சரி என சொல்லிவிட்டு ஒரு வாரம் கழித்து சென்று அந்த நூலை பெற்று வந்தேன்.அதை மீண்டும் ,ஜெராக்சு கடையில் வேலை பார்ப்பவரிடம் தந்தேன். அவர், ‘இதை ஒரு அச்சக உரிமையாளரிடம் தந்து நான் நூலாக்கித்தருகிறேன் சார்,இதற்கு பக்கத்திற்கு ரூபாய் 25 ஆகும் சார்’ என்றார்.
மேலும் அவர், ‘இந்த நூலுக்கு மேல் அட்டை வடிவமைக்க ஒரு தொழில் நுட்பம் தெரிந்தவரை அணுக வேண்டும்’ என்றார்.
‘அதற்கு அந்த பேஜ் மேக்கர் செய்த பெண்ணையே பாருங்க சார்’ அந்த பெண் அவருக்கு தெரிந்த ஒரு அட்டையை தேர்வு செய்து தந்தார்.மீண்டும் அந்த நூலை ஜெராக்சு கடையில் வேலை பார்ப்பவரிடம் தந்தேன். நூல் தயாராகி விட்டது.
இந்த நூலை வெளியிட ஒரு பெரிய அறிஞர் தலமையில் நிகழ்த்த வேண்டும் என்றனர்.
மீண்டும் மருத்துவர் அய்யாவை அணுகினேன்.
அவர், ‘சமுக முன்னேற்ற சங்கத்தலைவர் திரு கோபால் அவர்களை அணுகுங்கள் என்றார்.அவரை சென்னையில் சென்று பார்த்தேன்.அவர் ‘உங்கள் ஊரில் திரு செம்மங்குடி துரையரசனை சென்று பாருங்கள் என்றார். அவரை தேடிச்சென்றேன். இன்முகத்துடன் என்னை வரவேற்று.நூலைப் படித்தார். ‘இந்நூல் சிறப்பாக உள்ளது,விழாவை சிறப்பாக நடத்துவோம்’ என்றார்.
ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்தோம்.2011ம் ஆண்டு திரு கோபால் மற்றும் திரு ஜெயபாஸ்கரன் அவர்களை நேரில் சென்று அழைத்தோம். திரு செம்மங்குடி தலைமை தாங்க,திரு கோபால் நூலை வெளியிட,திரு ஜெயபாஸ்கரன் நூலை பெற்றுக்கொள்ள ,அனைவரும் நூலைப்பற்றிய உரை நிகழ்த்தினர்.விழா இனிதே நிறைவுற்றது.அவ்வாண்டு தமிழக அரசு தன் நூலகங்களுக்கு நூலை பதிப்பகத்தாரிடமிருந்து வாங்க விளம்பரம் வெளியிட்டது.
நூலை தபாலில் அனுப்பினேன்.என் நூலை ரூ 37 ஆயிரத்திற்கு 600 நூல்களை அரசாங்கம் வாங்கிக் கொண்டது.
2012ல் ,’அறவழி சுய சிந்தனையுடன் மகிழ்ச்சியுடன் வாழும் வழிகள்’ எனும் இரண்டாம் விரிவாக்க நூல் 320 பக்கம் கொண்டது நூலை எழுதி முடித்தேன், அந்நூலை திரு செம்மங்குடியாரே வெளியிட இசைவு தந்தார்.2013 ல் இந்நூலையும் ரூபாய் 45 ஆயிரத்திற்கு 600 நூல்களை தன் நூலகங்களுக்கு அரசு வாங்கிக் கொண்டது.
தமிழ் நாட்டு நூலகங்களில் என் நூல்கள் வாசகர்கள் படித்து சிலர் போனில் தொடர்பு கொண்டு பாராட்டின எனக்கு தலகாலே புரிய வில்லை அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. சாதாரண விவசாய கூலிக்குடும்பத்தில் படிப்பறிவற்ற பெற்றோர்களுக்கு 8ம் மகனாக பிறந்த எனக்கு இந்த பாராட்டு பெறுமகிழ்ச்சியை தந்தது.
2014ம் ஆண்டு ‘அகவை முதிர்ந்த தமிழறிஞர்’ விருதுக்கு தமிழக அரசு விளம்பரம் வெளியிட்டது. விளம்பரத்தில் உள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்து விண்ணப்பித்தேன்.அப்போது முதல்வர் ஜெயல லிதா,கடவுள் நம்பிக்கை கொண்டவர்.என்னை இவர் தேர்வு செய்யமாட்டார் என நினைத்து மனுவை மறந்து விட்டேன்.2014 ல் தேர்வு செய்யப்பட்ட விருது பெறுவோர் பட்டியலில் என் பேர் இல்லை.எனக்கு ஏமாற்றமும் இல்லை.அதைப்பற்றி எண்ணமில்லாமல் இருந்தேன். 2015 ல் நான் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் நான் உறுப்பினர் ஆனேன்.அந்த ஆண்டு எட்டையபுரத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா நடந்தது.அந்த விழாவில் ‘பாரதி பணிச் செல்வன்’ எனும் விருது எனக்கு வழங்கப்பட்டது. விழா முடிந்ததும் குற்றாலத்தில் இருக்கும் புரவலர் நடராஜன் (சசிகலா நடராஜன்) ஓய்வு இல்லத்தில் தங்கி இருந்த நேரத்தில் எனக்கு சென்னை தமிழ்வளர்ச்சித் துறையிலிருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது.
.‘அய்யா, நீங்கள் அடுத்த ஆண்டு(2016) ஜனவரி 16ம் நாள் பல்கலைக்கழக மண்டபத்தில் தங்களுக்கு ‘அகவை முதிர்ந்த தமிழறிஞர்’ விருது, தமிழக முதல்வர் தலைமையில் வழங்கப்பட உள்ளது. நீங்கள் தவறாது விழாவில் கலந்து கொள்ள வேண்டும்’ என கூறினர்.எனக்கு இந்த செய்தி ஆச்சர்யத்தை தந்தது. எப்படி நான் தேர்வு செய்யப்பட்டேன் என பின்னாளில் விசாரித்து தெரிந்து கொண்டேன். ஐந்து துறைத்தலைவர்கள் இணைந்து விருது பெறுவோரை தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
அதாவது முதல்வர் தலைமையில் தேர்வு கமிட்டி சுதந்திரமாக செயல்பட்டது என்பது தெளிவாகிறது.
இந்த விருது, இன்று எனக்கு ரூ.4000.மாதாந்திர மதிப்பூதியமும் தமிழ் நாடு முழுவதும்
இலவச பேருந்து பிரயாணம் செய்ய உரிமை அட்டையும் வழங்குகிறது..இது எனக்கு மேலும் மகிழ்ச்சியூட்டியது. எத்தனையோ மனிதர்கள் வாழ்கின்றனர், அத்தனை பேருக்கும் அரசாங்கத்தின் அங்கீகாரம் என்பது சாதாரண மக்களுக்கு வழங்க முடியாது,சமுக சிந்தனையாளருக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும், அந்த வகையில் எனக்கு பெருமைதான்.என் சிந்தனை விசாலமானது.இந்தியா முழுவதும் உள்ள குடும்பங்களில் சம்பரதாயம் சடங்கு என ஏராளமான மூட நம்பிக்கைகள் மண்டியுள்ளதை நான் அறிவேன். இதற்கெல்லாம் மூல காரணம் ராமாயண மகாபாரத இதிகாசங்களின் தாக்கங்கங்களே. அதே கால கட்டத்தில் மத்திய தரைக் கடல் பகுதியில் வாழ்ந்த ஆரியர்கள் கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் பரவத்தொடங்கினர்.
இன்றைய ஆப்கானித்தான் அன்று தமிழர் வாழும் நிலப்பகுதியாக இருந்துள்ளது என சரித்திர சான்றுகளை அறிந்தேன்.
சிந்து சமவெளி நாகரிகம் தமிழர்களுடையதே என்பதை உணர ஆதாங்கள் கிடைத்துள்ளது. முன்னாள் இந்திய உச்சநீதி மன்ற நீதிபதி ‘மார்கண்டேய கட்ஜு’வின் ஆய்வு நூலை படிக்க கிடைத்தது.இன்றைய ஆப்பகனில் இன்றைய தமிழ் நாட்டின் ஊர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதை குறிப்பிடுகிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது? தமிழர்களை அங்கிருந்து அரபு நாட்டு இஸ்லாமியர்களால் விரட்டப்பட்டுள்ளனர் என தெரிகிறது. அது மட்டுமல்ல ஆப்கனிலிருந்து கிழக்கு நோக்கி பயணித்து சிந்து சம வெளியில் குடியேறினர் என்பது புலனாகிறது.அங்கு கிடைத்த கல்வெட்டு மற்றும் தாமிர பத்திர எழுத்துகள் தமிழை ஒத்த வட்டெழுத்துகள் காணப்படுகின்றன.
பின்னாளில் அங்கு வாழ்ந்த சத்ரியர்கள் பங்காளிச் சண்டையால் ஒரு பிரிவினர் கங்கை நோக்கி பயணித்து பீஷ்மரின் தலைமையில் சத்ரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியது புலனாகிறது.
மற்றொரு பிரிவினர் அஸ்சாம் பர்மா வழியாக கம்போடியா சென்று ஜெயவர்மன் தலைமையில் ஆட்சி அமைத்து அங்கு ஒரு பெரிய சிவன் கோயிலை கட்டியது புலனாகிறது. இதற்கு அங்கோர்வாட் என்று பெயர்.இது உலகின் மிகப்பெரிய கோயில், தற்போது புத்தர் ஆலயமாக செயல்படுகிறது.தமிழ் அறிஞர்களில் வரலாற்று ஆய்வாளர்கள் மிகக் குறைவு. இதனால் பிற மொழி வரலாற்று ஆய்வாளர்கள், தமிழை முன்னிலைப்படுத்த விரும்ப வில்லை.மாறாக வரலாற்று சான்றுகளை திராவிட நாகரிகம் என மறுவி அழைத்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த புத்தக கண்காட்சியில் ‘தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு’ எனும் நூலை கண்டேன் .எனது வரலாற்று அறிவை விசாலப்படுத்தியது
இந்நூல்.எழுதியவர், முனைவர் க.த. திருநாவுக்கரசு.இவர் முன்னாள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக செயலாற்றியவர
இந்நூல் தொடக்கத்தில் ‘ராமனின் தாத்தா ருத்தர வர்மன்’ என எழுதியிருப்பார். இந்த வரி என் சிந்தனை களத்தை விசாலப்படுத்தியது. இந்நூலை வாங்கி வந்து படித்து விட்டேன். கிழக்காசிய நாடுகளான பர்மா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனிசியா, கம்போடியா போன்ற நாடுகளின் தமிழர் கலாச்சாரத்தை விவரிக்கின்றன.இந்தியாவில் 2500 ஆண்டுகளுக்கு முன் புத்தர் தோன்றி மக்கள் சிந்தனைக்கு வழி வகுத்தார். முதல் கடவுள் மறுப்பாளர் மட்டுமே..இதனை உணர்ந்த பார்ப்பனர்கள் புத்தரின் கொள்கையாளர்களை அப்போதைய மன்னர்களான மவுரிய மற்றும் குப்தர்கள் துணையோடு கிழக்காசிய நாடுகளுக்கு நாடு கடத்தி விட்டனர்.அதற்கு முன் பரவியிருந்த சத்ரியர்கள் புத்த மதத்தை தழுவ ஆரம்பித்தனர்.
புத்த மதமும் நாளடைவில் சிலை வழிபாடு என மூட பழக்க வழக்கங்கள் கொண்டதாக மாறின
1400 ஆண்டுகளுக்கு முன் முகமது நபி தோற்றுவித்த இஸ்லாம் மட்டுமே கட்டுப்பாடுகள் கொண்ட மதமாக உள்ளது.1818 ல் தோன்றிய ஜெர்மனியின் காரல் மார்க்ஸ் தான் எழுதிய ‘மூலதனம்’ நூல் மூலம் உலகிற்கு மெய்ப்பியல்(pragmatism) கருத்துக்களையும். பொது உடமை பொருண்மை(materialism) கருத்துக்களையும் மக்களுக்கு தந்து விட்டு சென்றார்.இவர் கருத்துக்களை உள் வாங்கிக்கொண்டு மக்களை ஒன்று திரட்டி ரஷ்யாவின் சார் மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடி மக்களாட்சியை நிறுவினார். உலகின் கவனத்தை ஈர்த்தார்.முதாலாம் மற்றும் இரண்டாம் உலகப்போரில் லெனின் முக்கிய பங்கு வகித்தார். இதனை உணர்ந்த சீனாவின் மாசே துங் லெனினை சந்தித்தார்.சீனாவை வல்லரசாக்க என்ன என்ன செய்ய வேண்டும் என கேட்டறிந்தார்.
லெனின்- மார்க்சு கொள்கை கொண்ட கலவையாக சீனா வல்லரசை மாசே துங் உருவாக்கினார்.
பொது உடமை கொள்கைகள் என்னை ஈர்த்தது. முற்றிலுமாக கடவுள் மறுப்பு சிந்தனைக்கு மாறினேன்,1974-75 ல் பட்டப்படிப்பை முடித்து ஓராண்டு கழித்து (B.Ed) ஆசிரியர் பட்டயப்படிப்பை படிக்க நேர்ந்தது
அந்த படிப்பில் மனோதத்துவ இயல்(psychology) மற்றும் மானிட தத்துவம் (philosophy) எனக்கு பிடித்த பாடங்களாக தோன்றியது. மனோதத்துவத்தில்,குழந்தை பருவம்,பெண்கள் மனோ தத்துவம், ஆண்கள் மனோ தத்துவம் எனவும் தத்துவத்தில் spiritualism, idealism, rationalism போன்ற பிரிவுகள் என் அறிவை விரிவாக்கியது.1976ல் எனக்கு தமிழ் நாடு அரசின் (T.N.C.S.C) உணவுப் பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வேலை கிடைத்த பின் தான் நான் இந்த சமுகத்தில் எந்த நிலையில் உள்ளேன் என்பதை உணர முடிந்தது.
பள்ளிக்கூட நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் எல்லாரும் நண்பர்கள் எனும் கருத்தில் பழகினேன். எந்த சாதி மாணவர்களுக்கு என்ன குணம் இருக்கும் என தெரியாமல் பழகினேன்.அப்படியே கல்லூரியை விட்டு வெளியேறினேன். எனக்கு அரசுத்துறையில் வேலை கிடைத்த பின் தான் தெரிந்தது......
நான் இந்த வேலைக்கு தகுதியற்றவன் என்று, இங்கிதமாக பழக வேண்டும்,நாசுக்காக பழகவேண்டும்.யதார்த்தமாக பேச வேண்டும்-இதை எந்த பள்ளி மற்றும் கல்லூரியிலும் சொல்லித் தரவில்லை.என் நண்பர்களுக்கும் இது பற்றி தெரியவில்லை. சாதிகளுக்கு ஏற்ற குணம்,குணத்துக்கு ஏற்ற கலாச்சாரம். எங்கள் ஊரில் எல்லாம் ஒரே சாதியைச் சார்ந்தவர்கள். மாறு பட்ட குணம் கொண்ட சாதிகளிடம் பழகியது இல்லை.
என்னோடு வேலைக்கு சேர்ந்தவர்கள் ஒருவர் பள்ளிக்கால நண்பர்,ஆனால் தெலுங்கு. இன்னொரு நண்பர் கல்லுரி கால நண்பர்,தமிழ் கணக்குப்பிள்ளை. இருவருமே ஒத்த குணம் கொண்டவர்கள்.என்னோடு அவர்களால் ஒத்துப்போக முடியவில்லை என்பதை விட அவர்களோடு என்னால் ஒத்துப்போக முடியவில்லை, என்பதே சரி.இது சாதிய கோட்பாடு என பின்னாளில் புரிந்தது
நண்பர்களின் கேலிக்குண்டான என் கடவுள் மறுப்பு கொள்கையை நிஜப்படுத்த விரும்பினேன்.அதற்கான காலம் கனிந்து வந்தது.2010ல் என் இளைய மகன் வசந்துக்கு கல்யாணம் நடத்த விரும்பினேன். அதற்காக பல இடங்களில் எனக்கு வரப்போகும் மறுமகளை தேடினேன்,சுமார் 5 ஆண்டுகள் தேடினேன். 2015ல் இதற்காக என் கடவுள் மறுப்பு சிந்தனையை தளர்த்திக் கொண்டு பெண் வீட்டாரிடம் அதைப்பற்றி பேசுவதை தவிர்த்தேன்.இறுதியாக என் சிந்தனைக்கேற்ற சம்பந்தி அமைந்தார்.
‘கல்யாணத்தை தங்கள் விருப்பபடி நடத்துங்கள் எனக்கும் உடன்பாடுதான் ‘ என தெரிவித்தார்.
2015 ஆகத்து 30 எனும் நாளை நான் தெரிவு செய்தேன்.விடுமுறை நாளான ஞாயிறு இருக்கும் படி பார்த்துக் கொண்டேன்.நாம் செய்யும் கல்யாண தேதி முகூர்த்த நாளாக
இருக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்,காரணம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இன்னொரு முக்கிய கல்யாணம் இருக்கிறது என சொல்லக்கூடாது அல்லவா?கல்யாண விருந்தை சைவம் அசைவம் கலந்த உணவாக இருக்க வேண்டும் என விரும்பினேன்.
ஒரு வேளை உணவில் கல்யாணத்தை நடத்தி முடிப்பது புத்திசாலித்தனம் என கணக்குப் போட்டேன்.
சம்பரதாயம் சடங்கு என தேவையில்லாத செலவினங்களை தவிர்க்க நினைத்தேன்.
கல்யாணம் என்பது ஆண் பெண் இருவரையும் இணைந்து வாழ குடும்பத்து பெரியவர்கள் நிகழ்த்தும் நிகழ்ச்சியாகும்.எனவே தாலி கட்டுவது ஒன்றே மெய்பியல் நிகழ்ச்சி என தீர்மானித்தேன்.
உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்தேன். சுமார் 2000 பேர் கூடினர்.
காலை 10 மணியிலிருந்து 12க்குள் தாலி கட்டும் நிகழ்ச்சியை முடித்தேன்.மஞ்சள் குங்குமத்தை தவிர்த்தேன்.மாவிலை தோரணம் வாழை மரங்கள் கட்டவில்லை.
மேளதாளங்கள் இல்லை.
பூசணிக்காய் தேங்காய் உடைக்க வில்லை.
கற்பூரம் ஊதுவத்தி இல்லை.
இரண்டு தமிழறிஞர்களை அழைத்து வந்து மணமக்களோடு அமர்த்தி வாழ்த்தச் சொன்னேன்.அவர்களும் இசைந்தனர். நானும் என் மனைவியும் மற்றும் சம்பந்திகளான கணவன் மனைவியையும் அழைத்து நால்வரும் இணைந்து தாலி எடுத்து தர மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டினான்.
12 மணியிலிருந்து 2 மணிக்குள் சைவம் மற்றும் அசைவம் தனித்தனியே அமரவைத்து உணவு பரிமாறும் நிகழ்ச்சி முடிந்தது.இசை நிகழ்ச்சி,கலை நிகழ்ச்சியை தவிர்த்தேன். கல்யாணத்திற்கு காலையில் வந்தவர்கள் மாலை அவரவர் வீடுபோய் சேரும்படி பார்த்துக் கொண்டேன். தேவையில்லாத செலவினங்களை தவிர்த்து, ஆடம்பர உணவு வகைகளை பரிமாறினேன்
கல்யாணம் இனிதே முடிந்தது.எங்கள் நிறுவனத்தின் அதிகாரிகள் 90 சதவிகிதம் முனேனேறிய இன அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் நிரம்பி இருந்தனர்.
எல்லாருமே உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மக்கள். இவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது, இதோ-
அதிகாரிகள் உத்தரவிடும் போது முடியாத வேலைகளை முடியும் என பொய் சொல்ல வேண்டும்.
அதிகாரிகளை எதிர்த்து பேசக்கூடாது.
அதிகாரிகளிடமோ, நுகர்வோர் மீதோ கோவப்படக் கூடாது.
சக ஊழியர்களிடம் மனம் கோணாமல் வேலை வாங்க தெரிந்திருக்க வேண்டும்.
பணி மாறுதல் ஆணை வந்தால் உடனே சென்று மாற்று இடத்தில் பணியில் சேர்ந்துவிட வேண்டும். பணியில் சேர்ந்த பிறகு விருப்பமான இடத்தை கேட்டு மனு அளிக்க வேண்டும்.ஆனால் என் விஷயத்தில் விருப்பமான இடத்தை கேட்டு பெற்று இன்னலை அனுபவித்துள்ளேன்.எனவே நிர்வாகம் பணி மாறுதல் செய்யும் இடத்திற்கு பணியில் சேர்ந்து விடுவேன்.அப்படி சென்று பணியாற்றியதால் எனக்கு பிற மாநில மக்களிடம் பழக வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு நல்ல அனுபவமாகவே எடுத்துக் கொண்டேன்.
தொழிலாளர் சங்கத்தில் இருந்தால் ஓரளவுக்கு பணி பாதுகாப்பு கிடைக்கும், இல்லையேல் அதிகாரிகளிடம் சுமுகமாக பழக தெரிந்திருக்க வேண்டும். ஊழியர்களின் இனம் சார்ந்த அதிகாரிகளுக்கு நல்ல சலுகை கிடைக்கும்.
என் இனத்தில் எனக்கு தெரிந்த அதிகாரிகள் கிடையாது,
1995-96 ல் எனக்கு தெரிந்த ஒரு உறவுக்கார ஐஏஎஸ் அதிகாரி கிடைத்தார் ,அதே நேரத்தில் என் இனம் சார்ந்த ஒரு தொழிற்சங்க தலைவரின் நட்பு கிடைத்தது. அதன்பின் 10 ஆண்டுகள் நிம்மதியாக பணிபுரிந்து 2007 ம் ஆண்டு ஆகத்து மாதத்திலிருந்து ஒய்வை பெற்றேன்.பணி ஓய்வு காலத்தில் வெய்யிலாளி இனமான என் சமுக மக்களின் கல்வியறிவும் சுய சிந்தனையும் வளர்க்கும் பொருட்டு என் சிந்தனையில் உருவான பகுத்தறிவு இயக்கமான ‘ஏழாம் அறிவு இயக்கம்’ என்னுடைய வலைதளமான www.thiru-rationqlism.blogspot.in ல் ஆரம்பித்தேன். இந்த வலைதளத்தை என் மகன் வினோத் உருவாக்கினான். இந்த வலைதளம் ஒரு சிறந்த சிந்தனைக் களமாக உலக மக்களிடம் சென்றடைந்தது. நூல்களை கணினிமூலம் அச்சிலேற்றி நூலாக்கி பின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறேன்
அதை தொடர்ந்து, வலைதளத்தில் உள்ள என் சுய சிந்தனைக் கருத்துகளை, ‘அறவழி சுய சிந்தனையுடன் மகிழ்ச்சியுடன் வாழும் வழிகள்’ எனும் நூலில் தொகுத்து வழங்கினேன்(2011).இந்நூல் பல தரப்பட்ட மக்களை சென்றடைந்தது.தமிழக அரசும் தன் நூலகங்களுக்கு இந்நூலை வாங்கிக் கொண்டது.வலைதள (blogspot) பயன்பாடு மக்களிடம் அதிகம் இல்லை,இதை உணர்ந்த நான் முகநூல்,வாட்சப் மற்றும் ட்விட்டரில் தினமும் என் சிந்தனைகளை பதிவிடுகிறேன். எல்லாவிதமான வினாக்களுக்கும் என்னால் பதிலளிக்க முடிகிறது.
இறந்து போன என் தாய் தந்தையருக்கு அவர்கள் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற நெடு நாட்களாக என் மனதில் ஒரு எண்ணம் உலா வந்தது.அதற்கான காலம் கனிந்து வந்தது,2013ம் ஆண்டு கிராமத்தில் உள்ள என் பழைய வீட்டை ஒருபகுதியை இடித்து விட்டு
நவீனக் கழிப்பறையுடன் பழைய வீட்டின் ஒரு பகுதியையும் புதியதாக இரண்டு சதுரத்தில் ஒரு ஓய்வு இல்லம் அமைத்துள்ளேன்
No comments:
Post a Comment