54-காண்டவ பிரஸ்த்தம்
திருதராஷ்ட்ரன்,துரியோதனன், பாண்டவர்கள்
யாருமே அஸ்த்தினாபுரம் துண்டாடப்படுவதை விரும்ப வில்லை,
யோசனை சொல்பவர் மீது.ஆளாளுக்கு எரிந்து விழுந்தனர்.
இறுதியில் பீஷ்மனும், விதுரனும் சேர்ந்து எடுத்த முடிவான
அஸ்த்தினாபுரம் இரண்டாகப் பிரிப்பதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.பாண்டவர்களுக்கு
காட்டுப் பகுதியான காண்டவபிரஸ்த்தம் தருவது என சகுனியின் யோசனையை
முன்னிருத்தி திருதராஷ்ட்ரன்,
பாண்டவர்கள் மீது திணிக்கிறான். இதை அரை மனதோடு பீஷமனும், விதுரனும் பாண்டவர்களிடத்தில் தெரிவிக்கின்றனர்.
எந்த வித எதிர்ப்பும் இன்றி பாண்டவர்கள் காண்டவ பிரஸ்த்தம்
செல்ல சம்மதிக்கின்றனர். பாண்டவர்களுக்கு நாம் இழைக்கும் துரோகம் இது என பீஷ்மனும்,விதுரனும் ஒருவருக் கொருவர் பேசிக் கொள்கின்றனர்.
இருப்பினும் யாராவது விட்டுக்கொடுத்தால் ஒழிய இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது
என்பதையும் ஏற்றுக் கொள்கின்றனர்
குந்தியும் தன் பிள்ளைகளை,‘என்ன செய்வது
உங்கள் பெரியப்பா,பெரியம்மா இருவரும் நம்மீது பாசமாகத்தான்
இருக்கின்றனர்.
துரியோதனனும் என் பிள்ளைப் போலத்தான். அவன் முரட்டு சுபாவம்
உள்ளவனாக இருக்கிறான். நாம் யாராவது விட்டுக் கொடுத்தால்தான் உங்கள் தாத்தா
கட்டிக்காத்த அஸ்த்தினாபுரம் பெருமையுடன்
நிலைத்து நிற்கும். இல்லையேல் அஸ்த்தினாபுரம் சிதறுண்டு
போகவோ அல்லது வீழ்ச்சியடையவோ பாண்டவர்களாகிய நாம் காரணமாக இருக்க்கூடாது. ஊர்
உலகம் தூற்றும்படி நாம் வாழக்கூடாது’என அறிவுறுத்துகிறாள்.
இருப்பினும் ,பீமன், ‘தாயே,தாங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால் ஒரு நிபந்தனையை அவர்களுக்கு விதித்தால் என்ன?’
‘சொல் பீமா’
என்கிறாள் குந்தி.
‘நாம் ஏன் ரகசியமாக
காண்டவ பிரஸ்த்தம் செல்ல வேண்டும்? நம் அண்ணா தர்மனுக்கு ஊர் அறிய அஸ்த்தினாபுரத்தில் முடிசூட்டி,
பாண்டவர்களுக்கு காண்டவபிரஸ்த்தம் தனிநாடாக உடமையாக்கப் பட்டதை அறிவித்தப் பிறகு செல்லலாமே’,
‘இதுவும் நல்ல யோசனைத்தான், வாருங்கள், பிதாமகரிடம் சென்று
முறையிடுவோம்’ என குந்தி தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு பிதாமகரிடம் செல்கின்றாள்.
பீஷ்மனும், ‘இதில் ஒன்றும் தவறில்லையே, அப்படியே செய்யலாம்,
நான் திருதராஷ்ட்ரனிடம் இதுபற்றி பேசி சம்மதிக்க வைக்கவேண்டியது என்
பொறுப்பு’ என உத்தரவாதம் அளிக்கிறான் .
திருதராஷ்ட்ரனிடம் பீஷ்மனும் விதுரனும் சென்று
முறையிடுகின்றனர்.. ‘இதுகூட நல்ல யோசனைத்தான்,அப்படியே செய்து விடுவோம்’ என
திருதராஷ்ட்ரன் சம்மதிக்கிறான்.
இந்த சேதியை கேட்ட துரியோதனன், வெகுண்டெழுந்தான்.
‘முடியாது தந்தையே, பாண்டவர்கள்
தனி நாடு வேண்டி செல்வதற்கு நாம் ஏன் இங்கு விழா எடுக்க வேண்டும்?’
‘துரியோதனா! இது அரசவையில் எடுக்கப்பட்ட
முடிவு,நீ இதற்கு கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும்,, இது மன்னரின் ஆணை.’ திருதராஷ்ட்ரன் அழுத்தமாக
கூறிவிட்டான்.
தர்மன் முடி சூட்டு விழாவிற்கு நாட்டின் குறு நில
மன்னர்களுக்கு ஓலை அனுப்பப் பட்டுள்ளது.
பாண்டவர்கள்,அவையின் சான்றோர்களான பீஷ்மர்,விதுரர்,துரோணர் மற்றும் கிருபாச்சாரி ஆகியோரை தங்கள் ஆளுகைப்பகுதியான காண்டவ பிரஸ்த்தம்
அழைத்துச் சென்று விடலாம் என ஆலோசிக்கின்றனர். முதலில் பீஷ்மரை அழைக்கலாம் என
ஆலோசிக்கப்ட்டது, ஆனால் அவர் உயிர் உள்ளவரை அஸ்த்தினாபுரம்
விட்டு வரமாட்டார்.அது அவர் உயிர்மூச்சு, என குந்தி
கூறுகிறாள். ஆனால் துரவுபதி,‘நான் அழைக்கிறேன் நான்
அழைத்தால் மாமா நிச்சயம் வருவார் எனும் நம்பிக்கை எனக் கிருக்கிறது,’என்கிறாள்.
‘சரி பார்ப்போம்,போய்
முறையிடு’ என்கிறாள் குந்தி.
பீஷ்மன் இருக்கும் இடம் தேடி செல்கிறாள் துரவுபதி, ‘தாத்தா, தாங்கள் எங்களோடு காண்டவபிரஸ்த்தம்
வரவேண்டும், உங்களுடைய ஆசியும் ஆதரவும் எங்களுக்கு எப்பொழுதும்
வேண்டும், அது முக்கியமும் கூட, தாங்கள் அவசியம் வரவேண்டும்’ என அழுத்தத்துடன் அஸ்த்தினாபுரக் காவலனை அழைக்கிறாள்.
‘அம்மா துரவுபதி,என் குலத்திற்கு விளக்கேற்ற வந்த கொற்றவையே!
என் உயிர் மூச்சு உள்ளவரை இந்தக்கிழவன் இந்த அஸ்த்தினாபுரத்தை விட்டு வரமாட்டனம்மா,
பாண்டவர்கள் என் கண்மணிகள், அவர்
எங்கிருந்தாலும் பிழைத்துக் கொள்வார்கள்.’என பீஷ்மன் கூறுகிறான்
மேலும் அவன், ‘என்
மூத்தமகன் திருதராஷ்ட்ரன் குருடன் அவன் பிள்ளைகளோ மூடர்களைப் போல் முரட்டுத்தனம்
கொண்டவர்கள். அவர்களை விட்டுவிட்டு நான் எங்கம்மா உங்களோடு வருவது?
மேலும் உன் தந்தை துருபதன் என்னை கொல்வதற்கே,சிகண்டியை மகளாகப் பெற்றான் ஆனால் உன்னையோ பாண்டவர்களுக்கு மணமுடிக்க
அக்கினியை வளர்த்து உன்னை தவமாய் பெற்றான்.உன் தந்தையின் இரண்டு மகள்களான நீங்கள்
இருவரும் எதிரெதிர் சிந்தனை உடையவர்கள்.நான் உங்களோடு வருவது உசிதம் அல்ல துரவுபதி’ துரவுபதி திரும்பி போனாள்.
குந்தி,தங்கள் குல குருவான துரோணரை தங்களோடு
அழைத்துச் செல்லாம் என திட்டமிட்டு, துரோணரை அழைக்க சொல்லி அர்ச்சுனனை அனுப்புகிறாள்.
துரோணர்,தன் மனைவி மகனுடன் இருக்கிறான் அவ்வமயம், துரோணரை வணங்கி அர்ச்சுனன்,
‘குலகுருவே,தாங்கள்
அமைக்கப்போகும் புதிய அரசவைக்கு தாங்கள் ராஜகுருவாக இருந்து எங்களை வழி நடத்திச்
செல்ல வேண்டும்.’என வேண்டுகிறான்.
‘முடியாது அர்ச்சுனா!,நான்
ஆதரவற்ற நிலையில் ,உன் பெரியப்பாவை சந்தித்த வேளையில்,எனக்கு
ஒரு பசுவை தானமாக கொடுத்து எனக்கு அடைக்கலம் தந்து கவுரவர்களுக்கு குலக்கல்வி
சொல்லித்தர என்னை அரசவையில் இருக்கச் சொல்லி ஆதரவளித்த உன் பெரியப்பாவை
விட்டுவிட்டு என்னால் வர முடியாது அர்ச்சுனா!.’ துரோணர்
தெளிவாகவும் உருதியாகவும் கூறிவிட்டான்.
அந்நேரத்தில் துரோணர் மனைவி,‘அர்ச்சுனன்
அழைப்பை ஏற்று நாம் பாண்டவர்களோடு சென்று விடலாம்,இந்த
முரடர்களோடு நமக்கு காலத்திற்கும் நிம்மதி இல்லாத வாழ்க்கைத் தான்’ என மனைவி சொன்னதை கேட்டவுடன் ,
‘கிருதி, உன் வாயை மூடு எது நல்லது எது கெட்டது என எனக்குத் தெரியும்’ என துரோணர் மனைவி மீது எரிந்து விழுந்தான்.
மகன் அஸ்வத்தாமனோ,‘என் தந்தையை கொல்ல திருஷ்ட்டதூமனை வளர்த்துவரும்
துருபதன் மகளை மணந்தவர்கள் நீங்கள் உங்களை
நம்பி நாங்கள் எப்படி உங்களோடு வருவது?’
அர்ச்சுனன், விதுரனை அழைக்க,குந்தி, தர்மனை அனுப்புகிறாள்.
விதுரனை வணங்கி தர்மன்,‘சித்தப்பா,நாங்கள் காண்டவபிரஸ்த்தம் செல்ல இருக்கின்றோம், நாங்கள்
அமைக்கும் அமைச்சரவையில் தாங்கள் மகாமந்திரியாக பொறுப்பேற்று எங்களை வழி நடத்த
வேண்டுகிறேன்’
‘தர்மா,தர்ம தேவன் புதல்வன் நீ!உனக்கு எது நியாயம்?எது அநியாயம்?என எல்லாம் தெரிந்தவன் நீ,உனக்கு நான் மந்திரியாக செயல்படுவதா?அண்ணன்
திருதராஷ்டரன்,கண் தெரியாதவர்,துரியோதனனோ
முரட்டு குணம் படைத்தவன்,அதுமட்டுமின்றி,நான் உன் அப்பா பாண்டுவிடம்
‘அண்ணனுக்கு துணையாக இருந்து ஆட்சியை வழி
நடத்துவதில் உறுதுணையாக இருப்பேன் என சத்தியம் செய்து கொடுத்துள்ளேன்,
எனவே நான் அஸ்த்தினாபுரம் இருப்பது தான் நல்லது’விதுரன் சொல்வதைக்கேட்ட தர்மன் தாயிடம் திரும்பினான்.
விதுரனை பார்க்க துரியோதனன்,துர்ச்சாதனன்
மற்றும் சகுனி ஆகியோர் வருகின்றனர். விதுரனும், ‘வா
துரியோதனா,நான் காண்டவ பிரஸ்த்தம் சென்று விடுவேன்,அப்படி செய்து விடாதீர்கள் என தடுக்கத்தானே வந்தாய்?நான்
அப்படி எல்லாம் போக மாட்டேன்,கண் தெரியாத உன் அப்பாவுக்கு
ஆட்சியில் துணை நின்று வழி நடத்த வேண்டும் என உன் சித்தப்பா பாண்டு என்னிடம்
சத்தியம் வாங்கியுள்ளார். எனவே நான் அஸ்த்தினாபுரத்தில் தான் தங்கி இருப்பேன்.நீ
பயம் கொள்ள வேண்டாம்’
துரியோதனனோ, ‘சித்தப்பா, உன்னுடைய
அறிவுரை எங்களுக்கு தேவையில்லை,நீங்கள் உங்களுக்கு பிடித்த
பாண்டவர்களோடு காண்டவபிரஸ்த்தம் செல்வதுதான் நல்லது. நீங்கள் உடனே அவர்களோடு
புறப்படலாம்’என பட படத்தான். விதுரன் செய்வதறியாது
முழிக்கிறான்.
சில நொடிகள் கழித்து அண்ணன் திருதராஷ்ட்ரனை சந்திக்கிறான்
விதுரன்.
‘சொல் விதுரா’திருதராஷ்ட்ரன்
கேட்கிறான்.
‘அண்ணா நான் பாண்டவர்களோடு காண்டவ பிரஸ்த்தம்
செல்கிறேன்,
என்னை அனுமதியுங்கள்’ அதிர்ச்சியடைந்த திருதராஷ்ட்ரன்,
‘என்ன சொல்கிறாய் என்னை விட்டு,அதுவும் இந்த குருடனை தவிக்க விட்டு நீ பாண்டவர்களோடு செல்ல எப்படி
துணிந்தாய் விதுரா?’
‘நான் அஸ்த்தினாபுரம் தங்கி இருப்பதை
துரியோதனன் விரும்ப வில்லை, உடனே வெளியேறச் சொல்லி விட்டான்,மானம்
இழந்து நான் இந்த இடத்தில் இருக்க விரும்ப வில்லை, நான்
வருகிறேன் அண்ணா என்னை அனுமதியுங்கள்’ விதுரன் சொன்னதை திருதராஷ்ட்ரன் ஏற்க
வில்லை.
‘என்னை விட உனக்கு துரியோதனன் வார்த்தை பெரிதாகி விட்டதா?
நான் அஸ்த்தினாபுரத்தின் மன்னன், உன்னை வெளியேற்ற துரியோதனனுக்கு யார் அதிகாரம்
அளித்தது.நீ என்னை விட்டு போய்விட்டால்
என் உயிர் என் உடலை விட்டு பிரிந்து விடும் விதுரா,அது உனக்கு சம்மதம்
என்றால் நீ பாண்டவர்களோடு செல்’அண்ணன் சொன்னதைக் கேட்டு விதுரன் மனம் உடைந்து
போனான்.
‘இல்லை அண்ணா நான் தங்ளுடனே இருந்து விடுகிறேன்,இது
சத்தியம்’ என விதுரன் வாக்களிக்கிறான்.
தர்மன் முடி சூட்டு விழாவிற்கு,துவாரகை மன்னன் கிருஷ்னனுக்கு அத்தை குந்தி ஓலை அனுப்புகிறாள். அதே போன்று
தன் சம்பந்தியான துருபதனுக்கு விழாவுக்கு வரச்சொல்லி ஓலை அனுப்புகிறாள்.அவையில்
பன்னாட்டு அரசர்கள் குழுமி இருந்தனர்.
விழாவில் தர்மனுக்கு வியாசர் முடி சூட முற்படுகிறார்,அதை கிருஷ்னன் தன் அத்தை மகனுக்கு அணிவிப்பது தான் சிறந்தது என கூற, வியாசர் தர்மனுக்கு கிருஷ்னன் கையால் முடி சூட்டும்படி செய்கிறான்..
55-இந்திரபிரஸ்த்தம்
தர்மன் வேண்டு கோளுக்கிணங்க காண்டவ பிரஸ்த்தத்தை கிருஷ்னன்,இந்திரபிரஸ்த்தம் ஆக மாற்றுகிறான். இதற்காக
விஸ்வகர்மாவை உதவிக்கு அழைக்கிறான் கிருஷ்னன்.இந்திர பிரஸ்த்தம் மிக பிரம்மாண்டமான
மாட மாளிகையாக காட்சி அளிப்பதை ஒற்றன் மூலம் துரியோதனன் அறிகிறான்.
துரியோதனன் கொதித் தெழுந்தான்,‘மாமா இது வெல்லாம் எப்படி நடக்கிறது?பாண்டவர்களை
ஒழித்தால்தான் நான் நிம்மதி அடைவேன் மாமா’
சகுனி துரியோதனனை மட்டுப்படுத்துகிறேன்.
*********
தர்மனுக்கு முடி சூட்டு விழா முடிந்ததும், அவரவர்கள் தங்கள் நாடு திரும்பினர்.கிருஷ்னனும் தன் அத்தை குந்தியிடம்
விடைபெற்றான். போகும்போது, குந்தி
கிருஷ்னனிடம்,
‘கிருஷ்னா,சுபத்திரைக்கு
வயதாகிக் கொண்டே போகிறது, திருமண ஏற்பாட்டை செய்ய வேண்டியதுதானே?’
‘ஆம் அத்தையே,திருமணம்
செய்யவேண்டும் ஆனால் அதற்கு ஒரு ஆணும்,ஒரு பெண்ணும் தடையாக
இருப்பார்கள் போல் தோன்றுகிறது. அதை எப்படி எதிர் கொள்வது என்பது தான் எனக்கு
தெரியவில்லை’என சூசகமாக ஒரு உண்மையை வெளிக்கொணர ஒரு முடிச்சு
போட்டான்.உடனே,அர்ச்சுனன்,
‘யார் அந்த ஆண்மகன்,அவனை
வழிக்கு கொண்டுவருவது என் பொறுப்பு.யார் என்று சொல்லுங்கள் கிருஷ்னா?’
திரவுபதியும்,‘அந்தப்பெண் யாராக இருந்தாலும், சுபத்திரை திருணத்திற்கு தடையாக இருப்பவளை நான் வழிக்கு கொண்டு வருகிறேன்
என் பொறுப்பு,யார் என்று சொல்லுங்கள்,கிருஷ்னா?’
சுபத்திரை திருமணம் அர்ச்சுனனோடு தான் என்பதை உறுதிப்படுத்திக்
கொண்டவனாக,
‘சரி அத்தை,எனக்கு
அர்ச்சுனனும்,திரவுபதியும்
இருக்கும் வரை எனக்கென்ன பயம்?’ என குந்தியிடம்
கூறிவிட்டு கிருஷ்னன் புறப்பட்டான். ஏதும் அறியாதவர்ளாக குந்தி,திரவுபதி மற்றும் அர்ச்சுனன் ஆகியோர் கிருஷ்னனை வழியனுப்பினர்.
56-சுபத்திரை
பாண்டவர்களுக்கு துரவுபதியுடன் திருமணம் நடைபெற்று
விட்டதால், தன் தங்கை சுபத்திரையை, துரியோதனனுக்கு
மணமுடிக்க எண்ணியிருப்பதை சகுனி தெரிந்து கொள்கிறான்.
இந்த உண்மையை தன் மாமா, திருதராஷ்ட்ரனிடம்
தெரிவிக்கிறான். திருதராஷ்ட்ரனுக்கும் சம்மதம் தான். பெண்
கேட்க யாரை அனுப்புவது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
சகுனியும் துர்ச்சாதனனும் துவாரகை சென்று பலராமனைப்
பார்த்து துரியோதனனுக்கு சுபத்திரையை பெண் கேட்பதென்று முடிவானது. துவாரகையில்
சகுனிக்கும் துர்ச்சாதனனுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.சகுனி,
‘நாங்கள் சத்ரிய குலத்தைச் சார்ந்தவர்கள்,
யாதவ குலம் எங்களுக்கு நிகரான குலமல்ல,இருப்பினும்
தங்கள் குண நலன்களை வைத்து தங்கள் வம்சத்தில் தங்கள் தங்கையான சுபத்திரையை எங்கள்
மைத்துனர், துரியோதனனுக்கு, பெண்
கேட்டு வந்துள்ளோம். தங்களுக்கு சம்மதமா?’பலராமனைப் பார்த்து
வினவுகிறான்.
விருந்தினராக சென்ற சகுனி மற்றும் துர்ச்சாதனனை உபசரிக்க
பலராமன் சுபத்திரையை அழைத்து,
‘இவர்களுக்கு பானகம் கொண்டுவா’ பானகம் கொண்டு வந்த
சுபத்திரை, இவர்கள் திருமணப் பேச்சை கேட்டு அதிர்ச்சியடைந்தாள்..
கிருஷ்னனிடம் சென்ற சுபத்திரை, ‘அண்ணா,என்ன கொடுமை இது,நான்
அர்ச்சுனனை காதலிப்பது உங்களுக்கு தெரியாதா? பலராமன் அண்ணா என்னை துரியோதனனுக்கு
மணமுடிக்க சகுனி மாமாவிடம் சம்மதம் தெரிவிக்கிறார். நீங்கள் எப்படியாவது இதை
தடுத்தி நிறுத்துங்கள் அண்ணா’ சுபத்திரை கண்ணீர் வடிப்பதை கண்ட உடனிருக்கும்
ருக்மணி,
‘என்ன விளையாட்டு இது சுவாமி,நீங்கள் நீனைத்தால் இத் திருமணத்தை
அர்ச்சுனனோடு நடத்த்திவைக்க முடியும்.ஏன் இந்த விளையாட்டு?’
‘அண்ணன் எடுத்த முடிவை நான் எப்படி மாற்ற முடியும்?
ருக்மணி.வேறு வழி இருக்கிறதா எனப் பார்ப்போம்’கிருஷ்னன் கூறிய வார்த்தையில்
சுபத்திரை சற்று நிம்மதி யடைந்தாள்.
(குடும்ப பிரச்சினைகளை யாதவர்கள் எப்படி கையாள்கின்றனர், நாசுக்காகவும்
பேசி இங்கிதமாக நடந்து கொள்கின்றனர் என்பதை வாசகர்கள் உணர வேண்டும்.சத்ரியர்கள்
போல் குடும்ப உறவுகளில் நேருக்கு நேர் மோதிக் கொள்ளமாட்டார்கள்-இன்றும் இது நடக்கின்றது)
57-துவாரகை நோக்கி துரியன்
பலராமன் சம்மதத்தை திருதராஷ்ட்ரனுக்கும், துரியனுக்கும்
சகுனி தெரிவிக்கிறான்.பலராமன் கதை (தண்டு) ஆயுத பயிற்சியில் சிறந்த வல்லவன்,கதையில்
சிறந்த பீமனை வீழ்த்த பலராமனிடம் துரியனை அனுப்பி வைக்கலாம் எனும் சகுனி யோசனையை திருதராஷ்ட்ரனும் ஏற்றுக் கொள்கிறான்.
துரியோதனனும் துவாரகை செல்கிறான்.
58-இந்திரபிரஸ்த்தத்தில் நாரதன்
கிருஷ்னன்,ருக்மணி மற்றும் சுபத்திரை மூவரும் பிரச்சினை
தீவிரமடைந் துள்ளதை உணர்கின்றனர். நாரதரை அழைத்தால் இதற்கு ஒரு
தீர்வு காணலாம் என கிருஷ்னன் திட்டம் தீட்டுகின்றான்.அதன் படி நாரதரிடம் ஒரு யோசனை
சொல்லி அதை நிறைவேற்ற இந்திரபிரஸ்த்தம்
அனுப்பி வைக்கிறான் கிருஷ்னன்.
பாண்டவர்கள்,நாரதனை வரவேற்கின்றனர். ஒருவருக் கொருவர்
நலம் விசாரித்துக் கொள்கின்றனர். ‘ஐவரும் சேர்ந்து ஒரு
பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்களே உங்கள் தாம்பத்திய வாழ்க்கை சுகமாக
அமைந்துள்ளதா?’ என நாரதன் பாண்டவர்களைப் பார்த்து
வினவுகிறான்.
ஐவரும் அமைதியாகின்றனர். ‘நீங்கள் மவுனமாக
இருப்பதிலிருந்து ஒன்று தெரிகிறது,
ஏதோ பிரச்சினை உள்ள தென்று? சரியா?, நீங்கள் யாவரும் துரவுபதியுடன் பழகவில்லை யென்று தெரிகிறது,
உடலோடு உடல் இணைந்தால்தானே மனங்கள் ஒன்றுபடும் ,இரு மனங்களும் ஒன்று பட்டால்தானே குடும்ப வாழ்க்கை.திருமணம் என்பதின்
பொருளே அதுதானே’ நாரதன் கூறிய சொற்களை கேட்ட பாண்டவர்கள் ஒரு சேர கேட்டனர்,
‘அதற்கு ஒரு வழி தாங்கள் தான் சொல்ல வேண்டும்’ என கேட்டனர்.
சரி அதையும் நானே கூறிவிடுகிறேன், ‘ஒவ்வொருவரும் ஒரு ஆண்டு
துரவுபதியுடன் குடும்பம் நடத்த வேண்டும்.முதலில் தர்மன் ஓராண்டு குடும்பம் நடத்த
வேண்டும்.அவ்வாறு கணவனும் மனைவியும் தனி அறையில் இருக்கும் போது யாராவது அவர்களின்
தனிமையில் மற்றவர் பிரவேசித்தால் ,அவர்கள் வீட்டை விட்டு ஓராண்டு வெளியே சென்று
விடவேண்டும்.
அப்படி அத்து மீறி பிரவேசித்தவர்கள், திரவுபதியடன்
வாழவேண்டுமானால் நான்கு ஆண்டுகள் காத்துக் கொண்டிருக்க வேண்டும். இதுதான் நான்
உங்களுக்கு சொல்லும் படுக்கையை பகிர்ந்து வாழும் வாழ்க்கை.குடும்ப அமைதிக்கும்,மன அமைதிக்கும்
இதுதான் வழி’நாரதன் கூறி முடித்தான்
இதுகூட நல்ல யோசனைதான் என குந்தி ஆமோதிக்கிறாள். அவ்வாறு
முதலில் தர்மனும் திரவுபதியும் குடும்ப வாழ்க்கை துவங்குகின்றனர். நாரதன் அங்கு
இருக்கும்போதே, ஒரு அந்தணர் பதற்றத்துடன் ஓடி
வருகிறார்.அவர் பதற்றத்தை அறிந்த பீமன்,
‘ஏன் இந்த கண்ணீர்?முதலில்
அழுகையை நிறுத்தி நடந்ததைக் கூறுங்கள்.’
அந்தணரோ,‘நான் வைத்திருந்த பசுக்களை கொள்ளையர்கள்
கவர்ந்து சென்று விட்டனர்,தயவு செய்து அந்த பசுக்களை எனக்கு
மீட்டுத் தாருங்கள்.’
பீமன் உடனே,‘இதோ ஒரு நொடியில் உங்களுக்கு அந்த பசுக்களை
மீட்டுத் தருகிறேன். இப்பொழுதே புறப்படுகிறேன். நீங்கள் தைரியமாக இருங்கள்’ என அந்தணருக்கு ஆறுதல் கூறுகிறான்.
நாரதனோ,‘பீமா,நீ உன் கதையை
தூக்கிக் கொண்டு போவதற்குள் அவன் பசுவை கடத்திக் கொண்டு போய்விடுவான்.’ இதை கேட்டுக் கொண்டிருந்த அர்ச்சுனன்,
‘அண்ணா,நீங்கள் சும்மா
இருங்கள்,நான் வில் அம்போடு புறப்படுகிறேன்.உடனே மீட்டு
வருகிறேன்’
உணர்ச்சி வசப்பட்ட அர்ச்சுனன், நாரதன் நிபந்தனைகளை மனதில் நிறுத்த தவறிவிட்டான்.
தர்மனும், துரவுபதியும் இணைந்திருக்கும் அந்த
அறையில்தான் வில் அம்பு வைக்கப்பட்டுள்ளது. அதை எடுத்துவர உள்ளே நுழைந்து
விட்டான். அப்பொழுது தான் நாரதன் நிபந்தனைகளை மீறிவிட்டோம் என்பது நினைவுக்கு
வருகிறது.
‘மன்னிக்க வேண்டும் அண்ணா,’
என சொல்லிவிட்டு வில்லம்பை எடுத்துக் கொண்டு பசுக்களை மீட்க
அர்ச்சுனன் சென்று விட்டான். பசுக்களை மீட்டு அந்தணரிடம் ஒப்படைத்த அர்ச்சுனன்,திரும்பி வந்து,தன் தாய் குந்தியிடம்,
‘அம்மா என்னை மன்னித்து விடுங்கள்,நான் தவறு செய்து விட்டேன்.நான் நாரதர் நிபந்தனைகள் படி ஒராண்டு தங்களை பிரிந்து
இருக்க வேண்டும்.இப்பொழுதே புறப்படுகிறேன்’
குந்தி செய்வதறியாது திகைத்து நிற்கிறாள். அர்ச்சுனன்
புறப்பட்டான்,நாரதனும் தான் வந்த வேலை முடிந்துவிட்டது என
பாண்டவர்களிடம் விடை பெறுகிறான்.
கிருஷ்னனும் அர்ச்சுனனும் சந்திக்கின்றனர்.
தன் அண்ணன்
பலராமனிடம்,துரியோதனன் கதாயுத பயிற்சி செய்வதையும்,அவனுக்கு சுபத்திரையை திருமணம் செய்து கொடுக்க ஆசைப் படுவதையும்
கூறுகிறான்.
59-அர்ச்சுனன்-சுபத்திரை திருமணம்
இத்தருணத்தில்,கிருஷ்னன்,‘நான்
ஒன்றும் செய்ய முடியாது முடிந்தால் நீ சுபத்திரையை தூக்கிக் கொண்டுபோய் கந்தர்வ
மணம் முடித்துக் கொள்’என கிருஷ்னன், அர்ச்சுனனிடம்
தெரிவிக்கிறான்.
அர்ச்சுனனும் சுபத்திரையை, துரியோதனன்
திருமணம் செய்யும் முந்திய நாள் நள்ளிரவில் குதிரையின் மீது வைத்து கடத்தி
விடுகிறான். கிருஷ்னன் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறான்.
இந்த செய்தி அறிந்த துரியோதனன், தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை அர்ச்சுனன் கடத்தியது மிகுந்த கோபத்தை
ஏற்படுத்தியது, ஏற்கனவே மாறுவேடத்தில் திரவுபதியை
சுயம்வரத்தில் மாலையிட்டது,அடுத்து இந்த சுபத்திரை
கடத்தல்.துரியோதனன் அர்ச்சுனன் மீது தீராப்பழி கொண்டான்.
இதற்குள் ஓராண்டு கடந்து விடுகிறது. அர்ச்சுனனுக்கு நாடு
திரும்ப வேண்டும் எனும் வேட்கை அதிகமாகிறது. திரவுபதி தன் அரியணையில் ஓய்வாக
அமர்ந்திருக்கின்றாள். அந்நேரம்,பணிப்பெண்,
‘மகாராணி அவர்களுக்கு வணக்கம்,தங்களை காண ஒரு பால் காரி வந்துள்ளாள்.உங்களை பார்க்காமல் அவள்
செல்லமாட்டாளாம்,பார்க்க அழகாக உள்ளாள்.’
‘வரச் சொல்’ என
திரவுபதி கூறிவிட்டு அந்த பால்காரியின் வருகைக்கு காத்திருக்கிறாள்.
பால்காரி,‘அரசியே என் குறையை தாங்கள் தான் தீர்த்து
வைக்க வேண்டும்.என் கணவருக்கு ஏற்கனவே ஒரு மனைவி இருந்தும் என்னை காதலித்து
கந்தர்வ மணம் புரிந்தார்,ஆனால் என்னை அவர் வீட்டுக்கு என்னை
அழைத்துச்செல்ல மறுக்கிறார்,காரணம் முதல் மனைவி எதிர்ப்பாள்
என பயப்படுகிறார்’
திரவுபதி குழப்பம் அடைந்தாவளாய்,‘யார் அவர் ,உன் கணவர்? அவரை
வரச்சொல்’
‘அவர்தான் அர்ச்சனன்’
‘என்ன? அர்ச்சுனனா!’ அதிர்ச்சி அடைந்த திரவுபதி,சுதாரித்துக் கொண்டு,
‘உள்ளே வரச்சொல்’
பால்காரியைப் பார்த்த திரவுபதி,‘நீ யார்?’
‘நான் துவாரகை மன்னன் கிருஷ்னனின் தங்கை,சுபத்திரா’
அகமகிழ்ந்து போகிறாள் திரவுபதி,
‘நீ கிருஷ்னனின் தங்கை என்றால் எனக்கும் நீ
தங்கைதான்,இனி நீ இந்த இந்திரபிரஸ்த்த அரண்மனையின் பட்டமகிஷி
யாக உன்னை நான் அங்கீகரிக்கிறேன்.’
‘நன்றி துரவுபதி’அருகிலிருந்த
அர்ச்சுனன், திரவுபதியைப் பார்த்து கூறுகிறான்.
*********
சுபத்திரையை மணக்க அர்ச்சுனன் போட்ட திட்டம் பார்த்து
துரியோதனன் கொதிப் படைந்தான். அத்தினாபுரத்தில் பிரளயமே வெடிக்கும் நிலைக்கு
வந்துவிட்டது
60-துரியோதனன் திருமணம்.
இந்நேரத்தில் கலிங்க
நாட்டில் போர் நடக்கிறது போரில் கர்னன் கலந்து கொள்கிறான்.கர்னனை எதிர்த்து
ஜராசந்தன் நிற்கிறான். போரில் கர்னன் கலிங்க மன்னனையும் ஜராசந்தன் தோற்கடித்து
கலிங்க நாட்டு இளவரசி பானுமதியை சிறை பிடிக்கிறான்.சிறை பிடித்த பானுமதியை
தன் நண்பன் துரியோதனனுக்கு மண முடிக்கிறான் கர்னன்.
எவனொருவன் ஒரு பெண்ணை சிறையெடுக்கின்றானோ,அவன் தானே அப்பெண்ணை மணக்க வேண்டும்? மாறாக நன்பனுக்கு
மணமுடிப்பது எப்படி நியாயம்?
ஏன்,இதற்கு முன், பீட்மன்,
அம்பை சகோதரிகளை சிறையெடுத்து ,தன் தம்பிக்கு மண
முடிக்க வில்லையா? அது நியாயம் என்றால்,இதுவும் நியாம் தான்! கேட்பவர் வாயை கர்னன் மூடினான்!
61-கர்னன் திருமணம்
பிறகு கர்னன் சந்திரமலை நாட்டின் மீது படை தொடுக்கிறான். அங்கே
அந்நாட்டு இளவரசியான சுபாங்கி யை கர்னன் மண முடிக்கிறான்.
62-உப பாண்டவர்கள் தோற்றம்
பாண்டவர்கள் ஐவருக்கும் துரவுபதியுடன் இணைந்து,உப பாண்டவர்கள் ஐந்துபேர் பிறக்கின்றனர்.
தர்மன்-பிதிவிந்த்யன்
பீமன்-சிருதசோமன்
அர்ச்சுனன்-சிருதகீர்த்தி
நகுலன்-சதாநிகர்
சகாதேவன்-சிருதசேனன்,
நான்கு ஆண்டுகளில் ஐவருடனும் இணைந்து 5 குழந்தைகளை
பெறுகிறாள். இதிலிருந்து என்ன தெரிகிறது, திரவுபதிக்கு குழந்தைகள் பெறவேண்டும் எனும்
எண்ணத்தை விட ஐவரையும் தன் பிடியில் வைத்துக் கொள்ள வேண்டிய பெண்மையின் பலம்
தெரிந்தவள். ஆணைவிட பெண் பலம் கொண்டவள் என ஆணுலகத்திற்கு நிருபிக்கும் தகுதி
தனக்குள்ளது என நிருபித்தாள்.
பின்னாளில் திரவுபதி,தான் வனவாச வாழ்க்கை வாழ நேரும்போது
தன்னுடைய குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை தன்
தாய் வீடான பாஞ்சாலத்தில் தன் தாய் தந்தையரிடம் ஒப்படைக்கிறாள்.
63-அபிமன்யு தோற்றம்
சுபத்திரை,அர்ச்சுனனை மணந்து ,இருவருக்கும் பிறந்த,தன் பிள்ளையான அபிமன்யுவை
கிருஷ்னனிடம் ஒப்படைக்கிறாள் ,அவன் துவாரகாபுரியில்
வளர்கிறான்.
துரியோதனன்-பானுமதி இணையருக்கு லக்குமணன் மற்றும்
லட்சுமி என குழந்தைகள் பிறக்கின்றனர்.
..
64-தர்மன் ராஜசூய யாகம்
தர்மன் இந்திரபிரஸ்த்த அரண்மனையில் ராஜசூயயாகம் நடத்த
ஆயத்தமாகிறான். கிருஷ்னன் அப்போது,
‘தர்மா நீ ராஜசூய யாகம் நடத்த வேண்டுமானால்
முதலில் உனக்கு அனைத்து தேசமன்னர்களும் கப்பம் கட்ட வேண்டும் .அதற்கு முதலில் இந்த
பாரததேசத்தில் சர்வ பாரக்கிரமசாலியும்,சத்திரிய மன்னர்களில்
மிகப்பெரிய சக்தி படைத்த சத்ரிய மன்னனான ஜராசந்தனை மற்போர் செய்து
தோற்கடிக்க வேண்டும் .அதற்கு தகுதி வாய்ந்தவன் நமது பீமனே!.எனவே நீ பீமனை மகத
நாட்டுக்கு அனுப்பு’ தர்மனும் அதற்கு சம்மதித்தான்.
ஜராசந்தனை போரில் வெல்ல முடியாது, அதனால்தான் இந்த
மற்போருக்கு அழைக்கும் யுக்தி. மற்போருக்கு கிருஷ்னன், பீமன் தர்மன் ஆகியோர் மகத
நாட்டுக்கு செல்கின்றனர். மற்போரில் ஜராசந்தனை பீமன் கொல்ல முடியவில்லை.அதாவது
ஜராசந்தன் உடலை பீமன் கிழித்துப் போடுகிறான் அவன் மீண்டும் மீண்டும் ஒட்டிக் கொள்கிறான்.தர்மன்
கிருஷ்னனை கடிந்து கொள்கிறான்,
‘என்ன கிருஷ்னா!,என் தம்பிக்கு இப்படி இழுக்கா? ஏன் இந்த அவலம்?’
அப்போது கிருஷ்னன், ‘தர்மா ஜராசந்தனின் தாய் தன் மகனை
தவமிருந்து பெற்றவள்,அவனை கொல்வது அவ்வளவு எளிதன்று.இருப்பினும் அதற்கு ஒரு வழி
உள்ளது’ என சொல்லி கிழித்த உடலை தனித்தினியே போடாமல் தலைகால் மாற்றி போடச்
சொல்கிறான் பீமனிடம் கிருஷ்னன். பீமனும் அவ்வாறு செய்யவே ஜராசந்தன் கதை முடிவுக்கு
வந்தது.
(இங்கே கதை கேட்பவர்களுக்கு சுவாரசியம் உண்டாவதற்கு
ஏற்றாற்போல் ஜராசந்தனின் பலம் அறிவியல் உண்மைக்கு புறம்பாக புனையப் பட்டுள்ளதை
வாசகர்கள் உணரவேண்டும்)
இப்போது தர்மனுக்கு யாரும் எதிரிகள் இல்லை. இந்நிலையில்
ராஜசூய யாகம் நடத்த தர்மனுக்கு தடையில்லை.
அதற்காக பாரத நாட்டு மன்னர்களுக்கு அழைப்பு
விடுக்கப்படுகிறது. அனைத்து நாட்டு மன்னர்களும் அவையில் வீற்றிருக்கின்றனர். அஸ்த்தினாபுரத்தின்
பாதுகாவலரும், தன் தாத்தாவுமான பீட்மரை வணங்கி,
‘தாத்தா நான் வயதிலும் அனுபவத்திலும்
சிறியவன் அவையில் நான் யாருக்கு முதல் மரியாதை செய்ய வேண்டும், என்பது எனக்குத் தெரியாது.தாங்கள் சொல்லுங்கள் தாத்தா’ என அவை முன்னவருக்கு வணக்கம் தெரிவித்து எழுந்து நிற்கிறான் தர்மன்.
‘தர்மா! நான் பதவி ஆசை துறந்தவன், பிம்மச்சாரி,அதுவும் ஒரு நாட்டுக்கு சகல
சவுபாக்கியங்களும் பெற்ற மன்னர் அவையில் யார் உள்ளாரோ அவருக்கு முதல் மரியாதை
செய்வதுதான் நல்லது.முறையும் கூட’என பீஷ்மன் சொல்லி முடித்து
அவன் மேலும் தொடர்கிறான்,‘அத்தகைய சகல
சவுபாக்கியங்கள் பெற்று அவையில் இருப்பவர் துவாரகை மன்னர் கிருஷ்னன் தான்’ எனகூறி அமர்கிறான்.
இதைக்கேட்ட மகத நாட்டு இளவரசனும், ஜராசந்தனின் மான சீகப் புதல்வனுமான சிசுபாலன் அவையில் எதிர்ப்பு
தெரிவிக்கிறான்.
(காண்க-சன் தொலைக்காட்சி மகாபாரதத் தொடர் எண் 79 &80)
65-சிசுபாலன் பார்வையில் கிருட்னன்
‘ஏய் கிழட்டு பீஷ்மனே! நீ ஒரு பேடி,நீ உண்மையான சத்ரியனே அல்ல, தன்னை நாடிவந்த காசி
நாட்டு இளவரசி அம்பையை உதாசினப் படுத்தினாய். அவள் இரண்டு தங்கைகளை கடத்தி வந்து அஸ்த்தினாபுரத்திற்கு
வாரிசு வேண்டி மீனவச்சியின் பிள்ளைக்கு கட்டி வைத்தாய், அவனும்
இறந்து போனான்,நீ ஒரு போலி பிரம்மச்சாரி, ஒரு உண்மையான சத்திரியன் இன்னொரு சத்ரியனைத் தான் மதிப்பான்,நீயோ போலி ,அதனால் தான் ஒரு இடையனை வானளாவ
புகழ்கிறாய்.’
மேலும் பாண்டவர்களைப் பார்த்து, ‘பல பேருக்குப் பிறந்த பாண்டவர்களே,உங்கள்
உடம்பில் சத்ரிய ரத்தம் ஓடவில்லையா? இடையனுக்கு இங்கே என்ன
மரியாதை வேண்டியுள்ளது?’
இப்படி சிசுபாலன் அவையில் கர்ஜிக்கும் போது பாண்டவர்கள்
கொதித்தெழுந்தனர்.குறிப்பாக பீமன் சிசுபாலனை கொல்ல துடிக்கிறான். ஆனால் பீஷ்மன்,
‘பீமா அவசரப்படாதே போர் செய்ய இதுவல்ல
இடம்.அவன் நம் விருந்தினன்.அது அவனுடைய முரட்டுத் தனத்தை காட்டுகிறது. அவன் பேசட்டும்
அல்லது ஏசட்டும் விட்டுவிடு’பீமன் அமைதியானான்.
கிருஷ்னன் பக்கம் திரும்பி,சிசுபாலன்,‘ஏய் கிருஷ்னா இது சான்றோர்கள் அவையென்று இருக்கிறேன். உனக்கென்ன தகுதியடா
இருக்கிறது இங்கே உனக்கு மரியாதை செலுத்த? இளமையில் வீடு
வீடாக சென்று திருடியவன்,அழகிய பெண்கள் குளித்தால் அவர்கள்
ஆடையைத் திருடியவன் நீ உன்னை அப்போதே
ஒழித்துக் கட்டியிருக்க வேண்டும், உனக்கு வாய்த்த அரசன் ஒரு
பேடி உன்னை வளரவிட்டான். பொய்யும் பித்தலாட்டமும் நிறைந்த உன் சேட்டைகளுக்கு
இப்போதே முடிவு கட்டிவிடுவேன்’
சிசுபாலன் இப்படி ஏசிக் கொண்டிருக்கும் போது
கிருஷ்னனின் அண்ணன் பலராமன்
கொதித்தெழுகிறான். மேலும் சிசுபாலன்,
“எனக்கு திருமணம் என ருக்மணியை நிச்சயிக்கப்பட்டு,
மறுநாள் எனக்கு திருமணம் என்றிருந்த வேளையில் ,ஒரு திருடனைப் போல் மணமகளை கடத்தி கொண்டு போய் விட்டாய்,
நீ யெல்லாம் மரியதைக் குரியவனா? மானங் கெட்டவனே!
அவையோர்கள் முணுமுணுக்க ஆரம்பித்தனர். துரியனுக்கும் உள்ளுக்குள் ஆனந்தம், “நாம் கேட்க வேண்டிய
கேள்விகளை யெல்லாம் சிசுபாலன் துணிச்சலுடன் கேட்கிறானே, உண்மையில்
இவன் சத்ரியன் தான்”
கிருஷ்னன்,‘அண்ணா! அவன் யார் நமது அத்தையின் புதல்வன்,
அவனை கொல்ல மாட்டேன் என நம் அத்தைக்கு சத்தியம் செய்து
கொடுத்துள்ளேன், வேண்டாமண்ண அவனை விட்டுவிடு,அவன் பேசட்டும்,
நான் 100 பூக்களை எண்ணி கீழே போடுவேன் அதையும் மீறி அவன்
பேசினால் அவன் தலையை என் சக்ரத்தால் கொய்து விடுவேன். அவனை அடக்குவதற்கு இதுவல்ல
இடம்.’ பலராமன் அமைதியானான்
தர்மனைப் பார்த்து,சிசுபாலன் மேலும் கொதித் தெழுகிறான்,
‘தர்மா இந்த அவையில் முதல் மரியாதை செய்ய நீ நினைத்தால் உன்
தாத்தாவுக்கு அல்லவா செய்ய வேண்டும்?, அல்லது உன் பெரியப்பா
திருதராஷ்ட்ரனுக்கு செய்திருக்க வேண்டும்? அல்லது
அஸ்த்தினாபுரத்தின் அடுத்த இளவரசன் துரியோதனனுக்கு (உன் சொந்தங்களுக்கு) அல்லவா
செய்திருக்க வேண்டும்?,போயும் போயும் இந்த கேடு கெட்ட இடைச் சிறுவனுக்கு
எப்படி முதல் மரியாதை செய்ய துணிந்தாய்?’ இப்படி சிசுபாலன் பேச்சு எல்லை
மீறவே, தன் கையில் உள்ள சக்கரத்தை சுழற்றி சிசுபாலன் கழுத்தை
துண்டிக்கிறான் கிருஷ்னன்.
(வாசகர்கள் இங்கே ஒரு உண்மையை உணரவேண்டும்,ஆரியர்களை வளரவிட்டவன் முதலில் காந்தார மன்னன், பின்
சூரிய வம்சத்தைச் சார்ந்த வர்மாக்களான தசரதன் மற்றும் ஜனகன் ஆகியோர் அதன் பிறகு
சந்திர வம்சத்தைச் சார்ந்த சத்ரியர்களான சந்தனு மகாராஜன்.அவன் பிள்ளையான பீஷ்மனும்
பிராமணர்களை வளரவிட்டானர்.
ஆனால் அந்நாளில் பிராமணர்களுக்கு அடங்காத சத்ரியன்
வரிசையில், கம்சன், ஜராசந்தன், சிசுபாலன், கீசகன் மற்றும் துரியோதனன் போன்றோர்.
(எல்லாம் கடவுள் கொள்கை மறுப்பாளர்கள் அவர்களை கொல்வது
என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. காலப் போக்கில்
சத்ரிய குண முடையவர்களை, யாதவர்களின் துணையுடன் பிராமணர்கள் அனேகமாக
அழித்து விட்டார்கள் என்றே சொல்லாம்.
சத்திரியர்களுக்கும் யாதவர்களுக்கும் உள்ள மிகப்பொரிய
வேறுபாடு என்ன வெனில், யாதவர்கள் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள். கடவுள்
கொள்கையில் (பிராமணர்கள் மீது) அதிக நம்பிக்கை வைத்திருப்பவர்கள். நாசுக்காகவும்
இங்கிதமாக உணர்ந்து வாழ்க்கையை நடத்துபவர்கள்,
விதிவிலக்கான
சத்ரியர்களான சந்தனு,பீஷ்மன், திருதராஷ்ட்ரன்,விதுரன்,கம்சனின் தந்தையான ருத்ர சேனன்(உக்கிர சேனன்எனவும்
அழைப்பர்) மட்டும். யாதவர்கள் ஆகியோர் பிராமணர்களை ஆதரித்தவர்கள்.பிராமணர்கள்
தங்கள் குலப் பெண்களை இவர்களோடு பழக விட்டு ரிஷிகளையும் ,
முனிவர்களையும் உருவாக்கினர்.இதனால் பல வண்ண
மனிதர்கள்-அவரவர்களுக்கு ஏற்ற தொழில் செய்து வர்னாசிரம கொள்கைகள் (சாதிகள்)
உருவாகின.)
சிசு பாலன் ,கிருஷ்னனின் அடாத செயல்களை அவையில்
எடுத்துரைத்த விதம் அநாகரிகமாக இருக்கலாம் ,ஆனால்
அவையெல்லாம் உண்மைதானே? உண்மையை எப்படி எடுத்துரைத்தால் என்ன?அதர்ம செயல்களை பட்டியிட்டு காட்டினால் அவனை கொல்வது என்பது எப்படி
தர்மமாகும்? இன்று வரை யாரும் இதைப்பற்றி சிந்திக்கவே இல்லை
என்பது தான் உண்மை.
சிசுபாலனை கிருஷ்னன் கொன்ற சம்பவம், துரியோதனன் மற்றும் சகுனியை
அதிகம் யோசிக்க வைத்துவிட்டது.பாண்டவர்கள் அதிக பராக்கிரம சாலிகளாக வளர்ந்து
நிற்கின்றனர். துரியன்,தன் மாமா சகுனியிடம்,
‘அவர்கள் வளர்ச்சி நமக்கு எரிச்சலை
ஊட்டுகிறது மாமா,அவர்களை அழிக்க எதாவது வழி சொல்லுங்கள்?’தன்னை தனியாக சிந்திக்க விடும்படி தன் மைத்துனர்களுக்கு சகுனி
தெரிவிக்கிறான்.
66-இந்திரபிரஸ்த்தத்தில் மயன் சபை
இதற்கிடையே இந்திரபிரஸ்த்தத்திலிருந்து அர்ச்சுனன் அஸ்த்தினாபுரம்
சென்று தன் பெரியப்பா திருதராஷ்ட்ரனை சந்திக்கிறான், பெரியப்பாவை
வணங்கி,
‘பெரியப்பா,நாங்கள்
இந்திர பிரஸ்த்தத்தில் மயன் சபை அமைத்துள்ளோம். அதன் அழகிய வேலைப்பாடுகளை தாங்கள்
காணவேண்டும். முன்பொரு முறை வனத்தில் அக்னியில் சிக்கிக் கொண்ட மயனை வருணாஸ்த்திரம் கொண்டு
காப்பாற்றினேன்,அதற்கு பரிசாக அவன் மயன் சபையை அமைத்துக் கொடுத்தான்.தங்களும் பெரியம்மாவுடன் அண்ணன் துரியோதனனை அழைத்துக்கொண்டு வாருங்கள்.’என அழைப்பு விடுக்கிறான்.
காந்தாரி, ‘அர்ச்சுனா மயன் சபை அமைத்திருப்பதில்
எங்களுக்கு மகிழ்ச்சியே, ஆனால் பெரியப்பா கண் தெரியாதவர்
நானோ கண்ணை கட்டியுள்ளேன், என்னாலும் பார்க்க இயலாது,சகுனி மாமாவையும், அண்ணன் களையும் அழைத்துச் செல்’ என கூறுகிறாள்.
சகுனியும் துரியோதனன்களும் அர்ச்சுனனுடன் இந்திரபிரஸ்த்தம்
புறப்பட்டனர்.பின்னர் தனியே திருதராஷ்ட்ரனும் அவன் மனைவி காந்தாரியும்
இந்திரபிரஸ்த்தம் செல்கின்றனர்
சகுனி,துரியோதனன்,மற்றும்
துர்ச்சாதனன் ஆகியோர் மயன் மாளிகை அமைக்ப்பட்ட விதத்தை ஆச்சர்யத்துடன் கண்டு
ரசிக்கவில்லை வயிறு பற்றி எரிகிறது.அந்த மாளிகையை சுற்றிப்பார்க்கும் ஒரு இடத்தில்
துரியோதனன்,
தரையை பார்க்கிறான் அது நீர்ப்பரப்பாக இருக்குமோ என எண்ணி
காலை மெதுவாக எடுத்து வைக்கிறான் தரைதான் என உறுதி படுத்தியபின் அதன் மீது நடக்க ஆரம்பிக்கிறான்.
இன்னொரு இடத்தில் அது தரைதான் என நினைத்து காலை வைக்கிறான்,தடாலென விழுந்து விடுகிறான்.
அந்நேரம் பார்த்து உப்பரிகையில் தோழிகளுடன் துரவுபதி உலா
வருகிறாள். துரியோதனன் நீரில் தவறி விழுந்து விட்டதைப் பார்த்து தோழிகள் சிரிக்கவே
இவளும் சிரித்துவிடுகிறாள் அவ்வமயம்,
‘அப்பனுக்குத்தான் இரண்டு கண்களும் தெரியாது
என்றால்,பிள்ளைக்கு ஒரு கண்ணு கூடவா தெரியவில்லை’ என தோழிகளில் யாரோ சொன்னதைக் கேட்டு துரவுபதி மேலும் சிரித்துவிடுகிறாள்.
இந்த கேலிப்பேச்சு துரியோதனன் காதுக்கு எட்டிவிடவே,அவனுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது மானம் போய்விட்டதாக கருதினான், திருதராஷ்ட்ரனிடம்
வந்த, துரியோதனன்,
‘தந்தையே,எனக்கு
அவமானமாக உள்ளது ,உடனே நாம் இங்கிருந்து புறப்படலாம்
வாருங்கள்’ என தாய் தந்தையரை வேகப்படுத்துகிறான்.
காந்தாரி எவ்வளவோ சொல்லிப் பார்கிறாள், ‘இதுவெல்லாம் சகஜமாக எடுத்துக்கொள் துரியோதனா,மைத்துனர்
எனும் உரிமையில் விளையாட்டாக சிரித்திருப்பாள்,துரவுபதியும்
மரியாதை தெரியாதவள் அல்ல, இதற்குப்போய் இச்சம்பவத்தை
பெரியதாக எடுத்துக்கொண்டு மனதை கெடுத்துக் கொள்ளாதே மகனே’
தாய் சொல்வதை துரியோதனன் கேட்க மறுக்கிறான்.ஒரே பிடிவாதமாக இருந்து
இந்திரபிரஸ்த்தம் விட்டு கிளம்ப ஆயத்தாமாகிவிட்டார்கள்,இதை
கண்ணுற்ற தர்மன் ஓடோடி வந்து,
‘பெரியப்பா எங்கே கிளம்பி விட்டீர்கள்?,இங்கு என்ன நடந்தது?,ஏன் இந்த அவசரமுடிவு? வாருங்கள் பெரியப்பா எதாவது தவறு நடந்து இருந்தால் அதற்காக நான்
மன்னிப்பு கேட்கிறேன் பெரியப்பா,நீங்கள் சொல்லுங்கள் பெரியப்பா, தம்பி துரியோதனன் கேட்பான்.’என எவ்வளவோ
கெஞ்சுகிறான்.
‘இல்லை தர்மா துரவுபதியின் செயல் துரியோதனனை
அதிகம் பாதித்து விட்டது .நான் என்ன செய்ய முடியும் .என் பேச்சு எடுபடவில்லை
நாங்கள் வருகிறோம்’ என கூறிவிட்டு புறப்பட்டனர்.
துரவுபதியை அழைத்து பாண்டவர்கள் விசாரிக்கின்றனர்,‘உன் நாணமற்ற சிரிப்பால் ஒரு பெரும் பிரச்சினையே வந்துவிட்டது’ என குந்தி மாமியார் எனும் அதிகாரத்தில் திரவுபதியை உலுக்கினாள்,
அவளும் நடந்ததை கூறினாள். ‘அத்தை,நான் தவறாக எதையும் நினைத்து அப்படிச் சிரிக்கவில்லை ,என் சிரிப்பில் உள் நோக்கம் இல்லை,மைத்துனர் எனும்
உரிமையில் நான் அப்படி சிரித்துவிட்டேன்.அவ்வளவுதான்,நான்
வேண்டுமானால் அஸ்த்தினாபுரம் சென்று மாமாவிடம் மன்னிப்பு கோரட்டுமா?’
‘வேண்டாம், விடு
துரவுபதி,’
அர்ச்சுனன் தொடர்கிறான்,‘எதை தவறு என
நினைத்து நாம் மன்னிப்பு கோர நினைக்கிறோமோ அதை மன்னிக்கும் மனப்பக்குவம்
துரியோதனனுக்கு கிடையாது. மன்னிப்பு கோர நீ தயாராக
இருக்கிறாய் அது உன் பிரச்சினை அல்ல,துரவுபதி,மன்னிக்க
வேண்டியது துரியோதனன்,அது அவன் பிரச்சினை. இதை இப்படியே
விட்டுவிடுவோம்’ என அர்ச்சுனன் சொன்னதை குந்தியும்
ஆமோதிக்கிறாள்,மற்றவர்களும்
அதற்கு உடன் பட்டனர்.
அஸ்த்தினாபுரத்தில் ஆலோசனை நடக்கிறது. இந்திரபிரஸ்த்தம்
வளர்ச்சியைக் கண்டு துரியோதனன் பொறாமை கொள்கிறான்.ஆம்! வெட்கத்தை விட்டு தன்
தந்தையிடம் இதை துரியோதனன் ஒப்புக்கொள்கிறான்.
‘பாண்டவர்களும் நம்மைச் சார்ந்தவர்கள் தானே
அவர்கள் வளர்ச்சி நமக்கு பெருமைதானே,விடு துரியோதனா’திருதராஷ்ட்ரன் தன் மகனுக்கு அறிவுறுத்துகிறான்.
‘எப்படி தந்தையே இதை விடுவது?,என்னால் முடியாது’ மகன் சொன்னதைக் கேட்ட
திருதராஷ்ட்ரன் ,‘நீ ஏதோ சொல்ல வருகிறாய், அதைச் சொல்’ என மகனை கேட்கிறான்.
67-அஸ்த்தினாபுரத்தில் மணி மண்டபம்
‘தந்தையே, பாண்டவர்கள்
மயன் மாளிகை கட்டியது போல் நாமும் அதைவிட சிறப்பாக ஒரு மணிமண்டபம் கட்டினால் என்ன?’ துரியோதனன் கூறிவிட்டு,தந்தையின் பதிலுக்கு காத்து
நிற்கிறான்.
‘வேண்டாம் துரியோதனா,அதிக
பொருட்செலவு செய்து ஒரு மணிமண்டபம் கட்டத்தான் வேண்டுமா?அதனால்
நமக்கு என்ன பெருமை வந்துவிடப்போகிறது.’திருதராஷ்ட்ரன்
மகனிடம் தெரிவித்த கருத்துக்கு,
‘பாண்டவர்களோடு,நம்
உறவு தொடர வேண்டுமானால்,நாமும் அவர்களுக்கு நிகராக ஒரு மணி
மண்டபத்தை கட்டுவதுதான் நல்லது, பாண்டவர்களை அழைத்து நாமும் விருந்து நிகழ்ச்சியை நிகழ்த்த
வேண்டும்.’துரியோதனன் பதிலுரை தந்தையை அமைதியடையச் செய்தது,மணிமண்டபம் கட்டப்பட்டது.
விதுரனை அழைத்த திருதராஷ்ட்ரன்,‘விதுரா,நீ இந்திர பிரஸ்த்தம் சென்று பாண்டவர்களை
விருந்துக்கு அழைப்பு விடுத்துவிட்டு வா’ விதுரனும் அவ்வாறே
செய்கிறான். பாண்டவர்களும் அஸ்த்தினாபுரம் வருகிறார்கள் என்பதை தன் அண்ணன்
திருதராஷ்ட்ரனுக்கு விதுரன் தெரிவிக்கிறான்.
விருந்து முடிந்தவுடன் பாண்டவர்களை சூதாட்டத்திற்கு அழைக்க
சகுனி, துரியோதனன் மற்றும் துர்ச்சாதனன் ஆகியோர் சூழ்ச்சியில் ஆலோசனை
செய்கின்றனர்.
********
68-கிருஷ்னன்-பாமா திருமணம்
கிருஷ்னன் ,தனது நண்பன் சத்யஜித்தனுக்கு ஏதோ சிக்கல் என
கேள்விப்பட்டு அவனுக்கு உதவ அண்டை நாட்டிற்கு
காண செல்கிறான்.சில நாட்கள் கடந்துவிட்டன. துவாரகையில் ருக்மணி கண்ணன்
வரவுக்காக வழி மேல் விழிவைத்து காத்து நிற்கிறாள்.
பலராமன்,கண்ணன் வருவதை அறிந்து ருக்மணியிடம் தகவல்
சொல்ல வருகிறான்,
‘ருக்மணி,சத்யஜித்தனின்
சிக்கலுக்கு உதவப்போன கிருஷ்னனுக்கு, அவன் கொடுத்த பரிசுப் பொருளோடு,
அரண்மனை நோக்கி வருகிறான்.’
‘அப்படியா,நான் போய்
எதிர் கொண்டு அழைக்க வேண்டும்’என ஆவலோடு வாசலை நோக்கி
ஓடுகிறாள்,ருக்கமணி.வாசலில்,கிருஷ்னன்,பாமாவோடு நிற்பதைக்கண்டு அதிர்ச்சியடைகிறாள். பலராமன் உட்பட கிருஷ்னனின்
இந்த செயலை யாவரும் விரும்ப வில்லை.ருக்மணி அழுது புரண்டாள்.கிஷ்னனைப் பார்த்து
ருக்மணி,
‘ஏற்கனவே இங்கு ஒருத்திக்கு இரண்டுபேர் இருக்கும் போது(சாம்பவி எனும் பக்தையை
ருக்மணிக்கு முன் கிருஷ்னன் திருமணம் செய்துள்ளான்) இன்னொருத்தியா? என்னால்
இதை ஏற்க முடியாது.’பலராமனைப் பார்த்த ருக்மணி,
‘பரிசுப்பொருளோடு வருகிறார் என கூறினிரே,அது இது தானா?’ பலராமன் தலை குனிந்தான்.. மேலும்
ருக்கமணி கூறுகிறாள்,
‘சத்ரியர்கள்தான் போருக்கு போனால்
தோல்வியுற்ற மன்னர்களின் மகள்களை கொண்டுவருவார்கள் ,அது
அவர்களின் சத்ரிய குணம்.உங்களுக்கு என்ன ஆயிற்று? அவர்களோடு
பழகி உங்களுக்கும் பல பெண்களை மனைவியாக்கும் குணம் வந்துவிட்டதா?’
கிருஷ்னன்,‘ருக்மணி நீ பாமாவை ஏற்பது அல்ல
பிரச்சினை.என்னைப் பற்றி நன்கு அறிந்தும்,என்னை கணவனாக
அடைந்தே தீர்வேன் என நித்தமும் என்னை பூஜிப்பவள். எனக்கு ஏற்கனவே திருமணம் உன்னோடு
நிகழ்ந்த செய்தி உலகம் அறிந்தது தான்.ஆனால் இவள்(பாமா)என்னையே பூஜித்து என்னையே
கிருஷ்னார்ப்பனம் என் என்னை சரண்டைந்தவள், என்னையே கணவனாக
எற்பேன் இல்லையேல் நான் மரணித்துவிடுவேன் என அழுது புரளும்போது நான் என்ன
செய்வ்வது?எனக்கு என்ன தேவை? அது
எப்போது எனக்கு அவசியப்படும்? என்பதை நான் தானே தீர்மானிக்க
வேண்டும்?.இவளை நீ ஏற்றுக் கொள்கிறாயோ இல்லையோ நான்
ஏற்கத்தானே வேண்டும்’
மேலும் கிருஷ்னன், தொடர்ந்தான்,‘ஒரு
பெண்ணானவள் ஒருவனுக்கு மனைவியாகும் தகுதி வேண்டுமானால் மூன்று குணங்களை
பெற்றிருக்க வேண்டும்,
1-கணவனின் தேவை என்ன?
அவன் உணவு, உடை,உறைவிடம் அறிந்து
பூர்த்தி செய்ய உதவுதல்,
2-கணவனின் உணர்வுகள் அறிந்து அதைப்புரிந்து
செயல்படுதல்,
3-கணவனின் குறிப்பறிந்து செயல்படுதல்,
இவை மூன்று குணங்களையும் புரிந்துகொண்டு வாழ்க்கை நடத்த ஒரு
பெண்ணால் முடியாது.
‘திருமணத்திற்குப் பின்னும் இடமாறிப்போன இதிகாச கணவர்களின்
வரலாறு நீ அறிந்தது தானே ?அந்த இதிகாச கணவர்களின் வழித் தோன்றல்கள் இன்றும்
வாழ்கின்றனரே!’இந்த விளக்கத்திற்குப் பின்னும் ருக்மணி திருப்தி அடையாமலா
இருப்பாள்?
கிருஷ்னனின் விளக்கத்தில் திருப்தி அடைந்த ருக்மணி பாமாவோடு
இணைந்தது குடும்பம் நடத்த இசைந்தாள்.
********
(ஆரியர்களின் முதல் பலி காந்தார மன்னன்.ஆம்!, கடவுள் கொள்கையும், மூடநம்பிக்கையை மக்களிடையே
பரவச்செய்வதில் ஆரியர்களை விட்டால் யார் இருக்கின்றனர் இவ்வுலகில்.? தமிழர் நாகரிகம் முதலில் அடிபட்டுப்போனதே அங்கேதான். இன்றய ஆப்கன்
எல்லைப்பகுதி,அங்கே வாழும் பழங்குடி மக்கள் பயன்படுத்தும்
எழுத்துக்கள் இன்றும் தமிழை ஒற்று இருக்கும்)
69-பீஃஷமன் மீது காந்தார மன்னனின் வன்மம்
காந்தாரத்தின் மன்னன்-சுபாலன்-இவன் தான் சகுனியின்
தந்தை.அவனுக்கு அழகிலும், அறிவிலும் சிறந்து விளங்கிய மகளாகப் பிறந்தவள்
காந்தாரி, காந்தார மன்னனின் தலைமகள்,அந்நாட்டு
இளவரசி.
அந்நாட்டின் மீது போர் தொடுத்து அவளை தன் மருமகளாக
(திருதராஷ்ட்ரன் மனைவியாக) அஸ்த்தினாபுரம் அழைத்துச் சென்றான் பீஷ்மன்.
காந்தாரிக்கும்,திருதராஷ்ட்ரனுக்கும் திருமணம் முடிந்தபின் ,காந்தாரி ஒரு கணவனை இழந்தவள் என ஒற்றர்கள் மூலம் அறிகிறான் பீஷ்மன்.செய்தி
அறிந்தவுடன் காந்தாரம் செல்கிறான்,பீஷ்மன்.
கோவத்தின் உச்சிக்கே சென்றவன்,காந்தார மன்னனின் குரல் வளையை நெருக்குகிறான்.
‘ஏய் ஏமாற்றுக்காரனே,உன்
மகள் ஒரு கைம் பெண் என்பதை மறைத்து என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க உனக்கு
எவ்வளவு செஞ்சழுத்தம்? நீ எப்படி அதை மறைக்கலாம். உன்னை
கொல்லாமல் விடமாட்டேன் பார்’
காந்தார மன்னன் பீஷ்மனின் காலில் விழுந்தான்,
‘அய்யா,தாங்கள் என்னை
மன்னிக்க வேண்டும்.காந்தாரிக்கு தோஷம் உள்ளது என பிராமணர்கள் கூறினார்கள்.அதற்கு
ஒரு பரிகாரம் உள்ளது அதை செய்தால் உன் மகள் அகிலத்தையே வெற்றிகொள்ளும் ஒரு
அரசனுக்கு மனைவியாகும் பாக்கியம் கிட்டும், என கூறினார்கள். அதற்காக என் மகளை ஒரு
ஆட்டுக்கு திருமணம் செய்து அந்த ஆட்டைக் கொன்று தின்று விட்டால் தோஷம்
நீங்கிவிடும் என கூறினார்கள் .அதைத்தான்
நான் செய்தேன். இது தவறு என எனக்கு தெரியவில்லை மன்னா,.என்னை
மன்னித்து விடுங்கள்’என்றான்.
பீஷ்மன் சென்றான்.ஆனால் தன்னை அவமானப்படுத்திய அந்த பீஷ்மனை பழிவாங்க தன் மகன் சகுனியை தயார்
செய்கிறான்.
‘பீஷ்மனின் சமஸ்த்தானத்தை நம்மால்
வெல்லமுடியாது;அந்த அளவுக்கு நமக்கு படைபலம் இல்லை.
நீ அத்தகைய சமஸ்த்தானங்கள் உன் மூளையின் பலத்தால் வெல்ல
வேண்டும்’
என சொல்லிக்கொண்டே,தன்னிடம் உள்ள செங்கோலால் சகுனியின் காலை அடித்து உடைக்கிறான்.
‘தந்தையே வலிக்கிறது,
என்னால் தாங்க முடியவில்லை, தந்தையே, உயிரே
போகிறது’ என சகுனி ஓல மிடுகிறான்.
‘ஆம் வலிக்கட்டும்,நீ
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நான் சொல்லும் இந்த வார்த்தையும் உன்னை
நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும் அதனால் தான் இந்த காலை உடைக்கும் செயலை
செய்தேன்.’
அப்படி என்னதான் சொல்கிறான் என்பதை அவன் வாயிலாக கேளுங்கள்,
‘நான் இறந்த பிறகு என்னுடைய தொடை எலும்பை
எடுத்து அதில் பகடைகள் இரண்டை செய்ய வேண்டும்,அந்த பகடைகளை
நீ, என்ன எண் வேண்டும், என நினைத்து
எதிரி முன் உருட்டுகின்றாயோ அந்த எண்களாக நான் மாறுவேன்;எதிர்காலத்தில்
இந்த பகடைகளை வைத்து பல மன்னர்களை சூதாட்டத்திற்கு அழைத்து அந்த சமஸ்த்தானங்களை நீ
வெல்ல வேண்டும்.இது முழுக்க முழுக்க உன் மூளையின் வேலையாக இருக்கவேண்டும்’ என அவன் தன் மகனுக்கு சொல்லிவிட்டு இறந்தான்.
*******
அ.கு-
பகடை,சதுரங்கம்,-இவைகளெல்லாம்
மன்னர்குல விளையாட்டு, திருமணம் போன்ற விழக்காலங்களில்,
பொழுது போக்கிற்காகவும், சில சமயம்,பொன்னும் பொருளும் வைத்து வெற்றி,தோல்விகளுக்கு ஈடு
கட்டுவது உண்டு.
அதில் அதிஷ்ட்டம்,தரித்திரம் என்கிற எண்ணங்கள் கொண்ட இரண்டு
பிரிவினர் உண்டு.கத்தியின்றி ரத்தமின்றி எதிரியை உருவாக்குவதும்,எதிரியை அழிப்பதும் இந்த சூதாட்டத்தின் சூட்சமங்கள்.இன்றும் இது உலகம்
முழுக்க உள்ள மூட நம்பிக்கை வளர்க்கும் விளையாட்டுகள்.)
சூதாட்டம் ஒருவகை போதை தரும் விளையாட்டு.இதனால்
வளர்ந்தவர்களை விட அழிந்தவர்களே அதிகம்.தன் முன்னோர்கள் இதனால் அழிந்த வரலாற்றை
பீஷ்மன்,தன் வாரிசுகளான துரியோதனன்களுக்கு எடுத்துரைக்கிறான்.
ஆனால் சகுனி, சூதாட்டத்தில் தன்னை வெல்ல யாராலும்
முடியது,என மார்தட்டி பேசுவதை துரியோதனன்கள் ரசித்தனர்.
தர்மனும் இதே நம்பிக்கை கொண்டவன் என யாவரும் அறிந்ததே.‘சூதாட்டம் ஒரு விளையாட்டு யராவது சூதாட கூப்பிட்டால் வரமறுப்பவன் ஒரு
ஆண்மகனே அல்ல’ என்பது தர்மனின் அசைக்க முடியாத கருத்து.
*********
அஸ்தினாபுரம் விழாக்கோலம் பூண்டது. அரண்மனையில்
அமைக்கப்பட்டது அரக்கு மாளிகை என்பது பலருக்கும் தெரியாது.சுவர் அமைப்பும் தரை
தளமும் கண்ணாடி போல் மின்னியது பார்ப்பவரை பரவசத்தில் ஆழ்த்தியது.
விழாவுக்கு வந்தவர்கள் பெரும்பாலும் நெருங்கிய உறவினர்களே.ஒருவரைஒருவர்
குசலம் விசாரிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.அனைவருக்கும் அறுசுவை உணவு
பரிமாறப்பட்டது.குருவம்சத்து குலப் பெண்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கொஞ்சி
மகிழ்ந்தனர்.
70-சூதாட்டம்
விருந்து உண்டபின் பொழுது போக்க வேண்டுமே! எனவே அரசகுல விளையாட்டான
சதுரங்கம் மேடை அமைக்கப்பட்டது. பல சிற்றரசர்கள் சூதாட்டப் பார்வையாளர்களாக சுற்றி
அமர்ந்தனர்.
சூதட்டம் பாண்டவர்களுக்கு கைவந்த கலை;குறிப்பாக தர்மன்
இதில் பைத்தியம் கொண்டவனாக இருப்பான்.சூதட்டத்தில் தர்மனை வீழ்த்தவே முடியாது.
கவுரவர்கள் கூட்டத்தில் சகுனி மட்டுமே சூதாட்டத்தில் வல்லவன்.
சூதாடும் கணவனை எந்த குடும்ப பெண்ணும் விரும்ப மாட்டாள்!
ஆனால் எந்த காரணத்திற்காக சூதாடிக்கு தர்மன் என்ற பேர்
வைக்கப்பட்டது தெரியவில்லை.?
தர்மனை திட்டமிட்டு சூதாட்டத்தில் தோற்கடிக்கப்படுகிறான். இதில்
சகுனியின் சூழ்ச்சி வெல்கிறது; தோற்ற தர்மன், தன் தேசமான இந்திரபிரஸ்த்த கஜானாவையே
ஈடு வைக்கிறான்; தன்னிடம் எதுவும் இல்லை இனி ஈடு கட்ட என கைவிரிக்கிறான்.விதூரனும்
தன் அண்ணனிடம்,
‘இனி இந்த விபரீத விளையாட்டு வேண்டாம்,துரியோதன் சூதாடுவதை
இதோடு நிறுத்திக் கொள்ளச் சொல்லுங்கள்’
என மன்றாடுகிறான்.குருவம்சம் தன் கண்ணெதிரில் சீரழிவதை சபையில்
அமர்ந்திருக்கும் அஸ்த்தினாபுரத்தை நிறுவியவரும், திருதராஷ்ட்ரன், பாண்டு, விதூரன்
ஆகியோரின் பெரியப்பாவுமான பீஷ்மர், அஸ்தினாபுரத்தின் சக்ரவர்த்தியைப் பார்த்து,
‘திருதராஷ்ட்ர!,போதும்
இந்த விளையாட்டு, துரியோதனனுக்கு நிறுத்தச் சொல்லி உத்தரவிடு’என வேண்டுகோள் விடுக்கிறார். இருப்பினும் திருதராஷ்ட்ரனுக்குப் பிள்ளைப்பாசம்
கண்ணை மறைக்கிறது.
தன் அப்பாவின் மனதை மாற்றி விடுவார்களோ என துரியோதனன் ஐறும்
வேளையில் மீண்டும் விதுரன் அண்ணன் திருதராஷ்ட்ரனுக்கு சூதாட்டத்தை நிறுத்தச் சொல்லி
வேண்டுகிறான். கோபத்தின் உச்சம் அடைந்த
துரியோதனன்,
‘சித்தப்பா,எங்கள் வீட்டில் சோறுண்டு எங்களுக்கே துரோகம்
செய்ய நினைக்கிறாயா? பாண்டவர்களுக்காக பரிந்துபேச
எப்படி மனம் வந்தது?’ என சபையில் கர்ஜித்தான். விதுரன் அடங்கி விட்டான்.
சகுனி தன் திட்டம் நிறைவேறுவதில் குறியாக செயல்படுகிறான்.
‘தர்மா,சூதாட்டம் என்பது ஒருவன் தோற்றவுடன் எழுந்து
போய்விடுவதினால் தோல்வியிலிருந்து தப்பிக்கவே முடியாது என்பது உனக்குத் தெரியாதா?’
சகுனி தர்மனைப் பார்த்து மேலும், ‘மகுடம் தரித்த மன்னன் இழக்க மகுடம் உள்ளது,மானம்
காக்க மகனை பணையம் வைக்கலாம்,மகன் இல்லாத நிலையில் மனைவியை
வைக்கலாம்’ யோசனையை கேட்டவுடன், தர்மன்,
‘சூதாட்டத்தின் எழுதப்படாத விதிகளுக்கு
கட்டுப்படவேண்டும் என்பது தான், சூதாட்டத்தின் தர்மம் என்பது
நான் நன்கு அறிவேன்’.
தன் கடைசித் தம்பியும் வளர்ப்பு பிள்ளைகளான நகுலனை
சூதாட்டத்தில் பணையம் வைக்கிறான். பின்
சகாதேவனை சூதாட்டத்திலே இழக்கிறான்.
‘இனி ஏதுமில்லை பணயம் வைக்க’ என தர்மன் சொன்ன போது,சகுனி
‘வளர்ப்பு பிள்ளைகள் தானே போனால் போகட்டும் எனும்
எண்ணத்தில் தானே நகுலன், சகாதேவனை வைத்து செயல்பட்டாய்;ஏன் உன் உடன்பிறந்த தம்பிகள் யாரும் உன்
பேச்சை கேட்க மாட்டார்களா?’
சகுனி வினவியபோது, தர்மனை மீறி பீமனும் அர்ச்சுனனும் துடித்து
எழுந்து தாங்களும் தன் அண்ணன் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் தான்’ என சபையில் ஒரு சேரஅறிவித்தார்கள்.அர்ச்சுனன் மற்றும் பீமனும் பணயம்
வைக்கப்பட்டு அவர்களும் துரியோதனனுக்கு அடிமையானார்கள்.
விளையாட்டு விபரீதம் ஆனதை எதுவும் உணராத குரு வம்சத்து
பெண்கள் அஸ்த்தினாபுரம் அரண்மனையில் ஒருவரை ஒருவர் கொஞ்சிக் குலாவி
மகிழ்ந்திருக்கின்றனர். அலங்கார அரண்மனை வளாகத்தில் சகுனியின் சூதாட்ட விளையாட்டு
வெற்றிமீது வெற்றியை குவிக்கிறது. சபையில் அமர்ந்திருக்கும் பங்காளிகள் கூட்டம்
இந்த சூதாட்டத்தை இனியும் தெடர விரும்பாமல் மாமன்னன் திருதராஷ்ட்ரனுக்கு
சூதாட்டத்தை நிறுத்தச் சொல்லி வேண்டுகோள் விடுக்கின்றனர். இடைமறிக்கும் முரட்டு துரியோதனன்
சொல்லுக்கு பயந்து அவையில் அமைதி காக்கின்றனர்.
தம்பி பிள்ளைகளை சூதாட்டத்தில் பாண்டவர்களை,அடிமைப்படுத்துவதன் மூலம் இந்திரபிரஸ்த்தம் தேசத்தை தன் ஆட்சியின் கீழ்
கொண்டுவரலாம் எனும் மைத்துனன் சகுனியின் திட்டம் திருதராஷ்ட்ரனுக்கு (கவுரவர்களுக்கு)
மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கத்தியின்றி ரத்தமின்றி ஒரு நாடு தங்கள் வசமாவதை கவுரவர்கள்
பெரிதும் விரும்பியது மட்டுமல்லாமல் குருவம்சத்தின் மூத்தவன் தானிருக்க, தன் தம்பி மகன்கள் வளர்சியடைவதை தடுக்க இதுதான் சிறந்த வழி என
திருதராஷ்ட்ரன் எண்ணினான்.
இதற்கு வீணா போன சூதாட்ட விதிகளுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட
தர்மன் மக்கள் அனுதாபத்தை பெற்றான்.இது ஒன்றே தர்மனை சமுதாயத்தில் ‘தர்மன்’எனும் பெயர் நிலைத்துவிட்டது.
மேலும் சகுனி,‘ஏன் தங்கள் ஐவரின் மனைவியான பாஞ்சாலி,தங்கள் பேச்சுக்கு கட்டுப்பட மாட்டாளா?மனைவியும் ஒரு
மனிதனின் சொத்து தானே?அவர்களையும் பணயம் வைக்கலாமே?’
பின்பு அடங்கா தர்மன் தங்கள் ஐவரின் மனைவியான பாஞ்சாலியை
அடகு வைக்கிறான்.அதிலும் தோல்வியே.!
ஏதும் அறியா பாஞ்சாலி தன் ஓரகத்திகளான கர்னன் மனைவி,
துரியோதனன் மனைவி ஆகியோருடன் தங்கள் தங்கள் தாய் வீட்டு
பெருமைகளை ஒருவருக்கு ஒருவர் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டுருந்த வேளையில் அரண்மனை
ஏவலாள் உள்ளே வருகிறான்,
‘மகாராணி பாஞ்சாலி,
சூதாட்டத்தில் தங்களை,மகாராஜா தர்மர் பணையம் வைத்தார்,
அப்போது தோல்வியுற்ற தர்மர் தங்களை,
துரியோதனனுக்கு அடிமை ஆக்கிவிட்டார்’ அறிவித்த செய்தி கேட்ட
பாஞ்சாலிக்கு இடி போல் இறங்கியது. ஆடிப்போய் நொருங்கிவிட்டாள் ஐவருக்கும் பத்தினி.
ஏவலாளியைப்பார்த்து பாஞ்சாலி, “நான் ஒரு பெண்,
ஆண்களும் அறிஞர்களும் கூடியிருக்கும் அவைக்கு நான் வருவது சரியல்ல.இந்த சேதியை மன்னரிடம் தெரிவி’
மேலும் தெரிவிக்கிறாள்,`~ எனக்கு இது மாதவிலக்கு
நாள்,அவையில் பிரவேசிப்பது உசிதமல்ல’
ஏவலாள் திரும்பி வந்து துரியன் வீற்றிருக்கும் அவையில், “மன்னா ,மகாராணி பாஞ்சாலிக்கு, இது
மாதவிலக்கு நாளாம்,அவைக்கு வருவது உசிதமல்ல என மன்னருக்கு தெரிவிக்கச்
சொன்னார்’
வெகுண்டெழுந்த துரியன், தன் தம்பியைப்பார்த்து,
“துர்ச்சாதனா!, நீ போய், அவள் கூந்தலைப் பற்றி இழுத்துவா’
அண்ணன் கட்டளையை ஏற்று துர்ச்சாதனன்,பாஞ்சாலி இருக்கும் இடம் தேடி புயலெனப் பறந்தான்.
பாஞ்சாலி தன் தோழியரோடு அளவளாவிக் கொண்டிருக்கும் போது துர்ச்சதனன்
உள்ளே நுழைகிறான். பாஞ்சாலியைப் பார்த்து, “அண்ணன் துரியன் உன்னை சபைக்கு அழைத்து வரச்சொன்னார் வா’
மைத்துனரே,
~;நான் உன் அண்ணி,அது மட்டுமல்ல
நான் இந்திரபித்தத்தின் மகாராணி, என்னை ஆணையிட்டு அழைக்க வேண்டிய
அவசியமென்ன?’
`~அதெல்லாம் எனக்குத் தெரியாது,~அங்கே வந்து சொல்லிக் கொள்’
நான் வரமுடியாது என போய் சொல்’
துர்ச்சாதனன் அத்துமீறி நுழைகிறான்,அண்ணன் சொன்னது போல் அவள் தலைமயிரைப் பற்றி இழுத்துச் செல்கிறான்.
அவையில் ஆன்றோர்களும் சான்றோர்களும் வீற்றிருக்கின்றனர்.அவையின் நடுவே பாஞ்சாலி நிறுத்தப்படுகிறாள்.
பிதாமகன் பீஷமன், துரோணன், கிருபாச்சாரி,
திருதராட்டிரன் மற்றும் அத்தினாபுர ஆன்றோர்கள்,
சபையில் வீற்றிருப்பதைப் பார்த்து,கை கூப்பி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறாள்,
~சபையோரோ,வணக்கம்,நான் துருபத நாட்டின் இளவரசி,பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவி, இந்திரபிரத்தத்தின் மகாரணி,சந்திரவம்சத்து குலவிளக்கு,தர்மன் என் மூத்த கணவர் அவருக்கு
மட்டுமே நான் உரிமையானவள் அல்ல,அவர் சூதாட்டத்தில் தோற்றால் அதற்கு
என்னை ஈடுகட்ட,அல்லது அடிமைப்படுத்த, சூதாட்டத்தில்
அடிமையான என் கணவர் தர்மனுக்கு உரிமை ஏது? சொல்லுங்கள்?மற்ற கணவர்களான
நால்வரின் சம்மதம் பெற்றாரா? சொல்லுங்கள் பெரியோரோ?
அவையின் சான்றோர்ளான பீட்மர்,துரோணர் போன்றோர்
தலை குனிந்தனர்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த துரியன், ~ஏய் பேசாதே,என் தொடைமீது வந்து அமர்,ஐவரென்ன உனக்கு கணவர்கள், அதிகப்படியா என்னையும் கணவனாக்கிக்
கொள்ள முடியாதா? வா,வந்து என் தொடைமீது
வந்து உட்கார்.’ என தொடையைத் தட்டுகிறான்.
கோபமுற்று உணர்ச்சி வேகத்தை உள்ளடக்கிக் கொன்ட, இங்கிதம்
தெரிந்த, பாஞ்சாலி துரியோதனனிடம்,
‘அன்று நடந்த (இந்திரபிரஸ்த்த மணிமண்டபத்தில் துரியோதனன்
இடரி விழுந்த நிகழ்வின் போது துரவுபதி நகைத்த நிகழ்வு)
நிகழ்ச்சிக்கு சபை நடுவே மன்னிப்பு கோருகிறேன் மைத்துனரே!
என்னை விட்டுவிடுங்கள்’ என வேண்டுகிறாள். மேலும்,
‘சூதாட்டம் என்பது ஒரு விளையாட்டுதானே? இதற்குப்
போய் இந்த விபரீத போக்கு தேவையா?மன்னியுங்கள் மைத்துனரே!
‘மன்னிப்பா! மன்னிப்பு அளிப்ப தென்பது என்பது சத்ரியனுக்கு
இழுக்கல்லவா?’ சபையினரின் தீர்மானம் என்ன என கேட்கிறேன்’என்று சபையினரைப் பார்த்த
துரியோதனன்,
ஒரு கணம் தன் எதிரே நின்றிருக்கும் பாஞ்சாலியின், மயக்கும் விழிகளும், இனிக்கும் அதரங்களும், காண்போரை கவர்ந்து இழுக்கும் இரண்டு கொங்கைகளும்,ஆண்களை அள்ளும் அல்குலும்
ஒரு சேரப் பெற்ற பேரழகியான ஒரு பெண் போல தோற்றமளிப்பதை பார்த்த துரியன் மனம் நிலை தடுமாறுகிறது.
‘மைத்துனரே!,நான்
சந்திரவம்சத்து குலமகள்,மூத்த மருமகள்,என்னை
சபையில் அவமானப்படுத்துவது கூடாது,நல்லதல்ல’
‘சபையோரே ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்க்கைப்
பட்டவளை,
நாம் அவள் மானத்துக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்வது,சத்ரிய தர்மம்,அதுதான் ராஜ நீதியும் கூட,ஆனால் பல பேருக்கு வாழ்க்கைப் பட்டவளை, என்னை
கேலிக்கு ஆளாக்கியவளை, பன்னாட்டு மன்னர்கள் கூடியிருந்த வேளையில், என்னை
நிராயுத பாணியாக ஆக்கியவளை, நாம் மான பங்கப்படுத்தினால் என்ன?’
சபையினர்,நமக்கு ஏன் வம்பு என ‘துரியோதனன் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்’ என
கோஷமிடுகின்றனர்.
சபையில் திரவுபதி நிறுத்தப்படுகிறாள்.தம்பி
துர்ச்சாதனனுக்கு,அண்ணன் துரியோதனன் கட்டளையிடுகிறான்.
‘தம்பி, இவளுக்கு எதுக்கு புடவை? அறுத்தெரி’
துர்ச்சாதனன்,திரவுபதியை நெருங்குகிறான், அப்போது, திரவுபதி,
‘சபையோர்களே!,சான்றோர்களே!
இது நியாயமா? இது தர்மமா? சூதாட்டத்தில்
தோற்றது தர்மனின் செயல், தர்மன், என்னை
கேட்காமல் என்னை எப்படி சூதாட்டத்தில் பணையம் வைக்கலாம்?
தர்மனுக்கு மட்டுமே நான் மனைவி அல்லவே!மற்ற நால்வரிடமும் என்னை பணையம் வைக்க சம்மதம் கேட்டார? நான்
அக்னி குண்டத்தில் தோன்றியவள். என்னை மான பங்கப்படுத்தினால்,நான்
வடிக்கும் கண்ணீர்,
நான் இடும் சாபம்
குரு குலத்தையே அழிக்கும்.’சபையில் உள்ளவர்களை நோக்கி கைகூப்பி வணங்கி மன்றாடுகிறாள்.
71-திரவுபதிக்கு கிருஷ்னன் மானம் காக்க புடவை தரவில்லை
*****
இதை எதையும் காதில் வாங்காமல் துர்ச்சாதனன்,துரவுபதியின் புடவையை உருவினான்.திரவபதி கெஞ்சினாள், மன்றாடினாள், ‘யாருமே என் மானம் காப்பாரில்லையா?’
கடவுளே! கிருஷ்னா! நீ எங்கே போனாய்?
ஆபத்துக்கு உதவுவேன் என சொல்வாயே,என்ன ஆயிற்று உன்
வாக்குறுதி? எங்கே போனாய்?’
அப்போது துரியோதனன்,‘கிருஷ்னனின் மாய மந்திரம் எல்லாம் என்ன ஆயிற்று,?அப்படி ஒருவன் இருந்தால் தானே உன்னை வந்து காப்பாற்றுவான்?எத்தனை நாளைக்குத் தான் போக்கிரி கிருஷ்னன் பேரைச்சொல்லி ஏமாறப் போகிரீர்கள்?அல்லது ஏமாற்றப் போகிரீர்கள்?’ திரவுபதியைப்
பார்த்து கேட்கிறான்.
துர்ச்சாதனன் முரட்டுப் பிடியிலிருந்து தன் கைகளை விடுவித்துக் கொண்டாள். ‘மூடனே! உன் அண்ணன் சொன்னால் இப்படித்தான் அடாத செயல் செய்வதா?உனக்கு சுய புத்தியே இல்லையா?
திரவுபதி,மார்பை இரு கைகளாலும் மூடி,தலை மயிரை தன் ஆடையாக பரப்பி,
குனிந்து தரையில் குத்துக் காலிட்டு உட்கார்ந்தாள். இயற்கையில்
பெண்களுக்கு அமைந்திருக்கும் உடலைச் சார்ந்த உருப்புகளால் தங்கள் நிர்வாணங்களை
தாங்களே மூடிக்கொள்ளலாம் அல்லது உடலை பாது காத்துக் கொள்ளலாம் .இது தான் அன்று
அவையில் நடந்தது.
(செவி வழியாகப் பேசப்படும் கதையான, கிருஷ்னன் புடவை தந்தான்,துரவுபதி மானத்தைக்
காத்தான் என்பது எல்லாம் கட்டுக்கதை.கதை கேட்பவர்களுக்கு
விரசம் ஏற்படக் கூடாது எனும் கருத்தில் கதா காலட்சேபம் செய்தவர்கள் சொல்லித் திரிந்த
கற்பனைக் கதை தான் இன்று உலா வருகிறது.)
72-பாஞ்சாலி சபதம்
அவையில் துரவுபதியை தன் மகன்கள் மான பங்கப்படுத்தினார்கள்
என கேள்வியுற்ற காந்தாரி தன் பணிப்பெண்ணை அழைத்து ஆடை அணிவிக்க செய்கிறாள்.ஆடை
அணிந்த திரவுபதி துர்ச்சாதனனைப் பார்த்து
சபதமிட்டாள்,
‘என் கைகளைத் தொட்ட உன் கைகளை முறிக்காமல்
விடமாட்டேன்,என் கூந்தலை பிடித்து இழுத்து அலங்கோலமாக்கிய
என் தலை மயிரை இனி முடியேன்,உன் மார்பைக் கிழித்து அதில்
வழியும் உதிரம் கொண்டு என் கூந்தலை முடிப்பேன் ,இது சத்தியம்’
ஒரு பெண்ணுக்கு பத்துபேர் மத்தியில் மானம் காப்பாற்றப் பட்டிருந்தால்
இந்த அளவுக்கு ஆவேசமும்,பழி வாங்கும் எண்ணமும் ரத்த வெறியும் ஏற்படாது.இதிலிருந்து என்ன தெரிகிறது,கிருஷ்னன், அவைக்கு வரவில்லை, அப்படி
யொரு மாயமந்திரம் செய்யவில்லை. கிருஷ்னன் புடவையை கொடுத்திருந்தால் திரவுபதிக்கு
மானம் போயிருக்காது.திரவுபதி சபதமேற்க அவசியமே இருந்திருக்காது.இது தான்
உண்மை.மற்றதெல்லாம் கட்டுக்கதை. (2)
மானம் இழந்த திரவுபதி,ஆவேசம் அடைந்து சபையில் கர்ஜித்தாள், இதுவரை யாரும் கண்டிராத தோற்றம் கொண்டாள்.இரண்டு கண்களும் கோபத்தால்
துருத்திக்கொண்டு வெளியே(முண்ட கண்ணி அம்மன்,கோலவிழி அம்மன்)
தோன்றியது, நாக்கை நீட்டி (பத்ரகாளியம்மன்) பல்லால்
கடித்தாள் (துர்கை) பார்ப்பவர்களை அச்சுறுத்தியது.
அதுபோன்ற ஒரு பெண்ணின் தோற்றத்தை இதுவரை யாரும் கண்டதில்லை.செய்வது
அறியாது பாண்டவர்கள் திகைத்து நிற்கின்றனர்.அவையின் சான்றோர்களான, பீஷமன்,துரோணர், கிருபாச்சாரி மற்றும்
விதுரன் வாய்மூடி மவுனமானார்கள். அதிர்ச்சியில் உறைந்தார்கள். சுதாரித்துக் கொண்ட
காந்தாரி,
‘அம்மா துரவுபதி,
குலமகளே சந்திர வம்சத்தை சாபமிடாதம்மா! என்னையும் மன்னரையும் மன்னித்துவிடம்மா’ காந்தாரி தன் மருமகளிடம் வேண்டுகிறாள், மேலும்
காந்தாரி கூறுகிறாள்,
‘பங்கப்பட்ட அக்கினிப் புத்திரியே நீ
சாபமிட்டால் நம் குலம் அழிந்து விடும்மா?’ இதைக் கேட்ட
திருதராஷ்ட்ரன், ‘மருமகளே! நான் அதிகாரமற்ற மன்னன். என்னை
மன்னித்துவிடும்மா’
மனமிறங்கிய பாஞ்சாலி,‘மாமா,அத்தை உங்கள்
இருவரையும் என் சாபம் கட்டுப்படுத்தாது, ஆனால் மூடர்களான
உங்கள் பிள்ளைகளை சாபமிட்டே தீருவேன் இது சத்தியம்’
(சூதாட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் சட்ட திட்டங்கள்
எதுவுமே எழுதப்பட்டது அல்ல,இன்றுவரை எழுதப்படவில்லை. அதே நேரத்தில் சூதாட்டம்
என்பது ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விளையாட்டாக உலக முழுக்க இயங்கிவருகிறது.மனித
குலத்தை நாசப்படுத்தும் இது போன்ற விளையாட்டுகள் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ இனத்திற்கோ சொந்தமானது அல்ல.சூதாட்டம் போன்றே
குதிரைப் பந்தயமும் தனி மனித விளையாட்டோ அல்லது பொழுது போக்கல்ல,இது ஒரு ‘கும்பல் குண விளையாட்டு’
அப்படி உலக மக்களிடையே பரவி யிருக்கும் தனிமனித சுய இன்ப
விளையாட்டு/பொழுது போக்கு என்பது உலகெங்கும் பரவியுள்ள சுகாதாரக் கேடான
அம்சங்களில் முதன்மையானது
தனிமனித சுய இன்பமான
1-மது அருந்துவது,
2-கஞ்சா புகைத்தல்,
3-புகையிலை சுவைத்தல்
4-வாய்க்கு ருசியாக எதையாவது தின்று கொண்டே இருப்பது. இவைபோன்ற சமுக அவலங்கள் இதிகாச காலம் தொட்டு இந்தியா
மட்டுமல்ல உலக அனைத்திலும் பரவியுள்ளது. )
சூதாட்டத்தில் தோல்வி யுற்ற பாண்டவர்களை துரியோதனனிடம்
அடிமைப்பட்டு இருக்க கூடாது என அவையில் உள்ள சான்றோர்கள் பீஷ்மனுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர். பீஷ்மனும், மன்னனுக்கு வேண்டுகோள் வைக்கிறான்.
திருதராஷ்ட்ரன்,அஸ்த்தினாபுரம் மன்னன் எனும் அதிகாரத்தில்
துரியோதனனுக்கு கட்டளை யிடுகிறான்,
‘துரியோதனா,பாண்டவர்கள்
மற்றும் அவர்கள் மனைவியான துரவுபதி அவர்களை உடனே விடுதலை செய்,இது அரச கட்டளை.’ துரியோதனன்,அமைதியானான்.
பாண்டவர்கள் இந்திர பிரஸ்த்தம் சென்றார்கள்.ஆனால் துரியோதனனுக்கு
ஆத்திரம் அடங்கவில்லை.
‘ஒரு நாட்டின் மன்னனின்மகனாக இருந்தும், பஞ்ச பனாதிகளான பாண்டவர்களை ஒடுக்க முடியவில்லையே,பீமனின்
வாய்ச்சவடாலும், அர்ச்சுனனின் அடங்காமையும் தொடர்கிறதே!’ சகுனியிடம் தொடர்ந்து ஆலோசிக்கிறான்.
சரியான காரண காரியங்கள் இல்லாமல் பங்காளிகளை நாட்டைவிட்டு
விரட்ட முடியாது,எனும் சகுனியின் திட்டத்திற்கு திருதராஷ்ட்ரனை இணங்க
வைக்கின்றனர்.
அதாவது கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமின்றி ஒரு யுக்தி
வகுக்கப்படுகிறது. அதுதான் சூதாட்டத்தின் மூலம் மன்னனை மட்டுமல்ல நாட்டு மக்களையே அடிமைப்படுத்துவது.
73-மீண்டும் சூதாட்டம்
மீண்டும் பாண்டவர்களை சூதாட்டத்திற்கு அழைப்பது என முடிவு
செய்யப்பட்டது.
பாண்டவர் இந்திரபிரஸ்த்தம் வந்த ஓரிரு நாட்களில்,அஸ்த்தினாபுரத்திலிருந்து தூதுவன் வந்தான்.தர்மனைப் பார்த்து,
‘மன்னருக்கு வணக்கம் தங்களை மீண்டும் சூதாட
வரும் படி மன்னர் ஒலை அனுப்பி உள்ளார்.’ஒலையை படித்த தர்மன்
மிரண்டு போகவில்லை மாறாக,‘
‘சூதாட்டத்திற்கு அழைப்பு விடுத்தால் அதை
ஏற்று நாம் சூதாடுவதுதான் முறை, இது தான் சத்ரியனுக்கு அழகு,’ என தர்மன் சொன்னதை மற்றவர்கள் கேட்டு மவுனமானார்கள். **
(வாசகர்கள் நன்கு கவனிக்க வேண்டும் சூதாட்டம் என்பது ஒரு
நல்ல குடும்பஸ்த்தனுக்கு தேவையா?,
சமுகம் இதை எப்படி தர்மன் நல்லவன் என ஏற்றுக்
கொண்டது-இன்றும் இதை எவரும் சிந்தித்தாக தெரியவில்லை. இதில் பாண்டவர்கள் மீது நாட்டு மக்களுக்கு
அனுதாபம் எப்படி வந்தது?அனுதாபம் வரவழைக்கப் பட்டது.எப்படி?
பிராமணர்களை ஏற்றுக் கொள்ளாத கவுரவர்களை அழிக்க பங்காளிகளான
பாண்டவர்களுக்கு மூளை சலவை செய்யப்பட்டது.
கவுரவர்கள் அதர்மக்காரர்கள் (ஆரியர்களின் கடவுள்
வழிபாட்டுக் கொள்கையை ஏற்காததால்) என
சுய சிந்தனையற்ற மக்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டது, நல்ல பலன்
கிடைத்தது,அதனால் ஆரியர்கள்,அறம் காத்த வர்மாக்களின் அனுதாப ஓட்டுக்களை பெற்றனர்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? மக்களின் குடும்ப வாழ்கையை
நாசமாக்கும் குடி,சூதாட்டம் இவையெல்லாம் ஆண்மைக்கு அழகு எனவும்,சமுக அந்தஸ்த்து
எனவும் பெண்கள், ஆண்களின் போகப்பொருள் எனவும் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது எனவும்
சுய அறிவற்ற பெண்களை பிராமணர்கள் மூளைச் சலவை செய்தனர்.இன்றும் இந்த உண்மைய பற்றி
சமுகம் சிந்திக்கவே இல்லை.
இப்பொழுதும் உலகெங்கும் ஆண்களால் நியாயப்படுத்தப்பட்ட
தொழிலாக சூதாட்டமும், குடியும் அங்கிகரிக்கப்பட்ட சமுக அந்தஸ்த்தாக(அவலங்களாக) உள்ளது. ஆனால் எந்த நாடும் இதை
அங்கிகரிக்க வில்லை,சட்டத்துக்கு புறம்பான செயலாகவே கருதப்படுகிறது.)
அப்படி இருக்க பாண்டவர்களை மகாபாரதத்தில் புனிதர்களாக
எப்படி மக்களால் அங்கிகரிக்கப்பட்டனர்?
ஆசிரியர் கருத்து-
(ஆயர்பாடியில் கோபிகைகளுடன் ஆடு மாடுகளுடன் சுற்றித்திரிந்த
கண்ணன் ஒரு கடவுள் அவதாரம் என்பதை மக்களிடையே கதா காலட்சேபம் மூலம் இங்கே
ஆரியர்கள் எப்படி விவரிக்கின்றனர் என்பதுதான் முக்கியம்.ஆரியர்களின் கடவுள்
கொள்கைப்படி
“துன்பத்தில் உள்ள மக்களில் யார் கடவுளை வேண்டி
வணங்குகின்றனரோ, அவர்கள் படும் துன்பத்தை
உடனே கடவுள் நீக்குவார்” என்பதுதான்.
துரவுபதியை அரசவைக்கு இழுத்து வந்தார்கள்.மனைவியை வைத்து
சூதாடுவது மானக்கேடான செயல் என்பதை சர்வ தர்ம நியாயங்களை தெரிந்த பாண்டுவின் மூத்த
மகனான யுதிஸ்ட்ரனுக்கு(தர்மன்) எப்படி தெரியாமல் போய்விட்டது?என்பதை மகாபாரதக்
கதைகளில் எங்கும் விவரிக்கப்படவில்லை.
கதை கேட்டவர்களுக்கும் அத்தகைய கேள்வி ஞானம் இல்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ராமாயண,
மகாபாரத கதைகளில் வரும் பெரும்பான்மை மக்கள் கருத்துக்கு எதிரான நடத்தை உடைய
கதாபாத்திரங்களின் நியாயம் இருப்பதை உணர்ந்து பட்டிமன்றங்களை நடத்தி மக்களை மறு
சிந்தனைக்கு மாற்றி வருகின்றனர்.
கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்களாக இருப்பவர்களை,கெட்டவர்களாகவும்,அவர்களுக்கு மரணதண்டனையே சரியான தீர்வு என கதை
புனையப்பட்டதை தவறு என சுட்டிக் காட்டும் கட்டுரைகளும் நூல்களும் வெளிவரத்
துவங்கின.அந்த வரிசையில் தான் இதிகாசக் காவியங்களை மறு ஆய்வு செய்கிறோம்.
திரு விஜயராஜ் என்பவர் மகாபாரத கதா
பாத்திரங்களை(துரியோதனனை ஆதரித்து) மறு ஆய்வு செய்து நூல் வெளியிட்டுள்ளதாக நடிகர்
திரு சிவகுமார்அவர்களின் கட்டுரை படிக்க நேர்ந்தது.துரியோதனனைப் பற்றிய
ஆய்வு சரியான கோணத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.பக்தியிலும் பகுத்தறிவை காணும்
பக்குவம் உள்ளவர் திரு சிவக்குமார். இருப்பினும் நம் பகுத்தறிவு சிந்தனைக்கு சற்று
மாறு பட்டவர்.
கவுரவர்கள் சபையில் பாஞ்சாலியை காப்பாற்ற கடவுள் அவதாரமாக
கிருஷ்னன் தோன்ற வில்லை என்பது தான் துரியோதனன் கூற்று. நாமும் அவ்வழியே நின்று
மகாபாரதத்தை அலசுவோம்.
ராவணனைப்போல் துரியோதனனும் கடவுள் மறுப்புக் கொள்கை
கொண்டவர்கள் வரிசையில், திருதராஷ்ட்ரன், சகுனி, சிசுபாலன், கம்சன், கர்னன், துர்ச்சாதனன்
போன்றோர் யாவரும் மக்கள் வெறுக்கும் அளவுக்கு கெட்டவர்களாக சித்தரிக்கப் பட்டிருப்பார்கள்.
ராமாயணத்தில் ராவணன் தம்பி கும்பகர்னனும், மகாபரத கதையில் திருதராஷ்ட்ரன் தம்பி
விதூரனும் அறவழி சிந்தனையாளர்களாக சித்தரிக்ப் பட்டிருப்பார்கள்.)
74-கிருஷ்னாவதாரம்-ஒரு கற்பனை கதாபாத்ரம்
சூதாட்டத்தில் சூரன் எனப் பெயர் எடுத்தவன்,தர்மன்;துரியோதனனுக்கோ
சூதாட தெரியாது என்பது சகுனிக்குத் தெரியும்.
எனவே‘எனக்கு பதில் என் மாமன் சூதாடுவார்’ என சபையில்
துரியோதனன் அறிவித்தபோது,தர்மன் எதிரப்பு தெரிவித்து இருக்க வேண்டும்.அல்லது
‘எனக்கு பதில் எல்லாம் வல்ல கிருஷ்னன் சூதாடுவான்’ என தர்மன் பதிலுக்கு அறிவித்திருக்க
வேண்டும்.தர்மன் அவ்வாறு செய்யவில்லை;காரணம் கண்ணன் கடவுள் அவதாரமே இல்லை,அது ஒரு
கற்பனை அவதாரமே !இந்த இரண்டு சம்பவம் மட்டுமல்ல இது போல் பல சம்பவங்கள் உள்ளன.(3)
(வனவாசத்தில் துர்வாசர் முனிவரிடம் இருந்து காப்பாற்றும்
போதும்,(4)பார்க்க பக்கம் 349
பின்னாளில் 18-ம் போரில் பீஷ்மன் தன்னை சிகண்டியிடமிருந்து
காப்பாற்ற வேண்டியபோது பீஷ்மனின் கோரிக்கையை நிராகரித்தபோது(5)
கண்ணன் மகாபாரதத்தில் மக்களை திசை திருப்ப அல்லது மக்கள்
மனதில் ஆன்மிக சிந்தனை வளர்க்க படைக்கப்பட்ட.கற்பனைக் கதா பாத்திரம் மட்டுமே.
இன்றளவும் வழிவழியாக செவி வழி கேட்ட கதைகளால் கண்ணன் கடவுள் அவதாரமாக மக்கள் மனதில் வாழ்ந்து
கொண்டிருக்கின்றார். சபையின் மூத்தவரும்.குருவம்சத்தின் தலை மகனுமான பீஷ்மரைப் பார்த்து
துரவுபதி கேட்கிறாள்.
‘என் கணவர்களில் மூத்தவர் தர்மர் ,அவரே சூதாட்டத்தில்
தோற்று அடிமைப்பட்டவர்;அவர் எப்படி ஐந்து பேருக்கு மனைவியான என்னை,நான் தர்மருக்கு
மட்டுமே சொந்தம் என எப்படி முடிவுக்கு வந்தார்?
மனைவியை எப்படி சூதாட்டத்தில் ஈடுகட்டலாம்?இது தர்மமா?இது நியாயமா?
குருவம்சத்தில் பெண்களை கவுரவமாக வாழ முடியாத?ஒரு அபலைப் பெண்ணுக்கு பாதுகாப்பு
கிடையாதா?’பாஞ்சாலி கண்ணீர் விட்டு கதறுகிறாள்.பீஷ்மனோ செய்வதறியாது சபை நாகரிகம்
அறிந்து அமைதி காக்கிறார்.
தன் மானத்தை காப்பாற்ற அல்லது இழந்து விட்ட மானத்தை பெற
முடியாது என உணர்ந்த பாஞ்சாலி கவுரவர்கள் அழிய சாபம் இடுவதாக சபையில்
அறிவிக்கிறாள். பதறிப்போன கற்புக்கரசி காந்தாரி, மருமகள் பாஞ்சாலியை பார்த்து வேண்டுகோள்
விடுக்கிறாள்.
பெரியவர்களை மதிக்க வேண்டும் எனும் ஒரே கருத்தில் பாஞ்சாலி
மனம் இறங்குகிறாள். திருதராஷ்ட்ரனும்,மருமகளைப் பார்த்து, ‘நான் உனக்கு 3 வரம்
தருகிறேன் அம்மா,என்ன வரம் வேண்டும் என கேள்’
என்று பாஞ்சாலியைப் பார்த்து கேட்கிறான்.
இத்தருணத்தை சரியாக சமயோசிதமாக பயன்படுத்துகிறாள் பாஞ்சாலி,
‘சரி உங்களை சாபம் இடுவதில்லை என தீர்மானிக்கிறேன்,முதல்
வரமாக அடிமையாக உள்ள என் கணவர்களை உடனே விடுவிக்க
ஆணயிடவேண்டும்.
இரண்டாவதாக இழந்த நாட்டை எங்கள் வசம் ஒப்படைக்க
ஆணையிடுங்கள்,என்கிறாள்.
மூன்றாவதாக,என்னை மானபங்கப்படுத்திய துரியோதனனையும்
துர்ச்சாதனனையும் தண்டிக்கவேண்டும்' என சொல்லி முடித்தவுடன் சபையில் சகுனி
பாஞ்சாலியின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறான்.
‘சத்திரியர் குலத்தில் சூதாட்டத்தின் விதிகளை கேலிக்கு
உள்ளாக்கி விட்டதாக’ சகுனி, சபையில் அறிவித்தவுடன் அதற்கும்
மற்றவர்கள்,
‘ஆமாம்’ போட்டனர்.
மீண்டும் சூதாட்டம் சர்ச்சைக் குள்ளானது.
மன்னர் ,திருதராஷ்ட்ரன் ஆணையை நாம்
மதிக்கவேண்டும்.இனி பாண்டவர்கள் அடிமையில்லை. ஆனால் இந்த நாட்டை ஆள வேண்டுமானால்
மீண்டும் பாண்டவர்கள் சூதாடவர வேண்டும், வெற்றி பெற்றால்
இந்திரபிரஸ்த்தம்,இல்லையேல் காட்டுக்கு செல்ல வேண்டும்,அங்கே அவர்கள் சதந்திரமாக
ஆளட்டும் அல்லது வாழட்டும்’ எனும் புதிய நிபந்தனையை விதிக்கிறான்.
** இதற்கு சூதாடி தர்மனும் உடன் படுகின்றான்.
(வீட்டிலும் சரி,நாட்டிலும் சரி பெரியவர்களை மதிக்கத்
தெரியாத,அல்லது மதிக்காத சமுக சீர் கேட்டிற்கு திருதராஷ்ட்ரன் குடும்பம் ஒரு
எடுத்துக்காட்டு.குடும்பத்தில் பெரியவர் என்கிற முறையில் தன் அப்பாவையும் சரி தாத்தாவான
பீஷ்மரின் சொற்களையும் மதித்து நடக்க துரியோதனனுக்கு தெரியவில்லை அல்லது அவன் தாய்
சொல்லி வளர்க்க வில்லை. இதுவே அவன் அழிவிற்கு காரணம்.
கடவுளால் மட்டுமே திக்கற்றவர்களை காப்பாற்றுவார் எனும்
கடவுள் கொள்கையை இங்கு நிலை நாட்ட, கடவுள்தான் மனிதனின் அனைத்து சுக
துக்கங்களுக்கும் காரணம் ,எனவே கடவுளை
எப்பொழுதும் நினைத்து ஆரதிக்க வேண்டும்,கடவுளை வணங்கி அவன் அருள் பெற வேண்டுமானால்
பிராமணர்கள் மூலம்தான் வணங்கவேண்டும்.அப்பொழுதுதான் கடவுளின் பூரண அருள்
கிடைக்கும் என அப்பொழுது போட்ட விதையை இன்று பலன் தரும் மரமாக ஆரியர்கள்
அனுபவிக்கின்றனர்.
நிருபணம் செய்ய பலமான பொய்க் கதைகளை கட்டவிழ்க்கின்றனர்.
கண்ணனின் லீலை கதைகளைக் கேட்ட மக்கள் மெய்மறந்து போனார்கள். கதை சொல்லும் நபர்களை
கேள்வி கேட்க யாருக்கும் தெளிவில்லை துணிவு இல்லை.கடவுள் நம்பிக்கையில்லா
திருதராட்ரன் வகையராக்களுக்கு மக்கள் ஆதரவு குறையத் துவங்கியது. )
***********
சுமார் 13 ஆண்டுகள் காட்டில் வசித்தால் மீன்டும்
பாண்டவர்களுக்கு நாட்டில் பங்களிப்பதைப் பற்றி யோசிக்கலாம் எனும் துரியோதனன்
திட்டத்திற்கு இசைந்து பாண்டவர்கள் வனவாசம் செல்கின்றனர்.
வயதாகிவிட்ட குந்தியால் வனவாசம் செய்ய முடியாது என்பதை
உணர்ந்த திருதராஷ்ட்ரன், அஸ்த்தினாபுரம் அரண்மனையில் தங்க
வேண்டுகிறான். காந்தாரியும் குந்தியை வேண்டுகிறாள்.ஆனால்,
‘என் பிள்ளைகளை விட்டு நான் பிரிந்திருக்க
மாட்டேன்’ என பாண்டவர்களோடு வனம் செல்ல விரும்புகிறாள்.
திரவுபதியோ,வயதான காலத்தில் மாமியாரை பராமரிப்பது
என்பது ஒரு கைக் குழந்தையை பாரமரிப்பது போலாகிவிடும் மேலும் மாமியார் இருந்தால்
கணவர்களுக்கும் தனக்கும் உள்ள நெருக்கம்,அன்னியோன்யம்,அன்னியப்பட்டு விடும் என கணக்குப் போட்டு,
‘அத்தை தங்கள் ஐந்து பிள்ளைகளையும் நான் என்
கண்கள் போல் பாதுகாப்பேன் நீங்கள் இங்கேயோ ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.’ என்கிறாள் பிள்ளைகளும் இதை வலியுறுத்துகின்றனர்.இதை கேட்ட விதுரன்,
‘அண்ணி நீங்கள் அஸ்த்தினாபுரத்தில் என்
வீட்டில் தங்கிக் கொள்ளுங்கள்.என் மனைவி சுலபா தங்களை நன்கு பார்த்துக் கொள்வாள்.’ என மைத்துனன் கூறியதும் விதுரன் வீட்டில் தங்க ஒப்புக் கொள்கிறாள்.
காட்டில் கூடாரம் அமைத்து பாண்டவர்கள் காய்கனிளை உணவாக
உண்டு துறவு வாழ்க்கை வாழ்கின்றனர். காட்டில் இவர்கள் எப்படி வாழ்கின்றனர் என்பதை
காண துரியோதனன் ,துர்ச்சாதனன் மற்றும் சகுனி ஆகியோர் திட்டமிடுகின்றனர். இதற்கு
அஸ்த்தினாபுர மன்னரிடம் அனுமதி பெற வேண்டும். தந்தை மறுக்கின்றார். ஆனால்
துரியோதனனின் பிடிவாதத்தால் திருதராஷ்ட்ரன் அனுமதிக்கிறான்.
‘வனவாசம் செய்யும் பாண்டவர்களுக்கு எந்த
விதத்தொல்லைகளும் தரக்கூடாது.’எனும்
நிபந்தனையுடன் அனுமதிக்கிறான்.மருமகள் பானுமதியிடம் ,
‘துரியோதனன் வார்த்தையில் எனக்கு நம்பிக்கை இல்லையம்மா, நீதான்
இதற்கு பொறுப்பு.’ என தன் மருமளுக்கு திருதராஷ்ட்ரன் அறிவுறுத்தினான்.மருமகளோ,
‘நான் பார்த்துக் கொள்கிறேன் மாமா’ என உத்ரவாதம் அளிக்கிறாள்.
75-துரியோதனன் கந்தர்வர்களிடத்தில் சிறை
No comments:
Post a Comment