பொது உடைமை கொள்கைகளை ஊடகங்கள் விரும்புவதில்லை, ஊடகங்களை நடத்தும் தனி முதலாளிகள் பெரும் பணக்காரர்களே, அதனால் அது மக்களிடம் சென்றடைய வில்லை.
ஊடக முதலாளிகள், நிழலாளிகள்தானே? மற்ற நாடுகளுக்கு பரவாமல் பார்த்துக் கொள்கின்றனர். குறிப்பா முதலாளி நாடுகளின் தலைவனான அமெரிக்கா, இல்லாத கடவுளின் ஆதரவாளன். அதே எண்ணம் கொண்ட இஸ்லாமிய நாடுகளும் முதலாளித்துவ நாடுகளே.
சீனாவின் அசுர பலத்தைக் கண்டு தற்போது எல்லா வல்லரசுகளும் அஞ்சுகின்றன. தன்னுடைய பொது உடைமை கொள்கைகளை வட கொரியாவில் மட்டுமே பரவச் செய்ய முடிந்தது.தென்கொரியாவை தன்னுடைய முதலாளித்துவ கொள்கைக்கு அமரிக்கா அடிமையாக்கிவிட்டது.. சீனாவிற்கு எல்லையோர நாடுகள் என சொல்லிக்கொள்ள வட கொரியா,திபெத், மற்றும் இந்தியாவின் எல்லையோர மாநிலமான அருணாச்சல பிரதேசம் மட்டுமே
இந்தியாவின் வலிமையான எதிர்ப்பால் அருணாச்சலத்தில் சீனாவால் நுழைய முடியவில்லை. திபெத் மக்களின் மூட நம்பிக்கைகளை கண்டு சீனா எரிச்சலடைந்து வருகிறது.கடந்த 60 ஆண்டுகளாக சீன படைகள் திபெத்தில் ஊடுருவி ஆட்சி அதிகாரத்தில் தலையிடுகிறது.இதனால் திபெத் மக்களின் தனித்தன்மையான மூட நம்பிக்கைகள் கேள்விக்குரியாயின. புத்த மதம் என்பது இந்து மத மூட நம்பிக்கைகளை எதிர்த்து புத்தரால் ஆரம்பிக்கப்பட்டது. புத்தரின் கொள்கைகளான உருவ வழிபாடு மறுத்தலை புறந்தள்ளி,புத்தரையே சிலைவடித்து (கடவுளாக்கி) வணங்க ஆரம்பித்தனர். இதனால் மீண்டும் புத்த மத மக்கள் மூட நம்பிக்கைகளுக்கு தங்களை உட்படுத்திக் கொண்டனர்.
சிலை முன் கற்பூரம் தீபாரதனை செய்வது இல்லையே தவிர,மற்ற அருவ சிந்தனைகளை இந்து மத மக்களைப்போல் போல் பழகிக் கொண்டனர்.
திபேத்தியர்,உடல் நிலை பாதிக்கப்பட்டால் மருத்துவரை தேடி செல்ல மாட்டார்கள்,புத்தரே தங்கள் உடல்களை பாதுகாப்பார் எனும் நம்பிக்கையோடு வாழ்க்கையை முடித்துக்கொள்வர். இது சீன ஆட்சியாளர்களுக்கு எரிச்சலைத்தருகிறது.
கம்யூனிச(பொது உடைமை) நாடுகளைப்போல் மற்ற நாடுகள் தங்கள் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை மாறுதல் செய்ய வேண்டும்.துடிப்புள்ள மாணவர்களை உருவாக்கினால் அவர்களிலிருத்து மாசேதுங்போல், அல்லது பிடல்காஸ்ட்ரோ போல் அல்லது கிம் ஜோங் உன் போல் பொது உடைமை தலைவர்கள் உருவாகலாம்.அப்பொழுது உலக மக்களின் சமுக ஏற்றத் தாழ்வுகளை களையமுடியும். அடிப்படை கட்டமைப்புகளை மாற்ற மாணவதிட்டங்களை மாறுதல் செய்வதே சிறந்த வழி.
இந்த பொது அறிவு சிந்தனையை இதோடு நிறுத்திக்கொள்வோம்.
அடுத்து நான், எப்படி ஏழாம் அறிவியலுக்கு சென்றேன் என்பதைப்பற்றி அலசுவோம். மனிதர்களுக்கு சிந்திக்கும் திறன் உள்ளதால் மிருகங்களிடம் இருந்து வேறுபடுகின்றனர். ஆனால் முழுமையாக மனிதர்கள் சிந்திப்பதே இல்லை. பெரும்பாலான மக்கள் அப்பா அம்மா வழி, தாத்தாபாட்டி வழி என குடும்பம் நடத்த ஆரம்பித்து விடுகின்றனர்.
இது போன்ற குடும்ப முறை என்பது பிள்ளைகளை பெற்றுக் கொள்ளவும், அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் எனும் சிந்தனையில் காலத்தை கழிக்கின்றனர்.
இதற்கிடையே குடும்ப வளர்ச்சிக்கு சம்பரதாயம், சடங்கு போன்றவைகளை கடைபிடிப்பதால் சில நன்மைகள் விளையும் எனும் திருப்தியை தங்களுக்குள் வளர்த்துக் கொள்கின்றனர்.
உலகில் பெரும்பாலான மக்கள் அருவ வழிபாடு(spiritual worship),அருவ சிந்தனை (spiritual thoughts)யில் வாழ்கின்றனர். இந்துக்கள் மட்டுமே சிலை வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். அவர்களை தொடர்ந்து புத்த மத வழிபாட்டாளர்களும் புத்தரை சிலை வடித்து வணங்குகின்றனர்.
ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்,சிலை வழிபாட்டாளர்களுக்கு ரத்த அழுத்த(bp)நோய் தாக்கம் அதிகம் இருக்கும் அதே நேரத்தில் அருவ வழி(spiritual worship) பாட்டாளர்களுக்கு ரத்த அழுத்தம் அவ்வளவாக இருக்காது.நாம் வாழும் காலங்கள் சில ஆண்டுகள் தான்.நல்ல ஆரோக்கியமான உடல் அமைப்பு உள்ளவர்கள் 20-60 ஆண்டுகள் மட்டுமே வாழ்க்கையை அனுபவிக்க இயலும்.
60 ஆண்டுகளில் மனிதர்களுக்கு மூன்றாம் தலைமுறை துவங்குகிறது.ஒரு தலைமுறை என்பது 30 ஆண்டுகள்.எந்த மனிதனும் மூன்றாம் தலைமுறையில் பாதியளவே வாழ்க்கையை துய்க்க இயலும்,அதாவது 75 ஆண்டுகள் வரை மட்டுமே.அதன் பிறகு வாழ ஆசைப்படுவது என்பது உறவினர்களின் வெறுப்பை தேடித்தரும்,கால கட்டமாகும்.
முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை அனுபவங்களையும் பட்டறிவையும் தன் பிள்ளைகளுக்கும் பேரன் பேத்திகளுக்கும் நேரம் கிடைக்கும் போது அமைதியான முறையில் சொல்லி விளக்க வேண்டும்.அதுவே ஒரு மனிதனின் வாழ்க்கை நெறிமுறையை முழுமையாக்கும்.
என் வாழ்நாளில் நான் பட்ட மான அவமானங்களை என்னுடைய பட்டறிவாகவும் அதுவே மனிதனின் இரண்டாம் நிலை அறிவான ஏழாம் அறிவுக்கு கொண்டு சென்று என் 60 வயதில் ‘ஏழாம் அறிவு இயக்கம்’ எனும் வலைதளத்தை உருவாக்கினேன். இதற்கு என் மகன்கள் பெரிதும் உதவினர் என் வலைதள முகவரி 2008 செப்டம்பரில் உருவாக்கப்பட்டது
www.thiru-rationalism.blogspot.in
இதுவே என் வலைதள முகவரி.
மனிதனுக்கு இருக்கும் முதல் நிலை அறிவு என்பதுதான் ‘ஆறாம் அறிவு’.உலகில் 90 சதவிகித மக்கள் இந்த ஆறாம் அறிவை சுயமாக பயன் படுத்துவதில்லை. இங்கே தான் ஒரு மனிதனின் உழைப்பின் மூலம் வரும் பணம் காசை இன்னொரு மனிதன் அபகரிக்கும் நிலை ஏற்படுகிறது.ஆறறிவு கொண்ட மனிதன் பிறர் சொல்லும் வார்த்தைகளில் உண்மையுள்ளதா என சீர்தூக்கி பார்க்கவேண்டும்.
ஆனால் அவ்வாறு செய்ய இயலாத மனிதர்கள் தான் ஆறாம் அறிவு மனிதர்கள்.
எனவே தான் அவ்வகை மனிதர்களை புறந்தள்ளிவிட்டு,நான் ஏழாம் அறிவு இயக்கம் ஆரம்பித்துள்ளேன்.
இதில் முழுக்க முழுக்க உண்மைத்தன்மை கொண்ட பதிவுகளே உள்ளன.மெய்ப்பியல் (materialism) என்பது குறளில் சொல்லப்பட்ட,‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்போருள் காண்பதறிவு’
இதை தமிழன் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே சொல்லிவிட்டான்.
மனிதர்களின் வாழ்வியல் முறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றது இந்த பொருளியல் வாதம்.கண்ணால் காண்பதே நிஜம்,தீர விசாரிப்பதும் அறிவே!
இன்று உலகெங்கும் நுண்ணுயிரியால்(வைரஸ்) இப்பொழுது மனிதர்ளுக்கு தீங்கு விளைந்துள்ளது. அந்த நுண்ணுயிரிகளை நிலைப்படுத்தி அதை கொல்ல எதிர் வினை நுண்ணுயிரிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் அறிவியலாளர்கள் இன்னும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே நமது மக்கள் பழமை கை வைத்தியங்களான வேப்பிலை,மஞ்சள் தான் இதற்கு மருந்து என வீடுகளில் புழங்க ஆரம்பித்துவிட்டனர். இந்தியாவில் விஷகிருமிகள் தாக்குதல் மற்ற நாடுகளை விட மிக மிக குறைவு என்பதே உண்மை.உலக வரலாற்றில் மனித குலத்தை அவ்வப்போது ஆட்டிப்படைப்பது,இந்த நுண் கிருமி(virus) மற்றும் நுண் உயிரி(bacteria)களே.40 அல்லது 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை மனிதர்கள் மீது படையெடுக்கும். காலரா மற்றும் மலேரியா பாட்டீரியாவால் வருவது, டைபாய்டு மற்றும் காய்ச்சல் வருவது வைரஸ் ஆல் என கண்டறியப்பட்டுள்ளது.
பெரும்பாலான சாதாரண வியாதிகளுக்கு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு,மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. எய்ட்ஸ் ,புற்று மரண வியாதிகளுக்கு இன்னும் தடுப்பூசி கண்டறிய முடியவில்லை,
அது போன்று தான் இந்த கொரானா நுண்கிருமி உள்ளது.காலரா போன்ற வயிற்றுப் போக்குக்கு வேப்பிலை மருந்தாக இருக்கும் என நினைத்து அதை பன்னெடுங்காலமாக இந்தியர்கள் பயன் படுத்தி வருகின்றனர்,அது போன்று தான் கொரானா இருக்கும் எனும் நினைப்பில் தற்போது வீடு தோறும் வேப்பிலைகளை கட்ட ஆரம்பிக்கின்றனர்.வேப்பிலை என்றதும் நம் மக்களுக்கு மாரியம்மன் நினைவு வந்துவிடும்.ஆனால் நோயின் தாக்கம் அதிகமாகிறதே தவிற குறைந்தபாடில்லை.சரி ,அந்த மாரியம்மனை வணங்கினால் சரியாகிவிடும் என நினைப்பவர்கள்,இன்னும் ஏன் தங்கள் நிலைகளை மாற்றிக்கொள்ள வில்லை? .....சரியான கல்வியறிவு இல்லை.
இதை எந்த அரசியல் தலைவர்களும் உணர்ந்த பாடில்லை. காரணம் சரியான படிப்பறிவு தந்தால் வெய்யிலாளி இனங்கள் தங்களை எதிர்க்க நேரிடும் என்பதால்.. உலகில் கடவுள் நம்பிக்கை கொண்ட நாட்டுமக்கள் நிலையும் இதே போன்றுதான்.
இந்தியாவில் தான் வேப்பிலை வைத்தியர்,வேப்பிலை மருத்துவர்,வேப்பிலை பிரதமர்,வேப்பிலை முதல்வர் என இன்றளவும் நிலைமாறாமல் உள்ளனர். பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் அடிப்படை அறிவு சிந்தனை இல்லை.நாம் படித்தது,படிப்பது எல்லாம் மூட நம்பிக்கை கொண்ட இலக்கியங்கள். அவைகளைப் படித்து புலவர் பட்டங்கள் பெற்று அதே கருத்தை மாணவர்களுக்கு சொன்னால்,அறிவியல் சிந்தனை எப்படி வரும்?
மேடைகள் தோறும் தமிழ் இலக்கியங்கள் பெருமையைப் பற்றி பேசி காலத்தை வீணடிப்பதே அரசியல் தலைவர்களின் பொழுது போக்கு. நிஜங்களைப்பற்றி பேசுபவர்களுக்கு. ‘அவன் லூசு, பைத்தியக்காரன், பொழைக்க தெரியாதவன்’ எனும் பட்டப்பேர்தான் மிஞ்சும். என்னையும் சமுகம் அப்படித்தான் சொல்லும்.இதற்கெல்லாம் அஞ்சினால் ஒரு காரல் மார்க்சோ, மாசே துங்கோ, பெரியாரோ உருவாகியிருக்க முடியுமா? தன்னம்பிக்கை உள்ளவர்களே சமுக சிந்தனை உள்ளவர்களாக மாறமுடியும். நாம் படிக்கும் காலத்தில் ஆசிரியர்கள் எந்திரத்தனமாக ‘நீங்கெல்லாம் உங்கள் மனதிற்குள் தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்துவார்கள்.
ஆனால் அப்பொழுதெல்லாம் ஆசிரியர்கள், தன்னம்பிக்கை என்றால் என்ன ? என நம்மை சிந்திக்க வைக்க மாட்டார்கள். தன்னை நம்பறது என்றால் என்ன? மனதிற்குள் வாழும் கடவுளை அல்லது பேய் பிசாசு போன்ற மூட நம்பிக்கைகளை நம்பு அல்லது வெளியேற்று என ஒரு ஆசிரியரும் சொன்னதில்லை. அப்பதானே ஒருவனால் தன்னை நம்ப முடியும்? பள்ளிப் பருவத்திலிருந்தே எனக்கு இந்த ‘தன்னம்பிக்கை’ பற்றிய சிந்தனை இருந்து கொண்டே இருக்கும்.
மூன்று வேளை உணவு உண்கிறோம், படிக்கின்றோம் கிடைத்த வேலையை செய்கின்றோம். நண்பர்களுடன் உறவுகளுடன் உறவாடுகிறோம், பணம் ,சொத்து என சேர்க்கின்றோம், கடவுளை வணங்குகின்றோம், சுற்றுலா செல்கின்றோம், மகிழ்கின்றோம், நோய்வாய்ப்படு இறுதியாக மரணிக்கின்றோம், இங்கே தன்னம்பிக்கை எங்கே வருகின்றது?
இங்கேதான் சுயமாக சிந்திக்க வேண்டும். நாம் படிக்கும் பாடங்களில்,இலக்கியங்களில் முன்னாளில் இறைவனை காண்பது எப்படி? இறைவனை வணங்குவது எப்படி? என தேவாரம்,திருவாசகம், திருக்குறள்,நாலடியார் போன்ற நூல்களில் நன்கு விவரிக்கப்பட்டுள்ளன.
இவைகளையெல்லாம் நாம் நடைமுறைப்படுத்த நினைக்கும் போது நமக்கு ஏமாற்றங்களே மிஞ்சும். எந்த பாடல் பாடி இறைவனை தொழுதாலும் நாம் நினைக்கும் இறைவன் நம்முன்னே தோன்ற மாட்டார். இதை யாரிடம் சொல்லி நம் சந்தேகங்களுக்கு தீர்வு காண்பது?
இதை ஆசிரியரிடம் கேட்டால், நீ உன் தொழுகையை சிரத்தையுடன் செய்தால் சாத்தியமாகும் என சொல்லி மேலும் நம்மை மன நோயாளியாக மாற்றிவிடுவர். இப்படி மன நோயாளிகளாக மாறியவர்கள் தான் ராமகிருஷ்ண பரமம்சர்,விவேகாநந்தர் போன்ற (ஆன்மிக) மூட நம்பிக்கையாளர்கள். இன்றளவும் நம் மக்களின் நிலமை இதே நிலைதான்.உலக அளவில் மக்களை நல்வழிப்படுத்துவது அந்தந்த மொழி இலக்கியங்கள் தான். அந்த இலக்கியங்களை ஒதுக்கி விட்டு 1818ம் ஆண்டு பிறந்த யூத மதத்தினரான காரல் மார்க்ஸ், தனது 50 வயதுகளில் எழுதிய நூல் தான் ‘மூலதனம்’ (capitol).பின்னாளில் இந்நூல் Tass capitol என்றழைக்கப்பட்டது.காரணம் அப்போது ரஷ்ய புரட்சியாளரான லெனின் மூலதனம் நூலை உள்வாங்கி தனக்குள் ஒரு வைராக்கியத்தை உருவாக்கிக் கொண்டார்.ஒரு மக்களாட்சி நிறுவ வேண்டுமானால் அது காரல் மார்க்ஸ் நூலில் விவரிக்கப்பட்ட ஆட்சியமைப்பாக மட்டுமே இருக்க வேண்டும் என நினைத்து சர்வாதிகார சார் மன்னராட்சியை நீக்கி ஒருங்கிணைந்த (USSR) ரஷ்யாவை நிறுவினார்.
அப்போது பெரும்பங்கு வகித்தது ரஷ்ய வானொலியான Tass மட்டுமே.எனவே மார்க்சின் நூலுக்கு டாஸ் கேபிடல் என்றொரு பேரும் உண்டு.
அந்நாளில் சீனாவில் மாசே துங் தன் நாட்டில் நடை பெற்ற கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து விவசாயிகளை ஒன்று திரட்டி போராடிக் கொண்டிருந்தார்.லெனின் தன் நாட்டில் கம்யூனிச ஆட்சி நடத்துவதை கேள்வியுற்று லெனினை சந்திக்கின்றார். ஆட்சி மாற்றத்தின் காரணங்களை கேட்றிந்தார். மூலதனம் நூலை வாங்கி தன் நாட்டிற்கு சென்றார். ‘மார்க்சிய லெனினிசம்’ எனும் புதிய கொள்கையை உருவாக்கினார்.இன்றைய சீன வல்லரசு மாசே துங் உருவாக்கியது தான்.
பள்ளி நாட்களில் புத்தரைப்பற்றிய பாட நூல் நமக்கு இருக்கும்.அந்நூலில் ‘புத்தர் தன் 30 வயதில் போதி மரத்தடியில் ஞானோதயம் பெற்றார்’ என படித்திருப்போம். பல ஆண்டுகளாக இப்படித்தான் படித்துக் கொண்டிருக்கின்றோம்.. நாமும் ஞானோதயம் என்றால் என்ன என ஆசிரியர்களை கேட்டிருக்க மாட்டோம். ஆசிரியர்களும் ஞானோதயம் என்றால் சுய சிந்தனை,பகுத்தறிவு என நமக்கு சொல்ல மாட்டார்கள்.அந்நாளில் நான், போதி மரம் என்றால் மனிதனுக்கு அறிவு புகட்டும் மரம் என நினைத்திருந்தேன். அதாவது புத்தர் போதி மரத்தடியில் தவமிருந்த காரணத்தாலே அவருக்கு அறிவு வந்தது என நினைத்திருந்தேன். வெகு நாட்களாக போதி மரம் என்றால் எப்படி இருக்கும் என யாரும் எனக்கு சொல்லியது இல்லை.
30 வயதில் புத்தர் ஞானோதயம் பெற்றதாக சொல்லப்பட்ட அந்த போதி மரத்தை புத்த
கயா சுற்றுலா சென்ற போது பார்த்தேன்...... அது அரச மரம்! நிழலுக்காக புத்தர் இளப்பாறிய மரம் அவ்வளவே! புத்தர் ஒரு அரசர்,அந்த மரத்தின் கீழ் ஓய்வு பெற்றதால் அரசமரம் என பெயர் வந்திருக்கும்.மெய்ப்பொருள் காண்பதறிவு என நமக்கு சொல்ல மாட்டார்கள்,காரணம் ஆசிரியர்களும் அருவ வழிபாட்டாளர்களே,கடவுள் இல்லை எனும் முடிவுக்கு வர மாட்டார்கள். அரசாங்க கல்விக்கூடங்களில் சம்பளத்திற்கு பணியாற்றும் ஆசிரியர்கள் அவர்களின் சொந்த கருத்துகளை மாணவரிடையே புகுத்தமுடியாது. அவர்கள் வேலைக்கே உலை வைப்பது போலாகிவிடும்.
புத்த மத மக்களையும் காலப்போக்கில் பார்ப்பனர்கள் அவர்கள் கருத்துக்கு ஒத்துவருவது போல் மாற்றிக் கொண்டார்கள்.
உலகில் தோன்றிய கடவுள் மறுப்பாளர்களுக்கு புத்தருக்கு 30 வயதிலும், காரல் மார்க்சுக்கு 30 வயதிலும் லெனினுக்கு 20 வயதிலும் மாசே துங்குக்கு 19 வயதிலும்,பெரியாருக்கு 19 வயதிலும் எனக்கு 21 வயதிலும் சுய சிந்தனை தோன்றியது.அதாவது ஞானோதயம் வந்தது.
அதே நேரத்தில் கடவுள் சிந்தனையாளராக விவேகநந்தருக்கு 18 வயதிலும் கண்ணதாசனுக்கு 30 வயதிலும் தோன்றியது. பிரபலம் அல்லாத பெரும்பாலான மக்கள் இளைய பருவத்தில் இறை நம்பிக்கை இல்லாமல் வளர்ந்தாலும் பின்னாளில் மணமானவுடன் கடவுளை வணங்க ஆரம்பித்து விடுவார்கள்.
ஆனால் இளமையில் கடவுள் நம்பிக்கையாளராக இருந்து பின் ஞானோதயம் (அறிவு வளர்ச்சி) பெற்றவர்கள் சாகும் வரை இறை மறுப்பாளராகவே வாழ்வர். காரல் மார்க்சு, லெனின்,மாசேதுங், பிடல் காஸ்ட்ரோ,பெரியார், கிம் ஜாங் உன்,இவருக்கு முன் இவருடைய தந்தை, (கிம் ஜாங் இல்,கொரிய அதிபராக வாழ்ந்து இறந்த போது அந்நாட்டு மக்கள் கண்ணீர் விட்டு அழுத காட்சியை உலகமே கண்டு வியந்தது) போன்றோர்களை உதாரணமாக காட்டலாம்
இப்பொழுது வட கொரியாவை ஆண்டு கொண்டிருக்கும் கி.ஜோ.உன் வட கொரியாவின் மூன்றாம் தலைமுறை. அந்நாட்டு மக்கள் மன்னராட்சியை விரும்புகின்றனர்,மன்னராட்சியில் ஜனநாயகம் தழைப்பது என்பது அபூர்வம்.ஆனால் மக்கள் சுதந்திர வாழ்க்கையில் இந்த மன்னர் தலையிடுவதில்லை. அந்நாட்டில் பொது உடைமை கொள்கை இருக்க வேண்டும் என மன்னர் விரும்புகிறார், மக்களும் மன்னரை நேசிக்கின்றனர். தனக்கென சொத்து சேர்த்துக் கொள்ளாத கொரிய நாட்டு மன்னர்கள்.
அம்மா அப்பா நினைவு நாள்
எனக்குள் ஒரு மூட நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது.எங்க அம்மா இறந்த பின் ஆண்டுதோறும் அம்மாவின் நினைவு நாளை அனுசரிக்க வேண்டும் என்பது எனது ஆசை.
அம்மா இறந்த அடுத்த 1973ம் ஆண்டு அம்மா இறந்த அதே நாளில் திதி,வரவில்லை.மாறாக ஒரு 20 நாட்கள் தள்ளி அன்று தான் அம்மாவுக்கு திதி கொடுக்க வேண்டும் என என் அண்ணாவிடம் அய்யர் சொல்லி அனுப்பினார். நானும் சரி வரட்டும் நாம் ஏன் இந்த நாளை தள்ளி நினைவுநாள் அனுசரிக்க வேண்டும் என தெரிந்து கொள்ள விரும்பினேன்.அய்யரும் வந்தார். நான், ‘அய்யரே, உலகமெங்கும் இறந்தவர்களின் நினைவு நாளை அதே நாளில் ஆண்டுதோறும் அனுசரிக்கின்றனர்,ஆனால் இந்து மதம் மட்டும் ஏன் திதி என சொல்லி நாளை தள்ளி அனுசரிக்கின்றனர்?’
அதற்கு அவர்,’இறந்தவர்கள் இறந்த நாளில் தோன்றும் வளர் பிறையோ அல்லது தேய் பிறையோ அடுத்த ஆண்டு அதே மாதத்தில் வரும் வளர்பிறையில் வரும் நாளை திதி என்போம்,அன்று (அம்மா இறந்தது,தேய்பிறை தசமி) வளர்பிறை வரும் நாளை அனுசரிப்பது என்பது காலம் கலமாக முன்னோர்கள் வகுத்த விதி’ என்றார்.
No comments:
Post a Comment