98-பீஷ்மன் வீழ்ச்சி
அன்று 10 –ம் நாள்
தேரில்அர்ச்சுனனும் சிகண்டியும்
இணைந்து நின்றதால் பீஷ்மனால் போர் செய்யமுடியவில்லை,இதை பயன்படுத்தி அர்ச்சுனன் பீஷ்மனை அம்புகளால் துளைத்தான் போர்க்களத்தில்
அம்புகளின் படுக்கையில் படுக்கவைத்தான்.
பீஷ்மனுக்கு உயிர் ஊசாலிடிக்
கொண்டிருக்கின்றது.
துரியோதனன்,கிருஷ்னன் முதலானோர் இறுதி மரியாதை செலுத்துகின்றனர்.அஸ்த்தினாபுர
அரண்மனையில் துரோணர் தனித்து காணப்படுகிறார்.அவர் மகன் அஸ்வத்தாமன் வணங்கி
வாழ்த்துமாறு வேண்டுகிறான்.துரோணர் நலமுடன் வாழ வாழ்த்துகிறான்.
அஸ்வத்தாமன்,‘தந்தையே போரில் நாம் கவுரவர்களை எதிர்த்து
போரிடவேண்டும்.துரியோதனன் தலையை துண்டிக்க வேண்டும். நான் போரில் வெற்றிபெற
வாழ்த்துங்கள் தந்தையே!’
‘வாழ்த்துவபர்களை,வாழ்த்துப்பெறுவபவர்கள் நிர்பந்திக்க
முடியாது .அவரவர் மனதில் என்ன உள்ளதோ அதுதான் வாய்மூலம் வரும்.நீ நினைப்பது
நடக்காது மகனே! நான் இறுதி வரை
பீஷ்மனைப்போல் கவுரவர்கள் பக்கம் தான் இருக்க முடியும்.நாம் சத்ரியர்கள் அல்ல,
பிராமணர்கள் ஆயுதம்
ஏந்தக்கூடாது.எனும் கோட்பாட்டினை விலக்கி, இந்த துரோணன் செஞ்சோற்றுக்கடனுக்காக வில்லேந்தும் நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளான்.நாம் கவுரவர்களுக்காக போரிட்டு மடியலாம் இல்லையென்றால் வரலாறு
நம்மை நிந்திக்கும்’
இந்நிலையில் துரியோதனன் துரோணரை
சந்திக்க வருகிறான்.கூடவே கர்னன்,மற்றும் துர்ச்சாதனன் ஆகியோர்
வருகின்றனர்.
ராஜ குரு பதவி என்பது,தலைமை அமைச்சருக்கு சமமான பதவி.போர் சூழலில்
ராஜகுருவும் போர்க்களத்தில் இறங்கலாம்.
அந்த எண்ணத்தில் தான் துரியோதனன்
பீஷ்மனின் தளபதிப் பொறுப்பை துரோணர் ஏற்க வேண்டும் என விண்ணப்பிக்கிறான்.திக்கற்ற
நிலையில் இருக்கும் துரியோதனனுக்கு குருகுல குருவான துரோணரிடம்,கர்னன் தான் போரில் கலந்து கொள்ளவேண்டும் எனும் ஒரு
விண்ணப்பம் வைக்கவிரும்புகிறான்.கர்னன் போர்க்களத்தில் பங்குபெற துரோணரின் அனுமதி
பெற வருகிறான்.
துரோணர், சொல் கர்னா,‘தாங்கள் அனுமதி அளித்தால்
போர்க்களத்தில் அர்ச்சுனனை எதிர்த்து போரிடுவேன்’
‘அதுவே உன் விருப்பம் என்றால் தாராளமாக செய் கர்னா’
அன்று இரவு குருசேத்ர போர்க்களத்தில்
அம்பு படுக்கையில் படுத்திருக்கும் பீஷமனை வணங்க செல்கிறான்.பீஷ்மனை மண்டியிட்டு
கர்னன் வணங்குகிறான்.இதை பீஷ்மன் கவனித்து விடுகிறான்.அப்போது,
‘நீடூழி வாழ்க குந்தி மைந்தா!’
அதிர்ச்சி அடைந்த குந்தி மைந்தன்,
‘தங்களுக்கு நான் குந்தி மைந்தன் என முன்பே தெரியுமா,பிதாமகரே?
‘தெரியும்,’
‘அப்படியானால் என்னை ஏன் போரில்
அனுமதிக்க மறுத்தீர்கள்?’
‘சூரிய புத்தரா! நீயும் அர்ச்சுனனும்
போரிட்டால் இருவரில் ஒருவர் மரணிப்பது உறுதி என எனக்குத் தெரியும்,அதை தவிர்க்கவே
நான் அப்படி செய்தேன்’ மேலும் பீஷ்மன் தொடர்கிறான்,
‘கர்னா!நீ பாண்டவர்களோடு
சேர்ந்துகொள்,அதுதான் உனக்கு நல்லது’
‘அதெப்படி முடியும் பிதாமகரே,எது
தர்மம் எது அதர்மம் எனத் தெரிந்தும் தாங்கள் துரியோதனன் பக்கம் இருந்துதானே
போரிட்டீர்கள்,அதே காரணத்துக்காக நானும் துரியோதனன் பக்கம் இருந்து போரிடுவதுதான்
முறை,இல்லையோல் இந்த உலகம் என்னைப் ப`ழிக்கும்.’
துரோணரை துரியோதனன்
சந்திக்கின்றான்.போரில் தர்மனை கைது செய்தால் போரை முடிவுக்கு கொண்டுவரலாம் எனும்
யோசனையை தெரிவிக்கிறான்.அப்போது துரோணர்,‘நான் அப்படியே செய்கிறேன்,ஆனால் தர்மனுக்கு மரண தண்டனை
விதிக்க கூடாது எனில் நான் அவ்வாறு செய்கிறேன்.’
துரியோதனன்,தர்மனை கொல்லமாட்டேன் என உத்ரவாதம் அளிக்கிறான்.அப்போது
துர்ச்சாதனன்,‘அண்ணா ஏன் அப்படி கூறினீர்கள்?’
துரியோதனன்,‘அர்ச்சுனனை சுசர்மனால் வெல்ல முடியாது,என்பது எனக்குத்தெரியும்,உயிரோடு வந்தால் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’,என நய வஞ்சகமாக பதிலளிக்கிறான்.
அன்றிரவு போர்க்களத்தில் அம்பு படுக்கையில்
படுத்திருக்கும் பீஷ்மனைக்காண துரவுபதியும் அவள் மருமகள் உத்திரையும்
வருகின்றனர்.இறுதி மரியாதை செலுத்த நெய்விளக்கும்,மாவிளக்கும் ஏற்றி வணங்குகின்றனர்,இதை
கவனித்த பீஷ்மன்,
‘என் குல விளக்கே ,வம்ச விருட்சமே,நீ சுமங்கலியாக நலமுடன் வாழ
வாழ்த்துகிறேன் தாயே’
மேலும் வினவுகிறான்,‘அருகில் இருக்கும் சுமங்கலி யாரம்மா?’
‘இவள்தான் சுபத்திரைக்கும் அர்ச்சுனனுக்கும் பிறந்த
அபிமன்யுவின் மனைவி,உத்தரை பிதாமகரே’
‘போர்க்களத்தில் அபிமன்யுவின் வீரத்தைப்பார்த்தேன்
மகளே!அவன் சாதிக்கப்பிறந்தவன்,வரலாற்றில் அவன் இடம் பெறுவான்
மகளே!’
அடுத்தநாள் போர்
ஆரம்பிக்கிறது.தர்மனை துரோணர் கைது செய்யப்படப்போகும் செய்தியை ஒற்றன் பாண்டவர்கள்
போர்ப்படைத்தளபதியான துருபதனிடம் தெரிவிக்கிறான்.
‘தர்மன் என்ன பசுவா?கடத்துவதற்கு’துருபதன் கொதித்தெழுகிறான்,போர்க்களத்தில் தர்மனுக்கு பாதுகாப்பாக பீமனும்,அர்ச்சுனனும் நிற்க வேண்டும் என உத்தரவு போடுகிறான்.பாண்டவப்
படைகள்,கவுரவப் படைகள் மீது சீறிப்பாய்கின்றன,தர்மனைக் காப்பாற்றுவதற்கு. பீமனும்,அர்ச்சுனனும்
தர்மன் அருகே நிற்கின்றனர்.
இதைக்கண்ட தர்மன் ஆவேசமடைகின்றான்,‘தம்பிகளே நம் படைவீரர்கள் செத்து மடிகிறார்கள்,நீங்கள் இங்கே ஏன் நின்று கொண்டிருக்கின்றீர்கள்?
‘இது போர்ப்படை தளபதி துருபதன்
கட்டளை,நாங்கள் இங்கே நிற்க வேண்டும் ,தங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்பது
தளபதியின் கட்டளை அண்ணா’
‘எனக்கென்ன ஆயிற்று? எனக்கு ஏன் பாதுகாப்பு?’தர்மன் இப்படி வினவிக்கொண்டிருக்கும்
போதே துரோணரிடமிருந்து தர்மன் மீது அம்புகள் பாய்கின்றன.தர்மனிடம் இருக்கும்
ஆயுதங்கள் எல்லாம் ஒடிந்து போயின.
இதனை அறிந்த அர்ச்சுனன் துரோணரை
தாக்குகிறான் அர்ச்சுனனின் தாக்குதலை
சமாளிக்க முடியாமல் துரோணர் பின்வாங்குகிறான்.
அன்று இரவு துரோணர் ,துர்ச்சாதனன்,கர்னன்,திகர்த்த நாட்டு மன்னன் சுசர்மா மற்றும் சகுனி போர் வியூகம்
பற்றி ஆலோசிக்கின்றனர்.போர்க்களத்தில் தர்மனை கைது செய்ய வேண்டும் ,பின்பு போரை முடிவிற்கு கொண்டுவரலாம் என்பது திட்டம்.
சுசர்மா துரியோதனனிடம்,‘தர்மனை கைது செய்து பின் விடுவித்துவிடவேண்டும்’ எனும் நிபந்தனை விதிக்கின்றான். உடனே துர்ச்சாதனன்,‘அதெப்படி முடியும்?’
சுசர்மா பின்புறம் நிற்கும் துரியோதனன்
தன் தம்பியை கண்சிமிட்டி அடக்குகிறான்,‘சரி சுசர்மா அப்படியே செய்வோம்.ஆனால் ஏன் அப்படி செய்ய வேண்டும் என கூற
முடியுமா?’
‘அஸ்த்தினாபுரத்திற்கும் திகர்த்த நாட்டிற்கும் போர்
நடந்தபோது நான் கைது செய்யப்பட்டேன்,அவமானப்பட்ட
என்னை தர்மன் தான் விடுவித்தான்,அந்த நன்றிக்கடனுக்காக நான் எதிர்
உபயம் செய்யவேண்டும் அல்லவா?’
‘சரி அப்படியே செய்வோம்’துரியோதனன் மனதில் ஒன்று நினைத்துக்கொண்டு கபட நாடகம் ஆட நினைப்பதை அப்போது
சுசர்மா புரிந்து கொண்டானா என்பது தெரியவில்லை.
அர்ச்சுனன் தர்மன் அருகில்
இருக்கும் வரை கைது நடக்காது. என்பது
துரோணரின் கருத்து.எதிர்தரப்பிலும் இதே ஆலோசனைதான்
நடக்கிறது.
அப்போது கிருஷ்னனிடம் அர்ச்சுனன்,
‘என்னை வம்புக்கு இழுத்து தனியாக ஒண்டிக்கு ஒண்டியாக சண்டையிட சுசர்மா அழை(இழு)த்தால்
நான் மாட்டேன் என்று சொல்ல முடியாதே? நான் என்ன செய்வேன் கிருஷ்னா?’
ஒரு சத்ரியன் ,இன்னொரு சத்ரியனை
சண்டை போட அழைத்தால் வம்புக்கு அழைக்கப்பட்ட சத்ரியன் மாட்டேன் என்று சொல்ல
மாட்டான் ,சொல்லக்கூடாது–இது சத்ரிய குணம்.
இதை துரியோதனனும் அறிவான்,அர்ச்சுனனும் அறிவான்.ஆனால் கிருஷ்னன்,
‘அர்ச்சுனா,போர்க்களத்தில் நாம்
வெற்றி பெற வேண்டும் எனும் நோக்கம் தான் முக்கியம்,வீண் வம்பு வீண் கவுரவம்
நிலைநாட்ட ஆசைபடும் ஒரு சத்ரியனுக்கு போர்க்களத்தில் வெற்றி கிட்டாது.’
மேலும் கிருஷ்னன், ‘சுசர்மா
அழைத்தால் இருக்கும் இடத்தை விட்டு நகர மாட்டேன் ,முடிந்தால் நீ வந்து என்னிடம்
மோது என சொல்ல வேண்டியது தானே?’
அடுத்த நாள் போர் ஆரம்பிக்கிறது.
திட்டமிட்டப்படி சுசர்மா,அர்ச்சுனனை தனியாக சண்டையிட
அழைத்துச்செல்கிறான், துரோணன் தர்மனை நிராயுத
பாணியாக்குகிறான்,
பின்பு,பீமன் (இவனுக்கு வில்வித்தை தெரியாது என்பது துரோணருக்கு தெரியும்)கதையை
துண்டிக்கிறான்,அடுத்து நகுலன், சகாதேவனை நிராயுத பாணியாக்குகிறான்.
துரோணன் தர்மனை நெருங்கி
விட்டான்.தர்மன் கைது செய்யப்படுவது உறுதி எனும் நிலை வந்து விட்டது.துரியோதனன்
முகத்தில் சிரிப்பு.ஆனால் அர்ச்சுனன்,
துரோணர் அமைத்த சக்கர வியூகத்திலிருந்து தப்பி ஒரு நொடியில் தன் அண்ணன் தர்மன்
பக்கம் வந்து நிற்கிறான்.துரோணன் பின் வாங்குகிறான்.அன்றிரவு துரியோதனன் துரோணரை
கேள்விக் கணைகளால் துளைத்து எடுக்கிறான்.
‘குலகுருவே,கைது
செய்யும் தருணம் வந்தும் தாங்கள் ஏன் தர்மனை கைது செய்யவில்லை?உங்கள் விசுவாசத்தை நான் சந்தேகிக்கிறேன்.’
அப்போது துரோணன்,‘துரியோதனா ,நான்
உன் அடிமையல்ல,அஸ்த்தினாபுரத்தின் மீது எனக்கிருக்கும் விஸ்வாசம்
பீஷ்மனுக்கு குறைந்தது அல்ல. போர்க்களத்தில் வியூகம் அமைப்பது நான் தான்
.எனக்குத்தான் தெரியும் எது எப்போது செய்ய வேண்டும் என்று.நான் தர்மனை கைது செய்யு
அமைந்த நேரம் குறுகியது,அர்ச்சுனன் சக்ர வியூகத்திலிருந்து விடுபடுவது
தெரிந்து தான் நான் தர்மனை கைது செய்யவதை தவிர்த்தேன்’
99-சுசர்மன் மரணம்
அடுத்த நாள் போர்
துவங்குகிறது.திட்டமிட்டபடி,சுசர்மன் அர்ச்சுனனை வெகுதூரம்
அழைத்துச் செல்லவேண்டும்.
துரோணர் தர்மனை கைது செய்ய வசதியாக
தன் வில்லாற்றலால் தர்மனை சுற்றியிருக்கும் அவன் தம்பிமார்களை நிராயுத பாணியாக்க
முடியும்.ஆனால் அர்ச்சுனன் திரும்பி வந்து விட்டால் தர்மனை கைது செய்வது
துரோணருக்கு இயலாத காரியமாகிவிடும்.அதை விடுத்து அபிமன்யுவை சுற்றி வளைக்கும்
முயற்சியில் துரோணர் இறங்குகிறான்.சுசர்மனை ,அர்ச்சுனன் துரத்திக்கொண்டு போய் சாகடித்துவிடுகிறான்.`பின்பு தர்மனை நோக்கி வருகிறான்.
100-அபிமன்யு வதம்
போர்க்களத்தில் ஒரு சிறுவன் வெகு
வேகமாக முன்னேறி வருதை துரோணன் காண்கிறான்.துரோணரின் திட்டம் மாறிப்போகிறது.அந்த
சிறுவன் அர்ச்சுனனின் புதல்வன் அபிமன்யு என்பதை தெரிந்து கொள்கிறான்.அவனுடைய
வீரதீர செயல்களை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் வியூகத்தை மாற்றுகிறான்.
அபிமன்யுவை வளரவிடக்கூடாது எனும்
துரியோதனன் யோசனையை துரோணர் ஏற்கிறான்.உடனடியாக அபிமன்யுவிற்கு சக்ரவியூகம்
அமைக்கப்படுகிறது.போர்ப்படை வீரர்கள் சுற்றி வளைக்கின்றனர் அபிமன்யு உள்ளே
நுழைந்து விடுகிறான்.
அபிமன்யுவை தொடர்ந்து அர்ச்சுனனைத்
தவிர மற்ற பாண்டவர்கள் உள்ளே நுழைந்த
அபிமன்யு தொடர்கின்றனர்.ஆனால் ஜெயத்ரதன்,இந்நேரம்
பார்த்து பாண்டவர்கள்மீது தன் பழிவாங்கும் திட்டத்தை துவக்குகிறான்.
அ.கு-
(கானகத்தில் துரவுபதி தனித்திருந்த
போது,ஜெயத்ரதன் அவளை அடைய முற்பட்டபோது பாண்டவர்கள்
தடுத்து துரவுபதியை காப்பாற்றுகின்றனர்.அப்போது அவனுக்கு தண்டணையாக அவன் தலையை
மொட்டை அடித்து அவமானப்படுத்தினர்.அதிலிருந்து மீள ஜெயத்ரதன் ஒரு சபதம் ஏற்கிறான்
.அவமானப்படுத்திய பாண்டவர்களை பழி வாங்க மகாதேவனிடம் தவமிருந்து தகுந்த வரம் பெறுகிறான்.ஆதலால் பாண்டவர்களை
வெல்லும் பலம் பெறுகிறான்.)
அர்ச்சுனன் சுசர்மனை
வீழ்த்திவிட்டு தர்மன் இருக்கும் இடம் தேடி வருகிறான்.அப்போது போர்க்களத்தில் மயான
அமைதி நிலவுகிறது.என்ன நடந்தது என கிருஷ்னனை வினவியபோது,‘எனக்கு மட்டும் என்ன தெரியும் ? விசாரிப்போம்’ என கிருஷ்னன் அர்ச்சுனனிடம் கூறுகிறான்.
‘தர்மனண்ணாவிற்கு எதாவது
ஆகிவிட்டதா?’ என சேவகர்களிடம் வினவியபோது, ‘அப்படியெல்லம் ஒன்று
மில்லை.அபிமன்யுவிற்கு.....’ என சேவகன் கூறிய போது தர்மன்,
‘நம் பிள்ளைள வீர மரணம் அடைந்தவிட்டான்’
என கூறி தன் தம்பி அர்ச்சுனனை பார்த்து அழுதுவிட்டான்.
‘அண்ணா அவனுக்குத்தான்
சக்ரவியூகத்திலிருந்து வெளிவரத் தெரியாதே’ என்று அர்ச்சுனன் துக்கம் தொண்டையை அடைக்க
சொன்ன போது,பீமன்,
‘தெரியும் தம்பி,நாங்கள் பிள்ளையை
பின் தொடர்ந்தோம்,ஆனால் வழியில் ஜெயத்ரதன் எங்களை மடக்கி விட்டான்.அவனை வெற்றி
கொள்ள முடியவில்லை’
அப்போது கிருஷ்னன்,
‘உண்மை தான் அர்ச்சுனா!உங்களிடம்
அவமானப்பட்ட பிறகு ஜெய்த்ரதன் மகாதேவனிடம் பாண்டவர்களை வெல்ல வரம் பெற்றான் அதனால்
உன் தம்பிகளால் ஜெயத்ரதனை வெல்ல முடியவில்லை’
இதைக்கேட்ட அர்ச்சுனன் வெகுண்டெழுந்தான்.
இதைக்கேட்ட அர்ச்சுனன் வெகுண்டெழுந்தான்.
‘நாளை மாலை சூரிய அஸ்த்தமனத்தை அவன் காண முடியாது.இல்லை
நான் அக்கினி பிரவேசம் செய்வேன்’என சூளுரைக்கிறான்.
அபிமன்யு மரணப்படுக்கையில் இருக்கிறான், சுற்றி துரவுபதி,மருமகள் உத்திரை அழுது கொண்டிருக்கின்றனர்.அபிமன்யு போர்க் களத்தில் போரிட்ட
திறமையை அர்ச்சுனனிடம் சேவகர்கள் சொல்லி புளங்காகிதம் அடைகின்றனர்.அதாவது,
‘துரோணர்,சல்லியன்,துரியோதனன்,துர்ச்சாதனன்
ஆகிய ஒவ்வொருவரையும் பேர் சொல்லி தன் அம்பின் வேக தாக்குதலிலிருந்து காத்துக்கொள்ளும்படி
எச்சரித்து அம்பை விடுக்கின்றான் .அச்சமடைந்த துரோணன் அபிமன்யுவின் வில்லை
துண்டிக்கிறான்.
இதுதான் சமயம் என துரியோதனன்,கர்னன்,
துர்ச்சாதனன்,சல்லியன் மற்றும் சகுனி ஆகியோர் அபிமன்யுவை
சூழ்ந்துகொண்டனர்.அப்போது அபிமன்யு,
‘தனியொரு மனிதனை இத்தனை (வீரர்கள்?) மனிதர்கள் ஆயுதம் கொண்டு தாக்குவது தான் வீரமா? துரோணரே !உங்கள் போர்படை தர்மம் இது தானா?’
துரோணன் வெட்கத்தில் தலை
குனிந்தான்.
அபிமன்யு,‘தந்தையே எங்கே போனீர்கள்’ என கேட்டவாறு மாண்டான்.அதற்குள் சூரியன் மறைய அன்றய போர் முடிவுக்கு
வந்தது.’
போர்க்களத்தில் அபிமன்யு வதத்தை
நேரில் பார்த்தவர்கள் கூறியபோது,அர்ச்சுனனை தேற்ற முடியவில்லை,உடைந்து போனான்.மருமகள் உத்தரை பொம்மையை இழந்த
குழந்தை போல் தேம்புகிறாள்.இருவரையும் கிருஷ்னன் தேற்றுகிறான்,
‘அபிமன்யு இழப்பு என்பது, மகன் என்கிற முறையில் அர்ச்சுனனுக்கு ஏற்பட்டிருப்பது மிகப்பெரிய புத்தர சோகம்,
அதேபோன்று உத்தரைக்கு,தன் கணவன் சாதாரண மனிதன் இல்லை மாபெரும் வீரனை இழந்த
கைம்பெண்.இது போன்று வீரமரணம் அடையப்பெருமை படைத்த மாவீரன் அபிமன்யு என உலகம்
போற்றும். அபிமன்யு தர்மத்தை நிலைநாட்ட தன் இன்னுயிர் நீத்து இறவாபுகழ்
பெற்றான் என வரலாறு சொல்லும்.’
கிருஷ்னனின் பசப்பு வார்த்தைகளால்
சுற்றி இருந்த பாண்டவர்கள் தங்கள் மனங்களை தேற்றிக்கொண்டனர்.
ஆ.க-
அபிமன்யு ,தன் தாய் மாமன் முறை கொண்ட கிருஷ்னனிடம் வளர்ந்தவன்,கிருஷ்னன் கடவுள் அவதாரம் என மக்களிடையே பிரசங்கம் செய்யப்பட்டு,பாண்டவர்கள், குந்தி மற்றும் திரவுபதி ஆகியோரால்
ஆபத்பாந்தவன் என நம்ப படுகிறவன்.போர்க்கள பயிற்சிகளை அபிமன்யுவிற்கு அளித்தவன்
எல்லாம் தெரிந்த கிருஷ்னனே!அபிமன்யு சத்ரிய இனத்தைச் சார்ந்தவன் அல்ல எனவே
துரோணரிடம் அனுப்பினால் அபிமன்யுவை திருப்பி அனுப்பிவிடுவான் எனும் எண்ணத்தில்
கிருஷ்னனே சகல கலைகளையும் சொல்லித்தருகிறேன் என சுபத்திரையிடம்
உறுதியளித்தான்.
சக்ர வியூகத்தில் உள்ளே செல்வது
சுலபம்,வெளியே வருவது சற்று சிரமம் மட்டுமல்ல,அதிக புத்தி கூர்மை தேவைப்படுகிறது.
மகாபாரதத்தில் இதை நன்கு அறிந்தவர்கள்
ஒன்று குரு துரோணர் ,அடுத்து அவன் சீடனான அர்ச்சுனன்.எல்லாம் அறிந்த கிருஷ்னனுக்கு
சக்ரவியூக கலை தெரியும் என மகாபாரதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை.
எது எப்படியோ அபிமன்யூவை போர்க்
களத்திலிருந்து காப்பாற்றியிருக்க வேண்டியது சர்வ வல்லமை படைத்தவன் என எல்லோராலும்
நம்ப படுகின்ற கிருஷ்னனின் கடமையாகும்!
இதிலிருந்து என்ன தெரிகிறது?கிருஷ்னவதாரம் என்பது பொய் என
தெரிகிறதா?(9)
****
அபிமன்யுவிற்கு இறுதி மரியாதை
செலுத்தப்படுகிறது.பங்காளிகள் எனும் உறவின் முறையில் துரியோதனன்,துர்ச்சாதனன்,கர்னன்,சகுனி,சல்லியன்,ஆகியோர் மலர்த்தூவி அஞ்சலி செலுத்துகின்றனர்.அந்நேரம் ஜெயத்ரதன் அஞ்சலி
செலுத்த வருகிறான்.அப்போது அர்ச்சுனன்,
‘கூடாது,என்
மகன் மரணத்திற்கு நீ தான் காரணம் .உன்னை கொல்லாமல் விடமாட்டேன்,நாளை மாலை நீ சூரிய அஸ்த்தமனத்தை
காணமுடியாது.இல்லையேல் நான் அக்னி பிரவேசம் அடைவேன் இது சத்தியம்’ என சூளுரைத்ததைக் கேட்டவுடன் ஜெயத்ரதன் அங்கிருந்து
வெளியேறுகிறான்.
புத்ரசோகம் அர்ச்சுனனை வாட்டுகிறது,அன்று இரவு அண்ணன் தர்மன் ,தன் தம்பியை தேற்றுகிறான் அப்போது அர்ச்சுனன், ~அண்ணா
என் பிள்ளைக்கு பெரியப்பா,சித்தப்பா என இத்தனை பேர் இருந்தும் என் மகனை காப்பாற்ற
முடியவில்லையே,எதற்கு இந்த சமாதான வார்த்தைகளெல்லாம்?’
அர்ச்சுனன் மனம் நிலை கொள்ள மறுக்கிறது.ஒரு குறுவாளை எடுத்துக்கொண்டு போர்க்கள படை வீட்டில் உறங்கிக்
கொண்டிருக்கும் ஜயத்ரதனை கொல்ல ஓடுகிறான்.மற்ற பாண்டவர்களும் பின் தொடர்கின்றனர்.துரியன் தன் தம்பிகளுடன் மைத்துணனைக் கொல்ல வரும் அர்ச்சுணனைப் பார்த்து வினவுகிறான்,~~பேடியே,இரவில் தூங்கும்
வீரனை கொல்வதுதான் உங்கள் தர்மமா?
யார் பேடி? தனி ஒரு வீரனான என் மகனை போர்க்களத்தில் நிராயுதபாணியாக்கி 5 பேர் சுற்றி வளைத்து கொன்றீர்களே அதுதான் வீரமா?
என் தாத்தா பீட்மரை,கொல்ல ஒரு பேடியை முன்னிறுத்தி கொன்ற பேடிதானே நீ? வீரத்தைப்பற்றி நீ பேசுகிறாயா?
அந்நேரம் பார்த்து கிருட்னன் அங்கே
வருகிறான், ~அர்ச்சுனா,போர் தர்மம்
என்று உள்ளதை மறந்தாயா? புத்ரசோகம் கண்ணை மறைத்துவிட்டதா?
நாளை போர்க்களத்தில் ஜயத்ரதனை எதிர்த்து
போரிடு,அங்கே அவனைக்கொல்வதுதான் தர்மம்,வா நளை பார்க்கலாம்’ என அர்ச்சுனனை அழைத்துச் செல்கிறான், கிருட்னன்.
ஜெயத்ரதன் துரோணனை
சந்திக்கிறான்.அப்போது, ஜெயத்ரதன்,‘நானும் அர்ச்சுனனும் ஒன்றாகத்தான் தங்களிடம் தனூர்
வித்தை கற்றோம் ,ஆனால் அவனுக்கு மட்டும் தனித்திறமை
வர தாங்கள் தான் காரணம்’ என தன் குருவை குற்றம் சுமத்தி
பேசுகிறான்.
அப்போது துரோணன்,‘ஒரு குருவானவன்,தன்னிடம் பயிலும் அத்தனை மாணவர்களையும் சமமாக நினைத்து தான் கல்வி போதிப்பான்.வித்தைகளை
கற்ற மாணவன் வெளியே சென்ற பின் அவன் மேலும் பல வித்தைகளை கற்க ஆசைப்பட்டால்
இன்னும் சிறந்த ஆசிரியரைத்தேடி செல்வான் .அவனுக்கு திறமை இருந்தது
வளர்த்துக்கொண்டான்,நீ அதுவே போதும் என்று இருந்து
விட்டாய்,இதற்கு என்னை குற்றம் சுமத்துவது எந்த வகையில்
நியாயம் ஜெயத்ரதா?’இந்த விளக்கத்திற்குப்பின்
ஜெயத்ரதனிடம்,துரோணன்,
‘ஜெயத்ரதா நாளை போர்க்ளத்தில் உன்னுடைய தலைமையில்
படையை நடத்தி செல்ல வேண்டும், நீ போய் ஓய்வு எடுத்துக்கொள்’
துரியோதனனிடம் சென்ற ஜெயத்ரதன்,‘மைத்துனரே,நாளை நான் போருக்கு செல்ல கூடாது,நீங்கள் தான் துரோணரிடம் சொல்லி மாற்ற வேண்டும்’
‘ஏன்?’
‘நாளை, சூரிய அஸ்த்தமனத்தை நான் காண முடியாது
என அர்ச்சுனன் சூளுரைத்துள்ளான்,அதை தவிர்க்கத்தான்’
‘வெட்கமாக இல்லை?ஒரு சத்ரியன் பேசும் பேச்சா இது?
போரைக்கண்டு அஞ்சலாமா?
நான் உன் அருகில் இருப்பேன் நான்
இருக்கும் வரை உனக்கு மரணம் வர நான் அனுமதிக்க மாட்டேன்,தைரியமாக செல்’
அன்று இரவு போர்க்களத்தில் அம்பு
படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மனைக்காண அர்ச்சுனன் செல்கிறான்.பீஷ்மன்
அர்ச்சுனன் வருவதைக்கண்டு கொண்டான்,‘வா ! மகனே போரில் என்ன நடந்தது
என்று சொல்’
போர் விதிமுறைகளை வகுத்து,துரோணரும்,பீஷ்மனும்
தான்.போர் தர்மங்கள் எவை,எவை அவைகள் போரில் ஈடுபடும் இரு
தரப்பு அணிகளும் செயல்படவேண்டும் என வகுத்து பாரத நாட்டு மக்களுக்கு –மன்னர்களுக்கு பிரகடணம் செய்தனர்.அது இன்றும் போற்றப்படுகிறது.
போர்ப் பிரகடணம் என்பது,
1-இரு நாட்டு மன்னர்களும் தங்கள் குடிமக்களுக்கு
எதற்காக போர் தொடுக்கப்படுகிறது என அறிவிப்பு செய்ய வேண்டும்.
2-போர் துவங்குமுன் பொது மக்களை
பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும்.
3-குறிப்பாக பெண்களையும்,குழந்தைகள் மற்றும் வயோதிகர்களின் பாதுகாப்பு
அவசியம்.
4-எதிரி, போர்ப்படை ஆயுதங்கள் தரித்திருத்தல் அவசியம்.
5-நிராயுத பாணியை தாக்கக் கூடாது.
6- ஒருவனுக்கு ஒருவன் நேர் நின்று
தாக்குதல் தொடுக்க வேண்டும்.
7-தோரோட்டியையோ,தேர் இழுக்கும் குதிரைகளையோ காயப்படுத்தக்கூடாது.
8-ஒரு வீரனை பல பேர் சேர்ந்து
தாக்குதல் கூடாது.
9- எதிரியின் கையில் என்ன ஆயுதம்
உள்ளதோ அதே ஆயுதத்தால் எதிரி தாக்கவேண்டும்.அபிமன்யு போரில் சக்ரவ்யூகத்தில்
நுழைந்து விட்டான்.அப்படி நுழைந்தவனை சூழ்ந்து கொண்டு தாக்குவது போர்
தர்மங்களில்ஒன்று.ஆனால் அப்படி உள்ளே மாட்டிக்கொண்டவனை முதுகு,பக்கவாட்டு என தாக்கக்கூடாது.
‘அபிமன்யுவை,தாக்கியவர்கள்,துரியோதனன்,துர்ச்சாதனன்,கர்னன்,சல்லியன்,சகுனி,ஆகியோர் சுற்றி வளைத்து ஈட்டியால் துளைத்தனர்.
அபிமன்யு கையில் இல்லாத ஆயுதங்கள்
கொண்டு தாக்கியுள்ளனர் இது போர்ப்படை தர்மமா பிதாமகரே’ என அர்ச்சுனன் பிதாமகரைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதான்.
‘அப்பொழுது நீ எங்கே போனாய்?’
‘என்னை சுசர்ர்மன் தனியாக சண்டைபோட அழைத்தான் ,நான் அவனை விரட்டி அவன் கதையை முடித்தேன்.
‘உன் அண்ணந் தம்பிகள் என்ன செய்து கொண்டிருந்தனர்?அவர்கள் அபிமன்யுவை காப்பாற்ற முயலவில்லையா?
‘முயன்றார்கள்,ஆனால் அவர்களை ஜெயத்ரதன் சக்ரவ்யூகத்தில் நுழைய விடவில்லை’
‘முதலில் ஜெயத்ரதனை கொன்று விடு,அவனால் நமக்கு பேரழிவு உண்டாகும்.முதலில் அவனை
அழித்து விடு.’
பீஷ்மன் ரத்த உறவுகளுக்கு
முன்னுரிமை தருபவன், ஜெயத்ரதன் தன் மகனின் மருமகனாக
இருந்தாலும் இன்னொரு குடும்பத்தைச் சார்ந்தவன் தானே,எனவே அவனை அழிப்பதில் தவறில்லை.அந்த கொடியவனை ஒழித்துவிடு என்றான்.
அடுத்தநாள் போர்
ஆரம்பிக்கிறது.அப்போது அர்ச்சுனன்,
‘கேசவா,இன்றைக்கு சூரிய
அஸ்த்தமனத்திற்குள் ஜெயத்ரதனை வதம் செய்தாக வேண்டும்.தேரை அவன் இருக்கும் இடம்
தேடி செலுத்து’
‘அர்ச்சுனா!, நீ
இட்ட பணியை செய்வதுதானே தேரோட்டியான என் வேலை’கிருஷ்னன் மேலும் தொடர்ந்தான்,‘அர்ச்சுனா!,ஜெயத்ரதனுக்கு ஒரு வரம் உள்ளது,மறந்து விடாதே’
‘என்ன அது?’
‘அவன் தலை, தரையில் வெட்டப்பட்டு
வீழ்ந்தால்,யார் வெட்டினானோ அவன் தலை வெடித்துவிடும்’
‘என்ன கேசவா ! இது என்ன விபரீதமான
வரமாக உள்ளதே!’
‘ஆம்,நீங்கள் அவனை
அவமானப்படுத்தினீர்கள் ,அவன் மகாதேவனிடம் தவமிருந்து அப்படியொரு வரம் பெற்றான்’
‘இதற்கு ஒரு மாற்று வழி சொல் கேசவா’
‘இதற்கு ஒரு மாற்று வழி சொல் கேசவா’
‘இருக்கிறது,நீ அவன் தலையை கொய்து அந்த தலை மண்ணில்
படாமல் அவனுடைய தந்தையின் மடியில் விழச் செய்து விடு.’
ஆ.க-
(வரம் தருவது,வரம் பெறுவது-இவையெல்லாம்
நம் மக்களின் அறியாமையான மாய மந்திரங்களில் -ஆர்வ கோளாறினால் பிடிப்பு ஏற்பட,கதை
சொல்பவர்களின் பிதற்றல்)
போர் ஆரம்பம்
ஆகிவிட்டது.துரியோதனன் ,தன் தம்பியிடம்,‘துர்சாதனா,இன்று
ஜெயத்ரதன் மரணத்தை அர்ச்சுனன் நிச்சயித்து விட்டான்.அவனை மரணத்திலிருந்து காப்பது
நம் கடமை.அர்ச்சுனன் கண்ணில் படாமல் ஜெயத்ரதனை இன்று பொழுது மறையும் வரை காத்திரு’
‘சரி அண்ணா!’
போர் தொடர்கிறது,கவுரவர்களில் சுமார் 30 பேரை பீமன் கொன்று
விட்டான்.அஸ்த்தினாபுரம் அரண்மனையில் திருதராஷ்ட்ரன் சஞ்சயன் கூறுவதைக்கேட்டு
உடைந்து போகிறான்,
‘அய்யோ என் மகன்கள் அநியாயமாக போர்க்களத்தில் செத்து
மடிகிறார்களே,நான் என்ன பாவம் செய்தேன்?,அப்போதே சொன்னேன்,என் பேச்சை துரியோதனன் கேட்க
வில்லை.அவர்கள் கேட்டது போல் 5 கிராமங்களையாவது கொடுத்திருந்தால் இந்தப் போரை
தவிர்த்து இருக்கலாம்.இந்த குருடன் பேச்சை யார் மதிக்கிறார்கள்?’ புலம்புகிறான்.
காந்தாரியும்,குந்தியிடம் சென்று தன் மகன்கள் போர்க்களத்தில்
மரணிப்பதை தாங்கமுடியாமல் கண்ணீர் விட்டு அழுகிறாள்.,
‘நாளுக்கு நாள் என் வீட்டில்,இழவு நடக்கிறதே,தாலி அறுத்த மருமகள்கள் எண்ணிக்கை
அதிகமாகிறதே குந்தி!,நான் என்ன பாவம் செய்தேன்? குந்தி,துரியோதனன், துரவபதியை மானபங்படுத்த காரணமே கர்னனும் சகுனியும்
தான்,எல்லாம் என் பிள்ளைகள் மேல் பழி வந்து
விட்டது.எல்லாம் என தலை விதி.’ காந்தாரி தன் ஓரகத்தியை கட்டி
அழுகிறாள்.
‘அழாதேக்கா’ என குந்தி
தேற்றுகிறாள்.
‘இப்போ அழுது என்ன புண்ணியம்?’ என மனதுக்குள் குந்தி வெம்புகிறாள்.
ஆ.க-
(இங்கே வாசகர்கள் ஒன்றை கவனிக்க
வேண்டும்;குந்தி ஒரு பண்பட்ட சமுகத்திலிருந்து வந்தவள் என
சித்தரிக்கப்படுகிறது.இந்நாளில் படிப்பறிவற்ற பெண்கள் பேசுவது போல் , அந்நாளிலும் படிப்பறிவற்ற அரசகுல பெண்டிர்கள் இருந்துள்ளார்கள் என்பதை நாம் அறியலாம்.ஆயினும் அரசகுலம் என்பது
எப்பொழுதும் கோவம் கொள்ளும் குணம் படைத்த சத்ரிய குணம்.பெண்களும் அவ்வாறே.ஆனால்
இதிகாச பெண்களில் ஒரு பண்பட்ட அரசகுல பெண் குந்தி மட்டுமே.இவள் யாதவகுலம் என்பதால்
அந்த இங்கித குணம் வந்ததா? அல்லது பிராமணர்கள் பழக்கத்தால்
அந்த நேசிக்கும் குணம் நாசுக்காக பெற்றவளா?என்பது தெரியாது.ஆனால் சாதிக்கப் பிறந்தவள் என்பது மட்டும் புரியும்)
101-ஜெயத்ரதன் வதம்
சூரியன் அஸ்த்தமிக்கும் நேரம்
நெருங்குகிறது.மேகங்கள் சூழ்ந்துள்ளதால் சூரியன் மறைவது போல் பொய்த்தோற்றம்
தோன்றுகிறது. போர் உக்கிரம் அடைகிறது.அர்ச்சுனன் ஜெயத்ரதனை தேடுகிறான் ,
கிருஷ்னன்,‘அர்ச்சுனா!,சூரியன் அஸ்த்தமிக்கும் நேரம் வந்து விட்டது,விரைந்து போரிடு !ஜெயத்ரதனை தேடு.’
அதற்குள் சூரியன் மறைவது போல் அடர்
மேகங்கள் சூழ்ந்து கொள்கிறது.துரியோதனன் கொக்கரிக்கிறான் ,‘அர்ச்சுனா! உன் சபதம் என்ன ஆனது ‘ம்!’ சீக்கிரம் அக்கினி பிரவேசம் செய்.’
அர்ச்சனன் தன்னிடம் இருக்கும்
போர்த்தளவாடங்களை தூக்கி வீசுகிறான் தன் சபதம் முடியாமல் போய்விட்டதே என உடைந்து
போகிறான்.இதை கண்ணுற்ற கிருஷ்னன்,
‘அர்ச்சுனா,ஏன்
சோர்வுற்றாய்?,துரியோதனன் என்ன அவ்வளவு அறிவாளியா? இன்னும்
சூரியன் அஸ்த்தமிக்க வில்லை,மேகங்கள் சூழ்ந்துள்ளதை பார்த்து சூரியன் அஸ்த்தமித்து
விட்டது என எக்காளமிடுகிறான்.
இதோ பார் சூரியன்,எடு உன்
அஸ்த்திரங்களை ,அதோபார் ஜெயத்ரதன் தொடு உன் பாணங்களை.’
துவண்டு போன அர்ச்சுனன் ஜெயத்ரதனை
கண்டதும் துடித்து எழுந்தான்.அவன் ஓடுகிறான்,மரண பயம் ஜெயத்ரதனுக்கு
வந்துவிட்டது.தவம் செய்யும் தந்தையை நோக்கி ஓடுகிறான்.
அர்ச்சுனன் தொடுத்த அம்பு அவன்
தலையை துண்டித்து அவன் தந்தை மடியில் விழுகிறது.ஜெயத்ரதன் தலையுடன் தந்தையும்
வெடித்து சிதறுகிறான்.
13-ம் நாள் போர் முடிவில்
கவுரவர்களின் 98 பேர் மாண்டு போகின்றனர்.அஸ்த்தினாபுரம் அரண்மனையில்
திருராஷ்ட்ரனுக்கு இத்தகவலை சஞ்சயன் தெரிவிக்கிறான்.
அப்போது திருதராஷ்ட்ரன்,‘அய்யகோ,என்
அரண்மனையில் என் மகன்களின் விதவைகள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறதே இது எதில் போய்
முடியுமோ? என் உள்ளம் வெடித்துவிடும் போல் உள்ளதே.’
காந்தாரியால் அரண்மனையில் உட்கார முடியவில்லை.தன்
மகன்களின் மரண எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதை அவளால் தாங்க முடியவில்லை.
குந்தியிடம் செல்கிறாள்,‘குந்தி இனியும் என்னால் அரண்மனையில் உட்கார முடியாது ,வா போகலாம் போர்க் களத்தில் என்ன நடக்கிறது என்
பார்ப்போம்.’
‘அக்கா பெண்கள் போர்க்களம் புகுவது நல்லதல்லவே,சாஸ்த்திரங்கள் இதை அனுமதிக்காது அக்கா’
‘சத்ரியப் பெண் போர்க்களம் போகலாம் வா’
இருவரும் அந்த இரவு நேரத்தில்
போர்க்களம் செல்கின்றனர்.போர்க்களத்தில் இறந்து போன வீரனை நால்வர் அடக்கம்
செய்யும் நிகழ்ச்சியைப் பார்த்து குந்தி நிற்கிறாள்.
‘என்ன ஆயிற்று குந்தி ஏன் நிற்கிறாய்?’
‘ஒரு வீரனை அடக்கம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது
அக்கா’
காந்தாரி,‘நீ யார்ப் பக்கம் நின்று போரிட்டாயோ,வீரனே!, எங்களுக்கு தெரியாது இருப்பினும் இந்த பரத குல
பெண்களாகிய நாங்கள் இருவரும் தங்களுக்கு தலை வணங்குகிறோம்.’
வீரனுக்கு இறுதி மரியாதை
செலுத்திவிட்டு குந்தி, காந்தாரியை பிதாமகர்
படுத்திருக்கும் அம்பு படுக்கை அருகே அழைத்துச் செல்கிறாள்.
‘வணக்கம் பிதாமகரே!’
‘உங்களை வாழ்த்தும் நிலையில் நான் இப்போ இல்லை
மருமகள்களே’
‘உங்களின் மகன்கள் ரணகளத்தில் உள்ளார்கள்.யார் வெற்றி
பெறுவார்கள் யார் தோல்வியுறுவார்கள் என்பது முக்கியமானதல்ல மகள்களே!அஸ்த்தினாபுரம்
நிலைக்க வேண்டும், அஸ்த்தினாபுரம் வாழவேண்டும்.அந்த எண்ணமே உங்கள் மனதில்
நிலைத்திருக்க வேண்டும்.’
பீட்மனின் வார்த்தைகளை உள்வாங்கிக்
கொண்டனர்
பிதாமகரிடம் விடை பெற்று இருவரும்
செல்கின்றனர்.
படைவீட்டில் காந்தாரி
அமர்ந்துள்ளாள்.துரியோதனன் தன் தாயை காண வருகிறான். ‘வணங்குகிறேன் தாயே!’
‘நீண்ட ஆயுளுடன் இரு மகனே’
‘எனக்கு நீண்ட ஆயுள் தேவையில்லை தாயே,எனக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துங்கள்’
‘என் மனம் என்ன நினைக்கிறதோ அதைத்தான் வெளிப்படுத்த
முடியும் மகனே!’
‘இப்பொழுதும் கூறுகிறேன் கேள் மகனே! பாண்டவர்களை
அழைத்து அவர்களுக்கு சேரவேண்டியதை அளித்து விடு மகனே!’
‘முடியாது அம்மா’
‘அவர்கள் வந்து என்னை கேட்கட்டும் நான் தருவதைப் பற்றி
யோசிக்கிறேன்.நான் அவர்களை அழைத்து பேசமாட்டேன்.’
இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது
பணிப்பெண்,‘அரசியாரே தங்களை காண பாண்டவர்கள் அனுமதி
கேட்கின்றார்கள்’
‘ஒரு தாயைக்காண மகன்களுக்கு அனுமதி தேவையா?அவர்களை ஏன் தடுத்தாய் உடனே வரச்சொல்’
‘மகனே தர்மன் உன்னை விட பெரியவன் அவன் வரும்பொழுது
அவனுக்கு வணக்கம் தெரிவி’
ஆ.க-
(என்ன செய்வது இதுபோன்ற இணக்கமான
நன்னெறிகளை தன் பிள்ளைகளுக்கு சிறுவயதில் இருந்தே ஊட்டி வளர்த்திருக்க வேண்டும்
கண்களை மறைத்துக்கொண்ட காந்தாரி தன் பிள்ளகளின் சேட்டைகளை காணமுடியாமல் அவர்கள்
போன போக்கில் வளரவிட்டாள்,அதன் விளைவை இப்பொழுது அறுவடை
செய்கிறாள் காந்தாரி)
தர்மனைத்தொடர்ந்து நால்வரும் உள்ளே
வருகின்றனர்.
‘வணக்கம் பெரியண்ண!’ துரியோதனன் வேண்டா வெறுப்பாக தர்மனை
வணங்குகிறான்.
பதிலுக்கு தர்மன்,‘நீடூழி வாழ்க தம்பி’
தர்மன்,தன் பெரியம்மா காந்தாரி பாதம் தொட்டு, ஆசிர்வதிக்க வேண்டுகிறான். அவனைத் தொடர்ந்து,மற்ற நால்வரும் வணங்குகின்றனர்.அனைவரையும் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறாள்.
தர்மன் அப்போது,‘பெரியம்மா ,நாங்கள்
இன்னும் எங்கள் தாயை காணவில்லை,சகோதரர் 98 பேர் இறந்துவிட்டனர்
அவர்களுக்கு இறுதி மரியதை செலுத்த வந்தோம்.’
துரியோதனன்,‘எனக்கும்,என் தம்பிக்கும்
சேர்த்து இறுதி மரியாதை செலுத்திவிடுங்கள் பின் பிரிதொரு சந்தர்ப்பம் தங்களுக்கு
கிடைக்குமோ கிடைக்காதோ!’குத்தலான பேச்சை தொடர்ந்து
மேலும்,துரியோதனன்,‘இன்னும் போர் முடியவில்லை நான் இதைப்பற்றி துரோணரிடம்
ஆலோசிக்க வேண்டும்,நான் விடைபெறுகிறேன் தாயே!’
‘நான் போட்ட சபதம் நிறைவேறும் வரை போர் முடிவுக்கு
வராது துரியோதனா!’ பீமன் கர்ஜிக்கிறான்,
‘பாஞ்சாலியின் அவிழ்ந்த கூந்தல் முடிக்கப்படும் வரை
போர் முடிவுக்கு வராது துரியோதனா!’
மேலும்பீமன்,‘துரியோதனா,அரசவையில்
திரவுபதியை நீ மானபங்கப் படுத்திய நிகழ்ச்சியை நினைக்கும் போதெல்லாம் என் ரத்தம்
கொதிக்கிறதடா!.
உன்னையும் உன் தம்பியையும் கொன்று
எப்பொழுது திரவுபதியின் அவிழ்ந்த கூந்தலை முடிக்கிறாளோ அப்பொழுதுதான்டா! என்
கொதிக்கும் ரத்தம் அடங்கும்.’
‘பீமா அடக்கிபேச கற்றுக்கொள்.கோபம் கொள்ளாதே’ அப்போது
அர்ச்சுனன்
‘தர்மத்தை நிலைநாட்ட சில நேரங்களில் கோப பட்டே
ஆகவேண்டும் அண்ணா’
துரியோதனன்,‘எது தர்மம்?என்
சித்தப்பா பாண்டுவின் பேரைச் சொல்லி பிறந்தவர்கள் தானே நீங்கள்?
உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தந்தை
என்பது உங்களுக்கு தெரியுமா?ஒரு பெண்ணோடு ஐந்துபேர்
வாழ்வதுதான் சத்ரிய தர்மமா?’அப்படி கட்டிய மனைவியை
சூதாட்டத்தில் பணையம் வைப்பது இது வரை சத்ரிய வரலாற்றில் சான்றுகளே இல்லையே!’
இதைக்கேட்ட நகுலன் கொதித் தெழுகிறான், ‘எங்கள் தாயைப் பழித்த உன் நாவை அறுக்காமல்
விடமாட்டேன்,துரியோதனா’
உடனே தர்மன், நகுலா பெரியவர்களிடம் இப்படி பேசுவது முறையா ? துரியோதனன் உனக்கு அண்ணன்,அவனிடம் நீ மன்னிப்பு கேள். உடனே வெளியேறு’
காந்தாரி, ‘தர்மா!, நகுலனை வெளியே போகச் சொல்ல நீ யார்?’
துரியோதனன், ‘தாயே நாளை போர் பற்றிய ஆலோசனை செய்ய
வேண்டியுள்ளது.நான் துரோணரிடம் செல்ல வேண்டும் தங்களிடம் விடைபெறுகிறேன் தாயே’
தர்மனும், ‘பெரியம்மா இன்னும் நாங்கள் அம்மாவை பார்க்க வில்லை,எங்களுக்கு விடைகொடுங்கள்’
காந்தாரி அழுதுகொண்டே
இருக்கிறாள்.பாண்டவர்கள் தன் தாய் குந்தியின் இருப்பிடம் தேடிச் செல்கின்றனர்.
தர்மனும் அவன் சகோதரர்களும் அதே
போர்க்கள படைவீட்டில் குடியிருக்கும் தன் தாய் குந்தியின் இருப்பிடம் தேடி வருகின்றனர்.
குந்தியும் தன் மகன்களை ஒரு சேர
பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியடைகிறாள்.
அப்போது,குந்தி,தன் மகன்களைப் பார்த்து, ‘உங்க பெரியம்மா 98 பிள்ளைகளை போரில் பறிகொடுத்து தேற்றுவதற்கு ஆளில்லாமல்
அழுது கொண்டிருக்கிறார்.இந்நிலையில் நான் உங்க பெரியம்மாவை விட்டு எங்கும்
வரமுடியாது என் செல்வங்களே! போர் முடிவு எப்படி இருக்கும் என நம்மால் யூகிக்க முடியாது’
மேலும் குந்தி கூறுகிறாள், ‘நீங்கள் இந்த உலகத்தில் தோன்றும் முன்பே,நான் சந்திரகுல வம்சத்திற்கு
பாத்தியப்பட்டவள்.என்னால் இந்த அஸ்த்தினாபுரத்தை விட்டு வர முடியாது.என் வம்சம்
வளர நான் இங்கேயே இருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்.குந்தி சொல்லிக்
கொண்டிருக்கும் போதே, பீமன், ‘தாயே,பாஞ்சாலி போட்ட சபதம் நிறைவேறும் வரை போர் தொடர்ந்து
நடக்கும்’
102-துரோணர் மரணம்
படை வீட்டில் துரியோதனன் துரோணரை
சந்திக்கிறான்.அப்போது, ‘குருவே தாங்கள் நினைத்திருந்தால்
பாண்டவர்களை கொன்றிருக்கலாம்,ஆனால் தாங்களும் பிதாமகரைப்போல்
பாண்டவர்கள் மீது பாசம் கொண்டிருக்கின்றீர்,போர்க்களத்தில் வெற்றி ஒன்றே இலக்காக இருக்க வேண்டும்.தங்களிடம் எதிரிகளை
அழிக்கும் பேராயுதங்களை வைத்திருந்தும் அதை பாண்டவர்கள் மீது பிரயோகிக்க வில்லை
ஏன் குருவே?’
துரியோதனனின் ஈட்டி போன்ற
வார்த்தைகள் துரோணரை துளைத்து எடுத்தன.தன்னிடம் உள்ள திவ்ய ஆயுதத்தை எடுத்தான் துரோணன்.மனசாட்சி
வாட்டுகிறது, ‘ஒரு அந்தணனுக்கு போர்க்களத்தில் என்ன வேலை?பரத்வாஜரின் வழி காட்டுதலை மீறுகிறோமே!’
ஆனால் உண்ண உணவின்றி தவித்த
துரோணனுக்கு இன்று ஆயிரக்கணக்கான பசுக்கள் சொந்தமாக உள்ளன,தன் சத்ரிய நண்பன் துருபதன் துரோகம்
இழைத்தான்,அந்நேரத்தில் திருதராஷ்ட்ரன் ஆதரவளித்து தனக்கு
பசுக்களை தானமாக்கி வாழவைத்தவன் செஞ்சோற்று கடனை தீர்க்கவே தான் போர்க்களம்
புகுந்ததை தனக்குத்தானே நியாயப்படுத்திக் கொள்கிறான்.
ஆனால் எதிரிகளை அழிக்கும்
பேராயுதத்தை எடுப்பதில்லை என முடிவுடுத்தான்.’
ஆனால் கிருஷ்னனிடம் அர்ச்சுனன், ‘கேசவா துரோணரைக் கொல்லும் வழியே தெரியவில்லையே ,என்ன செய்வது?குருவைக் கொல்வது அறச்செயலாக தெரியவில்லையே?
சட்டென்று கிருஷ்னன், பார்த்தா,பீஷ்மரைக்கொல்ல சிகண்டியை முன்னிறுத்தி நீ அம்பெய்தது
மட்டும் அறச்செயலா?கிருஷ்னன் மேலும் தொடர்கிறான், ‘தர்மத்தை நிலை நாட்ட இந்த போர் நடக்கிறது இல்லையா
பார்த்தா?’
‘ஆம்’
‘அப்படியானால் ஒரு தர்மத்தை நிலை நாட்ட இன்னொரு
தர்மத்தை அழிப்பது தவறில்லை பார்த்தா? நீ உன் கடமையை செய் பலனை எதிர்ப்பார்க்காதே’
இதனிடையே துரோணன் விராட மன்னனை
கொல்கிறான்.
துரோணரின் பராக்கிரமத்தை அறிந்த
அர்ச்சுனன் மற்றும் கிருஷ்னன் குழம்பி போனார்கள்.கிருஷ்னன் ஒரு திட்டம்
தீட்டினான்.
‘துரோணரைக் கொல்ல ஒரு பொய் சொல்ல வேண்டும் பார்த்தா’
‘பொய்யா?’
‘ஆம், துரோணன் மகன் அஸ்வத்தாமனை
கொன்றுவிட்டோம் என துரோணர் காதுபட ஒலிக்க வேண்டும்’
‘அந்த மாதிரி வெற்றி நமக்கு வேண்டாம் கேசவா,நான் பொய் சொல்ல மாட்டேன்’தர்மன்
பக்கத்தில் இருக்கும் தர்மனை
பார்த்து கிருஷ்னன் கேட்கிறான், ‘தர்மனண்ணா நீங்கள் என்ன
சொல்கின்றீர்,பொய் சொன்னால்தான் வெற்றி பெற முடியும்?’
பீமனைப் பார்த்து தர்மன் எதிரே
இருக்கும் யானையை காட்டி ‘இவன் தான் அஸ்வத்தாமன் இவனைக் கொல்ல
முடியுமா?’
‘ஏன் முடியாது?’
தன் தண்டாயுதத்தால் ஒரே போடு போட்ட
பீமன், ‘நான் அஸவத்தாமனை கொன்று விட்டேன்’ என
கொக்கரிக்கிறான்.
இதைக்கேட்ட துரோணன் செயலிழந்தான்.‘தனக்கு முன்னே தான் பெற்ற மகன் மரணிப்பதா?‘எதிரிகளை அழிக்கும் அஸ்திரங்களை வைத்திருந்தும் தன்
மகனை காப்பாற்ற முடியாமல் போனதே’ என இடிந்து போய் தேரை விட்டு
இறங்கிவிட்டான்.
103-துரோணர்- அறம் தவறிய அந்தணன்
கிருஷ்னன் அப்போது, ‘துரோணா! நீ அந்தணனாக இருந்தாலும்,உன் தாத்தா பரத்வாஜர் கட்டிக்காத்த அந்தண நெறிகளை நீ
புகணித்தாய்,சத்ரியர்களுக்கு அழிவுக் கலைகளை கற்றுக்றக் கொடுத்தாய்,
தனுர் மற்றும்,கமல வியூகம்,சக்ரவியுகம் போன்ற எதிரிகளை அழிக்கும் கலைகளை போற்றி வளர்த்தாய்.’
மேலும் கிருஷ்னன் கூறுகிறான், ‘உன் மகன் மீது உனக்கு அன்பு இல்லை,மாறாக மோகம் கொண்டாய்,அன்பு தர்ம சிந்தனை உடையது,மோகம் அகந்தையானது,அதர்ம நெறி கொண்டது
(காண்க-விஜய் தொலைக்காட்சி மகாபாரத
தொடர் எண்,245)
அந்தணரின் அறவழிகளை
புறந்தள்ளிவிட்டு,நீ, போர்க்களம்
புகுந்தாய்,சத்ரியர்களைப் போல் ரதமேறி போர் புரிகிறாய்,ஒரு அந்தணன்,ராஜ குருவாக
இருக்கலாம்,ஆனால் போர்ப் படைத் தளபதியாக பதவி ஏற்க எந்த சாஸ்த்திரம் உனக்கு வழி
காட்டியது.?’
துரோணன், ‘வாசுதேவா! பிள்ளைப்பாசம் என் கண்ணை மறைத்துவிட்டது. என் அறநெறி தவறிய செயல்களை
நான் உணர்கிறேன்,எனக்கு மரணம் நெருங்கிவிட்டதை நான்
அறிவேன்.என்னை மன்னித்து பரமாத்மா பாதம் சரண்டையச் செய்வாயாக’
தன் போர் தளவாடங்களை துறந்து
தரையில் அமர்ந்து விட்டான் துரோணன்.இதுதான் தருணம் என நினைத்து, துஷ்ட்டதூமனன் துரோணரைக் கொல்ல தன் வாளை வீசுகிறான், துரோணர் தலை துண்டிக்கிறது.
அலறி அடித்துக் கொண்டு எங்கிருந்தோ
வந்தான் அஸ்வத்தாமன், ‘நான் இறந்துவிட்டேன் என பொய்
சொல்லி என் தந்தையை கொன்று விட்டீர்களே பாவிகளே நீங்கள் அந்த பாவத்தை
அனுபவிப்பீர்கள்’ என சாபமிடுகிறான்.
அர்ச்சுனனுக்கு
தன் குரு கொல்லப்பட்ட விதம் பிடிக்கவில்லை, ‘துஷ்டதூமனா உன் சபதம் நிறைவேற்றிக் கொண்டாய்,ஆனால் நீ ஒரு கோழையைப் போல் நம் குருவை கொன்றிருக்கிறாய்.இது உனக்கு பெருமை
தாராது’
அஸ்த்தினாபுரத்தில் துரோணர்
கொல்லப்பட்டதை திருதராஷ்ட்டரன் தன் மனைவியிடம் தெரிவிக்கிறான்.காந்தாரி கொதித்து
போகிறாள்,
‘நான் பெற்ற பிள்ளைகள் எல்லாம் பிறக்கும் போது நான்
பக்கத்தில் இருந்தேனே! இன்று போர்க்களத்தில் என் பிள்ளைகள் எல்லாம் இறக்கும் போது
நான் அருகில் இருக்க முடியவில்லையே!’என
அழுது புலம்புகிறாள்.என் பிள்ளைகள் அத்துணை பேரும் மாண்டால் கூட என் எதிரிகளை
அழிக்கவல்ல ஒரு மகனை நான் பெற முடியும் அந்த சக்தி என்னுள் இருப்பதை நான் அறிவேன்.’
அன்றிரவு கர்னன்,படுகளத்தில் பீஷ்மனை சந்திக்கிறான்.தான் கவுரவர்களின்
படைத் தளபதியாக நியமிக்கப் பட்டிருப்பதை பீஷ்மனிடம் அறிவிக்கிறான்.அப்போது பீஷ்மன், ‘கர்னா! துரோணர் என்ன ஆனார்?’
‘துரோணரை துஷ்ட்டதூமனன் கொன்றுவிட்டான்’
‘குலகுருவான அந்தணரை கொன்ற பாவம் நமக்கு குல நாசம்
விளைவிக்குமே கர்னா? ஏன் இந்த பாவச்செயல்?’
ஆ.க-
(வாசகர்கள்,இங்கே ஒன்றை நினைவில்
கொள்ள வேண்டும்,பிராமணரை கொல்லுதல் என்பது அவன் தவறு இழைத்திருந்தாலும் அவனை கொன்ற
பாவம் ஏழேழு பிறப்பிற்கும் தொடரும் எனும் மாய்மால வார்த்தைகளை நம்பியவன்
பீஷ்மன்,பிராமணர்களை ஆதரித்த முதல் சந்திரகுல மன்னன் பீஷ்மன் என்பதை உணரவேண்டும்,ஆனால் பீஷ்மனின் வழித்தோன்றல்கள் என போற்றப்படும்
திருதராஷ்ட்டரன்,அவன் வாரிசுகள் யாவரும் பிராமணரை
போற்றினாலும் பிராமணர்களிடத்தில் அடிமைகள் போல் வாழ்ந்ததில்லை.’)
அஸ்த்தினாபுரத்தின் பிரதான
படைத்தளபதியாக கர்னனை துரியோதனன் நியமனம் செய்கிறான்.இந்த செய்தியை பிதாமகரிடம்
தெரிவித்து தன்னை வாழ்த்தும்படி வேண்டுகிறான்.
‘நீ போர்க்களத்தில் வெற்றிபெற என்னால் வாழ்த்த
முடியாது மகனே! நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என்றுதான் வாழ்த்த முடியும்’
மேலும் பீஷ்மன், ‘அஸ்த்தினாபுரத்தை யார் ஆளப்போகிறார்கள் என்பதை
பார்த்துதான் என் உயிர் போகும்’ கர்னா.
98 கவுரவர்கள் மாண்டுபோய்
விட்டார்கள் 15-ம் நாள் இரவு,குந்தி தன் மருமகள் திரவுபதியிடம், ‘அக்கா காந்தாரி 98 பிள்ளைகளை இழந்து இதற்கெல்லாம் நீ
தான் காரணம் என சபிக்கும் நிலைக்கு வந்துவிட்டார் , துரவுபதி!,தான் பெற்ற பிள்ளைகள் தன் கண்முன்னே பிணமாகும் போது
எந்த தாயின் மனம் தான் அமைதி பெறும்?அந்த
தாய் சாபமிட்டால் நம் வம்சம் நிலைக்காது திரவுபதி’
அப்போது திரவுபதி, ‘அன்று அரசவையில் நான் மானபங்கப் பட்டபோது ,கதியற்ற நிலையில் நான் இட்ட சாபம்-சபதத்தை நான்
எவ்வாறு மறக்க இயலும்?’
துரவுபதி,அர்ச்சுனனிடம் மனம் இறங்கி பேசுகிறாள், ‘லோகத்தின் சிறந்த வில்லாளன் எனப் பெயர் பெற்றவர் நீங்கள்,எப்படியும் மற்ற இரண்டு பேரையும் வதைக்கும் ஆற்றல்
உங்களுக்கு உண்டு,இருப்பினும்,துரியோதனன் செய்த அறமற்ற செயலை நாமும் பதிலுக்கு
பதில் செய்தால் அந்த துஷ்ட்டர்ளுக்கும் உங்களுக்கும் வேறுபாடு இல்லாமல்
போய்விடும்.
இதை கேட்டுக் கொண்டிருந்த பீமன்,
‘வேண்டாம் திரவுபதி போட்ட சபதத்திலிருந்து
பின்வாங்குவது ஒரு சத்ரியனுக்கு அழகல்ல,அதைவிட
போர்க்களத்தில் மடிந்து போகலாம்,அசிங்கப்பட்டு வாழ்வது ஒரு
வாழ்க்கையா துரவுபதி?’
துரியோதனன் கர்னனிடம்,அர்ச்சுனனைக் கொல்ல தட்சனின் நாக அஸ்த்திரத்தை பயன்
படுத்தி கொல்ல வற்புறுத்துகிறான்.இதை கேட்ட சல்லியன்,‘அது முடியாது நீங்கள் அதர்ம வழியில் செல்கின்றீர்’
அப்போது துரியோதனன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான்,
‘மாத்திரி தேசத்து அரசே நீ உன் நாவை அடக்கு.
இங்கே என்னிடம் இருந்து கொண்டு
கடைசி காலத்தில் தர்ம அதர்மங்களை பேசுகிறாய்,இதே நிலை நீடித்தால் உன் மரணம் என் கையில் என்பது நிச்சயமாகிவிடும்’ என வாளை உறுவுகிறான்.
அப்போது அருகில் இருந்த சகுனி, ‘வேண்டாம் துரியோதனா! மாத்ரி தேசத்து மன்னர் நமக்கு
படைகளை தந்து உதவி செய்தவர்,அப்படி செய்யாதே’
பின் துரியோதனன்,‘உனக்கு அரசன் என்கிற பட்டம் இன்றோடு போகட்டும்,நீ இன்றிலிருந்து கர்னனுக்கு தேரோட்டியாக இரு’
(இதன் தொடரை புதிய அஞ்சல்-13ல் காணவும்)
No comments:
Post a Comment