93-குரு சேத்ரம்- போர்க்கள விதிகள்
நடக்கப்போவது தர்ம யுத்தம்,அதற்கான விதிகள் இருதரப்பினரும்
சந்தித்து வகுக்கப்பட்டன.
1-ஆடு மாடுகளையும் ,பெண்டீர் மற்றும் அந்தணர்களையும்
போர்க்களம் விட்டு விலக உத்திரவிடப்பட்டது.
2-போர்க்களத்தில் பெண்கள் நுழைய
அனுமதி இல்லை.
3-ரதத்தின் மேல் நின்றுதான் போர்
புரியவேண்டும்
4-போர்க்களத்தில் அனைவரும் தத்தமது
போர்ப்படை தளபதிகளின் உத்தரவுக்கு கட்டுப்பட்டவர்கள்.
5-சூர்ய உதயத்திற்குப்பின் போர்
துவங்கி சூர்யன் மறைவிற்கு முன் போர் நிறுத்தப்படவேண்டும்.
6- இருதரப்பு தளபதிகளும் சங்கு
ஊதியபின் போர் துவங்க வேண்டும் அதேபோல் மாலையில் சங்கு ஊதிய பின் போர்
நிறுத்தப்படவேண்டும்
7-போர்க்களத்தில் நிராயுபாணியைத்
தாக்க கூடாது.
8- எதிரி எந்த ஆயுதம் தாங்கி
உள்ளானோ அதே ஆயுதம் கொண்டுதான் தன் எதிரியைத் தாக்க வேண்டும்.
போர்க்கள விதிகளை நாட்டு
மக்களுக்கு பிரகடணப்படுத்தப்பட்டது.
தர்மன் தன் தேரில் போர்க்களம்
வருகிறான்.தன் முன்னே பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரி போன்ற சான்றோர்கள் அணிவகுத்து நிற்கின்றதைப்
பார்த்தவுடன் தர்மனுக்கு அவர்களிடம் ஆசிவாங்க வேண்டி அவர்களை நோக்கிச் செல்கிறான்.
அப்போது துரியோதனன்,தன் தம்பியிடம், ‘தர்மன் நம் படை பலத்தைப் பார்த்து பயந்துவிட்டான்
போலும் நம்மிடம் சரணடைய வருகிறான் என நினைக்கிறேன்.’
அப்படி இருக்காது அண்ணா,‘பிதாமகரிடம் ஆசி வாங்க வருவான்’,மேலும் துர்ச்சாதனன்,
‘இந்த கிழவனை நாம் நம்ப முடியாது,அண்ணா ! நமக்கும் ஆசிவழங்குவான்
நம் எதிரிகளான பாண்டவர்களுக்கும் ஆசி வழங்குவான்’
‘நமக்கு எதிரிகளே
நம் அரண்மனையில் தான் வாழ்கின்றனர்,நாம் என்ன செய்வது?’தன் தம்பி துர்ச்சாதனனிடம் ,துரியோதனன் புலம்புகிறான்.
பீஷ்மரைப் பார்த்து தர்மன்
மண்டியிடுகிறான், ‘போரில் வெற்றிபெற என்னை வாழ்த்துங்கள் பிதாமகரே’
தீர்க்க ஆயுளுடன் தர்மன் வாழ பீஷ்மன் வாழ்துகிறான்.
அடுத்து ராஜ குரு துரோணர் மற்றும்
குலகுரு கிருபாச்சாரி ஆகியோரை வணங்கி வாழ்த்து பெறுகிறான்.
94-அர்ச்சுனன் தர்ம சிந்தனை
அடுத்து அர்ச்சுனன் போர்க்களம்
வருகிறான், அவனுக்கு தேரோட்டியாக கிருஷ்னன் வருகிறான்.தன் எதிரில்
அணிவகுத்து நிற்கும் தன் தாத்தா,துரோணர்,கிருபாச்சாரி போன்றோர்களைப் பார்த்து
அர்ச்சுனன் நடுங்கிப்போகிறான்.
‘கிருஷ்னா நான் இவர்களை எதிர்த்து போரிட்டால் நான்
வெற்றிபெறுவேன் எனும் நம்பிக்கை உள்ளது.அதில் சந்தேகம் இல்லை.ஆனால் அந்த வெற்றி
எனக்கு எதற்கு? என் அண்ணன் துரியோதனனும் நானும் சிறுவயதில் ஓடியாடி எங்கள்
தாத்தாமடிக்கு போட்டிபோட்டு உட்கார சண்டையிடுவோம், அப்போது தாத்தா செல்லமாக எங்களை கொஞ்சிய காலங்கள் என் கண்முன்னே
வருகிறதே கண்ணா! அவரை எதிர்த்தா நான் போரிடுவது?
குருகுலத்தில் 105 பேர்
படித்தோம்,அதில் என் கலைத் திறமைக்கு தனித்திறமை உள்ளது என என்னைப் பாராட்டிய எங்கள் ராஜ குரு துரோணரை எதிர்த்தாநான் எப்படி
போரிட முடியும்?
எங்கள் குடும்பத்தின் குல குரு
கிருபாச்சாரி ,அவரின் அறவழி சிந்தனைகள் என் காதுகளில் இன்றும் ரீங்காரமிடுகிறதே,அவரை எதிர்த்தா நான்
போரிடுவது?
மாத்திரி தேசத்து மன்னரும் எங்கள்
தாய்மாமவுமான சல்லியனை எதிர்தா நான் அம்பு எய்வது?என்னால் முடியாது கிருஷ்னா,என்
காண்டீபம் கை நழுவுகிறது’ என ஓடப் பார்க்கிறான்
ஆ.க-
(காண்டீபம் என்பது இந்திரனின்
வில், இதற்கு ஈடு இணை ஏதுமில்லை.உலகையே வெல்லுமளவுக்கு அர்ச்சுனன் வரம் வேண்டி
மகாதேவனிடம் தவம் இருந்த போது,அப்போது அர்ச்சுனன் முன் தோன்றிய சிவன், ‘உனக்கு
தேவையான ஆயுதமான காண்டீபம் இந்திரனிடம்
உள்ளது நீ கேட்டால் அவன் தருவான் அவன்
இஷ்ட்ட மகன் நீ அல்லவா? என்று
சொன்னவுடன் இந்திரனிடம் தவமிருந்த அர்ச்சுனன் பெற்ற வில்)
95-கீதா
அப்போது கிருஷ்னன்,‘குடாக் கேசா! நான் சொல்வதை காது கொடுத்து கேள்.’ (குடாக் என்றால் ஏதும் அறியாதவன்
என்று பொருள்.)
அர்ச்சுனன் மண்டியிட்டு கேட்கிறான்
கிருஷ்னன் பேசுகிறான்,அதுதான் ‘கீதா உபதேசம்’
ஆ.க-
(கீதா உபதேசம் என்பது கிருஷ்னனை
அவதாரமாக்கி,அவன் வழியே தர்ம வழியை கடைபிடிக்கும் அல்லது தர்ம வழியில் வாழ்வதே தன்
லட்சியம் என கிருஷ்னனிடம் வாதம் செய்யும் அர்ச்சுனனின் மனதை மாற்றி அபரிமிதமான
அவன் வீரத்தை கொண்டு ,தன் ரத்த உறவுகளை அதர்ம வழி செல்பவர்கள் எனவும் ,அவர்களை
அழித்தால் பாவமில்லை என உபதேசம் செய்வது,அதை இன்றளவும் வெய்யிலாளி இனத்தின் மனதை
மயக்கமடையச் செய்யும் மாய விருந்தாக திணிக்க பயன் படும் அய்யோக்கியர்களின்
ஆயுதம்.)
***************
(அர்ச்சுனன் ஒரு அரை சத்ரியன்
என்று கூட சொல்ல முடியாது ஆம் ஒரு
இந்திரன் என்னும் பிராமணனுக்கும் யாதவ குல பெண் குந்திக்கும் பிறந்தவன். துருபதன் மற்றும் துரியோதனன்
வகையறாக்கள்(சந்திர மற்றும் சூரிய வம்சத்தை சார்ந்தவர்கள்)யாதவர்களை,‘சத்ரியர்கள்’ என ஏற்றுக் கொள்வதேயில்லை.இன்றும்
இதே நிலைதான்
ஆனால் வம்ச விருத்திக்காக ராஜமாதா
சத்யவதியும், அஸ்த்தினாபுர நிறுவனர் பீஷ்மனும் பாண்டுவுக்கும்
குந்திக்கும் பிறந்ததாக கூறப்படும் பாண்டவ கலப்பின மக்களை சத்ரியர்களாக
அங்கீகரிக்கின்றனர். திருதராஷ்ட்ரனும் அவன் பிள்ளைகளும் கடைசீ வரை இவர்களை
சத்ரியர்கள் என ஏற்றுக்கொள்ளவே இல்லை ,மகாபாரதத்தின்
போருக்கு காரணமே இதுதான்.
யாதவ புருஷன் கிருஷ்னனை கடவுள்
அவதாரமாக அங்கீகரிக்க பாமர மக்களிடையே கதைகளை அவிழ்த்து விடுவதின் விளைவு
கிருஷ்னன் பிராமணர்களை காக்கும் அதாவது சத்ரியர்களை அழிக்கும் அவதாரமாக
சித்தரிக்கப்படுகிறான்.
ஆரியர்கள் இந்தியாவில் காலூன்ற
காரண கர்த்தாவான பரத்வாஜர்;இவருக்கு மட்டுமே தெரிந்த வட்டெரிதல் (சுதர்சன
சக்கரம்)கலையை கிருஷ்னனுக்கு மட்டுமே கற்றுத்
தருகிறான்.
இந்த அழிவுக்கலையை பரத்வாஜர் தன்
மகன் பரசுராமனுக்கு கூட சொல்லித்தரவில்லை, அஸ்த்தினாபுர சாம்ராச்சியம் நிறுவ
பீஷ்மனுக்கு துணை நின்றவர் இந்த பரசுராமன்,இவன் மகன் துரோணர் பல
சத்ரியர்களுக்கு தனுர் வித்தை சொல்லிக்கொடுத்து அதனால் பலனடைந்தவர்.
தனூர் ஆயுதத்தை விட கொடிய ஆயுதம்
இந்த தலைவாங்கும் சுதர்சன சக்ராயுதம்.
இந்த ஆயுதத்தை காட்டியே (இரண்யன், கம்சன், ஜராசந்தன், சிசுபாலன் போன்ற பல சாலிகளை) சத்ரியர்களை
ஒழித்தான் கிருஷ்னன்.இதானால் மக்கள் மத்தியில் (ஒரு ரவுடியைப்பார்த்து பாமரன் பயம்
கொள்வது போல்) கிருஷ்னன் மீது மக்களுக்கு பக்தி(பயம்) வந்தது.)அந்த உணர்வே மக்களிடையே பரமாத்மா எனும் பெயரை வாங்கித் தந்தது.
முரட்டுத்தனமான சத்ரியர்களிடம்
யாதவ குல மக்களை வலிய உறவு ஏற்படுத்திக்கொண்டு சத்ரியர்களை அடக்குவதே அல்லது அடங்க
மறுப்பவர்களை ஆயுதம் தாங்கிய யாதவ தலைவர்கள் மூலம் ஒழிப்பதே கிருஷ்னனின் திட்டம்.)
*************
தர்மன்,பிதாமகர் பீஷ்மனிடம் போரில் வெற்றிபெற
வாழ்த்தச் சொல்கிறான்.பீஷ்மனும் அவ்வாறே வாழ்த்துகிறான்.
பீஷ்மனின் செயல் துரியனுக்கு
எரிச்சலைத் தருகிறது. ‘தாத்தா பாண்டவர்கள் நம் சத்ருக்கள் என தெரிந்தும் அவர்கள்
வெற்றிபெற வாழ்த்துவது எந்தவகையில் நியாயம்?’
‘என்னதான் விரோதம் இருந்தாலும் என்னதான் பகை இருந்தாலும் ஒரு
காரியத்தில் (செயலில்) அல்லது அது போராக இருந்தாலும் அதில் இறங்கும் முன் தன் குல (வயதில்)
பெரியோர்களின் வாழ்த்துக்களை (ஆசிர்வாதங்களை) பெறுவது மிக்க முக்கியம் துரியோதனா. நீ
கூட உன் வயதில் பெரியவனான எதிரணியில் போரிட நிற்கும் உன் அண்ணன் தர்மனிடம்
வாழ்த்துப் பெறலாம் அவனும் வாழ்த்தவான்.இதுதான் வாழ்க்கை துரியோதனா’
‘பிதாமகரே,நடப்பது போர் இங்கு வெற்றியோ தோல்வியோ அது ஒருவருக்கு
மட்டுமே அமையும்.இதில் யாருடைய வாழ்த்து,யாரை வெற்றிபெறச் செய்யும்? ஏன் இந்த பித்தலாட்டம்? எதற்காக இந்த நாடகம்-போர்க்களத்தில்
என்ன ஒப்பாரி வேண்டியுள்ளது?’
இதற்கு மேல் போர்க் களத்தில் துரியனிடம்
பீஷ்மனால் பேச முடியவில்லை.
தர்மன் போர்க்களத்தில் தன் நிலை
வந்து அடைந்தவுடன்,ஒரு அறிவிப்பு செய்கிறான்,‘நாம் குருஷேத்ரத்தில் போர் புரிய
அணிவகுத்து நிற்கின்றோம். பிதாமகர் சங்கு ஊதியவுடன் போர் ஆரம்பிக்கும். அதற்கு
முன் பாண்டவர்கள் பக்கம் இருக்கும்
யாராவது இப்பக்கத்தில் நியாயம் இல்லை,தர்மம் இல்லை என உணர்ந்தால் ,எதிரணியில் கவுரவர்கள் பக்கம் போய்
சேர்ந்து கொள்ளலாம்,’என தெரிவிக்கிறான்.
‘அதேபோல் கவுரவர்கள் பக்கம் நியாயம் இல்லை என யாரவது அங்கே உணர்ந்தால்
அவர்கள் இங்கு(பாண்டவர் பக்கம்) வந்து சேர்ந்து கொள்ளலாம்.’
என அறிவிப்பு செய்கிறான். (இந்த
அறிவிப்பை பீஷ்மன் அறிவிப்பது போல் சிலர் கூறுவர்)
இதைக் கேட்டவுடன் ,யுயூத்சு என்பவரும், துரியோதனனின்
மாற்றாந்தாய் மகனும் ஆன இளவரசர்,கவுரவர்கள் அணியிலிருந்து
விலகி, பாண்டவர் பக்கம் போகச்சொல்லி தன் தேரோட்டியிடம் கூறுகிறான்.
பாண்டவர்கள் அணியில் திருஷ்ட்டதியூமனன்
போர்படை தளபதியாக தர்மனால் நியமனம் செய்யப்படுகிறான்.சிகண்டி,துருபதன் பாண்டவர்களுக்கு துணையாக
நின்று போர் புரியத் தயாராகின்றனர்.
1ஆ.க-
(இங்கே சகுனி பாண்டவர்களிடம்
அனுமதி பெற்று, ஒரு நீண்ட உரையாற்றுகிறான் அது வருமாறு-போர்க் களத்தில்
பெண்கள் நுழையக்கூடாது, அப்படி நுழைந்தால் அவரவர்களின் தளபதிகள் அந்த பெண்ணுக்கு
மரண தண்டனை விதிக்க வேண்டும்.
சிகண்டியை மனதில் வைத்து இந்த
கோரிக்கை வைக்கிறான் சிகண்டியால் பீஷ்மனுக்கு மரணம் என்பது நிச்சயம் என்பதை
எல்லாரும் உணர்வர்.பீஷ்மன் மரணம் எய்தினால் கவுரவர்களுக்கு தோல்லவி நிச்சயம்.இந்த
நிபந்தனையை சத்யவாக்காக தர்மன் ஏற்கிறான்.(அடுத்த சில நாட்களில் வாக்குத்தவறாத
தர்மன் என்று பெயரெடுத்தவன் பீஷமனைக் கொல்ல சிகண்டியை முன் நிறுத்துகிறான். கவுரவர்கள்
ஏமாற்றப் படுகின்றனர். )
பீஷ்மன் சங்கு ஊதுகிறான்.போர்
வீரர்கள் இருதரப்பும் மோதிக் கொள்
ஆயத்தமாகின்றனர்.தேர்ப் படை,யானைப் படை,குதிரைப் படை,காலாட் படை வீரர்கள் தங்களின் ஆயுதங்களான முறையே,வில் அம்பு,வாள்,கதை மற்றும் வேல் ஆயுதங்களை தாங்கி
அணிவகுத்து மோதுகின்றனர்.
திருதராஷ்ட்டரன் தேரோட்டியான சஞ்சயன், அஸ்த்தினாபுர அரண்மனையில் இருக்கும்
தன் அரசருக்கு போர்க் களத்தில் நடக்கும் சம்பவங்களை அவ்வப்போது சொல்லிக்
கொண்டிருக்கின்றான்.
காந்தாரியும் குந்தியும்
அரண்மனையில் உள்ள அவரவர்களின் அறைகளில் தங்கி போர்பற்றி அறிந்து வருகின்றனர்.
96-முதல்நாள் போர்
உத்ரன்,ஸ்வேதன் மரணம்
விராட தேசத்து இளவரசனும்,அபிமன்யுவின் மச்சானுமான உத்தரன்
மாத்தரி தேசத்து மன்னனும் பாண்டுவின் மைத்துனன் மற்றும் நகுலன் சகாதேவனனின்
தாய்மாமனுமான சல்லியனை எதிர்த்து போரிடுகின்றான்.
உத்ரன் ,அவன் தம்பி ஸ்வேதன், இருவரும் பிஷ்மனிடம் மாட்டிக் கொண்டு மரணமடைகின்றனர்.
முதல் நாளில் பண்டவர்கள் தரப்பில்
விராட தேசத்து இரு இளவரசர்கள் போர்க்களத்தில் மரணமடைந்த சேதி பாண்டவர்களை
கலக்கமடையச் செய்கிறது.
அப்போது கிருஷ்னன், ‘போர்க்களத்தில் மரணம் தவிர்க்க
முடியாதது.முதல் நாளில் நமக்கு ஏற்பட்ட மரணம் தோல்விக்கு வழி வகுத்துவிடுமோ என
அஞ்சத் தேவையில்லை, இனி நம் தளபதிகள் புதிய உத் வேகத்துடன் போர் புரிந்து
வெற்றி வாகை சூடுவர்.இந்த மரணம் இவர்களுக்கு சொர்கத்தில் முதலிடம் கிடைக்கும், கிருஷ்னனின் பசப்பு வார்த்தைகளில்
பாதிக்கப்பட்ட விராட மன்னன் குடும்பத்தினர் ஆறுதல் அடைந்தனர்.இன்றும் இந்நிலைதான்
நீடிக்கிறது.
அபிமன்யு தன் கொள்ளுத் தாத்தா
பீஷ்மனை எதிர்த்து போரிடுகின்றான்.தன் பேரன்
அம்பு தொடுக்கும் வேகத்தைப் பார்த்து பீஷ்மன் அசந்துபோகிறான். ‘குழந்தாய்
,என் செல்வமே உன்னை எதிர்த்து என்னால் அம்பு தொடுக்க முடியவில்லை,கண்ணே! நீ
திரும்பி செல். அஸ்த்தினாபுரத்தின் எதிர்காலமே நீதான் ,உன்னை நான் எப்படி
கொல்வேன்,நீ திரும்பி போ,என் கரம் அம்பு தொடுக்க மறுக்கிறது கண்ணே!’
இதைக்கேட்ட துரியோதனன் ,இங்கு என்னதான் நடக்கிறது?,இது என்ன போர்க்களமா? அல்லது ஒப்பாரி களமா?பீஷ்மனும்,அபிமன்யுவும் தாத்தா பேரன்
பாசப்பிணைப்பை துரியோதனனால் காண சகிக்கவில்லை.
எனவே தேரோட்டிடம்,‘யுயுட்சு இருக்குமிடம்
தேரை செலுத்தச் சொல்கிறான்.
நேற்றுவரை அஸ்த்தினாபுரம்
அரண்மனையில் சோறு தின்றுவிட்டு இன்று எதிரணியில் சேர்ந்து கொண்டான் ,அவனை ஒழிக்காமல் விடமாட்டேன்’துரியோதனன் யுயுட்சுவைத்தேடி
போகிறான்.
தொடர்ந்து பீஷ்மன் நான்காவது நாளாக
போரிடுகிறான்,தள்ளாதவயதிலும் தன்னெதிரே வரும் வீரர்களை மட்டுமல்ல
போர்க்களத்தில் தனக்கு நிகராக அனுபவம் பெற்றவர்கள் ஒருவருமில்லை எனும் தைரியத்தில்
பாண்டவ தரப்பு வீரர்களை கொன்று குவிக்கிறான்.
கோபமுற்ற கிருஷ்னன் அர்ச்சுனனை
நிர்பந்திக்கிறான்,
‘அர்ச்சுனா!போர்க்களத்தில் நம் வீரர்களை கொன்று குவிப்பது
யார் தெரிகிறதா? உன் கண்ணில் அவர் தாத்தா எனத்தெரிகிறதா?அவர் ஒரு வயோதிகர்
எனத்தெரிகிறதா? உன்னால் முடியவில்லை எனில் நானே கீ`ழிறங்கி போரிடுகிறேன்.எனக்கு
என் போர் வீரர்கள் உயிர்தான் முக்கியம்.’
என கூறிக்கொண்டு தன்
கையிலிருக்கும் வட்டுவை(சுதர்சன சக்கரம்) எரிய ஆரம்பித்தான், கிருஷ்னன். சட்டென்று
அர்ச்சுனன் கிருஷ்னனை மண்டியிட்டான்,
‘கிரிதரா, என்னை மன்னித்து
விடு.போர்க் களத்தில் தாங்கள் ஆயுதம் ஏந்த மாட்டேன் என சபதம் எடுத்துள்ளீர்கள்,
அதை தாங்கள் மீற நான் காரணமாக இருக்கமாட்டேன்.உடனே பீஷ்மரை நான் வதம்
செய்கிறேன்.’
இதற்கிடையே துரியோதனன் பீஷ்மரை
நிந்திக்கின்றான், ‘என்ன செய்கின்றீர் பிதாமகரே இன்னும் அர்ச்சுனனை ஏன் கொல்ல
முடியவில்லை,?நீங்கள்,பாண்டவர்களை கொல்ல மாட்டீர்கள்,பாண்டவர்களை கொல்லாது
நமக்கு வெற்றியில்லை. தாங்கள் போர்ப்படைத்
தளபதியாக இருக்கும் வரை இதே நிலை தான் நீடிக்கும்.’
‘துரியோதனா! என்னைப் படை தளபதி பொறுப்பிலிருந்து நீக்கிவிடு’
‘அதெப்படி முடியும்,அதை செய்தால்,தாங்கள் பாண்டவர் அணியில் சேர்ந்து
விடுவீர்கள் என எனக்கு தெரியாதா?’
‘துரியோதனா!,இப்பொழுதும்
கூறுகிறேன்,நீ அவர்களுக்கு இந்திர பிரஸ்த்தத்தை திருப்பிக் கொடுத்துவிடு,
இவ்வளவு உயிர்கள் கொல்லப்படுவதை
தவிர்க்கலாம்,உன் பிடிவாத குணத்தால் எண்ணற்ற உயிர்கள் இரு தரப்பிலும்
மாண்டு போவார்கள் மகனே! சற்று யோசி!
‘அது முடியாது பிதாமகரே, ஊசி முனை
இடம் கூட தர மாட்டேன்’
‘சரி என்னை போர் செய்ய விடு,நீ இந்த இடத்தை விட்டு அகன்று போ’
‘சரி என்னை போர் செய்ய விடு,நீ இந்த இடத்தை விட்டு அகன்று போ’
பீஷ்மன் தொடர்ந்து
வில்லேந்துகிறான்.தன் முன்னே அபிமன்யு முன்னேறி வருவதை பீஷ்மன் காண்கிறான்.
அபிமன்யு மீது அம்பு எய்த
மனமில்லாமல் பீஷ்மன் திரும்பி போகிறான், ஆனால் அபிமன்யு தன் வில்லாற்றலால் பீஷ்மனை அம்புகள் கொண்டு
தடுக்கின்றான்.
கோபமுற்ற பீஷ்மன்,‘அர்ச்சுனா! அபிமன்யுவை
அழைத்துக்கொள்’
இதற்கிடையே நகுலன் துர்ச்சாதனனை
தன் வில்லாற்றலால் சுற்றி வளைக்கிறான்.அவன் உடலில் அம்புகள் தைத்த நிலையில் நகுலன்,
‘என் சின்ன அண்ணன்(பீமன்) போட்ட சபதம் என் காதுகளில்
ஒலிக்கிறது,நீ இங்கிருந்து சென்று விடு,போய் உன் உடலில் இருக்கும் ரணங்களை
ஆற்றிக்கொள்,உனக்கு மரணமே பீமனண்ணா கையில்தான்’
அபிமன்யுவைப்பார்த்த துரியோதனன் ,‘இவனை நான் கொல்கிறேன்’ என பாணங்களை தொடுக்கிறான்.
அபிமன்யு தன் வில்லாற்றலால்
துரியோதனனை கொல்லுமளவுக்கு துணிந்து விட்டான்,அதே நேரத்தில்,தன் பெரியப்பா பீமன் போட்ட சபதம்
நினைவுக்கு வரவே,‘தாங்கள், எங்கள் பெரியப்பாவிற்கு கடன் பட்டுள்ளீர்கள் நான் உங்களை
கொல்ல முடியாது,எனவே நீங்கள் திரும்பி சென்று விடுங்கள்,தங்களின் காயத்திற்கு மருந்து
போடுங்கள்.’
துரியோதனன் தன் தாத்தா பிதாமகரிடம்,
“கர்னனை போரிட அனுமதி அளித்திருந்தால் இந்நேரம் அர்ச்சுனனை கொன்றிருப்பான்”,என கூறியதும் பீஷ்மன் தன்
கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான்,
‘அந்த ஒழுக்கம் கெட்டவனைப் பற்றிப் பேசாதே துரியோதனா! அவன்
மூலம் வரும் வெற்றி நமக்கு தேவையில்லை’
ஆ.க-
(ஜாதி வேற்றுமை அப்போதே
துவங்கிவிட்டது.பின்னாளில் கர்னன் ஒரு சத்ரிய புருஷன் என அவனுக்கே தெரியவந்தாலும்,அது அவனோடு மட்டுமே இருந்துவிட்டது.குந்தியின்
அறவழி தவறிய முறையில் பெற்ற குழந்தை கர்னன் என்பதை குந்தியால் பகிரங்கப்படுத்த
முடியவில்லை.இதற்கெல்லாம் சமுதாய நிர்பந்தங்களே காரணம்.இப்பொழுதும் இது
நீடிக்கிறதே!)
97-துரியனின் மாண்புகள்
(காண்க-சன் தொலைக்காட்சி மகாபாரத தொடர் எண்-138)
பீஷ்மனை துரியன் தெடர்ந்து
கேள்விக்கணைகளால் துளைத் தெடுக்கிறான். ‘பாண்டவர்களை கொல்லமுடியுமா முடியாதா எனக்கு நேரடியாக பதில்
சொல்லுங்கள் தாத்தா’
‘சரி நாளை நடக்க இருக்கும் போரில் நான் பாண்டவர்களை கொல்வேன்
இது சத்யம் துரியா’
‘இதோ நான் காலெல்லாம் காத்துவந்த பிரம்மச்சாரியத்தின்
மகத்துவத்தை ஒன்று திரட்டி இப்பொழுது 5 தங்க அம்புகளை தயாரித்துள்ளேன் ,நாளை ஐவரும் மாண்டுபோவது உறுதி’
‘தாத்தா இப்பொழுதுதான் தாங்கள் அஸ்த்தினாபுரத்தின் விசுவாசி
தாத்தா’
‘இரட்டை நாக்கடா உனக்கு’
இரவெல்லாம் துரியன் தூங்கவில்லை
சில நாழிகை கண்ணயர்ந்த போது அந்த தங்க அம்புகளை பாண்டவர்கள் மேல் உள்ள பாசத்தால்
பீஷ்மன் உடைத்தெரிவது போல் கனவு காண்கிறான்.
உடனே தன் தாத்தாவை அந்த நள்ளிரவில்
காணச் செல்கிறான்.
‘என்ன துரியா? இந்த நள்ளிரவில்?’
‘தாத்தா தங்களிடம் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன்’
‘சொல் துரியா’
‘தாத்தா அந்த தங்க அம்புகள் என்னிடமே இருக்கட்டுமே,நாளை தங்களிடம் போர்க்களத்தில்
அவைகளை நான் தந்து விடுகிறேன்’
‘என்னிடம் இருந்தால் என்ன?’
‘இல்லை தாத்தா,பாண்டவர்கள் தங்களை பார்த்து வேண்டினால் தங்கள் மனம் மாறினாலும் மாறிவிடும்’
‘சரி நீயே வைத்துக்கொள் இந்தா’
தங்க அம்புகள் தன்னிடம்
பாதுகாப்பாக இருப்பதால் நாளை நடக்கும் போரில் பாண்டவர்கள் தன் தாத்தாவால்
கொல்லப்படுவது உறுதி என நினைத்தான்.
இதற்கிடையே நாளை நடக்கும் போரில்
பாண்டவர்களை பீஷ்மர் கொல்லபோகும் செய்தி ஒற்றன் மூலம் பாண்டவர்களுக்கு தெரிந்து
விடுகிறது.
கிருஷ்னனின் ஆலோசனையை பாண்டவர்கள்
நாடுகின்றனர்.தர்மன் கோரிக்கை வைக்கிறான், ‘கிருஷ்னா நாளை போரில் தாத்தாவை
எதிர்த்து எங்களால்போர்
புரியமுடியாது.அவர் எங்களை கொன்றுவிடுவார் போல் தோன்றுகிறது,நீ தான் எங்களை காப்பாற்ற வேண்டும்’
‘ஆம் நாளை போரில் நீங்கள் கொல்லப்படலாம்,சரி வேறு வழி உள்ளதா என
யோசிக்கலாம்’
கிருஷ்னன் அர்ச்சுனனை அழைத்து, ‘நீ உடனே துரியனை சந்திக்க வேண்டும்,
அவனிடம் உள்ள பீஷ்மனின் ஐந்து தங்க அம்புகளை தானமாக கேட்க வேண்டும்’
அடுத்து திரவுபதியை அழைத்து , ‘உன்னால் முக்கிய காரியம் நடக்க
வேண்டும் திரவுபதி’
‘நான் என்ன செய்யவேண்டும் கிருஷ்னா?’
‘அருகில் வா சொல்கிறேன்’
கிருஷ்னன் கூறியவாறு துரவுபதி
பீஷ்மனை நோக்கி செல்கிறள்.
பீஷ்மன் காலை சந்தியவந்தனம் செய்து
கொண்டிருக்கிறான்.வந்தனம் முடியும் தறுவாயில் ,முக்காடு போட்ட திரவுபதி பீஷ்மன்
காலில் விழுகிறாள்,
‘பிதாமகரே என்னை தீர்க்க சுமங்கலியாக இருக்க வாழ்த்துங்கள்’
‘தீர்க்க சுமங்கலி பவ’
‘மீண்டும் ஒருமுறை சொல்லுங்கள்’ இப்படியாக 5 முறை
சொல்லச்சொல்கிறாள்.
‘ஏனம்மா ஐந்து முறை கேட்கிறாய்?’
‘எனக்கு ஐந்து கணவர்கள் ,எனவே ஐந்து முறை கேட்டேன்’
‘சரி,நாளை போர்க்களத்தில் நடக்கும் போரில் எது முந்துகிறது என
நாளை காணலாம்’
துரவுபதி கிருஷ்னனை சந்தித்து
பீஷ்மனிடம் வாழ்த்து பெற்றதை கூறுகிறாள்.அப்பொழுது,கிருஷ்னன்,
‘(ஆயுதங்களின்றி)எதிரிகளை வீழ்த்தும் அஸ்த்திரமான,ஒருவனுக்கு அன்பு மட்டுமே
இருந்தால் போதும். பெரியவர்களை (மாமனிதர்கள்) மதிக்கும் கலையான ஆசிபெறுதலும்,அவர் பாதங்களை வணங்குதலும்,மாபெரும் வெற்றியைத் தரும்,அதுவே அவன் வாழ்நாளை நீடிக்கும்’,என பாண்டவர்களுக்கு அறிவுறுத்துகிறான்.
அதுபோலவே,கிருஷனன் ,சமயோசிதமாக அர்ச்சுனனிடம்,‘உன் எதிரியான துரியனிடம் சென்று
அவனிடம் உள்ள தங்க அம்புகளை தானமாக கேட்டுபார்’என பணிக்கிறான்
தருமன், ‘இது நடக்கக்கூடிய காரியமா கிருஷ்னா,துரியன் தானம் செய்வானா?’
‘தர்மா! எதையும் முயற்சிக்காமல் யூகத்தில் மனதை
செலுத்தக்கூடாது,இதோ திரவுபதி முயற்சி வெற்றி பெற்றுள்ளதே?’
படைவீட்டில் துரியன், ‘தங்க அம்புகளை தாத்தாவிடம் இருந்து
வாங்கி வந்துவிட்டேன் மாமா’
சகுனி, ‘மூடனே ஏன் இந்த காரியம் செய்தாய்’
துரியன், ‘மாமா தாத்தாவை இரவுக்குள்
பாண்டவர்கள் சந்தித்தால் அவர் மனம் மாறிவிட்டால் நாம் என்ன செய்வது?,அதனால் தன்னிடம் பாதுகாப்பாக
வைத்திருந்து அவைகளை நாளை போர்க்களதில் தாத்தாவிடம் தந்துவிடலாம்’
‘உன் தாத்தா பீஷ்மரைப்ற்றி நீ அறிந்தது அவ்வளவுதான்,அவர் வாக்கு தவறமாட்டார் என்பது
உனக்கு தெரியாதா?’
இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது
அர்ச்சுனன் உள்ளே வருகிறான்.
சகுனி,அர்ச்சுனனைப்பார்த்து, ‘இங்கே
எதற்கு வந்தாய்?’
‘தர்மனண்ணா துரியனிடம் இருக்கும் 5 அம்புகளை தானமாக பெற்றுவரச் சொன்னார்’
‘தர்மனண்ணா துரியனிடம் இருக்கும் 5 அம்புகளை தானமாக பெற்றுவரச் சொன்னார்’
சகுனி, தன்னிடம் உள்ள 5 அம்புகளை
அர்ச்சுனனிடம் தந்து,
‘இந்தா 5 அம்புகள் கொண்டு போ’
‘இல்லை ,துரியனிடம் இருக்கும் தங்க அம்புகளை தானமாக பெற்றுவரச் சொன்னார்’
சகுனி,‘அவைகளை தானமாக தரமுடியாது’
‘இல்லை ,துரியனிடம் இருக்கும் தங்க அம்புகளை தானமாக பெற்றுவரச் சொன்னார்’
சகுனி,‘அவைகளை தானமாக தரமுடியாது’
துர்ச்சாதனன், ‘ம்! இன்னும் ஏன்
நிற்கிறாய் அந்த அம்புகளை வாங்கிக் கொண்டு போ’
அதற்குள் துரியன் மிகுந்த
யோசனைக்குப்பின் தன்னிடம் உள்ள 5 தங்க அம்புகளை அர்ச்சுனனிடம் தந்து, ‘கொண்டுபோ
அர்ச்சுனா’
அர்ச்சுனன் 5தங்க அம்புகளைப் பெற்றுக்
கொண்டு புறப்பட்டான்.
உடனே சகுனி குறுக்கிட்டு, ‘துரியா
உனக்கென்ன புத்தி பேதலித்துவிட்டதா?
துரியன், ‘மாமா தங்களுக்கு நினைவில் உள்ளதா? முன்பொரு நாள் கானகத்தில் கந்தர்வர்களிடம் சிறைபட்டிருந்த என்னை விடுவித்தது இந்த அர்ச்சுனன் தான்,அந்த நிகழ்ச்சி என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது அந்த உதவிக்கு நான் கைமாறு செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை பயன் படுத்திக்கொள்ளலாம் என நினைத்திருந்தேன் இன்று அது நிறைவேறியது,இப்பொழுது எனக்கு மனம் நிம்மதியாக உள்ளது,மாமா’
துரியன், ‘மாமா தங்களுக்கு நினைவில் உள்ளதா? முன்பொரு நாள் கானகத்தில் கந்தர்வர்களிடம் சிறைபட்டிருந்த என்னை விடுவித்தது இந்த அர்ச்சுனன் தான்,அந்த நிகழ்ச்சி என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது அந்த உதவிக்கு நான் கைமாறு செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை பயன் படுத்திக்கொள்ளலாம் என நினைத்திருந்தேன் இன்று அது நிறைவேறியது,இப்பொழுது எனக்கு மனம் நிம்மதியாக உள்ளது,மாமா’
துரியன் எவ்வளவு உயர்ந்த உள்ளம்
படைத்தவன் என்பதற்கு உள்ள சான்றுகளில் இது முதன்மையானது.(காண்க,சன்
தொலைக்காட்சி,மகாபாரத தொடர் எண்-138)
பொழுது புலர்ந்து விட்டது,பீஷ்மன்
துரியனை அழைத்து, ‘எங்கே அந்த அம்புகளை கொண்டுவா துரியா’
‘தாத்தா! அந்த அம்புகளை அர்ச்சுனன் தானமாக கேட்டான்
தந்துவிட்டேன் தாத்தா’
‘என்ன காரியம் செய்தாய் துரியா? ஏன் அப்படி செய்தாய்?’
‘தாத்தா ஒரு நேரத்தில் எனக்கு உதவி புரிந்த அர்ச்சுனன்
என்னிடம் வந்து தானம் கேட்கும் போது என்னால் மறுக்க முடியவில்லை தாத்தா’
‘ஒரு சத்ரியன் என்பதற்கு உதாரணமே நீ தான் துரியா,உன்னை எப்படி பாராட்டுவது என்றே
எனக்கு தெரியவில்லை’
அர்ச்சுனன் அம்புகளை தர்மனிடம்
ஒப்படைக்கிறான்.அனைவரும் ஆச்சரியப்பட்டு போனார்கள்,துரியனிடம் இவ்வளவு உயர்ந்த உள்ளம்
உள்ளதா!
கிருஷ்னன், ‘பீமா,இளவயது முதல் நீ துரியனை உன்
எதிரியாக நினைத்து பழகினாய்,அதன் விளைவாக அவனிடம் உள்ள நற்பண்புகளை உன்னால்
உணரமுடியாமல் போய்விட்டது,இப்பொழுது எல்லாம் காலம் கடந்து நடக்கிறது’
பீஷ்மனின் தொடர் தாக்குதலால்,அர்ச்சுனன் தேரோட்டியான கிருஷ்னனுக்கு
காயங்கள் ஏற்பட்டன,இதனால் வெகுண்டெழுந்த கிருஷ்னன் அர்ச்சுனன் மீது
கோபமுறுகிறான்.
‘உன்னால் பீஷ்மரை கொல்ல முடியுமா,முடியாதா?’இம்முறை அர்ச்சுனன் தாக்குதலால்
பீஷ்மனின் குதிரைகள் காயமடைந்தன ,கோபமுற்ற குதிரைகள் தறிகெட்டு ஓடின.போர்க் களத்தில் பீஷ்மன் காணாமல் போகிறான்.
8-ம் நாள் போர்க்களத்தில் பீமனை
கவுரவர்கள் சூழ்ந்து கொள்கின்றனர்.கடும் கதாயுதப் போரில் பீமன் ,10 கவுரவர்களை
கொல்கிறான்.காந்தாரிக்கும்,திருதராஷ்ட்ரனுக்கும் இது பெரும் கலக்கத்தை
ஏற்படுத்துகிறது.
ஆ.க-
பீஷ்மன்,‘இச்சை மரணம்’ வரம் பெற்றவன் என எல்லோராலும்
நம்ப படுகிறவன் ஆனல் இதை துரியோதனன் நம்புவதில்லை.இது ஒரு மூட நம்பிக்கை என தன்
தந்தையிடமே பல முறை கூறியிருக்கின்றான்.அப்படி ஒரு மனிதன் இருக்க இயலாது,பிறப்பவர்கள் எல்லாம் ஒரு
காலத்தில் இறந்து தான் ஆகவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்,இதே கருத்தை பகவத் கீதையில்
கிருஷ்னன் உபதேசமாக அர்ச்சுனனுக்கு கூறுகிறான்.ஆனால் ஏனோ மக்கள் மத்தியில்
இன்றளவும் மூட நம்பிக்கைகளுக்கு மட்டும் அவ்வளவு மவுசு.
(பீஷ்மன் ஒரு மாபெரும் பல சாலி தன்
உடலை பல பயிற்சிகளுக்கு உட்படுத்தி அம்புகளாலும் துளைக்க முடியாத உடல் பலத்தை
பெற்றவன்,
இப்பொழுதும் இதுபோன்று கலைகள்
குங்பு,கராத்தே போன்ற உடற் பயிற்சி மையங்களில் கற்பிக்கப்படுகிறது.
ஆகவே இது அந்நாளில் ஒரு வரம் என மக்களால் பேசப்பட்டது.)
-----
பீஷ்மனை கொல்ல அர்ச்சுனனும்
தர்மனும் கிருஷ்னனோடு கலந்து ஆலோசனை செய்கின்றனர்.பீஷ்மனைக் கொன்றால்தான் தமக்கு
வெற்றி எனும் கோணத்தில் ஆலோசனை செய்கின்றனர்.
இதை கவனித்துக் கொண்டிருந்த திரவுபதி,‘நீங்கள் யாரும் போர்க்களம் செல்ல
வேண்டாம்,நானே செல்கிறேன்,உங்களால் யாரையும் கொல்ல முடியாது.காரணம்,தங்கள் எதிரே உங்களுக்கு அண்ணன்
தம்பி உறவுகள் தான் கண்ணில் தெரியும் அரசவையில் மானபங்கப் படுத்தப்பட்டது நான்
தானே?,என்னைப்பற்றி தங்களுக்கு என்ன கவலை?நான் போட்ட சபதத்தை நானே நிறை வேற்றிக் கொள்கிறேன்’மேலும் அவள்,
‘தன் கூந்தலை பற்றி இழுத்துவந்த
துர்ச்சாதனனின் கைகளை ஒடிக்க வேண்டும்,தன் மார்பை தொட்டு புடவையை உருவியவன் மார்பை
கிழித்து அதிலிருந்து குருதியை தடவி தன் அவிழ்ந்த கூந்தலை முடிக்க வேண்டும்.’தன்
கணவர்களை திரவுபதி உசுப்பேற்றுகிறாள்
‘திரவுபதி ஒரு பெண்ணுக்கு இவ்வளவு ரத்த வெறியா? வேண்டாம் திரவுபதி பழி வாங்கலில்
ஒரு பெண்ணுக்கு இவ்வளவு ரத்த வெறி கொண்ட
பெண்ணை உலகம் இதுவரை கண்டதில்லை.’ கிருஷ்னன் திரவுபதியைப்பார்த்து
அசந்து போகிறான்.
‘கிருஷ்னா ! நீயும் ஒரு ஆணாதிக்கமுள்ள மனிதன் என்பதை இங்கு காட்ட விரும்புகிறாய்’
‘இல்லை திரவுபதி,உன் பாதிப்பபை நான்
அறிவேன்’
தர்மனையும்,அர்ச்சுனனையும் பார்த்த கிருஷ்னன்
உடனே,‘இது சரியான யோசனை அப்படியே திரவுபதியை போர்க்களம்
அனுப்பலாம்’
‘ஒரு ஸ்த்ரீயை போர்க்களம் அனுப்புவதா? உலகம் நம்மை தூற்றாதா?இது கேவலம் அல்லவா?’ தர்மனும்,அர்ச்சுனனும் ஒரு சேர அதிர்ச்சி
கலந்த வியப்பை தெரிவிக்கின்றனர்.
கிருஷ்னன், ‘ஆண்களால் முடியாத
செயல்களை பெண்களால் முடியும் என்றால் பெண்களிடமே விட்டுவிடவேண்டியது தானே’
‘கிருஷ்னா விளையாட நேரமா இது’
கிருஷ்னன்,பீஷ்மனைக் கொல்ல ஒரு யோசனை
தெரிவிக்கிறான்,
‘பீஷ்மனால் அவமானப்பட்ட காசி ராஜன்
மகள் அம்பை தற்போது சிகண்டியாக, துருபதன் மகளாக, பீஷ்மனைக் கொல்வதற்காகவே மறுபிறவி
எடுத்துள்ளாள்,இது பீஷ்மனுக்கும் தெரியும்.சிகண்டியால் மட்டுமே பீஷ்மனைக் கொல்ல
மகாதேவனிடம் வரம் பெற்றவள். சிகண்டியை போர்க்களத்தில் பீஷ்மனுக்கு எதிராக நிறுத்த முயலுங்கள்’
கிருஷ்னனின் யோசனையில் அன்று இரவு தர்மனும்,அர்ச்சுனனும் பீஷ்மனை
சந்திக்கின்றனர்.
‘பிதாமகரே,வணங்குகிறோம்’,பதிலுக்கு பிதாமகர், நீண்ட ஆயுளுடன் வாழ
வாழ்த்துகிறார்.
‘என்ன இந்நேரம் என்னை காணவருகின்றீர்,நான் என்ன செய்ய முடியும்? போர்க்களத்தில் எதிரெதிர் அணியில்
போரிடும் நாம் சந்திப்பது தவறான யூகத்துக்கு வழி கோலுமே,என் செல்வங்களே!’
‘பிதாமகரே!போர் நீடித்துக்கொண்டே இருக்கிறது,தங்களின் இச்சைமரணம் பற்றி நாங்கள்
அறிவோம்.எங்களுக்கும் தாங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகின்றீர்,முதலில் எங்களுக்கு வழங்கிய வாழ்த்தை
திரும்ப பெறுங்கள்’
‘அதெப்படி முடியும் நான் போட்ட சபதத்தையும்,கொடுத்த வரங்களையும் திரும்ப பெற
இயலாதே’
‘போரில் வெற்றித்தோல்வியை நிர்னயிப்பது மனித மரணங்கள் தானே?’
‘ஆம் அது எனக்கும் தெரியும் கண்மணிகளே’
‘தங்களை வெல்வதற்கு(கொல்வதற்கு?) தாங்களே வழி சொல்லுங்கள்
பிதாமகரே?’
‘என் காலம் முடிவுக்கு
வந்துவிட்டது,கண்மணிகளே,இனி அஸ்த்தினாபுரம் தங்கள் ஆளுகைக்கு வந்துவிடும், போர்க் களத்தில்
என் எதிரே ஒரு பெண்ணை நிறுத்துங்கள்.உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்’
கிருஷ்னன் கூறியதும்,அதேபோன்று பிதாமகர் சொன்னதும்
ஒத்துப்போகிறதை தர்மனும்,அர்ச்சுனனும் ஒரு சேர உணர்ந்தனர்.இருவரும் சிகண்டியை
சந்தித்தனர்.சிகண்டியும்,
‘இதற்காகத்தானே காத்திருக்கின்றேன் குந்தி மைந்தர்களே!ஆனால்
நீங்கள் என் தங்கையின் கணவர்கள் அதனால் தான் நான் யோசிக்கின்றேன்’
தங்களின் சபதம் பீஷ்மரைக் கொல்வது,தன் தங்கையின் சபதம் துர்ச்சாதனன்
மார்பை கிழிப்பது.ஆக கவுரவர்களின் தலைவர்களை கொன்றால்தான் போர் முடிவுக்கு வரும்.
அன்று 9-ம் நாள் போர்.அர்ச்சுனன்
தேரில் சிகண்டி.எதிரில் துரியோதனன்,
‘அர்ச்சுனன் தேரில் ஒரு பெண் போல் தோன்றுகிறதே’தன் தேரோட்டியிடம் கூறிக் கொண்ட துரியோதனன் தன் தேரை
பீஷ்மரிடம் ஓட்டச் சொல்கிறான்.
‘பிதாமகரே நேற்று இரவு தங்களை அர்ச்சுனனும்,தர்மனும் எதற்காக தங்களை காணவந்தார்கள்?’
‘என்னுடைய வாழ்த்துக்களை திரும்ப பெறுமாறு
வற்புறுத்தினார்கள்’
‘தாங்கள் என்ன சொன்னீர்கள்?’
‘கொடுத்ததை திரும்ப பெறும் பழக்கம் எனக்கு இல்லை
என்றேன்’ மேலும் பீஷ்மன் துரியோதனனிடம்,
‘துரியோதனா! இப்பொழுதும் பிரச்சினைக்கு தீர்வு
உன்னிடம் தான் உள்ளது.அவர்கள் கேட்கும் ஐந்து கிராமங்களையாவது தந்துவிடு,இதனால் பல உயிர்கள் போரில் மடிவதை தடுக்கலாம்.’
‘முடியாது பிதாமகரே அஸ்த்தினாபும் அழிந்தாலும் நானே
மரணித்தாலும் அது நடக்காது’
அன்று மாலை போர்க்களத்தை விட்டு
கிருஷ்னன் செல்ல ஆயத்தமாகிறான்,அந்தேரம் பீஷ்மன் கிருஷ்னனை
சந்தித்து ஒரு வேண்டுகோள் விடுக்கிறான், ‘கிருஷ்னா நீ சர்வ வல்லமை படைத்தவன் என உலகமே போற்றுகிறதே! நான், கேவலம் ஒரு பெண்ணிடம் போரிட்டு சாகவேண்டுமா ?அந்த சாபத்லி ருந்து என்னை விடுவி கோவிந்தா’
‘அதெப்படி முடியும் பீஷ்மரே,அன்பு மட்டுமே தர்மம் இதை பின் பற்ற வேண்டும்,என உலக மக்களுக்கு சொல்லிக் கொண்டு வருகிறேன் ,சத்ரியர்கள் என் பேச்சை கேட்க செவி சாய்ப்பதில்லை,நீங்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டு சபதமும்,சாபமும் போட்டுக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டு
இருக்கின்றீர்கள்,என்னிடம் எந்த மாய சக்தியும் இல்லை’(6)இதுதான் கிருஷ்னனைப் பற்றிய கிருஷ்னனே கூறும் உண்மை
ஆ.க-
(இங்கே வாசகர்கள் கவனிக்க வேண்டும்
,கிருஷ்னவதாரம் எனும் பொய் பிரச்சாரத்தால் மக்களை
நம்பவைத்து அதனால் மக்களிடையே பயம் எனும் பக்தி உருவாக்கி இன்றுள்ள நிலை யில்
பிராமண இடைத்தரகர்கள் வாழ்கின்றனர்.)
அன்று இரவு பீஷ்மனை வீழ்த்தும்
வ்யூகம் அமைக்க்படுகிறது.கிருஷ்னன்
தலைமையில் தர்மன்,அவன் தம்பிகள்,துருபதன்,மற்றும் திருஷ்ட்டதூமனன் ஆகியோர்
கலந்துகொள்கின்றனர்.
ஒரு கட்டத்தில் திருஷ்ட்டதூமனன்
ஆவேசம் அடைந்து பீஷ்மனை கிழவன் என மரியாதை குறைவாக பேசி விடுகிறான்.தர்மனுக்கு
கோபம் வந்து விடுகிறது,
‘திரஷ்ட்டதூமனா,நாவை அடக்கு
பிதாமகரை மரியாதையின்றி பேசாசதே!’
‘அப்படியானால் பீஷ்மனின் காலில் விழச்சொல்கின்றீர்களா?’
‘அப்படியானால் பீஷ்மனின் காலில் விழச்சொல்கின்றீர்களா?’
உடனே கிருஷ்னன், ‘அப்படி செய்தால்
தான் என்ன தவறு?அவரைப்போன்று மகாத்மா காலில் விழுவது தப்பில்லையே?’
துஷ்ட்டதூமன் வாய் மூடிக்கொண்டான்.
ஆ.க-
(வாசகர்கள் இங்கே முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.யதுகுல மன்னனா
கிருஷ்னன்,ஒரு பண்பட்ட சமுகத்தைச் சார்ந்தவன் என்பதை இங்கே நாம் உணர வேண்டும்,
என்பதே மகாபாரத கதையின் நோக்கம்.பெரியவர்களை வணங்குவது,அவர்களிடம் வாழ்த்துக்களை
பெறுவது என்பது யாதவ மக்களின் பண்பாடு என சத்ரியர்களுக்கு உணர்த்துகிறான்.)
மனிதர்களை மனிதர்களே ஆளப்பிறந்த
வர்க்கம் தான் சத்ரிய வர்கம்.
மகாபாரத காலத்திலிருந்த்து புகழ்
பெற்ற சத்ரிய சமஸ்த்தானங்கள்,-ராஜஸ்த்தானின் சித்தூர்,ஜோத்பூர்,ஜெய்ப்பூர்,ஜெய்சால்மர்,,அஜ்மீர்,உதய்ப்பூர்,
பஞ்சாப் பாட்டியாலா,காஷ்மீரத்தின் காசியப் அரண்மனை,
பிகாரின் பாட்னா,(பாடலி புத்ரம்)
உத்தர்பிரதேசத்தின் அய்யோத்தி,அலகாபாத்,மதுரா,காசி,
மத்யபிரதேசத்தின் குவாலியர்,
கர்நாடகத்தின் விஜயநகரம்,மைசூர்,
ஆந்த்ராவின் கோல்கொண்டா,காகிநாடா(காகாட்யம்),
குஜராத்தின்-ஜீனார்காட்,துவாரகா(அழிந்துவிட்டது)சோமநாதபுரம்,
ஒரிசாவின் பூரி,கோனார்க்,
தமிழ்நாட்டில் ராமநாதபுரம்,மதுரை,காஞ்சிபுரம்,
கேரளாவின் பத்மநாபபுரம்,மார்த்தாண்டம்,இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பரவியுள்ளனர்.
வரலாற்றில் ஒவ்வொரு நாட்டிலும்
சத்ரிய மன்னர்கள் தோன்றி மக்களை ஆட்டிப் படைத்துள்ளனர்-மாவீரன் அலேக்சாண்டர்,சீசர்,செங்கிஸ்கான்,தைமூர்,அசோகன்,பின்னாளில் இஸ்லாம் மன்னர்களான கஜனி முகமது,பாபர்,அக்பர்,அவுரங்கசீப் 19-ம் நூற்றாண்டின் முசோலினி,ஹிட்லர்,ஸ்டாலின்,)
98-பீஷ்மன் வீழ்ச்சி
அன்று 10 –ம் நாள்
(இதன் தொடரை புதிய அஞ்சல்=12-ல் காணவும்)
No comments:
Post a Comment