50-அர்ச்சுனன் வில்லாற்றல்
அப்பொது துரோணன்,
‘அர்ச்சுனன் குரு குல வாசத்தின் போது ஒரு
நாள் ,அர்ச்சுனன் நிகழ்த்திய வில் வித்தை எனக்கு வியப்பை
அளித்தது,பகலில் ஒரு இலக்கை
கவனத்தில் கொண்டு அதே இலக்கினை இரவு நேரத்தில் தாக்கும் வல்லமை பெற்றவன் அர்ச்சுனன்
என்பதை நான் கவனித்தேன்.இத்தகைய ஆற்றல் இவ்வுலகில் அர்ச்சுனனுக்கு மட்டுமே என்பது
எனக்கு தெரியும்.எனவே அந்த தனுர் வித்தையை சுயம் வரம் போட்டியில் வை’ என துருபதனிடம் தெரிவிக்கிறான்.துருபதன் மிக்க மகிழ்ச்சியுற்று
துரோணருக்கு நன்றி சொல்லி விடை பெறுகிறான்.
பாஞ்சால மன்னன் அரண்மனையில் பன்னாட்டு இளவரசர்களும்
குழுமினர் அவர்களில் மிக முக்கியமானவர்கள், விதர்ப நாட்டு மன்னன் பராக்கிரமசாலி ஜராசந்தன்,
அவனுடைய வளர்ப்பு மகன் சிசு பாலன்,மாபெறும்
வீரன்,மகத நாட்டு மன்னனும்,பாண்டுவின் இரண்டாவது மனைவி
மாத்ரியின் சகோதரன் சல்லியன், அஸ்த்தினாபுரத்து இளவரசன் துரியோதனன்,
அவன் தம்பி துர்ச்சாதனன், அங்கத
நாட்டு மன்னன் கர்ன்னன் ஆகியோர் முக்கிய மானவர்கள். கிருஷ்னன்
மற்றும் பலராமன் பார்வையாளர்களாக கலந்து கொள்கின்றனர்.
வியாசரின் அறிவுரையின் பேரில் பாண்டவர்களும் ,துரவுபதியின்
சுயம்வரத்தில் அதீதி களாக கலந்து கொள்கின்றனர்.குந்தியை ஒரு குயவன் வீட்டில்
விட்டுவிட்டு பாண்டவர்கள் மட்டும் செல்கின்றனர்.
போட்டியின் நிபந்தனைகளை திரவுபதியின் அண்ணன் திருஷ்ட்ட
தியாமனன் அறிவிக்கிறான்.
1- அரசவையில் வைக்கப்பட்டுள்ள வில்லை மட்டுமே பயன்படுத்த
வேண்டும்.
2-உத்திரத்தில் சுழலும் இலக்கை ஒரு முறை கவனித்து
விட்டு,அதன் பிறகு தலையை தரையை நோக்கி உள்ள நிலையில் இலக்கினை தாக்கி நிலை நிறுத்த
வேண்டும்.
3-ஒரு முறை மட்டுமே வில்லை பயன்படுத்த வேண்டும்.
4- சத்ரிய இளவரசர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள
வேண்டும்.
5- போட்டியில் வெற்றி பெற்ற இளவரசருக்கு பாஞ்சால நாட்டு
இளவரசி திரவுபதி மாலை சூட்டுவாள்.
சுயம் வரம் போட்டி ஆரம்பிக்கப்பட்டது. போட்டிக்கு
வந்தவர்களில்,பீமனுக்கு ஈடான பலம் பொறுந்தியவர்களில் முக்கியமானவர்கள், ஜராசந்தன்,சிசுபாலன்,துரியோதனன்,கர்னன்-
இவர்கள் அனைவருமே ஆரிய எதிர்ப்பாளர்கள் அதாவது கடவுள் மறுப்பாளர்கள்.
(இன்றும் துரியோதனன் வாரிசுகளாக நம்மில் பலர்
திகழ்கிறோம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.)
கர்னனுக்கு ஈடாக தனுர் வித்தையில் சிறந்து விளங்குபவன்
அர்ச்சுனன் மட்டுமே. அரசவையில் வைக்கப்பட்ட வில்லை ஜராசந்தன், சிசு பாலன், துரியோதனன்
ஆகியோர் மட்டுமே வில்லை தூக்கி இலக்கினை நோக்கி அம்பு எய்த ப்பட்டது. ஆனால் இலக்கு
தவறியதால் தோல்வியை தழுவினர்.மற்றவர்களால் வில்லை தூக்கி நிலை நிறுத்தக் கூட முடியவில்லை. இறுதியாக கர்னன் வில்லை தூக்கி
நாணை பூட்டினான்
இலக்கை நோக்கும் நேரத்தில் திரவுபதி,
‘ஒரு சூத புத்திரன் தனக்கு மாலையிட சம்மதிக்க
மாட்டேன்’ என அவையில் தெரிவிக்கிறாள். இதைக் கேட்ட அனைவரும் ஸ்த்தம்பித்து விட்டனர்.கர்னன்
அவமானத்தால் கூனி குறுகி விட்டான்.
அப்பொழுது துரவுபதியின் சுயம்வரம் தொடர்ந்து நடக்குமா ? எனும் கேள்வி அவையில் உள்ளவருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் கிருஷ்னன்
அவையின் உரிமையில் தலையிடுகிறான். அதாவது பார்வையாளராக வந்த கிருஷ்னன் எதையாவது யாராவது சாதிக்க வேண்டும் எனும்
நோக்கில்,
‘ஒரு வில்லை நாணேற்றி இலக்கினைத் தாக்க இங்கு
வீற்றிருப்போர் ஒருவரும் இல்லையா?’ என அறைகூவல் விடும்
விதமாக கோரிக்கை வைக்கிறான்,
அர்ச்சுனன் மாறு வேடத்தில் வந்திருப்பான் அவனும்
இப்போட்டியில் கலந்து கொள்ளலாமே, எனும் எண்ணத்தில் கிருஷ்னன் அவ்வாறு
அவையில் ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறான்..
அந்தணர் வேடத்தில் அவையில் வீற்றிருக்கும் பாண்டவர்களில்
அர்ச்சுனன் விசுக் என எழுகிறான்.
அண்ணன் தர்மனிடம் ஆசி பெற்று அவைக்கு வருகிறான்.அப்பொழுது,அவையில் ஒருவர்,
‘அந்தணர் போட்டியில் கலந்து கொள்ள தகுதி
பெற்றவரா?’ வினவுகிறார்.சிறிது குழப்பத்திற்குப் பின்
துருஷ்ட்டதியாமனன், அந்தணர் கலந்து கொள்ளலாம் என அனுமதி
அளிக்கிறான், வந்திருப்பவன் அர்ச்சுனன் என்று தெரியாமல்.
வில்லை எடுத்த சில நொடிகளில் அந்தணன் நாணேற்றி, இலக்கை நோக்குகிறான். திரவுபதிக்கு சப்த நாடியும் அடங்கி விட்டது.
எதற்கு பிறப்பெடுத்தாளோ,அந்த நோக்கம்
நிறைவேறாமல் போய்விடுமோ?எனும் ஆதங்கம் திரவுபதியை வாட்டியது.
அந்தணன் வெற்றிபெற்றால் ,ஒரு சத்ரியப் பெண்,கேவலம் ஒரு அந்தணனுக்கு வாழ்க்கை படுவதா? துருபதன்
தலையில் அடித்துக் கொள்கிறான்.
அந்தணன் சில நொடிகளில் இலக்கை தாக்கி நிலை
நிறுத்துகிறான்.அவையில் உள்ளோர் அனைவரும் ஸ்தம்பித்து விட்டனர்.நிலை குலைந்து போன
துரவுபதி சுதாரித்துக் கொண்டு அந்தணனை நோக்கி வருகிறாள்.
51-அந்தணனுக்கு மாலையிடும் திரவுபதி
தாதி மாலையை எடுத்துதுரவுபதியிடம் தருகிறாள் .ஒரு சொரணை
இல்லாமல் அந்தணன் கழுத்தில் மாலையிடுகிறாள், பதிலுக்கு அந்தணனும் மாலையிடுகிறான். அவையை
விட்டு இருவரும் புறப்படும் முன் கர்னன்,
’நில், நான் தாழ்ந்த
இனம் என்றால் அந்தணன் சத்ரியனுக்கு நிகரானவனா?எப்படி ஒரு
சத்ரியப்பெண் அந்தணனுக்கு மாலையிடலாம்?’ வெகுண்டெழுந்தான்.
அப்பொழுது,அந்தணன்,‘சத்ரியர்கள்
எல்லாம் அந்தணர்களிடத்தில் கல்வி பயிலவும் போர் முறைப்பயிற்சி பெறவும் செல்வீர்கள்,குரு தட்சணை கொடுத்து காலில் விழுந்து வணங்கி ஆசிர் வதிக்கச்
சொல்வீர்கள்.முழு வல்லமை பெற்றவுடன் அந்தணன் நமக்கு தேவையில்லை என ஒதுக்குவது
எந்தவகையில் நியாயம்? சத்ரியனைப் போல் அந்தணனும்
பராக்கிரமசாலியாக திகழக்கூடதா?’
அந்தணணின் விளக்கம் பெற்றதும் கர்னன் வாயடைந்து
போகிறான்.அவையில் உள்ள இளவரசர்கள் அனைவரும் கூச்சலிட்டார்கள் இதில் ஏதோ சதி
இருப்பதாக சத்தம் போட்டார்கள்.
திருபதனும் செய்வதறியாது திகைத்து போனான்.போட்ட
திட்டமெல்லாம் வீணாகிப் போனதே என கலங்கிப் போனான். ஆசையாய் வளர்த்த மகளை ஒரு
அனாதைக்கு கட்டிக் கொடுக்கும் நிலைவந்து விட்டதே என திருபதனும் அவன் மனைவி திருசடையும்
புலம்பித் தீர்த்தனர். இருப்பினும் தன் மகன் திருஷ்ட்டதூமனை
அழைத்து,
‘ நீ போய் திரவுபதியை அந்த அந்தணன் எங்கே அழைத்துச்
செல்கிறான் என பார்த்துவிட்டு வா’என பணிக்கிறான்.
நடு காட்டில் அந்தணர் வேடத்தில் தருமனும் நகுலன்
சகாதேவனுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதே அந்தணர் வேடத்தில் அர்ச்சுனன் பீமன்
மற்றும் திரவுபதியும் வந்து சேறுகின்றனர். திருஷ்ட்டதியமனன் மறைந்திருந்து அந்தணர்
வேடத்தில் ஐவரும் திரவுபதியடன் உரையாடுவதை கவனிக்கிறான்.அந்த உரையாடல் மூலம், ஐவரும்
பாண்டவர்கள் என்று உறுதியாக நம்புகிறான். மிக்க மகிழ்ச்சியுடன் இந்த சேதியை தன்
தாய் தந்தையருக்கு சொல்ல பாஞ்சாலம் விரைகிறான்..
பாஞ்சால அரண்மனையில் மகன் திருஷ்டதுயாமனன் வருகைக்காக
துருபதனும் அவன் மனைவி திருசடையும் காத்துக் கொண்டிருக்கின்றனர். மகனைப் பார்த்ததும்
துருபதன் ஆவலோடு கேட்கிறான்,
‘எங்கே நம் திரவுபதி?,எங்கே
இருக்கிறாள்?’,
‘அந்தணர் வேடத்தில் இருந்தது அர்ச்சுனன் தான்
தந்தையே !’என திருஷ்ட்டதியாமனன் சொன்னதும் ,துருபதன் ஆனந்தம் அடைந்தான்.
‘உண்மையாகவாச் சொல்கிறாய் மகனே?எங்கே இன்னொரு முறை சொல்’என தன் மகனிடம் செய்தியை
உறுதிப்படுத்திக் கொள்கிறான்.
‘ஆம் தந்தையே நம் துருவுபதி பாண்டவர்களை
பேரிட்டு அழைத்ததை நான் காதால் கேட்டேன்’ என்று தாய்தந்தையரிடம்
தெரிவிக்கிறான்.
குதுகலமான துருபதன் உடனே அரண்மனை ஊழியர்களை அழைத்து,
‘பாண்டவர்களை வரவேற்க அரண்மனை
தயாராகட்டும்.இந்த சேதியை நாட்டு மக்களுக்கு தெரிவியுங்கள்’
உடனே தன் தம்பியிடம், ‘நீ போய் பாண்டவர்களை அரண்மனைக்கு
அழைத்துவா,இப்போதே நான் அவர்களை காணவேண்டும்’ என உத்தரவிடுகிறான் துருபதன்.
*******
அர்ச்சுனனை கைப்பற்றிய துரவுபதி மிகுந்த ஆனந்தத்துடன்
முன்னிரு மூத்தவர்களுடனும், பின்னிரு மைத்துனர்களுடனும் மாமியார்
குந்தியை காண விழைகின்றாள்.
இதற்கிடையே கிருஷ்னன் தன் அத்தை குந்தியை காண்கிறான். கண்ணனைக்
கண்டதும் குந்தி ஆனந்த மடைந்தாள்.குந்தி தங்கியிருக்கும் குடிசையில் தன் அண்ணன்
மகனை வரவேற்க அல்லது அமரவைக்க ஒரு தூய்மையான இடம் கூட இல்லை. அவனுக்கு உணவளிக்க
உணவும் இல்லை. அப்பொழுதுதான் தான் தங்கியிருக்கும் பசியால் வாடும் குயவன்
குழந்தைகளுக்கு உணவு தயாரிக்க அடுப்பை பற்ற வைக்கிறாள் குந்தி.
நிலைமையை உணர்ந்த கண்ணன், ‘பரவாயில்லை
அத்தை,’மேலும் கூறுகிறான்,
‘எனக்கும் பசிக்கிறது,குழந்தைகளுக்கும்
பசிக்கிறது.இங்கே இருப்பதோ ஒரே ஒரு மாங்கனி இதை எப்படி சாப்பிடுவது.?’ என்று கூறும் கண்ணனைப் பார்த்து,
‘இருப்பதை வைத்து அனைவரும் பகிர்ந்து
உண்ணுங்கள்’என குந்தி கூறுகிறாள்.
குந்தியின் குணங்களை தெரிந்துகொள்ள இது ஒரு முன்னோட்டம்.காட்சியிலிருந்து
கண்ணன் விலகுகிறான்..துரவுபதியுடன் ஐவரும் குந்தியின் குடிசைக்கு வெளியே
நிற்கின்றனர். அடுப்பில் தீவிரமாக இருந்த குந்தியிடம், தர்மன்,
‘அம்மா நாங்கள் ஒரு க(ன்)னி யை கொண்டு வந்துள்ளோம்.பாருங்கள்’
என கூறுகிறான். ‘இருப்பதை பகிர்ந்துண்ணுங்கள்’ என கூறிக்கொண்டே தலை குனிந்து
வெளியே வந்த குந்தி தன் மகன்களைக் காண ஆவலுடன் தலை நிமிர்கிறாள்.
(குந்தியின் உண்மை குணங்களையும், திரவுபதியின் உண்மை குணங்களையும் மூடி மறைக்க தமிழ் படுத்திய மகாபாரத
கதைகள் மெனக்கெடுகின்றன.)
அறுவரையும் பார்த்த அதிர்ச்சியில் குந்தி உறைந்து
போனாள்.என்ன நடந்தது?யார் இந்தப் பெண்? என
தீர விசாரிக்க கூட முடியாமல் குந்திக்கு ஆர்வமும் அதிர்ச்சியும் மண்டிக் கொண்டது.
பாஞ்சால அரண்மனையில் திரவுபதிக்கு நடந்த சுயம் வரப் போட்டியில்,அர்ச்சுனன் கலந்து கொண்டு வெற்றி பெற்று திரவுபதியை கரம் பிடித்த கதையை
தர்மன் தன் தாய்க்கு விவரிக்கிறான்.குந்தி தனக்குள் கணக்கு போட்டாள்,
‘இப்பொழுது உள்ள நிலையில் தன் பிள்ளைகள்
ஐவருக்கும் தனித்தனியே பெண்ணைப் பார்த்து திருமணம் நடத்தி வைக்க முடியாது, அர்ச்சுனனுக்கு மட்டும் திரவுபதியை மனைவியாக்கினால் மற்ற நால்வருக்கும்
அதே அந்தஸ்த்துள்ள அரசகுல பெண் தேட முடியாது, வாலிப வயதில்
இருக்கும் ஐவருக்கும் இந்த பெண் தாக்கு பிடிக்கும் அளவுக்கு உடல்வாகு பெற்றவளாக
உள்ளாள்.
ஐவருக்கும் இவளை பெண்டாக்கினால், சமுதாயத்தில் தனக்கு இருக்கும் அவப்பெயரான ‘பிள்ளைக்கொரு
கணவனை மாற்றியவள்’ எனும் பழிச்சொல்லை நீக்க பேருதவியாக
இருக்கும், என நினைத்தாள். நினைத்தப்படி தன் எண்ணங்களை
திரவுபதியிடம் பக்குவமாக எடுத்துரைத்து, ‘ஐவருக்கும் நீ
மனைவியானல் என் பிள்ளைகளை பாதுகாக்கும் பொறுப்பை நீ ஏற்பாய் என சொல்லி இன்று முதல்
நீ பாஞ்சாலி என அழைக்கப்படுவாய் என்றாள்’.
பாஞ்சாலி என்றால் ஐவருக்கும் உரிமையானவள் என்று பொருள்.
இப்பொழுதும் தமிழர்கள் பாஞ்சாலியை பாராட்டும் விதமாக ஐவருக்கும் அழியா பத்தினி எனும்
பேருடையவளாக இன்றும் தமிழக கிராமங்களில் எல்லை அம்மனாக (திரவுபதி அல்லது ரோவதி
அம்மன்) வாழ்கிறாள்.
******
பாஞ்சால அரண்மனைக்கு வியாசர் விஜயம் செய்கிறார்.துருபதனும்
வியாசரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.அந்நேரம் பார்த்து அரண்மனை தூதுவன்,
‘அரசே நடக்கக்கூடாதது நடக்கப்போகிறது.’ என கூறுகிறான். அதிர்ச்சியில் இருந்த துருபதன்,‘என்ன
கூறுகிறாய் விளக்கமாக கூறு’ என்கிறான்..
‘தங்கள் மகளை பாண்டவர்கள் ஐ வரும் மணக்கப் போகிறார்கள்
’மீண்டும் அதிர்ந்து போனான்.
‘வியாசர் பெருமானே இது என்ன கொடுமை? எனக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது.?’
‘சத்ரிய தர்மத்திற்கு எதிரான இந்த முறையற்ற
திருமணத்தை நான் தடுத்து நிறுத்துவேன்’ துருபதன் கூறியதும்,
பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த வியாசர்,
‘இந்த திருமணம் நடக்கும்’ என்றார்.
‘எப்படி?’என வினவிய
துருபதனுக்கு வியாசர் விளக்கமளிக்கிறார்.
‘முற்காலத்தில் மவுகல்ய முனிவருக்கு
வாழ்க்கைப்பட்ட நளாயினி ஒரு பத்தினி.
கணவரோ சகல பெண்களையும் மனைவியாக நேசிக்கும் மனம் படைத்தவர், இதன் விளைவாக முனிவருக்கு குஷ்ட்ட ரோகம் வந்துவிடுகிறது. மனைவியின்
பத்தினிச் சாபத்தால் தான் தனக்கு இந்த தீரா வியாதி வந்துவிட்டது என்பது முனிவரின்
கணிப்பு. மனைவியின் பத்தினித்தனத்தை உடைத்தெரிய திட்டம் தீட்டுகிறான். தான்
மறைந்திருந்து அன்னிய ஆடவரை தன் மனைவியை வன்புணர்ச்சி செய்ய அனுப்புகிறான். அனால்
அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது. நளாயினியின் முனிவனோடு வாழ்ந்த காலம்
முடிகிறது.
ஆனால் மவுகல்ய முனிவருக்கு ஆயுள் நீடிக்கிறது.மறு பிறவி
எடுத்து இந்திர சேனா எனும் பெண்ணை முனிவர் மணக்கிறார்;அவளும் பத்தினிதான்.உண்மையான பத்தினி என்றால் கணவனின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்; தனது
நண்பர்கள் ஐந்து பேர் முனிவனின் மனைவியான இந்திரசேனாவை புணர விரும்புகின்றனர்;
எனவே ஐவரையும் புணர்ந்தால் தான் தன் மனைவி உண்மையான பத்தினி
என்பதை ஏற்பதாக மனைவியிடம் கூறுகிறான்;அவளும் உடன் படுகிறாள். நளாயினி, இந்திரசேனா
வழித் தோன்றல் தான் இந்த துரவுபதி. எனவே இவளுக்கும் ஐந்து கணவர்கள் அமைவது எப்படி
என்றால், திரவுபதிக்கு எத்தகைய குணம் படைத்த
கணவர் அமையவேண்டும் என சிவனிடம் தவம் கொள்கிறாள்.
சிவனும் துரவுபதியிடம், ‘ வரம் கேள்
தருகிறேன் என்கிறார்’
வரப்போகும் கணவர் எப்படி அமைய வேண்டும் என்பதை ஒவ்வொரு குணங்களையும் வரிசையிட்டு கூறுகிறாள்,
1-தர்மம்(தர்மன்)
2-பலம்(பீமன்)
3-வீரம்(அர்ச்சுனன்)
4-அழகு(நகுலன்)
5-அறிவு(சகாதேவன்)
அப்படி வரிசையிடும்போது, ஐந்து குணங்களையும் ஒருசேர அமைந்தவன்
கணவனாக அமையவேண்டும் என சிவனிடம் சொல்ல மறந்தாள். இதனால் துரவுபதிக்கு தனித்தனியாக
ஐந்து கணவர் அமைந்துவிட்டனர். என வியாசர் கூறி முடித்தார்.
*****
முற்பிறவி மறுபிறவி கதைகள் எல்லாம் கதை கேட்கும் மக்களின்
மனதை திசை திருப்பும், பிராமணர்களின் சூழ்ச்சியே.கற்பனா வளம்
நிறைந்த கதைகளை மக்கள் அதிகம் விரும்புவர். இப்பொழுதும் இந்நிலை தான் நீடிக்கிறது.
எது நிஜம்?
குந்திக்கு ஒரு மனக்குறை அல்லது மன வருத்தம் எப்பொழுதும்
உண்டு
ஒன்று-.தன் திருமணத்திற்கு முன்னமே ஒரு குழந்தையைப் பெற்று
அதை யாரும் அறியா நேரத்தில் ஆற்றில் ஒரு பெட்டியில் வைத்து மிதக்கவிட்டது. அந்த
நிகழ்ச்சி இன்னும் குந்தியின் மனதை வாட்டுகிறது.
இரண்டு-தன் கணவன் பாண்டுவின் மூலம் ஒரு குழந்தை கூட
பெற்றுக் கொள்ள முடியாமல் போனது.
மூன்று- அரச குல பெண்டிர் எவ்வாறாகினும், அரசாள வாரிசை
பெற்றுத் தறுவது ஒரு மன்னரின் மனைவியான குந்தி, தன் கடமையென பஞ்ச(ஐந்து)
குணங்கள் கொண்ட வாரிசுகள் பெற தான் மட்டுமே பெற முடியாமல் போனது.அதாவது ஐந்தில் மூன்று
குணங்கள் கொண்ட தர்மம்,- பலம்,-வீரம்
உள்ள பிள்ளைகளான முறையே,தர்மன்,பீமன் மற்றும் அர்ச்சுனன் மட்டுமே பெற முடிந்தது
நான்கு-தானும் கணவருடன் சேராமல், தன்னையும் கணவருடன்
சேரவிடாமல் தடுக்கும் குந்தியின் மீது வெறுப்படைந்த தன் சக்களத்தியான மாத்தரியை
திருப்தி படுத்த குந்தியின் யுக்தியான பிற மனிதர்களைப் புணர்ந்து இரண்டு பிள்ளைகளை
(நகுலன்-அழகு, சகாதேவன்-ஆருட அறிவு) பெற அனுமதித்தது.
ஐந்து-மாத்ரி இறந்தபின் அவள் பெற்ற இரண்டு குழந்தைகளையும் தன் குழந்தைகளாக
பாவித்து தத்து எடுத்துக் கொண்டது.
ஆறு-யாதவ குலப் பெண்ணான குந்தி, சத்ரிய குலத்திற்கு
வாழ்க்கைப்பட்டதே ஒரு குறைதான். நேரம் வரும் போதெல்லாம் திருதராஷ்ட்ரனும்
காந்தாரியும் ஏன் தன் சக்களத்தியான
மாத்ரியும் தைரியமற்ற யாதவ குலத்தவள் என குத்திக் காட்டும்போது மனம்
உடைந்து போனது.
தன் மருமகளையும் ஐந்து புதல்வர்களுக்கு மனைவியாக்கி
விட்டால் சத்ரியரின் பத்தினிப் பெருமையை சாகடித்துவிடலாம் என பெண்ணாதிக்க இன குந்தி
கணக்கு போட்டாள் கிருஷ்னனுக்கும் தன் இனமான உணர்வு உள்ளதை நிருபிக்க அத்தைக்கு
ஒத்துப் போவதின் மூலம் வெளிப்படுத்துகிறான்.
இப்பொழுது தனக்கு மருமகளாக வந்து நிற்கும் துரவுபதியை
ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்க்கைப்பட வைப்பதில் குந்திக்கும் கிருஷ்னனுக்கும் உடன்
பாடில்லை.அதற்கு துரவுபதியை முற்பிறவி வினை
என சொல்லி மனம் மாற்றி ஐந்து பேருக்கும் மனைவியாக்க திட்டம் தீட்டுவது.
அதற்கு வியாசரை துரவுபதியின் தந்தையான துருபதனை முற்பிறவி
கதை சொல்லி நம்ப வைப்பது..
****
52-பாஞ்சாலிக்கு திருமணம்
இந்நிலையில் பாஞ்சாலத்திலிருந்து தூதுவன், பாண்டவர்களை துரவுபதியுடன் சந்திக்கிறான். துருபத மன்னர் பாஞ்சால
அரண்மனைக்கு அழைப்பு விடுத்துள்ளதை தெரிவிக்கிறான். பாண்டவர்களுடன் குந்தியும்
பாஞ்சாலம் புறப்படுகின்றனர். அரண்மனையில் வியாசருடன் துருபதன் ஆகியோர் பாண்டவர்களை
வரவேற்கின்றனர்.
திரவபதிக்கு முறையாக திருமணம் நடைபெறுகிறது. அதாவது
திருமணத்தை சாஸ்த்திரம் சொல்லி (மந்திரம்) சடங்குகளான, மாலை மாற்றுதல், மங்கல நாண் தரித்தல், விரல்களுக்கு மோதிரம் அளித்தல் கால் விரல்களுக்கு மெட்டி அணிவித்தல்
பின்பு அக்னி வளர்த்து வலம் வந்தால் தீயவை அழிந்து நல்லது நடக்கும் என மணமக்களை
நம்ப வைப்பது போன்று சடங்குகள் சத்ரியர்களுக்கு தேவைபட்டது படிப்பறிவற்ற
சத்ரியர்களை இப்படித்தான் சடங்குகள் செய்து பணியவைத்தனர் ;அது
இன்றும் நடக்கிறது.
ஐந்துபேரை மணக்க வேண்டும், அதை எப்படி நடத்துவது என்பதை
அரசவை மண மண்டபத்தில் வியாசர் நிகழ்த்திக் காட்டுகிறார்.
முதலில் தர்மனுக்கு திரவுபதி மாலை சூட்டுகிறாள்,பின்
அக்கினி வலம் வந்து அதனால் அவள் கன்னிகையாகிறாள் அடுத்து இன்னோரு ஆடவனை மணக்கலாம்
எனும் சாஸ்த்திர முறையை புகுத்துகிறார் வியாசர். அடுத்து பீமன்,அர்ச்சுனன்,நகுலன்
,சகாதேவன் என ஐவருக்கும் மணமுடித்து அவையோர் முன் திரவுபதியுடன் பாண்டவர்கள்
மணக்கோலத்தில் வாழ்த்து பெறுகின்றனர்.
*******
கவுரவர்களில் துரவுபதியின் சுயம் வரத்தில் நடந்த போட்டியில்
தோல்வி அடைந்து துரியோதனன் எந்த முகத்தை வைத்து தன் தந்தை முகத்தில் முழிப்பேன் என
,தம்பிதுர்ச்சாதனன்,கர்னன் மற்றும் சகுனி ஆகியோர் உடன் காட்டில் ஆலோசனை செய்கிறான்.கர்னனோ,தன்னை சூத புத்திரன்
என அவையில் அசிங்கப்படுத்திய திரவுபதியை பழி வாங்கியே தீருவேன் சபதம் கொள்கிறான்.
துரியோதனன் வகையறாக்கள் அஸ்த்தினாபுறம் அரண்மனை செல்லும்
முன் தூதுவன் பீஷ்மனை சந்தித்து சுயம்வர போட்டியில் கவுரவர்கள் தோல்வியுற்றதை
தெரிவிக்கிறான்.பீஷ்மன் அதிரச்சி அடைகிறான்.
வந்த தூதுவனிடம்,‘இந்த சேதி மன்னர் திருதராஷ்ட்டரனுக்கு
தெரியுமா என வினவுகிறான்,
‘தெரியாது’ என தூதுவன் கூறுகிறான்,
‘சரி நீ போகலாம் நான் மன்னருக்கு
தெரிவிக்கிறேன், நீ போய் விதுரனுக்கு சேதி சொல்’
பிள்ளைகள் தோற்று போனதை மன்னருக்கு பீஷமர் தெரிவிக்கிறான்,
அந்த சேதி கேட்டு திருதராஷ்ட்ரன் இடிந்து விட்டான்.அந்த நேரம் பார்த்து விதுரன்
தன் அண்ணனைப் பார்த்து வேதனை அடைகிறான் அண்ணணுக்கு பீஷ்மர் சொன்ன சேதியை மாற்றி
கூறுகிறான். அதாவது கவுரவர்கள் சுயம் வரப்போட்டியில் வென்று விட்டதாக தனக்கு சேதி வந்துள்ளது ஆனால் பிதாமகருக்கு வந்த சேதி வேறு மாதிரியாக
வந்துள்ளது என விதுரன் திரித்துக் கூறுகிறான். அப்பொழுது திருதராஷ்ட்ரன் சற்று
ஆறுதல் அடைந்தான்,
‘உண்மையாகச் சொல்கிறாயா விதுரா?’ ‘ஆம் அண்ணா’ என பொய்யுரைக்கிறான்.ஆனால் உண்மை!
வெளியே வந்த பீஷ்மன் விதுரனைப் பார்த்து, ‘ஏன் இந்த முரண்பாடு?’என
வினவுகிறான்.
‘இல்லை பெரியப்பா,நான்
உண்மையைத்தான் சொன்னேன்!’‘என்ன குழப்புகிறாய் விதுரா?’ பீஷ்மன் கேட்ட கேள்விக்கு ,விதுரன்,
‘சந்திர குலத்தின் வாரிசுகள் யார் ?’ என
வினவ,அதற்கு ,பீஷ்மன்,
‘கவுரவர்கள்’ என்றான்.
‘அப்படியானால் பாண்டுவின் பிள்ளைகளும்
கவுரவர்கள்தானே?’
விதூரனின் சமயோசித புத்தி கூர்மையை பார்த்து பீஷ்மன்,
‘விதுரா நீ ஒருவன் போதும் இனி அஸ்த்தினாபுர சாம்ராச்சியம் நிலை நிறுத்த!’ என
சொல்லி விதுரனை ஆரத் தழுவுகிறான்
பீஷ்மன்.
பாண்டவர்கள்,துருபதன் மகளான பாஞ்சாலியை திருமணம்
புரிந்ததால்.அவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்துவிட்டது.இதை எண்ண்ணி பெருமிதம் கொண்ட
பீமன்,
‘நாம் இப்போதே அஸ்த்தினாபுரம் மீது படை
எடுத்து ,நம்மை யெல்லாம் இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த துரியோதனனை கொன்று
விடவேண்டும்’இதை கேட்ட,குந்தி ,
‘வேண்டாம், பீமா? இப்படியெல்லாம் பேசாதே. அஸ்த்தினாபுரத்தில் இருப்பது துரியோதனன்
மட்டுமல்ல,உன் தாத்தா பீஷ்மர்,உன் சித்தப்பா விதுரர்,உன்
பெரியப்பா திருதராஷ்ட்ரர். ஆகியோர் உள்ளனர்.
அவர்கள் நம் நலம் விரும்பிகள்.அவசரப்படாதே யோசித்து
முடிவெடுப்போம்’
என்னதான் சம்பந்திகள் நமக்கு ஆதராவாக நடப்பது போல் தோன்றினாலும்,அத்தகைய போக்கு காலத்திற்கும் நிலைக்காது என்பதை தன் பிள்ளைகளுக்கு
எடுத்துரைக்கிறாள்,குந்தி.
“பங்காளிகளோடு போட்டியிட்டு வாழலாமே தவிர,போரிட்டு வாழக்கூடாது”
என்பதை குந்தி தன் பிள்ளைகளுக்கு அறிவுறுத்துகிறாள்.இவ்வாறு
உரையாடும் வேளையில் ,அஸ்தினாபுரத்திலிருந்து விதுரன் அனுப்பிய
ஒலையை ஒரு தூதுவன் எடுத்து வருகிறான்.அந்த ஓலையில் ,
‘பாண்டவர்கள்,பாஞ்சாலத்தில்
தங்கியுள்ளனர். அவர்களை அஸ்த்தினாபுர மன்னருக்கு அழைப்பு விடுத்து, பாண்டவர்களை ஏற்றுக் கொள்ளுமாறு அஸ்த்தினாபுர மன்னருக்கு துருபதனே சுயமாக கடிதம்
எழுதவேண்டும்’ எனும் கருத்தில் துருபதனுக்கு வேண்டுகோள்
விடுத்திருந்தான்.
துருபதன் வேண்டு கோளுக்கிணங்க, அஸ்த்தினாபுர மன்னருக்கு குந்தியின் வாய்மொழியில் , ஒரு ஓலை வரையப்பட்டது.
********
இதற்கிடையே சுயம்வரம் சென்ற துரியோதனன், அஸ்தினாபுரம் தான் வரமுடியாது,தனக்கு ஏற்பட்ட
அவமானத்துற்கு இந்த காட்டிலேயே மாண்டுவிடுகிறேன் என தன் மாமன் சகுனியிடம் தெரிவிக்கிறான். கர்னனும்,
துர்ச்சாதனனும் துரியோதனனை சமாதானப்படுத்தும் முயற்சியில்
இறங்கினர். சகுனி துரியோதனனை சமாதனப்படுத்த முயற்சிக்கிறான். ஆனால் சகுனியின்
யோசனைக் கேட்டுத்தான் தாங்கள் மோசம் போனதாக துரியோதனன் சகுனியை குற்றம் சாட்டுகிறான்.
காந்தார தேசத்தில் அரண்மனை வாழ்க்கையை விட்டு விட்டு தன்
தமக்கையின் புத்திரர்கள் வாழ்க்கையை வளப்படுத்தவே தான் அஸ்த்தினாபுரம்
முகாமிட்டுள்ளதாக தெரிவிக்கிறான். ஒரு விருந்தினராக இந்த அரண்மனையில் ஓரிரு
நாட்கள் தங்கிவிட்டு போயிருந்தால் தனக்கு தன்மானமாவது மிச்சமாயிருக்கும்.
மானமிழந்து மெனக்கெட்டு தனது தமக்கையின் புத்திரர்கள்
அஸ்தினாபுர அரசுரிமை பெற தான் பாடு பட்டதாக கூறுகின்றான். இதில் தன் சுயநலம்
எதுவுமில்லை என்பதை தான் உணர வேண்டும் என துரியோதனனிடம் உறுதிபடக் கூறுகிறான்
சகுனி.தான் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டதாக துரியோதனன், சகுனியிடம் கூறி
மன்னிப்பு கோருகிறான்.
திருபதன் அரண்மனைக்கு, துர்ச்சாதனனை மாறு வேடத்தில் சென்று உளவறிய
சகுனி அனுப்புகிறான்.திரும்பி வந்த துர்ச்சாதனன், திரவுபதிக்கும்
பாண்டவர்கள் ஐவருக்கும் திருமணம் நடந்த சேதியை காட்டில் தங்கி இருக்கும்
துரியோதனனிடம் தெரிவிக்கிறான்.
ஒரு பேடியைப்போல் மாறுவேடத்தில் வந்து திரவுபதியை மணந்த அர்ச்சுனனை கொல்லாமல் விடமாட்டேன் என துரியோதனன்
சபதமேற்கிறான்.
‘ஒரு பெண்ணை ஐந்துபேர் மணமுடிப்பதா?இது நம் வம்சத்துக்கே ஆகாதே! என்ன கொடுமையிது? இது
ஒரு அவலட்சணம், இந்த நடத்தை கெட்டவர்களோடு உறவே கூடாது’
பாஞ்சாலத்தில் தங்கியிருக்கும் பாண்டவர்களை கொல்ல சரியான
எதிரி அண்டை நாட்டு மன்னனான சோமதத்தன் தான், என
அறிவிக்கிறான். அஸ்த்தினாபுரம், அரண்மனை அரசவைக்குள் துரியோதனன், துர்ச்சாதனன்,
கர்னன், மற்றும் சகுனி ஆகியோர் சத்தமில்லாமல்
உள்ளே நுழைகின்றனர். அரசவைக்கு மன்னர் திருதராஷ்ட்ரன் வருகிறான்.
‘அரசவையை கூட்ட அவசியமென்ன?’ என விதுரனை கேட்கிறான்.
‘சுயம்வரத்திற்கு சென்ற துரியோதனன் திரும்பியுள்ளான்.
சுயம்வரத்தில் என்ன நடந்தது என நம் பிள்ளைகள் வாயிலாக அறியலாம் என்பதற் காகத்தான்’
என மன்னருக்கு விதுரன் தெரிவிக்கிறான்.
‘பாஞ்சாலத்தில் நம் பிள்ளைகள் சுயம்வர
போட்டியில் வென்றார்களா இல்லையா?’என திருதராஷ்ட்ரன்
வினவுகிறான்.
துருபதன் சதி செய்து போட்டியில் தான் வெல்ல முடியாமல்
செய்து விட்டதாக துரியோதனன் தெரிவிக்கிறான்.
‘பாஞ்சாலம் சுயம் வரத்தில் நம் கவுரவர்கள்
போட்டியில் வென்றதாக தெரிவித்தாயே விதுரா? அது உண்மை இல்லையா?’திருதராஷ்ட்ரன் வினவுகிறான்.
‘உண்மைதான் மன்னா!’
‘என்ன சொல்கிறாய் விதுரா? ஒன்றுமே புரியவில்லையே!’
சந்திர வம்ச
வாரிசுகள் யார் அண்ணா? என விதுரன் விளிக்கிறான்.
‘கவுரவர்கள்’
‘அப்படியானால் பாண்டுவின் பிள்ளைகளும்
கவுரவர்கள் தானே?’
‘உண்மைதான் விதுரா! அப்படியானால் பாண்டுவின்
பிள்ளைகளில் யார் துரவுபதியை திருமணம் புரிந்தது?’
ஐந்துபேரும் ஒரு திரவுபதியை மணந்து கொண்டார்கள்.
‘அதெப்படி? இது சத்ரிய
குலவழக்கு அல்லவே!’என திருதராஷ்ட்ரன் வினவுகிறான்.
*********
இந்நிலையில் பாஞ்சாலத்திலிருந்து தூதுவன் ஓலை கொண்டு
வந்துள்ளதாக விதுரன் தெரிவிக்கிறான்.
‘அப்படியானால் அந்த ஓலையில் என்ன உள்ளது படி’ என்கிறான் திருதராஷ்ட்ரன்..
‘அஸ்த்தினாபுர மாமன்னருக்கு பாஞ்சால மன்னன்
வணக்கத்துடன் எழுதிக் கொண்டது, தங்களின் பிள்ளைகளான
பாண்டவர்கள் என்னிடம் தஞ்சம் புகுந்தார்கள் என கூறுவது எனக்கு வேண்டுமானால்
பெருமையாக இருக்கலாம்,ஆனால் அது தங்களுக்கு பெருமை
சேர்க்காது.பாண்டவர்கள் ஐவரும் என் மகள் திரவுபதியை மணந்துள்ளார்கள்.அவர்களை ராஜ
மரியாதையுடன் தாங்கள் அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யுங்கள்,பாஞ்சால
நாடு என்றும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும்.’விதுரன்
படித்து முடித்தான்.
‘விதுரன்,அஸ்த்தினாபுரத்தின்
மகா மந்திரியா? அல்லது பாஞ்சாலத்தின் தூதுவரா?’சகுனி அவையில் வினா எழுப்புகிறான்.
துரியோதனன்களுக்கும் கர்ன்னனுக்கும் இந்த வினா மகிழ்ச்சியை
ஏற்படுத்தியது.
‘அஸ்த்தினாபுரத்தின், வளர்ச்சியில் வந்தேரிகளுக்கு என்ன அக்கரை இருந்து
விடப் போகிறது.?’ விதுரனின் வார்த்தைகளில் அவை சூடேறியது.
குறிப்பாக சகுனிக்கும், கர்னனுக்கும்
இது குத்தலாக அமைந்துவிட்டது. சகுனி விருந்தினராக வந்தவன்.விருந்தும் மருந்தும்
மூன்று வேளை அல்லது அதிக பட்சம் மூன்று நாட்கள் என்பர்.
குருடர்களாகிப்போன தன் தமக்கைக்கும் தன் மைத்துனருக்கும் பிறந்த
குழந்தைகள், அஸ்த்தினாபுர அரண்மனையில் அதிகார மிக்க வாரிசுகளாக வலம்
வரவேண்டும் என்பதில் காந்தார தேசத்து இளவரசனும் அஸ்த்தினாபுர சந்திர குலத்தின் குல
மகளான காந்தாரியின் தம்பிக்கு அக்கரை வருவதில் நியாயம் தானே?
அதனால் அந்த அனுதாபத்தில் அரண்மனை விருந்தினராக இருந்து விட்டுப்போகட்டும் என
விடுபட்டு போனவன்தான் இந்த சகுனி.
அஸ்த்தினாபுரத்து தேரோட்டியின் வளர்ப்பு மகனாகிப்போன கர்னன், பழக்க தோஷத்தில் அஸ்த்தினாபுர இளவரசன் துரியோதனனுக்கு ஆருயிர் நண்பனாகிப்
போனான்.எனவே கவுரவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுப்பதில் தவிர்க்க முடியாத
நபராகி விட்டான் கர்னன். அஸ்த்தினாபுர
மன்னரின் (விசித்திர வீரன்) தாசிக்கு மகனாக பிறந்தவன், விதுரன்
என்பதும் ,குலப் பெருமையற்றவன் என்பதும் அடிக்கடி குத்திக் காட்டப்படும்
சொல் ஈட்டி தான் விதுரனைப் புண்படுத்தும் வார்த்தையான ‘தாசிமகன்.’
சத்திரியர்கள் குல தர்மம் என்பது,ஒருவனுக்கு ஒருத்தி,அல்ல ஒருத்திக்கு ஒருவன்.அல்லது ஒருவனுக்கு
பல மனைவிகள்.
அந்த வகையில் குந்தியை (யாதவ குலப் பெண்) சந்திரிகுல சந்திர
வம்சத்தின் மருமகளாக வந்ததில்,குல தர்மம் மீறப்பட்டுள்ளதை திருதராஷ்ட்ரன் மற்றும் காந்தாரியால் ஜீரணிக்க
முடியவில்லை.
(குந்திக்கு ஐந்து பிள்ளைகளுக்கும் தனித்தனி தந்தையர்
என்பதை வாசகர்கள் நினைவு கூற வேண்டும் மேலும் குந்தி கல்யாணத்திற்கு முன் ஒரு
மகனைப் பெற்றாள் என்பது அஸ்த்தினாபுரத்து அரண்மனை வாசிகளுக்கு தெரியாது.)
அதனால் தான் .குந்தியின் மகன்களுக்கு (பாண்டவர்களுக்கு)
திருதராஷ்ட்ரன் பிள்ளைகளுக்கு சமமாக சகுனி போன்ற சத்ரியர்கள், மதிப்பு தர முடியவில்லை. இன்றளவும் இந்நிலை நீடிக்கிறது. அதாவது இன்றும்
நம் சமுகத்தில் துரியோதனன்கள் வாழ்கின்றனர், எனில் அன்று
நடந்தது உண்மைதானே? கற்பனைக்கதை அல்ல.
‘நான் தாசி மகன் தான் ஆனால் அஸ்த்தினாபுரத்து
சாம்ராச்சியத்திற்கு நான் இரண்டகம் நினைத்தது இல்லை’ விதுரன்
அரசவையில் கர்ஜூத்தான்.
‘மன்னர் திருதராஷ்ட்ரனிடம் உணவுண்டு அவன் பிள்ளைகளுக்கு
அரசுரிமை பெற்றுத்
தர மனமில்லாமல் எங்கோ இருக்கும் பாண்டுவின் பிள்ளைகளுக்கு
அரசுரிமை பெற்றுதர விதுரன் துடிப்பது ஏன்?’ சகுனி வினவினான்.
‘சந்திர வம்சத்து வாரிசுகளை பாண்டவர்கள்
எனவும் கவுரவர்கள் எனவும் வேற்றுமை படுத்தி அதில் ஆதாயம் தேட நினைக்கும் நய வஞ்சக
வேலைகளில் நான் ஈடுபடவில்லை’ என மேலும் விதுரன், சகுனியை
குத்திக் காட்டி எடுத்துரைத்தான்.
‘தர்மன் அரியணை ஏறியதும்,பாண்டவர்களை
வாரணாவனம் அனுப்பியது யார்?’
‘அங்கே பாண்டவர்களை அழிக்க அரக்கு மாளிகை
அமைத்து அழிக்க நினைத்தது யார்?’
விதுரனின் அடுத்தடுத்த வினாக்கள் சகுனியின் சூழ்ச்சிகள்
அரசவையில் வெளிச்சம் போட்டு காட்டின.
அவையில் இதையெல்லாம் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த
பீஷ்மன்,விதுரன் கண்கள் குளமாகிப் போனதைப் பார்த்ததும் பொங்கி
எழுந்தான்.
‘விதுரன் அஸ்த்தினாபுரத்து அரசின் மகாமந்திரி
மட்டுமல்ல, மகாமுனிவர் வியாசரின் மகன். கங்கை –சந்தனுவின்
பேரன்,என் மானசீக புத்திரன்.இன்னொரு முறை இங்கு யாராவது விதுரனை மனம்
புண் படும்படி பேசினால் அவன் தலை துண்டிக்கப்பட்டு தரையில் உருளும் என
எச்சரிக்கிறேன்.’ தன்னைத் தான் பீஷ்மர் எச்சரிக்கின்றார்
என்பதை புரிந்து கொண்டு சகுனி அவையை விட்டு வெளியேறுகின்றான்.
அவை அமைதியானது. துரோணரும்
பாஞ்சாலத்திலிருக்கும் பாண்டவர்களை அழைத்து வருவது நல்லது என
கூறுகிறார்.பீஷ்மர், மன்னர் திருதராஷ்ட்ரனிடம் பாண்டவர்களை
ராஜ மரியாதையுடன் அழைத்துவர ஏற்பாடு செய்யும் படி கேட்டுக் கொள்கிறார்.
விதுரனை திருதராஷ்ட்ரன் அழைத்து,‘நீ போய் பாஞ்சாலத்திலிருக்கும் பாண்டவர்களை சந்தித்து பொன்னும் பொருளையும்
வைரங்களையும் மருமகளுக்கு சீதனமாக கொடுத்து நம் மக்களை ராஜ மரியாதையுடன் அழைத்துவா, இது அரச கட்டளை’ என கட்டளை இடுகிறான்.
அவை கலைகிறது ,தனியாக திருதராஷ்ட்ரனும் அவன் மனைவி
காந்தாரியும் அமர்ந்து கொண்டிருந்த நேரத்தில் துரியோதனன், துர்ச்சாதனன்
மற்றும் சகுனி ஆகியோர் சந்திக்க வருகின்றனர்.
துரியோதனன் கோபத்தின் உச்சிக்கே போனான்.தந்தையைப் பார்த்து,
‘பாண்டவர்கள் ஒழிந்தார்கள் என நினைத்திருந்த நேரத்தில் அவர்களை ராஜ மரியாதையோடு
அழைத்துவர ஏற்பாடு செய்து விட்டீர்கள்.
என் மீது உங்களுக்கு மகன் என்கிற பாசமே இல்லை மகனுக்கு
பட்டம் சூட்டும் எண்ணமே இல்லை .எங்கோ ஓடிப்போன பாண்டவர்களை அழைத்துவந்து அவர்களை
அரியணையில் அமர வைக்கப் பார்க்றீர்கள் இது எப்படி நியாயம்?’
‘துரியோதனா !எனக்கு உன் மீது பாசம் இல்லை என சொல்லாதே,நான்
அரசனாக வீற்றிருப்பதே உனக்கு பட்டாபிஷேகம் செய்யத்தான். அரசவையில் ஆன்றோர்களும்
சான்றோர்களும் வீற்றிருக்கின்றனர். அங்கே நான் அஸ்த்தினாபுரத்துக்கே அரசன். அங்கே
எடுக்கப்படும் முடிவுகளுக்கு நான் செவி சாய்த்தே, ஆகவேண்டும்’
‘அரசன் கட்டளையிட்டால் அனைவரும் அடங்கிப்போக வேண்டியதுதானே! துரியோதனன் தான் அஸ்த்தினாபுரத்து இளவரசன் என்றால் அவையோர் கேட்க மாட்டார்களா?’ துர்ச்சாதனன், இடைமறித்தான்.
‘அரசன் கட்டளையிட்டால் அனைவரும் அடங்கிப்போக வேண்டியதுதானே! துரியோதனன் தான் அஸ்த்தினாபுரத்து இளவரசன் என்றால் அவையோர் கேட்க மாட்டார்களா?’ துர்ச்சாதனன், இடைமறித்தான்.
மீண்டும் திருதராஷ்ட்ரன், ‘பாண்டவர்கள்
தேவர்களின் (பிராமணர்கள்) ஆதரவு பெற்றவர்கள், அதுமட்டுமல்ல
அஸ்த்தினாபுரத்து மக்களும் பாண்டுவின் பிள்ளைகள் தான் அஸ்த்தினாபுரத்தை ஆளவேண்டும்
என நினைக்கின்றனர். இந்த தகவலை நான் ஒற்றர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். இந்நிலையில்
உனக்கு பட்டம் சூட்டினால் நான் பெரும் பழி பாவத்திற்கு ஆளாக நேரிடாதா துரியோதனா?’
திருதராஷ்ட்ரன் கூறுவதை கேட்கும் பொருமை துரியோதனன்களுக்கு
இல்லை.
‘பாவம், பழி, நியாயம்,தர்மம் இது வெல்லாம் என்ன தந்தையே?இதையே நினைத்துக் கொண்டிருந்தால் நான் அரியணை ஏறுவது எப்போது? அது முடியாதா? தந்தையே’
துரியோதனன் பொருமை இழந்தான்.
‘இதற்கு ஒரே வழி தான் உள்ளது மன்னர் அனுமதி
யளித்தால் நான் கூறுவேன்’ சகுனி சொல்லிவிட்டு திருதராஷ்ட்ரன்
முகம் நோக்கினான்.
‘சொல் சகுனி’
திருதராஷ்ட்ரன் கூறியதும், ‘பாண்டவர்களை வரும்
வழியிலேயே சாகடித்து விடவேண்டியது தான்
சிறந்த வழி’என சகுனி யோசனை கூறுகிறான்.
சகுனியின் இந்த சொல்லை கேட்டவுடன் காந்தாரி இடிந்தே
போய்விட்டாள்.
‘என் பிள்ளைகளை நற்பண்புகள் ஊட்டி வளர்ப்பாய்
தர்ம நியாங்களை சொல்லி வளர்ப்பாய் என நினைத்து நான் உன்னை இந்த அரண்மனையில்
வைத்திருந்தேன்.ஏதுமறியா பாண்டவர்களை கொன்றுதான் என மகன் அரியணை ஏற வேண்டுமா? அந்த கொலைப்பழி காலத்துக்கும் என் மகன்களை தொடர்ந்து வராதா?சகுனி உனக்கு ஏன் இந்த கெட்டுபோன புத்தி?இக்கணமே
இந்த அஸ்த்தினாபுரத்தை விட்டு வெளியேறு இந்த அஸ்த்தினாபுரத்தின் பட்டத்து ராணி
என்கிற முறையில் ஆணையிடுகிறேன்.நீ உடனே வெளியேறு.’
‘சகுனி என் அந்தரங்க ஆலோசகன்,அவனை வெளியேற்ற நீ யார்?’திருதராஷ்ட்ரன் மனைவியை
கடிந்து கொண்டான்..
மனம் உடைந்த காந்தாரி அழுது கொண்டே விதுரனைத்தேடி செல்கிறாள்.
‘அஸ்தினாபுரத்து அரசி என்றால் எனக்கென்று ஒரு எண்ணம் கூடாத?விதுரா! மகன்கள் முன்னே என்னை அசிங்கப்படுத்திவிட்டார் மன்னர். எனக்கு
வாழவே பிடிக்கவில்லை விதுரா’
‘அண்ணி! தங்களுக்காக வாழ்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்
சகுனி. உங்கள் தம்பி அல்லவா?அவர் நினைத்திருந்தால் காந்தாரத்தின் அரசனாக ராஜபோக
வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்.அக்காவின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையவில்லை என்கிற
ஒரே காரணத்தினால் அக்காவுக்காகவும் அக்காவின் பிள்ளைகளை அஸ்த்தினாபுரத்து அரசுரிமை
பெறச்செய்யவும் அவர் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
அந்தவகையில் கண் தெரியாத அண்ணனுக்கும் நம்ப தகுந்த ஒரு நபர் அரசவையில் தேவைப்படுகிறது. அந்த எண்ணத்தில் தான் அண்ணன் உணர்ச்சிவசப்பட்டு
பேசியிருப்பார்.’
விதுரன்,தன்
அண்ணியை ஆற்றுப்படுத்தினான். தன் மனைவி சுலபாவை அழைத்து,
‘அண்ணியை அண்ணனிடம் விட்டு விட்டுவா,அண்ணன் அண்ணியை
எப்பொழுதும் பிரிந்ததில்லை’ என கூறுகிறான்.
தனிமையில் திருதராஷ்ட்ரன் வீற்றிருந்தான். மனைவி காந்தாரி
வருவதை அறிந்து கொண்டான். ‘வா, காந்தாரி,என்மீது உனக்கு கோபமா?’
‘நான் கோவப்பட
எனக்கேது உரிமை? இந்த அரண்மனையில் ஊழியம் செய்யும் ஆயிரம் பெண்களில் நான்
ஒருத்தி,எனக்கு மன்னர் மீது கோபம் கொள்ள
உரிமை ஏது?’
கணவனை குத்தலாக பேசி அவன் எண்ணங்களை அறிய முற்பட்டாள்
காந்தாரி.மேலும் அவள்,
‘பாண்டுவின் பிள்ளைகள் நம் பிள்ளைகள் அல்லவா?துரவுபதி நம்
குல மருமகள் அல்லவா?தர்மன் மூத்தவன் அல்லவா? அவன் அரியணை ஏறுவது தானே முறை?அதுதானே
நியாயம்?அதுதானே தர்மம்?’
‘காந்தாரி! பாண்டு என் தம்பி எனக்காக அதாவது அண்ணன் அஸ்த்தினாபுரத்தை ஆளவேண்டும் எனும் எண்ணத்தில் காட்டுக்கு சென்றான் உண்மைதான்.நான் மறுக்கவில்லை. மறைக்கவில்லை, காந்தாரி. நான் குருடன் ,நீயும் குருடாக்கிக் கொண்டாய்.
இந்த அரண்மனையில் நான் அரசனாக இல்லை எனில் இந்த அரண்மனையின் ஒரு மூலையில் இருந்திருப்பேன் .ஒரு பணியாள் கூட என்னை மதிக்கமாட்டான்.
இன்றைக்கு இந்த பாரத நாட்டுக்கே தலைவன் காந்தாரத்திலிருந்து,கலிங்கம்வரை என்னை மகாமன்னனாக மதிக்கின்றனர்.ஒரு மனிதனுக்கு அதிகாரம் இல்லை எனில் அவனை அவன் நிழல் கூட மதிக்காது.காந்தாரி.இவ்வளவு ஏன் கணவனை இழந்த குந்திதன் ஐந்து பிள்ளைகளையும் சர்வபராக்கிரமசாலிகளாக ஏன் வளர்த்தாள்?எப்படியும் அஸ்த்தினாபுரத்தின் அரசு வாரிசாக தன் பிள்ளைகளை ஆக்க வேண்டும் அதுதானே உண்மை?
நம்பிள்ளை துரியோதனன் அஸ்த்தினாபுரத்து மன்னன் என்றால் நமக்குப் பெருமை அல்லவா? பாவம் புண்ணியம், நியாயம், தர்மம் இதுவெல்லாம் ஒரு சத்திரியனுக்கு உதவாது. குடும்பஸ்த்தனுக்கு வேண்டுமானால் அது உதவலாம். நாட்டை ஆளநினைக்கும் சத்ரியனுக்குப் பயன்படாது.’
ஒரு நீண்ட விளக்கத்தை தந்த திருதராஷ்ட்ரன் மனைவி காந்தாரியின் எண்ணங்களை அறியமுற்பட்டான்.. ‘எனக்கு தெளிவு ஏற்படுத்திவிட்டீர்கள், ஐயனே! என்னை மன்னித்துவிடுங்கள்.’மேலும் திருதராஷ்ட்ரன், ‘என் தம்பி மகன்களை கொன்று அரியணையை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் எனக்கில்லை’ என தன் மனைவியிடம் உறுதிபடக் கூறினான், ‘அந்த பழிபாவம் காலத்திற்கும் என்னை வந்து சேரும் என எனக்கு தெரியாதா காந்தாரி?
*****************
விதுரன் பாஞ்சால நாட்டிற்கு செல்கிறான். துருபத மன்னன்
விதுரன் வருகையை ஒட்டி ஆடம்பர வரவேற்புக்கு ஆணையிடுகிறான். அரண்மனைக்குள் விதுரனை
வரவேற்ற துருபதன் அரண்மனையில் ஒரிரு நாட்கள் தங்கி தங்கள் விருந்தினை மேற்கொள்ள
வேண்டும் என அன்பாக வேண்டுகிறான்.
திருதராஷ்ட்ரன் கொடுத்தனுப்பிய தங்கம் வைரம் போன்ற
நவரத்தினங்களை மருமகள் துரவுபதிக்கு சீதனமாக வழங்குகிறான். பாண்டவர்களையும்,குந்தியையும் பார்த்த விதுரன் மகிழ்ந்து போனான். ‘இவ்வளவு
சதிகளையும் தாண்டி நாங்கள் உயிரோடு இருப்பதற்கு நீதானே விதுரா காரணம்.’ குந்தி விம்முகிறாள்.
‘அண்ணி,நான் என்
கடமையைத்தான் செய்தேன் எனக்கெதற்கு நன்றி யெல்லாம் ‘என
விதுரன் கூறிக்கொண்டே தன் அண்ணியின் பாதம் தொட்டு வணங்குகிறான்.
பாண்டவர்கள் பாஞ்சாலத்திலிருந்து விடை பெறும் முன்,அர்ச்சுனன் தன் மைத்துணரின் தனுர் வித்தையை கண்டு வியந்து
போகிறான்.அப்பொழுது.திருஷ்ட் தூமனன்,
‘மைத்துனரே தாங்கள் தான் இவ்வுலகில் சிறந்த
வில்லாளன் என உலகமே பாராட்டுகிறது.நான் உங்களை மைத்துணராக பெற்றது என் பெரும் பாக்கியம் உங்களுக்கு முன்
நான் எம்மாத்திரம்.’
‘தாங்கள் கூட
வில்வித்தையில் சிறந்தவராகிவிட்டீரே யாரிடம் கற்றீர்?’ என அர்ச்சுனன் தன்
மைத்துனரைப் பார்த்து வினவுகிறான்.
அந்த வினாவுக்கு விடையளிக்காமல் திருஷ்ட்டதூமனன், ‘அஸ்த்திர
சஸ்த்திர வித்தைகளை சொல்லிக் கொடுத்த என்
குரு நாதர், பிரம்மாஸ்த்திரத்தை பயன் படுத்த சொல்லித் தரவில்லை. அதை தாங்கள் தான்
எனக்கு சொல்லித்தரவேண்டும்.’
‘பிரம்மாஸ்த்திரத்தை ஒருவன் பயன் படுத்த வேண்டுமானால்
அவனுடைய எதிரி யார் என தெரிய வேண்டும்.அப்பொழுதுதான்
அதை குரு நாதர் சொல்லிக்கொடுப்பார்..உன் எதிரி யார் ? யாரை ஒழிக்கப் போகிறாய்? அப்படி
எனக்கு தெரிந்தாலும் எனக்குத் தெரிந்த பிரம்மாஸ்த்திரத்தை நான் பிறருக்கு
சொல்லிக்க கொடுக்கும் தகுதி யற்றவன்.பிறருக்கு சொல்லித்தரக் கூடாது என
என் குருநாதர் என்னிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார்.’ என
சாதுர்யமாக பதிலளித்து சமாளித்தான் அர்ச்சுனன்.
*********
இதற்கிடையே பாண்டவர்கள் அஸ்த்தினாபுரம் வருவதை முன்னிட்டு
அவர்களை ராஜ மரியாதையுடன் வரவேற்க மன்னர் திருதராஷ்ட்ரன் தலைமையில் ஆலோசனை
நடக்கிறது.துரியோதனனை அரசவைக்கு அழைத்து ,பாண்டவர்கள் வரவேற்பில் கலந்து கொள்ள
திருதராஷ்ட்ரன் வேண்டுகோள் விடுக்கிறான். ஆனால் துரியோதனன் மறுத்துவிடுகிறான்.
துரியோதனன் வரவேற்பில் கலந்து கொள்ள வில்லை எனில் தானும்
கலந்து கொள்ள மாட்டேன் என தன் அண்ணனுடன் ஒற்று இருப்பதை காட்ட துர்ச்சாதனன் அவையில்
அறிவிக்கிறான்.சகுனியும்தன் பாட்டுக்கு தன் சகோதரி மகன்கள் எடுக்கும் முடிவை தான்
ஆதரிப்பதாக கூறி வெளியேறுகிறான்;கர்னனும் அவ்வாறே!
வெளியேறும் துரியோதனனை அழைத்த, திருதராஷ்ட்ரன், ‘ஏன் அவ்வாறு நடந்து கொள்கிறாய்
துரியோதனா? அவர்களும் நம் சகோதரர்கள் தானே? அப்படி இருக்கும் போது நீ வரவேற்பில்
கலந்துகொள்ள வில்லையெனில் இந்த அஸ்த்தினாபுரமே உன்னை தூற்றாதா? இது
முறையா?அவையின் சான்றோர்கள் எடுத்த முடிவு.இதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்.’ என தன்
மகனிடம் அன்பாகவும் சற்று கடிந்தும் கூறுகிறான்.
‘தந்தையே,ஒரு பெண் ஐந்து ஆடவர்களோடு வாழ்வதுதான் முறையா?
இது சத்ரிய தர்மமா? நம் சந்திர வம்சத்துக்கே இழுக்கல்லவா?ஐந்து பேரை மணந்துகொண்ட
கேடு கெட்டவளை நாம் வரவேற்பதா? பாண்டவர்களே நமக்கு அவமானச் சின்னம்.இவர்களை எப்படி
தந்தையே நாம் வரவேற்பது?’ஆவேசத்துடனும் சற்று கெஞ்சலாகவும் துரியோதனன் அவையில்
எடுத்துரைக்கின்றான்.
மேலும்,துரியோதனன், ‘இந்த
அவையில் தாங்கள் அஸ்த்தினாபுர அரசர்,பிதாமகர் அவை முன்னவர்,சித்தப்பா விதுரர் மகாமந்திரி,
துரோணர் ராஜ குரு,கிருபாச்சாரி நம் குல குரு இந்த அவையில்
நான் யார் தந்தையே? கூறுங்கள்’
கர்னனோ,‘இந்த அவையில் தன் கணவர் குருடன் என்று
தெரிந்தவுடன் தன் கண்களையே துணியால் கட்டி மறைத்து ,தனக்கு
வாய்த்த கணவன் தன்னைவிட எந்த நிலையிலும்
தாழ்ந்துவிடக்கூடாது என தனக்கு ஏற்பட்ட
கதியை நினைத்து கணவனுக்கு சம அந்தஸ்த்தில் வாழ தன்னை அர்பணித்துக் கொண்ட இந்த
ராஜமாதா ஒரு கற்புக்கரசி,அவர் வாழும் இந்த அரண்மனையில்
இப்படி ஒரு அவமானச் சின்னம் தேவையா?’
என துரியோதனனுக்கு ஆதரவாக பேசி பீஷமரின் கோவத்தை கிளறி
விட்டான்.
‘கர்னா நீ ஒரு கேடு கெட்ட பிறவி, இந்த அவையில் உனக்கு பேச அனுமதித்ததே தவறு துரியோதனனை கெடுத்ததே நீ தான் ,உன் தலையை துண்டிக்காமல் விடமாட்டேன்’ என வாளை உருவினான் பீஷ்மன்.
‘தாத்தா! கர்னனை
கொல்வதென்றால் முதலில் என் தலையை கொய்துவிட்டு அவனைக் கொல்லுங்கள்’துரியோதனன் அவையில் சீறினான்.பீஷ்மன் அடங்கி விட்டான்.
பீஷ்மனைப் பொறுத்த வரையில் திருதராஷ்ட்ரனின்
பிள்ளைகளாகட்டும் அல்லது பாண்டுவின் பிள்ளைகளாகட்டும் இருவருமே ஒன்றுதான்.பீஷ்மனைப் பொறுத்தவரை,தன் வாரிசுகள் அஸ்த்தினாபுரத்தை ஆள வேண்டும் அதுவும் வயதில் மூத்தவர்கள்
அரியணை ஏறுவதுதான் சிறப்பு என எண்ணம் கொண்டவன்.
அந்த வகையில் வயதில் மூத்தவன் இளையமகன் பாண்டுவின்
மூத்தமகனான தர்மன்.எனவே தர்மனுக்கு இளவரசு பட்டம் சூட்டுவது தான் முறை எனும்
எண்ணம் கொண்டவன்.
விதுரன்,குந்தி மற்றும் பாண்டவர்களுடன் புதுமணப்பெண்
துரவுபதி அனைவரும் பாஞ்சால அரண்மனையில் உள்ள துருபதன் மற்றும் அவன் மனைவி ,துரவுபதியின் சகோதரன் திருஷ்ட்ட தியாமனன் ஆகியோரிடம் விடைபெற்று
அஸ்த்தினாபுரம் நோக்கி பயணமாகின்றனர்.
சகுனி அடுத்தநாள் அதாவது பாண்டவர்கள் வருகை புரியும் நாளான
காலையில் மன்னர் திருதராஷ்ட்ரனை
சந்திக்கிறான். தான் பாண்டவர்களை வரவேற்பதில் கலந்து கொள்ள இருப்பதாக கூறுகிறான்.
‘என்ன சகுனி நேற்று முடியாதென்றாய்,இன்று முடிவை மாற்றிக்கொண்டாய் இது எப்படி?’
திருதராஷ்ட்டரன் கேட்ட கேள்விக்கு,
‘நேற்று அந்த முடிவை அந்த நேரத்தில் அப்படி
எடுக்கவேண்டிய சூழல் இன்று காலம் கனிந்துவிட்டது, முடிவை
மாற்றிக் கொண்டேன்’சகுனி மேலும் கூறினான்.‘இது என்ன சத்ரிய குணம்?’ என தனக்குள் எண்ணிக் கொண்டான், திருதராஷ்ட்ரன்.பாண்டவர்கள் அஸ்த்தினாபுரம் அரண்மனை வந்ததும் வரவேற்பு
கோஷங்கள் போடப்பட்டன.பீஷ்மன் வரவேற்றான்.
திரவுபதியை மருமகளாக அறிமுகம் செய்த குந்தி பாண்டவர்கள்
அனைவரையும் பிதாமகர் பாதம் தொட்டு வணங்கச் சொன்னாள். பேரன்கள்களை அன்போடு அறவணைத்த
பீஷ்மன் ,மருமகள் திரவுபதியை,“கவுரவர்களின் தலை மருமகள் இந்த குலத்தின்
புகழையும் கவுரவத்தையும் கட்டிக்காக்க வந்த திருமகள்” என பாராட்டி உள்ளன்போடு வரவேற்றான்.
அடுத்து மன்னரை காணுங்கள் என உள்ளே அனுப்பி வைத்தான்
பீஷ்மன்.திருதராஷ்ட்ரன் பாண்டவர்கள் வருவதை உணர்ந்து,
‘என் செல்வங்களே, நீங்கள்
தீயில் மாண்டு விட்டீர்கள் எனும் சேதி கேட்டு நான் துடித்துப்போனேன், இப்பொழுதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது வாருங்கள்’என அறவணைத்துக் கொண்டான்.
குந்தி தன் மருமகள் திரவுபதியை திருதராஷ்ட்ரனுக்கு அறிமுகம்
செய்து வைக்கிறாள். திரவுபதியும், ‘என்னை வாழ்த்துங்கள் மாமா’என வேண்டி மாமனாரின் பாதம் பணிகிறாள்.
‘வா என் மருமகளே,
உன்னைப் பற்றி கேட்டறிந்தேன்,அழகும் அறிவும், வீரமும் ஒன்றாக பெற்றிருக்கும் திருமகளே என் குலக்கொழுந்தே நீ நீடூழி
வாழவேண்டும்’ என வாழ்த்தினான், திருதராஷ்ட்ரன்.
காந்தாரியும் துரவுபதியை ஆரத்தழுவி வரவேற்றாள்.
சகுனியும் தன் பங்கிற்கு பாண்டவர்களையும், திரவுபதியையும் வரவேற்று வணங்கினான்.
‘மாமா நம்ம பக்கமும் பேசுகின்றார், அவர்களையும் வரவேற்கிறார் இவரை புரிந்து கொள்ளவே முடியவில்லை அண்ணா!’
துர்ச்சாதனன்,அண்ணன் துரியோதனனிடம் சொல்லி
ஆச்சர்யப்பட்டுப் போனான்.
*******
துவாரகாவில் கிருஷ்னனும் ருக்மணியும் சுபத்திரையுடன் பேசிக்
கொண்டிக்கின்றனர். அந்நேரத்தில் பலராமன் உள்ளே வருகிறான்.
‘கிருஷ்னா,நம் தங்கை சுபத்திரையை துரியனுக்கு மணமுடிக்க
ஆசைப்படுகிறேன், நீ என்ன சொல்கிறாய், கிருஷ்னா?’
சொல்லிவிட்டு மேலும், ‘நீ உடனே அஸ்த்தினாபுரம் சென்று வா’
என பலராமன் தன் தம்பியிடம் கூறுகிறான்.
கிருஷ்னனும், ‘இது கூட நல்ல யோசனைதான். அப்படியே
முடித்துவிடலாம், அண்ணா!’
திகைத்துப்போன, சுபத்திரை, ‘அண்ணா,என்ன இது?நான் அர்ச்சுனனை விரும்புவது உமக்கு தெரியாதா? என்ன இப்படி சரி என்று சொல்லி விட்டீர்கள்?’
உடனே உடன் இருக்கும்
ருக்மணி, ‘சுவாமி தாங்கள் கலப்பு திருமணத்தை ஆதரிப்பவர் தானே? தங்கை சுபத்திரையின்
ஆசையை நிறைவேற்றினால் என்னவாம்?’
கிருஷ்னனும், ‘பார்க்கலாம்’ என சாதாரணமாக கூறிவிட்டு செல்ல
பார்க்கிறான் .ஆனால், சுபத்திரை, ‘அண்ணா, துரியோதனனை
நான் மணக்க மாட்டேன் அடைந்தால் அர்ச்சுனன், இல்லையேல் மரணம்’ என உருதிப்படக் கூறுகிறாள்.
‘உன் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்க நான்
தானே செல்லப் போகிறேன் பிறகு பார்க்கலாம்,யாருக்கு யார்
என்று இப்பொழுது ஏன் அவசரப்படுகிறாய் சுபத்திரை?
கிருஷ்னனின்
வார்த்தையில் ஏதோ அர்த்தம் உள்ளதை
நினைத்து சுபத்திரை அமைதியானாள்.
####
அஸ்த்தினாபுரத்தின் அரண்மனையில் தன் கணவர் பாண்டு பயன்
படுத்திய அறைக்கு செல்கிறாள் குந்தி. தனிமையில்
அமர்ந்து கணவனோடு வாழ்ந்த பழைய நாட்களை
நினைவு கூறுகிறாள்,
‘இன்று தன்னிலை யாது? தன் கணவர் பாண்டு, குருட்டு அண்ணன் ஆசைப்படுகிறான் என நாட்டை ஆண்டுவிட்டுப் போகட்டும் என
வனவாசம் சென்றவர்தானே?அவர் போட்ட பிச்சைதானே திருதராஷ்ட்ரனுக்கு கொடுத்த மன்னர்
பட்டம்?.
இந்த அரண்மனையில் திருதராஷ்ட்ரனுக்கு அடுத்த மூத்தவன் தன்
பிள்ளை தர்மன் நாட்டை ஆளுவதுதானே முறை? அது தானே நியாயம்? அதுதானே தர்மம்?’
பணியாளை அழைத்து விதுரனை வரச் சொல்கிறாள், குந்தி.விதுரனும்
வந்து அண்ணியை வணங்கி வரச் சொன்ன காரணத்தை வினவுகிறான்.
அஸ்த்தினாபுர அரசி என்கிற முறையில்,இந்த நாட்டின் மகா
மந்திரியான தங்களுக்கு,ஒரு உத்ரவிடுகிறேன்,
‘தர்மனுக்கு இளவரசு பொறுப்பு வழங்க ஏற்பாடு செய்யும்படி,ஆணையிடுகிறேன்.’
குந்தியிடம் இருந்து இப்படி ஒரு உத்தரவு வரும் என்று விதுரன் சற்றும் எதிர் பார்க்கவில்லை, மிரண்டு போனான். ‘அரசியாரே அப்படி எல்லாம் அவசர கதியில் எதுவும் செய்ய முடியாது..அரசவையை கூட்ட வேண்டும் சான்றோர்கள் மத்தியில் தங்கள் கோரிக்கை பற்றி ஆலோசனை செய்ய வேண்டும்.அதன் பிறகு என்ன முடிவு எடுக்கப்படுகிறது என பார்ப்போம்’
குந்தியிடம் இருந்து இப்படி ஒரு உத்தரவு வரும் என்று விதுரன் சற்றும் எதிர் பார்க்கவில்லை, மிரண்டு போனான். ‘அரசியாரே அப்படி எல்லாம் அவசர கதியில் எதுவும் செய்ய முடியாது..அரசவையை கூட்ட வேண்டும் சான்றோர்கள் மத்தியில் தங்கள் கோரிக்கை பற்றி ஆலோசனை செய்ய வேண்டும்.அதன் பிறகு என்ன முடிவு எடுக்கப்படுகிறது என பார்ப்போம்’
குந்திக்கு கோபம் வந்து விட்டது, ‘அரசவையை கூட்டி
முடிவெடுத்து தானே, தர்மனுக்கு ஏற்கனவே முடி சூட்டினீர்கள்,பின் பாண்டவர்களை ஏன் வாரணாவனம் அனுப்பினீர்கள்.மீண்டும் ஒரு முறை மந்திரா லோசனை எதற்கு?
குந்தியின் கோரிக்கையில் நீயாயம் இருப்பதை உணர்ந்த விதுரன்,
‘அப்படியே ஆகட்டும் அரசியாரே’ என விதுரன் விடைபெற்றான்.
விதுரன், திருதராஷ்ட்ரனிடம் செல்கிறான். அந்நேரம்
துரியோதனன் அங்கே தனக்கு இளவரசு பட்டம் சூட்ட வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை
செய்ய வேண்டும் என தன் தந்தையிடம்
வற்புறுத்துகிறான்.
விதுரனோ தான் தனியாக மன்னரிடம் பேச வேண்டும் எனும் கோரிக்கை
வைக்கிறான். அதை கேட்ட துரியோதனன் ,
‘ஏன் எனக்கு எதிராக சதி திட்டம் தீட்டப் போகிறீர்களா? அது
என்ன என நான் தெரிந்து கொள்ளக் கூடாதா? மேலும்,துரியன்,
‘நான் மன்னரின் மகன் இந்த நாட்டில் என்ன
நட்டக்கப்போகிறது என தெரிந்து கொள்வதில் எனக்கு உரிமை உள்ளது’என காட்டமாக
பேசினான்.
குந்தியின் விருப்பத்தை மன்னரிடம் தெரிவிக்கிறான் விதுரன்.
துரியோதனனோ, ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் விதுரா!
ஒரு காலும் அது நடக்காது.’
விதுரன்,‘நீ குழந்தையாக இருந்த போதுஉ,நான் உன்னை மார்பிலும் தோளிலும் தூக்கி சுமந்தவன்,
நீ என்னை பேர் சொல்லி அழைக்கிறாய்.யாரிடம் எப்படி பேசுவது
என்று கூட உனக்கு தெரியவில்லை, இதிலிருந்தே தெரிகிறது உனக்கு முடி
சூட்டும் பக்குவம் பெறவில்லை என்று.’ துரியோதனன்,விதுரனின் வார்த்தைகளை செவி மடுக்கவில்லை,மாறாக
‘என்னை தோளில் சுமந்திருப்பீர்கள்,ஆனால் பாண்டவர்களை நெஞ்சில்
சுமந்து வளர்த்தீர்கள் அதனால் தான் பாசம் பாண்டவர்கள் மீது போகிறது.,என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன்.’என துரியோதனன், விதுரனுக்கு பதிலுரைத்தான்.
துரோணர் மற்றும் கிருபாச்சாரி இருவரும் ஒன்றாக இணைந்து, ‘இப்பிரச்சினையை, தீர்வுக்குக் கொண்டுவர, இருதரப்பினரையும் (பாண்டவர்கள், மற்றும் கவுரவர்கள்)
அரசவைக்கு அழைத்து பேசலாம்’ என கூறுகின்றனர். அப்படியே
அழைக்கப்பட்டனர்.
அரசவையில் எதிரெதிரே அமர்ந்த இரு தரப்பினரும் ஒருவரையொருவர்
முறைத்தப்படி இருந்தனர்.முதலில் பீஷ்மர் பேச
ஆரம்பித்தார். அஸ்த்தினாபுரம் அரசு பலர் தியாகங்களின் அடிப்படையில்
அமைக்கப் பட்டதை அரசவையில் எடுத்து உரைத்தார்.
‘குருடனான அண்ணன் அரசாள ஆசைப்படுகிறான்,ஆண்டுவிட்டுப்
போகட்டும் என விட்டுக் கொடுத்து கானகம் சென்றான் தம்பி பாண்டு, அண்ணனுக்கும் தம்பிக்கும் அப்படியொரு புரிதல் இருந்தது.ஆனால் அது போன்று ஒரு புரிதல் இப்பொழுது ஏற்படவில்லை, என்பதைக் கண்டு என் மனம் வேதனைப்படுகிறது. இவ்வளவு பாடுபட்டு வளர்த்த
இந்த அஸ்த்தினாபுரம் என் கண்ணெதிரே சிதைந்து விடுமோ என என மனம் அஞ்சுகிறது.’
பீஷ்மன் இப்படி கூறி முடித்தும்,துரியோதனன் எழுந்து பேசினான்,‘அஸ்த்தினாபுரத்தின்
அரசர் என தந்தை,அவருடைய மகனான நான்தான் அஸ்த்தினாபுரத்தின்
இளவரசு பட்டத்திற்கு உரியவன், இதுதானே நியாயம்?’ மேலும் கூறினான்,
‘இனி பாண்டவர்கள் அஸ்த்தினாபுரம் அரண்மனையில்
சகல வசதிகளுடன் ராஜ மரியாதையுடன் இருப்பதற்கு நான் ஏற்பாடு செய்து கொடுப்பேன்’என்று கூறுகிறான்.
இந்நேரத்தில்,குந்தி எழுந்து,பீஷ்மரையும்
அவை சான்றோர்களையும் வணங்கி தான் சில வார்த்தைகள் கூற அனுமதி வேண்டும் என
கூறுகிறாள்.பீஷ்மனும் அனுமதிக்கிறான்.
‘குந்திராஜன் அரண்மனையில் நடந்த
சுயம்வரத்தில் என்னை மாலையிட்டு மணந்த பாண்டு மன்னருடன் அஸ்தினாபுரம் அரண்மனை
வந்தேன்.வந்தவுடன் அடுத்த நாளே அஸ்வமேத யாகம் சென்றுவிட்டார்.சென்று வந்தவருக்கு
அஸ்த்தினாபுரத்தின் அரசராக பட்டாபிஷேகம் நடந்தது.
பட்டாபிஷேகம் நடந்த நாளே மாத்ரி தேசத்தின் மீது போர்த் தொடுக்கும்
நேரம் வந்துவிட்டது.போரில் வென்றவர் மாத்ரியை மணந்து அஸ்த்தினாபுரம் வந்தார். அடுத்த
நாளே அண்ணன் அரசாளட்டும் என நினைத்து, எங்களை அழைத்து கானகம் சென்று விட்டார்.
அரண்மனை வாழ்க்கை எனக்கு அமையவே இல்லை.நான் மட்டும் என்ன
பாவம் செய்தேன்? எனக்கு ஏன் இந்த தண்டன ?காட்டில்தான் என் மக்களைப் பெற்றெடுத்தேன்.அங்கேயே என் கணவரையும் பறிகொடுத்தேன்.ஆதரவற்ற நிலையில் அஸ்த்தினாபுரம்
வந்தேன்.தர்மனுக்கு பட்டம் சூட்டி சதி செய்து எங்களை வாரணாவனம்
அனுப்பினீர்கள்.அங்கே அரக்கு மாளிகை அமைத்து எங்களை கொல்லும் சூழ்ச்சியிலிருந்து
உயிர் பிழைத்து கானகம் சுற்றி அலைந்து துருபதனிடம் தஞ்சம் அடைந்தோம்.
பாண்டு மன்னர் இறக்கும் முன் அவருக்குத்தான் அஸ்த்தினாபுரம்
மன்னர் பட்டம் சூட்டப்பட்டது.அவருக்குப்பின் மூத்தவனான அவர் மகன் தர்மனுக்கு இளவரசர்
பட்டம் சூட்டப்பட வேண்டும்.இதுதான் நியாயம்’ என தன் வாதத்தை சொல்லி முடித்தாள்.இப்பொழுது
தர்மன் தன் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துரைத்தான். ‘வாரணாவனம்
செல்லும் முன் எனக்குத்தான் இளவரசு பட்டம் சூட்டப்பட்டது.அங்கே உயிர்பிழைத்து வந்த
எனக்குத்தான் இளவரசு பட்டம் உரியது.இதில் இங்கு மீண்டும் ஒருமுறை முடிசூட்டுப்
படலம் எதற்கு?’
வெகுண்டெழுந்த துரியன், பாண்டவர்களைப் பார்த்து,
‘உங்களுக் கெல்லாம் இளவரசு பட்டம் ஒரு கேடா?
நீங்கள் எல்லாம் என் சித்தப்பா பாண்டவிற்கு பிறந்தவர்களல்ல, என்பது உங்களுக்கு தெரியுமா?’ எனும் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டான். வெடித்தது
பிரளயம்..
பீமன் துடித்தெழுந்தான்,‘துரியோதனா! உன்
நாக்கை அடக்கு. உன் தலையை துண்டிக்கிறேன் பார்’என
கர்ஜித்தான்.மிரண்டு போன குந்தி சைகையால் பீமனை அமைதிப்படுத்தினாள்.
மேலும் பீமன், ‘துரியோதனா ,என் தாய் தடுத்ததால் உன் தலைத்
தப்பியது’ இதற்கிடையில் அர்ச்சுனன், ‘பீமனண்ண!
அமைதியாக இரு,நான் கேட்கும் கேள்விக்கு துரியோதனன் பதில்
கூறட்டும்’
‘பிதாமகர் பீஷ்மர் அஸ்த்தினாபுரத்தின்
காவலர்.உன் தந்தை திருதராஷ்ட்ரர், அஸ்த்தினாபுரத்தின் அரசர்.அவர் தந்தை யார் என்று
உனக்கு தெரியுமா? அதாவது உன் தாத்தாவின் பெயர் உனக்கு
தெரியுமா?இதில் யார் ஈனப் பிறவி?
நீங்களா ?அல்லது நாங்களா?’துரியோதனன்
தலை குனிந்தான்.
அதிர்ச்சியடைந்த பீஷ்மன், ‘இதுவரை
கட்டிக்காத்து வந்த குல கவுரவத்தை அசிங்கப்படுத்தி விட்டீர்களே! உங்களை யெல்லாம்
என் வாரிசுகள் என சொல்வதற்கே எனக்கு வெட்காமாக இருக்கிறது. இனி என் மரணத்தை நான்
தேடிக் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை’ என கூறிவிட்டு
அவையை விட்டு வெளியேறினான்.
இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் திருதராஷ்ட்ரன் அவதிப்பட்டான்.
இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் எனும் எண்ணத்தில், நள்ளிரவில்
காவலாளியை அழைத்துக் கொண்டு காட்டில் தவமிருக்கும் வியாசரைத்தேடி செல்கிறான்.
தவம் கலைந்து வியாசரும் திருதராஷ்ட்ரனை வரவேற்கிறார்.அரண்மனையில்
பதவிக்காக நடக்கும் பிரச்சினையை எடுத்துரைக்கிறான்.
‘இதில் எப்படி முடிவெடுப்பது என தெரியவில்லை எனவே தங்களை
நாடி வந்தேன்’.
‘உன் பிரச்சினை வேறு, என் பிரச்சினை வேறு,இதில் நான் என்ன தீர்வு சொல்வேன் என்று நீ எதிர்பார்க்கிறாய்
திருதராஷ்ட்ரா?நீ நாட்டின் மன்னன் உன்னால் என்னைப் போல்
துறவரம் மேற் கொள்ள முடியாது எது நியாம் எது? எது நீதி? என நான் கூறுவது உன் மனம் ஏற்காது. நான் கூறுவதெல்லாம் இதுதான்,
நீ நாட்டின் மன்னனாக இருந்து முடிவெடு, எல்லாம் சரியாகிவிடும்,அதுவே சத்ரிய தர்மம்’
என வியாசர் பதிலுரைத்தான்.
எதோ புரிந்தவனாக அஸ்த்தினாபுரம் திரும்புகிறான்
திருதராஷ்ட்ரன். காந்தாரி,
‘வியாசர் என்ன சொன்னார்’ என வினவுகிறாள்.
‘நாம் பிள்ளையை அற நெறி சொல்லி வளர்க்க தவறிவிட்டோம்’ என்கிறார்.
காந்தாரியை கலந்தாலோசிக்கிறான்.காந்தாரி தீர்வு காண தம் மகனையே கேட்போம் என துரியோதனன்
இருக்கும் இடம் தேடி செல்கின்றனர்.
‘மகனே! நான் இந்த நிலையில் இருப்பதற்கே
காரணம் உன் சித்தப்பா பாண்டுவின் தியாகம் தான்.சாஸ்த்திர தர்மங்கள் ஒரு குருடனை
அரசனாக இருப்பதற்கு இடம் தரவில்லை. எனக்காக அண்ணன் நாட்டை ஆண்டுவிட்டு போகட்டும்
என கானகம் சென்றுவிட்டான்.
இன்று அவன் பிள்ளைகளான பாண்டவர்கள் அரசுரிமையை கேட்பது
நியாயம் தானே?நீ விட்டுக் கொடுக்க வேண்டும் துரியோதனா!’
‘கானகம் சென்ற பாண்டவர்கள், அய்யோக்கியத்தனம் செய்து துரவுபதியை மணந்தார்கள்.அதன் பின் நமது எதிரியான
துருபதனிடம் தஞ்சம் புகுந்தார்கள்.நம் குல வழக்கத்திற்கு மாறாக ஒரு பெண்ணை ஐந்து
பேர் மணந்தார்கள்.அவர்களை எப்படி தந்தையே நான் நமது உறவுகள் என்று சொல்லிக்கொள்வது? இது நியாயமா தந்தையே?’ துரியோதனன் வினவினான்.மேலும்
துரியன், ‘என்னை குழந்தை பருவம் தொட்டே அஸ்த்தினாபுர இளவரசே
என்று சொல்லித்தானே வளர்த்தீர்கள்?
திருராஷ்ட்டரனோ,‘அவர்கள் தலையெழுத்து, அவர்களுக்கு விதி அப்படி உள்ளது’ என தன் மகனை
மட்டுப்படுத்துகிறான்.
‘அவர்கள் தலையெழுத்தை நாம் ஏன் மாற்ற
வேண்டும்,தந்தையே? என் தலை யெழுத்து
நான் அரண்மனையில் வாழ்ந்து விட்டு போகிறேன். அதுவல்ல என என்னையும் காட்டுக்குப் போக சொல்கின்றீரா?’ துரியோதனன் இடை மறித்தான்.
தந்தையின் வாதத்தில் நியாயம் இருப்பது போல் உணர்ந்த துரியோதனன், ஒரு கணம் யோசித்தான்,‘முடியாது தந்தையே,அந்த பீமனை நினைத்தால் என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை. அவனை
ஒழிப்பதே என் லட்சியம்.’ என அதிர்ந்து பேசினான்.தந்தையும்
தாயும் செய்வதறியாது இடிந்து போனார்கள்.
பீஷ்மனையும், விதுரனையும் அழைத்தான் திருதராஷ்ட்ரன்,
‘பிதாமகர் அஸ்த்தினாபுரத்தின் காவலர்,விதுரனோ
மதியுக மந்திரி உங்கள் இருவருக்கும் இல்லாத அக்கரை எனக்கு என்ன வந்துவிடப் போகிறது.அஸ்த்தினாபுர
அடுத்த இளவரசு பட்டம் யாருக்கு என நீங்கள் இருவரும் இணைந்து முடிவெடுங்கள்.நான்
கட்டுப்படுகிறேன்’ என கூறி முடித்தான்.
இருவரும் ஆளுக்கொரு முடிவெடுத்தார்கள். முதலில் பீஷ்மன் ஒரு
யோசனை கூறுகிறான், அதாதவது தர்மனை இளவரசனாகவும், துரியோதனனை மகா மந்திரியாகவும் நியமிக்கலாம் என கூறுகிறான்.
‘ஏன் துரியோதனனை இளவரசனாகவும், தர்மனை மகா மந்திரியாகவும் நியமித்தால் என்ன?’ என்று
திருதராஷ்ட்ரன் வினவுகிறான்.
அதுவும் சரிதான் என பீஷ்மன் கூறுகிறான், காந்தாரியும் அதுதான் சரி என்கிறாள்.ஆனால் விதுரனோ பாண்டவர்கள் இந்த
அமைப்புக்கு ஒத்துவர மாட்டார்கள்,என கூறுகிறான்.
அப்படியானால்,‘நீ என்ன திட்டம் வைத்திருக்கிறாய் கூறு
விதுரா?’ என பீஷ்மன் கேட்கிறான்.
சில கணம் யோசித்து,‘அஸ்த்தினாபுரத்தை இரண்டாக பிரித்து
ஆளுக்கொரு இளவரசு பட்டம் சூட்டினால் தான் இதற்கு தீரவு கிடைக்கும்’என விதுரன் சொல்லி முடிக்குமுன் பீஷ்மன் துடித்து ,வாளை
உருவினானான்,
வாளை விதுரன் கழுத்தில் வைத்து,‘இது போன்று அஸ்த்தினாபுரத்தை துண்டாட வேறு யாராவது கூறியிருந்தால்
இந்நேரம் அவன் தலை தரையில் உருண்டிருக்கும்.உன்னை வளர்த்த பாவத்திற்காக சும்மா
விடுகிறேன்.என் முகத்தில் முழிக்காதே விதுரா சென்றுவிடு இங்கிருந்து’
விதுரன் ஆடிப் போனான். தன்னை மன்னிக்கும் படி பீஷ்மன்
காலில் விழுந்து வணங்குகிறான். பீஷ்மன்,தன் முகத்தில் முழிக்கவேண்டாம் என முகத்தை
திருப்பிக்கொண்டான். அனைவரும் அரண்டு போய் விட்டனர். பீஷ்மன் செய்வதறியாது,
இந்த குழப்பத்திற்கு தீர்வுகாண,தன் தாய்
கங்கையிடம் செல்கிறான்.
கங்கையோ, ‘விதுரன் முடிவுதான் சரி’ என தாய் கூறுயதை,
திரும்பி வந்து விதுரனைப்பார்த்து, அவன்,யோசனையை ஏற்றுக்கொள்வதாக பீஷ்மன் தெறிவிக்கிறான்.
54-காண்டவ பிரஸ்த்தம்
No comments:
Post a Comment