இ-மகாபாரதம்-மறு சிந்தனை
ராமாயணம் நடந்த ,அதே கால கட்டத்தில் இப்பொழுது சாதவாகனர்களின் ரகு
வம்சத்தோடு ஒத்துப்போகாத இன்னொரு (குரு வம்சம்) முரட்டு சமுகத்தினரான யாதவர் எனும்
(யது குலம் எனவும் அழைப்பர்) இடையர் குல (ஆயர்குலம்) மக்களை தமிழகத்தில் கோனார்,பிள்ளை எனவும் பெயரிட்டு அழைப்பர்,
இவர்களை தங்கள் (ஆரியர்கள்) வழிக்கு கொண்டுவர ராமாயணத்தில்
கையாண்டது போல் வேறு வகையான யுக்தியை கையாண்டனர்.
வனம் வாழ் யது குலம்(யாதவர்),நிலம் வாழ் சத்திரிய
குலம்(வர்மா/வன்னியர்),நீரில்
வாழ் மீனவ குலம்(பரத குலம்) மூன்றையும் இணைத்து நான்காவதாகவும்,நடுநாயகமாக வான்வழி வந்தவர்களாகவும் விளங்கும் பிராமணர்களோடு பின்னப்பட்ட
கதைதான் மகாபாரதம்.
இப்பொழுது ஆசிரியரின் மறுசிந்தனையில்,
வாசகர்கள் மகாபாரதம் காணலாம்
அக்காலத்தில் பலம் பொருந்திய மனிதர்களை (முரடர்கள்) பிராமணர்கள் தங்கள் பாதுகாப்பிற்கு பயன்படுத்த பல சாகச யுக்கிகளை கையாண்டனர்.
முரடர்களை புகழ்வதும், முரடர்களுக்குள் சண்டை மூட்டி யார் வெற்றி பெறுகின்றனரோ அவர்களை வானளாவப் புகழ்வதும் கடவுள் அனுகிரகம் பூரணமாக உள்ளது என ஆகாயத்தை காட்டி பல அற்புதங்கள் நிகழப் போகின்றது என புளுகுவதும்,அதை மூடர்கள் நம்பி பிராமணர்களை தலையில் தூக்கிவைத்து ஆடுவதும் வாடிக்கை.
இப்பொழுது இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் (அதாவது இன்றய ஆப்கானித்தான்,அந்நாளில் காந்தாரம் என அழைக்கப்பட்டது) வாழ்ந்த தமிழ் மக்கள்,
தென் கிழக்கு பகுதியில் (கங்கை கரையோரம்) வாழ்ந்த ரகு வம்சத்தின் ருத்ர வர்மனோடு
சண்டையிட்டு பிரிந்தவர்கள்.
சிந்து நதியின் முகத்துவாரப் பகுதியில் வாழ்ந்த ருத்ர சேனனை தலைவனாக கொண்டு துவாரகா மற்றும்
மதுரா புரியை சுற்றி வாழ்ந்தவர்கள். ஆடு மாடுகளை மேய்ப்பது இவர்கள்
குலத் தொழில்.மலையும் காடும் இவர்கள் வாழ்விடங்கள்.வர்மாக்களிடம் வம்பு வேண்டாம்
என ஒதுங்கி வாழ்பவர்கள்.
ருத்தர வர்மனுக்கும்
ருத்ர சேனனுக்கும் ஒரேவகையான முரட்டு குணம்தான். சாலிவாகனர்களின் இருவேறு
பிரிவினர்தான் இவர்கள்.ஒரே குலமாக இருந்தாலும் சண்டை அல்லது போர் வந்தால் யார்
வெற்றி பெறுவது என்பதில்தான் போட்டியே. ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தவுடன் முதலில்
வரவேற்றது காந்தார சம வெளிப்பரப்பில் வாழ்ந்த தமிழர்களே! எதிர் கொண்டது சிந்துநதி
கரையோரம் வாழ்ந்த ருத்ர வர்மன் வகையராக்களைத்தான். இவர்களும் தமிழர்களே!. இவர்களை
தங்கள் வழிக்கு கொண்டுவந்த கதைதான் ராமாயணம் என்று ஏற்கனவே பார்த்தோம்.
இந்தியாவில் வர்மாக்கள் எங்கெல்லாம் வாழ்ந்தார்களோ அல்லது
வாழ்கின்றனறோ அங்கெல்லாம் இடையர்கள் (யாதவர்) இருப்பார்கள். ஆரியர்கள்,வர்மாக்களை
முழுவதும் வைணவ மதத்திற்கு மற்ற முடியவில்ல. ராமனுக்கு மட்டுமே நெற்றியில் நாமம்
போட முடிந்தது. அந்த வகையில் ஆரியர்களுக்கு தோல்வியே.
இந்த மத மாற்றத்தாலும்,ராமன்-சீதை கலப்பு
திருமணத்தால் பங்காளிகளுக்கு இடையில் சண்டை மூண்டு, ரகு வம்சம் சிதறுண்டு போனது.பல
சிறுக் குழுக்களாகவும் தங்களுக்கு என்று தனி மொழியும் எழுத்தும் ஆரியர்களின்
சமத்கிருத மொழியோடு இணைந்து உருவாகின.
ரகுவம்சத்தின் ராமன் ,ராவணன் வர்மா வழித் தோன்றலுக்குப் பின் (சுமார் 100 ஆண்டுகளுக்குப்பின்) வர்மாக்களின்
போக்கு பிடிக்காமல், முரட்டுத்தனமான தாக்குதலுக்கு ஆளாக விரும்பாமல் அமைதியான
வாழ்க்கை வேண்டி தங்களுக்கென்று தனி மொழியும் எழுத்தும் உருவாக்கி சிந்து நதி முகத்துவாரம் வந்துவிட்டார்கள். (தற்போதய
குஜராத்) பின் உத்தரபிரதேசம் பீகார் முழுக்க இன்றும் யாதவர்கள் ஆட்சிதான்
நடைபெறுகிறது.
பொலிவிழந்த சத்ரியர்கள், ராஜத்தான்,
மத்தியபிரதேசம், மகாராட்டிரம், ஒரியா (கலிங்கம்) போன்ற மாநிலங்களுக்கு
பரவி விட்டனர்.
ராமாயணத்தில் வர்மாக்களிடம், ஆரியர்களுக்கு ஏற்பட்ட
தோல்வியை தாங்க முடியாத ஒரு பிரிவினர் ருத்தர சேனனை அணுகினர். பஞ்சாங்கத்திலும், சோதிடத்திலும்
தேர்ச்சிப்பெற்ற ஆரியர்கள் ருத்தரசேனனை மதி மயக்கச் செய்தனர்.
கிருஷ்னன் எனும் தெய்வீக கற்பனைக் கதாபாத்திரத்தை
உருவாக்கினர். மகாபாரதம் முழுவதும் கிருஷ்னனின் திருவிளையாடல்கள் என மக்கள் மத்தியில்
கடவுள் அவதாரமாக, சித்தரிக்கப்பட்டிருப்பான். கடவுளை கண்ணில் காண முடியாது,
ஆனால் மகாபாரத கதா பாத்திரங்களை உருவாக்கும் போது மிக
எச்சரிக்கை மனப் பான்மையுடன் கலப்பின திருமணங்கள் நிகழ்த்தப்பட்டு இன ஒற்றுமைக்கு
வழி வகுத்திருப்பர்,ஆயினும் பிராமணர்களின் சூழ்ச்சி (கிருஷ்னன் மூலமாக) கதையில் பின்னப் பட்டிருப்பதை நாம் உணரலாம்.
1-கிருஷ்னனின் தோற்றம்
ருத்தரசேனனுக்கு பிறக்கப்போகும் மகளின் (தேவகி) வயிற்றில்
கடவுளே அவதரிக்கப் போகிறார், இதன் மூலம் ருத்தரசேனன் கடவுளைப் பெற்றெடுத்த
தாத்தாவாகப் போகிறார் எனும் சேதியினை பரவ விட்டனர்.
இந்த சேதி ஒன்று போதும்,முரட்டு மக்களை ஆரியர்களிடம்
அடிமைப்படுத்தி விட்டது.அது மட்டுமல்ல தேவகிக்கு கண்ணன் எட்டாவது மகனாகப்பிறப்பான்.அவனால்
தாய்மாமனுக்கு ஆகாது,எனும் செய்தி கடவுள் நம்பிக்கையற்ற ருத்ர சேனன் மகனான
கம்சனுக்கு கதி கலங்க வைத்துவிட்டது.தன் சகோதரி வயிற்றில் பிறந்த ஏழு
குழந்தைகளையும் கொடூரமாக கொன்றான்.
ஒரு மனிதன் ஒரு உயிரைக் கொல்வது பாவம்,அந்த கொடிய செயலை
செய்பவன் தான் மரணிக்கும் முன் அகால மரணமடைவான் எனும் சேதியினை ஆரியர்கள் பரவ
விட்டனர்.
வாடகைத் தாய்மை அந்நாளில் இருந்துள்ளது. கம்சன் தன் தங்கை
பெற்றெடுத்த ஆறு குழந்தைகளையும் கொன்றான்.தங்கை தேவகி ஏழாம் குழந்தையைக் கரு
கொண்டபோது யோகமாயா என்ற பெண்ணை
பெற்றெடுத்தாள். வசு தேவனுக்கு இரண்டு மனைவிகள், இரண்டாவது மனைவி
ரோகிணி,இவளுடைய கருப்பையில் தேவகியின் கருவை வைத்து (கரு
மாற்றம்) ரோகிணி வாடகைத்தாய் ஆனாள்.
சகோதரியான யசோதையுடன் வாழ்ந்த ரோகிணி, பலராமனைப் பெற்றாள்,பின் சுபத்திரையை ஈன்றாள்.
இந்த சேதி காட்டுத்தீ போல் நாடெங்கும் பரவியது.மக்கள்
பிராமணர்களைக் கண்டு பயந்தனர்.இவர்களே கடவுள் அவதாரங்கள் என மக்கள்
நம்பினர்.வாழ்க்கையில் மனிதனுக்கு ஏற்படும் ஒவ்வொரு இன்னல்களுக்கும் தோஷ பரிகாரம்
உண்டு என்பதை நம்பவைத்தனர். இன்றும்
நம்மவர்கள் நம்புகின்றனர்,மனிதனின் ஆறாம் அறிவு இங்கு ஏன் வேலை செய்யவில்லை? எங்கே
சுய சிந்தனை?இது மட்டுமல்ல மன்னன் ருத்தரசேனன் குடும்பத்தில் நடக்கபோகும்
விபரிதங்களை நினைத்து நாட்டு மக்கள் கதிகலங்கிப் போனார்கள்.
2-கம்சனின் ஜோதிட நம்பிக்கை
ராமாயணத்தில் ராவணன் செயல்பாடுகள் ஆரியர்களின்
எண்ணங்களுக்கு மாறாக அமைந்துவிட்டது. தன் செயல்களுக்கு குறுக்கே வந்துவிட்டதால்
சடாயுவை மட்டுமே கொல்கிறான் ராவணன். ஆனால் மகாபாரதத்தில் கடவுள் நம்பிக்கை அற்ற
கம்சன் பிராமணர்களின் கட்டுக் கதையான சோதிடத்தில் நம்பிக்கை வைக்கிறான். இதனால்
வீட்டில் தன் சகோதரியின் வைற்றுப் பிள்ளைகளான ஏழு பேரையும் பிறந்தவுடன்
கொல்கிறான்,அரண்மனையை ஒரு கொலை களமாகவே ஆக்கிவிடுகிறான்.
மூட நம்பிக்கையில் ஒரு மனிதன் நம்பிக்கை வைப்பதின் மூலம்
எவ்வளவு பெரிய மாபாதகச் செயலையும் செய்வான் என்பதற்கு கம்சனின் சோதிட நம்பிக்கையே
காரணம் என ஒரு உதாரணத்திற்குச் சொல்ல்லாம்.
இந்த செய்தி நாட்டு மக்களிடையே ஒரு பெரும் அச்சத்தையும், மாற்றத்தையும்
ஏற்படுத்தியது. கம்சனின் தங்கை தேவகிக்கு,
எட்டாவது பிள்ளை பிறக்கபோகுது. நேரம் நெருங்கிவிட்டது. ருத்ரசேனன் குடும்பம் மன
அழுத்த நோய்க்கு ஆளாகிவிட்டது. நாட்டு மக்களும் பரபரப்புக்கு உள்ளாகிவிட்டனர்.
அதுவரை அமைதியாக வாழ்ந்த ஆயர்குல மக்கள் ஆரியர்களின்
சோதிடம் பலிக்குமா? பலிக்காதா? சோதிடம் உண்மையானால் கடவுள் அவதரிப்பாரா?அவதரித்தல்
அவர் எப்படி இருப்பார்?அவரை எப்படி பாதுகாப்பது? இதுவே நாட்டு மக்களை கவலை அடைய
வைத்துவிட்டது.
மக்களை கடவுள் காப்பாற்றும் கவலை யெல்லாம் போய் கடவுளை
எப்படி காப்பாற்றுவது ?என்கிற கவலை மக்களை அதிகம் வாட்டியெடுத்தது.இன்றும் இந்நிலை
தொடர்கிறது.
நாட்டு மக்களிடம் இதை இதைதான் ஆரியர்கள்
எதிர்பார்த்தனர்.ஆரியர்கள் போட்ட கடவுள் சூத்திரம் மாபெரும் வெற்றி பெற்றதை
மனதுக்குள் மாபெறும் மகிழ்ச்சி கொண்டாடினர் பிறக்கப் போகும் கடவுளை எப்படி வழி படவேண்டும்?
எப்படி பராமரிக்க வேண்டும்? என தேவகிக்கும் வசு தேவருக்கும் தினமும் பாடம்
நடத்தினர்.
இந்த செய்தி கம்சனுக்கு அதிக எரிச்சல் உண்டாக்கியது. எட்டாவது
குழந்தை பிறந்துவிட்டது எனும் செய்தி கேட்டவுடன் குழந்தையைக் கொல்ல வாளை
உருவினான். அதற்கு முன் இரவில் பிறந்த ஆண் குழந்தையை (கிருட்னன்) இரவோடிரவாக
அருகில் உள்ள ஆயர் பாடிக்கு மாற்றி அதே நேரத்தில் ஆயர்பாடியில் (யசோதைக்கு) பிறந்த
பெண் குழந்தையை அரண்மனைக்கு, கம்சனுக்கு தெரியாமல் மாற்றி விடுகின்றனர்.
ருத்தரசேனனும் அரண்மனை ஊழியர்களும் இதற்கு உடந்தையாக செயல்பட்டார்கள்.
ஆணாதிக்க சமுகமாக திகழ்ந்த அந்நாளில் கூட பெண் குழந்தையை
கொடுத்து ஆண் குழந்தையை தத்தெடுக்கும் முறையை இந்த கதையின் மூலம் அறியலாம்.
யாசோதையும் நந்தகோபனும் ஆண் குழந்தை அதுவும் கடவுள் அவதாரம் என்பதால் அதிக செல்லம்
கொடுத்து வளர்த்தனர்.
குழந்தை வளர வளர அதிக கெட்ட குணங்களோடு வளர்ந்தான்.குழந்தைக்கே
உள்ள திருட்டு,பொய்,குறும்பு,வளர்ந்து வயதுக்கு வந்த பின் பல பெண்களோடு காம விளையாட்டு
மனித தன்மையற்ற சேட்டைகள் யாவையும் மக்கள் பொறுத்துக் கொண்டனர்,
காரணம் கண்ணன் ஒரு கடவுள் அவதாரம் என பொய் செல்லி
பிராமணர்கள் கதை காலட்சேபம் செய்தனர்.
இதை நம்பியவர்கள், நல்லவர்கள் என பிராமணர்களிடத்திலே
நல்லபெயர் எடுத்தனர், நம்பாதவர்கள், கம்சனைப் போன்று, கவுரவர்களைப் போன்று கடவுளுக்கு
(பிராமணர்களுக்கு) எதிரிகளானார்கள், நாத்திகர்கள், சமுதாயத்தில் பாவிகள் என
பெயரெடுத்தனர். இன்றும் இதே நிலைதான்.
அரண்மனை பிராமணர்கள் கூறியது போல்
தங்கை தேவகிக்கு எட்டாவதாக ஆண் குழந்தை பிறக்கவில்லை.
பிராமணர்கள் கூறிய சோதிடம் பொய்யாகிவிட்டதை நினைத்த
கம்சனுக்கு மேலும் அவர்கள் மீது கோபம் கொண்டான். கடவுள் நம்பிக்கையற்ற கம்சனுக்கு
கடவுள் பிறக்க வில்லை என நினைத்து மகிழ்ச்சியடைந்தான்.எதற்கும் எட்டாவதாகப் பிறந்த
பெண் குழந்தையையும் கொல்ல முயன்றான் ஆனால் அந்த குழந்தை தப்பி விட்டது.
கோகுலத்தில் (ஆயர்பாடியில்) கடவுள் அவதரித்தார் என கோகுலத்தில்
அஷ்ட்டமி (கோகுலாஷ்டமி இன்றும் கொண்டாடப்படுகிறது) பிராமணர்களிடம் அன்று மயங்கிய ஆயர்குல மக்கள் இன்றும், தெளியவில்லை.
******
******
(இந்தியா முழுவதும் எங்கெல்லாம் பிராமணர்கள் வாழ்கின்றனரோ
அங்கெல்லாம் ஆயர்களும் (இடையர்,கோனார்,யாதவா) வர்மாக்களும் (வன்னியர்,அக்கினி குல
சத்ரியர்,நாயக்,சிங்,குர்மிக்கள்) வாழ்கின்றனர். மொழியால்
மாறுபடுகின்றனர் ஆனால் அடிப்படை குணங்கள் ஒன்றே. தமிழர் ஒரு தேசிய இனம் என்பதற்கு இதுவே
ஒரு சரித்திர சான்று.
இந்தியாவில் ஒற்றுமையாக வாழ்ந்த தமிழினம் அதாவது ஒரே
மொழி,ஒரே இனம்,மனித நேயம் மட்டுமே அறிந்திருந்த சாலிவாகன கூட்டத்தில் ஆரியர்கள்
நுழைந்து அருவ வழிபாடான சோதிடம், பஞ்சாங்கம்,பேய்,பிசாசு,சூன்யம் கடவுள் நம்பிக்கை
போன்ற சிந்தனைகளை விதைத்து கூட்டுக் குடும்பத்தை பல தலை கட்டுகளாகப் பிரித்தனர்.
பிரித்தாளும் சூட்சமங்களை தெரிந்து கொண்டு உழைப்பாளிகளின்
சேமிப்பை தங்கள் வாழ்வாதாரமாக மாற்றினர். இன்றும் மாற்றுகின்றனர் என்பதை
வெய்யிலாளிகள் உணரச் செய்ய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதுதான்
வேதனைப்படுத்தும் செய்தியாகும்.)
******
3-கிருஷ்ன லீலைகள்(அடாவடிகள்)
(கிருஷ்ன லீலா அல்லது கண்ணன்(கடவுளின்) லீலைகள் என்று அவன்
படுத்தும் இளமைக் கால அடாவடித்தனம் கொஞ்ச நஞ்சமல்ல. இளமையில் ஒரு மனிதன் செய்யும்
அல்லது செய்ய விரும்பும் சமுக விரோத செயல்களான பொய்,களவு,திருட்டு,ஏமாற்று
அனைத்தையும் கடவுள் அவதாரமாக கருதப்படும் கண்ணன் செய்தவைகளை கடவுளின் லீலைகள்
என்று ஆயர் குல மக்களை நம்ப வைத்தனர்.
கண்ணன் யசோதையின் செல்லப் பிள்ளையாக வளரக் காரணம் அவன்
கடவுளே என நம்பியதால்தான்,அல்லது பிராமணர்கள் அவளை நம்பவைத்தனர்.அக்கம் பக்கம்
உள்ளவர்களும் கண்ணன் செய்யும் அடாவடி செயல்களை கடவுளின் லீலா விநோதங்கள் என
தாங்கிக்கொண்டனர்.
கண்ணனை கடவுள் அவதாரமாக இடையர்களுக்கு (ஆயர்குல மக்களுக்கு)
மாற்றியது ஏன்?எப்படி?,என்னென்ன சூழ்ச்சிகள் செய்து பாமர ஆயர்குல மக்களை
பிராமணர்களுக்கு சேவகம் செய்ய மற்றும் காவல் காக்க வியூகம் அமைத்தார்கள் என பின்
வரும் மகாபாரத தொகுப்பில் காணலாம்.
தேவகி வயிற்றில் கடவுள்(கிருஷ்ணன்) பிறந்ததாகவே
இருக்கட்டும். கம்சன், தங்கையின் தெய்வ பலம் பொருந்திய குழந்தையை சாதாரண ஒரு
மனிதனால் எப்படி கொல்ல முடியும்? கடவுள் எனில் பிராமணர்களின் கடவுள் கொள்கைப் படி
மனிதனைவிட அசாதாரண குணம் படைத்தவன் அல்லவா?
அப்பொழுது கதை கேட்டுக் கொண்டிருந்த பாமர மக்கள், கதை சொன்ன
பிராமணனை திருப்பி கேள்வி கேட்க தோன்ற வில்லை. கேட்டிருந்தால் இந்தியாவில் கடவுள்
கொள்கையே தோன்றியிருக்காது.
இந்தியாவில் இன்றளவும் ஆயர்களும், வர்மாக்களும்
இப்படித்தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் .120 கோடி இந்திய மக்களில் 80 கோடி
இவர்களே.மீதி 10 கோடி பிராமணர்கள்,மற்ற 30 கோடிகளில் முசுலிம் மற்றும்
கிறித்துவர்களே.)
கண்ணனின் தந்தையான வசுதேவன், தங்கை குந்தியை அதாவது கண்ணனின்
அத்தையை சந்திர குலத்து அஸ்த்தினாபுரத்து மன்னனான பாண்டுவுக்கு அதாவது திருதராஷ்ட்ரன் தம்பிக்கு
மண முடிக்கின்றனர். வசுதேவன் ருத்ரசேனனின் மருமகன், அதாவது தேவகியின் கணவன். கண்ணனை
கடவுள் அவதாரமாக ஏற்காத கம்சனை அரண்மனை புரோகிதர்களின் சூழ்ச்சியால் சாகடிக்கப் படுகிறான்.
(வாசகர்கள் இங்கே முக்கியமான மனித குல குணாதிசயங்களான சகோதர
சண்டைகள் மற்றும் பங்காளி சண்டைகள் எப்படி வேறுபடுத்தி வெளிப் படுத்தியுள்ளார்கள்
என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.)
ராமாயணத்தில் ஒரு தாய் வயிற்று சகோதரர்கள்
ஒற்றுமையின்மைப்பற்றி விவரித்து இருப்பார்கள் மகாபாரதத்தில் இருவேறு தாய் வயிற்று
பிள்ளைகள் அதாவது பங்காளிகள் ஒற்றுமையின்மையை விவரித்து இருப்பார்கள்.
வர்மாக்களுக்கும், இடையர்களுக்கும் இதுதான் வேறுபாடு.
இயற்கையிலேயே வர்மாக்களுக்கு(சத்திரியர்) முரட்டுகுணம்
அதிகம்.அதற்கு வீரம் என பெயர் சூட்டி அவர்களை வீணடித்தார்கள்,இன்றும் அதைத்தான் செய்துகொண்டிருக்கின்றனர். தன் சக மனிதர்களை
அடக்கியாளும் திறமைப் பெற்றவர்கள்.மற்றவர்களுக்கு அடங்கிப் போவதைவிட மரணமடைவதே
மேல் என நினைப்பவர்கள்.
ராமாயணத்தில் சூரிய குல மன்னனான சூரிய வர்மனை ஆரியர்கள்
நெருங்க முடியவில்லை .அவன் மகன் தசரதனை பெண்களை காட்டி நெற்றியில் நாமம்
போடவைத்தனர். அய்யோத்தியில் காலூன்றிய பிராமணர்கள் ஒரே குல மக்களான
வர்மாக்களை,தங்களை ஆதரிப்பவர்களை சத்திரியர்கள் என்றும் எதிர்த்தவர்களை அரக்கர்கள்
என்றும் அழைத்தனர்.
சூரிய குலத்தில் தோன்றி ஆரியர்களை எதிர்த்த ராவணனை ,ஒரு மகாவீரனை அரக்கர் இனம் என
அழைத்தனர்;அழித்தனர்.
அதில் முழு வெற்றியடையாத பிராமணர்கள், சுமார் 100
ஆண்டுகளுக்குப் பின்னர் பீஷ்மன் தலைமையில் அஸ்தினபுர அரசை நிர்மானிக்க
தீர்மானித்தனர். அந்த குரு வம்சத்திற்கு, பிராமணன் பரசுராமன் தான் குரு.இங்கே
தான் பிராமணர்களின் சூழ்ச்சியான வேறுபட்ட அல்லது மாறுபட்ட இந்தியத் தமிழர்களை
ஒன்றிணைத்து தங்கள் வாழ்வாதாரங்களை பெருக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
மூன்று சாதிகளையும்(வர்மா,யாதவா,மீனவர்) இணைத்து தங்களுக்கு
(பிராமணர்களுக்கு) பாது காவலர்களாக மாற்ற கலப்பு திருமணங்களை
நிறைவேற்றுகின்றனர்.சூரிய வம்சத்திலிருந்து (ராமனின் மூதாதையர்) சந்திர
குலத்தை பிரித்து மீனவர்களோடு இணைத்து (சந்திர குல மன்னன் சந்தனுவுக்கும் மீனவ
பெண் சத்தியவதிக்கும் கலப்பில் பிறக்கும் விசித்திர வீரனை அஸ்த்தினாபுரத்தில் அரியணை ஏற்றுவது,சந்தனுவின் வாரிசு என்பதால் அஸ்த்தினாபுரத்து அரசை சந்திர வம்சம் என்று
பொயரிட்டு அழைத்தனர்.)
4-தேவதத்தன் அல்லது தேவவிரதன் தோற்றம்
ஒரு நாள் கங்கை கரையோரம் ,(கங்கைக்கும்
சத்ரிய மன்னன் சந்தனுவிற்கும் பிறந்தவன்) தேவதத்தன் உலா வரும்போது,சந்தனுவும்
மீனவப் பெண் சத்தியவதியும் கொஞ்சி விளையாடுவதை கண்ணுறுகிறான்.
அஸ்த்தினாபுரம் எல்லைக்குட்பட்ட
பகுதி அது தேவதத்தனுக்கு அவர்கள் அந்நியர்களாக காணப்பட்டனர். ஆற்றில் மிகப்பெறிய
மீன் தென்படவே அதை பிடிக்கும் முயற்சியில் சத்தியவதி ஈடுபட்டாள்.சந்தனு தடுத்தும்
அவள் கேட்க வில்லை.மீனவளான சத்தியவதிக்கு அந்த மீனைப்பிடிப்பதில் ஒரு கவுரவப்
பிரச்சைனையாகி விட்டது.
தேவதத்தன் மீனைப் பிடிப்பதற்கு
உதவுகிறான். இதில் சந்தனுவுக்கும் தேவதத்தனுக்கும் ஒரு வாக்குவாதம்
நடக்கிறது.அப்பொழுது கங்கை அங்கே தோன்றுகிறாள். தேவதத்தனை சந்தனுவுக்கு கங்கை
அறிமுகம் செய்யும்போது,
‘இவன்தான் தேவதத்தன், நம்
மகன்’எனும்போது சந்தனுவுக்கு பாசம் பிறக்கிறது.சந்தனுவும் தேவதத்தனை ஆரத்தழுவி
பசமழை மழை பொழிகிறான்.சத்தியவதியை சிற்றன்னை என அறிமுகம் செய்து வைக்கிறான். அஸ்த்தினாபுரத்தில்
சந்திர குலத்தை நிர்மானிக்க தன் வாரிசை கண்டெடுத்த தில் சந்தனுவுக்கு இரட்டிப்பு
மகிழ்ச்சி.ஆரியர்கள் கங்கை நதிக் கரையோர நாடுகள் முழுக்க பரவிய காலத்தில் பலம்
வாய்ந்த மன்னர்கள் எங்கு ஆட்சியில் இருந்தார்களோ அவர்களை எல்லாம் வசியப்படுத்தும்
வேலையில் ஈடு பட்டனர்.யார் பிராமண மக்களை ஆதரிக்கின்றனரோ அவர்கள் மட்டுமே, சத்திரியர்கள்
என அழைக்கப்பட்டனர். சத்திரியனான
சந்தனு வுக்கும் கங்கைக்கும் பிறந்தவன் (தேவதத்தன்)தேவ விரதன்,சர்வ பலம்
பொருந்தியவன்.அந்தணன் பரசுராமனிடம் ஆய கலைகள் கற்றவன்.பிராமணனை குருவாக ஏற்க
காரணம் ,ஒரு நாட்டு அரசனானவன் நாட்டு மக்களை ஆள வேண்டுமானால் சாஸ்த்திரம், சம்ரதாயம்,
சடங்கு, போன்றவைகளை கற்று புலமை பெற வேண்டும்.தேவ விரதன் இதைச் சரியாக பின்பற்றி
பரசுராமனுக்கு சீடன் ஆனான்.பரசுராமனும் தனக்கு சரியான தலையாட்டி வீரன் தேவ விரதனே
என தீர்மானித்து மக்களை ஆளும் சகல நுணுக்கங்களையும் கற்றுத்தறுகிறான்
இங்கேதான் தன் தந்தை சந்தனுவின் பலவீனத்தை பீஷ்மன்
உணர்கிறான்.தேவ விரதனை அஸ்த்தினாபுரத்து அரசனாக பட்டாபிஷேகம் செய்வது வைக்க சந்தனு
ஈடுபடுகிறான்.பட்டாபிஷேகத்திற்கு சத்தியவதியை வருகைத் தரும்படி அழைப்பு
விடுக்கிறான். சத்தியவதி அழைப்பை நிராகரிக்கின்றாள். காரணம்,முதல் மனைவி கங்கை
இருக்கும்போது தான் பட்டாபிஷேகத்தில் எந்த தகுதி அடிப்படையில் கலந்து கொள்வது என
சந்தனுவைப் பார்த்து வினா எழுப்புகிறாள்.மேலும் தேவ விரதனைப் பார்த்து தனக்கும்
தங்கள் தந்தை சந்தனுவுக்கும் பிறந்த விசித்திர வீரன் இருக்கும் போது,தன்னை தாசியாகத்தான் இந்த சமுகம் விமர்சிக்கும்,எனவே தான் வரமுடியாது என
திட்டவட்டமாக மறுக்கிறாள்.
5-சந்தனு மரணம்
பல நாட்கள் வாட்டமுற்ற சந்தனுவை கண்ட தேவ விரதன்,தங்கள் மன வேதனைக்கு
காரணம் என்ன என
வினவுகிறான்.மவுனம் சாதித்த சந்தனுவை மேலும் வற்புறுத்த மனமில்லாமல் சிற்றன்னையை
காண்கிறான்.தந்தையின் விருப்பத்தை சிற்றன்னை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகிறான். முடியவில்லை.
இதற்கிடையே சந்தனு இறந்து போகிறான்.சந்தனுவின் ஆசையான தேவ விரதனை
அஸ்த்தினாபுரத்து அரசனாகும் ஆசை நிறைவேறாமல் போகிறது.இதனை மனதில் பதியவைத்த தேவ விரதன்
இறுதிவரை திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை என சபதம் கொள்கிறான்.
மீண்டும் சத்யவதியிடம் செல்கிறான் அப்பொழுது சத்யவதி,தேவவிரதனுக்குத் திருமணம் செய்ய முற்படுகிறாள்.தந்தையின் ஆசையை ஒரு மகன்
நிறைவேற்றவேண்டும் எனும் தர்ம சிந்தனையை குரு பரசுராமனிடமிருந்து பெறுகிறான்,தேவ விரதன்
.இதை ஒரு வைராக்கியமாகவே சபதமேற்கிறான், இதனால் தேவ விரதன் தான் சாகும் வரை
பிரம்மச்சாரியம் கடைபிடிக்கப் போவதாக சத்யவதியிடம் அறிவிக்கிறான். அதனால் தேவ விரதன்
அன்று முதல் பீஷ”மன் என அழைக்கப்பட்டான்.
6-விசித்திர வீரன் தோற்றம்
ஒரு பிரம்மச்சாரி அரியணை ஏற சாஸ்திறங்கள் அனுமதிப்பதில்லை. எனவே
பீஷ்மனை திருமணம் செய்து கொள்ள சத்தியவதி
வற்புறுத்துகிறாள். ‘என் சபதத்தை நான் மீற மாட்டேன் ,தம்பி விசித்திர வீரனுக்கு
நான் திருமணம் செய்து அரியணை ஏற்றுகிறேன்’ என தன் சிற்றன்னையிடம் கூறுகிறான்
இதற்கிடையே விசித்திர வீரனை,பக்கத்து நாடான பாஞ்சால நாட்டு
எல்லையை கடந்துவிட்டதாகவும், அங்கு விளை நிலத்தை சேதப்படுத்தி விட்டதாகவும் பழி
சுமத்தி, பாஞ்சால மன்னன், விசித்திர வீரனை கழுவேற்றுகிறான். அந்நேரம்
செய்தியறிந்து அந்நாட்டிற்கு சென்று பீஷ்மன், தன் தம்பியைக் காப்பாற்றுகிறான்.
அண்டை நாட்டு மன்னனிடம் தன் தம்பி கோழை போல் பிடிபட்டதை
தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதுகின்றான் பீஷ்மன்.விசித்திர வீரனுக்கு போர்க் களப்பயிற்சி
அளிப்பதை கண்ணுற்ற சத்தியவதி மகன் அடிபடுவதை பார்த்து வேதனை அடைகிறாள். ‘என் மகன்
சத்திரியனல்ல ஒரு சத்திரியனுக்குத்தான் வீரனாகும் தன்மை உண்டு,எனவே அவனை விட்டு
விடு பீஷ்மா’என பதற்றத்துடன் கூறுகிறாள்.’
7- விசித்திர வீரன் திருமணம்
‘அவனை அரியணை ஏறச் சொல்லுங்கள் அவனுக்கு நான் பாதுகாப்பு’ என
சிற்றன்னையிடம் வேண்டுகிறான் பீஷ்மன். அப்படியானால் அவனுக்கு திருமணம்
செய்துவிட்டு அரியணை ஏற்றுவது என இருவரும் தீர்மானிக்கின்றனர்.
காசி ராஜனிடம் பெண் கேட்க பீஷ்மனை அனுப்புகிறாள் சத்தியவதி.காசிராஜனுக்கு
மூன்று பெண்கள்,மூத்த பெண் அம்பை ,
அண்டை நாட்டு இளவரசன் சால்வனோடு ஏற்கனவே காதல்
வயப்பட்டு விட்டதால்,பீஷ்மனின் தம்பியை மணமுடிக்க மறுக்கிறாள்.
சுயம்வரத்தால் அவமானப் பட்டுப்போன அம்பையின் காதலன்,
பீஷ்மனை அவையில் எதிர்த்து மரணமடைகிறான்.தன் காதலன் இழப்பிற்கு காரணமான பீஷ்மனை
பழி வாங்கத் துடிக்கிறாள்,அம்பை.மற்ற இரண்டு பெண்களையும் (அம்பிகா,அம்பலிகா)
பீஷ்மன் சிறை எடுக்கிறான்.அஸ்த்தினா புரத்திற்கு அழைத்து வந்து விசித்திர
வீரனுக்கு மண முடிக்கிறான் பீஷ்மன்.
காசிராஜனின் மூத்த மகளான அம்பை,அஸ்தினாபுரத்து அவையில்
நுழைந்து ராஜமாதா சத்தியவதியிடம் நியாயம் கேட்கிறாள்.
‘அடைந்தால் பீஷ்மனை அடைவேன் இல்லையேல் அவனைப்
பழி வாங்குவேன் ;இது சத்தியம்’ என சொல்லி அவையை விட்டு
வெளியேறுகிறாள். அந்நேரம் அம்பையை பீஷ்மன் நிறுத்தி,
‘உனக்கு நியாயம் வேண்டுமானால் தன் குரு பரசுராமனிடம் சென்று
முறையிடு’ என சொல்கிறான் .
(மாபெரும் வீரனான பீஷ்மன் பிராமணர்களின் மாய மந்திரத்திற்கு
கட்டு பட்டு அடிமையானவன்.)
தான் மணம் முடித்தால், சிறந்த வீரனான பீஷமனைத்தான்
மணமுடிப்பேன், ஒரு கோழையான விசித்திர வீரனை மணமுடிக்க மாட்டேன் என முகத்தில்
அடித்தாற்போல் கூறி விடுகிறாள்.
அம்பையும் பரசுராமனைத் தேடி முறையிடுகிறாள். ‘பீஷ்மன்,
பராக்கிரமசாலி இம்மையில் அவனை யாராலும் வெல்ல முடியாது’என கூறும் பரசுராமனைப் பார்த்து
வாயடைந்துப் போகிறாள்.
8-விசித்திர வீரன் மரணம்
விசித்திர வீரனின் முதலிரவுக்கு,அம்பையின் சகோதரிகளை தயார்
படுத்தும் வேளையில் விசித்திரவீரன் திடீரென இறந்து போகிறான்.அதிர்ச்சி அடைந்த பீஷ்மன்
சூரிய தேவனிடம் முறையிடுகின்றான் .
‘அஸ்த்தினாபுரம் வாரிசுக்கு வழியில்லாமல் போய்விட்டதே
,இதற்கு வேறு வழிதான் என்ன?’என வினவுகிறான்.
9-திருதராஷ்ட்ரன்,பாண்டு,விதுரன் தோற்றம்
வாரிசுகளைப்பெற,சத்திரிய தர்மப்படி கணவனை இழந்த பட்டத்து
மகிஷிகள்,மனதிற்கு பிடித்த ரிஷிகளை புணர்ந்து வாரிசுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என
கூறுவதை, தன் சிற்றன்னையிடம் கூறுகிறான் பீஷ்மன். அவ்வாறு வியாச முனிவருக்கு பிறப்பவர்கள்
தான் திருதராஷ்ட்ரன்,பாண்டு,
திருதராஷ்ட்ரனுக்கு பிறக்கும் போதிலிருந்தே இரண்டு கண்களும்
தெரியாது.அம்பிகாவிடன் புணர்ந்த பாவத்தால் வியாசரின் உடல் பலம் நலிவடைந்தது ,இதன்
விளைவாக வியாசர் உடனே இன்னொரு இளவரசியான அம்பலிகாவை புணர்ந்த பின் பாண்டு பிறந்தான்
அதனால் அவன் உடல் நலிவுற்று பலவீனமாக காணப்பட்டான்
மீனவனான வியாசர் ராஜமாதா சத்யவதிக்கு அண்ணன் முறை.அழுக்கான
வியாசர் தன்னை நெருங்கும் போது அம்பிகா அருவருப்பால் கண்களை இறுக
மூடிக்கொள்கிறாள்,இதனால் பிறக்கும் குழந்தை குருடாகிப்போனது என ஒரு கதையும் உண்டு.
விதுரன் தாய் வேறு.அதாவது அம்பையின் தோழிக்கும் அரண்மனை பிராமண
இளைஞனுக்கும் பிறப்பவன். ஆனால் மூவருக்கும் ஒரே தந்தையாக வியாசர் தான் என முடிவு
செய்யப்படுகிறது
திருதராஷ்ட்ரனுக்கும்,பாண்டுவிற்கும் மட்டும் போர்ப் படைப் பயிற்சிகளும்,நாட்டை
ஆளும் கலைகளும் சொல்லித் தரப்படுகின்றன. அஸ்த்தினாபுரத்து அரியணையை அலங்கரிக்க
தகுந்த வாரிசுவை தயார் படுத்த 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.
தலைமகன் திருதராஷ்ட்ரனுக்கு திருமணம் முடித்த பின்னரே
அரியணை அமர்த்த முடியும்.மக்களை ஆளும் மன்னன் எப்படிப் பட்டவனாக இருக்க வேண்டும்?
எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படவேண்டும்?என்ன தகுதிகள் வேண்டும்? போன்ற விதிகளை
பரசுராமனிடம் இருந்து பீஷ்மன் கற்றுத் தேறுகின்றான்.
10-திருதராஷ்ட்ரன் திருமணம்
சத்திரியனான பீஷ்மன்,பிராமணர்களின் அடிமையாகவே மாறிவிட்டவன் அரண்மனை
புரோகிதர்களான பிராமணர்கள் ஆலோசனைப்படி, திருதராஷ்ட்ரனுக்கு
பெண் கேட்க காந்தாரம் செல்கிறான். முப்படைகளுடன் அணிவகுத்து வருவதை கேள்வியுற்ற
காந்தார மன்னன், பீஷ்மனை சகல மரியாதையுடன் வரவேற்கிறான். பீஷ்மனுக்கு
மகன் முறையும், அவன்
சிற்றன்னையின் பேரனுமான திருதராஷ்ட்ரன், ஒரு பிறவிக் குறுடு
என்பதை காந்தார மன்னன் அறிவான்.காந்தார நாட்டு இளவரசியான காந்தாரி அழகும் அறிவும்
ஒரு சேரப்பெற்றவள்.
அஸ்த்தினாபுரத்திற்கு, திருதராஷ்ட்ரன் எப்படிபட்ட வாரிசு
என்பதையும் காந்தார மன்னன் அறிவான். நற் குடிபிறப்பு அற்ற திருதராஷ்ட்ரனுக்கு,
அதுவும் குருடனுக்கு, காந்தார மன்னன்
நினைத்திருந்தால் பெண்தர மறுத்திருக்கலாம்; ஆனால் பீஷ்மனின்
பராக்கிரமத்தை நினைத்து வாய் மூடி மவுனியானான்.
தந்தையின் போக்கை கண்டு சகுனி செய்வதறியாது திகைத்து
போகிறான்.சகுனி தன் தந்தையிடம்,அழகு தேவதையான தன் அக்காவை எப்படி
குருடனுக்கு மணமுடிக்க இசைவு தரலாம் என வாக்குவாதம் செய்கிறான். இதை கேட்டுக் கொண்டிருந்த
காந்தாரிக்கு அப்பொழுதுதான் உண்மை நிலை
புரிகிறது. தந்தையின் கையறு நிலைகண்டு காந்தாரி நிலை குலைந்து போகிறாள்.சகுனி தன்
அக்காவிடம் சென்று திருமணத்தை மறுக்க
சொல்கிறான்.திருமணத்தை மறுத்தால் தந்தை மனம் புண்படும்,வேண்டாம்
என தன் தம்பியிடம் எடுத்துரைக்கிறாள்,காந்தாரி.
அக்காவின் மனதை மாற்றமுடியவில்லை,இந்த கல்யாணத்தை ஜீரணிக்க முடியாமல் தன்னிடம் உள்ள கத்தியால் தன் தொடையை
குத்திக் கிழிக்கிறான்.தம்பியின் வெறிச் செயலைப் பார்த்து அதிர்ந்த காந்தாரி
பதறிப் போகிறாள் தம்பியின் காயத்திற்கு கட்டுப் போடுகிறாள். அன்றிலிருந்து சகுனி
நொண்டியானான்.
(சகுனி,நொண்டியானதற்கு இன்னொரு
கதையும் உண்டு,காந்தார மன்னன்,பீட்மன் மீது
வன்மம் கொண்ட காரணத்தால் அவனை பழிவாங்க சூதாட்டத்தில் வெல்ல முடியாத தன் மகன் சகுனியை
உருவாக்கும் போது மகனுக்கு நினவிருக்க வேண்டும் எனும் எண்ணத்தில் அதன் வடு தெரிய,காலத்துக்கும் பழிவாங்கும் குணம் கொண்ட தந்தையே மகன் காலை உடைக்கிறான்)
11-காந்தரியின் குருட்டு சபதம்
காந்தாரிக்கு,தனக்கு வரப்போகும் கணவன் குருடன் என
நிச்சயமானவுடன், அன்றே தன் இரு கண்களையும் துணியால் இருக
கட்டி விடுகிறாள்;தன் கணவருக்கே கண் தெரியாத போது தான்
மட்டும் இந்த உலக அழகை ரசிக்க விரும்ப வில்லை,இனி எந்த
சூழலிலும் கண் கட்டை அவிழ்ப்பதில்லை என சபதமேற்கிறாள்.
புகுந்த வீடான அஸ்தினாபுரம் அரண்மனை வாசலில் காந்தாரி கால் வைத்ததும்,கண்களை துணியால் இறுக கட்டி வந்தது,பீஷ்மனுக்கும் தன்
அன்னை சத்தியவதிக்கும் பிடிக்கவில்லை.செய்தி அறிந்த திருதராஷ்ட்ரன் மணவரையில்
தன்னோடு அமர வேண்டாம்,என காந்தாரியை நிராகரிக்கிறான்.
காந்தாரி தன் சாதுரியப் பேச்சால் திருதராஷ்ரனை
திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கின்றாள். திருமணம் நடந்த அன்றிவு கூட கணவன்
மனைவிக்கும் இடையே வாக்குவாதம் தொடர்கிறது,
‘நான் இரண்டு கண்களும் இழந்தவன்,பிறவிக் குருடு,ஒரு குருடனுக்கு இரண்டு விழிகளை உடைய
அழகான மனைவி தேவைபடுகிறதா? என்கிற எண்ணத்தில் என்னைப்
பழிவாங்கவே அல்லது அவமானப்படுத்தவே இரண்டு கண்களையும் கட்டிக்கொண்டு வந்து
நிற்கின்றாயா?’
என தன் மனைவியிடம் வார்த்தை அம்புகளால் துளைத்து
எடுக்கின்றான் திருதராஷ்ட்ரன்.
‘தனக்கு 100 பிள்ளைகள் ஈன்றெடுக்கும் பெரும்
பேரு உள்ளது,என்னை நம்புங்கள்’ என
கணவனிடம் சொன்னதுமே திருதராஷ்ட்ரன் மனம் உள்ளுக்குள் ஆனந்தம் கொள்கிறது.
திருதராஷ்ட்ரன்–காந்தாரி
திருமணம் நடந்து முடிந்ததுமே,அதுவரை பீஷ்மன்,சத்தியவதியால்
காலியாக பாதுகாத்துவந்த அரியணையை அலங்கரிக்க வாரிசு வந்து விட்டதை எண்ணி சத்தியவதி
ஆனந்தம் அடைகிறாள். இதற்கிடையே அரண்மணை புரோகிதர்கள் ராஜதர்மம் என்று ஒன்று உள்ளது
அதன் படி குருடன் அரசனாக முடியாது என கூறுவதைக் கேட்ட சத்தியவதி அதிர்ச்சி
அடைகிறாள்,
சிற்றன்னையின் மனம் வேதனை அடைவதை பார்த்து பீஷ்மனும் கவலை
அடைகிறான். இதற்கு ஒரு மாற்று வழியை அவனே கூறுகிறான்.
~அரசன் குருடானனால் என்ன,அவனுக்கு பக்க பலமாக சகோதரர்களான பாண்டுவையும் விதுரானையும்
அமைச்சர்களாக்கினால் நாட்டை ஒரு குருடன் வழி நடத்துவது எளிதான காரியம்தானே!’
இந்த யோசனை அனைவருக்கும் ஏற்புடையதாக இருத்தது.பாண்டுவை
முதன்மை அரைச்சராகவும், விதுரனை நீதி நிர்வாக அமைச்சராகவும்
நியமிக்கப்பட்டனர்.அதுவரை பேசாமல் இருந்த விதுரன் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த உடன்,நாட்டுக்கு தன் அலோசனையை வழங்குவது தன் கடமையாகிவிட்டதை உணர்கிறான்.
அவையில் தன் ஆலோசனையை எடுத்தரைக்கிறான் ,அதைகேட்ட அனைவரும்
அதிர்ச்சியில் உறைந்தனர்.
‘ஒரு குருடன்,நாட்டை
தலைமை ஏற்று நடத்துவதை தர்ம சாஸ்த்திரங்கள் ஏற்க வில்லை.’ என
விதுரன் கூறுகிறான். இதைக் கேட்ட பாட்டி (ராஜமாதா) சத்தியவதி கோவத்தின் உச்சிக்கே
போனாள்.
‘விதுரா,இதுவரை பேசாமல்
இருந்துவிட்டு அதிகாரம் கைக்கு வந்தவுடன் உன் பேச்சு மாறுகிறதே ஏன்?’அவையில் சத்தியவதி வினா எழுப்புகிறாள்.
12-விதுரனின் அற(றி)வுரை
அப்பொழுது விதுரன்,‘ராஜமாதா ! அதிகாரம் வந்த பின்பு அமைச்சர்
தன் கடமையாற்றுவது தான் ராஜ தர்மம்.அரசாளும் விதிகளை எடுத்துரைப்பது என் கடமை. அதன்படி
நாட்டையாளும் மன்னன் குருடனாக இருப்பதை தர்மத்தின் ஆட்சியாக ஏற்க முடியாது.
பாதிக்கப்பட்ட குடி மக்களுக்கு மன்னன், உண்மையான நீதி வழங்க வேண்டுமானால், பாதிக்கப்பட்ட
மக்களின் முகம் பார்த்தால் மாட்டுமே உண்மை உணர முடியும்; அப்பொழுதுதான்
வழங்கப்படும் நீதி, நீதி யாக இருக்கும் இல்லையேல் ,அநீதி ஏற்படும்.’
சிறுவயதிலிருந்தே திருதராஷ்ட்ரனுக்கு தான் தான் அஸ்தினாபுர
அரியணை ஏற கனவு கண்டிருந்தான். ஒரு குருடன் அரியணை ஏறுவதை சாஸ்த்திரங்கள் ஏற்கவில்லை.
இந்த உண்மையை திருதராஷ்டரனிடம் தெரிவித்தபோது, அவன் கோவத்தின்
உச்சிக்கே சென்றுவிட்டான்.
‘என்னை எல்லாறும் சேர்ந்து
வஞ்சிக்கின்றீர்கள். எனக்கு துரோகம் இழைக்கின்றீர்கள்’என
புலம்பித்தீர்த்தான். அவனை சமாதானப்படுத்தி, சாந்த நிலைக்கு
கொண்டுவர சகுனி ஒரு யோசனை முன் வைக்கின்றான்.
13-பாண்டு-குந்தி திருமணம்
அதாவது பாண்டுவிற்கு திருமணம் முடித்து பட்டாபிசேகம் செய்துவைத்து ,பின் பாண்டுவை திக்விஜயம் அனுப்பி,அந்த வெற்றிடத்தில்
திருதராட்டிரனை இடைக்கால ஆரசனாக்குவது, அந்த வகையில் பாண்டுவிற்கு
திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
பாண்டுவிற்கு முடி சூட்டுதல் முடிந்ததுமே, பாண்டுவை திக்விஜயம் அனுப்விடுவோம்; பின்
திருதராஷ்ட்ரனுக்கு முடி சூட்டி விடலாம், பாண்டு திரும்பி
வந்தால் அப்பொழுது ஒரு மாற்று யோசனை செய்யலாம் என சகுனி சொன்னதை அனைவரும்
ஏற்கும்படி ஆகிவிட்டது. ஆனால் பிம்மச்சாரியான பாண்டுவை அரியணை ஏற்ற முடியாதே! எனவே
பாண்டுவுக்கு திருமணம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
பக்கத்து நாட்டு மன்னனான குந்தி போஜனின் மகளான குந்திக்கு சுயம்வரம்
நடத்தப்படும் சேதி பீட்மன் மூலம் சத்யவதிக்கு தெரிகிறது. உடனே பாண்டுவை குந்தியின் சுயம்வரத்தில் கலந்துகொள்ள தீர்மானிக்கிறாள்.அதன்படி பாண்டு தன் பரிவாரங்களுடன் குந்தியின் சுயம் வரத்திற்கு செல்கிறான்.
(இங்கேதான்,பிராமணர்கள்,சேனாதிகள்(உத்தரசேனன் வகையரா) எனவும்,குரு வம்சம் எனவும் அழைக்கப்படும் யாதவ இனத்தைச் சார்ந்த குந்தியை பாண்டுவிற்கு
மண முடிப்பதின் மூலம்,சத்ரிய வம்சத்தின் சந்திர குலத்தை இணைக்கின்றனர்)
இதற்கிடையை ‘குந்தி யதுகுலத்தை சார்ந்தவள்,அதுவும் குந்தி போஜனின் வளர்ப்பு மகள் இது எப்படி சத்திரிய குலமான நமக்கு
சாத்தியப்படும்’ என காந்தாரி சத்தியவதியிடம் முறையிடுகிறாள்.இங்கே
தான் பிராமணர்கள் தங்களின் இனக்கலப்பு சித்தாந்தத்தை மறுபடியும் விதைக்கின்றனர்.
‘யது குலத்தவர்(யாதவர்) சத்திரியர்களுக்கு
அடங்கிப்போகும் குணம் கொண்டவர்கள். அவர்களும் அரச வம்சத்தை சார்ந்தவர்கள் தான், குந்தியை
பாண்டுவிற்கு மணமுடிப்பதில் யாதொரு தவறும் இல்லை’எனும்
கருத்தை பரசுராமன் மூலம் பீஷ்மனுக்கு எடுத்துரைக்கின்றனர். இந்த கருத்தை தன்
சிற்றன்னையான சத்தியவதியிடம் பீஷமன் எடுத்து கூறுகிறான். சத்தியவதி இந்த கருத்தை
ஏற்றவுடன் காந்தாரி ராஜமாதாவின்
கட்டளைக்கு இணங்குகிறாள்.
பாண்டுவை குந்தியின் சுயம் வரத்திற்கு,குந்தி தேசம் அனுப்புகின்றனர். இந்தியா முழுவதிலிருந்தும் குறு நில
மன்னர்கள் குந்தி ராஜன் அரண்மணையில் கூடுகின்றனர்.அதற்கு முன் குந்தி சந்தியாவந்தனம்
செய்யவேண்டும் அது அவள் அன்றாட காலை நேர சூரிய வழிபாடு.
கன்னிகையான குந்தி அன்று காலை காமத்தின் உச்சத்தில் இருந்தாள்.
தெரிந்தோ, தெரியாமலோ, அல்லது அறிந்தோ அறியாமலோ,
காலை வேளை காம மயக்கத்தில் இருந்த குந்தி, சந்தியாவந்தன
மந்திரத்தை மாற்றி உச்சரிக்கிறாள்.
சூரியன் (சூரியவர்மன்?) குந்தியின் முன்னே தோன்றுகிறான். அப்போது
குந்தி,‘நான் தெரியாமல் மந்திரத்தை மாற்றி உச்சரித்து
விட்டேன், என்னை மன்னித்து விடுங்கள், உங்களிடம்
கோரிக்கை வைக்க என்னிடம் ஏதும் இல்லை.’ என தன் முன் தோன்றிய
சூரிய வர்மனைப் பார்த்து வேண்டுகிறாள்.
‘என்னை நேரில் வரவழைத்துவிட்டு,ஏதுமில்லை எனச் சொல்லி என்னை அவமதிக்க முடியாது என்னை சல்லாபத்திற்கு(உடல்
உறவுக்கு) அழைப்பு விடுக்கும் மந்திரம் அது .நான், உன்னை
புணர்ந்தே தீருவேன்’ என குந்தியை வன்புணர்ச்சி கொள்கிறான்
சூரியன்.குந்தி கர்பமானாள் திருமணத்திற்கு முன் பிறக்கும் குழந்தையை அக்கால சமுகம்
ஏற்காது என்பது குந்திக்கு தெரியும்.
‘ஒரு பெண்ணுக்கு,காம உணர்ச்சி
மேலிட்டதால் நடந்துபோன ஒரு விபத்து இது .என்ன செய்வது’ தன்
தோழியை ஆலோசனை கேட்கிறாள் குந்தி
(உண்மை நிலை என்ன வென்றால் காமத்தின் உச்சத்தில் இருந்த ,குந்தி தன் தேரோட்டியிடம் உடலுறவு கொள்கிறாள். அவனுக்கு பிறந்தவன் தான்
கர்னன். இங்கே ஒரு உண்மை மறைக்கப்படுகிறது. குந்தியின் தவறை புனிதமாக திரித்து கதை
புனையப்படுகிறது).
யாருக்கும் தெரியாமல் பிறந்த ஆண் குழந்தையை குந்தியின் தோழி உதவியுடன், ஒரு மரப்பெட்டி தயார் செய்து,அதில் குழந்தையை
வைத்து ஆற்றில் விடுகின்றனர்.(இதன் தொடரை புதிய அஞ்சல்-5ல் காணவும்)
No comments:
Post a Comment