அதற்கு திராவிடம் என பெயர் சூட்டினர். இப்பொழுதும் தமிழை முன்னிறுத்த மனமில்லா தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கு அரசியல்வாதிகள் திராவிட மண்,திராவிட இனம் என சொல்லி மக்களை குழப்புகின்றனர்.
இந்தியாவெங்கும் அகழ்வாரய்ச்சி, மற்றும் கல் வெட்டு,தாமிர பத்திரம் எல்லாவற்றிலும் தமிழ் வட்டெழுத்து மற்றும் சமத்கிருத நெட்டெழுத்துக்களே, இதை தமிழ் பிராமி ஸ்கிரிப்ட் என அழைப்பர். இந்தியாவில் மொத்தம் இந்தி உட்பட18 அங்கிகரிக்கப்பட்ட மொழிகள் உள்ளன.தமிழ் வட்டெழுத்து,சமத்கிருதம் நெட்டெழுத்து ஏன்?
தமிழர்கள் கற்பாறையில் எழுத்துக்களாக தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தினர்,இது கற்கால நாகரிகம்.பின்னாளில் தோன்றிய மொழி சமத்கிருதம்,இம்மொழி இனத்தவர் பனை ஓலையில் எழுத்துக்களை எழுதி தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தினர்.அதனால் பனை ஓலையில் குறுக்காக கோடு கிழிக்க முடியாது காரணம்,பனை ஓலையில் படுத்த வாக்கில்
நரம்புகள் இருப்பதால் ஓலை கிழிந்து விடும்,எனவே சமத்கிருத எழுத்துக்கள் நெடுவாட்டில் உருவாக்கினர்.இதிலிருந்து என்ன தெரிகிறது? வட்டெழுத்து முதலில் தோன்றியது,நெட்டெழுத்து பின்னாளில் தோன்றஎழுத்து வடிவங்கள் எல்லாம் தமிழைப்போன்ற வட்டெழுத்து முறைகளே.
ஐரோப்பிய நாடுகளிலும் வட்டெழுத்து முறைகளே.இதிலிருந்து என்ன தெரிகிறது? முதலில் தோன்றிய மொழி தமிழ் என்று தெரிகிறதா?
பின்னாளில் தோன்றிய மொழிகளாக சமத்கிருதம், நெட்டெழுத்துக்களாகவும், எதிர்மறையான அரபு மொழியின் எழுத்துக்கள் படுக்கவாட்டிலும் அமைந்திருக்கும். 400 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்தி மொழியும் சமத்கிருதம் போல் நெட்டெழுத்துக்களை கொண்டது
கிழக்காசிய மக்கள் (சீனம்,கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள்) எழுத்துக்களை
பொருளியல்(graphical language) மொழி என அழைப்பர்.அதாவது சக மனிதர்களுக்கு புரியவைக்க ஓவிய முறையை பயன் படுத்தி புரியவைப்பது.தமிழில்தான் ஏராளமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன, இவைகளை படித்து புரிந்து கொள்ள தனிப்பயிற்சி எடுக்க வேண்டும். தமிழ் கல்வெட்டுகள் இலங்கை,பர்மா, கம்போடியா போன்ற கிழக்காசிய நாடுகளிலும் காணப்படுகின்றன.
100 ஆண்டுகளாகத்தான் தமிழ் நாட்டில் சாதியங்களைப்பற்றி பேசக்கூடாது,சாதி என்பதையே ஒழிக்கப்படவேண்டும் என பெரியார் தோன்றி மேடையில் முழங்கினார்.அதன் பலனாக தமிழ் நாட்டில் மட்டும் பேர்களுக்குப் பின்னால் அய்யர்,அய்யங்கார்,செட்டியார், முதலியார், படையாட்சி, கவுண்டர் என சாதிப்பதிவுகள் மறைந்து விட்டன,ஆனால் பெண் கொடுத்து பெண் எடுப்பதில் சாதி பார்ப்பது இன்றளவும் வழக்கத்தில் உள்ளன.
மாணவர்களுக்கு தமிழ் இலக்கியங்களை சொல்லித்தரும் ஆசிரியர்களுக்கு, திருக்குறளில் வரும் ‘சிற்றினம் சேராமை’ அதிகாரத்தை சிறிய சாதி அல்லது கீழ் சாதி அல்லது ஒடுக்கப்பட்ட சாதிகள் என பொருள் படும்படி மாணவர்களுக்கு சொல்லித்தர கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
திருக்குறள் மட்டுமல்ல உலக நீதி, நாலடியரில் வரும் சிற்றின சொல்லும் கீழ் சாதி அல்லது தீண்டத்தகாத சாதி கொண்டவர்கள் என மாணவர்களுக்கு சொல்லக்கூடாது என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இதன் காரணமாக தமிழக கிராம தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் செருப்பு போட்டு நடக்க தைரியம் வந்தது.
பெரியாரின் திராவிட இயக்கம்,அவர் தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டிருந்தாலும், தமிழ் நாட்டு மக்கள் மட்டுமே திராவிட சிந்தனைகளை ஏற்றுக் கொண்டனர். ஆனால் குடும்ப உறுப்பினர்களுக்கு பகுத்தறிவு சிந்தனைகளை எவ்வாறு புகட்டுவது என சொல்ல தவறிவிட்டார் அல்லது சொல்லத் தெரியவில்லை எனக் கூட சொல்லலாம். காரணம்,தனக்கென பெரியார் குடும்ப அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வில்லை, அதாவது மகன், மருமகள், மகள், மருமகன் என தோன்றியிருந்தால் அவருடைய கடவுள் மறுப்பு சிந்தனை தோல்வி கண்டிருக்கும்,அல்லது கடவுள் மறுப்பு சிந்தனையை குடும்ப உறுப்பினர்களிடையே எப்படி பயன்படுத்துவது என சிந்தித்திருப்பார். இதன் காரணமாக தமிழர் குடும்பங்களில் கடவுள் மறுப்பு சிந்தனை மறைந்து விட்டது. 1930களில் இருந்த தென்னிந்தியா பின்னாளில் மொழி வாரியாக மாநிலங்களாக பிரியும் என சமுதாயத் தலைவர்களுக்கு எண்ணத் தோன்றவில்லை. தீண்டாமையும் வேண்டாம், தீண்டுதலும் வேண்டாம், ஏழாம் அறிவு இயக்கம் இதைத்தான் வலியுறுத்துகிறது. கணவன் மனைவி தீண்டிக்கொண்டால் போதும்,தாயும் சேயும் தீண்டிக்கொண்டால் போதும்
நான்கு மாநிலங்களாக பிரிந்த பின் பெரியாருக்கு சென்னையில் மட்டுமே தங்கி இப்போதுள்ள இடத்தை (சென்னை,வெப்பேரி,பெரியார் திடல்) தலைமை இடமாக நிறுவிக்கொண்டார். முதலில் தெலுங்கரான ‘பொட்டி சிரிராமுலு’ ஆந்திரா தனி மாநிலமாக பிரிக்கப்படவேண்டும் என 70 நாட்கள் உண்ணாவிரம் இருந்து உயிர் நீத்தார்.
அதன் பின் நேரு தலைமையில் அமைச்சரவை கூடி இந்தியாவில் உள்ள மாநிலங்களை மொழிவாரி பிரிக்க முடிவாயிற்று. தெலுங்கர்கள், இவர்கள் இன்று வரை பெரியாரின் திராவிட கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை ,தமிழ் நாட்டில் தங்கிவிட்ட தெலுங்கர்கள் தமிழரை மூளைச்சலவை செய்து நாமெல்லோரும் திராவிடர்கள், நாம் ஒற்றுமையாக இருக்கலாம் என ஓரவஞ்சனை நாடகம் போட்டனர்,போடுகின்றனர் இன்றும் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.
திராவிடம் என்றொரு இனமோ மொழியோ இல்லை, அரசியலுக்காகவும், தமிழர்களை அடிமைப்படுத்தவும் உருவாக்கப்பட்ட சொல்லே ‘திராவிடம்’
பெரியாரின் சமுதாயப்புரட்சியில் புதைந்துள்ள இந்த உண்மையை உணரத் தெரியாத அறிஞர்தான் ‘அண்ணா துரை மற்றும் அவரது முதலியார் சீடர்களான நெடுஞ்செழியன், மதியழகன், அன்பழகன் மற்றும் கருணாநிதி. அப்பொழுது ஒடுக்கப்ட்ட இனத் தலைவரான இரட்டைமலை சீனிவாசனும் ,’நல்லது தான் இந்த முரட்டு வன்னியர்களை அடக்க இந்த திராவிடம் தான் சரியான தீர்வாக’ இருக்கும் என கணக்குப் போட்டார்.தெற்கே இம்மானுவேல் சேகரனும் திராவிடத்தில் இணைந்து கொண்டார். முக்குலத்தோர் மக்களுக்கு முத்துராமலிங்க தேவர் அவர் இன மக்களை வாழ வைக்க வந்த தேவராகவே காட்சியளித்தார்.
இந்தியாவில் வன்னியர்கள் அதிகம் வாழும், தமிழகத்தின் வட மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி தர்மபுரி, சேலம் போன்ற இடங்களில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களை பறையர்கள் என அழைப்பதில்லை.வெட்டி வேலை(காவல்) மட்டுமே செய்துவந்த தமிழைத் தாய் மொழியாக கொண்டுள்ள பறையர்களுக்கும் கீழ் நிலை மக்களான(பஞ்சமர்கள்) தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டுள்ள இருளர்(ST), மலைநாய்க்கன், கொண்டா ரெட்டி, சக்கிலி, தோட்டி,வண்ணார்,அம்பட்டர் போன்றோர் தமிழகம் முழுவதும் பரவியுள்ளனர்
தென் மாவட்டங்களில் அருந்ததியர் என அழைக்கப்படுபவர்கள்(இது கலைஞர் கருணாநிதி சூட்டிய சாதிப்பெயர்) ஏராளமான மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் பூர்வீகம் ஆந்திர மாநிலம்.இவர்களில் பள்ளர், மள்ளர் போன்றோர் தற்பொழுது தேவேந்திர குல வேளாளர் என கவுரவப்படுத்தப் படுகின்றனர்..( டாக்டர் கிருஷ்ணசாமி தோட்டி இன மக்களுக்கு தலைவராக உள்ளார்)
500 ஆண்டுகளுக்கு முன் விஜய நகரத்தை தலைமை இடமாக கொண்டு ஆண்டு வந்த கிருஷ்ண தேவராயர் காலத்தில் தமிழ் நாட்டில் சோழ வம்சம் சிதருண்டு பலமிழந்து போனார்கள்.கேள்வியுற்ற கிருஷ்ண தேவராயர்,விஸ்வநாத நாயுடு தலைமையில் பள்ளர் ,மல்லர் அருந்ததியர் போன்ற மக்களை படை வீரர்களுக்கு உதவியாக இருக்க அனுப்பிவைத்தார். நாளடைவில் அவர்களுடைய உறவினர்கள் தமிழகம் முழுவதும் வந்து குடியேறிவிட்டனர். மதுரையை தலைநகராக கொண்டு திருமலை நாயுடு(நாயக்கர்) 400 ஆண்டுகளுக்கு முன் ஆண்டார். இன்று தமிழக அரசியலில் களமிறங்கி தமிழகத்தை ஆளத்துடிக்கும் வைக்கோ, விஜயகாந்த் போன்றோர் தெலுங்கர்களே.
பெரியாருக்கு முன் ஒன்றிணைந்த நான்கு மாநிலங்களையும் முதல்வர் பொறுப்பு வகித்தவர்கள் தெலுங்கர்களே.குமாரசாமி ராஜா,ஓமந்தூர் ராமசாமி ரெட்டி,பிரகாசம் நாயுடு போன்றோர், தமிழ் நாட்டில் தெலுங்கர்கள் காலூன்ற வழி வகுத்தவர்கள்.இன்றும் ஆந்திர மாநிலத்தில் ராயலசீமா ராஜாக்கள்,கம்ம நாயுடுகள், தெலுங்கானா ரெட்டிகள் போன்ற சாதிகள் பலம் வாய்ந்தவையாக திகழ்கின்றன..
இந்தியாவில் மொழி வாரி மாநிலங்கள் தோன்றிய பின் சாதி வாரி மாநிலங்கள் தோன்றின. அரியானா, உத்தர்பிரதேசம்,பிகார் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநில மக்கள் யாவரும் பயன்படுத்தும் இந்தி மொழியும் அதன் எழுத்து வடிவங்களும் ஒன்றே.ஆனால் அவைகள் நான்காக ஏன் பிரிந்தன? எல்லாம் சாதிய பாகுபாடுதா
நான்கு மாநிலங்களிலும் வெய்யிலாளி இனங்களான யாதவர்கள் எனும் இடையர்கள் அதிகம் காணப்பட்டாலும் அதே வெய்யிலாளி இனமான குர்மிக்கள் பிகாரில் அதிகம் வாழ்கின்றனர்.உத்தர பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் உள்ளனர். அரியானாவிலும் மத்திய பிரதேசத்திலும் சவுத்தாலா (சத்ரியர்) மற்றும் சிங் சாதிகள் (இவர்கள் தமிழ் நாட்டில் உள்ள வன்னியர்களைப் போன்றவர்கள்) அதிகம் வாழ்கின்றனர்.மொழிவாரி மாநிலம் மாறி சாதி வாரி மாநிலங்களாக மாறிவிட்டன, ராஜஸ்த்தானில் ராஜபுத்திர இன மக்கள் அதிகம் இருப்பதால் அது சாதி சார்ந்த மாநிலமாகிவிட்டது. குஜராத்தில் படேல் இன மக்கள் அதிகம் வாழ்வதால் அதுவும் சாதி சார்ந்த மாநிலமாக மாறிவிட்டது.
ஆந்திராவில் அதுபோன்று சாதி வாரி மாநிலம் வேண்டும் என ரெட்டி இன மக்கள் 50 வருடங்களாக போராடி கம்மநாயுடுகள் அதிகம் வாழும் ஆந்திரத்திலிருந்து தெலுங்கானா பிரிந்து ரெட்டிகள் மாநிலமாக மாறிவிட்டது.
ஆந்திரத்தின் தென் மேற்கு மாவட்டங்களான கடப்பா,கர்னூல்,சித்தூர் தெலுங்கு வன்னியர்கள் (ராஜா மற்றும் வர்மாக்கள்) அக்னி குல சத்ரியர்களாக வாழ்கின்றனர்,தமிழ் நாட்டின் வட மாவட்டங்களான விழுப்புரம்,சேலம்,தர்மபுரி, கிருஷ்ணகிரி,வேலூர் ,காஞ்சி புரம்,திருவள்ளூரில் வன்னியகுல சத்ரியர்கள் அதிகம் வாழ்கின்றனர்,இவர்களுக்கு ‘ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? நாம கையை உழைத்தால் கஞ்சி’ என வானம் பார்த்த பூமியில் வாழும் மனிதர்கள்.வெய்யிலாளி இன மக்கள்.
வெய்யிலாளி இன மக்கள் தனி மாநிலம் கோரமாட்டார்கள், தங்களை தாங்களே ஆளத்தெரியாத மக்கள். யாராவது நிழலாளி மக்களில் யாரோ ஒரு தலைவர் போராட்டத்தை தூண்டி விட்டால் ஆட்டு மந்தைகள் போல் கலந்து கொண்டு,காவல் துறையிடம் அடி உதை வாங்கி வருவார்கள்.உலகெங்கும் உள்ள வெய்யிலாளி இன மக்கள் நிலை இப்படித்தான் உள்ளன.
2500 ஆண்டுகளுக்கு முன் புத்த மதம் தோன்றியது.அதற்கு முன் அதாவது 3000 ம் ஆண்டுகளில் தமிழ் மதம் தோன்றியது. பின்னாளில் ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் இந்து மதம் ஆனது..
உலக மக்கள் தொகை தோராயமாக 750 கோடி என கணக்கிடப்படுகிறது.இதில் மத வாரியாக மக்கள் தொகை,
1- இந்து மதம் 100 கோடி,அண்டை நாடுகளில் வாழும் இந்துக்களோடு சேர்த்து,
2-புத்த மதம் 200 கோடி, (சீனம், மலேசியா, தாய்லாந்து,கொரியா ,வியட்நாம், இலங்கை, திபெத், பர்மா, ஜப்பான்)
3-கிறித்துவம் 200 கோடி(உலகமுழுவதும் பரவலாக)
4-இஸ்லாம் 200 கோடி,(உலகமுழுவதும் பரவலாக)
5-சிக் போன்ற மற்ற சிறு மதங்கள் மற்றும் உலகெங்கும் உள்ள மதம் சாரா காட்டு வாசிகள் எண்ணிக்கை யோடு 50 கோடி மக்கள் தேறுவர்..
இப்படி நாம் சிந்திப்பதால் ,இன்னும் 50 ஆண்டுகளில் மேலும் ஒரு புதிய மதம் தோன்ற வேண்டும்.யார் கண்டது?,எமது ‘ஏழாம் அறிவு இயக்கம்’ கூட ஒரு பகுத்தறிவு மதமாக பின்னாளில் மாறலாம்.
மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ ஏழாம் அறிவு இயக்கம் மட்டுமே வழி காட்டுகிறது.ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டும்,நூல் பல கற்க வேண்டும்.ஒரு முழுமை அடைந்த மனிதன் யார்?
1-உடலியல் அறிவு(body science)
2-வரலாற்று அறிவு.(HISTORICAL KNOWLEDGE)
3-புவியியல் அறிவு.(GEOGRAPHICAL KNOWLEDGE)
4-அறிவியல்அறிவு வேதியல்,பொருளியல்,தாவர வியல்,விலங்கியல் (SCIENCE)
5-கணினி அறிவியல்.(COMPUTOR)
இவ்வைய்ந்தும் ஒரு சேரப் பெற்றவனே முழுமை அடைந்த மனிதன்,அவனே பகுத்தறியும் குணம் கொண்டவனாக மாறுவான்.மேலே சொன்ன 5 அறிவுகளையும் ஐயம் திரிபுர கற்க வேண்டும்,பல அறிவுசார் நூல்களை கற்க ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.ஒரு கட்டத்தில் கற்றது போதும் என்கிற நிலை வரும் ,அப்போது, யார் என்ன கேட்டாலும் யாருடைய உதவியும் இன்றி கேட்பவர்களின் ஐயங்களை தீர்க்கும் தெளிவு வரும்.பின்பு தான் கற்ற ,பெற்ற அனுபவங்களை இளைய தலைமுறைக்கு நூல்கள் எழுதி வெளியிடவேண்டும், இதுவே ஒரு மனிதன் சமுகத்திற்கு ஆற்றும் தொண்டு.,சேவை.
இப்பொழுதெல்லாம், மனிதன் நூல்களை தேடிப்போக வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது, சட்டைப் பையில் வைத்துள்ள செல்லிடப்பேசியில் அனைத்து விதமான நூல்களும் இலவசமாக படிக்க முடிகிறது. படிப்பதற்கு ஆர்வம் தான் தேவைப்படுகிறது.
நான் ஜூலை-ஆகத்து2019 ல் மகன் வினோத் வீட்டில் 20 நாட்கள் தங்கி,பிரான்சு நாட்டில் ஈபில் கோபுரம் மற்றும் அருகில் இத்தாலியில் உள்ள ரோமா நகரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பு குழைத்து கட்டப்பட்ட உலக அதிசயங்களான மிகப் பெரிய உள் விளையாட்டரங்கம், (கொலாசியம்) பழைமையான கட்டிடக்கலைக் கொண்டது கண்டு ரசித்தேன்.ரோமில் இருந்து 300 கிமி தொலைவில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான பைசா நகரத்து பளிங்கு கல்லால் ஆன சாய் நிலை கோபுரம்,இது அருகில் உள்ள சர்ச்சுக்காக கட்டப்ட்ட மணி கூண்டு.இவைகளை கண்டு களித்தோம்.சாய்ந்த நிலையிலும் அந்த கோபுரத்தின் மீது கீறலோ,ஓட்டையோ,விரிசலோ காண முடியவில்லை, அதனால்தான் அது உலக அதிசயமாக திகழ்கிறது.
பிரான்சின் டொலூசு எனும் நகரத்தில் பழம்பெரும் கட்டிடங்களை உள்ளடங்கிய தொழில் நகரம் உள்ளது,மாலை நேரத்தில் அங்கே உள்ள பூங்காவில் ஊர்மக்கள் உலா வருகின்றனர்.அந்த பூங்காவில் ஆறு அடி உயரமுள்ள 3 அடி அகலம் கொண்ட புத்தக அலமாரியில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அங்கே வருபவர்கள் வெட்டியாக பொழுதை கழிக்காமல் அந்த நூல்களை படித்து விட்டு ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டு செல்கின்றனர்.என்ன ஒரு நாகரிகம்? பழம்பெரு நாடு என நாம் பெருமை படுவதில் அர்த்தமே இல்லை.
தமிழ் இலக்கியங்கள் என சொல்லப்படும் எல்லா நூல்களுமே அருவ சிந்தனைகளை தூண்டும் மூட நம்பிக்கை நூல்கள் தான்.அவற்றுள் சிறந்தவை, பொருளியல் தன்மை கொண்டவை மற்றும் அறச்சிந்தனை வளர்க்கும் நூல்களாக திகழ்பவை திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரம் என சொல்லலாம் நிகழ்கால நூல்கள் என்பது பாரதிதாசன் கவிதைத் தொகுப்புகள் மற்றும் அவர் எழுதிய கட்டுரைகளை குறிப்பிடலாம்.
திருக்குறள் என்பது பல தரப்பட்ட கருத்துக்கள் உள்ளடங்கிய ஒரு நூல்.பல புலவர்களால் அறவழி சிந்தனைகளை குறள் மூலம் வகுத்துள்ளனர். குறட்பா என்பது 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களிடையே பேச்சு வழக்காக, கருத்து பரிமாற்றம் கொண்டதாக இருந்துள்ளது. இவையெல்லாம் நமக்கு கிடைக்க வில்லை,பனை ஓலை சேகரிப்பில் கிடைத்தது 1330 குறட்கள் மட்டுமே.இவையனைத்தையும் பரிமேலழகர் தொகுத்து கூடவே ஒரு கடவுள் வாழ்த்து அதிகாரத்தையும் (10 குறள்) சேர்த்து விட்டார். உண்மையில் 1320 குறட்கள் மட்டுமே பயனுள்ளது. குறட்பா என்றால் திருக்குறள் என பெயரிட்டார். திருவள்ளுவர் எழுதியதாக உலகுக்கு சொல்லிவிட்டார். பரிமேலழகர் காலம் கிபி 10 ம் நூற்றாண்டு.அதையே பின்பற்றி நாமும் திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார் என சொல்லித்திரிகிறோம்.
கம்பன் காலத்துக்குப்பின் (12ம் நூற்றாண்டு) பரிமேலழகர் காலத்தில் குறள் தொகுப்பை ஒருவரே எழுதியிருப்பார், அவர் திருவள்ளுவராக இருக்கட்டும் என தமிழுக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்து அவருக்கு தாடி குடுமி வைத்து 20ம் நூற்றாண்டில் இப்போது காணப்படுவது போல் உருவம் தீட்டினர்.
1- இந்த திருக்குறளை நான் அறவழி சிந்தனைக்கு உட்படுத்தி, ‘பகுத்தறிவாளர் பார்வையில் (திருக்) குறள்’ எனும் நூலை உருவாக்கியுள்ளேன்.அதில் 90 குறட்பாக்கள் மட்டுமே அருவ சிந்த்னையை தூண்டுவதால் அவைகளை ‘மாணவர்கள் கற்க தகுதியற்ற குறட்கள்’ என பிரித்துவிட்டேன். மேலும் பதின்ம வயது மாணவர்கள் கற்க இன்பத்துப்பால் என கூறப்படும் காமத்துப்பால் குறட்களை நீக்கி விட்டேன்.இக்கால வரைமுறையற்ற இளவயது மாணவர்கள் காதல் மோகத்தால் கெட்டு சீரழிவதை தடுக்கவே அவ்வாறு செய்தேன்.
மொத்த குறள்களையும் கல்லூரி மாணவர்கள் கற்கலாம்.. கம்ப ராமாயணம்.வால்மீகி ராமாயணம் 3000 ஆண்டுகளுக்கு முந்தையது. ஆனால் செவி வழி வந்த கதைகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஓலைச்சுவடியில் சமத்கிருதத்தில் எழுதப்பட்ட ஓலைச்சுவடி.
இந்திய மொழிகளில் எழுதப்பட்ட முதலாவது நூல் கம்ப ராமாயணம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது.பின்னாளில் துளசிதாசர் இந்தியில் எழுதினார்.இது 300 ஆண்டுகளுக்கு முந்தையது
சரி, இந்த மூன்று இனங்களுக்கும் சோறு படைப்பது யார்? வெய்யிலாளிகள் தான். வெய்யிலாளிகளை மூளைச்சலவை செய்வது எப்படி? அதற்குத்தான் பொது வழிபாட்டுத் தலங்கள் உருவாக்கப்பட்டது. பொது வழிபாட்டுத் தலங்களை அமைத்து கடவுளர் சிலைகளை நிறுவி அதற்கு கும்ப அபிஷேகம் செய்ய வேண்டும் என விதிகளை வகுத்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment