(அகு-தொ)
11-குடிகார ராமன்
வால்மீகி ராமாயணத்தில் வரும் ராமன் குடிப் பழக்கமுடையவன்.ஆனால்
கம்பராமாயணத்தில் அப்படியல்ல, தமிழர் நாகரிகம் குடிப் பழக்கத்திற்கு எதிரானது
என்பது கம்பனது நம்பிக்கை.அதனால் குடிப்பழக்கமுடைய வால்மீகி ராமனை குடியொழித்த
ராமனாக காட்டுகின்றார்,கம்பர்!
'தெய்வமே மனிதனாக வந்தாலும் அவன் குடிபழக்க முடையவனானால்
தமிழ் நாட்டில் இன்று தெய்வமாக வாழமுடியாது' என்று கம்பர் சொல்லாமல் சொல்லுகின்றார்.
(மா.பொ.சி.யின் ‘கம்பனிடம் யான் கற்ற அரசியல்’ நூலிலிருந்து
திரட்டப்பட்டது)
கம்பர் தமது காப்பியம் முழுவதிலும்
அரக்கரிடமும்,குரக்கரிடமும் மானிடரிடமும்
குடிப்பழக்கம் இருப்பதாக காட்டவில்லை. (இங்கே அரக்கர் என்பது தமிழராகவும்,குரக்கர்
குரங்கு மனிதர்களாகவும்,மானுடர் என்பது பிராமணர்கள் என பொருள் கொள்ள வேண்டும்)
கிஷ்கிந்தையில் குரக்கர்களிடம் குடிப்பழக்கம் இருந்ததை கம்பர் காட்டுகிறார்.குரக்கர்
குலத் தலைவனும் கிஷ்கிந்தை மன்னனுமான சுக்ரீவனே குடித்துவிட்டு நினை விழந்து
கிடப்பதாக கூறுகிறார்.
அதேபோல் கொடிய பழக்கம் எத்தனை உண்டோ அத்தனையும்
கடைபிடிக்கும் அரக்கர்களிடமும் குடிப்பழக்கமுண்டு. என்பதனை இலங்கை வேந்தன்
தம்பியான கும்பகருணனைக் கொண்டே காட்டுகிறார். அய்யோத்தி மற்றும் மிதிலை மக்கள்
குடிப்பழக்கம் உள்ளதாக எங்கும் சுட்டிக் காட்டவில்லை.
சுக்ரீவன் வாயிலாக கம்பர் மதுவின் கேடை விவரிக்கிறார்.கோசல
நாட்டு மக்கள் மதுவைத் தொடுவதில்லை . எனக் கூறுகிறார்.ஒரு வேளை தான் சார்ந்த இனமான
தமிழினத்தை திருத்துவதற்காக கோசலை நாட்டு மக்கள் நன்னெறி கொண்டவர்களாக காட்ட
விரும்பினார் போலும்.
வால்மிகி ராமாயண
கதை தோன்றி சுமார் 2000- ம் ஆண்டுகளுக்கு பின் கம்பனுக்கு
ராமாயணத்தை தமிழில் எழுத தோன்றியபோது சமத்கிருத மொழியை கற்றுத்தான் மோழி
பெயர்த்திருக்க வேண்டும், ஆனால் கம்பன் நேர்மையாக செயல்பட வில்லை .மாறாக
தமிழனுக்கு ஆன்மீக சிந்தனை வளர்க்க வேண்டும் எனும் ஆவல் பெறுகியதால்தான், வால்மீகி
சொன்ன உண்மைகளை மறைத்துவிட்டான்.
ஒரு எதிரியை எதிர் நின்று தாக்குவது தான் தமிழன் கண்ட போர்
இலக்கணம.எதிரியை மறைந்திருந்து தாக்குவதும்,பழக்கமானவர்கள் போல் நடித்து(கொரில்லா
முறை)எதிரியை அழிப்பதும் உலகில் பிற இனமக்களின் போர் தந்திர முறையாகும்.ராமன்
அன்றே தைரியமற்ற கோழையைப் போல் மறைந்து நின்று வாலியைக் கொன்றான்.
வாலி ஒரு பெரிய கொலை குற்றம் புரிந்தவன் போல் பாவித்து வாலியைக் கொல்வது என்பது
எந்த வகையில் நியாயம்?அந்நாளிலும் இதையாரும் கேட்டதாக தெரியவில்லை, இன்றும் இதையாரும் உணர்ந்ததாக தெரியவில்லை.
இந்த இடத்தில் ராமன் செய்த தவறை ஒருவரும் கண்டித்ததாக, ராமாயணத்தில் எழுதப்படவில்லை ராமாயணத்தை எழுதிய ஆசிரியர்கள் யாரும் தன்னிலை
விளக்கம் அளிக்கவில்லை. ஒரு நிலையில்
ஆசிரியர்களே ராமன் ஆதரவாளர்கள் போல்தான் செயல் பட்டிருக்கின்றனர்,என்பதை
ராமாயணத்தை நடுநிலை எண்ணத்தோடு படிப்பவர்களுக்கு தெரியும்.
(அப்போது ராமாயண கதைகேட்ட தமிழர்கள்
ராமனை நல்லவன் என சித்தரிக்கப் பட்டதால் மறுத்து பேசவோ ராமனின் கொலை பாதக செயலைக் கண்டிக்கவோ
நாதியற்று இருந்தது இப்பொழுது உணர முடிகிறது.
இது ஒரு அறவழியை பின்பற்றும் வீரனுக்கு அழகல்ல,என்று
அன்றய தமிழர்கள் உணரும்படி எடுத்துச் சொல்ல ஆளில்லை.ஏனெனில்
தமிழர்களுக்கு நாடகம் போடத் தெரியாது.நாடக கதாபாத்ரங்களைப் பார்த்து அவைகளோடு ஒன்றி விடுவார்கள்.
இந்த நாடக குணம் இல்லா மனிதர்கள் யாவருமே மனிதனுக்கு மனிதன்
அடிமையாகத் தான் வாழமுடியும். ராமயணகதையில்
ராமனை ஒரு நேர்மையான வீரன் என நாடெங்கும் கதாகாலட்சேபம் நடத்திய ஆரியர்கள்,
தமிழர்களின் மனமாற்றத்தை ராவணனுக்கு எதிராக திருப்பியதில் வெற்றி பெற்றனர்.
இன்றும் பெறுகின்றனர்.தமிழர்கள் கண்ட போர் ஆயுதங்கள் எல்லாம்
வேல், கதை(தண்டாயுதம்),
கத்தி,ஈட்டி மற்றும் வாள் மட்டுமே. ஆரியர்கள் வருகைக்குப் பின்தான் தமிழர்கள்
வில்அம்பு என்பது ஒரு நவீன போர் ஆயுதம் என்பதை தெரிந்து கொண்டார்கள்.
ராமன் புனிதமானவன் என தமிழர்களை நம்பவைப்பதற்கு பல நம்பமுடியாத
கதைகளையும் மக்களிடையே ஆரியர்கள் கட்டவிழ்த்து விட்டனர்.
இன்றும் அது கம்பராமாயணம் மூலம் நிரந்தரமாகிவிட்டது.
அவற்றுள் ஒன்று,பாவம் செய்த அகலிகை என்ற பெண் ஒரு
முனிவனால் கல்லாக சபிக்கப்பட்டாளாம்.சீதையோடு ராமன் சென்ற போது ராமன் கால் பட்டு
உயிர் பெற்றாளாம். இந்த கதையை
முன்னமே குறிப்பிட்டுள்ளேன்.
கண்ணுக்குப் புலப்படாத சாத்தான்கள் இருப்பதாக
பாமரமக்களை நம்பவைத்த ஆரியர்கள் இது போன்ற நம்பமுடியாத செய்திகளையும் பாமரமக்களை நம்பவைத்தனர்.
இன்றும் அதே போன்று அவர்கள் விடும் கதைகளை நம்மவர்கள் நம்பிக் கொண்டு இருப்பது
தான் மனம் வேதனைப்படுகிறது.)
சீதை இருக்கும் இடத்தை ராமன் தெரிந்து கொண்டான்.
சீதையை விடுவிக்கும் படி ராவணனுக்கு அனுமனை தூது விடுத்தான்
. குரங்கு மனிதனைப் பார்த்தாலே ராவணனுக்கு அருவருப்பு.அனுமனுடைய
மத்தியஸ்த்தம் ராவணனுக்கு எரிச்சலை ஊட்டியது.
இந்த இடத்தில் தமிழர்களுக்கே உரிய முரட்டுபிடிவாதம் ராவணனுக்கு
இருந்ததை அரக்கர் குணம் என ஆரியர்கள் வர்னித்தனர்.இன்றும்
இதே நிலை தான்.
வால்மீகி மட்டுமல்ல தன்னிலை உணராத தமிழனும் (கம்பனும்) தன்
ராமாயணத்தில் விவரித்துள்ளான். இதன் மூலம் விட்டுக்
கொடுத்து வாழத் தெரியாத இனம் தமிழ் இனம் என்பதற்கு ராவணன் ஒரு எடுத்துக்காட்டு.
உடன் பிறந்த தம்பி விபிசனன் யோசனையை ராவணன் ஏற்க முடியாத
சூழல். தமிழர்கள் இயற்கையோடு இணைந்த அறவழி கோட்பாட்டை வாழ்க்கையில்
கடை பிடித்தவர்கள் என்பதற்கு ராவணன் குடும்பம் ஒரு எடுத்துக் காட்டு.
(ஒரு மனிதனுக்கு ஒரு மனைவி என்பது உலகம் முழுக்க ஏற்றுக் கொள்ளப்பட்ட
ஒரு நாகரிக பண்பாடு. ஆனால் அரச குலத்துக்கு
இது விதி விலக்கு.இன்றைக்கும் அரசியல்வாதிகளுக்கு ஒன்றுக்கு
மேற்பட்ட மனைவிகள் உள்ளதை நாம் அறிவோம்.
எந்த வகையிலாவது இரண்டு குடும்பங்களைச் சார்ந்தவர்களை ஒன்றோடொன்று
மோதவிட்டு ஒன்றுமறியா உயிர்களை சாகடித்து அதற்கு தர்மத்தை நிலை நாட்டும் போர் என்று
கதை கட்டி ராமாயணம் என பெயர் வைத்தார்கள்.
பிராமணர்களை வெறுக்கும் ராவண கும்பலை அழித்தால் தான் பிராமணர்களை
பாதுகாக்கும் ரகுவம்சம் மூலம் பிரமணர்களை இந்தியாவில் நிலைப் பெறச் செய்துவிடலாம் என
கணக்கு போட்டனர்.
ராமாயணத்தில் கூறப்பட்ட கதை ருத்தரவர்மன் மற்றும் அவன் வழித்
தோன்றல்களின் பின்னணியாக கொண்ட வரலாறு.பங்காளிச் சண்டையால் தூரக்கிழக்கு
நாடுகளான கம்போடியாவரை சென்று விட்டனர்.
(காண்க-முனைவர்க.த.திருநாவுக்கரசு
அவர்கள் எழுதிய நூலான தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப்
பண்பாடு,
வெளியீடு- உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனம்)
தென்னிந்திய கலாச்சாரமான தமிழர் உணவு முறை மற்றும் உறவு முறைகள்
மற்றும் தமிழைப் போன்ற எழுத்துக்கள் உள்ளதை இன்றும் அம்மக்களிடையே காணலாம்.)
ராவணன் படை பலம் கொண்டவனாக இருந்தபோதிலும் உடல் பலம்
பொருந்தியவன். கடைசித் தம்பி விபிசனன் வீட்டை விட்டு வெளியேறி ராமனோடு சேர்ந்து
கொண்டான். ராவணனுடைய பலம் என்ன? பலவீனம் என்ன? அனைத்தையும் விபிசனிடம் இருந்து ராமன் தெரிந்து கொண்டான்.
அந்த காலத்தில் ஒரு மனிதன் உயிர் வாழ உணவுக்காகவும் பின் பெண்ணுக்காகவும்
பிற மனிதனோடு சண்டையிட்டான்.ராமாயண கதைகள் மூலம் இதனை நன்கு உணரலாம்.
மனைவியை இழந்து வாடும் ராமனுக்காக அறம் காத்த தமிழர்கள்
ராவணனுக்கு எதிராக திரண்டனர். ராமனை எதிர்த்துப் போரிட தனக்கு ஆதரவாக தன்னோடு உடன்
பிறந்தவர்கள் ஆதரவை ராவணன் பெற முடியவில்லை.
இதற்கெல்லாம் உளவியல் காரணங்கள் உண்டு.மனித உறவுகளை
வகைப்படுத்தி நாகரிக மனிதன் என்கிற ஒரு எல்லைக் கோட்டுக்கு வந்த பின்பும்
அப்பா, அம்மா, திருமணமான அண்ணன் அக்கா,தங்கை போன்றோர் முறை தவறிய உறவுகளில்
நாட்டம் உடையவர் எனில் பாசப் பிணைப்புகள் வக்கரித்து போகும். இதே சூழ்நிலைதான்
அன்றய ராவணன் குடும்பத்தில் இருந்தது.
12-அண்ணனுக்கு அறவழி காட்டிய தம்பி தடம் மாறிப் போனான்
அன்னிய பெண் (சீதை) ராவணனின் கட்டுக்காவலில் இருப்பதை
ராவணனின் இரண்டு தம்பிகளில் கடைசீ தம்பியான விபிசனனுக்கு பிடிக்காமல் வீட்டை
விட்டு வெளியேறி எதிர் அணியான ராமன் அணியில் இணைந்து விட்டான்.
உலகில் அதிக நாகரிக வளர்ச்சியடையாத அந்த கால கட்டத்தில்
தமிழினம்,ஆரியர்களால் வருணிக்கப்பட்ட அரக்கர் இனம்,அறம் காத்த இனம் என்பதை
உலகுக்கு வெளிப்படுத்தியது இந்த சம்பவம் தான்.மனிதர்கள் கூட்டம் கூட்டமாக புதிய
உலகம் காண புலம் பெயர்ந்த காலம் அது.எது நியாயம் ?எது அநியாயம்? என்று உணரத் தெரியாத
அல்லது உணர முடியாத காலம் அது. தன்னுடைய மனைவி அல்லது கணவன் மகன்,மகள் தவறு
செய்தாலும் அதனை மூடி மறைத்து மற்ற கூட்டத்தினறுக்கு தெரியாமல் வாழ்க்கை நடந்த
காலம் அது.இப்பொழுது உள்ளது போல் வலுவான பொதுவான காவல் நிலையமோ அல்லது நீதி மன்றமோ
இல்லாத கால கட்டம் அது.
அன்னியப் பெண்ணை கடத்தி வந்து அடைத்து வைப்பது தவறு என்று
விபிசனன் வாயிலாக உலகுக்கு உணர்த்திய மனித இனம், அறம் காத்த தமிழினம். விபிசனின்
வேண்டுகோளை ராவணன் ஏற்கவில்லை.
ராமனும் அவன் ஆதவாளர்களான,தம்பி லட்சுமணண்,அனுமன்,வாலியான் தம்பி குகன் மற்றும் குரங்கு மனிதர்கள்
இலங்கையில் முகாமிட்டுள்ளனர்.ராவணனை சுற்றிவளைக்க போர் வியூகம்
வகுக்கப்படுகிறது.இதை அறிந்த விபிடணன் போரை தவிர்க்கும் பொருட்டு
தன் அண்ணன் கும்பகர்னனை சந்திக்கிறான். ராவணனிடம் எதிர் நின்று
பேசும் அளவுக்கு விபிடனுக்கு தைரியம் கிடையாது ,அல்லது மரியாதை
நிமித்தமாக எதிர்நின்று பேசும் திறன் அற்றவன் என கூறலாம்!
மேலும் கும்ப கர்ன்னை, ~ராமனோடு சேர்ந்து கொள்ளலாம் வா’ என உண்ணுவதையும் உறங்குவதையுமே அறிந்த தன் அண்ணன் கும்ப கர்னனை விப்பிடனன்
அழைத்தபோது, கும்பகர்னன், தன் தம்பியிடம்,
‘வா,நாம் இருவரும் அண்ணனிடம்
சென்று கோரிக்கை வைப்போம்’
13-ராவணனின் தன்மானம்
இருவரும் ராவணணை சந்திக்கின்றனர்.கும்ப கர்னன், ~~அண்ணா,இந்த சீதையை
ராமனிடம் விட்டு விடலாம்,நமக்கு வேண்டாமண்ணா இந்த பாவச் செயல்’
அப்போது ராவணணன்,
~மானிடர்
இருவரை வணங்கி மற்று அக்கூனுடைய குரங்குடையும் கும்பிட்டு வாழ்தல் ஊனுடைய உனக்கும்
உம்பிக்குமே தொழில் யானதை முடிக்கியேன் எழுக,போ!’
என தம்பிகளின் முகத்தில் அடிப்பது போல்,அதாவது ராமன் லக்குவன் இரு மானிடரையும் வணங்குவது மட்டுமல்ல அந்த கூன்போட்ட
குரங்கையும் (அனுமன்) வணங்குவது உனக்கும்
உன் தம்பிக்கும் வேண்டுமானால் தொழிலாக இருக்கலாம் எனக்கு அது வேண்டாம் போ-என கும்பகர்னன்
மற்றும் விபிடனைப் பார்த்து ராவணண் கூறி விட்டான்.
சாவதென்று முடிவெடுத்து விட்ட கும்பகர்னன் “நியாயமோ? அநியாயமோ?அண்ணன் காட்டிய
வழியே சிறந்த வழி நல்லதோ?கெட்டதோ? அவன் வழியே செல்வோம்.பெரியவர் பேச்சை
மதிக்கவில்லை எனும் அவப்பெயர் நமக்கு வேண்டாம் முடிவெடுத்து போர்க் களத்தில்
மடிந்தான்.
ராவணனை எதிர்த்து நின்ற தன் இன மக்களையும் குரங்கு
மனிதர்களையும்,மகன் இந்திரஜித் அவன் பலத்துக்கு தந்தைக்காக போரிட்டு போர்க்
களத்தில் மடிந்தான்.
ராமனிடம் உள்ளதைப் போன்ற நவின போர்க்கள ஆயுதமான வில் அம்பு
ராவணனிடம் இல்லை. இதுவே ராவணன் தோல்விக்கு காரணம். போர்க்களத்தில் ராவணன் நிராயுத
பாணியாக நின்றபோது, ராமன் போர்கள தர்மத்தை கடைபிடித்ததாக வால்மீகி
குறிப்பிடுகிறார். அதாவது நிராயுதபாணியான ராவணனை, தகுந்த ஆயுதங்களோடு அடுத்த நாள் போருக்கு வரச் சொல்கிறான். இந்த
நிலையைத்தான் கம்பன், ‘கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என
தன் காவியத்தில் குறிப்பிடுகிறான்.
வில் வித்தையில் தேர்ச்சிப் பெறாத ராவணன் ராமனிடம் தோற்றுப்
போகிறான் என்று சொல்வதை விட தனி மனிதனான ராவணனை, தன்னுடைய மனைவியை கடத்தியதற்காக, கடத்தியவனை
ராமன் (பிரம்மாஸ்த்திரம் கொண்டு) கொல்கிறான்.
14-மனைவியை கடத்தியவனுக்கு மரண தண்டனையா?
(உலகில் எந்த நாட்டிலும் பிறன் மனைவியை கடத்தியதற்காக மரண
தண்டனையோ அல்லது போரிட்டு கொல்வதையோ நியாயப் படுத்தப்படவில்லை,
அல்லது சட்டமாக்கப் படவில்லை.
(ராவணனும் சீதையும் ஒருவரோடு ஒருவர் உடன்பட்டே சென்றனர்-இது
வால்மீகி கூற்று)ஏனெனில் பிறன் மனைவியை கடத்தவது என்பது அறவழி தவறிய செயல் அவ்வளவே.இது
தமிழர் கண்ட வாழ்க்கை முறை.)
அதற்கு நமது(தமிழர்) குணத்திற்கு
ஏற்றாற்போல் வால்மீகி கதாபாத்திரங்களை கம்பர் மாற்றியமைத்து கம்பகாவியம் செய்துள்ளார்.
(பின்னாளில் பிறன் மனைவியை கடத்தி கற்பழித்து
கொலை செய்வது மரண தண்டனைக் குறிய குற்றம் என இந்த கொடிய செயலை உலகில் பெரும்பாலான
நாடுகள் சட்டமாக்கியுள்ளன.)
அது போன்ற ஒரு கொலைபாதக செயலை ராவணன் செய்யவில்லை. ராமனின்
தேவையென்ன? கடத்தப்பட்ட தன் மனைவி வேண்டும், அவ்வளவே. அதற்கு பாதிக்கப்பட்ட ராமன்
,ராவணனை நேராக அணுகியிருக்கலாம்.
இதற்கு ஒரு குரங்கு மனிதனை தூதாக அனுப்புவது எதிரியின் சுய
மரியாதைக்கு இழுக்கல்லவா? இழந்த மனைவியை மீட்க மூன்றாவது மனிதனை தூதாக அனுப்புவது
வீரனுடைய வீரத்துக்கு அழகல்லவே?
15-ஆண்மையற்ற ராமன்
ராவணனை போரில் வதம் செய்தபின் சீதை மீட்கப்படுகிறாள்.வெகு
நாட்களாக ராமனைப் பிரிந்திருந்த சீதைக்கு கணவனான ராமனை கட்டி அணைக்க ஆவல் வருமே !ஆனால் ராமனுக்கு வரவில்லை! மாறாக சீதையின் நடத்தையில்
சந்தேகம் கொள்கிறான்,வெகுண்ட சீதை,~நீ ஒரு
வீரனா?ஒரு அற்பனை போல் பேசுகிறாய்.’ ராமனைப் பார்த்து சீறுகிறாள்.
‘நான் ராவணனுக்கு சம்மதித்தேன். என்னை ராவணன்
தொட்டெடுத்தான் என்கிறீர்கள்; வாஸ்த்தவமே’ (பக்கம் 490) ராவணன் பல சாலி ,நான்
ஸ்திரீ;ஒண்டி;அநாதை; அவனோ ராட்சன்; என்னால் தடுக்க முடியவில்லை.’என பெண்மைக்கே
உரிய குணத்தால் பேசி கணவனை நம்ப வைக்க முயற்சிக்கிறாள்.
ஆனால் ராவணனைப் பற்றி சகலமும் இனத்துரோகி விபிசனன் மூலம்
தெரிந்து வைத்துக் கொண்ட ராமன், ‘விருப்பமில்லா பெண்ணைத் தொட்டால் ராவணன்,தலை
வெடித்துவிடும்,யாரிடம் கதை அளக்கிறாய்.’
என மீண்டும் சீதையை மடக்குகிறான்.உலகில் பல நாடுகளில் இது போன்ற
அடாவடித்தனமான செயல்களுக்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. மனிதர்களில் இரண்டு
வகையான இனங்கள் உண்டு.மனித குலம் தோன்றிய நாள் தொட்டே இருக்கின்றன என்றுகூட
சொல்லலாம்.
1- மனிதனை மனிதன் நேசிக்கும் மனித நேய சாதி, (இவர்களை அடிமையினம், உழைப்பாளி, வெய்யிலாளி
எனலாம்)
2,ஆளுமை இனம்,
(இரக்கமற்றவர்கள், ஏமாற்றுப் பேர்வழிகள், மனித நேயமற்றவர்கள், பாவம், புண்ணியம்
பற்றி பேசி உழைப்பாளிகளின் பொருளை சுரண்டுபவர்கள், பல்லக்கில் பயணம் செய்ய ஆசை
படுபவர்கள்.
சுகவாசிகள், நாகரிகம் வளர்ச்சி அடைந்ததாக சொல்லப்படும்
ஐரோப்பிய இன மக்கள் அமெரிக்க கண்டத்திலும் ஆஸ்ட்ரேலிய கண்ட்திலும் குடியேறியபோது
அங்கே பூர்வ குடி மக்களாக வாழ்ந்தவர்களை ஏறக்குறைய அழித்தே விட்டார்கள் என
சொல்லலாம்.
ஆனால் அதே ஐரோப்பிய கண்டத்தில் இருந்து 3000-ம் ஆண்டுகளுக்கு
முன் இந்தியாவிற்கு வந்த ஆரியர்கள், இங்கே பூர்வகுடிகளாக வாழ்ந்த இன்றும்
வாழ்கின்ற தமிழ் மக்கள் இருக்கின்றனர் என்றால் அவர்கள் இயற்கையோடு இணைந்த, அறவழி
வாழ்க்கை மேற்கொண்டுள்ள மனித நேய பண்பாடுதான்.
(வந்தாரை வா வென்று வரவேற்று வந்தவர்களை சுகமாக வாழ வைக்கும்
மனிதநேயம் தான் இத்தகைய மிகச்சிறந்த மனித நேயப்பண்பாடு உலகில் எந்த இன மக்களிடமும்
இது போன்று குணங்கள் தமிழினத்தைத் தவிர வேறு இனத்துக்கு அமைய வில்லை,என சத்தியம்
செய்து கூறலாம்.
இத்தகைய குணமுடைய மக்களை அடிமை குண மக்கள் என கூறுவர்
. இந்த குணத்தால் தான் இந்த இனம் அழியாமல்
நிலைத்து நிற்கிறது.
வர்மாக்களுக்கு (தமிழர்களுக்கு) இத்தகைய அரியவகை மனித
பண்புள்ளம் இருப்பதால் தான் பிராமணர்களுக்கு மட்டுமல்ல பிராமணர்களைப் போல் உள்ளம்
கொண்ட மற்ற இன மக்களுக்கும் ,
(தோட்டிகள். பறையர்கள், வெட்டியான்கள், வண்ணார், அமட்டர்கள்,
கணக்குப்பிள்ளைகள், தேவடியாக்கள், மருத்துவர்கள், வள்ளுவர்கள் குடிப்பிள்ளைகள், சக்கிலி,
சோழியர்கள்-இவர்களெல்லாம் வர்மாக்களுக்கு சேவகர்கள். இன்றும் தமிழக கிராமங்களில்
நாம் காணலாம்) பாதுகாவலர்களாக இன்றும் வாழ்கின்றனர்.தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுக்க பல் வேறு
மொழிகளில் வாழ்கின்றனர்.
இந்திய இனங்களில் தங்கள் இனத்துக்கு என்று இனம்
உருவாகியதற்கு புராண கதை(வன்னியர் புராணம்) உண்டு.இதற்கெல்லாம் வலுவான காரணம்
உள்ளது.இந்த சமுக அமைப்பை மாற்றியமைக்க வேண்டும் அனைத்து தர மக்களும் சுய
மரியாதையோடு உழைத்து வாழ வேண்டும் ,வர்மாக்களும் பிராமணர் யோசனை கேட்டு
வாழக்கூடாது.
வாழ்விலும் மரணத்திலும் சேவலாளிகள் தங்களை நாடி வர அல்லது
செல்லக்கூடாது தங்கள் தேவைகளை தாங்களே உணர்ந்து வாழ வேண்டும் என ஏழாம் அறிவு
இயக்கம் போராடுகிறது.ஒவ்வொருவரும் சுய சிந்தனை, உழைப்பு, மகிழ்ச்சியான குடும்ப
அமைப்பு அமைத்துக் கொள்ளவேண்டும் என ஏழாம் அறிவு இயக்கம் வலியுறுத்துகிறது)
இன்னும் ராமாயணக் காலத் தமிழர்களாக (வர்மாக்களாக)
வாழக்கூடாது நவினக் காலத்திற்கு தங்களை ,தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்ள
வேண்டும் என ஏழாம் அறிவு இயக்கம் போராடுகிறது
அந்நாளிலேயே மனித குலத்தில் உழைக்காதவன் உயர்ந்தவன் என்றும்
உழைப்பவன் தாழ்ந்தவன் எனும் ஏற்றத் தாழ்வுகள் தோன்றிவிட்டது. உழைப்பவனை
சமாதானப்படுத்த பாவம் புண்ணியம், முற்பிறவி அடுத்த பிறவி என நிருபிக்க கற்பனைக் கதைகள்
உலா வந்துவிட்டன. இன்றும் இதே நிலைதான்.
தமிழர்களின் குடும்பங்களில் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளுக்கு
ஒற்றுமை இல்லை என்பதையும் நியாயம் நீதி தர்மம் அறவழி காத்தவர்கள் என்பதையும் ராமயண
கதைகளின் மூலம் உணரலாம், மனிதகுலத்தில்
தர்மத்தை நிலை நாட்டுவது முக்கியமானது எனும் சிந்தனைகள் உள்ளவர்கள் இந்த தமிழர்கள் அதனால் தான் அன்னியர்கள்
தமிழர்களிடையே ஊடுருவ முடிந்தது.
இத்தகைய உணர்வால் அண்ணன் தம்பி உறவு முறைகளை பராமரிப்பது
மற்றும் பாதுகாப்பது என்பது முக்கியமில்லாமல் போய்விட்டது.)
இதன் தொடரை புதிய அஞ்சல்-4ல் காணவும்
No comments:
Post a Comment