Friday, March 25, 2022

ஏ.அ -2

 

கடவுள் எப்படி இருப்பார் என எந்த மதங்களும் வரையறுக்க வில்லை. இந்து மதத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தான் கற்சிலைகள் வடிவமைக்கப்பட்டன. கடவுளுக்கு உருவம் படைத்தது இந்து மதமே.ஙநான்கு கைகள் கொண்ட சிலைகள்,குரங்கு முகம்   கொண்ட கடவுள்,யானை முகம் கொண்ட கடவுள் என விகாரமான சிலைகளை வழிபடுவதில் இந்துக்கள் மற்ற மத வழிபாட்டிலிருந்து வேறு படுகின்றனர்.

கேரளாவைச் சார்ந்த ஓவியர் ரவிவர்மா(பி.ஏப் 29 1848 & அக் 2 1906)

தன் கை வண்ணத்தில் விதவிதமாக இந்து கடவுளர்களை வரைந்து தள்ளினார். இது 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. இப்போதுள்ள இந்து கடவுள்கள்  உருவங்கள்  எல்லாம் ரவிவர்மா வரைந்த ஓவியங்கள் தான்.  

1-கற்கால மனிதர்கள் கல்லை கடவுளாக வணங்கினர் கடவுள் இருக்கின்றார்,அவரை காணமுடியாது,எனும் நம்பிக்கையில் பய பக்தியுடன் (fear & worship) வாழ்பவர்கள்.இதற்கு அருவ வழிபாடு (spiritualism) என்று பெயர்.உலகில் 90 சதவிகித மக்கள் இப்படித்தான் வாழ்கின்றனர்.

Evil spirit- பேய்,  அல்லது சாத்தான், Good spirit-God,கடவுள் (கடவுள்,இறைவன்,யேசு,அல்லா எல்லாம் ஒன்றுதான்) என இருவகை ஆவிகள் உள்ளதாக நம்பினர்.தானாக நல்லது நடப்பதெல்லாம் கடவுள் செயல் என்றும்,கெடுதல் எல்லாம் சாத்தான்களால் நடைபெறுகிறது என நம்பினர்.

2-கடவுள் இருக்கின்றார்,அவருக்கு பயப்பட வேண்டியதில்லை,

மனதுக்குள் வைத்து மரியாதை செய்தால் போதும், இப்படி 7 சதவிகிதம் வாழ்கின்றனர். இதற்கு idealism என்று பெயர்,பக்தியிலும் பகுத்தறிவு பேசுபவர்கள்,இதற்கு உதாரண மனிதர் ராமலிங்க அடிகள்,மற்றும் சித்தர்கள்.

3- கடவுள் இல்லை என்பவர்கள் atheist,உலகின் முதல் நாத்திகவாதி ருத்தரவர்மன் வம்சமான ராவணன்,அவன் மகன் இந்நிரஜித்,அடுத்து மகாபாரதத்தில் வரும் ருத்ர சேனன் வம்சமான கம்சன், ஜெயத்ரதன், இரணியன், கீசகன்,சிசு பாலன் மற்றும் ருத்ர வர்மன்,சத்ரியன் துரியோதணன். கடைசியாக வாழ்ந்து மக்களுக்கு வாழ்வியல் அறச் சிந்தனைகளை அறிவுறுத்தியவன், துரியோதனன் மட்டுமே..ஒருவனுக்கு ஒருத்தி எனும் அரிய கருத்து ,இன்றும் உலகளவில் இந்த அறச்சிந்தனை பராமரிக்கப்படுகிறது.

அதே கால கட்டத்தில் ஒருத்திக்கு பல கணவன்கள் (குந்தி மற்றும் திரவுபதி),ஒருவனுக்கு பல மனைவிகள் (கிருஷ்ண அவதாரம்) இருந்தது. இந்த பல தார மண வாழ்க்கை(polygamy)

இஸ்லாமியர்களிடமும், இந்திய ஆண்களிடம் இலைமறை காயாக இன்றுவரை காணப்படுகிறது.

ருத்தரசேனன் வம்சத்தைச் சார்ந்த சர்வ பலம் பொருந்திய கிருஷ்ண பரமாத்மா என பலராலும் அழைக்கப்பட்ட கிருஷ்ணன், அடங்கா சத்ரியர்களான கவுரவர்களை, பங்காளிகளான பாண்டவர்களை கொண்டு 18 ம் போரில் அழித்தான். 

18ம் போரில் போரிட்ட ருத்ர வர்மன்கள் வன்னியர்களாகவும், ருத்தர சேனன்கள் இடையர்களாகவும் இன்று இந்தியா முழுவதும் பரவியுள்ளனர். இந்தி, குஜராத்தி, பஞ்ஜாபி, பெங்காலி, மராத்தி, ஒரியா,தெலுங்கு,தமிழ், கன்னடம், மலையாளம் என முக்கிய மொழிப்பிரிவுகளில் வாழ்கின்றனர்.

புத்தர். இவர் கடவுள் மறுப்பாளர்,பின்னாளில் அவருடைய ஆதரவாளர்கள் கடவுளாக ஏற்றுக்கொண்டு வேகமாக புத்த மதம் கிழக்காசிய நாடுகளில் பரவியுள்ளது, இருப்பினும் இந்த மதத்திலும் மூட நம்பிக்கைகள் பரவி வருகின்றன,

புத்த மத தலைவர்கள் (திபேத்திய தலாய்லாமா, இலங்கையின் பாண்டார நாயகே,ராஜபக்சே போன்ற  அரசியல் தலைவர்கள் இந்தியா வந்து இந்து கோயில் சிலைகளை வணங்குவதை ஊடகங்களில் பார்க்கின்றோம்.

 கடவுள் இருந்தால் என்ன?,இல்லா விட்டால் என்ன? நாம் வாழ கடவுள் எதற்கு?அறச்சிந்தனை கொண்டவர்கள், சகமனிதர்களை துன்புறுத்தாமல் முடிந்தால் அவர்கள் மகிழ்ச்சிக்கு உதவி புரிபவர்கள் பகுத்தறிவாதிகள், (rationalists).

ஒரு மதம் இன்னொரு மதத்தை ஏற்றுக் கொண்டதே இல்லை,ஆனால் ஒரு மதத்தில் உள்ள சடங்குகளை இன்னொரு மதம் மாற்றுவழியில் பின்பற்றுகிறது. இந்து மதம் என்பது சடங்கு சம்பிரதாயங்கள் கொண்டது, உலகின் மூத்த இயற்கை வழிபாட்டு சமுக அமைப்பு.தமிழர்களின் இயற்கை வழிபாடு என்பது மனிதனுள் உருவாகும் சக்தியான ஆண் பெண் இனப்பெறுக்க உறுப்பில் இணைந்து வெளிப்படும் சக்தியே லிங்க வழிபாடு.உலகில் முதல் வழிபாடு சிவம்.

No comments: