ஜலகோவன் நகரத்தில் ஒரு வீட்டில் எனக்கு ஏற்பட்ட அல்லது நான் கண்ட காட்சி என் பகுத்தறிவு சிந்தனையை மேலும் வளரத்தது. ஒரு பெரும் பருப்பு முதலாளி விட்டில் (1989) நான் தங்க வைக்கப்பட்டேன். அப்பொழுது பக்கத்தில் குடியிருக்கும் ஒரு துணி உற்பத்தி ஆலை முதலாளியும் பெரும் பருப்பு கொள்முதல் வியாபாரியின் வீட்டுக்கு தமிழ் நாட்டுக்கு ரயில் வேகன் மூலம் பருப்பு அனுப்புவதின் தொடர்பாக கலந்துரையாட சென்றேன்.அப்பொழுது நான் கண்ட காட்சி என் மனதையே உலுக்கியது.அந்த குடும்பத்தில் இரண்டு அண்ணன் தம்பிகள்,
அண்ணன் தம்பியை அழைத்து ஒரு வேலை பணிக்கின்றார்,தம்பி அந்த பணி நிமித்தம் பற்றி கேட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்ல எத்தனிக்கின்றார்,அண்ணன் தரையில் வெண் பஞ்சு மெத்தையில் அமந்திருக்கின்றார்,தம்பி,அண்ணன் முன் தலை வணங்கி இடது கையை வயிற்றை ஒட்டி மடக்கி, வலது கையால் வாய் பொத்தி குனிகிறார்,அண்ணன் ஆசிர்வாதம் செய்கின்றார்.தம்பி விர்ரென புறப்பட்டு சென்றார்.
அதே நாளில் அதே வீட்டில் மாலை நான் கண்ட இன்னொரு காட்சி என்னை அசத்தி விட்டது. நான் என் இருக்கையில் அமர்ந்துள்ளேன், என் முன்னே போடப்பட்ட சோபாவில் அந்த குடும்பத்து தலைவி அமர்ந்துள்ளார்.தன் பிள்ளையோடு எதோ குடும்ப மற்றும் வியாபார பிரச்சினையை அளவளாவிக் கொண்டிருக்கின்றார்,அந்த தலைவியின் மருமகள் அந்ந மாமியாரின் காலருகே அமர்கின்றார், உடனே அந்த மாமியாரின் கால் மற்றும் பாதங்களை பிடித்து விடுகின்றார்.
இவையெல்லாம் தன்னிச்சையாகவே நடக்கின்றன, யாரும் யாரையும் அழைத்து என் காலை பிடித்துவிடு என சொல்லவே இல்லை. இவையெல்லாம் அந்த சமுகத்தின் கலாச்சாரம் என்பதை பின்னால் தெரிந்து கொண்டேன்.
இது ஒரு நல்ல குடும்ப கலாச்சாரமாகவே எனக்கு தோன்றுகிறது. குடும்ப அமைதிக்கு வழி வகுக்கும். பெரியவர்களின் சொல் கேட்டு நடக்கும் குணம் வளரும்.
அப்போது நான், நம் தமிழ் குடும்பங்களின் உறவு முறைகளை நினைக்க தோன்றியது.பெரியவர்களின் சொல் கேட்டு தமிழர்கள் நடந்தாலும்,அண்ணன் தம்பிகளின் உறவுகளில் விரிசல் ஏற்படுவதை நான் உணர்ந்தேன். இதற்கு காரணம் தமிழர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் தங்களை ராஜ பரம்பரையை சேர்ந்த சத்ரியர்கள் எனும் ரத்தத்தில் ஊரிய குணம் கொண்டவர்கள் என தோன்றுகிறது.
மேலும் நமது தமிழ் மக்கள் (வன்னியர்,நாடார் மற்றும் பறையர்) உலகில் வெய்யிலாளி இனத்தைச் சார்ந்தவர்கள்.ஆதிக்க சாதிகளான முதலியார், பிள்ளைமார், செட்டியார் முதலானோர் நிழலாளி வர்கத்தை சார்ந்த தமிழர்கள்.இதில் செட்டியர், வன்னியர் மற்றும் பறையர்கள் எல்லா இந்திய மொழிகளிலும் பரவி உள்ளனர்.
தமிழர்கள் மட்டுமே சிவ வழி பாட்டாளர்கள்,அதை தெரிவிக்க நெற்றியில் சாம்பலை பூசிக் கொள்வர்..வட தமிழ் நாட்டு வன்னியர்கள் விஷ்னு வழி பாட்டாளர்கள்,அதை தெரிவிக்க நெற்றியில் நாமம் போடுவார்கள்.கல்வியறிவற்ற வன்னியர்களின் கடவுள் வழிபாடு இந்த சிவ-விஷ்ணு வழிபாட்டு முறையே காரணம். மேலும் கடவுள் வழிபாடு என்பது மனிதனுள் இருக்கும் வியாபார குணமே.அவரவர் விட்டில் கடவுளை வணங்கலாம் என இந்த வெய்யிலாளி இனங்களுக்கு யாரும் சொல்ல வில்லை
பொது வழிபாட்டுத்தலங்களை உருவாக்கி கடவுளை வணங்கச்சொல்வது மனிதனுள் இருக்கும் கும்பல்(குழு) குணத்தை வளர்க்க உதவும்.ஒரு கும்பல் குணம் இன்னொரு கும்பல் குணத்தை ஏற்காது.இதனாலேயே உலகில் பல்வேறு குணம் கொண்ட மதங்கள் உருவாயின, சாதிகள் உருவாயின.
சாதிகளே கூடாது என சொல்லும் சாதிய தலைவர்கள், பொது வழி பாட்டுத்தலங்கள வேண்டாமென்று சொல்ல மாட்டார்கள். கடவுள் மறுப்பு சிந்தனையாளர் என சொல்லிக் கொள்ளும் பெரியாரும் பொது வழி பாட்டுத்தலங்கள் வேண்டாமென்று சொன்னதே இல்லை.ஆனால் ஏழாம் அறிவு இயக்கம் சொல்கிறது. மக்கள் சுய சிந்தனையாளர்களாகி விட்டால் தலைவர்களுக்கு வேலையே இல்லையே. சுயமாக சிந்திக்காத தொண்டர்கள்தான் வேண்டுமென்பர் அரசியல் கட்சித்தலைவர்கள். பெரியார் அவர் காலத்தில்,கடவுள் இல்லை என்றுதான் சொல்ல முடிந்தது.கோயில்கள் வேண்டாமென்று சொன்னதே இல்லை.மாறாக பார்ப்பனர்கள் வெய்யிலாளி இனங்களில் விதம் பிரித்து, பறையர்களையும், பஞ்சமர்களையும் கோயில்களுக்குள் வரக்கூடாது என சொல்லி வந்தனர், இதனை தலைமேல் ஏற்றுக்கொண்டு, வெய்யிலாளி இனங்களில் இன்னொரு பிரிவினரான வன்னியர்களை கோயில்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் காவல் போட்டனர்
இதை உணர்ந்த பெரியார் கடவுள் முன் மனிதர்களை சமமாக பார்க்க வேண்டுமே தவிர உழைப்பாளி மட்டம் என்றும்,ஏமாற்றி பிழைக்கும் நிழலாளிகள் எப்படி உயர்ந்தவர்களாக இருக்க முடியும்? என வினவினார்.இதனை எதிர்க்க மக்களை ஒன்று திரட்டினார்.
என்ன செய்தார்,பெரியார்? தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கப்பட்டவர்களை கடவுள் இல்லை,அந்த கற்சிலையை ஏன் நீங்கள் பார்க்க வேண்டும்? என சொல்வதற்கு பதிலாக ‘வாங்கள்,கோயிலுக்குள் போகலாம்’ என கோயிலுக்குள் நுழைய முற்பட்டார். நிலைமையை முன்கூட்டியே உணர்ந்த காவல்துறை பெரியாரையும் மற்றவரையும் கைது செய்தனர்.ஏன் இந்த நாடகம்
கோயில்களை கட்டிக் கொடுத்து விட்டு, அர்ச்சகர்களை கற்சிலைகளுக்கு ஆராதனை செய்யட்டும் என அனுமதித்து விட்டு, வெய்யிலாளிகளில் ஒரு பிரிவினரை உள்ளே நுழையலாம்( வன்னியர்) மற்றவர்களெல்லாம் (பறையர் மற்றும் பஞ்சமர்) வெளியே நிற்க வேண்டும் என சொல்லிவிட்டனர்.உடனே வெய்யிலாளி இனத்தில் இரு பிரிவுகளாக பிரிந்து கோயில்களுக்கு முன் சண்டை இடுவதை ஆதிக்க சாதிகள் வேடிக்கை பார்த்தனர்.இதில் பெரியாரின் நயவஞ்சக செயல் கண்டிக்கத்தக்கது. பெரியார் என்ன செய்திருக்க வேண்டும்?
இரு பிரிவு வெய்யிலாளிகளையும் அழைத்து,‘கடவுளே இல்லை,கோயில்களில் இருக்கும் கற்சிலைகளுக்கு உயிரோட்டம் இல்லை,அவை வெறும் கற்கள்,நீங்கள் யாரும் கோயிலுக்கு செல்ல வேண்டாம்,அங்கே தட்டேந்தி நிற்கும் அர்ச்சகர்களுக்கு காசு போட வேண்டாம்.மொத்தத்தில் கோயிலுக்கே செல்ல வேண்டாம், கோயில்களை மூடுங்கள்.என போராடி யிருக்க வேண்டும்.
இதை செய்திருந்தால் பெரியார் உண்மையிலேயே பகுத்தறிவாளிதான். இது போன்று கோயில்களை மூடும் போராட்டம் நடத்தியிருந்தால், அவர் சார்ந்த இன (தெலுங்கர்கள்) மக்கள் எதிர்ப்பு அதிகம் இருக்கும் என உணர்ந்து அந்த போராட்டத்தை பெரியார் முன்னெடுக்க வில்லை. இது பெரியாரின் நயவஞ்சக செயல்தானே?
இவ்வுலகில் பெரியாருக்கு முன் தோன்றிய ஐரோப்பிய கண்டத்தின் காரல்மார்க்சு (1818,மே 5,மரணம் 1883,மார்ச் 14.) தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர பாடுபட்டார்,
‘மூலதனம்’(das capital) எனும் தன் நூலில் பஞ்சாலைத் தொழிலாளர்களைப் பற்றி விவரிக்கின்றார். இந்த தொழிலில் தான் வயலில் (வெய்யிலில்) பஞ்சை விளைவித்து,அதை ஆலைக்கு எடுத்துச் சென்று(நிழலில்) ஆடையாக மாற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் ஆலை முதலாளிகளின் வாழ்க்கைத் தரத்தோடு ஒப்பிட்டு எவ்வளவு கீழ் நிலை வாழ்க்கை வாழ்கின்றனர் என்பதை விவரிக்கின்றார்.
மூலதனம் எனும் நூலை அவரது நண்பர் பிரட்ரிக் எங்கர்சல் வெளியிடுகிறார்,அப்போது தான் காரல் மார்க்சு ஒரு தத்துவ ஞானி என உலகிற்கு தெரியவந்தது.மூலதனம் நூலை என் 60 வயதில்தான் படிக்க நேர்ந்தது. 5 தொகுப்புகளை (volume) க் கொண்டது. இவருடைய கருத்துகள் ‘ஏழாம் அறிவு இயக்க’த்தின் கருத்துகளோடு ஒத்துப்போகிறது.
இவ்வுலகில் காரல் மார்க்சின் கொள்கைகளை முழுமையாக உள் வாங்கி 25 ஆண்டுகளி
ஒரு வல்லரசை நிறுவியவர் சீனாவின் மாசே துங் மட்டுமே,அவரைத்தொடர்ந்து க்யூபா நாட்டின் பிடல் காஸ்ட்ரோ.சீனாவுக்கு முன் லெனின் ஒருங்கிணைந்த ரஷ்யாவை நிலை நாட்டி வல்லரசாக ஆக்கினாலும் ,லெனினின் கடவுள் மறுப்புக்கொள்கையில் நாட்டமில்லா நாடுகள் பின்னாளில் பிரிந்து விட்டன என்பதை விட 1990களில் தலைமை ஏற்ற கொர்பாச்சேவ் பிரிந்து போக அனுமதித்து விட்டார்.என்றே கூறலாம்.தற்போது ரஷ்யா மட்டுமே வல்லரசாக திகழ்கிறது.
பெரியார் காலத்தில் நான்கு மொழி மாநிலம், சென்னை மாகாணமாக (Madras state) இருந்தது. நான்கு மொழி மக்களையும் ஒன்றிணைக்கும் விதமாக ‘திராவிடர்கள்’ என அழைத்து திராவிடத்தை நிலை நாட்டினார். தமிழர்களைத்தவிர யாரும் திராவிடத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மொழிவாரி மாநிலம் அமைத்த பின் எஞ்சியது ‘மெட்ராஸ் மாகாணம்பின்னாளில் அண்ணா முதல்வர் பொறுப்பேற்ற போது,(1968) தமிழ் நாடு என மாற்றினார்தமிழர்களை திராவிடர் என நம்ப வைத்து தமிழ் நாட்டை தெலுங்கர்கள் ஆளும் மாநிலமாக மாற்றியது தான் பெரியாரின் தந்திரம், பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்த காலத்தில் பெரியாரின் கடவுள் மறுப்பு இயக்கம் பிசுபிசுத்து விட்டது. அண்ணா, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என முழக்கமிட்டார்.இது மக்களிடம் ஓட்டு வாங்க பயன்பட்டது.
பெரியார் சாகும் வரை கடவுள் மறுப்பு சிந்தனையில் வாழ்ந்தாலும்,இதை சமுக இயக்கமாக மாற்ற முடியவில்லை. எந்த வீட்டிலும் கடவுள் மறுப்பு சிந்தனை இல்லை. கருணாநிதி போன்ற ஆண்கள் கடவுள் இல்லை என மேடையில் முழங்கினார்கள். ஆனால் வீட்டில் முழங்க முடியவில்லை, நெடுஞ்செழியன் வீட்டிலும் இதே நிலைதான்.
திராவிடர் கழகத்தின் தலைமை இடமாக சென்னை வேப்பேரியில் இடம் வாங்கி அதை தனக்குப்பின் மணியம்மை மற்றும் வீரமணி இயக்கத்தை வழி நடத்துவர் என்று சொன்னார்.பெரியார் தனது 95 வயதில் கூட மேடையேறி கடவுள் மறுப்பு கொள்கைகளை பரப்பினார், ஆனால் வீரமணி தனது 60 வயதிலேயே பெரியார் கொள்கையான கடவுள் மறுப்பு கொள்கை போராட்டங்களை கைவிட்டு விட்டார். இன்று வீரமணிக்கு வயது 90 நெருங்குகிறது.இன்றளவும் இதே நிலைதான். பெரியார் திடலின் சொத்துக்களை பாது காக்கும் பொறுப்பை மட்டுமே வீரமணி செய்து கொண்டிருக்கின்றார். பகுத்தறிவு கொள்கைகளை சமுக பரவலாக்கும் போக்கை கைவிட்டு விட்டார்.
கடவுள் மறுப்பு சிந்தனையும் பகுத்தறிவு கொள்கைகளையும் ஒருசேர இன்றும் முகநூல், ட்விட்டர் மற்றும் வாட்சப்பின் மூலம் சமுக பரவலாக மாற்ற முயன்று வருகிறேன்.
2007 ஜூலையில் நான் பணி ஒய்வு பெற்றேன். பணிக்காலத்தில் எனக்கு ஏற்பட்ட மான அவமானங்களை அனுபவங்களாக ஏற்றுக் கொண்டேன். 2007 ஆகஸ்டில் பணி ஓய்வு பெற்று வீட்டில் முடங்கினேன், என்ன செய்வதென்றே தெரியவில்லை.மாத சம்பளம் நின்று விட்டது, வருமானம் குறைந்து விட்டது. நான் பிஎட் பட்டம் பெற்றுள்ளதால் தனியார் பள்ளிகளில் வேலைத்தேடினேன், எனக்கு ஆங்கிலத்தை பிழையின்றி எழுத படிக்கதெரியும், எனவே அதை சொல்லி வேலைக் கேட்டேன்.பணியிடம் காலி இல்லை என சொல்லிவிட்டனர்.பிள்ளைகள் படிப்பை முடித்து வேலை தேடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் என் அனுபவங்களை திரட்டி புத்தகம் எழுதலாம் என நினைத்தேன்.என் எண்ணங்களை எழுத்து வடிவில் கொண்டுவர முடியவில்லை,தமிழில் எழுத வரவில்லை,எழுதினாலும் படிக்க முடியவில்லை,நான் ஒரு பயனற்றவனாக இருப்பதை எண்ணி மனைவியிடம் சொல்லி கண்கலங்கி விட்டேன்.
நீங்கள் சொல்லுங்கள் நான் எழுதுகிறேன்’ என என் மனைவி சொன்னதைக்கேட்டு,என் பெரிய மகன் என்னிடம் இவ்வாறு கூறினான், ‘அப்பா,உங்களுக்கு ஒரு கம்யூட்டர் வாங்கித்தருகின்றேன், அதில் உங்களுக்கு சொந்தமான ஒரு வலைதளத்தை உருவாக்கி தருகின்றேன், நீங்கள் தமிழ் கீ போர்டை அச்சு அடிக்க பழகிக் கொள்ளுங்கள்’ என்றான். சரி என சொன்னவுடன் ஒரு கணினி வாங்கப்பட்டது,அதில் தமிழ் கீ போர்டை பதிவிறக்கம் செய்து கொடுத்தான்,இரண்டு நாளில் தமிழ் கைப்பழக்கம் வந்து விட்டது. www.thiru-rationalism.blogspot.in எனும் வலைதளம் உருவாக்கப்பட்டது.
வலைதளத்தில் கடவுள் மறுப்பு சிந்தனைகளையும், பகுத்தறிவு சிந்தனைகளையும் எழுத தொடங்கினேன்.
ஓரிரு நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டு, ‘உங்கள் எண்ணங்களை நூலாக வெளியிடுங்கள், எங்களைப் போன்றவர்களுக்கு படிக்க உதவும்’ என்றனர்.
பெரியாருக்குப் பின் பகுத்தறிவு நூல்களை யாரும் வெளியிட்டதாக தெரியவில்லை. மேலும் தன் கடவுள் மறுப்பு சிந்தனைகளை மனிதனின் ஆறு அறிவுக்குள் அடக்கப் பார்த்தார், அதில் பெரியாருக்கு தோல்வி என்றே சொல்லலாம்.இன்றும் தமிழ் குடும்பங்களில் புரோகிதர் (பார்பனர்கள்) இல்லாமல் கல்யாணம் கருமாதிகள் நடைபெறுவதில்லை. அப்ப பெரியாரின் கடவுள் மறுப்புக்கொள்கை தோல்விதானே?
இதை உணர்ந்த நான் மனிதர்கள் பொய்யை நம்பி வாழும் மனிதர்களாகவே உள்ளனர்.அந்த பொய்யை நம்பி வெய்யிலாளிகள் வீணாகிப் போகின்றனர், எனும் சிந்தனைகள் என் பணிக்காலத்தில் என் மனதை உறுத்தி வந்தது.
நான் ஓய்வு பெற்றதும் அதற்கான தருணங்கள் கிடைத்தன.இந்த ஆறறிவு மனிதர்களை திருத்துவதை விட புதிய கோணத்தில் ஒரு இயக்கம் ஆரம்பிக்க நினைத்தேன்
அது தான் ‘ஏழாம் அறிவு இயக்கம்’2008 செப்டம்பரில் வலைதளத்தில் ஏழாம் அறிவு சிந்தனைகளை தினமும் பதிவிட்டேன்.பின்பு வலைதளத்தை விட மக்களை வேகமாக கவர்ந்தது, முகநூல்(face book) மற்றும் வாட்சப் (whatsapp)
முகநூலை தமிழ்ப்படுத்தினேன், இதனால் என் எண்ணங்கள்,கருத்துகளை ஒருவொருக்கொருவர் பரிமாரிக்கொள்ள முடிந்தது, உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள சென்றடைந்தது. வாட்சப் மூலம் உள்ளூர் நண்பர்களை தொடர்பு கொள்ள முடிந்தது, பின்னாளில் வாட்சப் மூலம் உலகெங்கும் உள்ள நண்பர்களை தொடர்பு கொள்ள அதன் நிர்வாகம் மாற்றியமைத்தது.
ட்விட்டர்(twitter)லும் கணக்கை ஆரம்பித்தேன், ஆனால் அதில் நீண்ட பதிவுகள் போட இயலாது. சுருக்கமாக கருத்து பரிமாற்றங்களுக்கு மட்டுமே பயன் பட்டது.
இதனால் உலகின் அரசியல் தலைவர்கள் அறிமுகம் கிடைத்தது.2009 ல் , ‘அறவழி சுய சிந்தனையுடன் மகிழ்ச்சியுடன் வாழ ஒரு வழிகாட்டி’ எனும் நூலை வடிவமைத்தேன் 100 பக்கங்கள் கொண்டது.
தமிழ் குடும்பங்களில் பின்பற்றும் சடங்கு சம்பரதாயங்களில் உள்ள மூட நம்ப்பிக்கைகளை களைவது எப்படி என வரையறுத்து இருப்பேன். பஞ்சாங்கம் பார்த்தலில் உள்ள தில்லுமுல்லு கணக்கு, ஒரு நாளைக்கு 1½ மணி நேரம் எப்படி கெட்டநேரமாகும்,அதற்கு ராகு காலம் எனவும் மற்றும் இன்னொரு 1½ மணிநேரத்தை எம கண்டம் எனவும் பஞ்சாங்கத்தில் எழுதப்பட்டதை உழைப்பாளிகளின் மனதில் மூட நம்பிக்கைகளை விதைத்தது. பார்ப்பனர்கள் பணம் பறித்து தங்கள் வாழ்வாதரத்தை பெருக்கும் நோக்கத்தை கிள்ளியேறியவேண்டும் என எழுதி இருப்பேன்.
இந்நூலை தமிழ் நாட்டில் உலாவரும் சமுக சிந்தனையாளர்களான மருத்துவர் ராமதாசு, தொல் திருமாவளவன் மற்றும் சீமான் போன்றோரின் அணிந்துரை வாங்க ஆசைப்பட்டேன்.2010 ல் திருவள்ளூர் பெரிய குப்பத்திற்கு தமிழர் திருநாளாம் பொங்கல் நாளை கொண்டாட சீமான் அவர்களை வர வழைத்திருந்தனர், நான் அவரை சந்தித்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன். கணினி மூலம் அச்சடிக்கப்பட்ட கைப்பிரதியை அவரிடம் காண்பித்தேன்,வாங்கி புரட்டி பார்த்தார். ‘நல்லா இருக்கு நான் ஒரு வாரத்தில் அணிந்துரை வழங்கி எனது உதவியாளரிடம் தெரிவிக்கிறேன்’ என்றார். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை.
மருத்துவர் அய்யாவை திருவள்ளூர் வந்த போது சந்தித்தேன். ‘நூல் நல்லா இருக்குய்யா,இப்படித்தான் நூல் இருக்க வேண்டும்’ என்றார்.
இரண்டு அல்லது மூன்று முறை சந்திக்கும் போதெல்லாம் ‘இருய்யா சொல்கிறேன்’ என்பார். இதற்கிடையே சென்னை அண்ணா சாலையில் தேவனேய பாவாணர் நூலகத்தில் ஒரு நாள் அய்யாவும்,தொல் திருமாவளவனும் இணைந்து ஒரு நிகழ்ச்சிக்கு வந்த போது இருவரையும் தனித்தனியே சந்தித்தேன்.அப்போது திருமாவளவன், நூலை புரட்டி பார்த்து.’ நான் ஏழாம் அறிவு இயக்கம் பற்றி கேள்வி பட்டிருக்கின்றேன், ‘நூலுக்கு அணிந்துரை தருகிறேன் ‘ என சொல்லி ஒரு பிரதியை வாங்கிக் கொண்டார்.ஒரு கைபேசி எண்ணை கொடுத்தார்,அந்த எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இறுதியாக மருத்துவர் அய்யாவை தொடர்ந்து தொடர்பு கொண்டேன்,ஒரு நாள் தன் உதவியாளர் மூலம் என்னை தொடர்பு கொண்டு ‘ஒரு குறிப்பிட்ட முகவரியில் கவிஞர் ஜெயபாஸ்கரன் உள்ளார் அவரிடம் சென்று அணிந்துரை வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றார்.
அவருடைய முகவரி திருவான்மியூரில் உள்ளது. அங்கே சென்று அவரிடம் அணிந்துரை பெற்று நூலை அச்சடிக்க உள்ளூர் அச்சகத்தை நாடினேன்.திருவள்ளூரில் யாரும் நூல் அச்சடிப்பதில்லை, நீங்கள் சென்னைக்குத்தான் செல்ல வேண்டும் என ஒரு அச்சக உரிமையாளர் தெரிவித்தார். சென்னை உயர்நீதிமன்றம் எதிரே உள்ள ஒரு ஜெராக்சு கடையில் வேலை செய்யும் ஒரு நபரை குறிப்பிட்டார்.அந்த நபரின் அடையாளம் கண்டு நூல் அச்சடிக்க வேண்டும் என கூறினேன். அதற்கு அவர் என் கைப்பிரதியைப் பார்த்துவிட்டு, ‘இதை இப்படியே அச்சிலேற்ற முடியாது சார்.இதை ‘பேஜ் மேக்கர்‘ செய்ய வேண்டும்’ என்றார்.
பேஜ் மேக்கர் செய்யக்கூடிய ஒரு பெண்ணை எனக்கு அறிமுகம் செய்தார், அவருக்கு வியாசர்பாடியில் வீடு. அவர் வீட்டை தேடி போனேன்,கைப்பிரதியை வாங்கிக்கொண்டார், ‘ஒரு பக்கத்துக்கு ரூபாய் 10 ஆகும் சார்’ என்றார்.
No comments:
Post a Comment