Tuesday, January 10, 2017

அ.கா.வ.தொ-13



104-துர்ச்சாதனன் வதம்

16-ம் நாள்,துர்ச்சாதனனுக்கு மரணபயம் தொற்றிக் கொண்டது.பீமன் விரட்டுகிறான். 98 பேர் மாண்டு போனார்கள்,அடுத்து நீ தான் துர்ச்சாதனாஎல்லாவற்றிற்கும் மாமா சகுனியை நம்பியிருக்கும் துர்ச்சாதனனிடம் ஒடுகிறான், ‘மாமா காப்பாற்றுங்கள்,பீமனிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள்

சகுனி, ‘துர்ச்சாதனா உன்னை நீ தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அவனவன் தலை தப்பிக்க தவமேற்கொள்ள வேண்டியுள்ளது,துர்ச்சாதனாமேலும் சகுனி,

~கர்னனிடம் இருக்கும் திவ்விய அஸ்த்திரம் ஒன்று மட்டும் தான் உள்ளது.அதை சர்வ பராக்கிரமம் பொருந்திய அர்ச்சுனனை அழிக்க மட்டுமே பயன் படுத்த வேண்டும் என துரியோதனன் தீர்மானித்துள்ளான்.அதை இப்போது துர்ச்சாதனன் போன்றவர்களை காப்பாற்ற பயன் படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை.

பீமனண்ணா,என்னை மன்னித்து விடுங்கள்,எனக்கு உயிர்ப்பிச்சை தாருங்கள் என கெஞ்சுகிறான்,துர்ச்சாதனன்

அன்று அரசவையில் துரவுபதி தன்னை விட்டு விடும் படி கெஞ்சினாளே,அப்பொழுது நீ,இறக்கம் காட்ட மனமில்லா அரக்கனைப் போல் செயல்பட்டாய், இன்று எப்படிடா உன்னை மன்னிக்க முடியும்?’

துரவுபதியை அழைத்துவர தூதுவன் சென்றுவிட்டான்,துரவுபதியும் குந்தியும் அரண்மனையில் தனித்திருக்கின்றனர்.தூதுவன், ‘மகாராணி,தங்களை இளவரசர் பீமன் போர்க்களம் வரச்சொல்கிறார்

அத்தை, என் சபதம் நிறைவேறப் போகுது,என நினைக்கிறேன்

திரவுபதி ,சற்று யோசித்துப் பாரம்மா!,நீ குரு வம்சத்தின்,வம்சம் காக்க வந்தவள்,மகாராணி காந்தாரிக்கு தான் பெற்ற 98 குழந்தைகளை இழந்துவிட்டாள், பெற்றமனம் பற்றி எரிகிறது,அவள் பெற்ற பிள்ளைகள் ஒன்றுகூட அவள் பேச்சை கேட்க வில்லை!பாவம் அவள் என்ன செய்வாள்?’
(பக்கம்-245)
அத்தை ,என்னை மானபங்கப் படுத்தியவனை ரணகளத்தில் வதைப்பதில் எனக்கு மட்டும் என்ன மகிழ்ச்சி வந்துவிடப் போகிறது?’ மேலும் அவள் தொடர்கிறாள், ‘ஒரு பெண்ணின் மானம் தான் பெரிது என்பதை நிலை நாட்ட தருணம் இதுதானே அத்தை?’

சரிம்மா உன் இஷ்ட்டம்குந்தி திரவுபதியை வழி அனுப்பினாள். 
திரவுபதி தன் தலைவிரி கோலத்தோடு போர்க்களம் வந்து நிற்கிறாள்.

துர்ச்சாதனன் வீழ்த்தப்பட்டு மண்ணில் சாய்ந்துள்ளான்.இந்நேரத்தில் துரியோதனன்,கர்னன்,மற்றும் சகுனி சுற்றி நின்று வேடிக்கை மட்டுமே காணமுடிந்தது.

மறுபுறத்தில்,பாண்டவர்கள் மற்றும் கிருஷ்னன் என்ன நடக்கிறது என வேடிக்கை பார்க்கின்றனர்.

பீமன், ஒரு கொடிய மிருகம் மானை வேட்டையாடுவது போல் செயல்படுகிறான்.

திரவுபதியை அருகில் அழைத்த பீமன்,துச்சாதனன் மார்பைக் கிழித்து, சபதம் இட்டது போல்,உதிரத்தை தன் இரு கரங்களிலும் மார்பிலிருந்து அள்ளி தன் வாய் அருகே எடுத்துச் செல்லும் பீமனைப் பார்த்து திரவுபதி, ‘துர்ச்சாதனனும் உங்களுக்கு ஒரு சகோதரன் தானே?’
ஆ.க-

(பீமன்,ஒரு முரடன்,சுய சிந்தனையற்றவன்,அம்மா பேச்சை கேட்கவேண்டும்,அண்ணன் சொல்படி நடக்க வேண்டும் இப்படியாக பழகிக் கொண்டவன் அல்லது பழக்கப்படுத்தப்பட்டான் என கூறலாம்.இதற்கெல்லாம் தாய் குந்தியின் குடிபிறப்பைச் சார்ந்த குணங்கள்.

திரவுபதியும் ஒரு முரட்டு குணம் கொண்ட சத்ரியப்பெண்,பழி வாங்குதல்,அடக்கியாளுதல்,அநீதியைக் கண்டு கோபம் அடைதல்போன்ற சகோதரப் பாசம் நிறைந்த வைராக்கியம் கொண்டவள்.
                             
ஆ.க,தொ-

ரத்த சம்பந்தப்பட்ட உறவுகளை அழிக்கும் போது நெஞ்சில் ஈரம் தோன்றுகிறது.மனித மற்றும் விலங்குகள் ஆணாதிக்க மனப்பான்மை,கொண்டவை.ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமுகத்தில் உறவு முறைகளை வகுத்துக்கொண்டது ஆண்களும் பெண்களுமே.

ஒருத்திக்கு ஒருவன் இதுவே நாகரிகம்,ஒருவனுக்கு ஒருத்தி அல்ல ஒன்றுக்கு மேல், இதுவே உலகளாவிய நாகரிகமாகிவிட்டது.

இதிகாச நாயகிகளான குந்தி, அவள் மருமகள் திரவுபதி பெண்ணாதிக்க மனப்பான்மை கொண்டவர்கள்.இருவருமே ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை தேர்வு செய்து அவர்களோடு வாழ்ந்து பிள்ளைகளை பெற்றவர்கள்.ஆனால் அவர்களின் நடத்தைகளை விவரிக்கும் போது, கதை கேட்கும் மக்களிடம் ஒரு புனித தன்மை கொண்டவர்கள் போல் சித்தரிக்கப்பட்டனர்.

குந்தி, ஆண்களிடம் பணிவாக பழகுவது போல் மகாபாரதக் கதை முழுக்க விவரிக்கப் பட்டிருப்பாள்.யாதவ குலத்தின் சக்தி வாய்ந்த பெண்மணியாக திகழ்கிறாள்.***

105-குந்தி

ஆண், பெண்ணோடு வாழ்வதற்கும்,பெண், ஆணோடு வாழ்வதற்கும் விதிமுறைகள் வகுக்கப்பட்டன.யாதவ குலத்தைச்சார்ந்த குந்திக்கு ஆண்களை அடக்கியாளும் தன்மை கொண்டவள் என்பதை நாசுக்காக விவரிக்கபட்டிருப்பாள்.அதாவது அவளின் அடங்கா காமத்திற்கு திருமணம் புரியும் வரை காத்திருக்க முடியவில்லை என்பதற்கு சான்று,அவள் கன்னியாக இருக்கும் போதே கர்னனை பெற்றாள்,என்பதே!
ஆனால் அவனை பகிரங்கமாக வளர்க்க முடியாத சூழல்,அதாவது சமூகத்தில் நிலவி வந்த ஏச்சுக்கும் பேச்சுக்கும் ,என்னதான் பெண்ணாதிக்க மன நிலை கொண்டவளாக இருந்தாலும் கர்னனை வளர்க்க முடியாமல் போனதற்கு அன்று நிலவி வந்த குடும்ப தர்ம நிலைதான்.அதென்ன குடும்ப தர்ம நிலை?மனித குல நாகரிகம்தான்.

ஒருவனுக்கு ஒருத்தி,ஒருத்திக்கு ஒருவன் எனும் கோட்பாடுதான்.கணவனை இழந்தவளுக்கு காட்டுதல் இல்.மனைவியை இழந்தவனுக்கு மட்டும் மறுமணம்.இந்த ஆணாதிக்க சமுகமாக இருந்ததை பெண்ணாதிக்க சமுகமாக மாற்றியவள் இந்த குந்தி.

குந்து-குந்த்-குண்டி-குந்தி-குவிந்த இனப்பெருக்க உடலுருப்பு கொண்டவள்- இப்படி பெண்ணினத்திற்கே உரிய பிறப்புருப்பை நினைவுபடுத்தும் பேர்தான் பாண்டுவின் மனைவி குந்தி,அஸ்த்தினாபுரத்து ராஜமாதா!.பெண்ணாதிக்கத்தை நிலை நாட்ட அவதரித்த திரவுபதியின் முன்னோடி!

மனம் போல் மாங்கல்யம் என்பதற்கு ஏற்ப குந்தியின் பல்லுடல் பரிமாற்ற குணம் கொண்ட -விபச்சார எண்ணம் கொண்ட--பெண்ணை குடும்பம் நடத்த தன்னை தகுதி யாக்கிக்கொண்ட கதைதான் மந்திரம் சபித்து மாந்தர்களை பெற்றாள்,என நாம் கதை கேட்டோம்.

பாண்டுவிற்கு நிஜமாகவே மேக நோய் .மேக நோய் என்றால் இக்காலத்தில் நீரிழிவு நோய்க்கு சமம் ,அதற்கு பாண்டு நோய் என்றே பின்னாளில் மக்கள் அழைத்தனர்.குந்தியைப் போன்ற அதிகாரத்தில் இருக்கும் பெண்ணுக்கு தன் பேச்சாற்றலால் எந்த ஒரு ஆணையும் அடிமைப்படுத்த முடியும்.திருமணத்திற்கு முன் கன்னியாக இருக்கும்  போது ஒரு பெண்  தவறு இழைப்பது ஒரு உலக அதிசயமல்ல.

அரண்மனை வாசியான குந்திக்கு தன் உடலியல் மாற்றங்களை பாதுகாக்க அரண்மனையில் போதிய வசதிகளை பெற்றவள்.திருமணப்பேச்சை பெற்றவர்கள் ஆரம்பிக்கும் முன் தான் கர்பமான ரகசியத்தை தான் மட்டுமே காத்து அதை பிள்ளையாக பெற்றெடுத்து ஆற்றில் அந்த பிள்ளையை மிதக்க விட்டது தான் மட்டுமே அறிந்த ரகசியம் என நினைத்திருந்தாள்.

யது குல மன்னனும்,பெண்களின் ரகசியத் தலைவனுமான கிருஷ்னன், குந்தியின் தோழி மூலம் குந்தியின் நடத்தைகளை அறிந்தவன்.அப்படி ஆற்றில் விடப்பட்ட அந்த குழந்தை அஸ்த்தினாபுரம் அரண்மனையின் தேரோட்டியின் வீட்டில் கர்னனாக வளர்வதை அறிந்தவன்.


                          106-கர்னன்

முரட்டு துரியோதனனுக்கு,அரண்மனையில் அனாதையாக வளரும் கர்னனின் சாதுர்யம் மிகவும் பிடித்துப்போய் விட்டது.பிள்ளை பருவத்தில் துடுக்குத்தனமாக எதையாவது செய்து பெரியவர்களிடத்தில் வசை வாங்கும் போது கர்னனின் ஆறுதல் பேச்சு துரியனை மன மாற்றமடையச் செய்தது.
                                
அரண்மனை வாரிசுகளான கவுரவர்கள்,துரோணரின் குருகுலத்தில் பெற்ற வித்தைகளை தானும் கற்க வேண்டும் எனும் சத்ரிய உத்வேகம் கர்னனுக்கு ரத்தத்தில் ஊரிய குணமாகிவிட்டது.

குருகுலத்தில் இட ஒதுக்கீடு தர மறுத்த துரோணரிடம்,கர்னன், ‘உங்கள் தந்தையின் குரு குல வாசியாக  நான் சேர்ந்து ராஜ கலையான தனுர் வித்தையை கற்று தேறுவேன்என சபதமிட்டான்.அவ்வாறே பரசுராமனின் குருகுலத்தில் பிராமணவேடமிட்டு ஆயகலைகளையும் கற்றான்.

திவ்ய அஸ்த்திரங்களை பயன் படுத்தும் கலையில் அர்ச்சுனன் நன்கு தேர்ச்சி பெற்றவன் என்பதை அறிந்த துரியன்,அதை கற்கும் திறமை நுணுக்கம் யாவும் கர்னனிடம் மட்டுமே உண்டு என்பதை உணர்ந்துஅதற்கான சூழலை கர்ன்னனுக்கு துரியன் ஏற்படுத்தி தருகிறான்.

புத்தி கூர்மை உள்ள பாண்டவர்களை அழிக்க கர்னன் மட்டுமே தனக்கு உதவக்கூடியவன் என கணக்கு போட்டான் துரியன்.இதை நன்கு அறிந்த கிருஷ்னன் குந்தியிடம் , ‘நீங்கள்,கன்னியாக இருந்த போது பெற்ற பிள்ளைதான் கர்னன்என்ற போது குந்திக்கு சப்த நாடியும் அடங்கிவிட்டது.

கிருஷ்னா!,கர்னன் என் பிள்ளை என ஊருக்கு எப்படி அறியச் செய்வேன்?’

அத்தை! நீங்கள் பெண் இனத்தின் சாணக்கியவாதி.சமயோசிதம் அறிந்தவர்.ஒரு யாதார்த்தவாதி.எந்த நேரத்தில் என்ன பேசவேண்டும்,யாரிடம் என்ன ரகசியம் எப்பொழுது வெளிப்படுத்தவேண்டும் என நன்கு தெறிந்தவர்.ஆணின் பலவீனம் என்ன என நன்கு அறிந்தவர்.

இப்பொழுது நான் என்ன செய்யவேண்டும்?

~கர்னனை நீங்கள் ,தங்கள் மகன் நீ தான் என உணரச் செய்தாலும் தற்பொழுது உள்ள சூழலில் பாண்டவர்கள் பக்கம் வரமாட்டான்.கர்னனிடம் உள்ள கவச குண்டலத்தை இந்திரன் யாசித்துப்பெற்றான்.உடல் பலம் இழந்த நிலையில்,அவனிடம் திவ்ய அஸ்த்திரமான நாக அஸ்த்திரம் உள்ளது .அதை நீ யாசகமாக கேட்டாலும் தரமாட்டான்,துரியனுக்காக போரில் அர்ச்சுனனை கொல்வதே கர்னனின் லட்சியம்.போரின் இறுதி கட்டத்தில் ,அந்த அஸ்த்திரத்தை அர்ச்சுனனின் ஒரு முறைக்குமேல் பிரயோகம் செய்யவேண்டாம் என சத்தியம் வாங்கி வாருங்கள்,அது போதும!’என சொல்லியனுப்புகிறான்.

ஆ.க-

இங்கே குந்நியின் சாதுரியத்தால் தான் பெற்ற (1+3+2= 6)4 பிள்ளைகளில் முதல் மகன் சமுக நீதிக்கு புறம்பாக பிறந்தவன்,சமுக நீதிக்காக,சமுக அந்தஸ்த்துக்காக பெற்ற மகனையே துறக்கவும் குந்தி தயாராகிறாள்.

இங்கே பெண் தீர்மானிக்கிறாள்.அதாவது பெண் ஆதிக்கம் செலுத்துகிறாள்.இது மேலோட்டமாக தெரியும் மகாபாரதக் கதை.ஆனால் இங்கே ஒரு இன அழிப்புக்கே திட்டம் தீட்டப்படுகிறது.அப்பொழுது பரத தேசத்தின் (இந்தியாவின்) பலம் வாய்ந்த மனித கூட்டம் சத்ரியர்களே.

ஆரியர்கள் ,ஐரோப்பா கண்டத்தில் யூதர்களோடு போரிட்டு ஆசிய கண்டத்தில் பரவலாக புலம் பெயர்ந்தனர்,அப்போது ஆப்கன் எல்லையில் அமைந்துள்ள கணவாய்கள் மூலம் நுழைந்து போது அவர்கள் கண்ட மக்கள் தான் சத்ரியர்கள்.சாலிவாகனர்-ரகுவம்சத்தை சார்ந்த தமிழர்கள்  எனவும் அழைக்கப்படுவர்.
இவர்களில் ஒரு பிரிவினர் ஒடுக்கப்பட்ட மக்களாகவும் ,பண்பட்ட மனிதர்களாகவும் காணப்பட்டனர்.இவர்கள் ஆரியர்களை அன்போடு வரவேற்றனர்.

இதில் சத்ரியர்கள் மாறுபட்டனர்.அன்னியமக்களை வெறுத்தனர் இந்திய மண்ணில் இவர்கள் கால் பதியக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.

இஷ்வாகு மன்னன் கல்மாஷாபாதுவுக்குப் பிள்ளைப் பேறு இல்லை.தன் மனைவி தமயந்தியை வசிஷ்ட்டரிடம் அனுப்பி வைத்தான்.இவர்களுக்கு பிறந்தவன் தான் அஸ்வகன்.

இதே போன்ற நிலை,இதே போன்ற குலவழக்காக பின்னாளில் விசித்திர வீரனின் மனைவிகள் கையறு நிலையில்,வியாசரிடம் அனுப்பி வாரிசுகளைப் பெற்றனர்.

குந்தி,பாண்டுவை மணந்து அஸ்தினாபுரம் வந்தவுடன் இதுபோன்ற கதைகளை நிறைய தெரிந்துகொண்டாள்.காந்தாரிக்கு மாமியார்,வேறு,குந்திக்கு மாமியார் வேறு ஆனால் ஒரே தந்தை(வியாசர்)குந்தியின் மச்சினன்,மீனவன்!
                                   
விதுரன் குந்தியின் மாமியாரின் தாதிக்கு(வேலைக் காரிக்கு)ம் அரண்மனை பிராமணனுக்கும் பிறந்தவன்.இதனால் விதுரனுக்கு  பிறப்பில் தாழ்ச்சியுற்றவன் என்பதால் சம சொத்துரிமை மறுக்கப்பட்டு வந்தது.

அதிகாரம் கூட மறுக்கப்பட்டு,அவன் புத்தி கூர்மையை (பிராமண வித்து என்பதால்)பாராட்டி அஸ்த்தினாபுரத்தின் மகா மந்திரி பதவி வழங்கப்பட்டது.

அஸ்த்தினாபுரம் பெண்ணாதிக்கமுள்ள ஒரு சமஸ்த்தானம் என்பதை குந்தியின் மாமியாரான சத்யவதி அரண்மனையின் சக்திவாயந்த பெண்ணாக இருந்ததை குந்தி உணர்ந்தாள்.

ஆ.க-

(நிலத்தில் வாழும் மக்களும்,கடலில் மீனை நம்பி வாழ்க்கை நடத்தும்(அதே மீனை சத்ரியர்களுக்கு உணவாக்கி,தாங்களும் உண்பதால்)மக்களும் சத்ரியர்களே! இரண்டு இன மக்களும் தங்கள் வாழ்வாதாரங்களுக்கு தங்கள் கைகளையே மூலதனமாக்கி வாழும் சயமரியாதை உணர்வுள்ள மக்கள்.இன்று வரை இதே நிலைதான்.இந்த இரண்டு நிலை வெய்யிலாளி (நீர்,மற்றும் நிலம் சார்ந்த) மக்கள் சுயமரியாதை உள்ளவர்கள் தான்,ஆனால் சுயசிந்தனை அற்றவர்கள்.

இதனை நன்கு உணர்ந்த ஆரியர்கள் கடவுள் வழிபாடு எனும் அருவ வழி பாட்டை புகுத்தினார்கள் .இதன் தாக்கம் என்ன வென்றால் இந்த இரு குல பெண்களும் தங்கள் குடும்ப ஆண்களை மூளைச்சலவை செய்து அவர்கள் உழைப்பின் மூலம் வரும் வருவாயை  ஆரியர்களுக்கு அர்ப்பணித்தனர்.இன்றும் இது தொடர்கிறது.)



ஆ.க-

குந்தியின் பெண்ணாதிக்க குணம் என்பது, பாண்டுவைப் போன்ற கணவனைஅடைந்த பெண்கள் தங்கள் குலம் தழைக்கவேண்டும் எனும் எண்ணத்தில் கணவனின் ஒப்புதலோடு பிற ஆண்களை நாடி
தங்கள் உடல் இச்சையை தணித்துள்ளார்கள்.

(படிக்க,சாகித்ய அகாடெமி பரிசுபெற்ற தெலுகு மொழிபெயர்ப்பு நூல், திரவுபதிபக்கம் 194,ஆசிரியர்-யார்லகட்ட லட்சுமி பிரசாத்(தமிழ் மொழி பெயர்ப்பு-இளம் பாரதி)

பாண்டவர்களோடு திரவுபதிக்கு முதல் இரவு,தர்மன் முதலாக,அடுத்தடுத்து 5 நாட்கள்  முடிந்து,

ஆறாம் நாள் குந்தி தன் மருமகளைப்பார்த்து, ‘திரவுபதி, என்  மகன்கள் உன்னை நல்லவிதமாக பார்த்துக் கொண்டார்கள், அல்லவா?’
குந்தியின் கேள்வி திரவுபதியை நாணமுறச் செய்தது.அத்தை வெளிப்படையாக பேசுவதைப்பார்த்து, தன் தோழியிடம் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளும் பாங்கை உணர்ந்தாள்.

அத்தை!,தாங்களும் என்னைப் போன்ற அனுபவங்களைப் பெற்றவர்தானே?’

உனக்கு சமுகப் பாதுகாப்போடு முதலிரவு நடந்தது.
ஆனால் எனக்கு இதுபோன்று ஒரு பாதுகாப்பான உடலுறவு எந்த ஆணிடம் இருந்தும் நான் பெறவில்லை,அப்போதைய சூழல் எனக்கு ஒரு பயம்கலந்த இன்பச்சுவையாக இருந்தது.

நான் உன் மாமனார் பாண்டுவை கரம் பிடித்து வந்த நாளிலிருந்து,அஸ்த்தினாபுரத்தில் தனித்து விடப்பட்டேன்.எங்கள் இருவருக்கும் முதலிரவு என்று ஒன்று நடந்ததே இல்லை.நான் வாழ வந்த நாள் அன்றே அவர்,அஸ்வமேத யாகம் சென்றுவிட்டார்.பல நாட்கள் சென்று திரும்பிய உன் மாமனார் மாத்திரி தேசத்தை வென்றதற்காக மாத்திரி  இளவரசியை கரம் பிடித்து வந்தார்.சத்ரிய குலத்தில் இதுவெல்லாம் சாதாரணம் என்றிருந்தேன்.

மேலும் பாண்டுவைப்பார்த்து கூறுகிறாள், ‘எனக்கே இங்கு ஒன்றும் நடக்கவில்லை,இதில் இன்னொருத்தியை கொண்டு வந்துவிட்டீர்கள்,இப்பொழுது என்ன செய்யப் போகின்றீர்?’

நிலை குலைந்து போன உன் மாமனார்,என்னை எப்போதும் குறுகுறு என பார்த்துக் கொண்டிருக்கும் உத்தால முனிவனைப் பார்த்து அவனை புணரும்படி ஏவினார்.**

இது தவறில்லையா?’-திரவுபதி

‘வாரிசு வேண்டி ரிஷிகளை புணர்வது நம் குல வழக்குதானே?’-குந்தி,‘புரிந்து கொண்ட நான் புகுந்து விளையாடினேன்’

~அஸ்த்தினாபுரத்தில் உன் பெரிய மாமனார் அரியணை வேண்டி அடம்பிடித்தார்,அண்ணனே நாட்டை ஆளட்டும் என    காரணம் சொல்லி என்னையும் மாத்ரியையும் அழைத்துக் கொண்டு கானகம் சென்றார்.கானகத்தில் மூன்று பிள்ளைகளைப் பெற்றேன்,இதை கண்ட மாத்ரி,
                                   
நீ மட்டும் பிள்ளைகளை பெற்றுக்கொண்டே இருக்கின்றாய் ,எனக்கும் ஒரு வழி சொல்என்றாள்.அதன் பிறகு நகுலன் சகாதேவன் பிறந்தார்கள்.ஐவருக்கும் ஒரே தந்தை தான் ஆனால் ஐந்து பிள்ளைகளும் முனிவர் சொல்லிக் கொடுத்த மந்திரங்கள் மூலம் பிறந்தார்கள் என ஊருக்கு தெரியப்படுத்தினோம்.

மாத்ரியை என்னால் திருப்தி படுத்தவே முடியவில்லை.என்னை என் குலத்தின்(யாதவ குலம்) பேரைச் சொல்லியே இழிவாக பேசுவாள்.கட்டிய கணவனை புணராமல் கண்டவனை புணர்வது சத்ரிய தர்மமல்ல, என்பாள்

ஒரு நாள் குழந்தைகள் ஐவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்,நான் சமயலில் இருந்தேன்,தனிமையில் அழைத்துச் சென்று,என் கணவர் பாண்டுவை மாத்ரி தன் இச்சைக்கு பணியவைத்தாள்.பாண்டு மாண்டு போனார்,எனக்கு என் பிள்ளைகள் அப்பா மூச்சடைந்து கிடக்கிறார் என தகவல் சொன்னார்கள்.நான் ஓடோடி போய் பார்த்தேன்,மாத்ரியைப் பார்த்து,

என்ன காரியம் செய்தாய்?’

இருவருமே நிலை மறந்தோம் அக்கா என்ன செய்வதென்று தெரியாமல் இப்படி நடந்துவிட்டது,என்னை மன்னித்து விடுங்கள் அக்கா.மேலும் கூறினாள்,

அக்கா,உன் பிள்ளகளை நான் என் பிள்ளைகளாக நினைக்க மனம் மறுக்கிறது,நான் உடன் கட்டை ஏறுகிறேன்,நீங்கள் என் குழந்தைகளை (நகுலன்,சகாதேவன்)பார்த்துக் கொள்ளுங்கள்.
வேண்டாம் நான் தான் மூத்தவள் எனக்குத்தான் உடன் கட்டை ஏறும் அதிகாரம் உள்ளது.நான் போகிறேன் நீ பிள்ளைகளை பார்த்துக்கொள்.

மாத்ரி என் காலில் விழுந்து மன்றாடினாள், ‘என்னால் இந்த வாழ்க்கை வாழமுடியாது அக்கா!, என்னை மன்னித்து விடுங்கள்,நான் போகிறேன் என தன்னை மாய்த்துக் கொண்டாள்.
       ******************************
திரவுபதியின் பெண்ணாதிக்கம் மகாபாரத கதையின் முக்கிய கருவாகும்.தன் மாமியார் குந்தியின் சாகசங்கள்,ஆண்களை  தன் உடலியல் இன்பங்களுக்கு எப்படி பயன் படுத்தினாள்,பிள்ளைகளை வளர்த்து தன் இன பாதுகாப்பிற்கு பாண்டவர்களை எவ்வாறு பயன்படுத்தினாள்,இதற்கு யது குல மன்னனான கிருஷ்னனை எப்படி பயன் படுத்திக்கொண்டாள் என்பதை தமிழில் எந்த நூலும் விவரிக்கவில்லை.  எங்கும் விவரிக்கப்படவில்லை.காரணம்,இந்த புராணங்கள் எல்லாம் வடமொழியில் எழுதப்பட்டது,

தமிழும் வடமொழியும் கற்றவர்கள் பிரமணர்களே,தமிழ் நாட்டில் புரோகிதம் செய்து பிழைப்பை நடத்தவே பிரமணர்கள் தமிழைக் கற்றார்கள்.இதன் விளைவாக தங்கள் பிழைப்புக்கு பங்கம் வரக்கூடாது,அதாவது வடமொழி புராணங்களை உண்மை உருவில் மொழி பெயர்த்தால் தமிழ் தெரிந்த

(தமிழர்கள் சிந்தனை மிக்கவர்கள்,படித்துவிட்டு கேள்வி கேட்பார்கள்)

புலவர்களுக்கு பதில் கூற முடியாது எனவே தமிழ் படுத்தும் போது கதாபாத்திங்கள், புனித தன்மை கொண்டவர்களாக பார்த்துக்கொண்டனர்,இதன் விளைவாக ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்களுக்கு உண்மை நிலை தெரியாமல் போய்விட்டது.

மொழி மாற்றம் அடைந்த மற்ற இனங்களான இடையர்,மற்றும் பிராமணர்கள் இந்தியா முழுவதும் உறவுமுறைகளை பாது காத்தனர்,இன்றும் இந்நிலை நீடிக்கிறது.
இடையரும்,பிராமணரும் பல மொழிகளை,தாய் மொழியாக கொண்டவர்கள் மட்டுமல்ல அவர்கள் முன்னோர்கள் யாவரையும் நினைவிற் கொள்ளும் விதமாக ஓலைச்சுவடிகளில் எழுதி பாதுகாத்தனர்.

படிப்பறிவற்ற சத்ரியர்களுக்கு (வெய்யிலாளி சமுகம்) முன்னோர்களை நினைவுபடுத்திக் கொள்ளும் ஆற்றல் இல்லாமல் போய்விட்டது.
பல மொழிகளில் சத்ரியர்கள் வாழ்ந்தனர்,இன்றும் வாழ்கின்றனர்.ஆகவே சத்ரியர்கள் தமிழுக்கு மட்டுமே சொந்தக்காரர்கள் எனும் மாயவலை விரிக்கப்பட்டது,அப்பொழுது மயங்கிய தமிழன் இன்றும் தெளிவு பெறவில்லை.என்பதுதான் வேதனையான செய்தி.

தமிழர்களான,சத்ரியர்கள் மட்டும் தனிமைப் படுத்தப்படவில்லை,பிற இந்திய மொழிகள் பேசும் சத்ரியர்களும் தனிமைப்படுத்த்தப்பட்டனர்.

எனினும் இன்றய கால சுழலுக்கு ஜாதியங்கள் மீண்டும் தலை எடுக்க கூடாது எனும் கோணத்தில் புராணங்களில் அத்தகைய வரிகளை பின்னாளில் நீக்கப்பட்டிருக்க வேண்டும்.

107-திரவுபதி

மாமியார் குந்தியின் ஆண்களுக்கு,அடங்கிப்போகும் பெண்ணாதிக்க குணங்களால் ,திரவபதி மாறுபட்ட சிந்தனை கொண்டாள்.ஆண்கள் அடங்குவதும்,பதுங்குவதும்,பெண்களை அனுபவிப்பதற்கே என்பதை நன்கு உணர்ந்த துரவுபதி,காலத்திற்கும் பெண்களை தெய்வமாக வணங்கவேண்டும் என வலியுறுத்தும் விதமாக,

ஒவ்வொரு குடும்பத்திலும் தான் பூஜிக்கப்படவேண்டியவளாக மாற அவள் வகுத்த யுக்திதான்,’துர்ச்சாதன வதம்
தன்னையே சுற்றிவரும் பீமனை இதற்கு பயன்படுத்திக்கொண்டாள்.அர்ச்சுனன் போட்டியில் வென்று தன்னை கரம் பிடித்ததும்,அவன் மீது தீரா காதல் கொண்டிருந்தாள்.

ஆனால் அவன் பெண்கள்மோகம் அதிகம் கொண்டதால்,ஆண்களின் சாகச புத்திக்கு பாடம் புகட்டவே இந்த பழி வாங்கும் படலத்தை கையாண்டாள்.பகை கொள்வதும்,பழி வாங்குவதும்,சத்ரிய பெண்ணின் குணம் என்பதை மகாபாரத கதையின் மூலம் உலகுக்கு நிலைநாட்டியுள்ளாள்.     

ஆண்கள், பெண்களை போகப்பொருளாகவும்,ஆண் நினைக்கும் போதெல்லாம் பெண் தன்னை சமர்ப்பணம் செய்யவேண்டும் எனும் ஆணாதிக்கத்தை அடக்குவேன் என தன்னை சபை நடுவில் மானபங்கப்பட்ட போது  சபதமிட்டாள், அதை நிறைவேற்றுவதில் அவள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம்.

ஒரு கட்டத்தில் கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சமாதான முயற்சிகள் நடந்தபோது ,அர்ச்சுனன்,மற்றும் கிருஷ்னனை துச்சமாக பேசினாள்.உங்களை பெற்றது ஒரு பெண்,ஆனால் பெண்ணோடு பிறந்திருந்தால் அதாவது உங்களுக்கு தங்கையோ அல்லது தமக்கையை உடன் பிறந்திருந்தால் ,அவளுக்கு என்னைப்போன்ற மானபங்கப்படும் நிலை வந்திருந்தால் உங்களுக்கு என் நிலை புரியும் ,நீங்கள்  பெண்ணின் மனதை புரிந்தவர்களாக எப்படி இருக்கமுடியும்?

நீங்களெல்லாம் நாளுக்கு ஒரு பெண் தேடிச் செல்லும் பேடிகள் தானே?இதைக்கேட்ட கிருஷ்னனுக்கு கோபம் வந்துவிட்டது.

திரவுபதி! ஒரு பெண்ணுக்கு இது மாதிரியான பழி வாங்கும் குணம் கூடாது,அடக்கம்,விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பொருமை ,சகிப்புத்தன்மை இவைதான் பெண்ணுக்கு அணிகலன்கள்.ரத்தவெறி கொண்ட பெண்களை இந்த உலகம் தாங்காது.மேலும் கிருஷ்னன் ,
                                   
உனக்கு மானபங்கம் ஏற்பட்ட நாளிலேயே,அவனை கொன்று உன் பழியை தீர்திருக்கலாம்,அன்று சும்மா இருந்துவிட்டு இன்று இரு நாடுகளுக்கும் போர் நடக்க வேண்டும் என துடிக்கிறாய்,உன் பழி வாங்கும் எண்ணத்தால் எத்தனை அப்பாவிகள் உயிர் துறக்கப்போகிறார்கள் தெரியுமா? அதை தவிர்க்க நான் படும்பாடு எனக்குத்தான் தெரியும்,உனக்கு உன் மானமே பெருசாக தெரிகிறது.

மகாபாரத போர்நடக்க மூலகாரணமே இரண்டு பெண்கள்தான்,குந்தியும்,திரவுபதியும்.குந்திக்கு ராஜமாதா அங்கீகாரம் வேண்டும்,அதாவது பதவி ஆசை,அது ஆண்களுக்கு மட்டுமே உடையதா என்ன?பெண்களும் ஆளப்பிறந்தவர்களே!குந்தி அடங்கிப்போயிருந்தால் அல்லது பிள்ளைகளை போருக்கு தூண்டிவிடாமல் இருந்திருந்தால் போர் நடந்திருக்காது.இங்கே பெண் ஆதிக்கம் செலுத்துகிறாள்.

ஒரு பெண் பல ஆண்களோடு சங்கமிக்கும் கலாச்சாரம் வடக்கு குருதேசத்தில் உள்ளது.குந்தி தன் மருமகளுக்கு சொல்லச்சொல்ல,திரவுபதிக்கு ஆண்களோடு சேரும் ஆர்வம் அதிகமாகிவிட்டது,தனது அத்தையே இதற்கு வழி காட்டி என்பதில் திரவுபதி ஆனந்தம் கொண்டாள்.
********
**
குந்தி மேலும் தொடர்கிறாள், ~ஸ்வேதகேது எனும் அரசன், இது தர்மத்திற்கு எதிரானது என பொண்களுக்கு என கட்டுப்பாடுகளை விதித்து சம்சார வாழ்க்கைக்கு வித்திட்டான்.

ஸ்வேதகேதுவா-யார் அவர்? என திரவுபதி கேட்டாள்.

ஸ்வேதகேதுவின் கதையை என் கணவர் என்னிடம் சொல்லி மற்றவர்களுடன் சங்கமிப்பதற்கு என்ன தூண்டினார்.உத்தாலகர் எனும் முனிவரின் மகன் ஸ்வேதகேது.ஒரு நாள் ஒரு பிராமணன் உத்தாலகரின் கண்ணெதிரிலேயே அவருடைய மனைவியை இழுத்துக்கொண்டு போய் சுகித்தான்.

ஸ்வேதகேது இதை கவனித்தான்.அப்பா இதென்ன அநியாயம் என் அம்மாவுடன் அன்னியன் சங்கமிப்பதை நீங்கள் ஏன் கண்டும் காணாமல் இருக்கின்றீர்?
மகனே!இது சனாதன தர்ம வழி முறை !மிருகங்கள் போல மனிதர்களும் ஒருவரை மற்றொருவர் விரும்பினால் சுகம் அனுபவிக்கலாம், இதில் நீ கோபம் கொள்ளாதே மகனே!
                                
கணவனின் ஒப்புதலோடு மனைவி கண்டவனை புணர்தல் ஒன்றும் பாவகரமான செயல் அல்ல,என ஒரு நியதியை வகுத்துக்கொண்டனர்.

வாரிசே இல்லாத இஷ்வாகு மன்னன் தானே தன் மனைவியான தமயந்தியை வசிஷ்ட்டரிடம் அனுப்பி வாரிசான அஸ்வகன் பிறந்தான் .ஆண்களே சட்டங்களை வகுக்கின்றனர் ,

பின்னர் அவர்களே சட்டத்தை மீறும் செயலாக பெண்களை பயன் படுத்துகின்றனர்.

உன் மாமனார் பாண்டு,என்னை எப்பொழுதும் கவனித்துக்கொண்டிருக்கும் ஒரு பிராமணனை புணரும்படி தூண்டினார்.புராணங்களில் வரும் பெண் கதாபாத்ரங்கள் ஆண்களை வழிபடும் அல்லது புகழ்பாடும் குணங்களை பெற்றவர்களாக  சித்தரிக்கபட்டிருப்பர்.இது ஆண்களின் கற்பனைக்கு உட்பட்டது.

பதவி போலவே மானமும் பெண்ணுக்கு தேவை என வலியுறுத்திய இரண்டாம் பெண் திரவுபதி.திரவுபதி மானம் போக காரணமானவர்களே அவளுடைய கணவன் மார்கள்தான் அன்றி நாம் நினைப்பது போல் துரியன்கள் அல்ல.


108-திரவுபதி சபதம் நிறைவேற்றம்
                            (பக்கம் 234)
போர்க்களத்திலிருந்து தூதுவன் குந்தியும்,பாஞ்சாலியும் இருக்கும் இடம் தேடி வருகின்றான்.அத்தை, என்றைக்கு என் கூந்தலைப்பற்றி இழுத்தானோ,நான் கட்டிய சேலையை உருவினானோ அன்றைக்கே அவனை கொன்றிருக்க வேண்டும்,என் கணவர்கள் உடலில் உண்மையில் சத்ரிய ரத்தம் ஓடியிருந்தால் அன்றைக்கே அவனை தீர்த்து கட்டியிருப்பார்கள்,

என் கணவர்களின் உடலில் உங்கள்(யாதவ இன)ரத்தம் தானே ஓடுகிறது?.அதனால் தான் என் சபதம் நிறைவேற இத்தனை நாட்கள் ஆனது.மேலும் திரவுபதி கூறுகிறாள்,

ஒரு யாதவப் பெண்,தனக்கு அநீதி இழைத்த ஆண்மகனை எதிர்த்து சாபம்தான் கொடுக்க முடியும்,ஆனால் ஒரு சத்ரியபெண் அதே ஆண்மகனை எதிர்த்து சபதம் இட்டு அழிக்க முடியும்.
                           
நான் குரு வம்சத்திற்கு வாழ வந்தவள் தான்,ஆனால் வாழ வந்தவளின் மானத்துக்கே பங்கம் இழைக்கப்பட்டதால், குல மகளின் கோரமுகத்தை கொடியவர்களுக்கு காட்டியே தீருவேன்,அது தான் இன்று போர்க்களத்தில் நடக்க போகிறது

குந்தியும்,திரவுபதியும் பெண்ணாதிக்கத்தை நிலை நாட்ட வந்த பெண்மணிகள்.இருவரும் தத்தமது எல்லைகளை உணர்ந்தவர்கள்.குந்தியும் தன்னிலை உணர்ந்து,தன் மருமகளை அவளின் சபதம் நிறைவேற போர்க்களம் அனுப்புகிறாள். (பா.248)

ஆ.க-

(ஒரு மனிதனுக்கு குடிப்பழக்கமும்,சூதாட்டமும் ஒருவித மன நோய், அல்லது மன அரிப்பு.இதில் ஆண்களின் ஆதிக்கமே அதிகம் உள்ளது.அதேபோல்,ஒரு பெண்ணுக்கு தன் மானத்தை காப்பதும்,தன் குடும்பத்தை  காக்கும் ஆதிக்க உணர்வேஅதிகம் இருக்கும்.

உடலளவில் பெண் ,ஆணைவிட பலவீனமாமவள் ,ஆனால் ஆணின் பலவீனங்களை புரிந்தவள்.எனவே வைராக்கியம் கொண்ட பெண், ஆணை ஆதிக்கம் செலுத்த இயலும்.கணவனின் இணைதான் மனைவியே தவிர மனைவி,கணவனின் உடைமை அன்று.


நாகரிகம் வளரும் அந்த காலத்தில் மனைவியை எங்கு வைத்து அழகுப்பார்ப்பது என தெரியாத கட்டத்தில் மனைவியை தவறாக கணக்குப் போட்டான் தர்மன்,தர்மனுக்கு திரவுபதி மேல் முழு அன்பு செலுத்த முடியவில்லை,காரணம் அவள் அர்ச்சுனன் மீதே அன்பு செலுத்தியவள்,ஐவர்மீதும் அவளால் சமமாக அன்பு செலுத்த இயல வில்லை என்பதை நன்கு உணர்ந்தவன் தர்மன்.பின்னாளில் திரவுபதி இறக்கும் தருவாயில் தர்மன் பீமனிடம் சொன்ன வார்த்தைகள் இவை.

எனவே மனைவிகூட ஒருவனின் உடைமைதானே.சூதாட்டத்தில் ஒரு மனிதன் தன் உடைமைகளை மட்டுமே பணையம் வைக்க முடியும் எனும் விதியில் மனைவியும் ஒரு மனிதனின் உடைமையே,எனும் சகுனியின் வாதத்தில் உண்மை இருப்பதாக
தன் தம்பிகளை நம்ப வைத்து திரவுபதியை நயவஞ்சகமாக சூதாட்டத்தில் பணையம் வைத்தான் தர்மன்,இதை நன்கு உணர்ந்த திரவுபதி,பெண்ணும் ஆதிக்க மனப்பான்மை கொண்டவள்தான் என நிருபித்தாள்,அதற்கு பீமனை துணை கொண்டாள்.அர்ச்சுனன் ஆற்றல் மிக்கவன் தான் ஆனால் அவன் பெண் பித்தன் என்பதில் திரவபதிக்கு ஒரு சறுக்கல்.

பெண்ணைக் கண்டால் ஆணுக்கு மரியாதை உண்டாகவேண்டும், அதற்கு பெண்மீது பக்தி உண்டாக வேண்டும் ,அதற்கு பயம் உற்பத்தி செய்யப்பட வேண்டும் .பயம் உற்பத்தி செய்யும் பெண் எப்படி இருக்க வேண்டும் தோற்றத்தில் ஒரு பெண் ஆணுக்கு  பயங்கரமாக காட்சி அளிக்க வேண்டும்.   காலத்துக்கும் தன்னை ஆண் வர்க்கம் வழி படும் விதமாக மாற தன் உருவத்தை மாற்ற நினைத்தாள் .அதன் விளைவுதான் ,அகோர காளி முகம். )

அதைத்தான் 16-ம் நாள் போரில் திரவுபதி செய்தாள். துர்ச்சாதனனை ,பீமன் வீழ்த்தி விட்டான்.போர்க் களத்திற்கு திரவுபதி அழைத்து வரப்படுகிறாள்.

வீழ்ந்து கிடக்கும்  துர்ச்சாதனன் அருகே பீமன் நிற்கிறான்,திரவுபதியை மிக அருகே வரச்சொல்கிறான்.திரவுபதி கொக்ரிக்கிறாள். மூடன் மாண்டானா!?’பீமனைப்பார்த்த பாஞ்சாலி,
அவன் மார்பை கிழித்து,ரத்தத்தை எடுத்து,தங்கள் கைகளால்  என் கூந்தலைத் தடவுங்கள,நான் கூந்தலை முடித்துக்கொள்கிறேன்என கூறிக்கொண்டே,ஒரு காலை தரையில் வைத்தும் மறுகாலை துர்ச்சாதனன் மார் மீதும் வைத்து நாக்கை பல்லால் கடித்து கண்களை உருட்டி கோரத்தாண்டவம் ஆடினாள்.

போர்க்களத்தில் திரவுபதியின் போக்கை கண்டு ஆனந்தப்பட்ட தன் தாய் வீட்டின் உறவுகளான திருபதன்  துஷ்ட்டதூமனன்,சிகண்டி ஆகியோர் திரவுபதியை வணங்கினார்கள்.உடனே போர்க் களத்தில் உள்ள படைவீரர்கள் திரவபதியை மண்டியிட்டு வணங்கினார்கள்,
அன்று மண்டியிட்ட சத்ரியர்கள் இன்றும் இந்திய கிராமங்களில் துரவுபதிக்கு கோயில் கட்டி,ஆண்டுதோறும் தீ மிதி விழா நடத்த தவறுவதில்லை.

ஆ.க-

(தங்கள் இனம் காக்க வந்த காளி,துர்கை,எல்லை அம்மன்,படைவீட்டம்மன்,என பல பேர்களில் இன்றும் வட இந்திய மற்றும் தமிழக கிராமங்களில் வணங்கப்படுகிறதே.  
இதிலிருந்து என்ன தெரிகிறது?

அன்றய மகாபாரத மக்களான சத்ரியர்கள் பல மொழி பல சாதி என திரிந்து இந்தியா மட்டுமல்ல தெற்காசிய முழுவதும் பரவியுள்ளனர்.அங்கெல்லாம் அம்மனுக்கு கோயில் கட்டி பூஜை நடந்து கொண்டிருக்கிறதே இது பெண்ணாதிக்க தெய்வம் அல்லவா?

இந்த மாபெரும் மக்கள் தெய்வமான திரவுபதியை சிவன், விஷ்னு போன்ற தெய்வங்களுக்கு உறவு முடிச்சுபோட்டு பல கற்பனை கதைகள் மக்கள் மத்தியில் உலா விட்டனர்.

திரவுபதி ரத்த வெறிகொண்ட பெண் தெய்வம்,அவளுக்கு ஆண்டு தோறும் ஆடு மாடுகளை பலியிட்டு அதன் குடலை உருவி மாலையிட்டு தன்னையே அம்மனாக உருவகித்து தமிழக ஆந்திர சத்ரியர்கள்  ஆட்டம் போடுவதை இன்றும் நாம் காணலாம்.இதற்கு ஜாத்ரை உற்சவம் என்று பெயர்.

கோடைகாலங்களில் 18-ம் போர்க்கள நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் கிராம மக்களால் தத்ரூபமாக நடத்திக் காட்டப்படுகிறது.

முக்கியமாக 16,18-ம்நாட்களான துர்ச்சாதனன் மற்றும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சிகள் வெகு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

ஒரு சத்ரியன் தன் உடன் பிறந்தவளை நேசிக்கும் அளவுக்கு உடன் பிறந்தவனை நேசிக்கமாட்டான்,அது திரவுபதிஅம்மன் தாக்கமே!சத்ரியர்கள் வாழும் கிராமங்களில் ஆண்டுதோறும் தீ மிதிவிழா நடத்துவர்.

நாடு முழுவது பரவியுள்ள பிராமணர்கள்,யாதவர்கள் அவரவர் உறவுகளை மொழி கடந்து பராமரிக்கின்றனர்.ஆனால் சத்ரியர்கள் மட்டும் அந்தந்த மாநில மொழி பேசும் மக்களோடு மட்டுமே உறவுகளை சுருக்கிக் கொண்டனர்.

சத்ரியர்களின் உறவு முறைகள் ,கொடுக்கல் வாங்கல் எல்லாம் 40 மயில் கல்லுக்கு உட்பட்டதாகவே அமைந்திருக்கும்.அதாவது அந்நாளில் விடியற்காலை தூக்கத்தை கலைத்து,நடக்க ஆரம்பித்தால் மாலை இருட்டும் முன் அவனுடைய உறவுகளை சென்றடையும் விதமாக அமைந்திருக்கும். இரண்டு வேளை கட்டுசோறு மூட்டை கட்டிக்கொண்டு புறப்படுவான்,களைப்பாறியபின் மொத்தம் 8அல்லது 10 மணி நேரத்தில் ஒருவன் 40 மைல்கல் நடக்க முடியும்.

இந்தியா மொழி வாரி மாநில எல்லைகளை பிரித்துக்கொண்டபின்,எல்லையோர சத்ரிய மக்கள் தங்கள் கொடுக்கல் வாங்கல்களை மொழிகடந்து தொடர்பு வைத்திருந்தனர்,அதுபோலவே மற்ற இன மக்களான பிராமணர்,வைசியர்,யாதவர்,தாழ்த்தப்பட்டவர்(ஒடுக்கப்பட்டவர்)மொழி கடந்து உறவுகளை வளர்த்து வருகின்றனர்.

தமிழ் நாட்டில் நாடார் மற்றும் சைவ பிள்ளைமார்கள் மட்டுமே பிற மொழி கலப்பில்லா உறவுகளை பராமரித்து வருகின்றனர். ஒவ்வொரு சத்ரியனும் தன்னை அரசனாக பாவித்துக்கொள்ளும் மனம் படைத்தவன் எனவே சுயமாக உழைத்து உண்ணவேண்டும் எனும் வேட்கையே அவன் மனதில் மிஞ்சியிருக்கும்.

உண்மையான சத்ரியன், அண்ணனைச் சார்ந்து தம்பியோ,அல்லது தம்பியைச் சார்ந்து அண்ணனோ வாழமாட்டான்.இதனால் அவர்களைப் பெற்ற தாய்த்தந்தையர் தங்களையே நம்பி வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடுகிறது.)
******(தொ.245)


கூந்தலை அள்ளி முடித்த பாஞ்சாலி, தன் எதிரே நிற்கும் மைத்துணன்,துரியனை நோக்குகிறாள், ‘தன் சகோதரர்களின் மனைவியான என்னை தன் தாயைப்போல் நினைத்திருந்தால், என்னை அவையோர் மத்தியில் மானபங்கம் படுத்த நினைத்திருப்பாயா? பத்தினி காந்தாரி பெற்ற பிள்ளைகளில் உன்னைத்தவிர அனைவரும் போர்க்களத்தில் மாண்டுவிட்டனர்,
உன் கொடூர புத்தியால் நிகழ்ந்ததுதான் இவையெல்லாம்,இப்பொழுதும் நீ தன்னிலை உணர்ந்து, செய்த தவறுக்கு பிராயசித்தம் தேடிக்கொள்,புத்தர சோகம் தணிய உன் தாய் பத்தினிக்கு பேர் சொல்ல நீ ஒரு பிள்ளையாவது மிச்சமிருக்கட்டும்.

திரவுபதியின் வார்த்தைகளை துரியன் பொருட்படுத்தவில்லை.
தம்பியின் மரணம் துரியனுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி விட்டது. அப்பொழுதும் தன்னைக்காக்க கர்னன் உள்ளதாக நம்புகிறான்.

திரவுபதி அரண்மனை திரும்புகிறாள்,குந்தி அவளை குளிர்விக்கிறாள்.அப்போது குந்தி, துரியனின் சபையில் வீசி எரிந்த மகுடத்தை  எடுத்து வந்து மருமகளின் தலையில் சூட்டுகிறாள்.அப்பொழுது திரவுபதி, ‘வேண்டாம் அத்தை ,என் கணவர்கள் இழந்த மணி மகுடங்களை சூட்டியபிறகே நான் மகுடத்தை சூட்டிக்கொள்வது பொருத்தமாக இருக்கும் இப்பொழுது வேண்டாம் அத்தை.

இதற்கிடையே காந்தாரி புத்திரர்களை இழந்த சோகத்தில் வியாசரை காணச் செல்கிறாள்.அப்பொழுது வியாசர் காந்தாரியைப் பார்த்து, இந்நிலையில் நான் உனக்கு என்ன வரம் தரமுடியும் காந்தாரி,உனக்கு எஞ்சி இருக்கும் மகன் துரியன் இரும்பு மார்பை பெற்றவனாகிறான்,அவனை கொல்ல யாராலும் முடியாதுஇந்த வார்த்தைகள் காந்தாரிக்கு ஆறுதலைத்தந்தது.

அர்ச்சுனனைக் கொல்ல சகுனி யாகம் நடத்துகிறான்.யாகத்தின் மூலம் நாக அஸ்த்திரம் பெற முயல்கிறான்.இது வீண் வேலை என துரியன் உணர்கிறான்.கர்னனும் சகுனியைப்பார்த்து, ‘ஏன் என்னுடைய தனூர் வித்தையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லையா?

மாயத்தாலும் மந்திரத்தாலும் அர்ச்சுனனைப்போன்ற சிறந்த ஒரு வில்லாளனை கொல்ல முடியுமா?இதுவெல்லாம் சாத்தியம் என்றால் வில்லாயுதங்கள் எதற்கு?

அப்பொழுதே பகுத்தறிவு சிந்தனைகள் தலை தூக்க ஆரம்பித்தன,ஆனால் அருவ வழிபாட்டில் நம்பிக்கை உடைய காந்தார மன்னன் சகுனியின் தொடர் வற்புறுத்தலால், ‘எத்தை தின்றால் பித்தம் தெளியும் எனும் நிலையில் இருந்த துரியன் தன் நண்பனை சகுனியின் யோசனைக்கு இணங்க வைக்கிறான்.

சகுனியின் யோசனை யாதெனில்,சூரியன் மறையும் நேரத்தில் கர்னன் அர்ச்சுனனை தாக்க இருக்கும் கணையில் கொடிய விஷமுள்ள நாகப்பாம்பை சுற்றி அனுப்ப வேண்டும்.அந்த பாம்பு அர்ச்சுனன் தலையைத் தீண்டும்,அப்போது அர்ச்சுனனுக்கு மரணம் நிச்சயம்.
இந்த யோசனையில் கர்னனுக்கு உடன்பாடில்லை,,இருப்பினும் மரண பயத்தில் உள்ள துரியனை அமைதிப்படுத்த இந்த யோசனையை ஏற்றுக்கொள்கிறான்.

கர்னன் இருக்கும் வரை துரியனுக்கு மரணத்தை விளைவிக்க முடியாது .இதை நன்கு உணர்ந்தவன் கிருஷ்னன்.
கர்னனை சந்திக்க குந்தியை தூதுஅனுப்புகிறான்.சூது நிறைந்த கிருஷ்னன்.அன்பு என்றால் என்ன வென்றே தெரியாத உணராத சத்ரியர்களுக்கு அன்பின் வழி வார்த்தைகளை வெளிப்படுத்தி மனிதர்கள் மத்தியில் எடுக்கும் தந்திர முயற்சிதான் தூது இதைத்தான் சத்ரியர்கள் சூது என்றனர்,இன்றும் இந்நிலைதான்.

கர்னன் தினமும்,அதிகாலை சூரியனை வழிபடும் (சந்தியா வந்தனம்,அருணோதய வழிபாடு,சூரிய நமஸ்காரம்-எல்லாம் ஒன்றுதான்)பழக்கமுள்ளவன்.அந்நேரம் வரியவர்கள் வேண்டுவதை வழங்கும் குணம் கொண்டவன்.துரியனுக்கு இத்தகைய நடவடிக்கைகள் ஒத்துவராது எனினும்,கர்னன் தன் உயிர் காக்கும் தோழன் எனும் நம்பிக்கையில் கர்னனின் வள்ளல் தன்மையை குறை கூறுவதில்லை.

இந்தேரம் பார்த்து குந்தி கர்னனை சந்திக்க காத்திருக்கின்றாள். மகனே!திடுக்கிட்ட கர்னன்,

என் தாய் ராதை,நான் தேரோட்டியின் மகன் என்றுதான் இவ்வுலகிற்கு அறிமுகமானேன்,என்னை ஊரறிய ,நான் தான் தங்கள் மகன் என அறிவித்தீர்களானால் நடக்கும் போரில் நான் என் தர்ம நெறியான நண்பனை காப்பாற்றும் வழியிலிருந்து நான் தடம்மாற வைத்துவிடும்.  என் தம்பிகளான தங்கள் மகன்கள் என்னை தங்களுக்காக போரில் தலைமை ஏற்க அழைப்பு விடுப்பர்.இத்தகைய செயல் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் தாயே.என்னை தயவு செய்து மகனே என அழைக்காதீர்கள்

நடப்பது தர்மத்தை நிலைநாட்ட நடத்தப்படும் போர் மகனே

சரி தாயே தங்கள் தர்மம் தங்களுக்கு,என் நண்பனின் தர்மம் எனக்கு-செஞ்சோற்றுக் கடனுக்காக போர் புரிவது என் தர்மம், இந்நிலையில் நான் தங்களுக்க என்ன உதவி புரியவேண்டும் என எதிர்பார்கின்றீர்கள் தாயே!

அர்ச்சுனனை கொல்லும் வல்லமை படைத்த ஆயுதம் உன்னிடம் உள்ளது,போரில் உன் திறமைக்கு இழுக்கு வருவதை நான் தடுக்க விரும்ப வில்லை,ஆனால் அந்த ஆயுதத்தை ஒரு முறை மட்டுமே பயன் படுத்து,அது போதும்,மேலும் உன்னை என் மகன் என அறிவிக்க எனக்கு அனுமதிக்க வேண்டும்

போரில் அர்ச்சுனனோ அல்லது நானோ மரணிக்க நேரலாம்.
அந்நேரத்தில் தாங்கள் சகோதரனை கொன்றுவிட்டாயே
என அறிவித்தால் போதும்அதுவரை இந்த உண்மை உலகுக்கு தெரியவேண்டாம் தாயே

சரி மகனே எனக்கு விடைகொடு நான் வருகிறேன்குந்தி புறப்பட்டாள்.

109-17-ம் நாள் போர்

போரில் அன்று 17-ம் நாள்,போர்க்களத்தில் கர்னனுக்கு தேரோட்டியாக சல்லியனை துரியன் அமர்த்துகிறான்.சல்லியன் கர்னனுக்கு ஒத்துழைப்பு நல்கவில்லை.மாறாக பாண்டவர்கள் பக்கமே தர்மம் இருப்பதாக கர்னனிடம் குதர்க்கமாக பேசி தேரோட்டுகிறான்.

கர்னன் சொல்லும் திசையில் தேரோட்ட மறுக்கிறான்.ஒரு கட்டத்தில் கர்னன்,தனக்கு தேரே வேண்டாம் என சொல்லி கீழே இறங்கி விடுகிறான்.

அப்போது அர்ச்சுனன், ‘கர்னா தேரில் ஏறு, தரையில் நிற்பவனுடன் நான் தாக்குதல் நடத்த முடியாது,இல்லையேல் நான் தரையில் நின்று போர் புரியவேண்டிய நிலை ஏற்படும்

வேண்டாம் அர்ச்சுனா தேரை விட்டு கீழே இறங்காதே கிருஷ்னன் அர்ச்சுனனை தடுக்கிறான்.

இதற்கிடையே சகுனியும் துரியனும் கர்னனை ,அர்ச்சுனன் மீது நாக அஸ்த்திரம் தொடுக்க நச்சரிக்கின்றனர்.தேர் மீது ஏறச்சொல்கின்றனர்.

நேரம் பார்த்து கர்னனை கழுத்தறுப்பு வேலை பார்க்கும் சல்லியனை கொல்ல துரியன் வாளெடுக்கிறான்.அப்போது சகுனி, ‘வேண்டாம் துரியா,
நமக்காக படைகளை கொடுத்து உதவிய சல்லியனை ,வெறுக்காதே,அது நமக்கு நன்மை பயக்காது’

சூரியன் மறைய இரண்டு நாழிகைப் பொழுதே உள்ளது.அதற்குள் கர்னனை கொல்ல கிருஷ்னன் அர்ச்சுன னை ஆயத்தப்படுத்துகிறான்.அதே போல் துரியன் கர்னனை அர்ச்சுனனை கொல்ல நாக அஸ்த்திரத்தை பயன் படுத்த துரிதப்படுத்துகிறான்.

கர்னன் அரை மனதோடு நாக அஸ்த்திரம் தொடுக்கிறான்.சரியான தருணத்தில் கிருஷ்னன் தேரை அசைத்துவிடுகிறான்.அர்ச்சுனன் தலை தப்பிவிடுகிறது.

‘என்ன மாமா என்ன நடக்கிறது இங்கே? ஏன் இப்படி ஆகிவிட்டது.?’

‘மருமகனே! இந்த இடையன் இருக்கும் வரை அர்ச்சுனனை கொல்ல முடியாது,எல்லாம் அவன் செய்யும் சூட்சுமம்தான்.’

இதற்கிடையே தேரை இயக்கிய சல்லியன் வேண்டுமென்றே தேரின் ஒரு சக்கரத்தை பள்ளத்தில் இறக்கிவிடுகிறான்.
அப்போது கர்னன், இழே இறங்கி சக்ரத்தை விடுவிக்க சொல்கிறான் ,அது என் வேலை அல்ல என சல்லியன் ஒத்துழைக்க மறுக்கிறான்.
                              
நான் தேரோட்டியின் மகன் எனக்கு ஒன்றும் இத்தகைய செயல் ஒரு பெரிய காரியமல்ல,நானே எடுத்துவிடுகிறேன்என சொல்லிக்கொண்டு தேரைவிட்டு கர்னன் இறங்குகிறான்.
அப்போது அர்ச்சுனன், ‘கிருஷ்னா இப்போது தாக்கவா?’

வேண்டாம் அர்ச்சுனா,இப்பொழுதும் கர்னனை உன்னால் கொல்ல முடியாது

கர்ன்னனும்,அர்ச்சுனனைக்கொல்ல,தான் பரசுராமனிடம் கற்ற திவ்யாஸ்த்திரத்தை கையாளும் மந்திரத்தை உச்சரிக்கிறான்,ஆனால் முடியவில்லை,மந்திரம் செயலிழக்கிறது.

110-கர்னனின் வீழ்ச்சி
          (இதன் தொடர்ச்சியை புதிய அஞ்சல் 14-ல் காணவும்)

No comments: