Tuesday, January 10, 2017

அறம் காத்த வர்மாக்கள் 16



132-மதக் கோட்பாடுகள்

மதம் என்பது கடவுளை வனங்கும் கோட்பாடு.கடவுள் என்பவர் எப்படி வரையறுக்கப் பட்டிருக்க வேண்டும்.இதோ
1-கடவுள் என்பவருக்கு பிறப்பு,இறப்பு இல்லை.
2-கடவுள் உருவ மற்றவர்
3-கடவுளுக்கு குடும்பம் கிடையாது
4-கடவுளுக்கு மனைவிகிடையாது
5-கடவுளுக்கு வாரிசு கிடையாது.
6-மரம்,மண்,
ஆகாயத்தில் மனிதனுக்கு தெரியும் சூரியன்,சந்திரன்,நட்ச்சதிரம்,மேகம் போன்றவைகளை மக்கள் நம்பினார்கள்.தங்களை வாழவைக்கும் கடவுளர்களாக நினத்து வழி பட்டனர்   

இந்து மதத்தில் உள்ள கடவுளர்க்கு எல்லாம் மனைவிகள் உண்டு,அதுவும்அதில் முக்கிய கடவுளர்களாக திகழும் சிவனுக்கு இரண்டு மனைவிகள்,இரண்டு பிள்ளைகள்.சிவனுக்கு மறு அவதாரம் இல்லை,இவர் இறப்புக்கு உண்டான கடவுள்.இது வைணவர்கள் சொல்லித்திரியும் சைவர்களை திசைத்திருப்பி வைணவத்திற்கு மாறச் சொல்லும் ஒரு திரிபு வாதக் கொள்கை என சைவத்தில் உறுதி கொண்டவர்கள் கோட்பாடு.    

விஷ்னுவுக்கு இரன்டு மனைவிகள்,பிள்ளைகள் இல்லை.யுகங்கள் தோறும் பத்து அவதாரங்கள் எடுத்தவர் என்பதாக நிறைய கட்டுக்கதைகள் புராணங்களாக உள்ளன.

எல்லா மதங்களும்,மக்கள் கடவுளை நேரடியாக வணங்க கூடாது என வலியுறுத்துகின்றன.அதாவது கடவுளுக்கும், வணங்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு இடைத்தரகன் (அர்ச்சகர்)வேண்டும் என வலியுறுத்துகின்றன.எல்லா மதங்களுக்கும் பொது வழிபாட்டுத் தலங்கள் உண்டு,.

இந்து மதத்திற்கும் மற்ற மதங்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்ன வெனில்,மனிதன் கடவுளை அடைய ஊடகங்கள் தேவை அதாவது,சிலை,மரம்,நாய்,பசு,எலி,யானை,பாம்பு போன்றவைகள் இந்துக்களுக்கு புனிதமானவைகள்.சிலைகளுக்கு படையல் போடுவது,அதற்கு விலையுயர்ந்த ஆபரணங்களை பூட்டி அழகு பார்ப்பது,அதைப்பார்த்து தோப்புக்கரணம் போடுவது,தலையில் குட்டிக்கொள்வது,கன்னத்தில் போட்டுக்கொள்வது,தரையில் உழுந்து புரள்வது,மொட்டைபோடுவது,விரதம் இருப்பது,குளித்துவிட்டு வணங்குவது,வணங்கிவிட்டு சாப்பிடுவது,இதை தினமும் செய்யும் அல்லது செய்யச்சொல்லும் இந்துமதம் மற்ற மதங்களை விட இப்படித்தான் மாறுபட்டது என்று சொல்லப்படுகிறது.

மற்ற மதங்கள் கடவுளை எப்படி வணங்குகிறார்கள் என பார்க்கலாம்.
பிறப்புக்கும்,இறப்புக்கும் ஒரே கடவுள்.கடவுளை காண முடியாது.அதாவது சிலை வடிவம் இல்லை.கடவுளின் தூதர்களை மட்டுமே வணங்க(இயேசு,முகமது நபி) வேண்டும். பொது வழி பாட்டுத்தலங்களுக்கு (ஆலயங்கள்) பூட்டு சாவி இல்லை.காரணம் விலை உயர்ந்த பொருட்கள் கோயிலில் இருக்க வேண்டிய அவசியமில்லை.

மொத்தத்தில் உண்டியல் தேவை இல்லை.கோயில்களில் எதற்கு உண்டியல் அப்பாவி உழைப்பாளி பணத்தை கொள்ளையடிக்க இந்துமத இடைத்தரகர்கள் கண்டுபிடித்த ஒரு சுலபமான ஏமாற்றுத் தொழில்.

(அந்நாளில் இந்திய எல்லை என்பது இன்றய ஆப்கன் நாட்டு எல்லை உள்ளடக்கியது.இந்து மதத்துக்குள் புரட்சி ஏற்பட்ட காலம்.உலக வரலாற்றிலே ஒவ்வொரு 500 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களின் மன மாற்றம் நிகழ்ந்துள்ளது.இதனால் புதிய மதங்கள் உருவாகும்.

ஆரியர்கள் விஷ்னுவை கடவுளாக வணங்க பல புராண கதைகளை தமிழர்கள் மத்தியில் விதைத்தனர்.500 ஆண்டுகளாக ராமன் கதைகளும்,கிருஷ்னன் கதைகளும் கேட்ட மக்கள் அந்த கடவுளர்களை தொழ பின்பற்றப்படும் சம்பிரதாய சடங்குகளும்,பூஜைகளும் (மக்கள் மத்தியில் ஒரு வெறுப்பு தட்டியது. அந்த கால கட்டத்தில் கவுதம புத்தன்(2500 ஆண்டுகளுக்கு முன்) எனும் மன்னன் ஆரியர்களின் மந்திரம்,மாயம் எனும் பித்தலாட்ட பொய் புளுகு வேலைகளுக்கு முடிவுகட்ட மக்கள் பாராட்டும் அளவுக்கு புதிய சித்தாந்தத்தை  உருவாக்கினான்.

 ‘ஆசைகளை ஒழித்தாலே மனிதன் மகிழ்சியாக வாழலாம்’   எனும் புதிய கோட்பாடு பிராமணர்களின் பிழைப்புக்கு பாதிப்பானது.
தமிழர்களின் இயற்கை(சிவ சக்தி )வழிபாட்டிற்கும்,பிராமணர்களின் விஷ்னு சிலை வழிபாட்டிற்கும் தடை ஏற்பட்டது.உழைக்கும் மக்களின் பொருள் உற்பத்தி உழைக்காமல் உண்டு வாழும் பிராமணர்களுக்கு கிடைக்காமல் போனது.

அந்த கால கட்டத்தில் (2000-ம் ஆண்டுகளுக்கு முன்)மேற்கத்திய மாநிலங்களான கிரீஸ்,இத்தாலி இன்றய இஸ்ரேல் போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டது.

3500-ம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் சைவ இனம்
3000-ம் ஆண்டுகளுக்குப் பின் தமிழ்-ஆரியம் கலந்த இந்து மதம்,(வைணவம்)
2500-ம் ஆண்டுகளுக்குப் பின் புத்தமதம்,அதே கால கட்டத்தில் ஜைன மதம்
2000-ம் ஆண்டுகளில் கிறித்துவம்
1500-ம்ஆண்டுகளில் இஸ்லாம்(சுன்னி,குர்த்)
16-ம் நூற்றாண்டுகளில் சிக் மதம்
17-ம் நூற்றாண்டில் இஸ்லாம் மதம் சிதைவுற்று ஷியா மதம் தோன்றியது.
(மக்களை கடும் மதக்கட்டுப்பாட்டிலிருந்து சற்று சதந்திர காற்றை சுவாசாக்க ஏதுவாக உருவாக்கப்பட்டது தான் ஷியா இஸ்லாமிய மதம்.)

அதன் பிறகு உலகில் இன்று வரை இன்னொறு புதிய மதம் உருவாக வில்லை.ஆனால் 19-ம் நூற்றாண்டு(1850ப்பின்) மதமற்ற புதிய பகுத்தறிவு கோட்பாடுகள்,உலகில் செர்மனி,பிரான்சு,ரஷ்யா,சீனா,இந்தியா(தமிழக பெரியார் )போன்ற நாடுகளில் மனித நேயமிக்க பொதுவுடைமை கொள்கைள் பரவின,தற்பொழுது பொதுவுடைமை கொள்கைக்கும் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.)

19-ம் நூற்றான்டு மத்தியில் உலகில் நிறைய அறிவியல் கண்டுபிடிப்புகள் தோன்றின.சுமார் 200 ஆண்டுகளில் தகவல் தொடர்பு மற்றும் தரை ,வான் வழி போக்குவரத்தில் அசுரவேகம் பெற்றுள்ளது.

இந்த அறிவியல் வளர்ச்சியில் தமிழரின் பங்கு எதுவுமே இல்லை.ஆனால் உலகில் பழமையான மற்றும் முதன்மையான இனங்களில் தமிழினமும் ஒன்று.  இதிலிருந்து என்ன தெரிகிறது?தமிழினம் சுய சிந்தனையற்றது,ஆனால் அறம் தவறாது வாழ்வியல் சிந்தனை கொண்டவர்கள்.அதனால் தான் இன்னும் தமிழினம் உயிர் வாழ்கிறது.அதே நேரத்தில் மற்ற மனித இனத்தின் மிருகத்தனமான தாக்குதலை தாங்க அல்லது தடுக்க முடியாமல் செத்து மடிகிறது.

(ஆங்கிலம் அப்படி அல்ல.பல எழுத்துக்களை ஒன்றிணைத்தால் தான் ஒரு முழு ஒலி உச்சரிப்புக் கிடைக்கும்.ஆங்கிலத்தை ஒவ்வொரு எழுத்தாக இணைத்து எப்படி உச்சரிப்பு உண்டாகிறது என்பது நாம் அறிந்ததே.தமிழில் நாம் 12 உயிர் எழுத்துக்களையும் அதனை தொடர்ந்து 247எழுத்தின் வடிவங்களையும்,உச்சரிக்க தெரிந்தால் 30நாளில் தமிழ் நூல்களைப் படிப்பதில் புலமை பெறுவதுடன்,வார்த்தைகளின் பொருளையும் புரிந்து கொள்ளலாம்.இது பிற மொழிக்காரர்களுக்கும் பொருந்தும்.

                                         
ஆனால் ஆங்கிலத்தை, பிறமொழிக் காரர்களாகிய நாம், 15 ஆண்டுகள் கற்றாலும் அதைப் புரிந்து கொண்டு பேசுவது கடினம்.இதை நாம் அனுபவ பூர்வமாக உணருகிறோம்.

எதை நாம் அடைய நினைக்கிறோமோ அதை அடைந்து விட்டால்,அதன் மீது வைத்திருந்த ஆசை குறையும்.         
இது மனித இயல்பு.அதைப்போல நாம் கற்க நினைக்கும் தமிழை விரைந்து புரிந்து கொள்ளும் தன்மை உடையது ,இதனால் அதன் மீது பற்று குறைகிறது.அதே நேரத்தில் ஆங்கில மொழியின் உச்சரிப்பு கோர்ப்பு கடினமாக உள்ளதால் அதில் புலமை அடைய வெகு காலமாகிறது.எனவே நமக்கு ஆங்கில மோகம் அதிகமாகிறது.) 
சமய இலக்கியங்கள் என்பது, தமிழரல்லாத பிற இனத்தவர் தமிழைக் கற்றுக்கொண்டு இயற்றிய பாடல்கள் மூலம் சமண,மற்றும் புத்த மதங்கள் தமிழ் இந்துக்களிடையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே பரவ ஆரம்பித்தது.
பின்னாளில் கிறித்துவ மற்றும் இசுலாம் மதங்களும் பரவுவதற்கு ஏதுவாக தேம்பாவணி (கிறித்துவ இலக்கியம்) சீறாப்புராணம் (இசுலாம் இலக்கியம்) போன்ற சமய இலக்கியங்கள் தோன்றின. 
                                  
133-அங்கோர் வாட்

கம்போடியாவில் அங்கோர்வாட் எனும் மிகப் பிரம்மாண்டமான தமிழ்க் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் சிவன்கோயில் இன்றும் உள்ளது. கம்போடிய எழுத்துக்கள்,தமிழைப் போன்ற வட்டெழுத்துக்கள்.இவை ஒரிய மொழியினத்தைச் சார்ந்தது.அசோகர் காலத்தில் ஒரியாவில் புத்த மதம்பரவியது.கலிங்கத்தில் (ஒடிசாவில்) அசோகர்காலத்திய முந்தய மன்னன் சூரியவர்மன்.  இவன் ராமனுடைய முன்னோர்களான ருத்தரவர்மனின் வழித்தோன்றல்

இன்று தமிழ்நாட்டில் வன்னியர் குலசத்திரியர் எனவும் தெலுங்கில் அக்னிகுல சத்ரியர் எனவும் பெயர் கொண்ட முன்னோர்கள் தான் இவர்கள்,காஞ்சியை ஆண்ட நரசிம்மவர்மனின் முன்னோர்கள்.மன்னர் அசோகர் முடிதுறந்து புத்தமத போதனையை ஏற்று ஒடிசாவில் புத்தமதம் பரவ வழி வகுத்தார்.

அது சரி,அசோகர் ஒடிசாமீது (கலிங்கம்) ஏன் படையெடுத்தார்? யாருக்கும் அடிபணிய மறுக்கும் சத்ரிய குணம் கொண்ட வர்மாக்கள் (வன்னியர்கள்) வட இந்திய மண்ணைச் சார்ந்த குப்தர்களின் பங்காளிகளே.
சாலிவாகனர்கள் பங்காளிச் சண்டையால் சிதறுண்டவர்களே.பல இனங்களாக பல சாதிகளாக இன்று இந்தியா முழுவதும் பரவியுள்ளனர்.

ராஜபுத்திரர்கள்,படேல்,மார்வாரி(ராஜஸ்தான்,குஜராத்)
குப்தர்கள்,மிஸ்ரா,ஓஸ்வால்,தாகூர்,தாக்ரே,யாதவ்,ஜாட்,குர்மி(உத்தர்பிரதேஷ்,அரியாணா,மகாராட்ரா,மத்தியபிரதேஷ்,,பீகார்)
நாயக்மற்றும்வர்மாக்கள்(ஒடிசா,சதிஷ்கர்)
வன்னியர்,அக்னிகுலசத்ரியர்,ராஜாக்கள்,சாளுக்கியர்,கவுடாக்கள்,நாயர்,மேனன்(ஆந்தரா,தமிழ்நாடு,கர்நாடகா,கேரளா)

மேல குறிப்பிடப்பட்ட இனங்களில் ஒன்றோடு இணைந்து இருப்பவர்கள்,யாதவா,ஒய்சலா,கோனார்,இடையர்,பிள்ளை.
தென்னிந்தியாவின் பூர்வ குடிமக்கள்  யாராம்? திருநெல்வேலி சைவத் தமிழர்கள் அதாவது பிள்ளைமார்.நாடார்,கேரளாவின் மேனன்கள்,கர்நாடகாவின் உடையார்கள், லிங்காயத்துகள்.வட தமிழ்நாட்டின் முதலியார்கள்,இவர்கள் அனைவரையும் இதிகாசங்கள் இணைத்துவிட்டன.சைவத்தை வெளிப்படுத்தும் விதமாக நெற்றியில் இட்டுக் கொள்ளும் மூன்று பட்டைகளும்,வைணவத்தை வெளிப்படுத்தும் நெடுக்காக அணியும் மூன்று கோடுகள் கொண்ட நாமம்-பல மொழிகள் சார்ந்த இனங்களாக இருந்தாலும் இந்த இரண்டு வகை ஆரியக் குழுக்களில் அனைத்து இந்துக்களும்  அடங்குவர்

உலக வரலாறுகளை கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை நன்கு புலப்படும். ஒரு இனம் இன்னொரு இனத்தை எதிர்த்து போரிடும் போது தோல்வியுற்ற இனத்தின் மீது மொழியை திணிப்பதும் பழக்கவழக்கங்களை மாற்றச் செய்வதும் தவிர்க்க முடியாத செயல்களாகிவிட்டன.

சிலவரலாற்று ஆசிரியர்கள் இப்பொழுதுள்ள சமுக அமைப்புகளை வைத்து சில உண்மைகளை மறைத்து அல்லது அறியாமையின் விளைவால், ஒரு இனத்தின் செயல்பாடுகளை கொச்சைப் படுத்துவதும் அல்லது சிறுமைபடுத்தி எழுதி அதைரசிப்பதும் வே(வா)டிக்கையாகி விட்டது.

கலிங்கப் போரில் மனம்மாறிய பின்னர் அசோகர் வழிகாட்டுதலின் பெயரில் இலங்கை,பர்மா,தாய்லாந்து,இந்தோனிசியா,வியட்நாம் கம்போடியா மற்றும் சப்பான் வரை புத்தமதம் பரவ வழி வகுத்தார்.

மதத்தால் வர்மா(வன்னியர்) இனம் இந்து வர்மா,புத்த வர்மா என இனம் இரண்டுபட்டது சாதியும் நான்கானது இதன் விளைவாக இன்றும் தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மதபூசல்கள் நடந்து வருகின்றன.   கம்போடியாவில் குடியேறிய வர்மாக்கள் பழங்குடி இனத்தவரை ஒடுக்கி சைவமத்ததை நிலை நாட்டியிருந்தார்கள். அங்கோர்வாட் என அழைக்கப்படும் பிரம்மாண்டமான சிவதலத்தை நிர்மானித்தவர்கள்.இந்திய மண்ணில் நடந்த பங்காளிச் சண்டை கம்போடியாவிலும் நடந்தது பின்னாளில் புத்தமதத்தை தழுவிய சூரிய வர்மனின் வம்சா வழியினரான செயவர்மன் கம்போடியவில் புத்த மதத்தை பரப்பினான்.

அங்கோர்வாட்டில் இன்று புத்தர் சிலை வழிப்பாடு நடக்கிறது.இதே போன்று இந்தோனிசியாவிலுள்ள போடோபுதூரில் தமிழகத்தில்  காணப்படும் கோயில் கோபுரக் கலையை ஒட்டிய பல கோபுரங்களைக் காணலாம்.புத்தமதக் கொள்கைப்படி சிலை வழிபாடும் கோயில் கோபுரங்களும் அமைத்தல் கூடாது. ஆனால் இதை தங்கள் பிழைப்பிற்கு  மூலக் கொள்கையாக அமைத்துக் கொண்ட ஆரியர்கள் தங்கள் பிழைப்புக்கு பாதகம் ஏற்படும் என அஞ்சினர்.

2500 ம் ஆண்டுகளுக்கு முன்னர்(கி.மு 500-ஆண்டுகளுக்கு முன்)இந்தியாவை விட்டு மதத்தைப் பரப்ப அண்டை நாடுகள் மட்டுமல்ல தூரக் கிழக்கு ஆசிய நடுகளுக்கும் புத்த துறவிகள் சென்றனர். ஆரியர்களும் அவர்களை பின் தொடர்ந்தனர்.இடையர் மற்றும் வன்னியர்களின் துணையோடு,தூரக் கிழக்காசிய நாடுகளில் இதற்கு முன்(2500-ஆண்டுகளுக்குமுன்)    தமிழர்களின் படையெடுப்பால் சைவ மதமும்,இடையர்களின்(யாதவர்கள்) துணையால் வைணவ மதமும் பரவியிருந்தது.
                                   
134-வேலாயுதம்

உலகில், ஒருகாலத்தில் உடல் பலம் வாய்ந்த மக்களில் தமிழினமும் ஒன்றாகத் திகழ்ந்திருந்தது.எல்லையைக் கடக்கத் தெரிந்த தமிழர்களுக்கு தங்கள் எல்லைக்குள் யாரைவிடலாம் யாரைவிடக் கூடாது என வியூகம் வகுக்க வழித் தெரிந்திருக்கவில்லை.

இந்தியா முழுவதும் பரவியிருந்த தமிழர்கள் இந்தியாவின் வட எல்லைப் பகுதியிலிருந்து உள்ளே நுழைந்த வெள்ளை மனிதர்களை ஆச்சரியத்தோடு வரவேற்றார்களே தவிர எதிர்த்து போரிடவில்லை.போரிட முடியவில்லை.
எதிர்க்க முடியாததற்கு காரணம் இல்லாமல் இல்லை. நம்மவர்கள் ஆடுமாடுகளும் வேல்,கம்பு ஆயுதங்களும் மட்டுமே தற்காப்பு ஆயுதங்களாக வைத்திருந்தனர்.ஆனால் வந்தவர்களோ குதிரை மற்றும் வில்அம்பு வைத்திருந்தனர்.
எதிரியை 100 அடிதூரத்திலிருந்து தாக்க வல்லது வில்அம்பு ஆயுதம். ஆனால் வேல் ஆயுதம் எதிரி, வெறும் 10 அடிக்குள்ளே இருந்தால் மட்டுமே தாக்க முடியும்.

இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள் ஏன்? எப்படி? நம் இனம் இன்றும் அடிமைப்பட்டுக் கிடப்பதை.அந்நாளில் கூடப் பிறந்தவனைக் காட்டிக் கொடுத்த இனம்தான் தமிழினம்.அதான் ராமாயணத்தில் வரும் விபிஷ்னன்.
உலகில் உடன் பிறந்தவனை மற்ற இனத்துக்கு காட்டிக் கொடுக்கும் இனம்தான் அறத் தமிழன் ,ஈனத் தமிழன்.இப்படி இந்தப் போக்கிலே வைத்தால் தான் நாமெல்லாம் சுகமாக வாழ முடியும் என உணர்ந்த மற்ற இனம் இயற்றிய பாடல்கள் பழமொழிகள் ஏராளம். அவற்றில் ஒரு சில  பழமொழிகளைப் பார்ப்போம்-

1-வந்தாரை வாவென்று வரவேற்று வாழவைக்கும் தமிழர்.(இளிச்சவாய்த் தமிழர்)

2-யாதும் ஊரே யாவரும் கேளீர்.(அடிமைத் தமிழர்)

3-ஊர்ப்பிள்யை ஊட்டி வளர்த்தால் தாம்பிள்ளை தானா வளரும்.(ஏமாளித் தமிழர்)

4-இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் (துப்பு இல்லா தமிழர்)

5-வறுமையிலும் செம்மை-(வக்கில்லாத தமிழர்) இதில் சொல்லிக்கொள்வதில் என்ன பெருமை வேண்டியுள்ளது?   

இந்திய இன மனிதர்களில் முரட்டுத் தனமும்,மூட நம்பிக்கையும் நிறைந்த இனங்கள் யாதவா மற்றும் வன்னியர் இனங்கள்.இதனை நன்கு உணர்ந்த பிரமணர்கள்,தங்கள் வாழ்வாதாரங்களுக்கு இவர்களைப் பயன்படுத்திக் கொள்ள பல  யுக்திகளைக் கையாண்டனர்.

நமது ஆய்வின் நோக்கமே இந்தியாவில் தீண்டத்தகாத ஒடுக்கப்பட்ட இனம் இந்தியாவில் எப்படிதோன்றியது என்பதுதான்.


தீண்டத்தகாத இனம் உருவாகியது ஆரியர்களுக்கு முன்பா? அல்லது பின்பா?

ஆரியர்களுக்கு முன் இந்தியாவில் சாலிவாகனர்கள் என்கிற பண்படாத முரட்டு இனம் வாழ்ந்து கொண்டிருந்தது. பிரித்தாளும் சூழ்ச்சியில் கைத் தேர்ந்தவர்களான   ஆரியர்கள் சாலிவாகனர்களை பங்காளி (சகோதரயுத்தம்) சண்டை மூட்டி இரண்டு பிரிவுகளை உருவாக்கினர்.
                                    
இந்த இரண்டு மாபெரும் பிரிவுகள் இன்றளவும் இந்தியாவில் பல பெயர்களில் மறுவி கடைசியாக பல மொழி மாற்றங்கள் அடைந்து இந்தி,தமிழ்(தெலுகு,கன்னடம் மற்றும் மலையாளம்) பேசும் இனங்களாக வாழ்கின்றன.  அதிலொன்று தான் தங்கள் கடவுளான விஷ்னுவுக்கு இந்த முரட்டு இனங்களை தங்கள் கடவுளுக்கு உறவு ஏற்படுத்தி தனித்தனியாக புராணங்களை இயற்றினர்.
ராமாயண கதையில் வன்னியர்களையும்,மகாபாரதக் கதையில் இடையர்களையும் மனமாற்றம் அடையச் செய்யும் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டன.      தாங்கள் விஷ்னுவின் விசுவாசிகள் எனகாட்டிக் கொள்ள நெற்றியில் நாமத்தை போட்டுக் கொண்டனர். இன்றளவும் இது தொடர்கிறது.

வன்னிய புராணம் என்பது சுய சிந்தனையற்ற முரட்டு வன்னியர்களை முடக்க பயன்பட்டது.பின் வரும் பக்கங்களில் இவர்களின் குணங்களை அலசுவோம்.

                      135-அல்லல்படும் அக்னிக் குல சத்ரியர்

வேறு எந்த இனத்துக்கும் சுயபுராணம் இல்லை.வன்னியர்களை இழி நிலைக்குத் தள்ளுவதற்கு மட்டுமே எழுதப்பட்டதுதான் இந்த வன்னிய புராணம். இதை இன்னமும் உணரத் தெரியாத வன்னியர்கள் இன்றும் இதனைதன் இனத்தின் பெருமையாக பேசி காலம் கழிக்கின்றனர்.இழி நிலைக்கு தள்ளப்பட்டோம் என தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களுக்கு இங்கிதம்,நாசுக்கு,நளினம்,நாவடக்கம்-இது பற்றி எல்லாம் சிந்திக்க தெரியவில்லை.அதைப் பற்றியெல்லாம் இவர்களுக்கு சொல்லித்தர அல்லது வழி காட்ட ஆளும் ஆதிக்க சக்திகளும் கவலைப்படவில்லை. இவர்களை பெருமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு அக்கினிக் குல சத்திரியர் எனக் கூறிமேலும் வெய்யிலாளிகளாகவும் கூலிகளாகவும் தள்ளப்பட்டனர். எல்லாதரப்பு அல்லது இன தொழிலாளிகளுக்கு ஆளுமையை வளர்க்கவும் ஆட்சி மன்றத்தில் பங்கு கொள்ளும்  வாய்ப்புகளும் தடுக்க,   தந்திரசாலிகளின் சாம்ராச்சியம் காலம் காலமாக திட்டம் போட்டு நடந்து கொண்டுதான் இருக்கிறது.படித்தவர்கள் வெய்யிலில் வேலை செய்ய மறுக்கின்றனர்.

ஏன்? விரும்புவதே இல்லை.நல்ல சிந்தனைதான்.பட்டம் பெற்ற படிப்பாளிகளுக்கு வெய்யிலாளிகளுக்கு நல்ல ஊதியமும் பணிப்பாதுகாப்பும் சிறந்த ஒய்வூதியமும் கிடைக்க அரசு முன் வரவேண்டும்.

இதனால் இடைத்தரகர்களும் நிழலாளிகளின் எண்ணிக்கையையும் வெகுவாக குறைக்கமுடியும்..      தாங்கள் பிராமணர்களுக்கு அடிமையாக்கப் பட்டோம் என்பதை இன்னமும் உணரத் தெரியாத படிப்பிலிகள்தான் இவர்கள்.அப்படி படித்தாலும்இன்றளவும் சுயசிந்தனயற்ற படிப்பே உழைப்பாளிகளுக்கும்உழைப்பாளி பிள்ளைகளுக்கும் வழங்கப்படுகிறது. இதுதான் நீடிக்கிறது.

யாதவர்களாகட்டும் வன்னியர்களாகட்டும் இவர்கள் சுயமாகவோ தன்னிச்சையாகவோ கூட உழைக்க முடியாது உழைக்ககூட நாள் பார்க்க வேண்டும் எனும் நிலையில் இன்றும் உள்ளனர். சித்தரைக்குப் பின் மழை பெய்தவுடன் பொன்னேர் கட்டி ஓட்ட நாள் பார்க்க வேண்டும்.
                                     
எது நல்ல நாள் எது கெட்ட நாள் என வரையறுத்துக் கூற இவர்களுக்காக பஞ்சாங்கம் உருவாக்கப்பட்டது. அந்த பஞ்சாங்கம் பார்க்க பிராமணர்களைத் தேடிச் செல்ல வேண்டும்.

அந்த நாள் பார்த்துச் சொல்ல ஒரு தட்டில்பூ,பழம் வெத்திலைப் பாக்குடன் கணிசமான பணமும் வைக்க வேண்டும்.இப்படி ஒருமரபை ஏற்படுத்தப்பட்டு இன்னமும் (படித்த மக்களிடையேயும்) வழி வழியாக கடைபிடிக்கப்படுகிறது.

136-அவதிப்படும் சேரி வாழ்மக்கள்

சேரிவாழ் மக்கள் எப்படி உருவானார்கள்?
சமுக கட்டுப்பாட்டை மீறியவர்கள்,குடும்ப எல்லைக்கோட்டை மீறியவர்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர்,தமிழர்கள் கண்ட ஐந்திணை  மக்களில் பாலை மக்கள் என கருதப்படுபவர்.கீழ் மக்கள் என தமிழ் இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டவர்கள்,இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என தீண்டா இனமாக உருவாக்கப்பட்டனர்.

இந்தியாவின் மக்கள் தொகையில் ஒடுக்கப்பட்ட மக்கள்(தீட்டு உடையவர்கள், தீண்டக் கூடாது என இந்து மதத்தால் ஒடுக்கப்பட்டவர்கள்)

அதென்ன தீட்டு உடையவர்கள்? அவர்களை திருத்த அவர்களுடைய தலைவர்களே தடையாக உள்ளார்கள்.!அவர்கள் திருந்தி விட்டால் தலைவர்கள் அரசியல் நடத்த முடியாதே!

முன்னேரிய சமுக மக்களோடு பழக கற்றுத் தருவதற்கு பதில் அவர்களை எதிரிகளாக பழக வைத்து விட்டாரகள் ,இதனால் முனேறிய சமுகத்தவர், தங்கள் குடும்பத்து பெண்களை கவரும் எதிரி சமுகத்தவர்களாகவே தீண்டாதவர்கள் மாறிவிட்டனர்.  படிப்பிலும் ,செல்வத்திலும் முன்னேறிய சமுகத்தாரோடு போட்டி போட்டுக்கொண்டு இளைஞர்களுக்கு நற் பண்புகளை வளர்க்கத் தவறிய ஒடுக்கப்பட்ட சமுகத் தலைவர்களே சமுக குற்றவாளிகள்.  

இப்பொழு தெல்லாம் பெரும்பாலும் வெய்யிலாளி குடும்பங்களில் ஓரிருவர் படித்தாலும் தன் பிள்ளைகளுக்கு பஞ்சாங்கம் பார்க்கத் தெரியாது என கூறும் பெற்றோர்கள்,சோதிடரையும் புரோகிதரையும் நாடும் அவலம் இன்றும் உள்ளது.

இதற்கெல்லாம் காரணம் அரசாங்கம் தான். பட்டம் படித்து வெளியில்வரும் பிள்ளைகளுக்கு வாழத்தெரியாத கல்வியை அளிக்கிறது அரசாங்கம்.பள்ளி இறுதி வகுப்பு அல்லது கல்லூரியை விட்டுவெளியில் வரும் மாணவர்களுக்கு

குறிப்பாக இடஒதுக்கீடு மூலம் படிக்கும் மாணவர்களுக்கு அவர் படித்த கல்லூரியிலேயே வேலை வாய்ப்பை அளிக்கும் உத்தரவை அந்த கல்லூரி நிர்வாகம் அளிக்க வேண்டும்.அதற்கான உள்கட்டமைப்பை உருவாக்கித் தர ஏதுவாக சட்டங்களை இயற்ற வேண்டும்.

                              137-வேலைத் தேடும் வேலை

அதை தவிர்த்து படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலை கிடைக்கும் என வருடக்கணக்கில் காத்திருக்கவைப்பது அரசாங்கத்தின் ஏமாற்று வேலை.

பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்து விட்டு நேரடி பணிநியமனம் என கிராமபுற மாணவர்களை அலைக் கழிப்பது எந்தவகையில் நியாயம்?
அளவற்ற ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதும் அதில் படித்து வெளியேறியவர்களுக்கு வேலை கிடைப்பதும் குதிரைக்கொம்ப்பாக உள்ளது. இதற்கும் அரசாங்கம் தான் பொறுப்பு.

அரசு அலுகலகங்களுக்கு பணியாளர்களை பணியிலமர்த்தும் ஆணையம் ஒன்று மனம் திறந்த (transferancy) அமைப்பாக செயல்பட ஏதுவக சட்டமியற்றப் படவேண்டும்.

அரசாங்க வேலைவாய்ப்பு என்பது மிக முக்கியமான சமுகப்பிரச்சினையாக அரசாங்கம் கருதவேண்டும்.பணியாளர்களை வேலையில் அமர்த்தும் தனியார் நிறுவனங்களும் அரசு நேரடி கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். வேலை வாய்ப்புகள் பொறுத்தவரை தனியார் நிறுவனங்கள் செயல்பாட்டில் அரசு தலையிட உரிமை இல்லை எனக் கூறும்- பொறுப்பை தட்டிக் கழிக்கும்- அரசாங்கம் ஊழல் அரசாங்கம் ஆகும்.

அரசாங்கம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகாளால் மக்களுக்கு பயன்படவும் மக்கள் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு அதிகாரிகளை பயன்படுத்தி ஆளத்தெரிய வேண்டும்.
                                
 படித்த பாமரனும் (சுய சிந்தனையற்ற படிப்பாளியை பாமரன் என்றுதானே அழைக்க முடியும்?)வெய்யிலாளியும் சுழற்சி முறையில் ஆட்சியில் பங்கு கொள்ள ஏதுவாக சட்டம் இயற்றப்படவேண்டும்.உண்மையிலேயே மக்களை மக்களே ஆளும் முறை என்பது இதுதான்

ஆனால் இந்தியாவில் செயல்படும் மக்களாட்சி என்பது போலியானது.

பலமொழிகளையும் பல இனங்களையும் கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும் அனைவரையும் கட்டுண்டுவைப்பது இதிகாசகாலம் தொட்டு உலாவரும் ராமாயண மாகாபாரத கதாபாத்திரங்களின் குணாதிசய கதைகளாகும்.

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக குறுநில மன்னர்களின் சமஸ்த்தானங்களை ஒன்றிணைத்த பெருமை ஆங்கிலேயர்களையேச் சாரும்.அவர்களின் ஆன்மிக முதலாளித்துவ கலாச்சார முறையை பின்பற்ற மக்களை பழக்கிவிட்டனர்.

                  138-மக்களே மக்களை ஆளும் முறை

இப்பொழுதுள்ள உள்ள ஆட்சி முறைவரியை அடிப்படையாகக் கொண்டது.அரசாங்கம் என்பது, மக்கள் உயிர்வாழும் பொருட்டு அவர்களுக்கு

உயிர்ப் பாதுகாப்பு,
சொத்துப் பாதுகாப்பு,
உணவு
உடை
உறைவிடம்
சாலைஅமைத்தல்
குடிநீர்
வழங்குதல்-இவையெல்லாம் பூர்வகால ஆட்சி முறை.

இவைகளோடு நவீனகால ஆட்சிமுறையில்
1-அனைவருக்கும் கல்வி வழங்குதல்,
2-அனைவருக்கும் வேலை வாய்ப்பு
3-இடைவிடா மின்சாரம் வழங்குதல்.
4-தொலைப் பேசி மற்றும் தொலைக்காட்சி வழங்குதல்.
5-சிறு தொழிற்சாலைகளுக்கு இடைவிடா மின்சாரம் வழங்குதல்.
6-பெரும் தொழிற் சாலைகள் என்பது, சுயமாக மின்சாரம் தாயாரித்து ஆலைகளை இயக்குதல்
மேலே குறிப்பட்ட துறைகளுக்கு அரசு, அமைச்சகம் உருவாக்கி நிர்வகிக்க மக்களிடம் வரிவசூலிக்க வேண்டும்.

மனிதன் மகிழ்ச்சிகரமாக வாழ-வாழ்க்கை நடத்த அரசுக்கு வரி செலுத்த வேண்டும். அதுதான்,இப்பொழுதுள்ள
1-கேளிக்கை வரி-.(entertainment tax)கூடாது,

மனிதன் நீர்அருந்தவரி செலுத்த வேண்டும் அதுதான்
2-குடிநீர்வரி (water tax) கூடாது

(மனிதன்உயிர் வாழ இன்றியமையா பொருளான உப்புக்கும்,அரிசிக்கும் கூட மனிதன் வரிசெலுத்தும் அவலப் போக்கை நீக்க வேண்டும் )
                      
மக்கள் எதற்கெல்லாம் வரி செலுத்த வேண்டும்?

பணம் சேர்க்கவரி செலுத்த வேண்டும் அதுதான்
1-வருமானவரி (income tax).

மனிதன் நிலம், வீடு என அசையா சொத்து சேர்க்க

2-சொத்துவரி (property tax) செலுத்தவேண்டும்.

அரசாங்கம் இதில் மட்டுமே கவனம் செலுத்தி குடிமக்களிடம் முறையாக வரியைப் பெற்றுக் கொண்டாலே போதுமானது. நாட்டில் அவ்வப்போது திடீர்பணக்காரர்கள் உருவாகமாட்டார்கள்.

மனிதன் அளவுக்கு மீறிய சொத்துக்கு

3-செல்வ வரி(wealth tax) வேண்டும்.

4-மனிதன் சுகமாக பயணம் செய்ய சாலை வரி(road tax)
(இந்த நான்கு விதமான வரிகள் மட்டுமே குடிமக்களிடம் வசூலித்தால் போதுமானது.)

கேளிக்கைவரி,குடிநீர்வரி,தொழில்வரி உப்புக்கும் உணவுக்கும் வரிகள் இந்த ஆறுவகையான வரிகளை ஒழிக்கவேண்டும். இது காட்டுமிராண்டித்தனமானது.
மனிதனின் வாழ்வாதாரத்தில்-அடிப்படை உரிமையில் அரசுதலையிடும் செயல் இது.

விலையில்லா பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குவது அரசின் தலையாய கடமை.
இவை எல்லாவற்றிற்கும் எல்லைக் கோடுகள் உண்டு
ஆனால் அரசாங்கம் என்பது மக்களுக்கு அடிப்படை தேவையான
1-உணவு
2-உடை
3-உறைவிடம்
4-கல்வி
5-வேலைவாய்ப்பு
6-பாதுகாப்பு
7-பேச்சுரிமைமற்றும்
8-எழுத்துரிமை
இவை எட்டும் மனிதனுக்கு அரசு வழங்க வேண்டிய அடிப்படை உரிமைகள்(fundamental rights) அரசாங்கம் அளிக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் பொதுமக்களும் சுழற்சிமுறையில் ஆட்சியில் பங்குபெற ஏதுவாக சட்டத்தை மாற்ற வேண்டும்.
இவைகளைப் பற்றியெல்லாம் வெய்யிலாளிகள் கவலைப்பட்டுக் கொண்டதாக தெரியவில்லை. ‘கையை உழைச்சா கஞ்சிஎனகாலம் தள்ளுகின்றனர். இவர்களை அடிமையினம் என கூறாமல் வேறு எப்படிஅழைப்பது?
                                          
விவசாயம் தொடர்பான ஆடுமாடுகள் மேய்ப்பது,கறவை மாடுகளைப் பராமரிப்பது,காளை மாடுகளைப் பராமரிப்பது,நாற்று நடவு,களையெடுத்தல் அறுவடைசெய்தல் போன்ற எல்லாமே வெய்யிலாளி வேலை. இது போன்ற சமுக அமைப்புகளுக்கு அரசாங்க அமைப்பு வேண்டும். காலங்காலமாக உலெகெங்கும் உள்ள மக்கள் சமுக அமைப்புகள் இப்படித்தான் இயங்கின.ஆனால் சமிபகாலமாக மக்கள் விவசாயத்தில் வெய்யிலில் வேலை செய்வது பெருமளவில் குறைக்கப்பட்டது.

விவசாயம் நவீன மயமாக்கப்பட்டு எந்திரங்கள் பயன்பாடு அதிகரித்து விட்டது.
இதனால் வெய்யிலாளிகள் வீட்டில்ம(மு)டங்கி கிடக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அரசாங்கம் அவர்களுக்கு மாற்று வேலை செய்யத் தவறிவிட்டது.

சோம்பிக் கிடக்கும் மனித மனம் பேயாட்டம் அல்லது குரங்காட்டம் போடும். எந்த அரசாங்கமும் வெய்யிலாளியைப் பற்றி கவலைப்படுவதில்லை.கடந்தகால வரலாறு இதற்குச் சான்று.

வெய்யிலாளியின் வாலிப வாரிசுகளுக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் சமுக விரோத செயல்களில் ஈடுபடாமல் வேறு எங்கு செல்வார்கள்? இங்கேதான் அவர்களை அரசு வழி நடத்த தவறிவிட்டது என்று தானே பொருள்?
சமுக விரோத செயல்கள் என்றால் என்ன? மக்களை வாலிப வயதில் அரசு எப்படி நன்முறை படுத்துவது?

அரசு கீழ்கண்ட நடை முறைகளை மக்களிடையே கட்டாயப்படுத்தி செயல்படுத்தப்பட வேண்டும்.

1-கர்பிணிகளை உள்ளூர் அரசு மருத்துவமனை கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் வைக்க வேண்டும்.

இதன்பொருள் என்னவெனில்,ஊட்டமான உணவு,கணவன் மனைவிகளுக்கிடையே அன்பான உறவுமுறைகள் நீடிக்கிறதா என்பதை வாரம் ஒரு முறை அவரவர் வீடுகளுக்குச் சென்று மருத்துவ அதிகாரிகளும் ஊட்டச் சத்து துறை அதிகாரிகளும் கண்ணாணித்து அரசுத் துறைத் தலைமைக்கு, பருவமுறைச் சான்றுகளை(inspected periodical reports with evidence) அனுப்ப வேண்டும்.

அவைகளை முறையாக ஆய்வு செய்து தலைமைச் செயலக அதிகாரிகளுக்கு அனுப்பவேண்டும்.இதில் எந்த இடத்திலும் சுணக்கமோ சமரசத்துக்கோ இடமிருக்கக் கூடாது.

2-அனைத்து பிரசவங்களும் அரசு மருத்துவ மனைகளில் மட்டுமே நடக்க வேண்டும் .இதற்காக அரசுத் துறை அதிகாரிகளை முடிக்கிவிட வேண்டும்.அதற்கான நவீன உட்கட்டமைப்புகளை (sophisticated infrastructure) கிராம மற்றும் நகர அரசு மருத்துவ மனைகளில் கட்டாயமாக பராமரிக்கப்பட வேண்டும். 

3-அரசு மருத்துவ மனைகளில் பிறந்த குழந்தைகள் அனைவரையும் நாட்டுடமையாக்க வேண்டும்.குழந்தைகளின் பராமரிப்பு ஊட்டச்சத்து உட்பட அரசாங்கமே ஏற்குமளவிற்கு சட்டங்களை இயற்றவேண்டும். இதற்கான போதிய அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும்.ஒவ்வொரு கிராமங்களிலும் குழந்தை பராமரிப்பு இல்லங்களை, அரசு அமைக்க வேண்டும்.

4-ஒவ்வொரு கிராமத்திலும் அரசாங்க அலுவலகர்களான
1-கிராம நிர்வாக அதிகாரி,
2-கிராம சுகாதார மருத்துவர்,
3-கிராமப் பள்ளிக் கல்வி ஆசிரியர்கள
4-கிராம விவசாய அலுவலர்,
5-கிராம வங்கி அலுவலர்
6-மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத் தலைவர்
(இவர் அனைத்து கிராம அரசு அலுவலர்களின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட வேண்டும்)
இவர்கள் அனைவருக்கும் அந்தந்த கிராமத்தில் இருப்பிட வசதியுடன்கூடிய அலுவலகம் அமைத்துக் கொடுப்படவேண்டியது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.

5-5வயது முடிந்த குழந்தைகளை ஒவ்வொரு பெற்றோரும் கட்டாயமாக அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்க்கத் தவறிய பெற்றோர்களுக்கு தண்டனை வழங்கபட வேண்டும். தண்டனைகள் கீழ்க்கண்டவாறு இருக்கவேண்டும்.


                          139-கட்டாயச் சமச்சீர் கல்வி முறை

பெற்றோர்களுக்கு அரசுவழங்கும் சலுகை திட்டங்களை பெற்றோர்கள் இழக்கும் நிலை ஏற்பட்டால் குழந்தைகளை கட்டாயம் பள்ளியில் சேர்ப்பார்கள்.அல்லது மாணவர்கள் படிக்கும் பள்ளி மற்றும் கல்லுரிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பயனடையும் விதத்தில் வாழவாதார சலுகைகளை அரசு மாணவர்கள் மூலம் பெற்றோர்களுக்கு சென்றடையச் செய்ய வேண்டும்.

இதற்கு பேர்தான் கட்டாய கல்வி முறை. இந்த முறை இந்தியாவில் எங்கும் நடைமுறையில் இருப்பதாக தெரியவில்லை.மொத்தத்தில் கல்வியை நாட்டுடமையாக்கப்பட வேண்டும்.கட்டாய கல்வி முறைப் போன்றே கட்டாய வாக்களிக்கும் முறையையும் அமல்படுத்தலாம் .

ஓட்டு போடாதவர்களுக்கு இதே தண்டனையை வழங்கலாம். அதே நேரத்தில் தேர்தல் கமிஷனே வாக்களிக்கும் மக்களுக்கு வாக்களிக்கும் இடத்தில் ஒருநாள் சம்பளத்தை வழங்கினால் அரசியல் கட்சிகளிடமிருந்து வாக்களிப்பவர்கள் லஞ்சம் பெருவதை ஒழிக்கலாம். இதனால் வாக்காளர்களின் 100%  வாக்கைப் பெறலாம். முழு மக்களாட்சித் தத்துவம் இதுவே.

மாணவர்களின் மனத்திறன் (I.Q) அளவீடுகளை திறமையான ஆசிரியர்குழு அமைத்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
மாணவர்களின் ஒவ்வொரு வயதிற்கு ஏற்ப மனத்திறன் வளர்ச்சி அதிகரிக்கும். அல்லது வேறுபடும்

ஒவ்வொரு மாணவர்களின் நண்பன் மற்றும் நண்பர்களின் பழக்கவழக்கங்கள்,பேசும் முறை,பழகும் முறை,
வீட்டில் உறவினர்களுடன் பழகும் முறை,பேசும் முறை,படித்த பெற்றோர்களின் குழந்தைகள்,படிக்காதபெற்றோர்களின் குழந்தைகள் இவர்களின் வளர்ப்பில் வளரும் குழந்தைகளின் மனத்திறன் குழந்தைக்கு குழந்தை மாறுபடும்.

இவைகளை யெல்லாம் வகைப்படுத்தி பெற்றோர்-ஆசிரியர்குழு அமைத்து மாதம் ஒரு முறை கலந்தாய்வு செய்யப்பட வேண்டும்.

இவையெல்லாம் களையும் பொருட்டு சமச் சீர்கல்வி முறை அமல்படுத்தலாம்.அதுவும் கட்டாய சம்ச்சீர் கல்வி முறை மிகவும் அவசியம். சமதர்மசமுதாயம் உருவாக வேண்டுமானால் இந்த முறைதான் சிறந்தது.

140-கட்டாய கல்வி முறை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?

1-அனைத்து பாடத் திட்டங்களும் தாய்த்தமிழ் மொழியில் 5-ஆம் வகுப்புவரை கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும்.அப்படி கற்பிக்கப்பட்டால் மட்டுமே மாணவர்கள் மனதில் சுய அறிவியல் சிந்தனைவளரும்.
                                 
2-ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் மற்றும் இந்தி(இந்தி இந்தியாவின் ஆட்சி மொழியாக இருப்பதால்-மேலும் நகர மற்றும் உயர் இன மாணவர்கள், கிராம புற மாணவர்களைப் பின்னுக்குத் தள்ளும் முயற்சியை முறியடிக்க)  மொழி பாடத் திட்டம் தாய்த்தமிழோடு இணைந்த மூன்று மொழி  தேர்ந்தவர்களாக பள்ளி இறுதி வகுப்பை விட்டு வெளிவர ஏற்றாற் போல் பாடத் திட்டங்களை மாற்ற வேண்டும்.

3-ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழி பாடத்தோடு என்னென்ன பாடங்களை சேர்க்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
1-கணிதம்
2-அறிவியல்
3-வரலாற்று அறிவியல்
4-பூகோள அறிவியல்
5-உயிரியல்(தாவரம் மற்றும் விலங்கு)
6-உடலியல்
7-சட்டவியல்
உடலியல் பயிற்சி பாலப் பருவத்தில் மிக அவசியம். வாலிபம் கடந்த வயதில் தோன்றும் தேவையில்லா நீரிழிவு நோய், அதிக கொழுப்பு இவற்றினால் (juvenile obesity) இளம் வயதில் உடல் பருமன் போன்ற நோய்கள் தாங்கிய மனிதவாழ்க்கையை மாற்றி நோய்களற்ற வாழ்க்கை அமைய உதவும்.                           தனியாகமருத்துவம் படித்து லட்சக்கணக்கில் செலவு செய்து பட்டம் பெற்று வெளியே வந்து மருத்துவர் பட்டம் பெற்று,பாமரமக்களிடமும்,வெய்யிலாளிகளிடமும் பணம் பிடுங்கும் தொழிலை குறைக்கலாம். 

பள்ளிப்படிப்பிலேய  சட்டம் பற்றி மாணவர்களுக்கு தெரியபடுத்தினால்,இளம் பிராயத்தில் எது குற்றம்?, குற்ற செயலை மீறினால் என்ன தண்டனை கிடைக்கும் எனப் புரிந்தால்-புரிய வைத்தால் சமுகத்தில்-
சமுக விரோதிகள் தோன்ற மாட்டார்கள்.
சமுதாயத்தில் கற்பழிப்பு,வழிபறி,ஏமாற்றுதல்,களவு,கொலை போன்ற மாபாதக செயல்களை தோன்றாமல் செய்யலாம்.

சட்டத்துக்கு தனி பட்டயபடிப்பை ஏற்படுத்தி அந்த பட்டயம் பெற்றவர்கள் தனியாக நீதி கேட்டு போராடுபவர்களுக்கு வழக்குரைஞர்களை நியமித்து பாமரமக்களிடமிருந்து-வெய்யிலாளிகளிடமிருந்து பணம்பிடுங்கும் இடைத்தரகு(leagal broakers) தொழிலை ஒழிக்க இது சிறந்த வழி வகுக்கும். குற்றவாளிகளுக்காக பொய்யாக  போராடும் வழக்குரைஞர்கள் தோன்றமாட்டார்கள்.பட்டப் படிப்புக்குப் பின் ஒரு சட்டப் படிப்பு தனியாக தேவையில்லை.

நீதி மன்றங்களில் காவல்துறையினர் எவ்வாறு செயல்படவேண்டும்?

1-ஏமாற்று
2-அவமானப்படுத்துதல்
3-அட்டூழியம் (rowdism)
4-மனிதனை மனிதன் தாக்குதல்
5-திட்டமிட்ட கொலை,கொள்ளை,திருட்டு
6-கற்பழிப்பு
                                      
இது போன்ற சமுக விரோத செயல்களை தடுக்க அல்லது ஒழிக்க,ஊர்ப் பஞ்சாயித்து மற்றும் ஊர்மக்களிடம் ஆதாரச்சான்றுகள் பெற்று குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி எழுதப்பட்ட சட்டங்களோடு நடுவர்கள் நீதிவழங்க ஏதுவாக காவல்துறை செயல்பட வேண்டும். இதனால் உழைப்பாளிகளின் பணம் வீணாவதை தடுக்கலாம்.

குற்றவாளிகள்,குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் நேரடியாக நடுவர்கள் விசாரணை நடத்தி நீதி மற்றும் தண்டனை வழங்கலாம். குற்றமே நடவாத சமுதாயத்தை உருவக்கலாம். 

நாட்டில் இடைத்தரகர்கள் உருவாகும்-உருவாக்கும் கல்வி முறையை ஒழிக்கப்படவேண்டும்.

பணக்காரனுக்கு ஒரு கல்வி ஏழைக்கொரு கல்வி முறையை ஒழிக்கப்படவேண்டும்.அதற்கு ஏற்றாற்போல் சட்டங்களை இயற்றப்படவேண்டும்.

பணக்காரப் பிள்ளைகள் தேர்வு  செய்யும் படிப்புகளை ஏழைமாணவர்களும் தேர்வு செய்து  படிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.                                 இப்பொழு தெல்லாம் கிராமத்துப் பிள்ளைகள் கல்வி பெறும் விகிதாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால்  காலங் காலமாக வெய்யிலில் விவசாயக் கூலிகளாக கிராமங்களில் உழைத்த வன்னியர்களும் ஆதித்தமிழர்களும் நிழலாளியாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தமிழகத்தின் பூர்வ குடிமக்களே இவர்கள்தான். இந்த பூர்வகுடிமக்களின் வாழ்கைத்தரம் அகில இந்திய அளவில் நோக்கும் போது மற்ற இனமக்களைவிட மிகவும் கடை நிலையில் உள்ளது.

இந்தியாவின் ஒவ்வொரு கிராமங்களிலும் தமிழகத்தில் ஆதித்தமிழர் உள்ளது போல் மொழி வாரி ஆதி இன (தலித்துகள்) வாசிகள் ஒடுக்கப்பட்டவர்களாக வாழ்கின்றனர்.இவர்களோடு மொழி வாரி மற்ற நான்கு வர்ணத்தவர்ளும் இந்தியாவின் ஒவ்வொரு கிராமங்களிலும் வாழ்கின்றனர்.

ஒடுக்கப்பட்டவர்கள் பொருளாதாரத்தில் மட்டுமே உயர்வடையும் போது அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விடுவதில்லை.

உயர் கல்வியும் அவர்களுக்கு கிடைத்தால் தான் மற்ற இனங்களோடு இணையும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் இணக்கமாக வாழ வழி  வகுக்கும்.சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளே சாதிகள் உருவாக காரணமாகிவிடுகின்றன.

இப்பொழுதுள்ள ஆட்சி முறை (1947 லிருந்து) சமுகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. ஆனால் நமது சமுக அமைப்பு இதிகாசகாலத்திற்கு முற்பட்டது.சமுகத்தில் உருவாகும் பழக்கவழக்கங்கள் மன ஒழுக்கம் வலியுறுத்தப்படுவதற்காக சடங்கு சம்பிரதாயம்(ஆன்மீகம்) என பாமரமக்களிடையே திணிக்கப்பட்டது.

எந்த ஒரு சடங்கு சம்பிரதாயமும் 60 ஆண்டுகளுக்கு பழக்கப்பட்டாலே (இரண்டு தலைமுறை) மனிதரத்தத்தில் ஊறிய பழக்கமாகிவிடும்.

நமது கலாச்சாரம் 3000-ம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.எனவே ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் உருவாக இன்னும் இத்தகைய ஆட்சி முறை குறைந்தபட்சம் 450 ஆண்டுகளாவது நீடிக்க வேண்டும்.
அதாவது மனிதனின் பழக்கவழக்கங்கள் மாற குறைந்தபட்சம் 500 ஆண்டுகள் ஆகும் என்பது சமுக உளவியாளர்களின் கருத்து.

141-வெய்யிலாளிகளை வேறுபடுத்திய இசை

படிக்காதவர்கள், உருவாக்கியது ஆன்மிக சிந்தனை அவர்களின் வழித் தோன்றல்களான படித்தவர்கள்,கல்வியாளர்கள் உருவாக்கியதுதான் மேன்மக்கள் கீழ்மக்கள் சிந்தனை.சங்கத் தமிழ் இலக்கியங்களில் இந்த மனித வேறுபாடுகளை காணலாம்.அழிந்து போன தமிழ் நாகரிகத்திலிருந்து உருவானதுதான் இந்த சாதிய கலாச்சாரம்.
                                    இசை மனிதனை வசியப்படுத்திவிடும்.இதனை நன்கு உணர்ந்த நிழல் மனிதர்கள் வெய்யிலாளிகளின் உழைத்த  பணத்தை இசையால் பங்கு போட ஆரம்பித்தானர்.

அது மட்டுமல்ல பொய்யான தோற்றங்கள்,

(கடவுள்) மனிதர்களை நல்வழிப்படுத்தி இயற்கை தரும் பேரழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்ள இசை வடிவில் இறைவனை வணங்க வேண்டும் என வலியுறுத்த புனைக் (பொய்) காவியங்கள் படைக்கப்பட்டன. இத்தகைய செயல்பாட்டால் சமுகத்தில் மேன்மக்கள் கீழ்மக்கள் என உருவாகிவிட்டனர்.

புறத் தூய்மை-புறத் தோற்றம் இவைகளே வெய்யிலாளிகளை நிழல் மனிதர்ளிடமிருந்து வேறுபடுத்தியது. சாதிகள் உருவாக இது மட்டுமே காரணமாகி விடவில்லை.நாகரிகம் தோன்றிய நாளிலிருந்து மக்கள், கடலும் கடலைச் சார்ந்த மக்கள்,சமவெளி நில மக்கள், மலையும் மலையைச் சார்ந்த மக்கள்,காடும் காட்டைச் சார்ந்த மக்கள்,பாலைவன மக்கள் என 5 வகையான மக்களுக்கு ஏற்றவாறு அவரவர் இயற்கைச் சூழலுக்கேற்ப கலாச்சாரங்கள் மாறிவிட்டன.
மீன் பிடி தொழில்,சமவெளி விவசாயம்,மலைப்புற விவசாயம் வேட்டையாடுதல் மற்றும் கொள்ளைத் தொழில் என மக்களின் வயிற்றுப் பிழைப்புக்கு ஏற்றவாறு மனிதர்களின் குணங்கள் மாறிவிட்டன.

142-சாதிகள் தோன்ற காரணங்கள்

மேலே சொன்ன 5 வகையான மக்கள் சமுகத்தில் சமவெளிநில மக்களிடையே சாதிய வேற்றுமைகள் அதிகம் காணப்படுகிறது. இந்த நில வாழ்மக்கள் அதிகமன ஒழுக்க சிந்தனைகளை வளர்த்துக் கொண்டனர். குடும்ப உறவுகளுக்கு அதிக கட்டுப்பாடுகள் (எல்லைக் கோடுகள்) வகுத்துக் கொண்டனர்.வெளி உலகத் தொடர்புகளை அதிகம் வளர்த்துக் கொண்டனர். இதனால் குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்பட்டது.

கட்டுப்பாடுகளை மீறிய செயல்களுக்கு ஊர்ப் பஞ்சாயித்துக்களை கூட்டி வரம்பு மீறியவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டன.
                                   
143-தீண்டாமை

தண்டனைகளுக்கு கட்டுப்படாதவர்களை ஊரை விட்டு விலகி விட்டனர்.சில நேரங்களில் குடும்பம் குடும்பமாக (பங்காளிகள்) ஊரைவிட்டு விலகிவிட்டனர்,அல்லது விலக்கிவிட்டனர்.
50 ஆண்டுகளுக்கு முன்னர் கூட இத்தகைய செயல்பாடுகள் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலும் பரவலாக காணப்பட்டது. இத்தகைய செயல்கள் மனிதகுல நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்டு வந்த காரணத்தால் சாதிகள் தோன்றியது.சாதிகள் தோன்றியதற்கு முக்கிய காரணிகளில் இது தலையாயது.
ஊரைவிட்டு விலக்கப்பட்ட காரணத்தால் அவர்கள் தீண்டத் தகாதவர்களாக கருதப்பட்டனர்.ஊர்மக்கள், விலக்கப்பட்வர்களிடம் பேசமறுத்தது மட்டுமல்ல கொடுக்கல் வாங்கல்கள் கூட மறுக்கப்பட்டது.இதனால் மக்களிடையே தீண்டாமைத் தோன்றியது.

இந்திய மக்கள் காலாச்சாரம் என்பது நாம் ஏற்கனவே கூறியது போல் மண் சார்ந்த மற்றும் நிறம் (வர்னாசிரமம்) சார்ந்த மன ஒழுக்கம் கொண்டது.இது தோன்றி 3000 ம் ஆண்டுகளாக நடந்து வருகிறது.                        இப்பொழுது இதனை எப்படி களையெடுக்கலாம் என்று சமூக  அமைப்புகளும் அரசுகளும் ஒன்றிணைந்து கொள்கை வகுத்து அதன் படி செயல்படவேண்டும்.

எப்படி கொள்கை வகுப்பது? அதனையும் அலசுவோம்.

1-சாதிகளைத் தூண்டி தலைவர்கள் அரசியல் ஆதாயம் அடைவதை தடை செய்யப்பட வேண்டும்.

2-மேன் மக்கள் கீழ்மக்கள் என விதம்பிரிக்கும் தமிழ் இலக்கியங்களை தடை செய்யப்பட வேண்டும்.

3-இலக்கியங்களில் வர்னிக்கப்படும் கீழ்மக்களை மேன்மக்களாக்கும் முயற்சியில் தலித்தலைவர்களும் அரசும் இணைந்து செயல்படவேண்டும்.

4-தலித் இளைஞர்களை கட்டாய கல்விக்கு(ideal education) உட்படுத்தப்பட வேண்டும்.

5-தலித் இளைஞர்களை மற்ற இன இளைஞர்கள் போல் நாசுக்கு,இங்கிதம்,உடையில் நளினம், பேச்சில் கவனம் போன்ற பயிற்சிகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.இதற்கு தலித் தலைவர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.தலித் தலைவர்களின் முக்கிய கடமையாக இது அமைய வேண்டும்.

6-தலித் இளைஞர்கள்,பள்ளி இறுதிப் படிப்பில் அல்லது கல்லுரி படிப்பு முடிவில் வேலைவாய்பு உறுதியுடன் வெளிவர அரசு  சட்டமியற்றவேண்டும்.

7-வேலைவாய்ப்பு அலுவலகத்தை ஒழிக்க வேண்டும்.

8-தமிழில் படித்தவர் என பட்டயச் சான்று வழங்கி அவ்வாறு தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்பில் முன்னுரிமை   எனும் சட்டத்தை அரசு இயற்ற வேண்டும்.

9-தலித்துகள் இந்திய உயர் கல்வி மற்றும் உயர் பதவி பெறுவதற்கு அரசாங்கம் இலவச தனிப் பயிற்சி நிலையம் துவக்கப்பட வேண்டும்.

10-பள்ளிக் கல்வி,கலை அறிவியல் கல்லூரி மற்றும் தொழிற் கல்வி கல்லூரி படிப்பை படித்து விட்டு பின்பு போட்டித் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கே வேலை என கூறப்படும் ஊரை ஏமற்றும் அரசின் திட்டத்தை ரத்து  செய்ய அரசு சட்டமியற்ற வேண்டும்.

11-போட்டித் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை பள்ளி மற்றும் கல்லூரி நாட்களிலேயே மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து தகுதியாக்க வேண்டும்.இது அனைத்து தரப்பு இன மாணவர்களுக்கும் பொருந்தும்படி அரசு சட்டமியற்ற வேண்டும்.  

12-படிப்புக்குப் பின் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும்  கேள்விகளுக்கு ஏற்றாற் போல் பள்ளி மற்றும் கல்லூரி படத் திட்டங்களை மாற்ற வேண்டும்.போட்டித் தேர்வில் வெற்றிப் பெற்றால்  தான் அரசு வேலை என்று தமிழ்ப் பேசும் வெய்யிலாளி வரிசுகளை ஏமாற்றும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

144-தமிழர்களின் மன ஒழுக்கம்

மனிதகுலம் தழைக்க முக்கிய காரணிகளான ஆண் மற்றும் பெண்ணின் இரண்டு இடுப்புகள் இணையும் போது உண்டாகும் உயிரோட்டமுள்ள சக்தியை, திராவிடர்கள் தங்கள் கடவுளாகாவும் தெய்வங்களாகவும் வணங்கி வழிப்பட்டனர்,(சிவசக்தி வழிபாடு).ஆண்களுக்கு 9 துவாரங்களும்,பெண்களுக்கு 11 துவரங்களும் அமைந்துள்ளன.

உடலிலுள்ள ஒவ்வொரு துவாரங்களிலும் ஏதாவது ஒரு வகை சுவை மற்றும் வாசனையுடன் கூடிய கழிவுப் பொருட்கள் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன. இவற்றினுள் வாய் மற்றும் மூக்கு மட்டும் இரண்டு வேலைகளை செய்கின்றன.அதாவது உள்ளே போகும் பொருள் அதே வழியாக வேதியல் மாற்றம் பெற்று வெளி யேறுகின்றன.

வயது வந்த ஆண்கள் வெளியேற்றும் உயிரோட்டமுள்ள கழிவுப் பொருளான விந்துவை உள்வாங்கிக் கொண்ட வயது வந்த பெண்கள்,உயிரோட்டமுள்ள கழிவுப் பொருளான மனிதக் குழந்தைகளை வெளியேற்றுகின்றனர்.உலகில் எல்லா மனிதர்களுமே பெண்களின் கழிவுப் பொருட்கள் தான்.

திராவிடர்கள் கண்டது மனித உடலில் ஐம்புலன்கள் (மெய்,வாய்,கண்,மூக்கு,செவி)
இந்த மனித குழந்தைகள் பெண்களின் 10,மற்றும் 11வது துவாரங்களிலிருந்து வெளிப்படும் உயிர்த்திரவமான பாலை உண்டு வளர்கின்றன.இதுவே சிவ(சைவ)சக்தி வழிப்பாடு.

இடுப்புகள் இணையும் போது இருமனங்களும் ஒன்றாகிவிட்டதை பலவகை பந்தங்களுக்காக (உறவுகளுக்கு) கற்பனைக் கதைகளை புனைந்து விட்டனர். இவைகள் காவியங்களாக இன்று உலா வருகின்றன.

இதனூடே ஆசிய கண்டத்தின் மேற்குப் பகுதியில் 3000-ம் ஆண்டுகளுக்கு மனிதர்களின் இனப்பெருக்கத்தால் ஏற்பட்ட இடநெருக்கடியால் மனிதகுலம் வடமேற்கு மற்றும் கிழக்கு நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.இதன்விளைவாக இந்தியபூர்வ குடிமக்களான தமிழர்கள் (ஆரிய மொழிக்கலப்பால் பின்னாளில் திராவிடர்கள் என அழைக்ப்பட்டனர்) மிகுந்த மனமாற்றத்திற்கு உட்பட்டனர்.இதனை கலாச்சார மாற்றம் என்று கூட சொல்லலாம்.

ஆரியர்களின் வருகையால் திராவிடர்களிடையே பங்காளிச் சண்டை அல்லது சகோதரயுத்தம் அதிகரித்தது.
இதன் விளைவாக திராவிடர்கள் இன்றய நிலையை அப்போதே எட்டிவிட்டனர்.சாதியங்கள் தலைதூக்க ஆரம்பித்தன.அவற்றுள் இரண்டு காரணிகள் ஒன்று ஊர்கட்டப்பாடுகளை மீறுபவர்களை தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்டனர் மற்றொன்று மனிதனுன் ஒளிந்திருக்கும் 5 விதமான குணங்களுக்கு ஏற்றவாறு பிரித்து 5சாதிகளை உருவாக்கினர்(இந்தகைய இனப் பிரிவு ஆரியர்கள் உருவாக்கியது)                   

மனிதனின் இந்த 5 வகையான உடல் கூறு அமைப்பிற்கு 5 வகையான குணங்கொண்ட மனிதர்கள் சமுகத்தில் காணப்படுகின்றனர்.ஆரியர்களின் பயன்பாட்டிற்கு என்று எழுதப்பட்ட நூலான மனுநூலில் இந்த குணங்களை வர்ணிக்கப்பட்டுள்ளன.
1-தலை-சிந்தனைக்கு உரிய உருபுபிரம்மம்(உயரிய)-படிப்பாளி-பிராமணசாதி,தந்திரம்,சாதுர்யம் இவைமட்டுமே ஆயுதம் கல்வி தங்களுக்கு மட்டுமே உரியது எனவும்,இதன் மூலம் மற்ற 3 வகை மனிதர்களை வழி நடத்தி தங்கள் வாழ்வாதாரங்களை பெருக்க முடியும் என்கிற நம்பிக்கை கொண்டவர்கள்.
5ஆம் வகை பஞ்சமர்களை பிராமணர்கள் கண்டுகொள்வதே இல்லை.தங்கள் வீட்டு பெண்களை மற்ற 4வகை மனிதர்கள் ஏறெடுத்துப் பார்ப்பதுவே பாவம் என மற்றவர்களுக்கு போதிக்கப்பட்டது.தென்னிந்திய பிராமணர்கள் எளிய உணவு முறை பழக்கவழக்கங்கள் கொண்டவர்கள் என சொல்லப்பட்டாலும் மற்ற இன செல்வந்தர்களின் உணவைவிட அதிக விலை கொண்டதாகும். 

சூத்திரர்களின் நிலத்தின் உயர்விளை பொருளான, எளிதில் செரிமானம் கொண்ட பச்சரிசி,தேன்,பச்சை பயறு, தினை,வாதுமை கொட்டை,பால்,தயிர், நெய் என அறிவாற்றலை வளர்க்கும் உணவுப்பொருளை அவர்கள் வீடு தேடிவரும்படி செய்து கொள்வர்.அதற்கு ஈடாக   அவர்களுக்கு, ‘வாழ்த்துக்கள் வழங்குகிறேன்என புரியாத வாய்ப்பாடுகளை வழங்குவதை மரபாக்கிக் கொண்டனர்.இவர்கள் வீட்டுமுன் புறம் மற்றும் பின்புறத்தை இலவசமாக பராமறிக்கும்பணி சூத்திரர்களுடையது.

புரோகிதம் செய்வது இவர்கள் நிரந்திரதொழில்.இறைவன் பிரசன்னமாக வாழ்கிறார்,அவருக்கு 6-கால பூசை செய்ய வேண்டும் என தங்களுக்காக எழுதப்பட்ட உபநிடதங்களான ரிக்,யசூர்,சாம,அதர்வண வேதங்களில் காணப்படும் குறிப்புகளை மேற்கோள்காட்டி பாமரமக்களை தங்கள் வயப்படுத்தி தங்கள் பாதுகாவலர்களாக (இடையர்கள் மற்றும் வன்னியர்கள்) மாற்றிவிடுவர்.சூத்தரர்களின் நிலங்களில் விளையும் தானியங்களை உலர்த்தி
பிராமணர்களின் எதிர்கால  தேவைகளுக்கு, கோயில்களில் தானிய களஞ்சியங்களில் சேமித்து வைத்துடுவர்.அதாவது பஞ்சகாலங்களுக்கு பயன்படுத்துவர்.
                                   
சூத்தரர்களின் உழைப்பில் விளையும் பச்சை காய்கறிகளை சூத்தரர்களின் வீடுகளில் புரோகிதம்
(இறந்தவர்கள் நினைவுநாள் அனுசரிப்பது,மற்றும் திருமணம் போன்ற காரியங்களுக்கு சமசுகிருத வாய்ப்பாடு-மந்திரம் படிப்பது)
செய்யவரும் வேளையில் பிராமணர்களுக்கு சமர்ப்பித்தால்

சூத்தரர்களுக்கு புண்ணியம் கிடைக்கும் எனவும் இறந்த முன்னோர்கள் இறைவனோடு சுபிக்சமாக இருப்பார்கள் என நம்பவைத்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வர்
உழைத்துவாழ வேண்டும் என மற்ற இனத்துக்கு அறிவுறுத்தும் இவர்கள் மனிதகுல உடல் வளர்ச்சிக்கு பயன்படும் விவசாய நிலங்களில் மறந்தும் கூட கால் வைக்க மறுப்பவர்கள்.

ஊருக்கு உபதேசம் செய்வதில் பிராமணர்கள் கைத்தேர்ந்தவர்கள்.மனசாட்சி அற்றவர்கள்.இல்லாத கடவுளை இருப்பதாக நா கூசாமல் பொய் சொல்பவர்கள்.

நாங்கள் இப்படித்தான் வாழவேண்டும் எனவே வேதங்களில் வரையறுக்கப்பட்டுள்ளதுஎன மற்ற இன மக்களை நம்பவைப்பதில் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள்.          இந்நிலை இப்பொழுதும் நீடிக்கிறது.  

2-மார்பு-வீரம்-கோவம் அல்லது சினம் இதற்குண்டான உருபு சத்திரியம்-ஆட்சியாளர்-மனிதனை எதிரியாக்கி, மற்ற மனிதர்களை பயமுறுத்தி அடக்கியாளும் தகுதி படைத்தவர்கள்-சுயசிந்தனை அற்றவர்கள்-மனித நேயமற்றவர்கள்.

பிராமணர்களை ஆலோசனைக்கு அமைத்துக் கொள்ள வேண்டும்,என எண்ணங் கொண்டவர்கள்.பிராமணர்கள் இடம் பெறாத அரசவையோ,அல்லது மந்திரி சபையோ இருந்தது இல்லை,இருப்பதும் இல்லை.ஆட்சி மாற்றம் ஏற்பட்டதனால்,இவர்கள் விவசாயம் மற்றும் மீன் பிடிதொழிலை குலத் தொழிலாக கொண்டவர்கள்.கோவம்,கவுரவம் மட்டுமே இவர்கள் சொத்து.

தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பார்கள்.சக மனிதர்களை அடக்கியள நினைக்கும் குணம் என்பது எல்லாருக்கும் வராது அல்லது அமையாது.தட்டிக் கேட்பவன் தலைவன் ஆகிறான். இது எந்த காலத்துக்கும் பொருந்தும்.

ஒரு காலத்தில் குறு நில மன்னர்களாக வாழ்ந்த வாரிசுகள்தான் இப்பொழுது ரவுடி எனவும்,சமுக விரோதி எனவும் பட்டம் சூட்டப்படுகின்றனர்.
இந்த கால மக்களாட்சித் தத்துவத்திற்கு இந்தகைய மனிதர்களை ஊக்கப்படுத்தக்கூடாது. பொது நீதி மன்றம்,பொது காவல் நிலையம் என உருவாக்கப்பட்டு இந்நிலையும் மாறிவருகிறது.

ஆட்சியாளர் (அரசாங்கம்) குற்றவாளிகளுக்கு கொடுக்கும் தண்டனை மற்றும் கொலைகளுக்கு அறவழி காரணங்கள் தேடப்பட்டது-தேடப்படுகிறது.    

3-வயிறு-வாணிபம்வைசியம் (சூத்திரர்களின் உற்பத்தி பொருளை விற்பவர்கள்) பொய்யே மூலதனம்.
ஆட்சியாளர்களை லஞ்சம் கொடுத்து வசியப்படுத்தும் செயல்களால் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துபவர்கள் . உலகம் முழுக்க இவர்கள் ஆதிக்கம் உள்ளது.மனிதர்களை நட்பு முறையில் பழகி (சாகசம்) தங்கள் சுய தேவைகளை நிறை வேற்றிக் கொள்ளும் குணம் படைத்தவர்கள்.

அறவழி சிந்தனை அற்றவர்கள்;யாரையும் எதிரியாக்கிக் கொள்ள மாட்டார்கள்.தன்னலம்,தன் குடும்பநலன் மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழ்வர்.எப்பொழுதும் தங்களை ஆட்சியாளர்களாகவோ நாட்டின் அதிபராகவோ காட்டிக் கொள்ள மாட்டார்கள்.ஆனால் அவர்களை பின்னிருந்து இயக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.

எந்த வகையிலாவது தான் நினைத்த காரியங்களை முடிக்க மனிதனுள் மறைந்திருக்கும், பணத்தாசை, மண்ணாசை, பெண்ணாசை,பொன்னாசை, மற்றும் மனதைக் கொள்ளையிடும் மது,அபின்,கஞ்சா போன்ற சுய இன்ப வகைகளை பயன்படுத்தி மன்னர்களையே கவிழ்த்தவர்கள் இந்த வணிகர்கள். உலக வரலாறு படித்தவர்கள் இதனை நன்கு உணர்வர்.

4-இடுப்பு-உயிரோட்ட முள்ளகழிவு பொருளை வெளியேற்றும் பகுதி அல்லது இனப்பெருக்ககூட்டு உருபுக்கள் அடங்கிய பகுதி - சூத்ரர்கள்-உற்பத்தியாளர்கள்–(எல்லாவகையிலும்),அத்துணை மனிதர்களுக்கும்

அடிப்படைத் தேவைகளான உணவு,உடை மற்றும் உறைவிடம்இவைகளை உருவாக்குபவர்கள்.மற்ற 3வகை இனத்தவர்களுக்கும் உணவு,உடை,உறைவிடம் மற்றும் உணவுவகைகளை செய்து கொடுப்பர்.தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்வர்.எதற்காகவும் யாரிடமும் கையேந்த மாட்டார்கள்.தன்கைக் கால் உடல் உழைப்பை நம்பியே வாழ்க்கையை அமைத்துக் கொள்வர்.வெய்யில் தொழிலாளிகள்.

இவர்களின் ஆசைகளை தூண்டி விட்டு ,அவைகளை அடைய முடியாமல் போனால், “தோஷ பரிகாரம் செய்தால் சரியாகிவிடும்எனும் பிராமணர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி மோசம் போனவர்கள்,இன்றும் மோசம் போகின்றனர்!

ஈனம்,மானம்,சூடு,சுரணை இவை நான்கும் வெய்யிலாளிகளின் சொத்து.அறவழிச் சிந்தனைக்கு உட்பட்டவர்கள். அந்நியர்களை வரவேற்று வாழவைக்கும் குணம் கொண்டவர்கள்.இவர்களாலேயேஅந்நியர்கள் நம்நாட்டில் வந்தேறினர்.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் அந்நியர்களின் அடையாளம் காணமுடியாமல் அவதிபட்டவர்கள்.இன்றும் இந்நிலை நீடிக்கிறது. இவர்களை ஆள்வதற்குத்தான் இன்றய அரசியல்வாதிகளுக்கு போட்டியே.ஊர்கட்டமைப்பு,ஊர்கட்டுப்பாடு,ஊர்பஞ்சாயித்து போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி மன ஒழுக்கத்திற்கும்,அறவழிசிந்தனைக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.

மேலே கூறப்பட்ட 3 விதமான சாதிகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடமைப்பட்டவர்கள்.அவர்களின் பாதுகாவலர்கள்.தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கோ அல்லது உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கோ விலை நிர்னயம் செய்யும் உரிமையற்றவர்கள்.இந்நிலை இப்பொழுதும் நீடிக்கிறது.  
5-கால்கள்-மனித உடலின் கடைப் பகுதி-பஞ்சமர்கள்-சூத்தரர்களின்-(உற்பத்தியாளர்களின்) அடிப்படைத் தேவைகளை மட்டுமே பூர்த்திசெய்பவர்கள் . தங்களுக்கு என்று எந்தவகையான சொத்துக்களும் சேர்த்துக் கொள்ளாதவர்கள்.
                                 
சூத்தரர்களின் குடும்ப சொத்து,கிராம பொது சொத்து பராமரித்தல்,சூத்திரர்களின் கல்யாணம்,கருமாதி போன்ற சடங்குகளை முன்னின்று நடத்துபவர்கள்.மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு,உடை மற்றும் உறைவிடம் இவற்றை சூத்திரர்களிடம் இருந்து பெற்றுக் கொள்வர்.இப்பொழுதெல்லாம் அரசாங்கம் இவர்களுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதால் இந்நிலையும் மாறிவருகிறது.

அரசாங்கம் இவர்களுக்கு கட்டாய கல்வி அளித்தால் வாழ்க்கைத் தரம் உயர்ந்து இதனால் சாதிய ஏற்றத்தாழ்வுகளை எளிதில் களையலாம்.சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்த அரசும் இவர்கள் மேம்பாட்டுக்கு நேர்மையாக செயல்படவில்லை.

சாதிகள் தோன்ற காரணிகளான மேலே சொன்ன  5 வகை நிலமக்களின் குணங்களும்(மண்ணுக் கேற்ற-தொழிலுக் கேற்ற- மனிதர்களின் குணங்கள்)
ஆரியர்கள் உருவாக்கிய 5-வர்னாசிரம (தொழிலுக்கேற்ற) குணங்கள் தான் மனிதர்களிடையே இன்றய சாதியவேற்றுமைகள் தோன்ற காரணிகள்.

                          145- ஐந்திணை மக்கள்

சாதிகள் தோன்ற மேலும் சில வலுவான  காரணிகளும் உள்ளன.5 வகை நில மக்களில் 4வகைநில (குறிஞ்சி,நெய்தல்,மருதம் மற்றும் முல்லை) மக்களின் எச்சங்களே பாலை நில மக்கள்.

பாலை நிலமக்களுக்கு மற்ற நிலமக்களைப் போல் படிக்க வேண்டும்,சொத்து சேர்க்க வேண்டும் என்கிற எண்ணங்கள் தோன்றாது.ஊர்க் கட்டுப்பாட்டுக்கு(பஞ்சாயித்துக்கு) அடங்காதவர்கள், ஊரை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள். இது பாதிக்கப்பட்டவர்களின் மனித இயல்பு

அவ்வாறு வெளியேறியவர்கள் பாலை நிலத்தில் குடியேறினர்.இங்கே வாழபிற நிலமக்களின் போட்டி இருக்காது.

பிழைக்க வழி தெரியாது அவர்கள் மற்ற இன மக்களின் சொத்துக்களை களவாடுவதும்,வழி பறி கொள்ளையில் ஈடுபடுவதையும் தொழிலாக கொண்டவர்கள். களவாடும் பழக்கங்கள் கொண்டவர்கள்.இதனாலே இவர்கள் கீழ்மக்கள் என சங்க இலக்கியத்தில் வருணிக்கப்பட்டனர்.பின்னாளில் இவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவும், ஒதுக்கப்பட்டவர்களாகவும் பிற சமுகத்தாரால் சீரழிக்கப்பட்டனர்.

கல்வி அறிவு இவர்களுக்கு எட்டாக் கனியாகிவிட்டது.இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சியில் சட்டம்,நீதி மற்றும் காவல் துறை என ஏற்படுத்தப்பட்டு சமுக ஒற்றுமைக்கு வழிவகுத்தனர்.
சமுக விரோத செயல்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டு நல்வழிப்படுத்த தகுந்த சட்டங்களை இயற்றினர். இப்பொழுது உள்ள அரசு இவர்களுக்கு சட்டப் பாதுகாப்பும் கல்வி பொருளாதார மேம்பாட்டுக்கும் சட்டங்களும் திட்டங்களும் தீட்டுகின்றன.ஆனால் சமுக ஒற்றுமைக்கு அரசு தவறிவிட்டது மாநிலகாவல் துறையையும் ராணுவத்தையும் வைத்துக் கொண்டுதான் ஆட்சிபுரிய வேண்டும்.
                                 
                                            
                        146-வன்னியர்களும் வர்மாக்களும்

தமிழகத்தின் வட பகுதியில் வாழும் வன்னியர் இனமும் ஆந்திரத்தின் தென்பகுதியில் வாழும் அக்னி குலசத்ரியரும் ஒரே மனஒழுக்க முடையவர்கள்தான். மொழி வாரி மாநிலம் பிரிக்க வேண்டும் என்கிற எண்ணத்தால், ஒரு இனம்,மொழியால் இரண்டுபட்டுவிட்டது.

இவர்கள் வழிபடும் தெய்வம் விஷ்னு.நெற்றியில் நாமம் இடுவர். வைணவ பிரிவைச் சார்ந்தவர்கள் என பிற இனத்துக்கு காட்டுவதற்கு நெற்றியில் இந்த குறியிடு பழக்கம்,இந்தியாவில் ஆரியர்கள் வந்த பின் தமிழர்களிடமும் இடையர்களிடமும் தொற்றிக் கொண்டது. வலியபுகுத்தப்பட்டது என்று கூற முடியாது.

இவரகள் கிராம தேவதையாக வழி படுவது இன்றும் தீப்பாய்ந்த(திரவுபதி) அம்மன்தான்.

விஷ்னு கடவுளை யாதவ(இடையர்)குல மன்னன் உக்கிரசேனன்(உத்தரசேனன் என்றும் கூறுவர்) மகள் தேவகி வைற்றில் பிறந்ததாக கதை புனையப்பட்டது,என முன்னமே பார்த்தோம்.
ஆரியர்களுக்கு வீரமிக்க யாதவகுலத்தை மயக்க வைக்க கடவுளையே மன்னன் பேரனாக சித்தரித்தனர். அவன் திருட்டுத்தனத்தை கடவுள் லீலைகளாக பல கதைகள் புனையப்பட்டன.

வீரத்திற்கும் முரட்டுத்தனத்திற்கும் புகழ் பெற்ற மற்றொரு இன மான வன்னியர்களுக்கும், வன்னிய புராணம் எழுதப்பட்டது. ஜம்புமகரிஷிகுல கோத்ரம் எனவும் அழைக்கப்படனர்.

மூட பழக்கவழக்கங்களுக்கு எல்லாம் யாதவ மற்றும் வன்னியர் என இந்த இரண்டு இனத்தவர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.ஆரியர்களிடையே அன்று மயங்கிய யாதவ மற்றும் வன்னிய இனங்கள் இன்று வரை தெளியவே இல்லை.

உழைப்பாளிகள் (வெய்யிலாளி மற்றும் நிழலாளி) தங்கள் உழைப்பினால் பெறும் ஊதியங்களை
எண்,எழுத்து,படிப்பு இவை மூன்றும் இந்த இனத்துக்கு சொல்லித் தந்தால் தங்களை கேள்வி கேட்கும் இனமாக மாறிவிடும் என அஞ்சிய பிராமணர்கள் வேதங்களை படிப்பது சத்திரியனுக்கு ஆகாது அல்லது பாவம் என உணர்த்தப்பட்டது.

சத்ரியனுக்கு மட்டுமல்ல,மற்ற பிரிவுகளான வைசியர்,சூத்ரர் மற்றும் பஞ்சமர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
இதனால் உழைப்பது மட்டுமே நமது கடமை, நம்மை வழி  நடத்த புரோகிதர்கள்(பிராமணர்) உள்ளனர்  என இன்றளவும் நம்பிக் கொண்டிருக்கும் வன்னியர் மற்றும் இடையர்கள் போன்றோர்

வாழ்க்கையில் எந்த செயல் செய்தாலும் பிராமணனைக் கேட்டே செய்ய வேண்டும் என ஒவ்வொரு தலைமுறைக்கும் உணர்த்தப்பட்டது. இதனால் தமிழ் இனத்துக்கு அடிமை புத்தி வளர்ந்து விட்டது. 
                                     
பொருளியல்வாதத்திற்கு(pragmatism) தங்கள் மனதை ஈடுபடுத்த முயலவில்லை.பஞ்சாங்கம் பாமரனின் வேதமாகிவிட்டது.
அதையும் பார்த்துச் சொல்லபுரோகிதனிடம் சென்று பூ, வெத்தலைப்  பாக்கு, பழம் இதனுடன் கணிசமாக பணத்தையும் (தட்சணை) வைத்து நல்ல நாள்பார்த்து செயலில் இறங்கும் பழக்கம் இன்றளவும் உள்ளது. இது தான் வேதனை.

இன்று இந்தியா முழுவதிலும் யார் உயர்ந்த சாதி? யார் தாழ்ந்த சாதி? என பல குழுமோதல்கள் உருவாகின்றன.இதனைக் கட்டுப்படுத்தி அமைதி சூழல் உருவாக மத்திய மற்றும் மாநில அரசுகள் போராடிக் கொண்டிருக்கின்றன.இந்த மோதல்கள் இன்று நேற்றல்ல 3000-ம் ஆண்டுகளாகவே நடந்து வருகின்றன.சமவெளிப் பகுதியில் வாழ பழகிக் கொண்ட மக்கள் மட்டுமே மனித நாகரிகத்தை ஏற்படுத்தினர்.

இதே போன்று தமிழகத்தின் தமிழ் பேசும் மற்றொரு இனமான முதலியார்,பிள்ளைமார்,உடையார்,செங்குந்தர் போன்ற இனங்களும் கர்நாடகாவில் கன்னட இனமான லிங்காயத்துகள் மற்றும் துளுவ மொயிலிகளும், உடையார்களும் மொழியால் இரண்டுபட்டவர்களே.வன்னியர் மற்றும் இடையர்களைவிட இவர்கள் அதிகம் படிப்பறிவு பெற்றவர்கள்.  இந்த இருமொழி பேசும் இரண்டு இனங்களுக்கும் உருவான காலவரலாறுகள் உண்டு.

யார் வணங்கும் கடவுள் உயர்ந்தவர்?,வலிமையானவர்? என இருவேறு கும்பல் குணங்களால் கிறித்துவர்களும்,இசுலாமியர்களும் இன்றும் சண்டையும் சச்சரவும்மாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

கிறித்துவமக்களும் இசுலாமிய மக்களும் போட்டியின் காரணமாக கிழக்கத்திய நாடுகளான மங்கோலியா,சீனம்,இந்தியா,போன்ற நாடுகளுக்கு வியாபாரம்.மற்றும் நாடுகளை ஆக்கிரமித்து ஆட்சி கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தால் பரவலான இனக் கலப்பு ஏற்பட்டது.இதனால் தங்கள் மதங்களை பரவவிட்டனர்.

ஆரியர்கள் திராவிட இந்தியர்களோடு கலந்து புத்த மதத்தை சப்பான் வரை பரவவிட்டனர்.உலகம் முழுக்க பரவியுள்ள மதங்கள் மூன்று,அதில் கிறித்துவம், இசுலாம் மற்றும் புத்த மதம்.முதலில் ஆப்கானில் குடியேறிய புத்த மதத்தினரை 1500-ம் ஆண்டுகளுக்கு முன்னர் இசுலாமியர்களால் விரட்டி அடிக்கப்பட்டனர்.பின்னர் ஆசிய கண்டத்தின் பெரும் நிலப்பரப்பில் புத்தமதம் பரவியது.

இந்தியாவில் தலைமை ஆட்சியாளர்களின் ஆலோசகர்களாகவும் அதிகாரமையத்தில் செயல்படுபவர்ளாக இருக்கும் திராவிட இனத்தின் ஒரு பகுதியினரான கேரள இன மாப்பிள்ளைமார்,நாயர் மற்றும் மேனன் இன அதிகாரிகளும், என்றும் ஆட்சியாளர்களுக்கு ஆலோசகராக விளங்கும் பிராமணர்களும் மட்டுமே                                    தமிழர்களின் முரட்டுத்தனத்தால் (வீரத்தால்?) தமிழகத்தில் மற்ற இனமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்கிற அச்ச உணர்வுதான் இதற்கு காரணம்.

மற்றவர்களுக்கு இத்தகைய தமிழ் எதிர்ப்பு உணர்வு இன்று நேற்றல்ல 3000-ம் ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்பட்டு விட்டது.
கன்னித்தமிழாக பலகாலங்கள் விளங்கியது.உலகில் இலக்கியவளம் பெற்ற மொழிகளில் தமிழ்தலையாயது.

ஆனால் இன்றைக்கு தமிழ் பேசும் இனம்தான் மற்ற இனங்களைவிட தாழ்ந்த நிலையில் உள்ளது.இதற்கெல்லாம் காரணங்கள் நிறைய உள்ளன.மனிதகுலம் மேன்மையுறவும்.பண்பட்ட சமுதாயம் உருவாகவும் சொல்லித்தந்த இலக்கியங்களில் கூட கடவுள் வழிபாடுகளை புகுத்திவிட்டனர். கடவுள் வாழ்த்துக்கள் இல்லாத தமிழ் இலக்கியங்களே இல்லை என கூறலாம்.

நம் காலத்து கடவுள் மறுப்பு (புறட்சி?) கவியான பாரதிதாசன் கூட இரண்டுங் கெட்டான் பாரதியின் வற்புறுத்தலால் தன்னுடைய கவிதை தொகுப்புக்கு, ‘எங்கெங்குகாணினும் சக்தியடா!’என்னும் கடவுள் வாழ்த்தை பொறுத்திக் கொண்டார்.மனித இனங்களில் முதன் முதலில் தோன்றிய பகுத்தறிவாத இனம்யூதர்கள்(JEWS)இனம் தான்.அடுத்து தமிழ் இனம் ஏன் இந்த இரண்டு இனங்களும் சமகாலத்தவை என்று கூட சொல்லலாம்.

யூத இனத்திலிருந்து பிரிந்து வந்ததுதான் ஆரிய இனம் இந்த இரண்டு இனங்களுமே இனத் தலைவர்களுக்கு (அரசர்கள்) ஆலோசகர்களாக வாழ்ந்தவர்கள்.இன்றளவும் இந்த நிலைதான்.ஆரியர்களின் வருகையால் தன் தனித்தன்மை இழந்துவிட்டது தமிழ் இனம். வடஇந்தியாவில் ஆரியர்களின் மொழிக் கலப்பால் திராவிடம் உருவாகியது.வர்னாசிரமம் உருவாகியது,அந்த காலகட்டத்தில்தான். 

இந்திய தமிழ் இனமான மவுரிய வம்சத்துக்கு சாணக்கியனாக அமைந்தவர் ஆரியரான கவுடில்யர்.இது கி.முகாலத்தது.கடைசியாக கலிங்கத்துப் போரில் மனம்மாறி புத்தமதத்தை தழுவி கிழக்கத்தியநாடுகளுக்கு புத்தமதத்தை பரவச்செய்த அசோக மன்னன் தமிழ்கலாச்சார அழிவுக்கும் வழிவகுத்தான்.

புத்த மதத்தை தழுவி மணிமேகலையும் சமணமதத்தை தழுவி சீவகசிந்தாமணியும் தமிழ்ப் புலவர்கள் காவியம் இயற்றியதை காணலாம்.

கும்பல் குணம் படைத்த இனங்களாக குன்றுகள்,ஆற்றோரம்,கடலோரம்,சமவெளி மற்றும் பாலை என மண்ணிற்கேற்ற பல்வேறு கலாச்சாரங்கள் கொண்டது தான் தமிழ் இனம்.சமணத்தையும்,புத்த மதத்தையும் வீழ்த்த ஞான சம்பந்தர் போன்றோர் சைவ இலக்கியங்களான தேவாரம்,திருவாசகம் போன்ற மகா இலக்கியங்களை படைத்து தமிழகம் முழுக்க பயணித்து சிவ வழிபாட்டை நிலை நிறுத்தினர்.
.
சாதுர்ய குணமுள்ள மனித இனம் மட்டுமே நீடிக்கும். முரட்டுதனமும் மூட நம்பிக்கையுமே கொண்ட தமிழினத்தால் (குறிப்பாக வன்னியர் மற்றும் ஒடுக்கப்பட்ட இனத்துக்கு கல்வி அறிவுக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் தங்களை ஈடுபடுத்த விரும்பாத அல்லது அத்தகைய தலைவர்கள் உருவாகாத நிலைதான்)மற்ற இனத்தோடு இணங்கி போக முடிய அல்லது முயலவில்லை

வடஇந்தியாவில் நெடுநாட்கள் முசுலிம்கள் ஆட்சியில் இருந்ததால் அரபுமொழியும் இந்துத்தானியும் இணைந்து இந்தி என்கிற தனிமொழி உருவாகிவிட்டது.
ஆங்கிலேயர்களே நம் நாட்டுக்குள் வந்து நம் நாட்டை ஒன்றுபடுத்தி நம்மை ஆளவில்லை எனில் இன்னமும் நாம் முஸ்லீம்கள் ஆளுகைக்கு உட்பட்டுத்தான் இருப்போம் ,இது தான் உண்மை

யாதவா,ஜாட்,மிஸ்ரா,தகூர்,படேல்,குப்தா,ஜெய்சுவால்,சிங்,ஜெயின்,ராசபுத்ரா,நாயக்,தாக்ரே ,குர்மி போன்ற சாதிகள் இந்தி மொழியால் ஒன்றுபட்டவர்கள்.

இதில் ஜெயின் மதமக்கள் மட்டுமே சைவம்.மற்ற சாதியனர் சைவம் மற்றும் அசைவம் விரும்பிகள்.

தமிழ் மொழி தனித்து இயங்கியது.சமசுகிறுதமும் தனித்து இயங்கியது. இரண்டு மொழிகள் இணைந்து தெலுகு,கன்னடம்மற்றும் மலையாளம் பிறந்து பின் தென் இந்தியா நோக்கி திராவிட இனமாக பரிணமித்தது.

தெலுகில்-நாயுடு,ரெட்டி,ராஜு,அக்னிகுலசத்ரியர்(வைணவம்)
கன்னடத்தில்-கவுடா,லிங்காயத்,மொயிலி,உடையார்(சைவம் மற்றும் வைணவம்)
கேரளத்தில்-மேனன்,நாயர்(சைவம் மற்றும் வைணவம்)

தமிழில்-பிள்ளைமார்,வன்னியர்,வேளாளர்,முதலியார்,உடையார்,முத்தரையர் மற்றும் முக்குலத்தோர் (சைவ மதம்)

சாதியத் தலைவர்களை உருவாக்குவதும்,அவர்களுக்கு மந்திராலோசனை வழங்குவதும் பிராமணர்களின் குலத்தொழில் என்றாகி விட்டது.ஒரு குழுத் தலைவனுக்கும் மற்றொரு குழுத்தலைவனுக்கும் பிரிவினை ஏற்படுத்திஅதில் ஆதாயம் அடைவதில் கைத் தேர்ந்தவர்கள்.

ஒரு குழுத் தலைவனுக்கும் அவன் வாரிசுகளுக்கும் கல்வி அறிவைப்புகட்டி அவனை ஒரு எல்லைக்குள் அல்லது தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இயங்க முனைப்பு காட்டுவார்கள்.எக்காரணத்தைக் கொண்டும் இந்த சத்திரியர்களுக்கு அறிவியல்படிப்போ அல்லது அறிவியல் சிந்தனையோ சேராமல் பார்த்துக் கொள்வார்கள்

இந்தியாவில் எல்லா மொழிகளிலும் பிராமணர்கள் உள்ளனர்.அவர்கள் வட இந்தியாவில் பண்டிட்,தேசாய்,,ராவ்,சர்மா பேனர்சி மற்றும் சட்டர்சி முகர்சி என்கிற பட்டப் பெயருடன் அழைக்கப்படுகின்றனர்.
                                          
தென்னிந்தியாவில் தமிழகத்தில் அய்யர், அய்யங்கார் தீட்சித்,குருக்கள் எனவும் கேரளாவில் நம்பூதிரிகள்,தந்திரிகள்,அய்யர்கள்(பாலக்காடு) என அழைக்கப்படும் சைவ உணவு பிரியர்கள்.               

இந்தியாவில் தீண்டத்தகாத மனித இனம் உருவாகி சுமார் 3000-ம் ஆண்டுகளாகிவிட்டது என ஆராய்ச்சியாளர்களின் கருத்து என முன்னமே பார்த்தோம்.இந்திய அரசியல்வாதிகள் இன்றைக்கு இதை வைத்துதான்அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் அனைத்து மொழி பேசும் இனங்களிலும் சேரிவாழ் இனமக்களைஆங்கிலேயர்களால் பட்டியல் இனத்தவர்(sheduled caste)என பெயரிடப்பட்ட மக்கள்-தமிழில்-பறையர்,பள்ளர்எனவும்
கேரளாவில்-ஈழவர் எனவும்,தெலுகு மற்றும் கன்னடத்தில் மாலவா எனவும் மராத்தி மற்றும் இந்தியில் தலித் எனவும் தீண்டாத மனிதஇனம் உருவாகிவிட்டது.

இது போன்று ஒரு சமுக அமைப்பு உலகில் அனைத்து மதங்களிலும் உண்டு.இந்து மதத்தில் மட்டும் ஒரு சாதிய அமைப்பாக செயல்படுகிறது. இந்தியக் கோயில்களில் பிராமணர்கள் மட்டுமே சிலைகளை தூய்மைப்படுத்தி மந்திரங்கள் ஓத தகுதி படைத்தவர்கள் என சட்டம் இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.  

மற்ற மதத்தில் படித்து தேர்வெழுதி மதகுரு பட்டத்திற்கு வரவேண்டும், இந்துமத அமைப்பிற்கும் உலகில் மற்ற மதங்களுக்கும் இதுவே முக்கிய வேறுபாடு.  

இந்தியாவில் சாதிகள் எவ்வாறு உருவாகியது?சாதிகள் வாரியாக குணங்களும் உருவாகிவிட்டதே.!உழைக்கும் மனிதர்களுக்கு (ஏழைகள்) கோவம்(ego)அதிகம் காணப்படுகிறது.

மற்றவர்கள் உழைப்பில் வாழும் (உயர்ந்த அல்லது பணக்காரவர்க்கம்)மனிதர்கள் தந்திரசாலிகளாக வாழ்கின்றனர்.

இந்தியாவின் பூர்வகுடி மக்களுக்கு மதம் இல்லை,சாதிகள் இல்லை.இவர்கள் பேசிய மொழி தமிழ்.எழுத்து வடிவம் வட்டெழுத்து.

சிலர், இந்திய பூர்வக்குடி மக்கள் என்பவர் திராவிடர்கள் என்பர். அது தவறான கணிப்பு.
                              
தமிழ் மட்டும் தனித்து இயங்கியது.இன்றுவரை தமிழின் தனித்தன்மை அழியாமல் பாதுகாக்கப்படுகிறது. இந்திய பூர்வக் குடிமக்களை,அடக்க

(சாளுக்கியா,யாதவா,குர்மிக்கள்,ராஜபுத்ரர்கள்,வர்மாக்கள்,வன்னியகுல சத்ரியர்,அக்னிகுலசத்ரியர்,குப்தா,ஹோய்சலா,நாடார்,வேளாளர்,கவுடா,குஷானர்,சாதவாகனர்,காகாட்யர்,நாயர்)

 கடவுள் அவதாரங்கள் கதை புனையப்பட்டு பத்துவிதமான முரட்டு(கும்பல்) மனிதர்களை அடக்க கடவுள் அவதாரமாக கிருஷ்னன் படைக்கப்பட்டான்.கிருஷ்னலீலா கதைகள் நாடு முழுக்க (தசாவதாரம்) பரப்பப்பட்டது.

ஆரியர்களின் தன்னலதேட்டம்(exploitation) திராவிடர்களை ஆரியர்களின் அடியாக்கிவிட்டது.தனித்துவிடப்பட்ட தமிழர்கள் விரக்தியானார்கள்.யாதவ மக்களின் துணையோடு வடக்கே இருந்த அக்னிகுலசத்ரியர் தெற்கு நோக்கி புலம் பெயர்ந்தனர். விரக்தியில் இருந்த தமிழனை மயக்க வன்னிய புராணம் புனையப்பட்டது, என முன்னமே பார்த்தோம்.இது ஆரியரின் மற்றொரு பிரிவினரான சைவ பிராமணர்கள் கையாண்ட யுக்தி.

வைணவத்தை தழுவிய யாதவர்களுக்கு போட்டி இனமாக வன்னியர்களுக்கு சைவவன்னிய புராணம் எழுதப்பட்டது.வாதாபி என்றொரு அடங்கா கும்பல் (சாளுக்கியரில் ஒருபிரிவினர்,இன்றய கர்நாடகா) ஆரியர்களை அசிங்கப்படுத்தியது. அவல நிலையில் இருந்த பிராமணர் கனவில் சிவன் தோன்றி அக்கினி குண்டத்தில் யாகம் வளக்கச் சொல்கிறார்.அந்த யாகத்தில் ஒருமாவீரன் தோன்றுவான்.

முரட்டு வன்னியர்களை முட்டாள்களாக்கிய வன்னியபுராணம்

வன்னிய புராணத்தை கொஞ்சம் விரிவிக அலசுவோம்!

ஆண்டு தோறும் சித்திரைக்கு  முந்திய  நாள் பங்குனி உத்ரம்,அன்று வீர வன்னியன் அவதரித்ததாக வைத்தீசுவரன் கோயில் கல்வெட்டு கூறுகிறது.

அந்த கல்வெட்டு தமிழ் வட்டெழுத்து முறையில் (பிராமி ஸகிரிப்ட்) செதுக்கப்பட்டுள்ளது.இன்றய தமிழுக்கும் அந்த கல்வெட்டு தமிழுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.அதைப்படிப்பவர்கள்,அவரவர் மன நிலைக்கு ஏற்ப ~இந்த எழுத்தின் உச்சரிப்பு இதுவாகத்தான் இருக்கும்என யூகித்து ஒரு கோர்வையான வரலாற்றை உருவாக்குவர்.

இந்த கல்வெட்டை தொடர்ந்து,நூல் வடிவில் வன்னிய புராணத்தை எழுதியது,சுந்தர பாண்டியன் முன்னிலையில்(இவன் வன்னிய இனத்தைச் சார்ந்த குறுநில மன்னன்)இவனிடம் அமைச்சு வேலைப்பார்த்தது தமிழ் இலக்கியங்களை உருவாக்கிய  பிள்ளைமார் இனத்தைச் சார்ந்த   ஶ்ரீவீர பிள்ளை அவர்களால் எழுதப்பட்டது.

சமத்கிருத நூலான அக்னேய புராணத்திலிருந்து,வன்னிய புராணம் என்கிற நூலை தமிழ்படுத்தப்பட்டது>காரணம் சமத்கிருத மொழியை வன்னியர்களால் பேசவோ,எழுதவோ முடியாது அந்த மொழியின் தன்மை அப்படி இயற்கைக்கு (கடவுளுக்கு?) முரணானது.(படிக்க-தேவநேய பாவணரின் மொழியியல் கட்டுரை)
புராணம்-துர்வாசர் முனிவருக்கும் கஜமோகினி(சூரபத்மனின் தங்கை) என்கிற அசுரகுல பெண்ணுக்கும் சேர்ந்து உருவான இரண்டு குழந்தைகள்,1-வில்வலவன்,2-வாதாபி.

அகத்திய முனிவருக்கும்,துர்வாச முனிவருக்கும் ஒற்றுமை கிடையாது(சுருக்கமா சொன்னா விளக்கெண்ணை முதலியாருக்கும் வெய்யிலாளி (துர்வாசம்) வன்னியனுக்கும் வாழ்வியல் ரீதியாக பிரச்சினை, இன்றும் இது நீடிக்கிறது.

துர்வாசரின் இரண்டு பிள்ளைகளும் அகத்தியரை தொல்லை கொடுத்து வந்தனர்.கோபமுற்ற அகத்தியர் வில்வளவனை விழுங்கிவிட்டார்,அதாவது சாகடித்து விட்டார்.வாதாபி சினம் கொண்டு சிவன் முன்னிலையில் தவமேற்கொள்கிறான்.

மாயனின் மகளான சொக்க கன்னியை மணக்கிறான்.இவன் குருவான சுக்கராச்சாரியார் துணை கொண்டு தேவர்களை (பிராமணர்களை) துன்புறுத்தினான்.இதை கண்ட சம்பு மகரிஷஇ பிராமணர்களை காக்க யாகம் நடத்தினார்,அந்த யாகத்தில் குதிரை மீதி அமர்ந்து வேல் வாளோடு தோன்றியவன் தான் ருத்திர(வீர) வன்னியன்.

சிவனும் பார்வதியும் இந்திரனோடு(பிரமணன்?) பேசி அவன் மகளான மந்திர மாலையை ருத்திர வன்னியனுக்கு மணமுடிக்கின்றனர்.மந்திரமாலை என்பவள் முருகனின் மனைவியான தெய்வயானையின் தங்கையாவாள்.முரட்டு வன்னியர்களை கடவுளின் சம்பந்தியாக புனையப்பட்டதில்  வன்னியனுக்கு மாய மந்திங்களில் பிடிப்பு ஏற்பட்டுப்போனது.
சிவனின் வாரிசுகளை மணம் முடித்ததால் சைவ வன்னியனாகவும்,வைணவனான கிருட்னனின் சம்பந்திகளான சத்ரிய துரியனின் வாரிசுகள், வைணவ வர்மாக்களாகவும் இரு பெரும் பிரிவுகள் ஏற்பட்டது.

(வைணவ வர்மாக்களுக்கும்,சைவ வன்னியர்களுக்கும் பெண்ணெடுத்து பெண் கொடுக்கும் சம்பந்தி உறவுமுறைகள் இன்றளவும் பேணப்படுகின்றன.
இவர்கள் இந்தியா முழுவதும் மட்டுமல்ல தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து,கம்போடியா போன்ற நாடுகளில் வெவ்வேறு மொழிகளில் சத்ரியர்களாக வாழ்கின்றனர்.)  

வீர வன்னியனுக்கும் மந்திர மாலைக்கும் நான்கு பிள்ளைகள் பிறக்கின்றனர்.இவர்கள் முறையே,
1-கிருட்ன வன்னியர்(வைணவம்),2-பிரம்ம வன்னியர்,3-அக்னி வன்னியர் 4-சம்பு வன்னியர் ஆவார்கள்.இவர்கள் காந்தா(சுசிலா)எனும் முறவியின் நான்கு மகள்களான,இந்திராணி,நாரணி,சுந்தரி,மற்றும் சுமங்கலி ஆகிய நால்வரை மணந்தனர்.,

(ஆசிரியர் கருத்து-
இந்த ஒரு வன்னிய தந்தைக்கும் நான்கு தாய்களுக்கு பிறந்தவர்கள் தான்   வன்னியரின் உட்பிரிவுகளான,முத்தரையர்,பாளையக்காரர்,முக்குலத்தோர் மற்றும் கவுண்டர் போன்றோர்.)

இது வேறு ஒன்றும் இல்லை தன்கையை வைத்து தன் கண்ணையே குத்திக் கொள்வது போல பங்காளிச் சண்டைகள் மூட்டப்பட்டது.அதாவது ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொல்வது வீரம் என இரு வேறு கும்பல் குணத் தலைவர்களுக்கும் உணர்த்தப்பட்டது.அதில் மயங்கிய வன்னியர்கள் வாதாபி நோக்கி படையெடுத்தனர்.போர் மூண்டது. வாதாபிகள் தோற்றனர்.வன்னியர்கள் வென்றனர்.ஆரியர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் வழிப்பட்ட விநாயகரை தமிழ்நாட்டிற்கு தூக்கி வந்தனர். சிவனுக்கு மகனாக்கி கதை வடித்தனர்.   சைவமத கொள்கைப் பிடிப்பில் சற்றும் தளராத மற்றொரு தமினமான பிள்ளைமார்களை (வேளாளர்)மயக்க சிவனைத் தலைவனாக்கி சிவபுராணம் உருவாக்கப்பட்டது. சிவன் சக்திக்கு(பார்வதிக்கு) தலைமகனாக விநாயகரையும் இளைய மகனாக முருகனையும் கதாபாத்திரங்களை படைத்தனர்.ஆரியர்களை ஆதரித்தவர்கள் உயர் குடிமக்களாகவும் எதிர்த்தவர்களை ராட்சசர்கள் அல்லது அரக்கர்கள்,அல்லது அசுரர்கள் என அழைக்கப்பட்டனர்.அப்பொழுது ஆரம்பித்த இனப்போர்(பங்காளிச்சண்டை) இன்று வரை ஓயவில்லை.                                                             தமிழ்ப் பேசிய மற்றொரு இனமான மலைவாழ் இனம் குறவர் இனம்.இவர்களின் முரட்டு குணத்தை அடக்க புனையப்பட்டது தான் முருகன்-வள்ளி காதல் திருமணம்.இதை தெய்வத் திருமணமாக சித்தரித்து குறவஞ்சி நாடகம் போடப்பட்டது

உலகில்உள்ள 5 கண்டங்களில் மனிதர்கள் தோன்றினாலும்,அதில் சிறப்புவாய்ந்த மனித இனம் நைல் நதி தீரத்தில் தோன்றியவர்களே.இவர்கள் இன்று அய்ரோப்பா முழுவதிலும் பரவிய வெள்ளையர்கள்,பின்பு படிப்படியாக இங்கிலாந்து,மேற்கு ஆசிய கண்டம்,அமெரிக்கா,ஆஸ்ட்ரேலியா,அரபுநாடுகள் முழுவதும் பரவிவிட்டார்கள்.

வெள்ளையர்களில் மொத்தமே நான்கு மதப்பிரிவினர்கள் தான்.1-யூதர்கள்,2-ஆரியர்கள்,3-கிறித்தவர்கள்,4-இசுலாமியர்கள்.

மனிதர்கள் உருவாக்கிய மொழிக்கு எழுத்துவடிவங்கள் மொத்தமே, -,l,+,0  இப்படித்தான் தோன்றியது.இதன் கூட்டு உருவங்களே உலகின் பலமொழிக்கு வடிவங்கள்.மனிதன் எழுப்பிய ஒலிக்கு உருவம் தேவைப்பட்டது.அதுதான் எழுத்து.ஒருமனிதன் கருத்துக்களை இன்னொரு மனிதனுக்கு (மூன்றாவது மனிதனுக்கு)தெரியப்படுத்த எழுத்துக்கள் அவசியமாகிவிட்டது.மனிதன் பேச்சு மாறாதவன் என நிருபிக்க எழுத்துக்கள் தேவைப்பட்டது

உலகத்தின் பூர்வ குடிமக்கள் பேசிய மொழிகள் 4 மட்டுமே(2000-ம் ஆண்டுகளுக்கு முன்).அதில் முதன்மையானது லத்தின் மொழி.இரண்டாவது சமசுக்கிருதம்,மூன்றாவது தமிழ்,நான்காவது சீனம்.

தற்போது பூர்வ மக்களின் மொழிகளாக தமிழும்,சீனமும் மட்டுமே நிலைத்துள்ளது
ஆங்கிலத்திற்கும்,உருது மொழிக்கும் மூலமொழி லத்தீன் எனும் மொழி. அது இப்பொழுது பேசும் மொழியாக இல்லை.ஆங்கிலத்திலிருந்து தழுவியது பிரென்சு,செர்மன்,மற்றும்ருசியா மொழிகளாகும்இந்த மொழிகளைத் தழுவி பல கிளைமொழிகளும் இனங்களும் உருவாகிவிட்டன.

ஆர்யர்களும் வெள்ளை இனத்தை சார்ந்தவர்கள் தான்.இந்தியா போன்ற வெப்ப மண்டல பிரதேசங்களில் குடியேறியதால் சற்று நிறம் மங்கிவிட்டனர்.

முகலாயர்கள் சுமார் 500 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டதால் சமசுக்கிருதமும் அரபுமொழியும் இணைந்து இந்தி மொழி உருவாகியது.

சீனமொழி சில மாற்றங்களுடன் சப்பான்,கொரியா,வியட்நாம் போன்ற இன மொழிகளும் உருவாகியது.புத்த மதத்தின் மொழிகளாகிவிட்டது

இந்தியாவை விட்டு புலம் பெயர்ந்த புத்தமத நெறியாளர்கள் சமசுக்கிருதமும் தமிழும் இணைந்த மொழியாக மாற்றம் அடைந்து கம்பொடியா,மியான்மர்(பண்டய பர்மா)இலங்கை வாழ்மக்கள் வழக்கு மொழியாக உள்ளது.
மொழிகளைப் பற்றி அறிந்தோம்.உலக மதங்களைப் பற்றிஅறிவோம்.(2000-ம் ஆண்டுகளுக்குமுந்தயது)
                         
பூர்வ மொழிகள் போல பூர்வ மதங்களும் 4வகைப்படும்.

1-யூதம்,2-இந்து,3-புத்தம்,4-கிறித்துவம்

பின்னாளில் உலகமெங்கும் உள்ள மதங்கள் கடவுளுக்கு உருவங்கள் கொடுத்து சிலை(உருவ)வழி பாட்டுக்கு மாறியது . பின்பு பாறைகளில் ஓவிய வழிப்பாடு தோன்றியது.

இன்று உள்ளது போல் வியாபார நோக்கமுள்ள மதங்களாக மாறிவிட்டன.
ரவிவர்மாவிற்குப் பின்(200-ஆண்டுகளாக) காகித ஓவியம் பிரபலமாகிவிட்டது.மூடநம்பிக்கை வளர்ச்சிக்கு இவையெல்லாம் அமோகமாக வித்திட்டது.

மனிதர்களுக்கு உயிரோட்டம் அவசியம்.சைவம் என்றாலே உயிர்.உயிர் வழிப்பாடு தான் மனிதர்களுக்கு முக்கியம் என்று உணர்த்த சைவ மதம் தோன்றியது.

வைணவர்களின் சிலை வழிப்பாடு ஆரவாராத்தால்,சைவமதத்திற்கும் சைவமதபற்றாளர்களுக்கும் சிலை வழிபாடு அவசியமாகிவிட்டது

உடலில் உயிர் மட்டுமே இயங்காது உயிருக்கு சக்தி அவசியம் எனும் சிவசக்தி வழி பாட்டை மக்களுக்கு புரியவைக்க சைவ இலக்கியங்கள் தோன்றின. மானமிக்க-வீரமிக்க தமிழினம் இங்கேதான் அழியத் தொடங்கியது.
                                
வெய்யில் உழைப்பாளிகளான தமிழர்களை நிழல்பிராமணர்கள் எவ்வளவுதூரம் அசிங்கப்படுத்தி,இழிவுப்படுத்தி மனமாற்றம் அடைய வைத்தனர் என்பதை பின்வரும் பக்கங்களில் காணலாம்.                                  சிவசக்தி மற்றும் சிவலிங்க வழிபாட்டை தமிழ்சைவ இலக்கியங்களில் காணலாம்.

சாகாவரம் பெற்ற தமிழனை நாயன்மார்கள் (வாழா வெட்டிகள்) இயற்றிய தேவாரம்,திருவாசகம் போன்ற ஓலைச் சுவடிகளால் சாகும் தமிழனாக்கி விட்டது. இன்று அதிக ஆர்வ கோளாரால் விரதம் இருந்து (விரதம் இருப்பது கடவுள் வாழ்வதற்கா? அல்லது மனிதன் வாழ்வதற்கா?) பாடல்பாடி,இசைப்பாடி,மகிழ்ச்சியோடு வாழவேண்டிய 30-40வயதில் சக்கரை மற்றும் இதய நோயாளிகளாக காட்சி அளிக்கின்றனர்.

ஆணோடு சேர்ந்து வாழாத பெண்களை வாழா வெட்டிகள் என அழைப்பதுண்டு.ஆனால் பெண்ணோடு சேர்ந்து வாழாத ஆண்களை வாழாவெட்டன் என அழைப்பதில்லை.அவர்களுக்கு வேறு பெயர்கள் உண்டு. அதாவது சாமியார்கள்,துறவிகள்,சித்தர்கள் எனப் பொதுவாகவும்,சைவமத துறவிகளை நாயன்மார்கள் எனவும்,வைணவமத துறவிகளை ஆழ்வார்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.நாம் இவர்களையெல்லாம் வாழா வெட்டிகள் என அழைத்தால் என்ன தவறு?

ஆணோடு பெண்ணும் பெண்ணோடு ஆணும் சேர்ந்து வாழும் முறைக்கு சம்சாரிகள் என்றுப் பெயர்.குடும்ப பிரச்சினைகளை சமாளிக்கத் தெரியாத ஆண்களை-குடும்பத்தை விட்டு விலகிய ஆண்களை சித்தர்கள் என்கின்றனர்.
ஆனால் பெண்களுக்கு அந்த மாதரியான கவுரவபட்டப் பெயர்கள் சமுகத்தில் நிலவவில்லை.ஏன்? இன்றுவரை அப்படியொறு சிந்தனை யாருக்கும் எழவில்லை.ஏன்?

வளமான இலக்கிய சிந்தனை உள்ள உலக செம்மொழிகளான தமிழ்,சமசுக்கிருதம்,சீனம் மற்றும் அய்ரோப்பிய மொழிகளின் முன்னோடியான லத்தின் மொழிகளிலும் பெண்களை வாழாவெட்டிகள் எனவும் ஆண்களை சாமியார்கள் என்றுதான் அழைக்கப்படுகின்றனர்.

வரலாற்றை நோக்கும் போது சாகாவரம் பெற்ற சாமியார்கள் உண்டு.அவர்களுள் மிக முக்கியமானவர்கள்
1-புத்தர்,2-மகாவீரர்,3-இயேசு,4-முகமதுநபி.(இந்துமதத்தில் ராமனும்,கிருட்னனும் அவதார புருஷர்கள்,மதவாத உலகத்தின் முன்னோடிகள்)

இவர்கள் நால்வருமே தனித்தனி கும்பல் குணம் கொண்ட நான்கு விதமான மதங்களை உருவாக்கினர்.மனஒழுக்கங்கள் தான்(ஆன்மீகவழி) மனிதனை மிருக குணங்களிலிருந்து விடுபட்டு இறைவனடி சேரமுடியும் எனும் (கொள்கைகளை)மார்கங்களை வகுத்தனர்.இவர்களோடு புதியதாக 300 ஆண்டுகளுக்கு முன் குருகோவிந்த் தலைமையில் சீக்கியமதம் உருவாகி இன்றைக்கு இவர்கள் மக்கள் தொகை இரண்டு கோடிகளை தாண்டிவிட்டது.

150 ஆண்டுகளுக்கு முன் செர்மனியைச் சார்ந்த காரல்மார்க்சு மெய்யறிவு கொண்ட பொது உடமைக் கொள்கையை வகுத்தார். மூலதனம் எனும் வேதநூல் மூலம் புதிய கம்யூனிச மதக்கொள்கையை உருவாக்கினார். இன்று உலகில் இவர்கள்(rationalist) மக்கள் தொகை10 கோடியை மிஞ்சுகிறது.

பழமைக் கொள்கையான அருவ(spiritual worship) வழிபாட்டிலிருந்து விடுபட்டு மெய்யுறுகொள்கை(pragmatism) என்கிற புதிய சிந்தனைகளுக்கு தங்களை உட்படுத்திக் கொண்டனர்.                               மனிதன் ஆன்மிக வளையத்துக்குள் வந்த பின் மனிதனுக்கு எப்பொழுதுமே இந்த குழப்பம் உண்டு.அதாவது பிரம்மச்சாரியத்திலிருந்து நேரடியாக துறவர வாழ்க்கையா? அல்லது பிரம்மச்சாரியத்திலிருந்து குடும்பஸ்த்தானாகி (சம்சாரி) பின் துறவரமா?

அனைத்து மத வேதங்கள் என்ன கூறுகிறது? குடும்பஸ்த்தனாகிவிட்டால் துறவரம் மேற்கொள்ள முடியாது எனவே,இறைவன் கூறுகிறான், ‘என்னிடம் வர விரும்புவர்கள் துறவரம் மட்டுமே சிறந்தவழி அதற்கு பிரம்மச்சாரியம் சரியான தீர்வு’ .என வேதங்கள் தெரிவிக்கின்றன.
இறைவன் கூற்று சரி என கூறுபவர்களிடம் நான் கேட்பது யாதெனில் பெண் இனத்திற்கு இவ்வுலகில் இடமில்லியா?

இங்குதான் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

தினத்தந்தி மற்றும் இணையதளங்களில் தமிழர்களின் பூர்வக்குடித்தன்மையை அவ்வப்போது வெளிடப்படுகிறது.தினம் ஒரு தகவலில்,பாகித்தானில் தமிழ் எனும் தலைப்பில் சில மாதங்களுக்கு முன் ,ஒரு  கட்டுரை வெளியிட்டது.இதோ-பாகித்தானில் சிந்து நதியின் கரையோரத்தில் உருவான சிந்து சமவெளி நாகரிகம் ஒரு திராவிட நாகரிகம் என்றும் ,தமிழர்கள் அங்கிருந்து தெற்கே வந்து தமிழகத்தில் குடியேறினார்கள் என்றும் இல்லை அவர்கள் தெற்கு இருந்து வடக்கே இடம் பெயர்ந்தார்கள் என்றும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.ஆனால் அங்கு இருக்கும் நகரங்களின் பெயர்களில் இன்றும் தமிழ் இருக்கிறது.

பாகித்தானில் கொற்கை,வஞ்சி,தொண்டி,உறை,கூடல்,கோளி,மத்ரை என்றும் ஆப்கானித்தானத்தில் கொற்கை,தூம்புகார்,என்றும் தமிழ்பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன.இதுபோக சங்க இலக்கியங்களில் வரும் பெயர்களான அம்பர்,தோட்டி,தோன்றி,ஈழம்,கச்சி,காக்கை,களார்,கொங்,நாலை.நேரி போன்றவையும் அங்கிருக்கின்றன.

மேலும் ஆப்கானித்தானில் ஒடும் 3 ந்திகளுக்கு தமிழ் பெயர்கள் இருக்கின்றன.



அவை
காவேரி,தொர்னை,பொருன்சு,வாலா,பொர்னை,புரோனை,காரியாரோ என்று சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் பெயர்களில் நதிகள் ஓடுகின்றன.அங்குள்ள மலைகளுக்கும் தமிழ் பெயர்களே உள்ளன.

ஆப்கனில் பொதினே,ஆவி,பரம்பு,என்றும்,பாகித்தானில் உள்ள மலைகளுக்கு பொதியன், பளனி,தோட்டி,என்றும் உள்ளன.

ஈரானில் உள்ள ஒரு மலைக்கும் பொதிகே என உள்ளன.

இதுலிருந்து என்ன தெரிகிறது? என்னுடைய ஆய்வின் அடிப்படையே தமிழர்கள் மட்டுமே இந்திய பூர்வ குடி மக்கள் என யூகிக்க முடிகிறதா?   

மனிதகுலம் சிறக்க சுயசிந்தனையோடு ஒருமதம் ஒன்று உலகில் உண்டென்றால் அது தமிழ் மதம் மட்டுமே. அதென்ன தமிழ் மதம்?அது தான் சிவசக்தி மதம். இன்றய காலகட்டத்தில் மற்ற மத கோட்பாட்டோடு   இது ஒரு விசித்திரமான மன ஒழுக்க சிந்தனை.

மத இடைத்தரகர்கள் நுழைந்து இந்த மதத்திலும் புதிய வழிபாட்டு கொள்கையை உருவாக்கி பாமரமக்களிடம் பணம் கரக்கும் வேலையைச் செய்கின்றனர்.ஜூவம்(சிவம்)எனும் வட மொழி வார்த்தையிலிருந்து வந்ததுதான் ஜைவம்.ஜைனம் சைவம் என்பது மரம் செடி கொடிகளைக் குறிக்கும் தாவரம் தான் சைவம்.இதையே உணவாக க()ண்டவர்கள் தமிழர்கள்.

கர்மம்,விதி,முன்வினை,பாவம்,புண்யம்,முற்பிறவி,பின்வினை மற்றும் மறுபிறவி போன்ற மெய்யறிவற்ற சொற்களால் வெய்யில் தொழிலாளிகளாக்கி,இந்த நான்கு இனங்களும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தனர்.இன்றும் இந்நிலை நீடிக்கின்றது.       

இந்தியாவில் பல மொழி பேசும் இனங்கள் இருந்தாலும் அதிகப்படியான மொழிபேசும் இனமான இந்தி, மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கின்றது.
பல வருடங்களாக(500 ஆண்டுகளுக்குமுன்)  வடஇந்தியாவில் பெரும்பகுதி மக்கள் இந்துத்தானி மொழிப்பேசி வந்தார்கள்.
உருது மொழி பேசிய இசுலாமிய மக்கள் ஆப்கானித்தான் வழியாக வடஇந்தியாவை பலஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால்,இசுலாம் கலாச்சாரம் கலந்த உருது மொழி சமத்கிருதத்தால் சில மாற்றங்கள் அடைந்து இருந்த இந்துத்தானிமொழி இந்தி என்கிற புதியமொழி உருவாயிற்று.    இந்தியில் சிறு மாற்றங்கள் அடைந்து பெங்காலி,குஜராத்தி, ராஜஸ்த்தானி,மராத்தி,மற்றும் ஒடிசா(இம்மொழி தமிழ்கலந்த சமசுகிரதம்),அந்நாளில் இது கலிங்கம் என்று அழைக்கப்பட்டது.

இலங்கையில் அசோகர் காலத்தில் ஒய்சலர்களின் பங்காளிகளான சிங்களத்தவர் குடியேற்றப்பட்டனர்.அங்கு பூர்வகுடிமக்களான தமிழ்பேசும் இனம் வந்தாரைவாவென்று அழைத்துக்கொண்டது.இப்பொழுது அந்தபூர்வகுடிகள் வாழ நிலம் இன்றி தன்னிலை இழந்துவருகின்றனர்.

மனிதர்களை மதங்கள் ஆக்கிரமித்தப் பிறகு உலகெங்கும் வாழ்ந்த ஆதிவாசிகளை, இன்றைக்கு இருக்கும் முக்கியமதங்களான புத்தமதம்,கிறித்துவம் மற்றும் இசுலாம் மதங்கள் அழித்துவிட்டன.

ஆதிவாசிகளான ஆப்ரிக்க கருப்பின(நீக்ரோ) மக்களை கிறுத்துவ மற்றும் இசுலாம் மதங்கள் தத்து எடுத்துக் கொண்டன. எனவே கருப்பினம் அழியவாய்ப்பில்லை.
             
             146- அறம் காத்த தமிழினத்தை காத்தவர்கள் ஆரியர்களே!

உலகில் மற்றொரு அடிமையாக்கப்பட்ட இனமான கருப்பும் இல்லாத சிவப்பும் இல்லாத மாநிற தமிழ் பேசும் இனம் தன்னுடைய தனித் தன்மை இழந்து வருகின்றது. இன்னும் இந்த தமிழினம்  அழியாமல் இருப்பதற்கு,தமிழர்களின் அறம் காக்கும் குணத்தால், காரணம், பிராமணர்களே! ஆம் உலகின் தோன்றிய மூத்த, பண்பட்ட, மனித நேயத்தில், சிறந்த இனம் ஆரியம் மட்டுமே!யூதர்கள் வழித் தோன்றல்களான கிறுத்துவமும்,இசுலாமும் தங்கள் மதங்களை பரப்ப மனித நேயமற்ற வகையில்,உலகின்  பூர்வ குடிமக்களை அழித்ததை வரலாறு அறிந்தவர்கள் உணர்வர்.  

ஆம், உலகின் பிற பகுதிகளில் வாழ்ந்த(வட,தென் அமெரிக்கா கண்டங்கள் மற்றும் ஆஸ்ட்ரேலியா கண்டம்) பூர்வ குடி மக்களை யூத இனம்(கிறித்துவம்,இசுலாம்) அழித்து விட்டது!

இந்திய பூர்வ குடிகளான தமிழினம், அதன் அறம் காக்கும் குணத்தாலும்,ஆரியர்களின் அகிம்சா குணத்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்த உண்மையை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும்!

                                 முற்றும்