால் முடியாது என மறுத்து விடுகிறான்.

இதை மறுத்த திரவுபதி, ‘கல்வி பயிற்றுவிப்பது துரோணரின் கடமை,இவர் இல்லை யென்றாலும், அண்ணன் கல்வி பயில இன்னொரு குருவை தேடித்தான் செல்ல வேண்டும்,அஸ்திர வித்தைகளை கற்றபின் அதை துரோணரிடம் காட்டித்தானே ஆகவேண்டும். சிவனிடம் வரம் பெற்றவர்கள் அதை சிவனிடமே பரிட்சித்து பார்க்கவில்லையா?அதை உணர்ந்துதானே தன் பக்தர்களுக்கு சிவன் அருளினார்.துரோணரும் அப்படித்தான் எடுத்துக் கொள்வார், எனவே துரோணரிடம் அனுப்புங்கள்’

என தன் மகள் கூறியதைக்கேட்ட  துருபதன் திருப்தி அடைந்து அவ்வாறே தன் மகனை துரோணரிடம் அழைத்துச் செல்கிறான்.தான் மறைந்திருந்து, தன் மகனை மட்டும் துரோணரிடம் அனுப்பி பாடசாலையில் சேர சொல்கிறான் துருபதன். துஷ்ட்டதியமனனும் துரோணரை அணுகினான்.

துரோணரோ இவன் யாருடைய  மகன் என உணர்ந்து கொண்டு,
‘உன் தந்தையை அழைத்துவா அப்பொழுது தான் உன்னை சேர்த்துக் கொள்வேன்’எனக் கூறுவதை மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்த துருபதன், துரோணரை நேரில் சந்திக்கிறான்.

அப்பொழுது  துருபதன், ‘நம்மிடையே இருக்கும் பழைய பகையை நினைத்து, உங்களை சந்திக்க மனம் மறுக்கிறது.’ எனக் கூறியதும்

துரோணன், ‘வஞ்சம் தீர்ப்தும்,பழி வாங்குவதும் சத்ரியரின் குணங்கள்.இதை தெரிந்த எனக்கு உன் மீது எப்படி  கோபம் வரும் நண்பா?, எப்பொழுது உன் நாட்டை உன்னிடமிருந்து உனக்கே திருப்பி அளித்தேனோ அப்பொழுதே எனக்கு உன்மீது இருந்த கோபம் தணிந்தது துருபதா’ என துரோணர்,துருபதனை கட்டியணைத்தான்.

இதுதான் பிரமணருக்கும் சத்ரியர்களுக்கும் உள்ள  மாறுபட்ட  குணங்கள்.இன்றும் இவை நீடிக்கிறது என்பதை நாம் உணரத்தான் வேண்டும்.இந்தியா முழுவதும் எங்கெல்லாம் சத்ரியர்களும்,யாதவர்களும் இருக்கின்றனறோ, அங்கெல்லாம் பிராமணர்கள் நீக்கமற நிறைந்திருப்பர். இப்பொழுதெல்லாம் பிராமணர்கள், சத்ரியர்களை நம்பி இருப்பதில்லை எனினும் சத்ரியர்கள், தங்கள் இல்ல நிகழ்ச்சிகளை பிராமணர்கள் இல்லாமல் முடிப்பதில்லை.இன்றும் இந்நிலை நீடிக்கிறது.

துஷ்ட்டதியாமனை,துரோணர் தன் வீட்டில் அனுமதிக்கும் வேளையில் துரோணரின் மனைவி மற்றும் மகன் இருவரும் வெளியில் சென்றிருந்தனர். துரோணர் வீட்டில் துஷ்ட்டதியாமன் தனியாக இருக்கும் வேளையில் தாயும் மகனும் உள்ளே வந்து பார்த்த போது ,துஷ்ட்டதியாமன் சிவனுக்கு பூசை செய்து கொண்டிருந்தான். இதைக்கண்ட இருவரும் கோபத்தின் உச்சிக்கே போனார்கள். யார் நீ? இங்கே எதற்கு வந்தாய்? என சத்தம் போட்டனர்.
துரோணரை கொல்ல அவதாரம் எடுத்தவன் துஷ்ட்டதியாமனன், என்பது யாவரும் பேசிக் கொள்வது.
                                         
இந்த செய்தி துரோணருக்கு எப்படி தெரியாமல் போனது? குழம்பிப் போன இருவரும் துஷ்ட்டதியாமனனை,வெளியே தள்ளினார்கள். அந்த நேரத்தில் துரோணர் வீட்டுக்கு வருகிறான்.வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த துஷ்ட்டதியாமனனை பார்த்து, தன்னை நாடி குருகுலம் பயில வந்தவனை அவமதித்த தன்னுடைய மனைவி மற்றும் மகனைப் பார்த்து கோபம் அடைந்தான்.

என்ன இருந்தாலும்,ஒரு ஆசிரியனான தன்னை தேடிவரும் சீடர்களுக்கு தான் கற்ற அஸ்திர சஸ்த்திர வித்தைகளை சொல்லிக் கொடுப்பதுதான் ஒரு குருவிற்கு தர்மம்.அந்த வகையில் தனது பால்ய நண்பனின் மகனுக்கு தன்னுடைய வித்தைகளை கற்பிப்பது எனது கடமை
என தன் மகன் மற்றும் மனைவியிடம் துரோணர் எடுத்துரைக்கின்றான். எனினும் துரோணரின் கருத்துக்களை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். தன்னுடைய கருத்துக்களை மனைவியும் மகனுமே ஏற்க மறுத்தால் மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள் எனும் கோணத்தில் நினைத்த துரோணர், மனைவியையும் மகனையும் வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறான்.  

செய்வதறியாது திகைத்து நின்ற துஷ்ட்டதியானனை (திருஷ்ட்டதியாமனன்) அருகில் அழைத்து, அமரவைத்து அவன் பசிக்கு துரோணர் தன் கையால் உணவைப் பறிமாறுகிறான்.திருஷ்ட்டதியாமனனுக்கு குரு குலவாசம் முடிந்தது.

இதை உணர்ந்த துரோணரின் மனைவியும்,மகன் அஸ்வத்தாமனும் திருஷ்ட தியாமனிடம் குரு காணிக்கையாக அவனது வலது கை பெருவிரலை காணிக்கையாக பெற வேண்டும் என துரோணரை வற்புறுத்துகின்றனர்.

ஏகலைவனிடம் பெருவிரலை பெற்றது போல் திருஷ்டதியாமனிடம் பெற முடியாது காரணம் ஏகலைவனும் திருஷ்ட்ட தியமனும் ஒன்றாகி விட முடியாது.அஸ்த்திர சஸ்த்திர வித்தைகளை சத்ரியர்கள் மட்டுமே பெற தகுதி பெற்றவர்கள்.அந்த வகையில் தாழ்ந்த சாதியான ஏகலைவன் ஒரு வேடன், அவன் அவ்வாறு என்னிடம் இருந்து வித்தைகளை கற்றது தனக்கு இழைத்த துரோகமாக கருதி,
ஏகலைவனுக்கு தண்டனைத் தர விரும்பினேன் அவன் கட்டை விரலை காணிக்கையாக பெற்றேன் துரோணர் இவ்வாறு கூறுகிறான்.        

திருஷ்டதியமனன் குரு குலத்தை விட்டு வெளியேறும் நேரம் வந்துவிட்டது.துரோணரும் தாங்கள் எதிர்பார்த்தது போலவே சீடனிடம் வலது கை பெறு விரலை குரு காணிக்கையாக  கேட்பான் என தாயும் மகனும் நினைத்திருந்தனர்.ஆனால் துரோணர் அவ்வாறு செய்யவில்லை,

‘தன்னிடம் குருகுல வாசம் மூலம் வித்தைகள் கற்ற தன் சீடன் போரிட்டு தன்னையே வென்றாலும் அது தனக்கு பெருமையே எனவே  தன் உயிர், குருவை மிஞ்சிய சீடனிடம் போவதை தான் பெருமையாக கருதுவதாக மூவர் முன்னே துரோணர் திட்டவட்டமாக கூறிவிடுகிறான்.

சத்தரியர்களுக்கும்,பிராமணர்களுக்கும் உள்ள குண வேறுபாடு இப்படித்தான் இருக்க வேண்டும் என அ‍ன்றே  துரோணர், கூறிவிட்டான். பரத்வாஜர்-பரசுராமன் கட்டிக்காத்த கொள்கையான,“அந்தணர் என்பவர் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்த வேண்டும் எனும் கோட்பாட்டை உடைத் தெறிந்தவன் துரோணன்.

தங்களின் நவீன போர் பயிற்சியான தனூர் வித்தையை பிராமணர் தவிர யாருக்கும் சொல்லித் தரக்கூடாது என்பதில் உருதியாக இருந்த தன் முன்னோர்களின் கோட்பாட்டை மீறியவன் ,அந்தணர்களுக்கு தெரிந்த வித்தைகளை சத்ரியர்களுக்கு மட்டும் சொல்லிக் கொடுத்து அதன் மூலம் தங்கள் வாழ்வாதாரங்களை பெருக்கிக் கொள்ளலாம் எனும் சித்தாந்தத்தை புகுத்தியவன் துரோணர்.அது இன்றும் நீடிக்கிறது.

47-திரவுபதி சுயம்வரம்

துருபதன் தான் தவமிருந்து பெற்ற அக்னி புத்ரியான  துரவுபதிக்கு சுயம்வரம் நடத்த தீர்மானிக்கிறான்.தான் பிறப்பெடுத்ததின் நோக்கமே அர்ச்சுனனை மணப்பது தான் என தன் மகள் திரவுபதி கூறியதைக்கேட்ட துருபதன் பூரிப்படைகிறான்.

சுயம்வரம் பிரகடணப்படுத்துங்கள் எப்படியும் தன்னை மணக்க அர்ச்சுனன் வருவான் என மகள் சொன்னதை துருபதன் நம்பி செயலில் இறங்குகிறான். கிருஷ்னனும் துருபதனைப் பார்த்து துரவுபதியின் சுயம் வரத்தை நடத்துமாறு வேண்டுகிறான்.

48-அர்ச்சுனனின் சத்ரிய தர்மம்

நாட்டில் எத்தனையோ ராஜபுத்திரர்கள் இருக்கும் போது அர்ச்சுனனை யே தான் தான் மணக்கவேண்டும் என ஏன் விரும்புகிறீர்கள்?’ என திரவுபதி, துருபதனை பார்த்து வினவும்போது,துருபதன் கூறுகிறான்,

‘துரோணரின் பேச்சைக்கேட்டு அர்ச்சுனன் என்னை சிறைபிடித்தான்.துரோணரிடம் என்னை ஒப்படைத்தான். அப்பொழுது துரோணரின் மகன் அஸ்வத்தாமன் தன் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச் சொல்கிறான். கழுத்தைப் பிடித்து என்னை அழுத்துகிறான். அப்போது குறுக்கிட்ட ‍அர்ச்சுனன்,
ஒரு சத்திரியனை இப்படி அவமானப் படுத்தக் கூடாது என சொல்லவதைக் கேட்ட ‍அஸ்வத்தாமன், ‘தன் தந்தையை அவமானப்படுத்தியவனை காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச் சொன்னால் என்ன தவறு? என ‍அர்ச்சுனனைப் பார்த்து கேட்கிறான் அந்நேரத்தில் அர்ச்சுனன்,

மணி முடி தரித்த மன்னன் இறைவனுக்கு சமமானவன் எனவே அவனது மணிமுடி மண்ணில் படக்கூடாது.சத்தரிய தர்மம் வேறு,குரு தர்மம் வேறு என கூறுவதை கேட்டுக் கொண்டிருந்த துரோணர்,

அர்ச்சுனன் கூறுவது தான் சரி ,நான் மகன் சொல்கிறான் என்று அவன்  பேச்சைக் கேட்டு மயக்கத்திலிருந்து விட்டேன் ,அர்ச்சுனா,மணி முடி தரித்த மன்னன் ஒரு அந்தணன் காலில் விழுவது சரியல்ல;அது தர்மமும் அல்ல என தன் மகன் அஸ்வத்தாமனுக்கு அறிவுறுத்தினான். அப்பொழுதே நான் அர்ச்சுனனை என் மானசீக மாப்பிளைளயாக ஏற்றுக் கொண்டேன்.

உதவி செய்த ஒருவனுக்கு பொன் பொருள் என எது வேண்டுமானாலும் தரலாம் ஆனால் அதுவெல்லாம் உதவி செய்தவன் மனதை தன்பால் இழுக்க முடியாது. உதவியவன் உள்ளத்தையும் உடலையும் ஒருசேர தாம் பெற வேண்டுமானால் தான் பெற்ற மகளையே உதவியவனுக்கு அர்ப்பணம் செய்வதுதான் முறை’ என துருபதன் தன் மகளுக்கு நீண்டதொரு விளக்கமளித்தான்.

இதற்கிடையே ஏகச்சக்கரா புரத்திலிருந்து  பாண்டவர்கள் வெளியேறும் போது வியாசரை காண நேரிடுகிறது.வியாசரிடம் குந்தி,
‘சுவாமி!அஸ்த்தினாபுரம் வாழ வந்த  காந்தாரிக்கும் எனக்கும் தாங்கள் தான் ஆசிர்வாதம் செய்தீர்கள்.ஆனால் அவள் மட்டும் அரண்மனை வாழ்க்கை  வாழ்வது மட்டுமல்ல தன் மக்களுடன் ஆனந்தமாக இருக்கிறாள். எனக்கு மட்டும் ஏன் உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி இருக்க இடமின்றி இந்த நாடோடி வாழ்க்கை ?’

அப்பொழுது வியாசர், ‘குந்தி,காந்தாரி அரண்மனையில் வாழ்ந்தாலும் அவள் மகிழ்ச்சியாக வாழ்கிறாள் என உனக்கு யார் சொன்னது?அவளுக்கு அமைந்தது போல் உலகில்  அதுபோல் ஒரு வாழ்க்கை யாருக்கும் அமையக்கூடாது.கண்ணிருந்தும் ,கண்ணில்லா கணவன் தனக்கு அமைந்து விட்டதை எண்ணி தன் கண்களையே குருடாக்கி வாழ்கிறாளே அது அவளுக்கு அவளே இட்டுக் கொண்ட பெரிய தண்டனை என்பதை நீ உணரவில்லையா? உலகில் இது போன்று குறைகள் உள்ள பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.அது அவரவர் மனம் போல் அமைந்துவிட்ட வாழ்க்கை. இதில் யாரை நொந்து என்ன பயன்?’இப்படி விளக்கத்தை பெற்ற குந்தி,

அடுத்து தாங்கள் யாது செய்வது? என வியாசரைப் பார்த்து வினவுகிறாள்.
‘பாஞ்சால மன்னன் துருபதன் தன் மகள் துரவுபதிக்கு சுயம் வரம் அறிவித்து உள்ளான்.அவள் அறிவும் அழகும் ஒரு சேரப்பெற்றவள் என்று வியாசர் அதோடு நிறுத்திக்கொள்ள வில்லை.திரவுபதியின் அங்க அவயங்களை ஒவ்வொன்றாக வர்னிக்கிறார்.

இந்த வர்னணையைக்க கேட்ட ஐவரும் தங்கள் மெய் மறந்து போனார்கள்.இரவெல்லாம் தூங்காமல் ஐவரும் பிதற்றிக் கொண்டிருந்தனர். இதை கண்ணுற்ற தங்களின் தாயான குந்தி, ‘இந்த நள்ளிரவில் தூங்காமல்  என்ன யோசனை வேண்டி உள்ளது? .போய் தூங்குங்கள்’என அன்பாக கடிந்து கொண்டாள்.
                    ******

49-பாஞ்சாலம் நோக்கி துரியன்

பாஞ்சால மன்னன் திருபதன் மகள் துரவுபதிக்கு சுயம்வரம் செய்தி ஒலை அஸ்த்தினாபுரம் அரண்மனைக்கு வருகிறது.திருதராஷ்ட்ரன் அவைக்கு தன் மகன் துரியோதனனை வரவழைக்கிறான்,சகுனி கர்னன்,பீஷ்மர்,விதுரன் அனைவரும் அவைக்கு வருகின்றனர்.தன்னை அவைக்கு வரவழைத்த காரணத்தை அறிய துரியோதனன் முற்படுகிறான்.திருதராஷ்ட்ரனோ துரியோதனனைப் பார்த்து,

துரியோதனா, பாஞ்சால மன்னன்,துரவுபதிக்கு சுயம்வரம் நடத்தப்பட உள்ளதாக செய்தி வந்துள்ளது அதற்கு நீ செல்ல வேண்டும். என பணிக்கிறான்.அதற்கு துரியோதனன்,
இப்ப திருமணத்திற்கு என்ன அவசரம்?எனக்கு இளவரசு பட்டம் சூட்டலாமே என தன் தந்தையைப் பார்த்து வினவுகிறான்.

திருமணத்திற்கு பிறகு பட்டம் சூட்டுவதை பார்த்துக் கொள்ளலாம் என தன் மகனைப்பார்த்து அக்கரையோடும் அன்போடும் கூறும் வார்த்தைகளை கேட்ட துரியோதனன் தன்னால் தட்ட முடியாமல் சுயம்வரம் செல்ல இசைகிறான்.சகுனி, துர்ச்சாதனன்,கர்னன் இவர்களோடு துரியோதனன் சுயம்வரம் செல்வதைப்பற்றி கலந்தாலோசிக்கிறான்.

திரவுபதியின் சுயம்வரத்திற்கு வரும் இளவரசர்கள் யாவரும் எளிதில் வெற்றிபெற முடியாத அர்ச்சுனன் மட்டுமே வெல்லக்கூடிய ஒரு தனூர் வித்தையை போட்டியில் வைக்க தன் அரண்மனையில் திருபதன், திருஷ்ட்டதியாமனன், திரவுபதி ஆகியோர் என்ன போட்டி வைக்கலாம் அதற்கு யாரிடம் ஆலோசனைப் பெறலாம் என்று யோசனை செய்தனர். இதற்காக மீண்டும் துரோணரிடம் செல்வதென்று முடிவு செய்யப்பட்டது.

துரோணரிடம் சென்ற துருபதன்,தான் கொண்டுள்ள பகையை மறந்து தன்னை மன்னிக்கும்  படி வேண்டுகிறான்.துரோணரோ,

மறப்பதும் மன்னிப்பதும் அந்தணர் குணங்கள். உண்மையான அந்தணனுக்கு வஞ்சம் தீர்ப்பது, சத்ரியர்கள் மீது பகைமை கொள்வது போன்ற குணங்கள் அவன் வாழ்க்கைக்கு  உதவாது.
அந்த மாதிரி குணங்கள்,ஒரு உண்மையான அந்தணனுக்கு அழகல்ல.என துருபதனை நட்பு பாரட்டி வரவேற்றான். மீண்டும் தன்னை மதித்து வந்தபோதே தான் பழைய பகையை எல்லாம் மறந்து விட்டதாக துருபதனிடம் தெரிவிக்கிறான்.

தன்னை நாடி வந்த நோக்கம் யாது என துரோணன் வினவுகிறான், தன் மகள் துரவுபதிக்கு சுயம்வரம் வைத்துள்ளதாகவும் அதற்கு அர்ச்சுனன்  மட்டுமே வெற்றி கொள்ளும் ஒரு தனுர் வித்தை யாது? என துரோணனிடம் திருபதன் வினவுகிறான்.
 (இதன் தொடரை புதிய அஞ்சல் 7ல் காணவும்)

No comments: