Tuesday, January 10, 2017

அ.கா. வ.தொ-10



87-கிருஷ்னனின் தூது

பாண்டவர்களோடு மச்சிய தேசத்தில் தங்கியிருக்கும் திரவுபதி ,அமைதி வேண்டி அஸ்த்தினாபுரம் செல்ல இருக்கும் கிருஷ்னனை சந்தித்துப் பேசுகிறாள்,

கிருஷ்னா,எனக்கு நேர்ந்த கதியைப் பார்த்தாயா? அக்கினி குண்டத்தில் தோன்றியவளை-அக்னி குலத்தில் தோன்றியவளை மானபங்கப் படுத்தினான் துர்ச்சாதனன், அந்த கேடு கெட்டவன் என்னை பங்கப்படுத்தவா நான் பிறப்பெடுத்தேன்?
                                     
நீ போர் வேண்டாம் என சமாதானம் செய்தால் என் சபதம் என்ன ஆவது? என்னை பங்கப்படுத்திய காட்சியை நினைக்கும் போதெல்லாம் என் ரத்தம் கொதிக்கிறது கிருஷ்னா!

அவள் மேலும் தொடர்ந்தாள், ‘பாண்டவர்களும் கவுரவர்களும் பங்காளிகள் அவர்கள் சமாதானம் கொள்வார்கள், நான் அன்னியப் பெண்தானே நான் மானபங்கப்பட்டதால் அவர்களுக்கு என்ன நஷ்ட்டம்?
என் தம்பி கேட்டால் என்னைத் தொட்டவனை தலையை வெட்டி தரையில் உருட்டுவான்.என் அக்கா சிகண்டி கேட்டால் சீறி எழுவாள்,
என் தந்தை இதை கேள்விப்பட்டால் அஸ்த்தினாபுரத்தை தரை மட்டமாக்குவார்.நீ போ கிருஷ்னா போ, சமாதானத்தூது போ,ஆனால் என்னை தொட்டவன் மார்பை கிழிக்காமல் விடமாட்டேன் அதுவரை என் கூந்தல் அவிழ்ந்தே இருக்கும்.துரவுபதியின் ஆவேசப் பேச்சைக் கேட்டு கிருஷ்னன் ஆடிப் போய் விட்டான்.

(சத்ரியர்களை ஒழிக்க ஒரு சத்ரியப் பெண்ணாணன திரவுபதியின் கோவத்தை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் ,இவளை உசுப்பேற்றியே இவளுடைய கணவன்களை போர்க்களத்தில் இறக்கி இவர்கள் இனத்தையே(சத்ரியர்களை)அழிக்க கிருஷ்னன் திட்டமிடுகிறான்.மகாபாரத கதா நாயகர்கள் இதை யாரும் அன்று உணரவில்லை)

அநீதியைக்கண்ட ஒரு சத்ரியனுக்கு கோபம் வரும் என எனக்கு தெரியும், ஆனால் ஒரு சத்ரியப் பெண்ணுக்கு, அறம் தவறிய சத்ரியனை அழிக்க இவ்வளவு பெரிய அழிவு சக்தி உன்னுள் எழும் என நான் இப்போது தான் காண்கிறேன், திரவுபதி.

கிருஷ்னன் மேலும் கேட்கிறான், ‘துரவுபதி,உன்னை மானபங்கப்படுத்திய அக்கணமே துரியோதனனை நீ கொன்றிருக்க வேண்டும்,
அது உன் தனிப்பட்ட பிரச்சினையாக அப்போதே முடிந்திருக்கும்.அதை ஏன் அப்போது செய்யவில்லை.

காலம் கடந்து இப்போழுது உன்னால் போர் மூள நீ காரணமாகிவிட்டாய் உலகம் உன்னை பழிக்காதா? உங்கள் இருவரோடு முடியக்கூடிய பிரச்சினையை இரு நாட்டு அப்பாவி மக்களுக்கு அல்லவா உயிரிழப்பு ஏற்படும்? இது தேவையா?’

அவேசம் குறையாத திரவுபதி கேட்கிறாள், ‘அப்போ என் அவிழ்ந்த கூந்தலை முடிக்க வழியே இல்லையா?’

சரி நான் துரியோதனனிடம் செல்கிறேன், சமாதான முயற்சி என் கடமை,ஆனால் துரியோதனன் சமாதனத்திற்கு வழி விடுவானா என்பது சந்தேகம், உன் கோரிக்கைதான் நிறைவேறும் என நினைக்கிறேன்,நான் வருகிறேன்

கிருஷ்னன் மேலும் தொடர்கிறான்,சகோதரி, நான் யது குலத்தவன்,என்னுள் ஏதோ ஒரு சக்தி உள்ளது என யாவரும் நினைக்கின்றனர். அப்படியெல்லாம் ஒரு அபூர்வ சக்தி என்னிடம் இருப்பதாக தெரியவில்லை.ஆனால் இந்த மானிடர்களை அன்பு,அகிம்சை நீதி நேர்மை,எனும் தர்ம வழிகளை காக்கத்தான்
நான் பிறப்பெடுத்தாக நான் நினைக்கிறேன். அநியாயம் செய்பவர்களை அழிக்க வல்ல சக்ர வித்தையை (சுதர்சன சக்ரம்)
எனக்கு என் குருக்களான பரத்வாஜர்,பரசுராமர் ஆகியோர் அருளினார்கள்.

இந்த உலகில் இந்த அழிவு ஆயுதத்தை அதர்மத்தை அழிக்கவும்,தர்மத்தை நிலை நாட்டவும் மட்டுமே பயன் படுத்தவேண்டும் என என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார்கள். இந்த சக்ரத்தை சுழற்றி(DISC THROW-வட்டெரிதல்) எதிரியை தாக்கும்  கலை என்னைத் தவிர இந்த உலகில் யாருக்கும் தெரியாது.

கிருஷ்னன்,மேலும் கூறுகிறான்,‘அக்னி புத்ரி, உன் எண்ணங்களை நான் அறிவேன்,உன் சபதம் நிறைவேறும்,ஆனால் நான் சமாதானம் செய்யப் புறப்பட்டு விட்டேன்,அது என் கடமை.
திரவுபதி புரிந்தும் புரியாதவளாக குழம்பினாள்,கண்ணனின் வார்த்தைகளில் உள் அர்த்தம் பொதிந்திருக்கும் என நினைத்துக் கொண்டாள்,எனினும் தன் சபதம் நிறைவேற பீமனுடனும்,அர்ச்சுனனுடனும் தொடர்ந்து பேசி அவர்களை உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறாள்.

கிருஷ்னன், அஸ்த்தினாபுரம் வந்தடைந்நான். ஆரவராமாக வரவேற்றார்கள்.முதன் முதலில் யதுகுல இளவரசி குந்தி, சத்ரியர்குல சந்திர வம்சத்திற்கு  மருமகளாக வாழ வந்தாள்,அவளை அடுத்து அவள் வாரிசுகளை சந்திர வம்சம் அங்கீகரிக்க வேண்டி சமாதானத் தூதுவனாக அரண்மனைக்கு கிருஷ்னன் வருகை புரிகிறான் .

அ.கு-
(கிருஷ்னனின் அடங்கா செயல்களையெல்லாம் திருவிளையாடல்களாக  இதிகாசங்களில் தீட்டப்பட்டிருக்கும்.பிராமணர்கள் தங்களை காத்துக்கொள்ள,தங்களை காக்க வேண்டி மா முரடன் (வீரன்?) ருத்ரசேனன் பெண் வயிற்றில் கிருஷ்னன் அவதரிக்கப் போகிறான்.

அவன் பிராமணர்களின் காவலனாக இருப்பான் என் பாரத தேசம் முழுக்க பிராமணர்கள் கதா காலட்சேபம் செய்தனர் .எதையும் சொல்வதை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால், பொய்கூட உண்மையைப்போல் அவதாரம் எடுக்கும்,அப்படி அவதாரம் ஆனவர்தான் இந்த தர்மத் தலைவன் கிருஷ்னன்.சத்ரியர்கள் இதுபோன்று மாயங்களில் நம்பிக்கை யற்றவர்கள், அன்பு,நியாயம் ,தர்மம் இந்த வார்த்தைகளை சத்ரியர்கள் மாயங்கள் என்பர், அதாவது இந்த சொற்கள் காட்சிகளுக்கு அப்பாற்ப்பட்து.காட்சிப் பொருட்களான போர் தளவாடங்கள்,வெற்றி தோல்வி இவைகளே சத்ரியர்களுக்கு நிஜங்கள்.

இதுபோன்று சத்ரிய குணங்களை பின் பற்ற, குடும்ப தர்மங்களை பின்பற்றும் யாதவ மக்கள் முதல்வனாக கிருஷ்னன்  அவதாரம் எடுத்ததாக மக்களிடையே  பிரச்சாரம் செய்து மக்களை நம்ப வைத்தனர்.)
---
அஸ்த்தினாபுரம் அரசவையில் வீற்றிருந்த கிருஷ்னனை, துர்சாதனன் வீட்டிற்கு விருந்துண்ணுமாறு திருதராஷ்ட்டரன் அழைப்பு விடுக்கிறான். உடனே துரியோதனன் முதலில் தன் வீட்டிற்குத்தான் விருந்துண்ண வேண்டும் என அழைப்பு விடுக்கிறான்.

கிருஷ்னன்,‘என் மனதுக்குப் பிடித்தமானவர்கள் இருக்கும் இடத்தில் தான் நான் விருந்துண்ணுவேன், அந்த வகையில் நான் விதுரன் வீட்டில்தான் விருந்துண்ணுவேன் அங்குதான் என் அத்தை குந்தி தேவியர் உள்ளார்.

இனத்தோடுதானே இனம் சேரும் துரியோதனன் மேலும் கூறுகிறான், ‘இடைச்சியைத் தேடி இடையன் செல்கிறான் சாதி வேறுபாடுகள் அன்றே அரும்பி விட்டன.

கிருஷ்னன்,விதுரன் வீட்டில் தனியாக இருக்கிறான்.கர்னன், கிருஷ்னனை சந்திக்க வருகிறான்.தன் பிறப்பு சரியில்லை என ஊர் உலகம் என்னை தூற்றுகிறது கிருஷ்னா எனக்கு ஏன் இந்த இழி நிலை?

இல்லை கர்னா நீ சூத புத்ரன் இல்லை, உன் தாய் ஐந்து வீரர்களைப் பெற்ற  யது குல இளவரசிகிருஷ்னன் இவ்வாறு கூறியதும், கர்னன்,

அப்படியா வசுதேவா,அப்படியானால் நான் பாண்டவர்களின் மூத்தவனா? என் தாய் குந்தி தேவியா? இதை ஏன் கிருஷ்னா இதுவரை என்னிடம் தெரிவிக்காமல் இருந்தீர்கள்?’

கர்னன் மேலும் தொடர்ந்தான்,‘அப்படியானால் என் தந்தை யார்?’

கிருஷ்னன் தொடர்ந்தான்,‘உன் தாய் கன்னியாக இருந்தபோது சூரியதேவன் மீது காதல் கொண்டாள்,சூரியனுக்குப் பிறந்தவன் நீ,அக்னி குல சத்ரியன்

கிருஷ்னா, நான் இதுநாள் வரை என்னை சூதபுத்திரன் என  நினைத்துக்கொண்டு, சான்றோர் சபையில் நான் கூனிக் குறுகிப் போனேனே,என் வீரத்தை கொச்சைப் படுத்தினார்களே அவர்கள் மத்தியில் இனிநான் தலை நிமிர்ந்து நடப்பேன்

கிருஷ்னன் மேலும் கர்னனை தெளிவு படுத்த விரும்புகிறான்,

கர்னா,  நீ தர்மத்தின் பக்கம் உன்னை நிலைப்படுத்திக் கொண்டால் என்ன?’

இல்லை கிருஷ்னா என்னை சூத புத்திரன் என தெரிந்தும் எனக்கு அங்கதேச மன்னனாக்கி மன்னர்கள் மத்தியில் என்னை மாண்புறச் செய்த துரியனுக்கு நான் எப்படி துரோகம்  செய்ய முடியும்?எனவே விசுவாசமே எனது தர்மம்கர்னன் மேலும் தொடர்கிறான்,

வசுதேவா, பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் போர் மூளும் சூழல் உள்ளது, இதில் துரியோதனன் சார்பாக நான் என் எதிரிகளான பாண்டவர்களை  எதிர்த்துதான் ஆகவேண்டும். என் தாய் ராதை தான், இந்நிலையில் நான் என் செஞ்சோற்றுக் கடனை தீர்ப்பது என் கடமையல்லவா?

இந்த எண்ணம்  நம்மோடு இருக்கட்டும் வசுதேவா,உண்மை தெரிந்தால் தர்மன் எனக்கு இந்திரபிரஸ்த்தின் இளவரசனாக முடி சூட்டிவிடுவான்.வேண்டாம் இந்த விபரீதம். போரி்ல் நான் தோற்றாலும் துரியோதனனுக்காக உண்மையில் நான் போரிட்டுதான் ஆகவேண்டும். சரி தூது வந்த காரணத்தை கூறுங்கள்

நாளை அரசவையில் தெரிவிக்கிறேன்

கிருஷ்னன்,குந்தி தங்கி இருக்கும் விதுரன் அரண்மனைக்கு செல்கிறான்.விதுரனும்,குந்தியும் ஆசையுடன் கிருஷ்னனை வரவேற்கின்றனர், அன்புடன் உபசரிக்கின்றனர்.தூது வந்த காரணத்தை அவர்களிடம் தெரிவிக்கிறான்.

குந்தி கேட்கிறாள், ‘துரியோதனன் இந்திரபிரஸ்த்தத்தை பிரித்து  தனி நாடாக, பாண்டவர்களுக்கு தருவானா, கிருஷ்னா?’

அப்படி அவன் சம்மதிப்பான் என எனக்கு தோன்ற வில்லை

‘பின் ஏன் இந்த தூது?’
‘அத்தை,இந்த உலகில் அமைதி ,அன்பு,நீதி,நேர்மை இவைகளை நிலைநாட்டும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கபட்டுள்ளது. இவைகளுக்கு பங்கம் விளைவிக்கும் அதர்ம காரியங்களை செய்யும் யாராகினும் அவர்கள் திருந்த ஒரு வழியை காண்பிக்க வேண்டியது என் பொறுப்பு.அதற்குத்தான் இந்த தூது’

‘புரியவில்லையே கிருஷ்னா!’

அஸ்தினாபுரத்தின் மீது உரிமை கொண்டாடவும், அதன் பொருட்டு, பாண்டவர்களின் பங்கை பெற உரிமை பெற்றவர்கள் என  நான் துரியனிடம்  விளக்கி கூற வேண்டும் என தர்மன், என்னை இங்கு அனுப்பியுள்ளார்’

அதற்கு துரியன் ஒப்புக்கொள்ள மாட்டானே!

தெரியும் அத்தை,இருப்பினும் மனிதர்கள் தவறு செய்யக்கூடியவர்கள் தானே?,அவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு தரவேண்டுமே!

சரி,அப்படி துரியன் திருந்தி தர மறுத்தால்...?’

போர் தான் வழி

அப்போது குறுக்கிட்ட விதுரன், ‘அப்படி போர்வந்தால் நான் கவுரவர்கள் பக்கம்தான் நின்று தான் போரிடுவேன்

மிரண்டுபோன குந்தி, விதுரனின் போக்கைக் கண்டு சற்று வேகமாக கேட்டாள்,
என்ன விதுரா,என்னை அண்ணி என்றும் என் புதல்வர்களை தர்மவான்கள் என்றும் நீ புகழ்ந்ந்து பேசியது எல்லாம் நாடகமா?

இல்லை அண்ணி,என் அண்ணன் பாண்டுவிற்கு நான் செய்து கொடுத்த சத்யம் அது

அப்படி என்ன சத்யம்?’

பாண்டு சொன்னதாக விதுரன் கூறுவது,

நம் அண்ணன் திருதராஷ்ட்டரன்,கண் பார்வை அற்றவர்,அவர் நாட்டை ஆள ஆசைப்படுகிறார், மூத்தவர் என்கிற முறையில் நாம் அவர் உணர்வுகளை மதிக்க வேண்டும்,நான் கானகம் செல்கிறேன்,நீ அவர் அருகில் இருந்து அவர் நாட்டை ஆள  துணை புரியவேண்டும்,துணை நிற்பேன் என எனக்கு சத்தியம் செய்து கொடு என்றார்,நானும் சத்யம் செய்து கொடுத்தேன் அண்ணி

மேலும் விதுரன் கூறும் போது,’நான் கவுரவர்கள் பக்கம் இருந்து போரிடுவது தான் முறை

அப்போது குறுக்கிட்ட கிருஷ்னன், தன் அத்தை குந்தியிடம், ‘விதுரர் முதன்மை மந்திரி மட்டுமல்ல,  அவரிடம் இருப்பது,எதிரியை ஒழிக்கும் வில்லான விஷ்னு வில் ஆகும் அது அர்ச்சுனனிடம் இருக்கும் காண்டீபத்தை விட நூறு மடங்கு ஆற்றல் பெற்றது.அந்த வில் அவர் பிரம்மனிடம் இருந்து பெற்றார்,
அந்த வில்லை கவுரவர்கள் பக்கம் இருந்து இவர் போரிட்டால் பாண்டவர்கள் அவ்வளவுதான் , மாண்டுபோய்  விடுவர்.

என்ன கிருஷ்னா,இதற்கு மாற்று வழி இல்லையா ?’குந்தி வினவுகிறாள்

யோசிக்கலாம்

அடுத்த நாள் அரசவையில் கிருஷ்னன் அமர்கிறான்.தன் தூது வந்த காரணத்தை விளக்குகிறான்.

அப்போது துரியன், ‘இப்போது எங்கே போர் நடக்கிறது,என்று நீங்கள் தூது வந்துவிட்டீர்கள்?’

பாண்டவர்களின் கோரிக்கையான தனி நாடாக இந்திரபிஸ்த்தம் என அறிவித்தால் போருக்கான சூழல் ஏற்படாது என்பது என் கருத்து

அது முடிந்து போன விவகாரம், பாண்டவர்களுக்கு தனி நாடு என்கிற பேச்சுக்கே இடமில்லை, வேறு ஏதாதவது பேசுவோம், கிருஷ்னா
அப்போது கர்னன் குறுக்கிட்டு,

ஒரு நாட்டையே சூதாட்டத்தில் அடகுவைக்கும் சூதாடிக்கு நாடு ஒரு கேடா? கட்டிய மனைவியை காப்பாற்றாத சூதாடிக்கு நாடெதற்கு?,வீடெதற்கு?’

அப்போது கிருஷ்னன்,’இங்கே மன்னர் இருக்க மற்றவர்களுக்குத் தான் பேசும் அதிகாரமோ? வார்தைகளால் கொல்லுகிறார்களே!

கிருஷ்னன் மேலும் கேட்கிறான், ‘மன்னர்தான் மவுனம் சாதிக்கிறார்.இங்கே சான்றோர்களும், ஆன்றோர்களும் இருக்கின்றனரே  அவர்களுக்கு மனசாட்சியே இல்லையா?

அப்போது விதுரன், ‘துரியோதனா,பெரியவர்கள் சொல்வதை கேள்,அதுதான் உனக்கு நல்லது

சட்டென துரியன், ‘அடே விதுரா என் அரண்மனையில் இருந்துகொண்டு எனக்கே எதிராக சதி திட்டம் தீட்டுகிறாயா?இரவு உன் வீட்டில் கிருஷ்னன்  தங்கியது இதற்குதானா?’

விதுரன், ‘நீசனே,உன்னை மார்மீதும்,தோள்மீதும் தூக்கி வளர்த்த என்னையா பேரிட்டு அழைக்கிறாய்?
                                  
யார் நீசன்,வேசிக்கு பிறந்தவனே?’

துரியன் உதிர்த்த விஷ வார்த்தைகளை கேட்ட விதுரன் கொதித் தெழுந்தான், ‘என் தாயை பழிக்கும் நீசனே நீ அழிந்து போவாய்

அப்போது கிருஷ்னன், ‘துரியோதனா,விதுரனை யார் என நினைத்தாய்,இவர் முக்கிய மந்திரி மட்டுமல்ல,இவரிடம் இருக்கும் தனுசு அர்ச்சுனனிடம் இருக்கும் தனுசைவிட 100 மடங்கு பலம் வாயந்தது,
இவர் அந்த தனுசை பிரம்மனிடம் இருந்து பெற்ற விஷ்னு தனுசு,இந்த தனுசை ஒருமுறை பயன் படுத்தினால் பாண்டவர்கள் இருக்கும் இடமே தெரியாது.கவுரவர்களுக்காக அந்த தனுசை பயன்படுத்துவேன் என என்னிடம் நேற்று இரவு கூறினார்.அவர் தாயைப்போய் பழித்துவிட்டாயே பாதகா’

கிருஷ்னனின் தூண்டிவிடும் பேச்சால் விதுரன் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டான். ‘இந்த தனுசை உன் எதிரியை தாக்க வைத்திருந்தேன்,இனி இந்த விஷ்னு தனுசு யாருக்குமே பயன் பட போவதில்லை ,இது சத்தியம்‘ எனக் கூறிக் கொண்டே அதை உடைத்து  விட்டான்    

விதுரனின் இச்செயலால் அவையில் உள்ள அனைவரும் மிரண்டு போய்விட்டனர்.துரியனின் ஆணவப் போக்கால் அவன் தனக்கே கொள்ளி வைத்துக் கொண்டான் என அனைவரும் அவையில் பேச ஆரம்பித்தனர்.

இந்திரபிரஸ்த்தம் வேண்டிதானே பாண்டவர்களுக்காக தூது வந்துள்ளீர்! அது கிடைக்காது, பாண்டவர்கள் மீண்டும் 12 வருடங்கள் வனவாசம் செல்லவேண்டும் என்பது அரச கட்டளைதிருதராஷ்ட்டரன் அரச கட்டளையை கிருஷ்னனுக்கு தெரிவித்தான்.

சரி இந்திரபிரஸ்த்தம் வேண்டாம் அந்த ஐவருக்கும் ஐந்து கிராமங்களையாவது தாருங்கள் அவர்கள் நிம்மதியாக வாழ்ந்து விட்டுப் போகட்டும்கிருஷ்னன் பேசி முடித்தவுடன், துரியோதனன்,

கிருஷ்னா,நீ தூதுவனாக வந்துள்ளாய் எனவே நான் உன்னை சும்மா விடுகிறேன் இல்லையேல் இந்நேரம்,என் வீரர்கள் உன்னை சிறைப் படுத்தியிருப்பார்கள்மேலும் அவன்,‘ஒரு காணி நிலம் கூட தர முடியாது அவர்கள் வனவாசம் அனுபவித்தே தீரவேண்டும் இது அரச கட்டளை.அவையில் துரியோதனன் கர்ஜித்தான்.

நீ என்னை சிறை படுத்திவிடுவாயா?  முடிந்தால் செய்துப்பார்!

என கிருஷ்னன் ஆவேசமடைந்தான்,அப்போது தன்னிடமுள்ள சக்ராயுதத்தை சுழற்ற ஆரம்பித்தான், அவையோர்கள் மிரண்டு போனார்கள் ,அதற்குள் அவை சான்றோர்களான பீஷ்மர் மற்றும் துரோணர்,

துரியோதனன் சிறியவன் அவனை மன்னித்து விடு வாசுதேவா,’

நான் துரியனை கொல்ல மாட்டேன் ,அவனைக் கொல்ல பீமன் உள்ளான்,இவனை நான் கொன்றால் பீமன் சபதம் நிறைவேறாமல் போய்விடும்அவர்கள்  வேண்டு கோளுக்கிணங்க, கிருஷ்னன் அவையை விட்டு வெளியறினான்.அவையைவிட்டு வெளியேறிய கிருஷ்னன்,விதுரன் இருவரும் குந்தி இருக்கும் இடம் தேடி செல்கின்றனர்.
குந்தியும்,அவள் ஓரகத்தி சுலபாவும் இருவரையும் கவனித்தனர்,யார்முகத்திலும் உணர்ச்சி இல்லை, இருவரும் வெறித்த முகத்துடன் விண்ணை நோக்கி பார்க்கின்றனர், சுலபா,

என்ன நடந்தது அவையில் ஏன் இந்த மவனம்? இருவருமே பேசாமல் இருப்பது எங்களுக்கு ஏதோ பயமாக இருக்கிறது,வாய் திறந்து யாராவது பேசுங்கள்

கிருஷ்னன், ‘துரியன், விதுரனின் தாயாரை வேசி என பழித்துக்கூறிவிட்டான்

குந்தி,‘துரியன் சார்பாக போரிடுவது தனது கடமை என இங்கிருந்து போகும் போது கூறிவிட்டு சென்றாரே,அவருக்கா இந்த அவமரியாதை?’

நான் நேரம் பார்த்து அந்த விஷ்னு தனுசின் பெருமையைப் பற்றி எடுத்துக் கூறினேன்கிருஷ்னன் மேலும் கூறுகையில்,

அந்த தனுசை யாருக்காகவும் பயன்படுத்த மாட்டேன் எனக் கூறி விதுரன், உடைத்து விட்டார்

குந்தியின் முகத்தில் புன்னகை தவழ, ‘எனக்கு இப்போது தான் நிம்மதி,என் பாண்டவர்கள் தப்பித்தனர்

அந்நேரம் குந்தியைக் காண ,காந்தாரி வருகிறாள். துரியோதனன், அவையில் கிருஷ்னனை அவமதித்த செய்தி காந்தாரியை கலக்கமடையச் செய்துவிட்டது. அப்போது காந்தாரி குந்தியிடம்,

நீ கிருஷ்னனுக்கு அத்தைதானே,நம் பிள்ளை துரியன் அறியாத்தனமாக கிருஷ்னின் மனதை நோகடித்து விட்டான், அவனை மன்னித் தருளும்படி நீ கிருஷ்னனிடம் சொல் குந்திகாந்தாரியின் தாய்மனம் தவிக்கிறது,இதை அருகில் இருந்து கவனித்த கிருஷ்னன்,

பணிகிறேன் ராஜமாதா,தாங்கள்,தங்களின் குழந்தைகளுக்கு அறவழி சிந்தனைகளை சொல்லி வளர்க்க தவறிவிட்டீர்கள்,இப்பொழுது வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்?அத்தை

‘நான் பிள்ளைகளை நல்வழி சொல்லி வளர்க்க தவறி விட்டேன், உண்மைதான் கிருஷ்னா?சர்வமும் உணர்ந்தவன் நீ என உலகமே உன்னை போற்றுகிறதே, என் மகன் மனதை நல்வழிக்கு திருப்ப உன்னால் முடியும் கிருஷ்னா?’

‘என்னிடம் எந்த மாய சக்தியும் இல்லை அத்தை,மனித உயிர்களிடத்தில் அன்பை நிலைநாட்டவே நான் அவதரித்துள்ளதாக நான் கருதுகிறேன்,அன்பு மட்டுமே தர்மம் என உயிர்களிடத்தில் பறை சாற்றவே அவதரித்துள்ளேன்.’(7)மேலும் காந்தாரி இடத்தில் கூறுகிறான்,
‘உலகில் துரியனைப்போல் குணம் படைத்தவர்கள் சத்ரிய குணங்களை நிலை நாட்டுவதேதங்கள் தர்மம் என நினைத்து செயல் படுகின்றனர்,அது தவறு என காட்ட துரியன் துணிச்சலோடு நிற்கிறான் அவனில்லையேல் எது அதர்மம் என காட்ட ஆளில்லாமல் போய்விடும்,அத்தை,அந்த வகையில் அவன் சொர்கம் செல்வது, உறுதி,’

தவித்த காந்தாரி மனதை நிம்மதி அடையச் செய்துவிட்ட திருப்தி கிருஷ்னனுக்கு,இன்றும் இது போன்ற ஆருதல் அடையச் செய்யும் அருவச் செய்திகளால் சத்ரிய மக்கள் இன்றும் தன்னிறைவு அடைகின்றனர் 

அஸ்த்தினாபுர அரண்மனையில் போர் குறித்த ஆலோசனைகள் நடைபெற்றது அப்பொது போருக்கு அஸ்த்தினாபுர தளபதியாக யாரை நியமிப்பது என ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் பீஷ்மனை படைத்தளபதியாக நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த சேதியை துரியோதனன் தன் தாத்தா பீஷ்மனிடம் தெரிவிக்கிறான்.

மன்னரின் கட்டளை இது என்றால் என்னால் மாட்டேன் என எப்படி கூற முடியும் துரியோதனா?’

இதற்கிடையே கர்னனின் பலத்தை குறைக்க நடவடிக்கைகளை கிருஷ்னன் மேற் கொள்கிறான். முதலில் கர்னனின் கவச குண்டலத்தைப் பறிக்க வேண்டும்.
இது கர்னனுக்கு இயற்கையில் அமைந்துள்ள வரப்பிரசாதம்.

குந்திக்கும் சூரியனுக்கும் பிறந்தவன் கர்னன்..
குந்திக்கும் இந்திரனுக்கும் பிறந்தவன் அர்ச்சுனன்.

அ.கு-                          *************
(மக்களின் அனுதாபத்தைப் பெறவேண்டியும், அறவழி சிந்தனைகளை மக்களுக்கு விளக்க வேண்டும் எனும் கோட்பாட்டில், குந்தியின் தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்பட்ட பிறழ்ச்சியை, குந்திக்கு பிறந்த கர்னனோடு சேர்ந்த 4 குழந்தைகளும் நான்கு கணவர்களுக்கு என சொன்னால் கொச்சையாகவும் பச்சையாகவும் வெளிப்படுத்த வேண்டிவரும்,அதை மறைக்க வேண்டி குந்திக்கு வியாசர் வழங்கிய நான்கு மந்திரங்களுக்கு நான்கு குழந்தைகள் பெற்றுக் கொண்டாள் என மக்களின் மூட நம்பிக்கைகளின்ன் மீது கட்டப்பட்டது தான் மகாபாரதம் எனும்  அஸ்த்திவாரம்.

பின்னாளில் உண்மை தெரியவந்த போது பத்தினிகள்,தங்களுக்கு வாரிசுகள் வேண்டி ரிஷிகளை புணரலாம் தவறில்லை என தவறு செய்யும்  அரசகுல (சத்ரிய) பெண்களுக்கு வசதியாக நடத்தை விதிகளை மாற்றிக் கொண்டார்கள்.

கடவுள் அவதாரம் என சொல்லிக் கொள்ளும் கிருஷ்னன் சூரியனை(சூரியவர்மன்) நெருங்க முடியாது ,அந்த அளவுக்கு சூரிய வர்மன் முரட்டு குணம் கொண்டவன். அதுவும் தனக்குப் பிறந்த மகனை,(கர்னன்) இந்திரனுக்குப் பிறந்தவன்(அர்ச்சுனன்) கொல்வதா?அது சூரியனுக்கு தெரிந்தால் தம்மை பொசுக்கிவிடுவான் என்பது கிருஷ்னனுக்குத் தெரியும் .

தன் இனத்தைச் சார்ந்த குந்தியின் மகன்கள் காப்பாற்றப்படவேண்டும்,இதுவே கிருஷ்னனின் லட்சியம். இதற்கு குந்தியும் உடன்படுகிறாள். கர்னனின் மூலபலத்தை பறிக்க வேண்டும். அதற்கு அவன் தீட்டும் திட்டங்கள் தான் 18 நாட்கள் வியூகம் அமைத்து சத்ரியர்களை ஒழிக்கும் போர்.)

                                    
அஸ்த்தினாபுரத்தில் பாண்டவர்களும், கவுரவர்களும் போர் பற்றிய ஆலோசனைக்கு ஒன்று கூடுகின்றனர்.பீஷ்மன் போர் பிரகடணம் செய்கின்றான்.

பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் ,அவ்வாறு பேச்சில் உடன் பாடு ஏற்படவில்லை.எனவே போர் நடத்தி யார் வெற்றி பெறுகின்றனரோ அவரே நாட்டின் அதிபதி.இதுவே சத்ரியர்களின் வழக்கமாக உள்ளது.எனவே கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் அஸ்த்தினாபுரம் யாருக்கு சொந்தம் என்பதில் போர் புரிந்து வெற்று பெற்றவர் நாட்டை ஆளலாம்

போர் நடத்த நாள் குறிக்க வேண்டும் என சகுனி கூறுகின்றான்.

‘அதென்ன நாள் ?’ துரியன் கேட்கிறான்.

வான சாஸ்த்திரங்களை அறிந்தவர்கள் மட்டுமே மனிதர்களையும்,கோளையும் இணைத்து யார்? எந்த நாளில்? எப்படி? எங்கு? யார்? கொண்டு ஆரம்பித்தால் காரியத்தில் வெற்றி பெறமுடியும் என்பதை கணிக்க முடியும்.சகுனி இவ்வாறு கூறும்போது பீஷ்மனும் ஆதரித்தான், தர்மனும் ஆமோதித்தான்.

எனவே துரியனும், மூட நம்பிக்கைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளும் சூழலுக்கு ஆளானான்.

சரி இதில் யார் விற்பன்னர்? அவரவர் ஒரு பேரைச் சொன்னார்கள், கிருஷ்னனை கேட்கலாம் என்றனர், ஆனால் சகுனி, ‘வேண்டாம் சோதிடத்தில் நடுநிலை தவறாதவன் என பேர் எடுத்தவன் சகாதேவன் எனவே சகாதேவனிடமே கேட்கலாம்.

கிருஷ்னன் நய வஞ்சகன் என்பதில் சகுனி தரப்பினர் உறுதியாக நம்பினர்.எனவே அவனுடைய ஆலோசனை தம்மை தவறான அணுகு முறைக்கு வழி வகுத்துவிடும் என அஞ்சினர்.

சகாதேவன் கணக்குப் போட்டு,மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி(11-ம் நாள்)போரிடுவதற்கு ஏற்ற நாள் என குறித்தான்.
அந்த நாளில் போர் துவங்கினால் யாருக்கு வெற்றி கிட்டும் என அவன் கூறவே இல்லை.கூறவும் முடியாது .யார் பக்கம் வெற்றி என சோதிடத்தில் மக்கள் நம்பிக்கை வைத்தால், போர் தேவையில்லையே!

(இதிலிருந்து என்ன தெரிகிறது அந்நாளிருந்தே சோதிடம் யூகமானது,யாரோ ஒருவருக்கு சாதகமானது என்பதே உண்மை.)

இரு தரப்பினரும் சோதிடத்தை நம்பினார்களே தவிற சோதிடக் கணிப்பால் வரும் வெற்றிக் கணிப்பை நம்ப தயாராகவில்ல.

(சோதிடம் என்பது ஆரூடம்,நம்பினால் ஆறுதல் தரவல்லது,நம்ப வில்லை எனில் மனிதனுக்கு தன்னம்பிக்கை தரவல்லது அவ்வளவே.இன்று வரை சோதிடத்தின் நிலை இதுதான்.அறிவியல் தன்மை அற்றது அதை அறிவுப்பூர்வமாக மாற்றி பாமரனை ஏமாற்றி பிழைக்கும் ஒரு கலையாக இன்றுவரை உள்ளது.)
                                  
சாஸ்த்திர சம்பரதாயங்களில் ஊறிப்போன காந்தார மன்னன்,

‘நாளும்,கோளும் மனிதனை வழி நடத்தும் சக்திகள்.எந்த நாளில் போர் துவங்கினால்  போரில் வெற்றி பெற முடியும் என்பதை ஒரு நல்ல சோதிடனைப் பார்த்து நாள் குறிக்கப்பட்டது, இனி போர் துவங்கலாம்’ என கூறுகிறான்.
அப்போது துரியன்,

நாம் வெற்றிபெறுவோம் என சகாதேவன் சொல்லவே இல்லயே மாமா?’

அதெப்படி சொல்லுவான்,அதற்கு ஒரு வழி உள்ளதுஎன சகுனி சொன்னதும்,

அதென்ன வழி மாமா?’என துரியன் வினவினான்.
                           -
போர் துவங்கியபின் மரணம் தவிர்க்க முடியாதது,அதில் முதல் மரணம் யாருக்கு அமைந்தால் வெற்றி நமக்கு கிட்டும் என ஆரூடம் பார்க்க வேண்டும்.சகுனி சொன்னதும்,

துரியன்,“அதையும் நீங்களே சொல்லுங்கள்”

வேறு யார் அதற்கும் நம் சாகாதேவன்தான்

சகாதேவனிடம் யாரை அனுப்புவது?’

நீ தான் சரியான நபர்

மாமா என்னால் முடியாது,நான் என் எதிரியிடம் போய் சோதிடம் பார்ப்பதா? கூடாது,கூடவே கூடாது.

உன்னுடைய முட்டாள் தனத்தால் உன் சித்தப்பனை விரோதம் செய்து கொண்டாய் ,நீ சற்று சமயோசிதமாக நடந்திருந்தால் இத்தனை ஆரூடம் தேவை யில்லை .விதுரன் ஒருவனே போதும் நாம் வெற்றி பெறுவதற்கு,
அதை கெடுத்துவிட்டய்,இப்பொழுது போரில் வெற்றிபெற வேண்டுமானால் இது போன்று சோதிட முறைகளில் வழி உள்ளதா என்பதை நாம் அறியவேண்டும்.நமக்கு காரியம் ஆக வேண்டுமானால் எதிரியாக இருந்தால் என்ன அவன் காலைப் பிடித்தாவது சாதிக்க வேண்டும்.

வணங்காமுடி துரியோதனனை போரின் வெற்றிக்காக மானம் இழந்து மதி கெட்டு தன் எதிரியின் காலில் விழும் அளவுக்கு அருவ சிந்தனையான மாயம் மந்திரம் சோதிடம் போன்ற ஒன்றுக்கும் உதவாத கண்கட்டி வித்தைகளை நம்பவேண்டி உள்ளது.இன்றும் இது தொடர்கிறது,என்பது தான் வேதனை.

துரியோதனன் சகாதேவனை பார்க்க ஆயத்தமாமனான்.

கர்னனின் மூலபலத்தை குறைக்க  இந்திரன் அந்தணன் வேடம் பூண்டு கர்னனின் கவச  குண்டலத்தை யாசகம் பெறுகிறான்.கர்னன் தன் மார்பு குறுக்கே கவசமாக  இருந்த குண்டலத்தை அருத்து இந்திரனுக்கு தானமாக்கினான்.


88-குந்தியின் தூது

கவுரவர்களுக்கும்,பாண்டவர்களுக்கும் போர் மூளப்போவது நிச்சயம் ஆகிவிட்டது.ஆனால் குந்தி சும்மா இருக்கவில்லை,
தன் பிள்ளைகளை போர் மரணத்திலிருந்து காப்பாற்ற தன் தாய்மையின் கடமை ஆற்ற புறப்படுகின்றாள்.குந்திக்கும் காந்தாரிக்கும் ஒரு பெரிய வேறுபாடு இதுதான்.இந்த வேறுபாடு அவரவர் சார்ந்திருக்கும் சாதியால் வந்தது.

சத்ரிய குலத்தவளான காந்தாரிக்கு எப்பொழுதும் போர்பற்றிய சிந்தனை,போரில் வெல்லவேண்டும் அல்லது போர்க்களத்தில் சாகவேண்டும்.இதனால் தன் பிள்ளைகள் வீரமரணம் எய்துவதை பெருமையாக எண்ணினாள்.

குந்தி அப்படி அல்ல.அவள் சார்ந்த குலமான யாதவர்கள் போருக்கு அஞ்சுபவர்கள்.ஒரு மனிதனுக்கு இயற்கை மரணம் மட்டுமே நிகழவேண்டும் எனும் எண்ணம் கொண்டவள்.ஆட்சி வேண்டும் அதிகாரம் வேண்டும்,சத்ரிய குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டதினாலே அவளுக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும் எனும் எண்ணம் கொண்டவள்.ஆனால் உயிருக்கு பாதிப்பில்லாமல் ஆட்சி அதிகாரம் வேண்டும் எனும் எண்ணம் கொண்டவள். 

இதற்காக அஸ்த்தினாபுர அரண்மனையில் தங்கிக்கொண்டு தான் அஸ்த்தினாபுரத்தின் ராஜமாதாவாக தன்னை பிரகடணப் படுத்திக்கொண்டாள்.போரில் பங்கெடுப்பதாக இருந்த தன் மைத்துணன் விதுரனை விலகிக்கொள்ள செய்தது குந்திக்கு முதல் வெற்றி.அடுத்து துரோணரை சந்திக்கிறாள். துரோணரிடம் பவ்வியமாக பேசி தன்மைந்தர்கள் மீது அம்பை செலுத்தக்கூடாது என துரோணரிடம் சத்தியம் வாங்கிக் கொள்கிறாள்.

அடுத்து குந்தியை கர்னனிடம் அனுப்புகிறான் கிருஷ்னன்,
கர்னன், அருணோதயம் வணங்கும் பழக்கமுள்ளவன். அந்நேரத்தில் கர்னன் தானம் வழங்கும் பழக்கமுள்ளவன்.வந்துள்ளது தன் தாய் என கர்னனுக்குத் தெரியாது,ஆனால் குந்திக்கு கர்னன் ,தன் தலைமகன் கிருஷ்னன் சொல்லித்தான் தெரியும்.

ஆசிரியர் கருத்து-

(ஒரு கன்னிகைக்கு பிறக்கும் தலைமகன் தான் பெற்ற பிள்ளைகளில் அதிக பலம் பொருந்தியவனாக இருப்பான் ,இது உலகறிந்த செய்தி.மேலும் அவன் யாருக்கு பிள்ளை என்பதிலிருந்து, அவன் குண நலன்களை அறியலாம்.

சர்வ பலம் பொருந்திய சூரியவர்மனுக்கும் குந்திக்கும் பிறந்தவன்.அதாவது சத்ரியனுக்கும் யாதவ குல இளவரசியான குந்திக்கும் பிறந்தவன்.

அதுமட்டுமல்ல கர்னன் வளர்ந்த இடம் அஸ்த்தினாபுர அரண்மனை தேரோட்டியின் அரவணைப்பில் வளர்ந்ததால்,போரும்,போர் களமும், வீரமும்,வில் வித்தை கற்கும் ஆவலும்,ஆர்வமும்  பழக்க தோஷத்தால்  கர்னனுக்கு தொற்றிக்கொண்டது.

பச்சைக் கொடி வளர்ந்தால் பக்கத்தில் இருப்பது பட்ட மரமா?அல்லது பச்சை மரமா எனத் தெரியாது பற்றிக்கொள்ளும்.அப்படி நட்பை வளர்த்துக் கொண்டவர்கள் தான் இந்த கர்னனும் இளவரசன் துரியோதனனும்.இதுல யார் பட்டமரம்,?யார் பச்சைக்கொடி என்பது வாசகர்களுக்கே வெளிச்சம்.)

‘அம்மா,இந்நேரத்தில் என்னை நாடி வரும் யாராகினும் எதாவது வேண்டும் என கேட்பார்கள்.நான் உங்களுக்கு என்ன தரவேண்டும் சொல்லுங்கள்’

‘மகனே!உன்னிடம், இன்று நான் உனக்கு ஒரு உண்மை சொல்ல வந்தேன்.’,

கர்னன் ஆச்சர்யத்துடன் குந்தியை நோக்கினான்,

நான் உன்னைப் பெற்றதாய்’என்றாள்.

மேலும் அவள்,

எனக்கு வந்தவனும்  சரியில்லை,வாய்த்தவனும் சரியில்லை.எல்லாம் என் தலையெழுத்து,மகனே! நான் தினமும் சூரியனை வணங்கும் பழக்கமுள்ளவள்(சந்தியா வந்தனம்) எனக்கு சுயம்வரத்திற்கு நாள் குறிக்கப்பட்டது,அதிக ஆர்வகோளாரிலே தினமும் உச்சரிக்கும் மந்திரத்தை மாற்றி உச்சரித்துவிட்டேன்.அதன் விளைவாக நீ பிறந்தாய்.

என்ன விபரீதம்! ஒரு கன்னியான நான் பிள்ளை பெற்றால் ஊரும் உறவும் தூற்றுமே என்றெண்ணி அச்சத்தினால் உன்னை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் மிதக்க விட்டேன்,என் ஆறுயிரே அதன் பிறகு இன்று தான் உன்னை பரிசிக்கும் நாள் கிடைத்தது.

தன்னை ஒரு புனிதமானதாய்  போல் தன் மகன்  நினைக்க வேண்டும் என மாயம் மந்திரம் என அருவ சிந்தனைகளோடு,களங்கமற்ற ஒரு கதை சொல்லி முடித்தாள்.

பாண்டு மன்னருக்கு என் சுயம் வரத்தில் மாலை யிட்டேன்.மன்னரை தழுவும் பாக்கியமே எனக்கு கிட்டவில்லை. மங்கைகளை தழுவினால் மன்னருக்கு மரணம் நிச்சயம் என முனிவரின் சாபத்தால் நான் தனித்து விடபட்டேன். அஸ்த்தினாபுர சாம்ராச்சியத்திற்கு வாரிசு வேண்டி தவமிருந்தேன் ரிஷி தந்த வரத்தால் மூன்று பிள்ளைகளைப் பெற்றேன்.

நகுலனும் சகாதேவனும் பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு பிறந்தவர்கள். மன்னர் பாண்டு இறந்தவுடன் அவளும் மாண்டாள். ஐந்து பேரையும் பாண்டவர்களாக நான் வளர்க்க பட்டபாடு இந்த உலம் அறியா. மன்னர் பாண்டுவின் தியாகத்தால் இன்று அஸ்த்தினாபுரம் தலை நிமிர்ந்து நிற்கிறது.
ஆனால் பாண்டு புத்திரர்கள் நிற்க ஒரு நிழல் கூட இல்லை.நாதியற்ற உன் தம்பிகள் தலை நிமிர்ந்து நிற்க பாண்டவ படைகளுக்கு தலைமை ஏற்று போர் புரிய வா மகனே!

ஆசிரியர் கருத்து-

(இங்கே வாசகர்கள் ஒன்றை கவனிக்க வேண்டும், மந்திரம் உச்சரித்தால் குந்திக்கு மட்டுமல்ல எந்த பெண்ணுக்கும் குழந்தை பிறக்காது. இங்கே எதற்காக அப்படி சொல்லப்பட்டது எனில் கதை கேட்பவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் விரசம் தட்டக்கூடாது எனும் எண்ணத்தில் புராணங்களில் இவ்வாறு புனையப்பட்டது.

குந்திக்கும் பாண்டுவிற்கும் இணைந்து பிறந்தவர்கள் அல்ல பாண்டவர்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு தந்தை. இதை விவரித்து சொன்னால் பெண்ணினத்தை கொச்சைப் படுத்துவது போல் ஆகும் அதை தவிர்க்கவே மந்திரம் சொல்லி பிள்ளைகள் பிறந்தார்கள் என பாமர மக்களை திசை திருப்பவே சொல்லப்பட்டது)   

அம்மா,என்ன வார்த்தை கூறினீர்கள்,நான் கண்ட ஒரே தாய்  என்னை வளர்த்த ராதை அன்னைதான்.மேலும் கூறுகிறான்,

இதுநாள் வரை எங்கே போனீர்கள்? தினமும் நாம் பார்த்துக் கொள்வோம்,தங்களை ராணியாகவும்,
என்னைத் தோரோட்டி மகன் என்கிற முறையில் நான் தங்களை வணங்கி பழக்கப்பட்டுப் போனேன்மேலும் கர்னன்,

அம்மா ,என்னை அரசர்கள் பேரவையில் அனைவரும் சூத புத்ரன் என இழித்தார்களே, ஏன் திரவுபதி சுயம்வரத்தில் என்னை,

ஏய் சூத புத்தரா என்னை மாலையிடும் தகுதி உனக்கில்லை என உதாசினப்படுத்தினாளே அந்த இழி சொல் என்னில் ஈட்டியாக பாய்ந்தனவே அப்போது இந்த உண்மையை ஏன் கூறவில்லை அம்மா?’

மேலும் தொடர்கிறான்,‘இப்பொழுதும் என்னை ஊரறிய,‘இவன் தேரோட்டி மகன் இல்லை,நான் பெற்ற பிள்ளைதான் இவன் என உரக்க சொல்ல முடியுமா அம்மா?
இவன் ராதேயன் அல்ல,‘கவுந்தேயன் தான் என கேட்பவர்களிடம் சொல்ல முடியுமா அம்மா?’

இதைக்கேட்ட குந்தி உடைந்து போனாள். மகனே என்னை வார்த்தைகளால் கொல்லாதே

அப்டியானால் போர்க்களத்தில் யாரைக் கொல்லாதே என கேட்க வந்தீர்கள் அம்மா?’

உன்னை வளர்த்த தாய்  நற்பண்புகளை ஊட்டி வளர்த்துள்ளாள், ஆனால் நீ இருக்குமிடமோ அதர்மம் இருக்கும் இடத்தில் இருக்கின்றாய்.
தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் போர் நடக்கப் போகிறது. உன் தம்பிகளுக்கு தலைமை ஏற்று போர் புரிய வா! வா மகனே!.

89-கர்னனின் அறச் சிந்தனை

எது தர்மம்,?எது அதர்மம்? அம்மா! நான் யார்? என் குலமென்ன? என் தந்தை யார் ?என்னை பெற்றவள் யார்? என அறிய விரும்பாமல் என்னை வளர்த்து ஒரு நாட்டுக்கே(அங்க தேசம்) அரசனாக முடிசூட்டிய  மாமன்னன், திருதராஷ்ட்டரரின் மகன் துரியோதனனை விட்டுவிட்டு நான் எப்படியம்மா வரமுடியும்?

ஒரு சத்ரியப்பெண்(திரவுபதி) எப்படியம்மா ஐந்து பேரை கணவனாக ஏற்றுக்கொண்டாள் ?இது என்ன தர்மம்? துரியோதனன் கேட்கும் கேள்விக்கு யார் பதில் சொல்வது?’மேலும் கர்னன்,‘தம்பி தர்மனுக்கு ஒரு நாட்டை பிரித்து அரசனாக்கிய பிறகு சூதாட்டத்தில் பங்குபெறுவது  தர்மச்செயலாம்மா?

சூதாட்டத்தில் தர்மன் தோற்றதால் தர்மனாகிவிட்டான், ஜெயித்து இருந்தால் அதர்மச் செயல்தானே? அப்படித் தானேம்மா?’

சரி சூதாட்டத்தில் தம்பி தர்மன் தோற்றது அவன் தலைவிதி என்றே இருக்கட்டும் ,அதற்காக சூதாட்டத்தில் பணையமாக தன் தேசத்து கஜானாவை வைத்து தோற்றான், தம்பிகளை பணையம்  வைப்பார்களா? அதுபோகட்டும் தனக்கு மனைவியாக வந்தவளை பணையம் வைத்து சூதாடிய செயல்  உலகில் எங்கும் காணாத நிகழ்ச்சியல்லவா? இதில் எது தர்மம்? எது அதர்மம்? அம்மா!

எல்லாம் தெரிந்த கிருஷ்னனுக்கு,சூதாட்டம் ஒரு தர்மமற்ற செயல் எனத் தெரியாதா? சூதாடக் கூப்பிட்டவன் அதர்மக்காரன், அதில் ஆர்வமோடு கலந்து கொண்டவன் தர்மவானா? இதில் பரமாத்மா கிருஷ்னனின் கூற்று என்ன? அம்மா! 
                                
மகனே நீ கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் எனக்கு பதில் சொல்லத்தெரியவில்லை நீ வள்ளல் மட்டுமல்ல நீ ஒரு ஞானியடா?’

அடங்கிப்போவதும்,அநீதியை எதிர்க்காமல் பதுங்குவதும் சத்ரிய தர்மமா? அம்மாஏதோ என் உடலில் ஊறிய சத்ரிய குணத்தால் ,தனூர் வித்தையை கற்க என் மனம் உந்தியது, நான் தவமிருந்து பரசுராமனிடம் கற்ற வித்தையை ரணகளத்தில் என் நண்பனுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்,

என்னிடம் கவச குண்டலாமக இருந்த மூல பலத்தை ஒரு அந்தணன் பெற்றுக் கொண்டான்,இனி  எதிரியை தாக்கும் பலமே என்னிடம் இல்லையம்மா

ரணகளத்தில் போரிடுவது அத்துணை பேர்களும் என் மகன்களே,இதில் யார் வெற்றிபெற நான் வாழ்த்த முடியும்  மகனே? இருப்பினும் உன்னிடம் என் தந்தையும் உன் தாத்தாவுமான நாகராஜன் உனக்களித்த நாக அஸ்த்திரத்தை எதிர்க்க யாராலும் முடியாது, அதே போன்று அர்ச்சுனனிடமும் உள்ளது, இதைக் கண்டுதான் நான் அஞ்சுகிறேன் மகனே

அம்மா,ரணகளத்தில் தங்களின் ஆறு புத்ரர்களில் ஒருவன் மரணிப்பது உறுதி, தங்களுக்கு நீங்கள் விரும்பியபடியே ஐந்து புதல்வர்கள் ஜீவித்திருப்பது நிச்சயம் ,அம்மா சென்று வாருங்கள். கர்னன் தன் தாயை மானசீகமாக வழியனுப்பினான்.

(இட்டுக்கெட்டான் கர்னன்,இடாது கெட்டான் துரியன்.தொட்டுக் கெட்டான் இந்திரன், தொடாது கெட்டான், ராவணன்

கிராமத்தில் காலம்காலமாக மக்களிடையே புழங்கும் சொல்லாடல்.ஒன்று,இதை உற்று கவனித்தால்,‘எது நல்லதோ அது பின்னாளில்  கெட்டது ஆகிவிடும்,எது கெட்டதோ அது பின்னாளில் நல்லது ஆகிவிடும்என்பதுதான் உண்மை,ஒருவகையில் இது  அகடம் விகடமாக கூடத் தெரியும்.)

குந்தி அடுத்து பீஷ்மனைக் காணச் செல்கிறாள்.பீஷ்மனிடம் தன் இளமைக்கால தவறை சொல்லிவிடவேண்டும் எனும் துடிப்பில், ‘பிதாமகரே,நான் இளம் பிராயத்தில் செய்த தவறு என்னை தொடர்ந்து என் மனதை வாட்டுகிறது.

அப்போது பீஷ்மன், ‘தெரியும் குந்தி,நீ திருமணத்திற்கு முன் குழந்தை பெற்ற தவறைத் தானே சொல்ல வருகின்றாய்.அதற்கு நீதான் தீர்வு காண வேண்டும்

கர்னனையும் அர்ச்சுனனும் வீரத்தில் ஒருவரை ஒருவர் வென்று விடவேண்டும் எனத் துடிக்கின்றனர்.குந்தி மேலும் தொடர்கின்றாள், ‘அவர்கள் இருவரும் என் இரு கைகளில் இருக்கும் அமுதம் மற்றும் குடி நீரைப் (கங்கை)போன்றவர்கள்.நான் எதை ஒதுக்க முடியும்?’

குந்தி ஒரு பெண்ணானவள்,தன் கணவனின் ஒப்புதலோடு பெற்ற குழந்தைகள் மட்டுமே அவன் குடும்பத்து வாரிசுகளாக கருதப்படுவர், மற்றவரல்லாம் அன்னியக் குழந்தைகளே

இந்த வார்த்தைகள் பிதாமகரின் அங்கீகாரமாக நினைத்த குந்தி,
ஒரு சத்ரிய வம்சத்தில் தனக்கு ராஜமாதா அங்கீகாரம் கிடைத்ததே ஒரு பெரிய வரமாக நினைத்து பீஷ்மனிடம் இருந்து விடை பொறுகிறாள்.  
                                 
90-தர்மனின் போர் ஆயத்தம்

மாத்ரி தேசத்தின் மன்னனும் நகுலன் ,சகாதேவன் இருவரின் தாய்மாமனுமான சல்லியனுக்கு தர்மன் அழைப்பு விடுக்கிறான். கவுரவர்களோடு போர் மூளப்போகிறது.தனக்கு ஆதரவாக தங்கள் தாய்மாமன் உறவு கொண்ட சல்லியன் பெரிதும் உதவுவான் எனும் நம்பிக்கையில் படைவீட்டில் அவனைத் தங்கவைத்து நல்ல விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தான் தர்மன். 

இதையறிந்த சகுனி ,தன் மருமகன் துரியோதனனை அழைத்து, ‘துரியோதனா, பாண்டுவின் மைத்துனன் சல்லியனை தர்மன் அழைத்து விருந்து வைக்க உள்ளான், அதற்கு முன் சல்லியனை நாம் அழைத்து அதைவிட விருந்தை பலமாக்கி சல்லியனை திக்குமுக்காடச் செய்ய வேண்டும்.போரில் அவன் ஆதரவை நாம் பெற வேண்டும்,அதற்கு உடனே ஏற்பாடு செய்

சம்பந்தி வீட்டில் விருந்துண்ணல் என்றால் யாருக்குத்தான் விருப்பம் இருக்காது?சல்லியன் நம் சொந்தம் தானே,தாய்மாமன் நம்மைவிட்டு போரில் வேறு யாருக்கு உதவ முடியும்?தர்மன் அசைக்கமுடியாத நம்பிக்கையில் இருந்தான்.

ஒரே ஒரு நாள் சல்லியனுக்கு துரியோதனன் விருந்து வைத்தான்,விருந்து என்றால் அப்படி ஒரு சுவையான விருந்தை மதுவும் மாதுவும் கலந்து பரிமாறப்பட்டது,அதில் விழுந்த சல்லியன்  எழுந்திருக்கவே இல்லை.

மயக்கத்தில் இருந்த சல்லியனைப் பார்த்து, துரியோதனன்,‘மாமா,விருந்து எப்படி இருந்தது?’

சல்லியன்,‘மாப்பிளே! அப்படி ஒரு விருந்தை நான் இதுவரை க(உ)ண்டதே இல்லை, அசத்திவிட்டாயே,பலே மாப்பிளே!போர் நடக்கப் போவது உறுதியாகிவிட்டது,இப்போ விருந்துக்கு என்ன அவசியம்?’
மாமா! போரில் தாங்கள் என் பக்கம்,நின்று கவுரவர் படைக்கு தலைமை தாங்க வேண்டும்.இது என் அன்பான வேண்டுகோள்

என்ன மாப்பிளே இப்படி சங்கடத்தில் என்னை மாட்டிவிட்டாயே? போரில் நான் என் தங்கை மைந்தர்களை எதிர்த்து எப்படி போரிடமுடியும்?’

நான் தானே மாமா தங்களை முதலில் போரில் எங்களுக்கு உதவி கேட்டேன், பாண்டவர்கள் உங்கள் உதவியை இதுவரை கேட்க வில்லையே?’

மதுவிற்கும், மங்கைக்கும் மயங்கும் சத்ரியர்களான மாத்ரி தேசத்து மன்னர்கள் தங்களுக்கு  எதிரிகளாக யாரை தேர்வு செய்ய வேண்டும் எனும் வரையருக்கும் திராணி அற்றவர்கள்.சல்லியன் சகுனி விரித்த வலையில் விழுந்தான்.

தர்மனுக்கு இச்செய்தி எட்டியது, நகுலன் சகாதேவன் ஆகியோர்,   தாய்மாமன் எதிரணியில் சென்றதை ஏற்க முடியவில்லை. இறந்துபோன தங்கள் தாயைவிட சிறப்புத் தாயாக இருக்கும் தாய் குந்தி என்ன நினைப்பார்கள்?
தர்மனண்ணா போரில் தனித்து விடப்பட்டாரே நகுலனும் சகாதேவனும் சல்லியனைப் பார்த்து புலம்புகின்றனர்.
                                  
தர்மன் நகுலனிடம், ‘மாமவை வேறுபடுத்தி பேசாதே நகுலா, பெரியவர்களை அவமதிக்காதே, மாற்றாந்தாய் எனும் வார்தையை உச்சரிக்காதே அது நம் தாய் குந்தியை வெகுவாக பாதிக்கும்,நீ போய் மாமாவிடம் மன்னிப்புகேள்’ என நகுலனை நிர்பந்நித்தான் தர்மன்,நகுலனும் சல்லியன் காலில் விழுந்து,

‘என்னை மன்னித்துவிடுங்கள் மாமா,தெரியாமல் பேசிவிட்டேன்’ சல்லியனும் தன் தங்கை மைந்தர்களை ஆரத்தழுவினான்.

இதற்கிடையே குந்தி காந்தாரியை காணவருகிறாள்.காந்தாரி குந்தியின் மீது பொய்க்கோபம்  கொள்கிறாள்,‘இது நாள்வரை என்னைக் காணாமல் எங்கே போனாய் குந்தி,உன்னிடம் நான் பேசமாட்டேன்,போ

தங்களை காணக்கூடாது எனும் எண்ணம் எனக்கில்லை அக்கா, நம்பிள்ளைகள் சண்டைபோட்டுக்கொண்டு முன்னோர்கள் நிர்மானித்த அஸ்த்தினாபுரத்தை அழித்து விடுவார்களோ எனும் கவலை என்னை வாட்டுகிறது அக்கா அதனால்தான் தங்களிடம் எந்த முகம் வைத்து பேசுவது என தெரியாமல் ஒதுங்கி இருந்தேன்.நேற்று துரியோதனன் என்னிடம் போரில் வெற்றி பெற வேண்டி வாழ்த்தும்படி வேண்டினான். அதை தெரிவிக்க தங்களை நாடி வந்தேன்

குந்தி சொல்லி முடிப்பதற்குள், காந்தாரி, ‘துரியோதனனுக்கு போரில் வெற்றிபெற வாழ்த்தினாயா?அப்படி செய்தால் அனர்த்தம் வந்துவிடும் குந்தி,அந்த பாவ காரியத்தை செய்யாதே

இல்லையக்கா வெற்றிபெற வாழ்த்தவில்லை ஆனால் துரியோதனன் நம் பிள்ளைதானே? அவன் நீடூழி வாழ வாழ்த்தினேன் அக்கா

அதுபோதும் குந்தி ஆனால், திரவுபதியிடம் சொல் குந்தி, ‘துரியோதனனையும், துர்ச்சாதனனையும் மன்னிக்கச் சொல்’

‘அதெப்படி அக்கா,தாங்கள் அந்த இருவரையும் மன்னித்து விட்டீர்களா?’

‘அவர்களை நான் மன்னிக்க மாட்டேன் ,அப்படி மன்னித்தாலும் சூத புத்ரன் கர்னனையும்,என் தம்பி சகுனியையும் மன்னிக்கவே மாட்டேன்,அவர்கள் இருவரும் மாறிமாறி என் மகன்களை கெடுத்தார்கள்.’

பிள்ளைப் பாசம் தாய்க்கு கண்களை மறைக்கும் என்பார்கள்,ஏற்கனவே கண்களை கட்டி வாழும் காந்தாரிக்கு அகக் கண்களையும் பிள்ளைப் பாசம்  மறைத்துவிட்டது. கர்னனை,சூத புத்ரன் என  காந்தாரி குறிப்பிட்டதை குந்தியின் மனம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அது ஏன் என காந்தாரியிடம் விளக்க முடியவில்லை.

‘அதென்ன குந்தி, கார்னனுக்கு மட்டும் எப்பொழுதும் பரிந்து பேசுகிறாய்’

ஒருகணம் குந்தி, திகைத்துப் போய்விட்டாள்,‘ஒரு வேளை கர்னனோடு தனக்கிருக்கும் தாய்மை உறவை காந்தாரி கண்டறிந்தவளா இருப்பாளோ குந்தி சுதாரித்துக்கொண்டு,

‘அவன் அனாதை அல்லவா?நம் அரவணைப்பில் வாழும் பிள்ளையல்லவா?அதனால் தான் அப்படி சொன்னேன்’

தான் ஆட மறந்தாலும் தன் சதை ஆட மறக்காதே,அது இதுதான் போலும்.

காந்தாரி,குந்தியை உசுப்புகிறாள்,‘குந்தி எனக்குத்தான் கண் தெரியாமல் செய்து கொண்டேன்,நீ இந்த அரண்மனையில் என்ன செய்கிறாய்,உன்னால் எப்படி இங்கே உட்கார முடிகிறது? நம் பிள்ளைகள் போர்க் களத்தில் மல்லுக்கு நிற்கின்றனர் ,அவர்களை சமாதானப்படுத்த நீ முயலக்கூடாதா?’

அக்கா, நான் போர்க்களம் போனால் அங்கே நம் குல மூத்தவர்கள் அணிவகுத்து நிற்பர்.
அந்நேரத்தில் நான் போய் யார் பக்கம் பேசமுடியும்?பிதாமகருக்கு எதிரில் நான் எப்படி போய் நிற்க முடியும்?’
குந்தியின் பேச்சைக்கேட்ட காந்தாரி வாய் மூடிக்கொண்டாள். 

              ****************

துருபதன் அரண்மனையில் சிகண்டியும், அவள்(ன்) தம்பி திருஷ்டதூமனும் எதிர்வரும் போரில் பீஷ்மனை கொல்ல திட்டமிடுகின்றனர்.

பீஷ்மனை கொல்ல ஏன் அப்படி சபதம் கொண்டீர்கள்? அக்காதம்பி வினவுகிறான்.

முற்பிறவியில்காசிராஜனுக்குப்பிறந்த மூன்று பெண்களில் நான் மூத்தவள்,அம்பை என்பது என் பெயர்.ஒருநாள் எனக்கு சுயம்வர நாள் வந்தது பல தேசத்து இளவரசர்கள் வந்தனர்.நான் அண்டை நாட்டு இளவரசனான சால்வனை காதலித்து வந்தேன்.அவை கூடியிருந்த நேரத்தில் பீஷ்மன் உள்ளே வந்தான்,

நான் காசி ராஜனின் மூன்று கன்னிகைகளையும் கவர்ந்து போய் என் தம்பி விசித்திரவீரனுக்கு மணமுடிக்க உள்ளேன்.
காசி ராஜனின் சம்மதத்தைக் கூட எதிர் பார்க்காமல், பீஷ்மன் மூன்று பெண்களையும் கடத்த முயல்கிறான்.அந்நேரம் இளவரசன் சால்வன்,

ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவளை வலிய திருமணம் செய்ய முடியாது என கூறுகிறான்.

சால்வனோடு அங்கிருக்கும் மற்ற இளவரசர்களும் சால்வனின் கருத்தை அமோதித்தார்கள்.அவர்களையெல்லாம் ஒரு நொடியில் தன் வலிமை மிக்க அம்புகளால் அவர்களின் தலையின் மணிமகுடங்களை கீழே சாய்த்துவிடுகின்றான்,பீஷ்மன்.கவர்ந்து செல்லும் தன் காதலியை மீட்க பீஷ்மனை பின் தொடர்கிறான்,சால்வன். ஆனால் பீஷ்மனை சால்வனால் வெற்றிகொள்ள முடியவில்லை.

கவர்ந்து சென்ற மூன்று இளவரசிகளையும்,தன் சிற்றன்னையும் ராஜமாதாவுமான சத்யவதியிடம் ஒப்படைக்கிறான் பீஷ்மன். அப்போது  சத்யவதியிடம், ‘ராஜமாதா,இந்த மூன்று கன்னிகைகளையும் நம் விசித்திர வீரனுக்கு மணமுடித்து வைப்போம் என்கிறான்.
                                   
ஆனால் அம்பையான நான்,‘அதெப்படி முடியும்? கடத்தி வந்தவன் நீ,நான் மாலை சூடினால் உனக்குத்தான் மாலை சூடுவேன், இல்லையெனில் என்னை சால்வனிடம் சேர்த்து விடுங்கள், நான் அவனைத்தான் காதலித்தேன், என்னை நீ கவர்ந்து வந்தது அதர்மச் செயல்

இதைக் கேட்ட சத்யவதி,‘வேண்டாம் பீஷ்மா இவள் சம்மதம் இல்லாமல் நாம் நம் விசித்திரவீரனுக்கு மணமுடிக்க கூடாதூஎன்கிறாள்
என்னை மீண்டும் காசிக்கு அனுப்புகிறான் பீஷ்மன்.ஆனால் அங்கு சென்ற என்னை ஏற்க மறுக்கிறான் சால்வன்,

நான் ஒருவனிடம் தோற்றுவிட்டு இழந்த பொருளை மீண்டும் பெற மாட்டேன் இது எனக்கு இரட்டிப்பு அவமானம் ஆகாதா? நீ மீண்டும் பீஷ்மனிடமே செல் என்னைத் திருப்பிவிடுகிறான்.

மீண்டும் அஸ்த்தினாபுரம் வந்த நான் பீஷ்மனிடம்,‘பீஷ்மா நீ சுத்த வீரனாக இருந்தால் கவர்ந்து வந்த என்னை மனைவியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றேன் ஆனால் அவன்,

நான் பிரம்மச்சாரியம் கடைபிடிப்பதாக சபதமேற் கொண்டுள்ளேன் என்னால் உன்னை மனைவியாக்கிக்  கொள்ள முடியாது.என திட்டவட்டமாக தெரிவித்து விட்டன்.

அப்போது பீஷ்மன்,‘ஒரு பெண்ணை கவர்ந்து வந்து நிற்கதியாக்குவது ஒரு ஆண் மகனுக்கு அழகல்ல, என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.எனவே நீ போய் என் குருவான பரசுராமனிடம் முறையிடு,அவர் அதற்கு தீர்வு சொல்வார் என என்னை பரசுராமனிடம் அனுப்பினான். நான் பரசுராமனை அணுகினேன்,அப்போது பரசுராமர்,

ஒரு பெண்ணான உன்னை இந்நிலைக்கு ஆளக்கியது என் சீடனா! எனக்கே அவமானமாக உள்ளது

உடனே ஒரு தூதுவனிடம்,‘நீ போய் பீஷ்மனை உடனே வரச்சொல்
பீஷ்மனும் பரசுராமனிடம் வந்தான்,குருவான பரசுராமனை மண்டியிட்டு வணங்கினான், அப்போது பரசுராமன், ‘இந்த பெண்ணை நிற்கதியாக்கிய குற்றத்திற்கு உன்னிடம் விளக்கம் கேட்கிறேன் பதில் சொல்

‘குருவே தங்களுக்கு பதில் சொல்ல கடமைப் பட்டுள்ளேன். நான் பிம்மச்சாரியம் மேற்கொள்ள வேண்டி சபதமேற் கொண்டுள்ளேன் என்னால் இப்பெண்ணை மனைவியாக ஏற்க முடியாது என்னை மன்னித்தருளுங்கள்’

அந்தப் பெண்ணை கவரும் முன் நீ அந்த பெண்ணின் சம்மதம் கேட்டிருக்க வேண்டும், இந்த தவறுக்காக நீ என்னிடம் போர்புரிய வேண்டியிருக்கும்.குருசேத்ரம் செல் அங்கே என்னை எதிர்த்து போரிடு

குருசேத்திர போர்க் களத்தில் தன் குரு எதிரே பீஷ்மன் நிற்கிறான் அப்போது பீஷ்மன்,‘குருவே தங்கள் சீடனான நான் ரதத்தின் மீது நிற்கிறேன்,தாங்களோ தரையில் நின்று போரிட தயாராகிவிட்டீர்கள் தாங்களும் ஒரு ரதத்திற்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்

வேண்டாம்,போர் புரிவது என் தொழிலல்ல, முதன் முறையாக என் சீடனின் போர் வல்லமையை தெரிந்து கொள்ள வேண்டி போர்புரிகிறேன், நான் தரையில் நின்று போர் புரிய முடியும், சத்ரியனான நீ ரதத்தில் நின்று போர்புரிவதுதான் முறை

பீஷ்மன் தன் குருவான பரசுராமனை நோக்கி வருகிறான்,பரசுராமன் முன் மண்டியிடுகிறான், ‘போரில் நான் வெற்றிபெற வாழ்த்துங்கள் குருவே!

பீஷ்மா! ஒரு சத்ரியனான நீ ரணகளத்தில் உன் குருவிடம் காட்டும் மரியாதை எனக்கு பிடித்துள்ளது,சத்ரியர்களுக்கே நீ ஒரு வழி காட்டி

இருவரும் மாறி மாறி அம்புகளை எய்துகின்றனர்,முடிவில் பரசுராமன் நிராயுத பாணியாகின்றான், அப்போது ரிஷிகள், பீஷ்மனிடம்,

வேண்டாம் பீஷ்மா! குருவை கொன்ற பாவத்திற்கு நீ ஆளாகாதே போர்க் களத்திலிருந்து விலகிச் சென்றுவிடு பீஷ்மனும் குருவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு சென்று விடுகிறான். அப்போது பரசுராமர்,சிகண்டியைப் பார்த்து,

இப்பிறவியில் இவனை கொல்ல முடியாது பெண்ணே! அவன் மகாதேவனிடம் வரம் பெற்றவன் ,நீ அவனை கொல்ல வேண்டுமானால், நீயும் மகாதேவனிடம் தவமிருந்து வரம் கேள்,நீ போகலாம்என கூறியதும் நான் சிவனிடம் கடும் தவம் புரிந்தேன்

சிவன் என் முன்னே தோன்றியதும்,‘ என்ன வரம் வேண்டும்,கேள் என்றார் நான்,

பீஷ்மனை கொல்ல வேண்டும்

அது இப்பிறவியில் அது முடியாது அடுத்த  பிறவியில் நீ துருபதன் மகளாக பிறப்பாய் அப்போது உன் சபதம் நிறைவேறும்
தன் தம்பி திருஷ்ட்ட தூமனிடம் இந்த கதையை செல்லி முடித்ததும்,திருஷ்ட்டதூமன்,‘அக்கா அந்த பீஷமனை நான் கொல்வேன்

வேண்டாம் தம்பி, என் சபதத்தை நான் தான் முடிக்க வேண்டும் ,யார் சபதம் மேற் கொள்கின்றனரோ அவர்கள் அதை நிறை வேற்றுவது தான் தர்மம்,
தன் சபதத்தை இன்னொருவர் மூலம் நிறை வேற்றுவது துரோணரைப் போன்ற அந்தணருக்கு வேண்டுமானால் அது அழகா இருக்கலாம் என்னைப் போன்ற சத்ரியனுக்கு அது அழகல்ல
ஆ.க-
இங்கே அந்தணர்-சத்ரியர் குணங்களை சிகண்டி மூலம் வேறுபடுத்தி காட்டப்பட்டிருப்பதை  வாசகர்கள் இங்கே உணரலாம்.

91-குருஷேத்ரம்

அந்தணர்கள் குருக்களாக( அஸ்த்தர-சஸ்த்திர வித்தைகள் கற்றவர்கள்) குருகுலம் அமைத்து சத்ரியர்களுக்கு அழிவுக்கலையை (தனுர் வித்தைகள்) பயிற்றுவித்த இடம் தான் குருஷேத்ரம்.சத்ரியர்கள் குருஷேத்ரத்தில் சண்டையிட்டு மடிந்தால் இறந்தபின் சொர்கம் கிடைக்கும் எனும் நம்பிக்கை போர் வீரர்களுக்கு  ஊட்டப்பட்டது,இதன் விளைவாக போர் வீரர்கள் இரு தரப்பிலும் போட்டிப் போட்டுக் கொண்டு படையில் முந்திச் சென்றனர்.
                                     
கிருஷ்னனின் அஸ்த்தினாபுர அமைதி தூதுவில் பாண்டவர்களுக்காக இந்திரபிரஸ்த்தம் சமஸ்த்தானத்தில் ஏதாவது ஐந்து கிராமங்களையாவது தரலாம் எனும் கிருஷ்னனின் யோசனை துரியோதனனால் நிராகரிக்கப்பட்டது.அதை அடுத்து,

போருக்கு நாள் குறித்துக் கொள்ளுங்கள் என பீஷமரிடம் கிருஷ்னன் கூறிவிட்டு பாண்டவர்கள் தங்கி இருக்கும் விராட தேசம் நோக்கி செல்கிறான்.

92-அரவான்

பாண்டவர்கள் கிருஷ்னனுடன் போர்பற்றிய ஆலோசனை செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது ஒரு சேவகன், ‘அர்ச்சுனரை காண ஒரு இளைஞன் வெளியில் நிற்கிறார்’

அர்ச்சுனன், ‘வரச்சொல்’

உள்ளே வந்தவன் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு,

‘நான் மாவீரன் வில்லாளியின் மகன் அரவான்’

உடனே கிருஷ்னன், ‘அர்ச்சுனா இது எப்போ நடந்து
?,சுபத்திரைக்கு முன்பா? அல்லது பின்பா?

தர்மனும், ‘திரவுபதிக்கு முன்பா?அல்லது பின்பா?’

அர்ச்சுனன், ‘திரவுபதியை திருமணம் செய்தபின் நான் ஒரு வருடம் அஞ்சான வாசம் இருக்க வேண்டிய சூழல்,அப்போது உலுபியை சந்திக்க நேர்ந்தது,நான்  உலுபியை கந்தர்வ மணம் புரிந்தேன் .அதன் பிறகு நான் அங்கு செல்லவே இல்லை,செல்லக்கூடிய காலம் கனியவில்லை. இப்பொழுதுதான் நான் மகனைப் பார்க்கிறேன்.’

தர்மன், ‘இது நாள் வரை உன் தந்தையை நீ,பார்க்க வரவில்லை,இப்பொழுது எதற்காக வந்தாய் மகனே?’

கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் போர் நடக்கப்போவதை என் தாய் என்னிடம் கூறினார்.போரில் உன் தந்தைக்கு துணையாக நின்று போர்ப் புரிந்து வெற்றிவாகை சூடவேண்டும்,நீ பிறந்த பிறவிப்பயன் உனக்கு அப்போதுதான் கிட்டும்,எனக்கூறினார் ,எனவே நான் என் தந்தைக்கு துணையாக இருக்கவே வந்தேன்

அப்போது கிருஷ்னன்,அரவானைப்பற்றிய சிறப்பு இயல்புகளைப் பற்றி பாண்டவர்களுக்கு எடுத்துரைக்கிறான்,
அரவான் 10 யானைகளின் சேர்ந்த பலம் கொண்டவன், 100 குதிரைப் படைக்கு சமமானவன்.

இதைக் கேட்டதும் பாண்டவர்களுக்கு படைபலம் கூடிவிட்டதை எண்ணி பெருமிதம் கொள்கின்றனர்.

இதற்கிடையே அஸ்த்தினாபுரத்தில் கவுரவர்கள் போர் பற்றிய ஆலோசனை நடக்கிறது.

போர் நடக்கும் முன்,சில சடங்குகள் செய்ய வேண்டும் சகுனி முன் மொழிகிறான்.
.-

(ஆரியர்கள் வருகையால்,முதலில் காந்தார மக்கள்தான்  சடங்கு,சம்பரதாயம் ஆவி பேய்,பில்லி சூனியம் போன்ற அருவ சிந்தனைகளில் பாதிக்கப்பட்டனர்.இதன் விளைவாக சகுனிக்கு அதில் நம்பிக்கை வந்துவிட்டது.மூட நம்பிக்கையில், நம்பிக்கையற்று இருந்த அஸ்த்தினாபுர மக்களுக்கும் அருவ சிந்தனைகளில் பற்று வந்துவிட்டது.)

துரியன், ‘அப்படி என்ன சடங்கு செய்ய வேண்டும் மாமா?’

போர் நடக்கும் முன் களபலி தர வேண்டும்.

இதெல்லாம் எங்கே கற்றீர்கள் மாமா?’

குருகுல பிராமணர்களிடத்தில் தான்

தேவையற்ற சடங்கு மாமா

இப்படி எதையாவது குதற்கமாக பேசி காரியத்தை கெடுக்காதே.நான் சொல்வதை செய் துரியா

சரிமாமா என்ன செய்யலாம் சொல்லுங்கள்

மீண்டும் சகாதேவனைத் தேடிப் போவோம்

சரி போகலாம்

சகாதேவனிடம் ஆரூடம் பார்க்கப்பட்டது, ‘களபலிக்கு சரியான ஆள்,32 அங்க லட்சணங்களைப் பெற்ற ஒரே வீரன் அரவான் தான்

அமாவ‍சை கழித்து 11-ம் நாள் அன்று ஏகாதாசி,களபலி கொடுத்தவுடன் போர் துவங்கலாம்.

இது நடக்க கூடிய காரியமா?’துரியன் தன் மாமனை  வினவுகிறான்.

ஏன் முடியாது ?,நாம் அரவானை கேட்போம் வா,முயலாமல் நாம் முடிவெடுக்க கூடாது.

அரவானைத் தேடி செல்கின்றனர்.அரவானிடம் இருவரும் வாஞ்சையாக பேசி இணங்க வைக்கின்றனர்.
அரவான் களபலிக்கு இசைந்தது பாண்டவர்கள் மத்தியில்  பெரும் குழப்பத்தை விளைவித்தது.

என்ன கிருஷ்னா? அரவான் பலம் வாய்ந்தவன் அவன் பலம் பத்து யானைக்கு சமம் என்றெல்லாம் சொன்னீர்கள்,இப்பொழுது அவனை களபலி மொடுத்தால் நமக்குத்தானே  நஷ்ட்டம்?

இல்லை அரவானை நம் பக்கம் இழுத்து நமது படைக்கு களபலி கொடுத்தால் நமக்குத்தான் வெற்றி

இதெப்படி முடியும்?அவன்தான் கவுரவர்களுக்கு வாக்கு கொடுத்துவிட்டானே!

அரவான் உன் பிள்ளை,அவன் களபலியாவது உறுதியாகிவிட்டது.அவனை நம் பக்கம் இழுப்பது சுலபம் தானே?’
அரவானை வரவழைக்கின்றனர்.அர்ச்சுனனான தன் தந்தையை வணங்குகிறான்,அப்போது அர்ச்சுனன், மகனே நமக்காக (பாண்டவர்கள்) நீ போரிட்டால் நமக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என எண்ணியிருந்தேன்,ஆனால் நீ எதிரணிக்கு (கவுரவர்களுக்கு) தன்னை களபலிக்கு அர்ப்பணித்துவிட்டாய் ,ஒரு வீரனுக்கு அழகா இது?’

தந்தையே துரியனும் எனக்கு சித்தப்பாதானே? அவர் தான் போரில் வெற்றிபெற என் உதவி கேட்டார்,அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என வினவியதற்கு,
என் உடலை அர்ப்பணித்தால் போதும் என்றார்,நமது சித்தப்பா எனும் உரிமையில் நானும் சரி என்றேன்

அப்பொழுது கிருஷ்னன், ‘சரி நீ உன் உடலை அர்ப்பணிக்க தீர்மானித்து விட்டாய், அது எந்த நாளில்குறிக்கப்பட்டது?’

மார்கழி மாதம் அமாவாசை அடுத்த 11-ம் நாளான ஏகாதசித் திதி

ஏகாதசித் திதி தானே,எப்பொழுது ராகுவும் கேதுவும் ஒன்று சேரும் நாளோ அந்த நாள் தானே ஏகாதசித் திதி, ராகுவும் கேதுவும் 10-ம் நாளே ஒன்று சேர்ந்தால் அன்றுதானே ஏகாதசி ,அப்பொழுது  நீ கொடுத்த வாக்குப்படி ஏகாதசி அன்று இங்கே வந்துவிடு

ஏகாதசித் திதி அன்று உன் தந்தையின் வெற்றிக்கா பாண்டவர்கள் நடத்தும் யாகத்திற்கு நீ உன்னை அர்ப்பணித்துவிடு

ராகுவையும் கேதுவையும் தனித்தனியே சந்தித்து,இருவரையும் ஒன்று சேர அமாவாசை கழிந்து 10-ம் நாள், கிருஷ்னன் ஏற்பாடு செய்தான்,சந்தித்த நாளே ஏகாதசி ஆகும் எனவே சந்தித்த

‘இன்றைக்குத்தான் 11-ம் நாள் தங்கள் இன்னும் ஒன்று சேராமல் இருந்தால் பூமி என்னாவது?’

மிரண்டுபோன ராகுவும் கேதுவும் மண்ணில் ஒன்றாக வந்தனர்,சிரிதும் தாமதிக்காமல் அரவானை களபலி கொடுத்து தீயிட்டு(யாகத்தில்)பொசுக்கினர்.

(அரவானைப்பற்றி இன்னொரு கதையும் உண்டு,18-ம் போர் துவங்கி 8-ம் நாளில் சகுனியின் வாரிசை (உலுகன்) அரவான் அழித்து விடுகிறான். பாண்டவர்கள், கிருஷ்னனோடு போர் பற்றிய தந்திரங்களை ஆலோசிக்கின்றனர்.அப்பொழுது கிருஷ்னன்,‘பீஷ்மனை அழித்தால் தான் இந்த தர்ம யுத்தம் முடிவுக்கு வரும்
(காண்க சன் தொ.கா.வ.எண் 140)

தர்மன், ‘அந்த யோசனையை நீயே சொல் கிருஷ்னா!
                               
பீஷ்மன் மரணிக்க வேண்டுமானால் ஒரு களபலி தரவேண்டும்

அப்படி என்றால்?’

அதற்கு யோசனையை நம் சகாதேவனிடம் தான் கேட்க வேண்டும்
சகாதேவனிடம் ஆருடம் பார்க்கப்படுகிறது. அப்பொது சகாதேவன்,

களபலி தர வேண்டுமானால் 32 அங்க லட்சணமுள்ள ஒரு சுத்த வீரனைத்தான் தரவேண்டும்

அப்படி அந்த வகையில் நம்மில் யார்?’

நம்மில் மூவர் உள்ளனர்

யார் யார்? நீயே சொல்லிவிடு

முதல் வீரன்,அர்ச்சுனன்!அனைவரும் துடுக்குற்றனர்.

என்னது நம்மில் சிறந்த வீரனே அர்ச்சுனன்தான் அவரை பலியிட்டுவிட்டால் என் சபதத்தை நான் எப்படி முடிப்பேன்பாஞ்சாலி முடியாது என புலம்புகிறாள்.

அடுத்து?’

அவர் கிருஷ்னன் தான்!

அது முடியாது,இந்த போருக்கு சூத்ரதாரியே கிருஷ்னன்தான்,அவரை இழந்தால் நாம் எப்படி போரில் வெற்றி பெற முடியும்?’ தர்மன் மறுக்கிறான்.

அடுத்து,இன்னொருவர் யார்?’

அர்ச்சுனன் புதல்வன் அரவான்!

அய்யோ அவன் அறியா பிள்ளை,இன்னும் திருமணம் ஆகவில்லை  ,அவன் இப்பூஉலகில் தோன்றி ஒரு சுகத்தையும் காணாமல் மரணிப்பதா? கூடாது!
அர்ச்சுனன் மறுப்பதோடு,மேலும் அவன், ‘நான் களபலிக்கு சம்மதிக்கிறேன்

வேண்டாம் தந்தையே இந்த தர்ம போரில் தங்களுக்கு உதவ என் தாய் கட்டளை இட்டுள்ளார்,அவர் ஆணையை ஏற்று தங்களுக்கு வெற்றி கிட்ட என்னை தியாகம் செய்ய நான் சம்மதிக்கிறேன்அரவான் இடைமறித்து பேசுகிறான்.மேலும் அவன் தன் இறுதி ஆசை ஒன்றை மட்டும் நிவர்த்தி செய்ய வேண்டும் என வேண்டுகிறான்.

என்ன ஆசை அது?’

நான் ஒரு பிம்மச்சரி,தாம்பத்திய சுகம் ஒன்றும் அறியாதவன்!,நான் இறக்குமுன் என்னை கட்டியழ ஒரு மனைவி வேண்டும்,அதற்கு எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்

இது எப்படி சாத்யமாகும்?,இறந்துபோக இருக்கும் ஒருவனை எந்தப்பெண் மணம் செய்ய முன்வருவாள்?ஒரு பெண்ணுக்கு பூவும் பொட்டும் முக்கியமல்லவா?’

அப்போது சகாதேவன், ‘களபலிக்கு தயாராக இருக்கும் ஒருவனின் இறுதி ஆசையை நிறைவேற்றாமல் களபலி இட்டால் அது பாவ செயலாகும் ஒருவனின் இறுதி ஆசையை அவன் இறக்குமுன் நிறைவேற்றுவதுதான் தர்மம்

எல்லாரும் குழம்பி போனார்கள்,அரவான்,‘என் இறுதி ஆசை நிறைவேறாமல் போகட்டும்,இறக்க நினைக்கும் என்னை யார்தான் மணமுடிக்க முன் வருவார்கள்?’ புலம்புகிறான்.

கிருஷ்னன் அப்போது ஒரு யோசனை தெரிவிப்பான், ‘நான் வேண்டுமானால் பெண்ணாக மாறட்டுமா?மீண்டும் நான் மறு அவதாரம் எடுத்துவிடுவேன் இதுதான் இதற்கு வழி

.க-
உண்மையில் அவன் பெண்ணாக மாறவில்லை,பெண் வேடமிட்டு அரவானை ஏமாற்றினான்.கிருஷ்னன் உண்மையில்  கடவுள் அவதாரம் இல்லை,மக்களின் கற்பனைக்கு ஏற்றவாறு கதை புனையப்பட்டது(8) என்பதை வாசகர்கள் உணர வேண்டும்,மாயம் இல்லை, மந்திரம்! இல்லை!

கிருஷ்னன் எதோ மாயம் செய்யப்போகிறான் எனும் நினைப்பில் பாண்டவர்கள் சரி என சம்மதம் தெரிவித்தனர்.

அரவானுக்கும் அலிக்கும்  திருமணம் நடைபெற்றது.உடனே அரவானின் தலையை துண்டித்து காளிக்கு படைக்கப்பட்டது. அரவானின் மனைவி அவன் தலையை தன் மடியில் வைத்து ஒப்பாரி வைக்கிறாள். பூரித்துப்போன அரவானின் தலையை ப்பார்த்து, ‘உங்கள் இறுதி ஆசையென்ன?நான் நிறைவேற்றுவேன்என கேட்கிறா(ன்)ள், அப்போது அரவான்,
இந்த போர் நடக்கும் நாட்கள் முழுவதும் நான் காணவேண்டும்

அப்படியானால் உங்கள் தலைமட்டும் ஒரு மரக்கிளையில் தொங்க விடுகிறேன்

.க-
உலகில் ஆண்,பெண் என இரண்டு இனங்கள்தான் பெரும்பான்மை இனங்களாக உள்ளன.இந்த இரண்டுமில்லாமல் அலி என ஒரு இரண்டும் கெட்டான்  இனம் உள்ளது.ஆண் தன்மையும் இன்றி பெண் தன்மையும் இன்றி ஒரு இனம் உருவாகி விடுகிறது.இதனால் சமுதாயத்திற்கு எந்த பலனும் இல்லை இயற்கைப் படைப்பில் இது ஒரு பிறப்பு பிழை  (manufacturing fault)அல்லது உற்பத்தி பிழை.இந்த இனம் மனித இனம் தோன்றிய நாட்களிருந்து உள்ளது. மகாபாரதத்திலும் இந்த பிறப்பு பிழையை நாம் சந்திக்கின்றோம்.

இதை நினைவூட்டும் விதமாக கூவாகத்தில் ஆண்டுதோறும் அலிகள் ஒன்று கூடுகின்றனர்
                                       
இரவு ஆண்பெண் வேடமிட்டு திருமணம புரிகின்றனர்,விடியற்காலை கட்டிய தாலியை அறுத்து ஒப்பாரி வைத்து அழும் காட்சிகளை இன்றும் ஆண்டுதோரும்  காணலாம்.

இந்த செய்தி துரியன்களுக்கு எட்டுகிறது. சகுனியைப் பார்த்து துரியன், ‘என்ன மாமா இப்படி களபலி கொடுத்தால் வெற்றி அவர்களுக்குத்தான் கிட்டுமா?
இதற்கெல்லாம் காரணம் அந்த கிருஷ்னன்தான் அவனை ஒழித்தால் சரியாகிவிடும்,அதற்கு என்ன வழி என யோசிக்கிறேன்.மேலும் சகுனி,‘இது உன் தாத்தா பீஷமரின் மரணத்திற்கு வழி வகுக்கும்,அவரை காப்பாற்றுவது நம் முதல்கடமை,இதற்கு நீ தான் முடிவெடுக்க வேண்டும்.

அதிரதி, மகாரதி, மத்தியரதி ஆகிய படைவீரர்களை துரியன் அழைத்து போர்க் களத்தில் தன் தாத்தாவின் உயிர் காக்கப் படவேண்டும், அதற்கு தாங்கள் தான் பொறுப்பு என உத்ரவிடுகிறான்.

இந்த சேதி துரியனுக்கு எட்டியது, ‘மாமா அந்த நய வஞ்சக பாண்டவர்கள் அரவானை நேற்றே பலியிட்டுவிட்டனர்’

‘அதெப்படி சாத்யமாயிற்று? எல்லாம் அந்த இடைச்சிறுவனின் வேலையாக இருக்கும்’  

சரிஅடுத்துநாம்நடப்பதைகவனிப்போம்மேலும்சகுனி,

நாம் வணங்கும் மகாதேவனுக்கு நம் படைக் கலன்களை வைத்து பூஜிக்க வேண்டும், அப்பொழுது உயிர் பலி கொடுக்க வேண்டும் ,அப்பொழுதுதான் நாம் நம் படை வீரர்கள் போர்க் களத்தில் உயிர் பலியாவதை தடுக்கலாம்.
அவ்வாறு பூஜை நடத்தி தன் மகன்களுக்கு காந்தாரி படைக் கலன்களை எடுத்து கொடுத்து வெற்றி வாகை சூடி வாருங்கள் என வாழ்த்தி அனுப்பினாள்.

அதே போன்று பாண்டவர்கள் தரப்பில் அன்று காலபைரவருக்கு பூஜை நடத்தப்பட்டது,குந்தி தன் மகன்களுக்கு படைக் கலன்களைக் கொடுத்து வெற்றி பெற  வாழ்த்தி அனுப்பினாள்.

பாண்டவர்களும்,கவுரவர்களும் தங்களின் ஆதரவாளர்களை அவரவர் அணிக்கு ஆள் சேர்க்கின்றனர். இரு தரப்பு படைகளும் குருஷேத்திரம் நோக்கி விரைகின்றன.

              (இதன் தொடரை புதிய அஞ்சல்-11ல் காணவும்)

No comments: