Friday, March 25, 2022

ஏ.அ-3

 

ஆரியர்களின் வருகையால் தமிழர்களிடையே இருந்த இயற்கை கடவுள் வழிபாட்டு முறையே மாறிவிட்டது. கடவுளை விஷ்ணு எனும் கற்பனை அவதாராமாகவே படைத்து மகாபாரத கதைகளை உருவாக்கினர். மனிதர்களின் உழைப்பை (exploitation) சுரண்டி பிழைக்கும் குணமுடைய பார்ப்பனர்கள் பரத்வாஜர் தலைமையில் பல யுக்திகளை வகுத்தனர்.

*பார்ப்பனர்கள் விவசாயம் செய்ய கூடாது,

*தன் உணவுத் தேவைகளை உழைப்பாளிகளிடம் பிச்சை எடுத்து உண்ண வேண்டும்.

*தாங்கள் வசிக்க மாடமாளிகை அமைக்க கூடாது.

*வேதங்களை கற்றுணர வேண்டும்,வேதங்களை உழைப்பாளிகள் படிக்க கூடாது,இவர்கள் படிக்க உழைப்பாளிகள் உணரவேண்டும்.அவர்களுக்கு கல்வியறிவு கூடாது. பரத்வாஜர் காலத்தில் இது சரியாக பராமறிக்கப்பட்டது, (ஆனால் அவருடைய பேரன் துரோணர் காலத்தில் கல்வியறிவை காசுக்கு விற்கப்பட்டது. பாண்டவருக்கு இலவசமாகவும் அவர்கள் எதிரிகளான கவுரவர்களுக்கு தட்சணை (காசு) வாங்கியும் சொல்லித்தரப்பட்டது. இன்றளவும் பார்ப்பனர்கள் சகல போகங்களை பெற்று வாழ்கின்றனர்).

*பார்ப்பனர்கள் போர் வித்தைகளை சொல்லித்தரலாம் ஆனால் மறந்தும் போர்க் கருவிகளை கையில் தொடக்கூடாது.

*உழவர்கள் உருவாக்கும் பஞ்சிலிருந்து நெசவாளர்கள் நெய்யும் பஞ்சாடைகளை உடுத்தக்கூடாது, பட்டுப் புழுக்கள் உருவாக்கும் கூடுகளிலிருந்து நெசவாளர்கள் நெய்யும் பட்டாடைகளை  உடுத்த வேண்டும்.

*கூலிக்கு வேலை செய்யக்கூடாது மாறாக தட்சணை பெற்று (காசை வெற்றிலையில் வைத்து தருவது) மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.

*உழைப்பாளிகள் பேசும் மொழியில் மந்திரம் சொல்லக்கூடாது,பார்ப்பனர்கள் பேசும் மொழியில் மந்திரம் உச்சரிக்க வேண்டும்.

*பஞ்சாங்கமே மூலதனம்.

உழைப்பாளிகள் உடுத்தும் முறையில் உடை உடுத்தக்கூடாது,

பஞ்சகச்சம் எனப்படும் வேட்டி இனப்பெருக்க உறுப்பை  மறைக்க வேண்டும். மேலாடை கூடாது. இவர்களை உழைப்பாளிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட மார்பின் குறுக்கே பட்டு(பூ நூல்) நூல் அணிய வேண்டும். இதுவே உலகமுழுவதும் பரவியிருக்கும் பார்ப்பனர்களின் உடை கலாச்சாரம்.

பிகார் மாநிலத்தில் தோன்றியவர் புத்தர்.இவருக்கு 30 வயதில் ஞானோதயம் வந்ததாக நாம் இளவயதில் புத்தகங்களில் படித்திருப்போம். அதென்ன ஞானோதயம்?

ஞானோதயம் என்பது சுய சிந்தனை,பகுத்தறிவு.,அதன் உட்பொருள் என்ன என்று அப்போது பாடம் நடத்திய ஆசிரியரும் நமக்கு விளக்கியிருக்க மாட்டார்,நாமும் அதன் பொருளென்ன என ஆசிரியரை கேட்டிருக்க மாட்டோம்....இப்பொழுதும் எந்த மாணவனும் ஆசிரியரை கேட்டதாக தெரியவில்லை.

புத்தர் பிறந்தார், அரச முறைப்படி வளர்க்கப்பட்டார், குழந்தை பருவம், விடலைப்பருவம்(பதின்ம வயது) கடந்து மணமுடிக்கப்பட்டது,அதுவரை அவர் வெளி உலக மக்களோடு பழகியது இல்லை.

மனிதனுக்கு மரணம் இல்லை என நினைத்திருந்தவருக்கு மரண ஊர்வலத்தை கண்டதும் யோசிக்க ஆரம்பித்தார், அதுவரை கடவுள் இருக்கார் அவரை காணமுடியாது எனும் பார்ப்பனிய கோட்பாட்டில் வளர்க்கப்பட்டார்...

அப்பொழுதுதான் யோசித்தார்...........கடவுள் எதற்கு?  நம்மை காப்பாற்றாத கடவுள் நமக்கெதற்கு? அவருக்கு பூஜை எதற்கு?’ மக்களிடையே இந்த சிந்தனை வேகமாக பரவியது.

இளவரசரே இப்படி பேசினால் நம் பொழப்பு என்னாவது? இளவரசரின் புரட்சிகரமான  கருத்துகள் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது.......பார்ப்பனர்கள் எதிர் மறை பிரச்சாரம் செய்ய தொடங்கினர்.

குழப்பம் அடைந்த மக்கள் புத்தரை நாடு கடத்த முடிவு செய்தனர்.குழப்பம் இந்தியாவில் தீர்ந்தது.....புத்தரின் ஆதரவாளர்கள், இந்தியாவின் அண்டை நாடுகளான சீனம், பர்மா, இலங்கை, இந்தோனிசியா, தாய்லாந்து,கம்போடியா, வியட்நாம்,கொரியா,ஜப்பான் என பரவ தொடங்கினர். இன்றும் அந்நாடுகளில் புத்த மதம் உள்ளது,ஆனால் மூட நம்பிக்கைகள் கொண்டதாக மாறிவிட்டது.

அதே நேரத்தில் இந்தியாவின் மேற்குப்பகுதி (ஐரோப்பா) மக்கள் சிந்திக்க ஆரம்பித்தனர், யூதர்கள் மெய்ப்பியல் தன்மை கொண்டவர்கள் (pragmatic outlook),எதையும் எளிதில் நம்ப மாட்டார்கள்,யூதர்களில் ஆரியர்களோடு பழகிய சிலர் spiritual worship க்கு மாற ஆசைப்பட்டனர், அதன் விளைவே jesus(ஏசு) தோன்றினார்.

ஏசுவின் (யூதர்) செயல்பாடுகள் (சித்து விளையாட்டு) மக்களை சிந்திக்க வைத்தது. யூதர்களில் பெரும்பாலோர் ஏசுவை பின் தொடர்ந்தனர்.

 

                    

No comments: