123-பரிக்ஷத் தோற்றம்
குருசேத்திர பூமியில் இறுதி நாளை முடித்துக்கொண்டு,பாண்டவர்கள்,திரவுபதி மற்றும் கிருஷ்னன் ஆகியோர் உத்தரை இருக்கும் இடம் தேடி
போகின்றனர்.உத்தரையின் பிரசவலியில் தாங்க முடியாமல் தவிக்கின்றாள்.கிருஷ்னன்
அருகில் வந்ததும் உத்தரைக்கு தன்னம்பிக்கை வருகிறது,ஆண் குழந்தை பிறக்கிறது. அக் குழந்தைக்கு கிருஷ்னன்,‘பரிக்ஷித்’என பெயர் சூட்டுகிறான்.
சத்ரியர்களின் சந்திர வம்சத்தை
அழித்து,குரு வம்சமான யாதவ குலத்தை கிருஷ்னன் நிலை
நாட்டுகிறான்.
போரில் வெற்றிபெற்ற பாண்டவர்கள்,அஸ்த்தினாபுரம் நோக்கி வருகின்றனர்.
அஸ்த்தினாபுரத்தில் காந்தாரியை ,பாண்டவர்களை
அழைக்கும் படி குந்தி வேண்டுகிறாள்.
‘நான் ஏன் வரவேற்க வேண்டும்? நான் பெற்ற பிள்ளைகள் எல்லாம் மாண்டு போனார்கள். இந்நிலையில் எனக்கு
வரவேற்கும் எண்ணமா வரும் குந்தி?’
விதுரன், அண்ணி காந்தாரியையும் அண்ணன் திருதராஷ்ட்ரனையும் ஆற்றுதல் படுத்துகிறான்.
‘அண்ணா, ‘அரியணையை தாங்கள் தர்மனுக்கு
விட்டுத் தரவேண்டும்,இல்லையேல் தண்டணைக்குரிய
குற்றமாகிவிடும்.’
விதுரனின் ஆலோசனையை ஏற்ற
திருதராஷ்ட்ரன் தர்மனையும் அவன் தம்பிகளையும் வரவேற்க செல்கிறான்.மக்கள்
பாண்டவர்களுக்கு ஆரவாரத்துடன் வரவேற்பு அளிக்கின்றனர்.
காந்தாரி அரண்மனையில் அழுது
கொண்டிருக்கின்றாள்.அந்நேரம் தாதிகள், கிருஷ்னன் தர்மனுக்கு முடிசூட்ட இருக்கும் செய்தியை
தெரிவிக்கின்றனர்.கொதித்தெழுகிறாள் குந்தி,ஆவேசத்துடன் தர்பார் மண்டபத்திற்கு தட்டுத்தடுமாறி வந்து கிருஷ்னன் மகுடம் சூட்ட
இருக்கும் நிலையில்,
‘நிறுத்துங்கள்’ என் குரல் கொடுக்கிறாள்.அவையோர் அதிர்ந்து குந்தியை நோக்குகின்றனர்.
124-காந்தாரியின் சாபம்
அப்போது காந்தாரி, ‘வாசுதேவ வஞ்சக கிருஷ்னா! என் குலத்தையே
நிர்மூலமாக்கிய குற்றவாளி நீ! பாண்டவர்கள் பக்கம்
இருந்து கொண்டு சூழ்ச்சி செய்த காரணத்தால் பாண்டவர்கள் என் பிள்ளைகளை
கொல்லும் நிலை ஏற்பட்டது,என் பெற்ற வயிறு பற்றி
எரிகிறதே,இந்நேரத்தில் உனக்கு நான் சாபம் இடுவேன்,ஒரு குற்றவாளிக்கு நற்காரியமான
மகுடம் சூட்டும் தகுதி உனக்கு இல்லை.’
திருதராஷ்ட்ரன் முதற் கொண்டு
பாண்டவர்கள் அனைவரும் காந்தாரியைப் பார்த்து , ‘வேண்டாம் காந்தாரி சாபம்
வேண்டாம்,நல்ல காரியம் நடக்கும் போது இப்படி செய்யாதே,வேண்டாம் காந்தாரி’ என
கெஞ்சுகின்றனர்.
வஞ்சகத்தால் தன் பிள்ளைகள் கொல்லப்பட்டு,ஒரு தாய் திக்கற்ற நிலையில் இருக்கும் போது ,அவள் தரும் சாபம் (அறம்பாடுதல்) எதிரியின் குலத்தையே அழித்துவிடும் என்பது தமிழுலகம்
கண்ட உண்மை
‘நான் சாபம் இட்டே தீருவேன்
,அப்பொழுது தான் என் மனம் சாந்தி அடையும்’காந்தாரி கண்களில் தீப் பொரி பறக்கிறது.
‘என் சத்ரிய வம்சத்தை அழித்த நீ
வாழ மாட்டாய்,உன் யாதவ குலமும் அழியும்.என் மகன்களின் உடல்கள் போர்க்களத்தில் சின்னாபின்னமாக ஆக்கப்பட்டது
போல் உன் உடலும் ஒரு வேடனின் அம்புக்கு அடிபட்டு நீ இறந்து போவாய்’
(காண்க-விஜய் தொ.கா மகாபாரத தொடர் வ.எண்,267)
செய்வதறியாது கிருஷ்னன் காந்தாரியை வெறித்துப் பார்க்கிறான்.
(காண்க-விஜய் தொ.கா மகாபாரத தொடர் வ.எண்,267)
செய்வதறியாது கிருஷ்னன் காந்தாரியை வெறித்துப் பார்க்கிறான்.
காந்தாரி மனம் குமறி
அழும்போது,கிருஷ்னன் மனம் வேதனை கொள்கிறது.காந்தாரியை தோள் பற்றி கிருஷ்னன்,
‘தாங்களும் எனக்குத் தாய் தான்,ஒரு தாய் தன் மகனுக்கு இடும் சாபமாக நான்
கருதுகின்றேன்.ஒரு தாய் பெற்ற பிள்ளைகளில் சிலர் அதர்ம செயல்களில் ஈடு பட்டால்
அதே தாயின் மற்றொரு பிள்ளை தர்மத்தை நிலைநாட்ட போர் புரிந்து தானே ஆகவேண்டும்?பெண்மைக்கு
பங்கம் வந்தால் அதை தடுக்க இன்னொரு மகன் போர் புரிவது போலத்தான் இந்த பாரதப்
போர்.தங்கள் சாபத்தை நான் ஏற்பதுதான் முறை.’
காந்தாரி, ‘என்னை மன்னித்துவிடு கிருஷ்னா’என கிருஷ்னனை கைகூப்பி வணங்குகிறாள்.
காந்தாரி, ‘என்னை மன்னித்துவிடு கிருஷ்னா’என கிருஷ்னனை கைகூப்பி வணங்குகிறாள்.
‘நான் உங்களை மன்னிக்க நான் யார்
,நாளை நானும் மரணிக்கப் போகிறவன்தானே?’ (9)
காந்தாரியை அமைதிப்படுத்த சொன்ன
வெறும் வார்த்தைகள் தான் அவை.இன்றும் நாம் காண்பது என்ன?இந்தியா முழுவதும் அவன்
வம்சமான யாதவ குலம் பல மொழிகள் பேசி
இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர்.சத்ரியர்கள் பலமிழந்து சிதறுண்டு பல மொழிகள்
பேசினாலும்,ஒரு மொழி பேசும் சத்ரியர் இன்னொரு மொழி பேசும் சத்ரியரை
அங்கீகரிப்பதில்லை.அவ்வளவு ஏன்? ஒரே மொழி பேசி வரும் ஒரேதாய் மக்கள் கூட சத்ரிய
இனத்தில் ஒற்றுமையின்றி பிரிந்து வாழ்கின்றனர் அறம் காக்கும் சத்ரியர் அல்லவா?
125-தை முதல் நாள்-தர்மனுக்கு மீண்டும் பட்டாபிஷேகம்
அஸ்த்தினாபுரம் மயான அமையைப் பெற்றது.தர்மனுக்கு
முறைப்படி மகுடம் சூட்டவேண்டும்.இதற்கு யார் தகுந்தவர் எனும் வினாவை எழுப்பிய
காந்தாரி நாதியற்று அமைதியானாள். பின் கிருஷ்னன்
தர்மனுக்கே முடிசூட்டுகிறான்.
தர்மன் தன் பெரியப்பாவிடம் ஆசி வழங்க செல்கிறான்.திருதராஷ்ட்ரனிடம்
தன் தம்பி மகன் அஸ்த்தினாபுர மன்னனாக முடி சூட்டிக்கொண்டு தன்னை தரிசிக்க வருவதாக
சேவகர்கள் தெரிவிக்கின்றனர்,
அதற்குள் அவசரப்பட்டு திருதராஷ்ட்ரன், ‘எங்கே அவன்’ என கேட்டு,
தர்மன்தான் தன் எதிரே நிற்கிறான் என நினைத்து அருகில் உள்ள பொம்மையை கட்டி
தழுவுகிறான்,அப்பொம்மை சுக்கு நூறாக உடைகின்றது.
‘அய்யோ தர்மா! உன் மார்பகம் உடைந்து விட்டதா?
நான் தம்பி மகனைக் \
கொன்ற பாவியானேனே!’
சுற்றி இருப்பவர்கள் மிரண்டு போனார்கள்,அப்போது கிருஷ்னன்,
‘இல்லை அரசே,நொறுங்கிப்
போனது ஒரு பொம்மைதான்,தங்களின் ஆவேசம் தணிந்தது,இனி தாங்கள் தர்மனை ஆசிர்வதிக்கலாம்.’என கூறும்
கிருஷ்னன் தர்மனை திருதராஷ்ட்ரனிடம் அனுப்புகிறான்.திருதராஷ்ட்ரனும் ஆரத் தழுவி
ஆசிர்வதிக்கிறான்.
126-குரு வமசத்தின் குல தர்மம்
குரு வம்சத்தின் தலைமகனான திருதராட்டிரன், அவன்குல தர்மபடி
1-ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ வேண்டும்.இதில் தன்
தம்பிக்கு(பாண்டுவுக்கு) மனைவியாக அமைந்த குந்தி திருமணத்திற்கு முன்னமே,அதாவது
சூரிய குல வர்மனுக்கு கள்ளத்தனமாக ஒரு பிள்ளையைப்பெற்று(கர்னன்) அவனை யாருமறியா
நேரத்தில் ஆற்றில் மிதக்க விட்டு அந்தக் குழந்தை, குழந்தையில்லா திருதராட்ரன்
பாதுகாப்பில் வளர்வதை குந்தி அறியாள்.
நடத்தை கெட்ட குந்தி கவுரவமிக்க சந்திர வம்சத்திற்கு
மருமகளாக வந்ததே பிழை.
2-ஆணாதிக்க சமுகத்தில் ,ஒரு ஆணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட
மனைவி இருந்தால் கூட தப்பில்லை என்று நினைத்த காலம் அது.அப்படி இருக்கும் போது ஒரு
பெண்ணுக்கு அதாவது குந்தியின் மருமகளுக்கு தன் ஐந்து பிள்ளைகளுக்கும் ஒரே
மனைவிதான் இருக்க வேண்டும் என அடம் பிடித்ததை எப்படி இந்த சமுகம் ஏற்றுக்கொண்டது?
அதுவும் தன் எதிரியான அண்டை நாட்டு மன்னன் துருபதன் மகளான திரவுபதியை மண முடித்ததை
ஒழுக்க சீலனும் பிறவிக் குருடனுமான திருதராட்ரனால் எப்படி தாங்க முடியும்?
3-தன் கணவன் குருடன் என அறிந்த திருதராட்ரன் மனைவி காந்தாரி
தானும் தன் இரண்டு கண்களையும் இறுக கட்டி கணவனோடு வாழ்ந்த உத்தம பத்தினி என்பதும்,இதுதான்
மனித குல தர்மம் என்று அனைத்தும் அறிந்த கண்ணனுக்குத் தெரியாத?
குந்தி,திருமணத்திற்கு முன்னமே திருட்டுத்தனமாக
குழந்தைப்பெற்று பின் பாண்டுவைத் திருமணம் புரிந்தவள் எப்படி பத்தினியானாள்? கண்ணனின் அத்தை என்றால்
புனிதமாகிவிடமுடியுமா?கதைக் கேட்டவர்கள் அன்று கதை சொல்லியவர்களை கேள்வி கேட்க
தெளிவில்லை. இன்றும் இல்லை.
இதுதான் குல தர்மமா?அனைத்தும் அறிந்த கண்ணனுக்கு குல தர்மம்
என்றால் என்ன வென்று தெரியாதா?
அத்தையின் தவறை சுட்டிக்காட்ட கண்ணனுக்கு தைரியமில்லையா?
அல்லது பாசம் கண்ணை மறைத்ததா?
இந்த ஒருதலைப்பட்சமான கண்ணனின் போக்கை கையாளும் கண்ணனை
எப்படி இறைவன் என்று திருதராட்டிரனால் ஏற்க முடியும் அல்லது திருதராட்ரனைப் போல்
வாழ விரும்பும் அல்லது வாழ்க்கை நடத்தும் மனிதர்கள் மனித குல தர்மவான்கள் அல்லவா?
இப்பொழுது சொல்லுங்கள் திருதராட்ரனும் அவன் பிள்ளைகளும்
மனித குல தர்மங்களை கடைபிடிப்பவர்கள் தானே.?தன் அத்தையின் மகன்களை எப்படியாவது
மனித குல மாணிக்கங்கள் என மக்கள் மத்தியில் நிலைப்படுத்த கண்ணன் ஆசைப்பட்டது
ஏன்?ஆசைப்பட வைத்தது எது?
உலகத்தில் வர்மாக்களைபோல் அல்லது சேனாதிகள்(இடையர்கள்) போல்
இளிச்சவாய் மனிதர்களை ஆரியர்கள் கண்டதில்லை. வர்மாக்களில் இராவணன் கடவுள்(விஷ்ணு)
மறுப்பாளன்.ஏனெனில் இராவணன் கண்டதெல்லாம் தழிழன் இயற்கை வழிபாடான சிவன் வழிபடு
மட்டுமே.
தங்களை கடவுளாக (விஷ்ணுவை)ஏற்க மறுத்த இராவணனை, மனம்
வெறுத்த ஆரியர்கள் சூரிய குல வம்சத்தையே இரவணனுக்கு எதிராக மன மாற்றமடையச்
செய்தனர். இதில் ஆரியர்கள் பாதி வெற்றிகண்டனர்.
வர்மாக்களிடம் சண்டையிட்டு ரகுவர்மன் போக்கு பிடிக்காமல்
தங்களுக்கென்று தனி சாம்ராச்சியத்தை உருவாக்கிக்கொண்ட ருத்தர சேன
வம்சத்தை,ஆரியர்கள் தங்கள் வசம் மயக்க போட்ட திட்டம் தான், மகாபாரதம்.கண்ணனை
கடவுள் அவதாரமாக ஆயர் குலத்தை காக்க வந்த மாமணி என சந்திரவம்சத்தை இரண்டாக பிளவுபட
வைத்தவர்கள்.
அதில் கொண்டாட்டம் அடைந்தவர்கள் தான் கண்ணன் வழி ஆரியர்கள்.
கண்ணனை கடவுள் அவதாரமாக ஏற்றுக்கொண்ட ருத்ரசேனன்,அவன் மகன் கம்சன்,கண்ணனை கடவுள்
அவதாரமாக ஏற்றுக் கொள்ளவில்லை.
அதே போல் ருத்ர சேனன் மகளான தேவகி,தன் வயிற்றுப் பிள்ளை
கண்ணன் தான் என நம்ப வைத்த பிராமணர்கள், தேவகியின் நாத்தனரான குந்தியை
குருவம்சத்து ஏமாளி பாண்டுவுக்கு மணமுடித்து வைக்கின்றனர். கடவுளின் சம்பந்திகள்
பாண்டவர்கள் என பறைசாற்றி விட்டனர்
இதனால் பாண்டவர்கள் செய்த குல தர்மத்தை மீறிய
தவறுகளெல்லாம்,கடவுளின் அனுக்கிரகத்தால் நடந்ததாக மக்களை நம்பவைக்கப்பட்டது.இதனால்
பாண்டவர்கள் உயர்ந்தவர்கள் என மக்கள் மனதில் இடம்பிடித்தனர்.
ஒரு தவறும் செய்யாத,கவுரவர்கள் வஞ்சிக்கப்பட என்ன காரணம்? விட்டுக்கொடுக்கும்
மனப்பான்மை அற்றவர்கள் சத்ரியர்கள்.குலதர்மத்தை காக்க முற்பட்டதின் விளைவு மற்றும்
அந்நிய இனமான பிராமணர்களையோ அல்லது அவர்கள் உருவாக்கிய கடவுள் அவதாரமாக கண்ணனையோ ஏற்காத காரணத்தால் முரட்டு கவுரவர்களை பாவிகளாக சித்தரிக்கப்பட்டனர்.
காலங்காலமாக,வழிவழியாக இந்தக்கதைகள் சொல்லப்பட்டு வந்ததால்
எது நியாயம்? எது அதர்மம்? எனும் சிந்தனைக்கே வழியில்லாமல் போய்விட்டது. கதை
சொன்னவரின் மனவோட்டம் என்ன?கதைக்கேட்டு மனமாற்றம் அடையும் மக்களுக்கு என்ன
ஆதாயம்?கதை சொல்பவருக்கு என்ன லாபம்? இது போல் சிந்திக்கும் திராணி அற்ற
சமுதாயமாகத் தான் வர்மாக்களும்,சேனாதிகளும் இருந்தனர்.இப்பொழுதும் இப்படித்தான்
இருக்கின்றனர். எது எப்படியோ கடவுள்
செயலையே நாம் நிந்திப்பதா? வேண்டாம் நமக்கு அந்த பாவம் என சும்மா இருந்து
விட்டனர்.இப்பவும்அப்படித்தானே?
கவுரவர்கள் படைபலம் மிக்கவர்கள்.ஆனால் நவீன போர்க்கள
பயிற்சி பெறவில்லை,அல்லது பெறமுடியவில்லை.இதற்கு காரணம் பிராமணர்களின் வில்
வித்தையை இந்திய மன்னர்களுக்கு பார்த்து பழக்கமில்லை.
விஷ்னு கடவுள் வழிபடு கொள்கையும்,வில்வித்தை
பயிற்சியும்,பிராமணர்களின் பேச்சுத் திறமையும் இந்திய மக்களை மன மாற்றமடையச்
செய்துவிட்டது.
தங்களை அண்டவிடாமல் விரட்டிய கவுரவர்களுக்கு எதிராக
பாண்டவர்களை போருக்கு தயார் செய்ய நாட்டுமக்கள் ஆதரவை பெற ஆரியர்கள் உபநிடதங்களை
உருவாக்கினர்.
பல விதமான நாடகங்களும் தெருக் கூத்துக்களும்,பாவைக்
கூத்துக்ளும்,கதாகாலட்சேபங்களும் பக்தி பயத்துடன் மக்கள் மத்தியில் நடத்திக் காட்டியதால்
பாண்டவர்களுக்கு மக்கள் ஆதரவு பெருகிவிட்டது.பாஞ்சாலி சபதம் முடிக்கப்போவது உறுதி
இதற்கெல்லாம் கடவுள் அவதாரமான கண்ணன் துணையிருப்பான்,மக்கள் கண்கூடாக காணலாம் என
நாடெங்கும் பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டது.
குரு வம்சத்தில்,பாண்டவர்களைப் போல் பேசும் திறமை
பெற்றவர்கள் அல்லது பொய் பேசும் திறமை படைத்தவர்கள் கவுரவர்களிடத்தில்
யாருமில்லை.எல்லாம் முன் கோபிகளும்,முரட்டுத்தனம் (வீரர்கள்) படைத்தவர்களும் தான்,
நேர்மை யானவர்கள்,கடவுள் நம்பிக்கை யற்றவர்கள் மட்டுமே உண்டு.சாதுரியம்,தந்திரம்
போன்ற உழைக்கும் மக்களை ஏமாற்றும் அடாவடித்தனம் கிடையாது.இதனாலேயே இன்றுவரை
பிராமணர்களிடம் அடிமைப்பட்டு கிடக்கிறது இந்த வெய்யிலாளியான சேனாதி மற்றும் வர்மா
இனங்கள்.
பாண்டவர்-கவுரவர் போர் 18 நாள் நடந்ததாக கூறப்படுகிறது.பல
சமுக அவலங்களுக்கு சொந்தக் காரர்களான பாண்டவர்கள், இது தர்மத்தை நிலை நாட்ட
நடத்தப்படும் போர் என கிருஷ்னனால் வெளிப்படையாக பிரகடணப்படுத்தி விட்டு,போர் ஆரம்பம் ஆன நாளிலிருந்தே கவுரவர்களை தந்திரத்தால் தான் அழிக்க
முடியும் என கிருஷ்னன் சொன்ன போது,தர்மன் எதிர்த்தான்.
ஆனால் அந்த எதிர்ப்பை யாவரும் பொருட்படுத்தவில்லை,தர்ம போரில் தர்மத்தை நிலைநாட்ட தந்திரம் கையாளுவதில் தப்பில்லை என தன்
தவறுகளுக்கு கிருஷ்னன் நியாயம் கற்பித்ததை பாண்டவர்கள் ஏற்கும் மன நிலைக்கு
வந்துவிட்டனர்.
127-பாண்டவர்கள் மீறிய போர் குற்றங்கள்(தர்மங்கள்?)
1-பெண்களை போர்க்களத்தில் பிரவேசிக்க கூடாது-சிகண்டியை
அர்ச்சுனன் தேரில் ஏற்றி பீஷ்மனை வீழச்சியடையச் செய்தது
2-குருசேத்திரத்தில் மட்டுமே போர் புரியவேண்டும்-போர்
நடக்கும் போது,தர்மனை அஸ்த்தினாபுரம் நோக்கி படை
எடுக்கவைத்து இருமுனை தாக்குதலுக்கு
கிருஷ்னன் தூண்டியது.
3-தேரில் இருப்பவரை மட்டுமே தாக்க வேண்டும்-பீஷ்மன் சிகண்டி
தாக்குதலுக்கு கீழே சரிந்த பின் அர்ச்சுனன் பீஷ்மனை தாக்கியது.
4-துரோணரைக் கொல்ல ,அவன் மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என
தர்மனை விட்டு துரோணரிடம் பொய்யான தகவலை
தெரிவிக்கச் சொன்னது.
5-மாபெரும் வீரனான கர்னனை, தந்திரம் மூலம் அவனுடைய உடல்
பலத்தை குறைத்தது.
6- கர்னன் உடலில் ஒரு சொட்டு ரத்தம் கூட கூடாது என
திட்டமிட்டு அதை அந்தணர் வேடமிட்டு தானமாக பெற்றது.
7- போர்க்களத்தில் ஒரு வீரனை அவன் இடுப்புக்கு கீழே
தாக்குதல் நடத்த கூடாது-துரியனின் எக்கு உடம்பை அழிக்க முடியாது எனத்
தெரிந்து,அவன் தொடைஇடுக்கு வழியே தாக்கி துரியனை சாய்த்தது.
8-துரியனை வீழ்த்த பீமன் கதையை கொண்டு தாக்குதல்
நடத்தும்போது அவன் மாமனான சகுனியை தாக்க நகுல சகாதேவனை ஏவியது.இதனால் துரியன்
இருமுனை தாக்குதலுக்கு ஆளானான்.அவன் மனம் சிதைவடைந்து மரணத்தை தழுவும் நிலைக்கு
தந்திரத்தால் தள்ளப்பட்டான்.
இவை அனைத்து அவலங்களுக்கும் தர்ம சீலன் என தன்னை
பிரகடணப்படுத்திக் கொள்ளும்,கிருஷ்னனே.
இதற்கெல்லாம் காரணம் பாண்டவர்கள்,பிராமணர்களை ஆதரித்த ஒரே
காரணத்தால் அவர்களை தர்மவான்களாக மக்கள்
மத்தியில் சித்தரிக்கப்பட்டனர்.
அந்நியரான பிராமணர்கள் மட்டுமல்ல அவர்கள் கட்டவிழ்த்து
விட்ட கடவுள் அவதாராமாக கண்ணனை ஏற்க கவுரவர்கள் மறுத்தனர்.
குருவம்சத்தின் குலப்பெருமை குலைத்த குந்தியை பிராமணர்கள்
ஆதரிப்பதால், பாண்டவர்களை எதிர்க்க
கவுரவர்களை தாய் மாமனான சகுனியை தயார் படுத்தி விட்டனர்.
சேனாதி குலத்தில் பங்காளிகள் ஒருவருக் கொருவர் பொறாமை
கொண்டு மனதிற்குள் புழுங்குவர்.இதனை அபிமன்யு கதையில் காணலாம்.
அர்சுனன்-சுபத்திரை இணயருக்கு பிறந்தவன் அபிமன்யு.இளமையில்
பலவிதமான போர் பயிற்சி
கற்றவன்.குடும்பத்தில் மூத்தவரான தனது பெரிய தாத்த திருதராட்ரனிடம் ஆசி
வாங்க அபிமன்யு தாத்தாவின் அரண்மனைக்கு செல்கிறான்.பேரன் எதற்காக வருகிறான் என்பதை
குருடனனா திருதராட்டிரன் சேவகர்கள் மூலம் தெரிந்து கொள்கிறான்.
“தாத்தா,நான் போர்க்களத்தில் வெற்றி பெற வேண்டும்,என்னை
வாழ்த்துங்கள்,” என தாத்தா காலில்
விழுகிறான் .^தன் பிள்ளைகளை எதிர்க்க ,அதுவும் போரிட்டு வெல்ல, தான் தன் பேரனுக்கு
ஆசி வழங்குவதா?
இந்த உலகம் மன்னிக்காது,வாழ்த்தாமல் விட்டாலும்
மன்னிக்காது,’குழம்பிப்போன திருதராட்டிரன் பேரணை உச்சி மோர்ந்து ஆசையோடு வாரி
அணைப்பது போல் வாரி அணைத்தான் .தன் மகன்ளை எதிர்த்து தன் தம்பி மகன் போரிடப்
போவதால் மனம் புழுங்கி மார்போடு அழுத்துகிறான்.குழந்தை அபிமன்யு வீரிட்டு
அழுகிறான், “தாத்தா வலிக்கிறது தாத்தா,தாங்க முடியவில்லை”
பிடியைத் தளர்த்திய திருதராட்டிரன்,“போ,வாழ்த்திவிட்டேன்
போ” என பேரனை வழி அனுப்புகிறான், பொறாமையின் உச்சத்திற்கே போய்விட்டான். இது
எல்லாருக்கும் இருக்கும் மனித இயல்புதானே!
இதை திருதராட்டிரனின் அதர்ம குணமாக மக்கள் மத்தியில்
பிராமணர்கள் பறை சாற்றினார்கள். இப்பொழுதும் இதே கருத்தில் மக்கள் இருப்பதுதான்
வேதனை தரும் செயல்.
கர்னன் குண்டலத்தை இழந்தால் தான் பலம் குறையும்,அப்பொழுதுதான்
அர்ச்சுனன்,தன்னைவிட பலம் குறைந்த கர்னனை எளிதில் போரில் வெல்ல முடியும் என கண்ணன்
தீர்மானிக்கிறான்.இந்திரனுக்கு பிறந்தவன் அர்ச்சுனன்,எனவே அர்ச்சுனன் போரில்
உயிர்பிழைக்க வைக்க அவனுக்குத்தானே அக்கரை அதிகம்,எனவே இந்திரனை சன்யாசி வேடத்தில்
கர்னனிடம் அனுப்பி அவனிடம் உள்ள கவச குண்டலத்தை யாசகமாக பெற கிருஷ்னன திட்ட
மிடுகிறான் அதில வெற்றியும் பெறுகிறான்.
குந்நி கர்னனைத்தேடி போகிறாள்.
பிறந்ததிலிருந்து தாயின் அரவணைப்பை உணராத கர்னனுக்கு
தாயைப்பார்த்த உடன் உணர்ச்சிப் பெறுக்கில் உடைந்து போகிறான்.தாய் பாசத்திற்கு ஏங்கிய
கர்னன்,தாய் தன் மகனிடம் வேண்டுதல் ஒன்றை வைக்கிறாள். அர்ச்சுனனுக்கு சமமாக போர் புரியும் ஆற்றல்
பெற்றவன் கர்னன்.கர்னனிடம் உள்ள ஆற்றல் மிக்க அம்பை ஒரு தடவைக்கு மேல் அர்ச்சுனன்
மீது செலுத்த வேண்டாம் என தன் பாசத்திற்கு விலை வைத்தாள். தன் அவலத்திற்கு கர்னன்
காரணம் என குந்தி நினைக்கிறாள். எனவே கர்னனை அழிப்பதால் குந்தி நடத்தை கெட்டவள்
எனும் அவப்பெயரை நீக்கலாம் என கணக்குப் போடுகிறாள்.
கர்னனை பெற்றபோது குந்திக்கு ,எங்கேயாவது
பிழைத்துப்போகட்டும் என இருந்தவள்,தான் பெற்ற பிள்ளை இன்னும் உயிரோடு இருக்கிறான்
என அறிந்தவளுக்கு அவனை அழிந்து போகட்டும் எனும் எண்ணம் ஏன் வந்தது?
தான் புகுந்தவீட்டில் தன்னுடைய வம்சமான குருவம்சத்தின்
வாரிசுகளாக பாண்டுவுக்குப் பெற்றெடுத்த ஐந்து பிள்ளைகளும் அழியாமல்
வளரவேண்டும்,காரணம், வம்ச விருத்திக்கு வழி வகுக்கவே முறை தவறி பிறந்த கர்னனை
அழிக்க வேண்டும் என
தீர்மானிக்கிறாள்.அதன்படி “தம்பி அர்சுனனை கொல்ல மாட்டேன்” என குந்தி கர்னனிடம்
சத்யம் வாங்கிக் கொள்கிறாள்.இது
பிராமணர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை அந்நாளில் சேனாதிகள் அறிய வில்லை,
இன்றும் அறிந்த பாடில்லை.
கர்னனை கொல்ல
அர்ச்சுனனை கண்ணன் தூண்டுகிறான்,
சுய சிந்தனை இல்லாத குருவம்சத்து இளவரசனான அர்ச்சுனனை
இழுத்து வந்து போர்க்களத்தில் நிற்கவைத்து மிக நீண்ட தொரு சொற்பொழிவை கண்ணன்
நிகழ்த்துகிறான் .அதுதான் இன்னொரு பகவத்
கீதை.
இதுவரை கண்டிராத அல்லது கேள்வியுராத
வார்த்தைகளான,கர்மம்,முன் வினை,பின் விளைவு,பாவம்,புண்ணியம்,போர்களத்தில் ஒப்பாரி
கூடாது,உறவை நினைக்க கூடாது,தர்மத்தை நிலைநாட்ட அதர்மக் காரர்களை கொல்வது
பாவமாகாது .போர்க்கள தர்மபடி பாசத்திற்கே இடமளிக்க கூடாது போன்ற சத்ரிய குண
இயல்புகளை பற்றி கண்ணன் நீண்ட உரையாற்றி அர்ச்சுனனை மன மாற்றம் அடையச் செய்கிறான்.
(நேர்மை,உழைப்பு,தர்ம சிந்தனை,பரோபகாரம் ,பச்சாதாபம் இது
போன்ற சிந்தனைகளை மட்டுமே கொண்டிருந்த குரு வம்சத்தில் அர்ச்சுனனை மட்டுமே
மூளைச்சலவை செய்ய முடியும்,காரணம் அர்ச்சுணன் பெண்கள் விஷயத்தில் சற்று சபல
முடையவன்.இதை கருத்தில் கொண்ட பிராமணர்கள், தங்கள் வாழ்வாதாரங்களை பெறுக்கிக்
கொள்ள அர்ச்சுன னை தங்கள் வசம் வைத்துக் கொள்ள போட்ட திட்டம் தான், தங்கள்
குலப்பெண்ணான சுபத்திரையை அர்ச்சுனனுக்கு மண முடித்து வைக்கப்பட்டது.இதன் மூலம்
சேனாதிகளுடன் பிராமணர்கள் மேலும் இரண்டாம் கட்டமாக உறவு முறையை
ஏற்படுத்திக்கொண்டனர்.
கர்னனை கண்ணனின் சூழ்ச்சியால் அர்ச்சுனன் அம்பெய்து
கொல்கிறான்.கொடை வள்ளலான கர்னனை கொன்ற பழி தன்னையேச் சாரட்டும்,என போர்க்களத்தில்
கண்ணன் உபதேசம் செய்கிறான்.
பீமனை,துரியோதனனுக்கு எதிராக போர் புரியும்படி கண்ணன்
உபதேசிக்கிறான். பீமனும்,துரியோதனனும் சிறந்த மல்யுத்த வீரர்கள்.இருவருக்குமே
வில்வித்தை தெரியாது.
போர்க் களத்தில் இவர்கள் இருவரும் தண்டாயுதத்துடன்
மோதுவதுதான் போர் வீரர்களுக்கு அழகு என போர்க்கள தர்மப்படி
தீர்மானிக்கப்பட்டது.போர்க்களத்தில் படுகளமாகிவிட்ட துரியோதனன் வீழ்த்தப்பட்டதற்கு
காரணம் ,அவனுடைய இனப்பெறுக்க உறுப்பை தட்ட பீமனுக்கு அர்ச்சுனன்
எடுத்துரைத்தான்.
இந்த உண்மையை பலராமன் திரவுபதிக்கு சொல்ல,அதை திரவுபதி அர்ச்சுனனுக்கு போர்க்ளத்தில் தெரிவிக்கறாள் .துரியன்
மாண்டான்.
போர்க்கள விதிப்படி போர் வீரர்கள் இனப்பொறுக்க உறுப்பை
தாக்க கூடாது.ஆனால் தர்மத்தை நிலை நாட்டும் வீர்கள் என பெயர்போன பாண்டவர்கள்
அதர்மக்காரியம் செய்து வெற்றிப் பெறுவதில் சிறந்தவர்களாக மகாபாரதம் கதை முழுக்க
வலம் வருகின்றனர்.
செவிவழி கதைகேட்ட மக்கள் திரவுபதியின் ரத்தவெறி கொண்ட செயலை
எப்படி நியாயப்படுத்தினார்கள் என்றே தெரியவில்லை.இன்றும் நம் மக்கள்
உணரவில்லை.
இயற்கையிலேயே ஆண்களைவிட பெண்கள் உடல் பலம்
குறைந்தவர்கள்தான். வீம்புக்கு ஆணுக்குப் பெண் சமம் என பிதற்றுவதெல்லாம் தற்கால
அரசியல் ஆதாயத்துக்காகத்தான்.
ஆனால் ஒரு ஆணால் பாதிக்கப்பட்ட பெண் அறவழியில் போராடி அந்த
ஆணை அழிக்கலாம் என்பதற்கு “பாஞ்சாலி சபதம்”ஒரு எடுத்துக்காட்டு. பெண்களைப் பற்றி நுணுக்கமாக ஆராய்ந்தவர்கள்
(சாமுத்திரிகா லட்சணம்) பெண்களில் நான்கு விதமான உடல் அமைப்பும் அதற்கு தகுந்தால்
போல் ஆணோடு பழகும் குணங்களும் அமையும் என பல நூல்கள் ஆண்களால் எழுதப்பட்டன.
இவைஎதுவுமே உண்மையில்லை என பாஞ்சாலி சபதம் பற்றி அறிந்தவர்கள் உணர்வார்கள்.
பெண்களில் பத்தினிக்கு தெய்வ குணம்(அழிக்கும் குணம்)
உளதென்றும்,அவள் அந்நிய ஆண்களால் பாதிப்புக்கு ஆளாகும் போது அந்த அந்நியனுக்கு
மரணம் ஏற்படுத்த முடியும் எனும் போலித்தனத்தை பாமர மக்களை நம்ப வைப்பதற்கு
மட்டுமல்ல ஒருவனுக்கு ஒருத்தி எனும் நல்ல குடும்பம் அமைய பயனளிக்கிறது.
இதிலிருந்து மாறுபட்ட குணமுடைய பாஞ்சாலி தன்னை மானபங்கப்
படுத்திய துரியோதனன் அவன் தம்பி துர்ச்சாதனன் ஆகியோரை போர்களத்தில் தான் போட்ட சபதத்தை
நிறைவேற்ற பத்தினித்தனம் தேவையில்லை,மன உறுதிப்படைத்த பெண்ணால்,ஒரு பலம் வாய்ந்த
ஆணை அழிக்க முடியும் என உலகுக்கு முதன் முதலில் எடுத்துக் காட்டிய கதை பாஞ்சாலி சபதம் ஒரு உதாரணம்.
ஒரு பெண் நல்லவளோ அல்லது கெட்டவளோ அவள் ஆண்களால் அவமானப்
படுத்தப்படும் போதோ அல்லது சீரழிக்கப் படும்போதோ அதற்கு காரணமான ஆண்கள்
தண்டிக்கப்படுவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம் ,கடந்தகால வரலாறு மட்டுமல்ல நிகழ்கால
சம்பவங்களும் நமக்கு பாடமாக அமைகின்றன.
இதிலிருந்து நாம் முக்கியமாக தெரிந்து கொள்வது யாதெனில் பெண்கள் அனைவருமே
போற்றுதற் குறியவள்,நடத்தைக் கெட்டவள் எனும் பெண் இனம் சமுகத்தில்
ஒதுக்கப்படவேண்டியஅவசியம் இல்லை.
அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
வேண்டற்க வென்றிடினும் சூதினை;வென்றதூஉம்
தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று
(வெற்றியே பெறுவதானாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது.வென்ற வெற்றியும்,தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி
மீன் விழுங்கியது போன்றது)
இந்த குறளும் இது போன்று தொடர்புடைய கவித்துவமுள்ள
பாடல்களும் இந்த பாஞ்சாலி சபதத்துக்குப் பின் எழுதப்பட்டவைதான் என்பதை வாசகர்கள்
நினைவு கூறவேண்டும்.
பெண் பத்தினியோ அல்லது பல பேர் தொடர்புடையவளோ,அந்தப் பெண்ணை
காக்க தவறியதால்-கவுரவர்கள் அறம் தவறியதால் அழிந்தார்கள் என்பதற்கு இது மேலும் ஒரு
சான்று.
அது சரி, கவுரவர்கள் அப்படி என்ன அறம் தவறி
விட்டார்கள்?,பாண்டவர்கள் அப்படி என்ன வாழ்க்கையில் தர்மத்தையும் நியாயத்தையும்
கடைபிடித்தார்கள்?
128-கவுரவர்களின் குல தர்மம்
1-கவுரவர்கள், அந்நியரான ஆரியர்கள் இந்தியாவுக்கு வருவதை
விரும்பவில்லை
2-ஆரியர்களின் விஷ்னு கடவுளை பிடிக்கவில்லை
3-ஆரியரின் பஞ்சாங்கம்,வானசாஸ்த்ரம் என்பது மக்களை ஏமாற்றி
பிழைக்கும் வேலை என கவுரவர்கள் நம்பியதால் ஆரியர்களை பிடிக்கவில்லை
4-கிருஷ்ணனை கடவுள் அவதாரமாக கவுரவர்கள் ஏற்கவில்லை.
5-வெய்யிலாளி சமுகங்களாக வாழ்ந்த ருத்ர வர்மன்களும்,ருத்ர
சேனன் களும் வாழ்க்கையில் சடங்குகள்,சம்பரதாயங்கள் பின்பற்ற வேண்டிய அவசியங்கள் என
உபதேசம் செய்த்தை பாண்டவர்கள் கண்மூடித்தனமாக ஆதரித்ததை கவுரவர்கள் விரும்ப
வில்ஸை.
6-குல கவுரவத்தை கெடுக்கும் விதமாக குரு வம்சத்தில்
பாண்டுவுக்கு நடத்தை கெட்ட குந்தியை (திருமணத்திற்கு முன்பே பிறந்த
குழந்தைக்கு(கர்ணன்) சூரியகடவுள் தான் காரணம் என பலம் வாய்ந்த மன்னனான
சூரியவர்மனைத்தான் அப்படி நம்ப வைத்தார்களோ என நம்ப முடியாத கட்டுக்கதையை
மக்களிடையே பரப்பிய பிராமணர்களை பிடிக்கவில்லை)திருமணம் செய்து வைத்தது
பிடிக்கவில்லை
7-கண்ணன் கடவுள் அவதாரமாக ருத்ரசேனன் மகள் வயிற்றில்
தோன்றினான் எனும் கதையை கவுரவர்கள் ஏற்கவில்லை.
8-குடும்ப ஒழுக்கத்தை மீறிய,பாண்டவர்களின் ஐந்து
பிள்ளைகளுக்கும் பாஞ்சாலியை கட்டிவைத்த குந்தியின் செயலை ஆதரித்த
பிராமணர்களை-ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்ந்த கவுரவர்களுக்கு,குல தர்மத்தை கெடுத்தது பிடிக்கவில்லை.
9-கவுரவர்கள் ஒழுக்க சீலர்கள்தான் ஆனால் மக்களின் ஆதரவை பெற
தகுந்த முயற்சி எடுக்கவில்லை.
தாய்,தந்தையர் சொல்லைக் கேட்ட பாண்டவர்கள்
தர்மவான்கள் ஆனார்கள்,
தாய் தந்தையர் சொல்லை தட்டிய துரியன்கள்(சத்ரியர்கள்) அதர்மக்காரர்கள்
ஆனார்கள்.
அதே நேரத்தில் கிராம பஞ்சாயித்து போல சபையைகூட்டி ஒரு
பெண்ணை அசிங்கப்படுத்தியது (கற்பழிக்கவில்லை)தான் ஒரே பாவ செயல் ,அறம் தவறிய
செயல்.அதேபோல்,ராமாயண சீதையும் கற்பழிக்கப்படவில்லை என்பதை
வாசகர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.
ஆ.க-
(இப்பொழுதெல்லாம் தினமும் கற்பழிப்பு செய்திகள் வருகின்றனவே
இதற்கெல்லாம் பதினெட்டாம் போர் நடந்தால் நாடு தாங்குமா?) ஆனால் அந்நாளில் நடத்தை கெட்ட
பெண்ணை தொட்டு நிர்வாணப் படுத்தியதற்கே 18-ம் போர் எனில்,நினைத்தாலே தலையை சுற்றுகிறது.
இப்பொழுதுள்ள சமூக கட்டமைப்பு அப்பொழுது இல்லை,இப்பொழுதுள்ள சமுக கட்டமைப்பிற்கு பாஞ்சாலி சபதம் வழி வகுத்தது என்பது உண்மை!
அப்பொழுதெல்லாம் ஒரு இனம் இன்னொரு இனத்தை எதிர்த்து போரிட்டு
அழிந்தன,ஒரு இன அழிப்பில் இன்னொரு இனம் வளர்ந்தது.)
பாண்டவர்கள் கடைபிடித்த தர்ம சிந்தனைகள் எவை எவை?
1-அந்நியரான ஆரியர்களை தேவர்கள் என ஆதரித்தது
2-வான சாத்திரங்கள்,பஞ்சாங்கம் போன்ற அறிவியலுக்கு
அப்பாற்பட்ட- அதெல்லாம் தெய்வ கணக்கு என நம்பியது.
3-பத்தினியோ நடத்தை கெட்டவளோ பெண் என்றால் பெண்தான் என
பெண்களை போற்றியது.
இது குல தர்மத்துக்கு மாறான செயல் என்பது இப்பொழுதும் இதே
நிலைதான்,ஆனால் அந்நாளில் மக்கள் ஏன் எதிர்க்க வில்லை?என தெரியவில்லை.
4-குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு பிராமணர்களுக்கு
முக்கியத்துவம் கொடுப்பது தங்கள் கடமை என நினப்பது.
5-சூதாட்டம் என்பது வெற்றி தோல்வி உண்டாக்கும்
விளையாட்டு.அந்நாளில் இது சமுகத்தால்
அங்கிகரிக்கப்பட்ட ஒரு அவலம்.
இதில் தில்லு முல்லு நடந்தது என பாண்டவர்களை நம்பவைத்து
கவுரவர்கள் அநியாயக்காரர்கள் என மக்கள் மத்தியில் நம்ப வைக்க நாடகம் நடத்தியது.
இதற்கெல்லாம் காரணம் பிராமணர்களை ஏற்காதே கவுரவர்களை அழிக்க வகுக்கப்பட்ட
சாணக்கியம்.
“பாரதத் துள்ளும் பணையம்தம் தாயமா
ஈரைம் பதின்மரும் போரெதிர்ந்து
ஐவரோடு
ஏதில ராகி இடைவிண்டார் ஆதலால்
காதலோடு ஆடார் கவறு”
மேலே படித்த வரிகள் பின்னாளில்
பாடப்பட்ட நெறிமுறை தவறிய வாழ்க்கை வாழ்ந்த பாண்டவர்கள் பற்றிய செய்யுளாகும்.
சூதாட்டம்,கள்ளுண்ணுதல் இரண்டுமே குடும்பம் நடத்த
உதவாது.இந்த உண்மையை உலகில் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.சூதாட்டம்
முடிவில் சண்டை(போரில்)யில் கொண்டுபோய் விடும்,அதாவது அழிவுக்கு வழி வகுக்கும்.
இதை உணராதவன் குடும்ப தர்மம் பற்றி பேச அருகதையற்றவன் ஆகிறான்.
ஆனால் பாண்டவர்களில் மூத்தமகன் சூதாட்டத்திற்கு
ஆசைப்பட்டது (தர்மன்?) எப்படி தர்மமாகும்?இந்த கதைகேட்ட ருத்ரவர்மன்களுக்கும்/சேனாதிகளுக்கும்
சந்தேகம் வரவில்லை.இன்றும் வரவில்லை.ஏன்?
ஒரு பெண் தான் போட்ட சபதத்தை நிறைவேற்றியது ,அந்த கால
ஆணாதிக்க மக்களிடையே ஒரு பெரும் பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.
சபதத்தை நிறைவேற்றும் போது அவள் கண்களில் தீப்பொறி பறந்ததால்
அன்றிலிருந்து திரவுபதியை “தீப்பாய்ந்த அம்மன்”என்றழைக்கப் பட்டாள்.
அப்பொழுது அவள் தோற்றமளித்த காட்சிதான் இன்றும் நாடெங்கும்
பெரும்பாலான வீடுகளில் காணப்படுகிறது.அதாவது தலைவிரி கோலத்துடன்,உருண்டு திரண்ட
கண்களுடன்,கையில் சூலாயுதத்துடன் காலில் அரக்கனை(துரியோதனன்)மிதித்து,வெளியில்
தொங்கிய நீண்ட நாக்குடன் இரு பக்கமும் வெளியில் காட்டியவாரு குத்தீட்டி போல்
இரண்டு கோரைப்பற்களுடன் உள்ள தோற்றத்தை முன்
வைத்திருப்பார்கள்.
இதைப் பார்க்கும் குழந்தைகளும் அச்சம் கொள்ளும்.இதற்கு
துர்கை அம்மன் என்றொறு பேரும் உண்டு. புதியதாக வீடு கட்டினாலோ அல்லது விளை
நிலத்தில் அதிக விளைச்சலை பாதுகாக்கும் காவல் தெய்வமாக நம்பிக்கையுடன்,
பூசனிக்காய் மீதும்,தேங்காயின் மீதும்,பானையின் மீதும் இது போன்ற கோர முகம் கொண்ட
படங்களை வரைந்து காட்சிக்கு வைத்திருப்பார்கள்.இதை கண் திருஷ்டி பொம்மை என்றும்
கூறுவர்
உண்மை அதுவல்ல.ஒவ்வொரு மனிதனுக்கும் தெரிந்தோ தெரியாமலோ
அல்லது மறைமுகமான எதிரிகள் இருப்பார்கள் அல்லது இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்
அவர்களிடமிருந்து இந்த காவல் தெய்வம் காப்பாற்றும் எனும் நம்பிக்கை. இது காலம்
காலமாக,பரம்பரை பரம்பரையாக இன்றும் நாடெங்கும் உள்ள உழைப்பாளி
(வெய்யிலாளி)வர்கங்களிடையே உள்ள பழக்கமாக உள்ளது.
அறுவடைக்குப் பின் பருவ காலமான முதுவேனிற் காலங்களில்
கிராமங்களில் உள்ள அம்மன் கோயில்களில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.அதாவது
அம்மன் எப்பொழுதும் ருத்ரத்துடன்(வக்கிரத்துடன்?) இருப்பதாகவும்,அவள் மனம்
குளிரும் விதமாக ஆடு மாடுகளை பலியிட்டு விரதமிருந்து நேர்த்திக் கடனாக
குழந்தைகளுக்கு மொட்டைபோடுதல், காது குத்தல்,உடலெல்லாம் சாம்பல்
பூசிக்கொண்டு(துரியோதனை/ராவணனை எரித்த சாம்பலாம்) நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு(16-ம்
போரில் துரச்சாதனன்,18-ம் போரில் துரியோதனனை ஆகியோர்
மார்பகங்களைக் கிழித்து வந்த ரத்தத்தை நெற்றியில் இட்ட அடையாளமாக-)
துரவுபதியைப் போல ஆடு அல்லது கோழி ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும்
ருத்ரதாண்டவத்தை இன்றும் கிராமங்களில் அம்மன் திருவிழாக்களில் காணலாம்.ஒவ்வொரு
ஆண்டும் கிராமங்களில் மாசி மாதம் அமாவாசை
நாளன்று மயானக் கொள்ளை எனும் காட்டுமிராண்டித் தனமான நிகழ்ச்சியை ஊர்மக்கள்
கூடி நிகழ்த்தவார்கள்.
அறவழி தவறிய துரியன்களின் மரணத்தை நினைவு கூறும் பொருட்டு,அறம் காத்த வர்மாக்கள் ஆண்டுதோறும் மக்களை நெறிப்படுத்த நடத்தும் அநாகரிக (போகி)திருவிழா!
உடல் உருப்புகள் நோயினால் பாதிப்புக்கு உள்ளாகும்,அந்த
நேரத்தில் அந்த பாதிக்கப் பட்ட உருப்பு நலமாகி விட்டால்,அதே போன்று உடல்
உருப்புக்களை வெள்ளியிலோ,இரும்பிலோ,இன்னும் வசதியானவர்கள் தங்கத்தில் கூட செய்து
காணிக்கையாக செலுத்துவார்கள். தங்கள்
குலம் வளர,
குடும்ப உறுப்பினர்களை நோய் நொடியிலிலிருந்து அம்மன்
காப்பாற்றுவாள் எனும் நம்பிக்கையில், ஊர் மக்கள் ஒன்று கூடி உறவினர்களோடு
ஆண்டுதோறும் விழா எடுப்பது இன்றும் வழக்கமாக உள்ளன.
அன்றிலிருந்து வெய்யிலாளி இனங்களான
வர்மாக்களும்,சேனாதிகளும், திரவுபதியை தங்கள் குல பெண்களை பாதுகாக்கும் காவல்
தெய்வமாக வணங்க ஆரம்பித்தனர்.
இன்றும் நாடெங்கும்
உள்ள கிராமங்களில்
திரவுபதி அம்மன்
எல்லையம்மன்,
செல்லியம்மன்,
காவல்(காளி)அம்மன்
அங்காளியம்மன்,
பாஞ்சாலியம்மன்,
முண்டகண்ணிஅம்மன்,
கோளவிழியம்மன்
கங்கையம்மன்,
மாரியம்மன்,
துர்கையம்மன்
மனசாதேவி,மலையனூர்அம்மன்,மலையம்மன் போன்ற பல்வேறு பேர்களில் கோயில் கட்டி வழிபட்டுக்
கொண்டிருக்கின்றனர்.
கோடைக் காலத்தின் பின் பருவத்தில் தீப்பாய்ந்த அம்மனுக்கு தீமிதி விழா இன்றும்
நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
ஆண்களும் பெண்களும் விரதமிருந்து ,துரியோதனனை கொலை வெறியோடு
சபதத்தை நிறை வேற்றிக் கொண்ட தீப்பாய்ந்த அம்மனுக்கு இருந்த அதே அந்த ரத்த
வெறியோடு இன்றும் பொங்கலிட்டு,கடாவெட்டி(மக்கள் வசதிக்கு ஏற்றாற்போல்
கோழி,ஆடு,மாடு,உயிர் வதை விரும்பாதவர்கள் பூசனிக்காய் மற்றும் எலுமிச்சை பழம்
போன்றவற்றை பலியிடுவர்) தீ மிதித்து அதாவது தீயை காலால் அணைத்து விரதத்தை ஆண்களும்
பெண்களும் நிறை வேற்றுவதை நாம் காணலாம் .இன்றும் கிராமங்களில் ஒரு சடங்காக நிறை
வேற்றுகின்றனர்.
இது போன்ற ஒரு வருடாந்திர விழாவாக ருத்தரவர்மன்களும்,சேனாதிகளும் அதிகம் வாழும்
இடமான விழுப்புர மாவட்டம் மேல் மலையனுரில் நடைபெறுகிறது.
இது மட்டுமல்ல தமிழ் நாட்டின் பல கிராமங்களிலும்,ஆந்தரா
கர்நாடகா போன்ற மாநிலங்களிலும்,கிழக்காசிய நாடுகளான,தமிழர்கள்அதிகம் வாழும்
இலங்கை,பர்மா,மலேசியா,சிங்கப்பூர்,கம்போடியாவில் அம்மன் வழிபாடுகள் யாவும்
தீப்பாய்ந்த அம்மனின் தாக்கம் தான்.அம்மன் வழிபாடு என்பது இன்றும் ஒவ்வொரு
கிராமத்து வீடுகளிலும் மங்கல நிகழ்சிகளான
கல்யாணம்,காது குத்தல்,சீமந்தம்(வளைகாப்பு)போன்ற நிகழ்சிகள் துவங்கும்.
அதற்கு முன் அம்மனை உடுக்கை,சிலம்புகள் இசையுடன் வாடைகட்டி அழைக்கும்
பழக்கம் உள்ளது.வாடைகட்டுவது என்றால் ஊரில் இதற்காக பயிற்சிப் பெற்ற பண்டாரம்
என்பவர்,
உடுக்கை சத்தமிட்டு ஓங்காரத்துடன் பாடுவார்,இதைக்கேட்க்கும்
பக்கத்திலிருப்பவர்களும் மதி மயங்கி ஆடுவர்(குறைந்த ரத்த அழுத்தமுள்ளவர்களுக்கு
இது போன்று நிகழும்) இது ஒரு கிராமத்துக் கலாச்சாரமாகவே அன்றிலிருந்து இன்றுவரை
கடைபிடிக்கப்படுகிறது.
இதே போன்று துரியோதனன் போர்க்களத்தில் கொல்லப்பட்டதை
“துரியோதன வதம்”எனும் நாடகம்,தெருக்கூத்து போன்று கிராமங்களில் சென்ற நூற்றான்டு
வரை வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.
இன்றும் காஞ்சிபுரம் அருகே ருத்ரவர்மன்கள் மற்றும்
ருத்ரசேனன்கள் அதிகம் வாழும் ருத்தரமேருர் (உத்ரமேரூர்) எனும் ஊரில்
ஆண்டுதோரும் “துரியோதனன் படுகளம்” எனும் கூத்துக்கட்டி விடிய விடிய
ஆடுவார்கள்,
இந்த அறம் காக்கும் வர்மாக்கள்,தவறு செய்வது தன் இனமே ஆனாலும் மனித குலத்தில் அறம் காப்பது மட்டுமே
தங்கள் தலையாய கடமையாக இன்றும் எடுத்துக் காட்டாக வாழ்கின்றனர்.
இந்த குணங்கள் இருப்பதாலே இவ்விரு இன மக்களும் மற்ற இன
மக்களுக்கு அடிமைகளாக வாழ்கின்றனர்,வேறொரு கோணத்தில் சொல்வதென்றால் அறம் காக்கும்
வெய்யிலாளிகளை அடிமை இனம் என்கிறோம்.
கோபப் படுவதால் நட்டப் படுவது உணரத்தெரியாமல் மற்ற மனித
இனத்துக்கு அடங்கிப் போனார்கள்.அடக்கியவர்கள் உயர்ந்து போனார்கள்.இன்றும்
நாடெங்கும் இதே நிலைதான்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? வர்மாக்களும் சேனாதிகளும்
தேசிய இனங்கள் என புரிகிறதா? பேசும் மொழிகள் தான் மாறுபடும்.இவர்கள் அனைவருக்கும்
வழிகாட்டிகள்,ஆலோசகர்கள்,பயனாளிகள் எல்லாமே அந்தணர் குலமான பிராமணர்களே.
அத்தையின் வயிற்றுப் பிள்ளைகளான பாண்டவர்களை காப்பாற்றுவேன்
என குந்திக்கு உறுதியளித்த கண்ணன்,அத்தையின் பேரனான அபிமன்யுவை போர்களத்தில் ஏன் சாகடிக்கப் படவேண்டும்?
அபிமன்யுவை பாண்டவர்களின் நேரடி வாரிசாக ஏற்க குந்திக்கு
மனமில்லை.காரணம், சுபத்திரை,கண்ணனின் தங்கை மகனும் அர்சுனனின் பிராமணக் காதலியின்
வயிற்றுப் பிள்ளைதான் அபிமன்யு. எனவேதான் குந்திக்கோ,பாண்டவர்களுக்கோ அபிமன்யு
மரணம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வில்லை.
ராமாயண மற்றும் மகாபாரத கதைகளும்,அதன் துணைக் கதைகளும்
படிப்பறிவற்ற பெருவாரியான வெய்யிலாளிகளின் மனதை மாற்றியது.செவி வழிக்கேட்ட கதைகள்
யாவும் பரம்பரை பரம்பரையாக தங்கள் பாட்டன் வழி வரலாறாகவே நினைத்து
வழிபட்டனர்.இந்தியாவின் பூர்வ குடி மக்களான தமிழர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட
பங்காளி சண்டையால் பிளவு ஏற்பட்டு மொழிகள் பல உருவாகி-இனங்கள் பல
உருவாகி-இன்றைக்கு இருக்கும் சாதிகளக பிரிந்து காணப்படுகின்றனர்.
பல மொழி பேசும் சாதிகளாக இருந்தாலும் அனத்து மக்களும்
சம்பரதாயம்,சடங்குகள் பின் பற்றுவதில் இந்து, புத்தம் மற்றும் ஜைன மதங்களில்
அடங்குவர்.வடமேற்கு பாகிஸ்த்தான் பகுதியில் இன்றும் பேசும் புரோஹி மொழியின்
தோற்றம் தமிழைப் போன்று உள்ளது என இந்தியாவின் தலைமை நீதி பதியாக திகழ்ந்த திரு
மார்கண்டேய கட்ஜு தன் ஆய்வில் கூறுகிறார்.(தினமணி08/08/14)
இந்தியாவில் தோன்றிய மொழிகளில் முதன்மை மொழியும் மூத்த
மொழியும் தமிழ்தான் எனத் தெரிகிறது.ஆரியர்களின் வருகைக்குப் பின்தான் தமிழும்
சமத்கிருதமும் கலந்து திராவிட மொழிகள் தோன்றியது என்பது உறுதியாகிவிட்டது.
இந்து மதம்,அதாவது நெற்றியில் நாமமிட்டவர்கள் மட்டுமே
இந்தியாவில் இருக்கவேண்டும் இதற்கு ஆதரவாக மூளைச்சலவை செய்யப்பட்ட ருத்ர
வர்மன்களும் ,ருத்ர சேனன்களும் தங்களுக்காக ஆதரவு திரட்டியதில் மதவாதிகளன
பிராமணர்கள் வெற்றி கண்டார்கள்.
இதன் விளைவாக புரட்சியாளர்களான ஒரு பகுதி புத்தர்கள் நாட்டை
விட்டு வெளியேறி கிழக்காசியா மற்றும் தூரக்கிழக்காசிய மற்றும் வடகிழக்காசியா(சீன)
போன்ற நாடுகளில் குடியேறினர்.
வைணவத்தை ஏற்காத தமிழர்கள் ஒரு பகுதி வடக்கு நோக்கி
பயணமானார்கள்.இமயமலை அடிவாரங்களை தலைநகரமாகக் கொண்டு சிவனை வழிபட்டனர்.சிவனுக்கு
இருப்பிடமே கைலாய மலை என மக்கள் வாழத் தகுதியற்ற பனிமலைப்பிர தேசத்திற்கு விரட்டியடிக்
கப்பட்டனர்.
பலர் மலை வாழ் இடங்களை (அதிக குளிரினால்) பிடிக்காமல்
தெற்கு நோக்கி பயணமானார்கள்.
சிவனை வணங்கும் இந்த தமிழ் குல மக்களை விரட்டியடித்த தமிழ் பேசும் வைணவ
ருத்ரவர்மன்களும்,ருத்ரசேனாதிகளும் முரட்டுத் தமிழர்களாகவே(வீரத் தமிழர்?) தமிழ்
நாட்டில் தங்கி விட்டனர்.விஷ்னுவை கடவுளாக ஏற்காதவர்களை நாத்திக
வாதிகள்(ராவணன்கள்) என்று தம் மக்களாலேயே மட்டம் தட்டப்பட்ட இனம் தமிழ் இனம்.
இன்றும் அகத்தியனின் வழித்தோன்றல்களான பிள்ளைமார் சைவ இனம்
தமிழை சங்கம் வைத்து வளர்க்கிறது.தமிழில் பல இலக்கியங்கள் தோன்றுவதற்கு காரணமானவர்களும்
இந்த இனமே.
ருத்ர வர்மன்களையும்,ருத்ர சேனாதிகளையும் பாதுகாப்பு
அரண்களாக அமைத்துக்கொண்டு பிரமணர்கள்,புரோகிதம் செய்வதே மூலத்தொழில்/குலத்தொழில்
என இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.தமிழர்கள் நாடு தழுவிய தேசிய இனம்
என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
129-கங்கைத் திரட்டு
கிராமங்கள் தோறும் எல்லையம்மன்(திரவுபதி அம்மன்)
திருவிழாக்களில் கங்கை திரட்டு எனும் வைபவம் நடைபெறும்.
தமிழ் இனம் தழைத்தோங்கிய இடம் கங்கை நதிக்கரைகள் என்பதற்கு
இந்த வைபவம் ஒரு உதாரணம்.கிராங்களில் நடக்கும் அம்மன் திருவிழாக்களில் 108,அல்லது
1008 குடங்களில்(கூட்டுத் தொகை 9 வரவேண்டுமாம் இது என்ன கணக்கு என்றே தெரியவில்லை)
சுற்று வட்டார நீர் நிலைகளில் இருந்து கிராம பெண்கள் கோயிலில் ஒன்று
சேர்ப்பார்கள். அந்த கலசங்களுக்கு மஞ்சள் பூசி ஒவ்வொரு கலசத்திற்கும் நூல்
சுற்றுவார்கள்.இதற்கு கங்கைத்திரட்டு அல்லது காப்பு என்று பெயர்.
இந்த கலசங்களை திரும்பவும் அவரவர்கள் இல்லங்களுக்கு
எடுத்துச்சென்று பாதுகாத்து வைப்பார்கள்.வீட்டில் குழந்தைகளுக்கோ அல்லது
பெரியவர்களுக்கோ உடல் நிலை பாதிக்கப்பட்டால் இந்த புனித நீரை நோயாளிகளுக்கு பருக
கொடுப்பார்கள்.மனித குலத்தை காக்கும் கங்கை அம்மன் தன் குல மக்களையும் காப்பாள்
எனும் நம்பிக்கையில் இன்றும் கிராம மக்களின்
பழக்கமாக உள்ளது.
கங்கையின் கிளை நதியான யமுனை ஆற்றோர நாடான திரவுபத நாட்டு
இளவரசியான திரவுபதியை பாண்டவர்களுக்கு மணமுடித்ததால் பாஞ்சாலி என அழைக்கப்பட்டாள்.கிருஷ்னனுக்கும்
பாஞ்சாலிக்கும் ரத்த சம்பந்தமான உறவு கிடையாது.இருப்பினும் தன் அத்தை முறை உறவான
குந்தியையும்,அவள் பெற்ற ஐந்து பிள்ளைகளையும் கடவுள் அவதாரமான கிருஷ்னன்
காப்பாற்றுகிறார் என பாமர மக்களை பிராமணர்கள் நம்ப வைத்தனர். அந்த நம்பிக்கையில்
தான், தன்னையும் கண்ணன் காப்பாற்றுவார் என
துரியோதனன் சபையில் கண்ணனை நினைத்து பாஞ்சாலி அபயக்குரல் விடுக்கிறாள்.
கண்ணன் சபைக்கு வந்தானா?என்று பார்த்தவர்
எவருமிலர்.உண்மையில் என்ன நடந்தது என்றால்,சபையில் பாஞ்சாலி நிர்வாணப்
படுத்தப்பட்டாள்.அசிங்கப் படுத்தப்பட்டாள். அப்போது வைராக்கியம் கொண்டாள்,
“என்னை சபையில் மார்பைப் பற்றி இழுத்து அசிங்கப் படுத்திய
உன்னை உன் மார்பைக்கிழித்து அதில் வரும் ரத்தம் கொண்டு என் கூந்தலை
முடிப்பேன்,அதுவரை இந்த கூந்தல் அவிழ்ந்த நிலையில் இருக்கும்.” என சபதமிட்டாள்.
“நீ என்ன பத்தினியா?அப்படி பலிப்பதற்கு!”என சபையில் கேலி
பேசியவர்கள்,வாயடைந்து போகும் படி 18-ம் போரில் சபதத்தை பீமனின் துணையுடன்
நிறைவேற்றுகிறாள்.பாஞ்சாலியின் இந்த சபதம் நிறைவேறியது பற்றி அன்றய உலகமே வியந்தது.அப்பொழுது ஆரம்பித்தது தான் பெண்கள் மீது
பக்தி.
இப்பொழுதும் பெண்கள் நெற்றியில்
குங்குமம் இடுகின்றனரே, அது பாஞ்சாலி தன் நெற்றியியில் இட்ட துரியோதனனின்
ரத்தத்தின் வெளிப்பாடுதான்.
பிராமணர்கள் வெளியில் சொல்லிக்கொண்டு திரிந்தது போல்
சபையில் கண்ணனும் வரவில்லை,மானம் காப்பாற்ற துணியும் தரவில்லை. இதுதான் உண்மை.
உண்மையில் துர்ச்சாதனன்,துரியோதனன் பாஞ்சாலியின் துகில்
உரிக்கும் போது கண்ணன் துகிலைத் தந்திருந்தால் பாஞ்சாலிக்கு துரியோதனனை
பழிவாங்கும் எண்ணம் வந்திருக்காது. “தப்பித்தேன்” என சபையை விட்டு
வெளியேறியிருப்பாள்.
ஒரு பெண் பாதிக்கப் படும்போதுதான் மனதில் வன்மம் கொள்வாள்.
அது நிகழாதபோது,அதாவது கடவுள் தங்கை போல் உள்ள துரவுபதியை
மானம் காத்திருந்தால், “கடவுள் இருக்கிறான் எல்லாவற்றிலும் இருந்துக்
காப்பாற்ற,இந்த கயவர்களுக்கு கண்ணன் தக்க தண்டனை கொடுப்பான்”என அப்போதே அந்த
சபதமிடும் எண்ணத்தை கைவிட்டிருப்பாள்.இது போன்று அந்நாளில் சிந்திக்க வில்லை.இன்றும்
இந்த சிந்தனை யாருக்கும் வரவில்லை.
எனவே நான் ஏற்கனவே கூறியதுபோல், ஒரு பெண்ணானவள்,
ஒருவனுக்கு ஒருத்தியாக வாழும் குணம் கொண்டவளுக்கு மட்டுமே பத்தினித்தனம்
இருக்கும்,அவளுக்கு மட்டுமே பாதிப்படையும் நேரத்தில் ஆணை அழிக்கும் ஆற்றல் வரும்
என்பதெல்லாம் கட்டுக்கதை.
பாதிப்படையும் எல்லாவிதமான பெண்களுக்கும் அறம் பாடி
அழிக்கும் ஆற்றல் உண்டு என்பது பாஞ்சாலி சபதம் ஒரு முன் உதாரணம்.
(ஆன்மீகம் என்பது மன ஒழுக்கம், இது ஆரம்ப காலத்தில் அறம்
சார்ந்ததாகவே இருந்தது.இந்த அறவழிகளை சொல்லித் தருவதற்கு அல்லது வழி காட்டுவதற்கு
உழைப்பாளிகளிடமிருந்து குரு தட்சணைப் பெறப்பட்டது.அதுவே பின்னாளில்
வியாபாரமாகிவிட்டது.அந்நாளில் மக்களுக்கு கல்வி அறிவை புகட்ட வேண்டும் என எந்த
அரசும் முன்வந்ததாக தெரியவில்லை,கல்வெட்டோ,செப்பு பட்டயமோ நமக்கு கிடைக்கவில்லை.படிக்கவேண்டும்
என ஆர்வமுள்ள நிழலாளிகள்,பிராமணர்களிடம் காசு கொடுத்து(குரு தட்சணை) எழுத படிக்க
தெரிந்து கொண்டர்கள்.
இன்றளவும் உலகில் காசுக்குதான் கல்வி விற்கப்படுகிறது.எந்த
நாடும் இலவசமாக சொல்லித் தருவதில்லை.அப்படி சொல்லிக் கொடுத்தாலும் அது உலக சுற்றுப்புற அல்லது அறிவியல் தொடர்புடைய கல்வி
வழங்குவதில்லை.)
பெண்கள் நெற்றியில் குங்குமம் ஏன் வைக்கின்றனர்?என்பதை
தெரிந்து கொண்டோம்.அதற்கு முன் ஆண்கள் நெற்றியில் திருநீரு மற்றும் நாமம் இடும்
பழக்கம் எப்படி வந்தது?என்பதற்கு சான்றுகள் உள்ளன.
ராவணனை எரித்த சாம்பலை என்ன செய்வது என யோசித்தபோது,அவன்
வம்ச வழித்தோன்றல்களுக்கு,அவனுடைய வீரம் செறிந்த நேர்மயான அரசாட்சி அவன்
எல்லைக்குட்பட்ட மக்களை கட்டிக்காத்த தாய்மை உள்ளம் கொண்ட பாதுகாப்பு மக்கள்
கண்முன்னே நிழலாடியது. ராவணன் சாம்பலை உடலில் பூசிக்கொண்டால் அவன் வீரமும்
நேர்மையும் நாம் தக்கவைத்துக் கொள்ளலாம் என அவன் இன மக்கள் தீர்மானித்தனர்.அதன்
தொடர் பழக்கமே இன்றளவும் நெற்றியில் திருநீரு இடும் பழக்கம்.இன்றும் இவன் இனம்
சார்ந்த மக்கள் சிவனை வணங்குகின்றனர்.
அந்த திருநீரு தயாரிக்கும்முறை இருக்கின்றதே அதை நினைக்கும்
போது தமிழன் எவ்வளவு தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டான் என்பதை எண்ணி மனம்
கலங்குகிறது.இன்றுவரை தமிழன் உணரவில்லையே என்று நினைக்கும் போது நெஞ்சு நிம்மதி
இன்று தவிக்கிறது.
ராவணன் சாம்பலை உடலில் பூசிக்கொண்ட மக்களுக்கு அது
தீர்ந்தவுடன் அந்த பழக்கம் தொடர வேண்டும் என பிராமணர்கள் விரும்பினர்.இது போன்ற
மெய்ப்பாட்டுணர்வு(sentiment) என்பது மனித குல நாகரிகம் தோன்றிய நாள் முதல் உள்ளது.
இதை தொடர்ந்து சடங்காக மாற்றி,
மக்களை பழக்கத்துக்கு உட்படுத்தினால் தான் வெய்யிலாளிகளை அடிமைப்படுத்த முடியும்
என பிராமணர்கள் தீர்மானித்தனர்.
130-பசு ஏன் புனிதமானது?
இதன் விளைவாக தொடர்ந்து சாம்பல்
தயாரிக்கும் முறை,அதன் புனித தன்மை என்னென்ன பயனை மனிதர்களுக்கு கொடுக்கும் போன்ற
அருவ சிந்தனைகளை வளர்க்க நாடு முழுவதும் உள்ள வெய்யிலாளிகளின் மத்தியில்
பிரச்சாரம் செய்தனர்.
விலங்கினங்களில் பசுவைப் போற்ற
வேண்டும், அதை சிவனுக்கு துணையாக மக்கள் பராமரிக்க வேண்டும்.இதற்கு காரணம்
இல்லாமல் இல்லை. மிருக இனங்களிலேயே பசுவிடம் இருந்து பால் கரப்பது சுலபம்.காரணம்
அதன் சாதுவான குணத்தால் தான். அதனை
கடவுளின் வாகனம் என வெய்யிலாளிகளை நம்ப வைத்தனர் ,அப்பதானே பசுவை பயபக்தியுடன்
பராமரிப்பார்கள். பசுக்களிடமிருந்து பாலை மட்டும் கடவுளுக்கு அபிஷேகம்
செய்யவேண்டும் எனும் நம்பிக்கையில் பிராமணர்கள் வீடுதேடி பாலை ஒப்படைத்து விடுவர்.
பசுக்களின் பாலையும்,நெய் போன்ற
அதி சக்திவாய்ந்த ஊட்டச்சத்துள்ள
உணவுப்பொருளை சைவமாக்கி அதை பிராமணர்கள் மட்டுமே உண்ணவேண்டும் என
வெய்யிலாளிகளை நம்ப வைக்கப்பட்டது.அப்பாவி வெய்யிலாளிகள் இன்று வரை இதை நம்பிக்
கொண்டுதான் இருக்கின்றனர்.
ரத்தமும் அதோடு இணைந்திருக்கும்
சதையும் அசைவ உணவாம்,ஆனால் நிறம் மாறிய
வெள்ளை ரத்தம் (பால்) சைவமாம்!இதெப்படி?அட இன்றுவரை இந்த மர மண்டைகள் சிந்திக்கவே
இல்லையே!இதெப்படிங்க?இதுதாங்க எனக்கு புரியவே மாட்டேங்குது.
பசுக்களிலிருந்து வெளியேறும்
முக்கியமான கழிவுப் பொருளான பாலையும் அதன் உப பொருட்களான நெய்,தயிர்,ஆகியவற்றை
பிராமணர்களின் அன்றாட அத்தியாவிசிய உணவுப் பொருளாகிவிட்டது.பசுக்களின் புனித தன்மை
எத்தகையது என வெய்யிலாளியை நம்ப வைத்தால் தானே பசுக்களை வெய்யிலாளிகள் தொடர்ந்து
பராமரிக்கமுடியும்.
அந்த திட்டம் தான் மனிதர்கள்
நெற்றியில் சாம்பலை பூசும் திட்டம்.பசுவின் சாணத்தை சாம்பலாக்கும் முன் அந்த
சாணத்தை விடியற் காலையில் நீரில் கரைத்து வாசலில் தெளிக்கவேண்டும்,ஏனென்றால்(யாரும்
பிராமணர்களை எதிர்த்து கேள்வி கேட்டதே கிடையாது.என்னைப போல யாராவது கேள்வி
கேட்டால் அவங்களுக்கு) அது கிரிமி
நாசினியாம்!அப்பதான் வீட்டுக்குள்ள விஷக்காற்று பரவாதாம்.அப்ப ஏங்க தொத்து வியாதி
வந்து மனிதர்கள் மருத்துவரைத் தேடிப் போகணும்?.
சாணம் தெளித்தது போக மீத முள்ள
சாணியை கொழுகட்டைப்போல் பிடித்து அதன் மீது அருகம் புல்லை சொறுகி விளக்கேற்றி
வீட்டுப் பெண்கள் வணங்க வேண்டும்.(அருகம்புல்லை ஏன் சாணி உருண்டையில் சொருக வேண்டும்,மாடுகள்
விரும்பி உண்பதால் மட்டுமல்ல,அருகம்புல் மருத்துவத் தன்மை வாய்ந்தது.இதைத்தின்று
வளரும் பசுவின் பால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது,மருத்துவ குணம் கொண்டது,எனவே
அருகம் புல்லை வெய்யிலாளிகள் வளர்த்து அந்தப் புல்லை அந்தணர் வீட்டு மாட்டுக்கு
உணவாக்கினர்,மந்திரத்தில் மயங்கிப்போன இந்த மக்கு வர்மாக்களும்,சேனாதிகளும்.
எனவே மாடுகளை பராமரிப்பதைப்போல்
அருகம் புல்லையும் வெய்யிலாளிகள் வளர்த்து வந்தார்கள்,இன்றும்
பராமரிக்கின்றனர். இன்றும் கிராமங்களின்
வீடுகளில் நல்ல நிகழ்ச்சி(மங்கல விழா) நடக்கும் போது வீட்டை(மண் குடிசை) பசுஞ்
சாணத்தால் தரையை மெழுகி பொங்கல் வைத்து கடவுளுக்கு படையல் போடுவார்கள்.வாழை
இலையில் சாதமிட்டு,பல காரங்களை படைத்து,பசுஞ் சாணியை கையளவு பிடித்து அதற்கு
மஞ்சளிட்டு, குங்குமமிட்டு(மஞ்சள் என்பது மகிழ்ச்சியின் அடையைளம்,
குங்குமம் என்பது
ருத்ரம்-கோவத்தின் அடையாளம்)மகிழ்ச்சியும் கோபத்தின் விளைவான துன்பமும்
இணைந்ததுதான் சம்சாரம்(வாழ்க்கை) என்பதின் அறிகுறியாக அதற்கு மூலமே இறைவன் தான்
காரணம் என எதிர் கால சந்ததிகளான தம் குழந்தைகள் அறியும் பொருட்டு இந்தச் சடங்குகள்
இல்லந்தோறும் கிராமங்களில்
நடக்கிறது.
எவ்வளவு சாணியைத்தான் இப்படி பயன்
படுத்தறது.மீதமுள்ள சாணியை எரித்து சாம்பலாக்கி ராவணன் சாம்பலாக
நினைத்து,நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகும் மிச்சமிருக்கும் சாணியை வரட்டியாக்கி,வெய்யிலில்
உலர்த்தி,சமயலுக்கும்,பிராமணர்களின் பிணத்தை எரிக்கவும் பயன் பாட்டுக்கு வந்து
விட்டது.விவசாயம் போக இந்த சாணத்தை பராமரிப்பது வெய்யிலாளிகளின் உப
தொழிலாகிவிட்டது.
பசுக்களை மட்டும் பராமரித்தால்
போதுமா?அதற்கு இணையாக ஆண் இன மாடான காளையை பராமரித்தால் தானே தொடர் இன விருத்தி
உண்டாகும்.அதற்கும் திட்டம் வகுக்கப்பட்டது.காளையை கிருஷ்னனுக்குப் பிடித்த
வாகனமாக்கி விட்டார்கள்.கிருஷ்னனை வணங்குபவர்கள் காளை மாட்டின் சாணத்தை எரித்து சாம்பலாக்கி
நெற்றியில் நாமம் இட்டுக் கொள்ளவேண்டும். அதனால்தான் சாம்பலை
புனிதமாக்கினார்கள்.குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் கூட திருநீரு
பிடித்தால் சரியாகிவிடும் என போதிக்கப்பட்டது.
இப்பொழுது புரிகிறதா?மக்களை நெற்றியில்
சாம்பலை(திரு நீரு?) பூசிக் கொள்ளச் சொல்வது,ஏன்? நோய் போக்கும்
மருந்தல்ல,காளையையும் பசுக்களையும் பாதுகாக்க மட்டுமல்ல அவைகள் வெளியேற்றும்
கழிவுப் பொருளையும் புனிதமாக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்துக்கள் எனும் மதப்போர்வையில்
மக்கள் பல குழுக்களாக(சமத்தானங்களாக)பிரிந்து அத்துணை குழுக்களுக்கும் தனித்தனி
மொழி,தனித்தனி எழுத்து வடிவங்கள் உருவாக்கப்பட்டது.
இதனை செவ்வனே செய்து அவர்களிடம்
முழு பலனையும் அனுபவித்தவர்கள் பிராமணர்களே.இன்றுவரை இவர்கள்தான் முன்னிலை
வகிக்கின்றனர்.அத்துணை இந்துக் குடும்பங்களிலும் பசுவின் கழிவுப்பொருட்கள்
சடங்குகள் நடத்துவதற்கு முக்கிய இடம் வகிக்கின்றன.
புனிதமாக்கினால் தான் அவைகள்
தொடர்ந்து பராமரிக்க முடியும்,பிராமணர்களுக்கும் அதி நவீன ஊட்டச்சத்தான பால்,நெய்
மற்றும் தயிர் தொடர்ந்து கிடைக்கும்.மோர் மட்டுமே நாம் பருக வேண்டும்,அப்பதான் நம்
உடலில் கொழுப்பு குறையும் நாமும் அவா சொல் பேச்சு கேட்போம்.
கிருஷ்னனை கடவுளாக வணங்கும் சேனாதிகள்(ஆயர்குல
மக்கள்)நெற்றியில நாமத்தை இடுவதும், எப்பொழுதும் எதிலும் முரண்படும்(சத்தரிய
குணத்தால்)வர்மாக்கள்(வன்னியர்கள்) பாதிபேர் ரத்தத்தில் ஊரிய குணமான சிவனை
வணங்கும் பழக்கத்தை விட முடியாமல் நெற்றியில் சாம்பல் பூசும் பழக்கத்தோடு இன்றும்
வாழ்கின்றனர்.வர்மாக்களில் மீதிபேர் நெற்றியில் நாமத்தை போட்டு வைணவத்தை
போற்றுகின்றனர்.
சேனாதிகள்(ஆயர்குல மக்கள்) இன்றும்
விஷ்னுவைத் தவிர வேறு கடவுளை வணங்குவதில்லை.
மாடுகளின் கழிவுப்பொருளான
பாலைத்தவிர(சாணி மற்றும் மூத்திரம்) எதிலும் புனிதம் இல்லை.அவை அனைத்தும்
ஒதுக்கப்பட வேண்டிய அழுக்குப் பொருளே. இந்த உண்மை அந்தணர்களுக்கு புரியும்.அடிமை
உணர்வு கொண்ட வர்மாக்களுக்கும்,சேனாதிகளுக்கும் அந்நாளில் சிந்திக்க
நேரமில்லை.இன்றும் சிந்திக்கவில்லை ஏன் என்றும் புரியவில்லை?எப்பொழுது புரியும்?
உழைப்பாளிகளின்(வெய்யிலாளிகள்)
விளைபொருட்களை,நிழலாளிகள் அனுபவிக்க பல யுக்திகள் வகுக்கப் பட்டன.இதனை
உழைப்பாளிகள் உணரும் பொருட்டு யார் பேசுகின்றாரோ,யார் எழுதுகின்றாரோ அவர்மீது
உழைப்பாளிகளின் வெறுப்பை அல்லது கோபத்தை திசை திருப்ப,நிழலாளிகள் அல்லது
உணவு,உடை,உறைவிடம் தயாரிக்கும் தொடர்பற்ற சோம்பேரிகள்அல்லது சுகவாசிகள் சுலபமான
ஒரு வார்த்தை கண்டுபிடித்துள்ளார்கள்.
அதுதான் , ‘பக்தர்களின் மனம்
புண்படுத்தும் படி யாரும் பேசக்கூடாது.’
அதாவது வெய்யிலாளி சிந்தித்தாலே
தம் பொழப்பு சிக்கலாகிவிடும், என்கிற பயம் காரணமாக பக்தர்களின் மனம் புண்படும்
என்பது, ‘ஆடு நனையுதே என்று ஓநாய் அழுதது போலதான்’ கதைதான்.இதனை இன்றும் புரிந்து
கொள்ளாத வர்மாக்களும் சேனாதிகளும் உள்ள வரை ஓநாய்களின் பிழைப்புக்கு
பஞ்சமில்லை.
131- இந்திய மற்றும் கிழக்காசிய மக்களின்
எழுத்துக்கள்,மூலம்
தமிழ் வட்டெழுத்துக்களே
(இன்று நாடு முழுக்க பல மொழிகள்
பேசும் மக்கள் வாழ்கின்றனர்.ஆரியர்கள் வருமுன் (3000-ம்ஆண்டுகளுக்கு முன்)இருந்த
மக்கள் பேசிய மொழி ஒன்றுதான் அது தான் தமிழ்.அந்த காலத் தமிழை நாம் இப்பொழுது
புரிந்து கொள்வது கடினம்.
அந்த தமிழ் ஆரியர்களின்
சமத்கிருதத்துடன் இணைந்து இன்று,
மலையளம்,(எழுத்துவடிவம்100%தமிழ்-,பேச்சுவழக்கு90%தமிழ்,10% சமத்கிருதம்)
தெலுங்கு,(எழுத்து’வடிவம்100%தமிழ்)
(பேச்சு’வழக்கு’40%தமிழ்’60%சமத்கிருதம்)
கன்னடம்,(எழுத்து
வடிவம்100%தமிழ்-பேச்சு வழக்கு60%தமிழ்,40%
சமத்கிருதம்)
துளு,(எழுத்து,வடிவம்இல்லை)-(பேச்சுவழக்கு50%தமிழ்,50%சமத்கிருதம்)
ஒரியா(எழுத்து வடிவம்100%-தமிழ்)
பேச்சு வழக்கு20%தமிழ்-80%
சமத்கிருதம்)
பெங்காலி(எழுத்து வடிவம் 100%
தமிழ்)
(பேச்சு வழக்கு10% தமிழ்,60%
இந்துத்தானி,30%இந்தி)
மத்திய
பிரதேசம்,உத்தரபிரதேசம்,குசராத்தி,ராஜஸ்த்தான்,பஞ்சாபி
(பேசும் மொழி (இந்தி
)50%-சமத்கிருதம்,50%-உருது)
(எழுத்து வழக்கு
சமத்கிருதம்+உருது)
மராத்தியம் எழுத்து வழக்கு
70-%தமிழ்,30%சமத்கிருதம்)
பேச்சு வழக்கு தமிழ்,10%,இந்தி90%(உருதுவும்
சமத்கிருதமும்கலந்தது)
இதில் இந்தி என்பது, வட
இந்தியாவை உருது பேசும் மன்னர்கள் ஆண்டதால்
(ஆப்கான்,பாரசீகம்,போன்ற அண்டை
நாட்டைச் சார்ந்தவர்கள்)சமத்கிருதமும் உருதுவும் சேர்ந்து ஒரு புதிய பேச்சு மொழி
உருவாகியது.
முகலாய மன்னர்களுக்கு மக்களை ஆள
வேண்டும் எனும் ஆசை அதிகம்,எனவே பேசும் மொழிக்கு எழுத்து வடிவம தேவைப்பட்டது.
அதுதான் இந்தி,எழுத்து வடிவம் பாபர்
காலத்தில் உருவாக்கப்பட்டது(500 ஆண்டுகளுக்கு முன்) அதற்கு முன் மக்கள் பேசிய மொழி
இந்துத்தானி-இதற்கு எழுத்து வடிவம் கிடையாது.இந்துத்தானி என்பது தமிழும்
சமத்கிருதமும் கலந்த பூர்வ குடி மக்கள் பேசிவந்த மொழி.வட இந்திய மக்கள்
மொழிமாற்றம் பெற்றார்களே தவிர அடிப்படை குணங்களில், வர்மாக்களும்,சேனாதிகளும் போன்று இன்றும்
வாழ்கின்றனர்.
பல மொழி மாற்றங்களுக்கும்,பல
சாதிகளுக்கும்(இனங்கள்) உருவாக காரண கர்த்தாக்களே பிராமணர்கள் தான்.உழைப்பாளிகள்
(வெய்யிலாளிகள்)எத்தனை பிரிவாகப் பிரிந்தாலும் அத்துணை பிரிவுகளுக்கும்
பிராமணர்களே குரு ஸ்தானத்தைப் பெற்றார்கள்.
இதில்தான் பிராமணர்களின் மக்களைப்
பிரித்தாளும் சூழ்ச்சி வெற்றி பெற்றிருக்கிறது.இதை இன்று வரை உணராத இனங்கள்
இரண்டு.அவைதான் ருத்ரவர்மாக்களும்,ருத்ர சேனாதிகளும்.வன்னியர்களும்,இடையர்களும் (யாதவர்)
ஆனால்
இவர்கள்,பேசும்,மொழிகளோ,ஏராளம்.இந்தியாவில்,தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,கொங்கணி,துளு,ஒரியா,மராத்தி,பெங்காலி,இந்தி,
மற்றும் புத்தமதம் பரவியுள்ள
தெற்காசிய நாடுகளில் (இலங்கை,பர்மா,மலேயா,கம்போடியா மற்றும் தாய்லாந்து) மக்கள்
பேசும் மொழிகள். மேலே கூறப்பட்ட மொழிகளில்
இந்தி தவிர மற்ற மொழிகள் அனைத்திற்கும் எழுத்து வடிவம் தமிழே.ஒலிகள் தான்
வேறுபடும்,எழுத்து வடிவமும் மொழிக்குமொழி சற்று வேறுபடும்.
தெற்காசிய நாட்டு மக்கள் பேசும்
அத்துணை மொழிகளுக்கும் மூல காரணம் தமிழில் தோன்றிய அல்லது தமிழ் உருவாக்கிய வட்டெழுத்து
முறைதான்.
தமிழ் இனம்,இந்தியாவின் வடமேற்கு
பகுதியான இன்றய ஆப்கான் பிரதேசத்திலிருந்து ஆரம்பமாகிறது.இன்றும் அப்பகுதியில் புரோகி
இன மக்கள் எழுதும் மொழி தமிழை ஒற்று
உள்ளது என வரலாற்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த கால தமிழர்களின் வாழ்க்கை
முறையில் ஆரியர்கள் இணைவது கடினமானதாக இல்லை. காரணம் தமிழர்களின் இயற்கையோடு
இணைந்த காட்டுமிராண்டி வாழ்க்கை.
பாம்பு கடித்தால் இறந்து
விடுகிறோம்,அதனால் பாம்பை வணங்கினால் கடிக்காது எனும் நம்பிக்கை வைத்தார்கள்.ஆனால்
அதுவல்ல பொருள்,பாம்புகளுக்கு மனிதனால் தொல்லை இருக்க கூடாது ,எனவே மனிதனை பாம்பு தீண்டாது.கரையான்
புற்று உருவாக்கும், அதில் உள்ள முட்டைகளையும் புழுக்களையும் உண்பதற்கு
விஷப்பாம்புகள் குடி புகும்.இதை சரியாக உணராத அக்கால மக்கள்(இக்கால மக்களும்
இப்படித்தான்) பாம்பு வாசம் செய்வதே புற்றில் தான் என நினைத்துக் கொண்டு புற்றில்
பாம்புக்கு முட்டையும் பாலையும் வைத்தால் அதனை தின்று வாழும் பாம்பு தங்களை
தீண்டாது எனும் மூட நம்பிக்கை கொண்டனர்,அது இன்றும் தொடர்வதுதான் சோகம்.
மரங்களில் வேம்பு,அரசம் ஒன்றோடு
ஒட்டியோ அல்லது அருகருகே முளைத்து வளர்ந்து இருந்தால் அதற்கு ஊர்கூடி மரங்களுக்கு
மஞ்சள் குங்குமமிட்டு அதற்கு முன்னே தங்கள் போர்க்கள ஆயுதங்களான
வேல்,சூலம்,குத்தீட்டி,வாள் போன்ற ஆயுதங்களை நட்டு
வைப்பார்கள்.கோலாட்டம்,கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சி நடத்துவார்கள்.மேளம் கொட்டி
தாலி கட்டி மகிழ்வார்கள்.ஊர் கூடி உறவுகளை ஒன்றுசேர்க்க உண்டு மகிழ தமிழன் கண்ட
மனித நேய நிகழ்ச்சி.ஆண்டுக்கு ஒரு முறை செய்வார்கள்.
ஆணும் பெண்ணும் இணைந்தால் ஆற்றல்
பிறக்கிறது.மனிதர்களுக்கு சக்தியே அப்பொழுதுதான் தோன்றுகிறது. எனவே இதை
வெளிப்படுத்தும் பொருட்டு இரண்டு ஆண் பெண் பாம்புகள் இணைவதை பாறையில் வடித்து
வழிபட்டனர்.அவ்வாறு வழி படும் போது தங்களுக்கு சக்தி கிடைப்பது மட்டுல்லாமல்
பாம்புகள் கடித்தால் ஏற்படும் மரணத்தை தவிர்க்கலாம் எனும் நம்பிக்கை கொண்டவர்களாக
வாழ்ந்தனர்.இன்றும் வாழ்கின்றனர்.
ஆரியர்கள் இந்தியாவிற்கு வருமுன்
தமிழர்களின் வாழ்க்கையில் மூடநம்பிக்கை இந்த அளவிற்குத்தான் இருந்தது.
உலகில் உள்ள மொழியமைப்புகளில்
நான்கு வகைகளில் உள்ளடங்கியுள்ளது.அதாவது -.l,+,0.இந்த வரிகளில் வெளி அல்லது
உள் மாற்றங்கள் ஏற்படுத்தி எழுத்துக்கள் உருவாக்கியிருப்பார்கள்.
ட,ப,ம,உ,௱-இவைகள் வட்டெழுத்து முறைகள்-தமிழ்
மூலம்,தெலுகு,கன்னடம்,மலையாளம்,ஒரியா,கம்போடியா,சிங்களா போன்ற மொழிகள் உருமாற்றம்
பெற்றது.
T,o,d.b,L,s,A-வட்டெழுத்தும்,நெடுக்கு கோடுகளும் கொண்ட ஆங்கில லத்தின்
மொழியாக்கம்-பிரான்சு,செர்மனி,ருஷ்யம் போன்ற மொழிகள் உருமாற்றம் பெற்றது.
சீனாவின் எழுத்துக்கள்
தமிழைப்போன்று அமையவில்லை ,ஆனால் தமிழைப்போல் இயற்கையோடு இணைந்தது.
உலகில் மனிதன் உச்சரிக்கும்
ஒலிக்கு ஏற்றவாறு எழுத்து வடிவம் தரப்பட்டது தமிழ் மொழியில் மட்டுமே.இதைத் தொடர்ந்து
இந்திய மொழிகளான தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஒரியா,வங்கம்,மராத்தியம் மற்றும் இந்தி
போன்ற முக்கிய மொழிகள் ஒலிக்கு ஏற்றவாறு
எழுத்து வடிவம் தரப்பட்டது.
சீன மொழி பொருளுக்கு ஏற்றவாறு
எழுத்து வடிவம் தரப்பட்டது.உதாரணமாக வீடு என்றால் வீட்டைப் போல் வரைந்து
அந்த வடிவத்துக்கு ஒலி தரப்பட்டது. .மலை
எனில் மலையைப்போல் வரைந்து காட்டப்பட்டது.அந்த மலை வடிவத்துக்கு ஒலி
கொடுக்கப்பட்டது.
வடிவங்களுக்கு ஒலி கொடுப்பது
என்பது அந்தந்த மொழிகளின் சிறப்பு.ஆனால் பொருளின் வடிவம் போல் உச்சரிப்பு
கொள்ளமுடியாது.உருதுவும்,சீனமும்,வலமிருந்து இடமாக எழுதப்படுபவையாகும்.
நெடுக்கு (|)கோடுகளின் முனைகளில் மாற்றம் செய்து
சமத்கிருதம் உருவாயிற்று.
பின்னாளில் நெடுக்கு கோடும் வேண்டாம்,வட்டமும் வேண்டாம்
கோடுகளை படுக்கவாட்டில் (_௨¬-)வைத்து முனைமாற்றங்கள் ஏற்படுத்தி,பின் வலது இடமாக
எழுதப்பட்ட எழுத்து உருது.அதாவது எல்லாமே எதிர் மறை மாற்றங்கள் கொண்டது.
உருது மொழி சமத்கிருதத்துக்கு எதிராக உருவாக்கப்பட்டது.மொழி
மட்டும் உருவாக்கப்படவில்லை,பழக்கவழக்கங்கள்,உடை மாற்றங்கள்,எழுத்து திசை
மாறும்,புத்தகங்களின் பக்கங்கள் எண்கள் கூட முடிவிலிருந்து ஆரம்பிக்கும்.
உலகில் முதலில் தோன்றிய மதமே இந்து மதம் எனலாம்.ஆனால் இது
ஒரு மதமே அல்ல மக்களை ஏமாற்றும் தவறான கடவுள் வழி பாட்டைக் கொன்டது என மாற்று
வழிபாட்டைக் கொண்டு தோன்றியதுதான் மற்ற மதங்கள்.
(இதன் தொடர்ச்சியை புதிய அஞ்சல்-16ல் காணவும்)
(இதன் தொடர்ச்சியை புதிய அஞ்சல்-16ல் காணவும்)
No comments:
Post a Comment