Thursday, March 31, 2022

ஏ.அ-12

 

வீட்டின் முகப்பில் கருங்கல் பலகை கொண்டு என் எண்ணங்களை எழுத்துக்களாக வடிவமைத்தேன். அதற்கு தாய் தந்தையர் கோயில் என பெயரிட்டேன்.

கோயில் என்றால் சிலை இருக்க வேண்டுமே,யோசித்தேன்.....2013ல் மகாபலிபுரம் சென்று சிற்பியைச் சந்தித்து தாய்  தந்தையரின் உருவ படங்களை காட்டி மார்பளவு சிலை வடிக்கச் சொன்னேன்.

சிலை திறப்பு நிகழ்ச்சி எளிமையாகவும் சிறப்பாகவும் இருக்க வேண்டுமென நினைத்தேன்.எனது பள்ளி நாட்களில் எனக்கு அறிவு கண் திறந்த 10 மற்றும் 11 வகுப்புகளுக்கு (1968&69) ஆங்கிலம் மற்றும் கணக்குக்கு ஆசிரியராக இருந்தவர், ஆசிரியர் திரு வீரராகவன் அவர்களை அழைக்க வேண்டும் என நினைத்தேன்.

இதற்காக அவர் ஆரணியில் வாழ்ந்த வீட்டை அணுகினேன்,ஒரு வயோதிக அம்மையார் அந்த வீட்டில் குடியிருந்தார்.

அவர் தெறிவித்த முகவரியில் தொலைபேசி எண்ணை பெற்று ஆசிரியருடன் நேரடி தொடர்பு கொண்டேன். அப்போது அவர்,

நான் ஆரணியில் இல்லை, படப்பையில் குடியேறிவிட்டேன்

 அய்யா நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும்

ஏன், எதற்கு?’

அய்யா நீங்கள் என் அறிவுக் கண்களை திறந்த ஆசான், நான் என் தாய் தந்தையருக்கு என் கிராமத்தில் சிலை வைத்துள்ளேன்,அதனை தங்கள் கையால் திறந்து வைக்க வேண்டும்என்றேன்.

அப்படியா மிக்க மகிழ்ச்சி, இதற்கு ஏன் என்னை தேடி வரப்போற, முகவரியை சொல் நானே வந்துவிடுகிறேன்என்றார்.

2017ம் ஆண்டு கார்த்திகை மாதம் 20 நாள் நினைவு நாளன்று எனது நண்பரும், ‘இளைய பல்லவன் கருணாகரத் தொண்டைமான் எனும் காப்பிய நூலாசிரியருமான திரு  செம்மங்குடி துரையரசன் அவர்களிடம் எனது பள்ளிக்கால ஆசிரியரை சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளதை தெரிவித்தேன்.

மிக்க மகிழ்ச்சி அய்யா,ஒரு ஆசிரியரை நினைவில் வைத்து அழைத்துள்ளீர்கள்,இது ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக அமையும் அய்யாஎன செம்மங்கடி தெரிவித்தார் 

இருவரையும் கொண்டு சிலைகளை திறந்தேன். இதனால் எங்கள் கிராமத்தின்  முதல் தாய் தந்தையர் கோயில் அமைத்த நபராக ஆனேன்.  இளமைக்கால என் எண்ணங்கள் நிறை வேறிவிட்டது.

பள்ளிக்காலத்தில் நான் படிக்கும் தினசரி பத்ரிக்கையில் ஒரு செய்தி படித்தேன்,திரு கி..பே விஸ்வநாதம் எனும் ஒரு தமிழறிஞர்,திருச்சியை சார்ந்தவர். அவர் திருச்சி காவேரி அற்றங்கரையில் தனக்காக 40 வயதில் ஒரு கல்லறை அமைத்து சுற்றி தென்னை மரங்கள் வைத்துள்ளதாக படித்தேன்.தன் மரணத்திற்காக காத்திருந்த அவர் 40 ஆண்டுகாலம் கழித்தே இறந்தார்.

அதைப்போல நானும் எனக்கு கல்லறை அமைத்துக் கொள்ள ஆசைப்பட்டேன். அதற்கான காலம் கனிந்து வந்தது.

2019ல் சித்தூருக்கு சென்றேன்.சித்தூரில் தேடிப்பிடித்து ஒரு கருங்கல் பலகை செய்யும் தொழிற்சாலையை கண்டுபிடித்து 6க்கு 2 அடி கொண்ட 6 கற்பலகைகளும்,2க்கு 2அடி கொண்ட நான்கு கற்பலகைகளும் ஒவ்வொன்றும் 3 அங்குல தடிமன் கொண்டது..என் மனைவிக்கும் எனக்கும் இணைந்து இரு கல்லறைகள் அமைக்க ஆசைப்பட்டேன்.

திருவள்ளூரிலிருந்து ஒரு மினி ட்ரக் கொண்டு போய் எடுத்து வந்தேன்.

இதற்கு ரூபாய் 40 ஆயிரம் ஆனது.உள்ளூர் கல் தச்சரை கொண்டு செப்பனிட்டேன்.இதற்கு 30 ஆயிரம் ஆனது. ரூ.60 ஆயிரம் கொண்ட  இரண்டு கல்லறைகளை திருவள்ளூர் வீட்டில் வைத்திருந்தேன்,

மார்ச்2021 ல் எனது கிராமத்து சுடுகாட்டில் கல்லறைகளை கட்டுவதா அல்லது எனக்கு சொந்தமான இடத்தில் கட்டுவதா எனும் யோசனையில் இடு காட்டில் கல்லறைகளை வைத்தள்ளேன்.

என் கிராமத்து வீட்டருகே என் ஆளுயர சிலை வைத்தள்ளேன்,இதற்காக மகாபலிபரம் சென்று சிற்பியைப் பார்த்து சிலை வடிக்கச் சொன்னேன். எனது வீட்டருகே 6 அடி பீடம் அமைத்தேன். 2021 ஏப்ரல் மாதம் 20 ம் நாள் மகாபலிபுரம் சென்று அன்று மாலை பீடத்தின் மீது சிலையை நிலைப்படுத்தினேன்.

சிலை திறப்பது என்பது என்பது என்னைப்போல் ஒரு பகுத்தறிவாளராக இருக்க வேண்டும் என பள்ளிக்கால நண்பர் திரு பூபதியடன் ஆலோசனை செய்து  தீர் மானித்தோம். இதற்கு அய்யா சுபவீ (மானமிகு சுபவீர பாண்டியன்) அவர்கள் தோதாக இருக்கும் என்று தீர்மானித்தோம்.சுபவீயை அவர் வீட்டில் சந்தித்து சிலை திறப்புக்கு தேதி கேட்டோம், 19.08.21 என நாளை குறித்தார்.நண்பர் (பூபதி) கபிலன் உடனிருந்தார்.

எனது பள்ளிக்கால 6,7,&8 வகுப்பாசிரியர் திரு ராமன் அவர்களையும்,10&11 வகுப்பாசிரியர் திரு P A வீர ராகவன் அய்யா அவர்களையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பினேன்.அவர்களை நேரில் வீட்டுக்கு சென்று அழைத்தேன்.இருவரும் மகிழ்ச்சியுடன், ‘என் மாணவன் நடத்தும் நிகழ்ச்சிக்கு நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சிஎன இருவருமே கூறினர்.

சொல்லியவாறு பகல் 12.30 மணி அளவில் -சுபவீ  வந்துவிட்டார். கூடவே எனது வகுப்பாசிரியர்கள் தனித்தனி காரில் வந்து விட்டனர்.

அய்யா செம்மங்குடிஅவர்கள் தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார்.பள்ளிக்கூட மற்றும் கல்லூரி  நண்பர்கள் முனுசாமி, கபிலன், வாசுதேவன், மணிபாலன்  என்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர், என்னுடைய வகுப்பாசிரியர்களான திரு ராமன் அவர்கள் அவருடைய மனைவி(என்னுடைய 6ம் வகுப்பு ஆசிரியை) பேசும்போது உணர்ச்சி பெறுக்கால் அழுதே விட்டார்.பின் பள்ளி காலத்தில் 10,11 வகுப்பாசிரியர் திரு PA வீர் ராகவன் அய்யா பெருமையுடன் உரை நிகழ்த்தினார்.

திரு மணிபாலன் என்னோடு கல்லூரி படிப்பில் ஆங்கில வழி கற்றார்,கடவுள் மறுப்பாளர், பகுத்தறிவாளர். இருவரும் ஒரே துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றோம். அவருடைய வாழ்த்துறைக்குப் பின் அய்யா சுபவீ அவர்கள் உரை நிகழ்த்தினார். அவருடைய உச்சகட்டபேச்சாக, ‘இந்த சிலை வழிபாட்டுக்கல்ல,வழிகாட்டுவதற்குஎன பலத்த கைதட்டலுக்கிடையே பேச்சை முடித்தார்.

அடுத்து நான், என் ஏற்புரையில் இந்த கிராமத்தில் நான் ஏன் என் சிலை வைத்தேன் என விளக்கமளித்தேன்....... என் கிராம மக்கள் எல்லாரும் சாதாரண விவசாயிகளே என் வயது ஒத்தவர்கள் படித்தவர்களே இல்லை.

 எங்கள் கிராமத்தில் யாரும் இது போன்று அரசு சலுகைப் பெறவில்லை. இதை என் சந்ததிகள் உணரவேண்டும் எனும் எண்ணத்தில் கிராமத்தில் என் வீட்டு வளாகத்தில் என் சிலையை நிறுவ வேண்டும் எனும் எண்ணத்தில் மகாபலிபுரம் சென்று சிற்பியைப் பார்த்து என்னுடைய ஆளுயர புகைப்படம் கொடுத்தேன் கற் சிலை செய்ய சொன்னேன்.அதே சிலையை வீட்டு வளாகத்தில் வைத்தேன். சிலையை திறக்க பிரபலமான பகுத்தறிவாளரை தேடினேன். எனக்கு மானமிகு சுபவீரபாண்டியன் சிலை திறக்க இசைவு தந்தார். சிலையின் கீழ் கருங்கல் பலகையில் கீழ் கண்டவாறு பதித்துள்ளேன்

எழுத்தாளர்

பகுத்தறிவாளர்

நிறுவனர்; ஏழாம் அறிவு இயக்கம்

அகவை முதிர்ந்த தமிழறிஞர்

இந்த நான்கு பட்டங்கள் போதும் என் கிராமத்து மக்கள் சிந்தனைக்கு......நான் சில நாட்களில், சில வாரங்களில்,சில மாதங்களில், சில வருடங்களில் இறந்து போகலாம், என் முகம் மறந்து போகலாம்.....என் பேரன்களுக்கு நான் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் எனும் என் எண்ணம் தான் இந்த சிலை என என் பேச்சை முடித்தேன்.

தமிழர் நாகரிகம்

உலக மக்களின் நாகரிகத்தில் தமிழ் மக்களின் நாகரிகம் வேறுபட்டது......இருப்பிடம் தொழில் இவைகளை வைத்து மனிதர்களின் இனங்களை,சாதிகளை பிரித்தனர்

மருதம்

குறிஞ்சி

முல்லை

நெய்தல்

பாலை

மக்கள் வாழும் இடங்களைப் பொருத்து அவர்களின் தொழில் அமையும்.குணங்களும் வேறுபடும்

மருத நில மக்கள் வயலும் வயலைச்சார்ந்த இடங்களில் இருப்பிடங்களை அமைத்து வாழ்வர். இங்கு வாழ்பவர்கள் உழவர்கள். இவர்கள் முதலியார், பிள்ளைமார், வன்னியர், ஒடுக்கப்பட்ட மக்கள்.

குறிஞ்சி நில மக்கள், காடும் காட்டைச்சார்ந்த இடத்தில் வாழ்பவர்கள், ஆடு மாடுகளை மேய்ப்பவர்கள், இடையர்கள், கோனார்கள்.

முல்லை நில மக்கள், மலையும் மலைச்சார்ந்த இடத்தில் வாழும் மக்கள். வேடர்கள், இருளர்கள், மலைவாழ் மக்கள்,மலை நாயக்கர்கள், கொண்டா ரெட்டி,

 கொண்டா பள்ளி,கொண்டா என்றால் மலை என்று பெயர்

நெய்தல் நில மக்கள், கடலும் கடலைச் சார்ந்த இடத்தில் வாழ்பவர்கள். மீனவர்கள், செம்படவர்கள் கரையாளர்கள் என அழைக்கப்படுவர்,

பாலை நில மக்கள் ,மக்கள் அதிக நடமாட்டம் இல்லாத மணல் பிரதேசத்தில் வாழ்பவர்கள்.வாழ வழி தெரியாமல் வழி போக்கர்களை கொள்ளையடிப்பவர்கள், திருடர்கள், கள்ளர்கள், மறவர்கள் என அழைக்கப்படுவர். குற்றப் பரம்பரையை சார்ந்தவர்கள்.

இந்த ஐந்து நில மக்களும் ஐந்து சாதியை சார்ந்தவர்கள் என்பது புலனாகிறது.ஐந்து குணங்களை கொண்டவர்கள் என்பதாகும். உலகில் மக்களிடையே சாதியை புகுத்தியவர்கள் தமிழர்கள் என்பது தெரிகிறது.இன்றய காலகட்டத்தில் சாதிய தலைவர்கள் உருவாகி அரசியலில் சாதிகள் கூடாது என ஓலமிடுகின்றனர்.

சாதிய தலைவர்களுக்கு சாதி தேவைப்படுகிறது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட இனத்தவரான பட்டியலின மக்கள், பட்டியல் பழங்குடியினர் பண்பட்ட மக்களோடு இணையவேண்டும் என ஆசைப்படுகின்றனர். இதற்காக அந்த சமுகத்து இளைஞர்களை முன்னேரிய சமுகத்து பெண்களோடு பழக வேண்டும் என தூண்டி விடுகின்றனர்.

படிக்கவும் வேலையைத் தேடியும்  செல்லும் பெண்கள், பளபளப்பாக ஆடையணியும் ஆண்கள் வீசும் காதல் வலைகளில் விழுந்து விடுகின்றனர். நூற்றுக்கு நூறு இந்த காதல் வாழ்க்கை வெற்றிகரமாக அமைவதே இல்லை. ஒரு குழந்தை பிறந்த உடன் பிரிந்து விடுகின்றனர்.பிறந்த வீட்டை எதிர்த்து பிரிந்து காதலனோடு ஓடிப்போன பெண்கள் மீண்டும் தாய்வீட்டை நோக்கி பயணிக்க அச்சப்படுகின்றனர்.

காதலித்த ஆண் தன் பெற்றோர்களை நாடி புதிய வாழ்கையை அமைத்து கொள்கிறான்.

ஒடுக்கப்பட்ட சாதிய தலைவர்கள் தங்கள் சமுகத்து இளைஞர்களை அறவழியில் நடத்திச் செல்ல வேண்டும் என வழி காட்ட தவறி விடுகின்றனர். இதனால் வன்முறை குணம் கொண்ட இனம் என பேர் எடுக்கின்றனர்.

ஐந்து நில மக்களும் தங்கள் வாழ்வாதாரங்களை அங்கே கிடைக்கும் மண் வளம், காடு வளம்,நீர் வளம்(கடல்), மணல் {பாலைவனம்) தொழில்களை மேற்கொண்டு, சாதியங்களை பராமரிக்கின்றனர்.

மருதம்;

மண் வளம் என்பது விவசாயம் பெருக விளை நிலம், களிமண் கலந்த நிலத்தில்(தாங்கல் நிலம்),நீர் தங்கி நெல் கரும்பு போன்ற பயிர்கள் விளையும் நிலம். மணல் கலந்த பூமியில் அதற்கு தகுந்தாற் போல் தோட்டப்பயிர்கள் ( கத்திரி, வெண்டை, மிளகா, திணை, விறகு) விளையும். வெய்யிலாளி இன மக்களான

பறையரும் பள்ளிகளும் விவசாய கூலிகளாகவும் சிறுசிறு நில உடமையாளர்களாகவும் வாழ்கின்றனர். முதலியார்கள் பெறு நில முதலாளிகளாகவும் வாழ்கின்றனர். நிலமற்ற பறையர்கள் மக்கள் காவல் தொழில் செய்துவருகின்றனர்.

செம்மண் கலந்த நிலத்தில் மண்பாண்டம் செய்யும் தொழில் கொண்ட குயவர்கள் வாழ்வர்.

குறிஞ்சி; ஆடுமாடுகளை மேய்க வசதியாக காடு மற்றும் காட்டை சார்ந்த இடத்தில் வாழ்வர்.இவர்கள் பெரும்பாலும் இடையர் இனத்தை சார்ந்தவர்களாக இருப்பர்.

முல்லை; மலையும் மலையைச்சார்ந்த இடத்தில் வாழும் மக்கள். விலங்குகளை வேட்டையாடுவது, மலையில் விளையும் தேன்,பழங்கள் இவற்றை சேகரித்து மருதநில மக்களுக்கு விற்பனை செய்வது இவர்கள் தொழில். வேடர்கள்

குறவர்கள் மலை நாயகர்கள். இருளர்கள், போன்ற சாதிகள் வாழும் இடம்.

நெய்தல்; கடலும் கடலைச்சார்ந்த இடம்,மீன் பிடி தொழில் இவர்களின் முக்கியமான தொழில்.பிடித்த மீன்களை மருதநில , குறிஞ்சி மற்றும் முல்லை நில மக்களுக்கு விற்பனை செய்வது. மீனவர்கள், செம்படவர்கள் எனும் சாதிப்பேரிட்டு அழைக்கப்படுவர்.

பாலை;  திருடுவது ,கொள்ளையடிப்பது இவர்கள் தொழில். குற்றப்பரம்பரை என்றும் அழைக்கப்படுவர். கள்ளர் மறவர் எனும் சாதிப்பேரிட்டு அழைக்கப்படுவர்.இவர்கள் திருத்தப்பட்டு வியாபாரம்,மற்றும் விவசாயம் தொடர்புடைய தொழில் செய்து வருகின்றனர்.

இதனை அறிந்த ஆரியர்கள், மனிதர்களிடையே வர்னாசிரம தர்மத்தை புகுத்தினர். இது இந்திய மாநிலங்களில் வாழும் அனைத்து மொழி பேசும் மக்களிடையே உள்ள சாதிய பாகுபாடு.

வர்னாசிரம தர்மம் என்பது பார்ப்பனர்கள் மட்டுமே உயர்ந மனிதர்கள் என்றும்  மனிதனை 5 பாகங்களாக பிரித்து தலையில் தோன்றியவர் பிரமணர்கள்,அதாவது பிரம்மம் என்றால் பெரியபிராமணர்கள், பெரிய அல்லது உயர்ந்த மனிதர்கள் எனும் பொருள் கொண்டது.அறிவில் சிறந்தவர்கள் எனும் பொருள் கொண்டது.

மற்ற நான்கு வர்னத்தவரை மார்பு, சத்ரியயினம், வயிறு செட்டியார் இனம், இனப்பெருக்க உருப்பு கொண்ட இடுப்பு, சூத்ர இனம் என்றும்,கடைசி கால் பாதங்களில் தோன்றியவர்கள் பஞ்சமர்கள் என்றும் விதம் பிரித்தனர்.

இந்தியாவில் மட்டுமே இத்தகைய சாதிய கோட்பாடுகள் உள்ளன.அமெரிக்காவிலும் சாதிய கோட்பாடுகள் உள்ளன கருப்பு, வெள்ளை நிற மனிதர்களின் சாதி வெறி தலைவிரித்தாடுகின்றன. இஸ்லாம் மதத்திலும் சாதி வேறுபாடுகள் உண்டு,சுன்னி,குர்து, ஷியா, போன்ற பிரிவுகள்.இந்த மூன்று சாதிகளுக்கும் ஒரே கடவுள்,அல்லா மட்டுமே.

கிறித்துவத்திலும் ரோமன் கதோலிக் மற்றும் ப்ரட்டஸ்டண்ட், 7th day Adventist, பென்டகோஸ்ட், எவன்ஜலிக்கல்   எனும் சாதிய பிரிவுகள் உண்டு. இவை எல்லாவற்றிற்கும் ஒரே கடவுள் ஏசுவே.

ஒரு மொழி பேசினாலும் அதற்குள்ளே பல சாதிகள் இருக்கும்.தமிழ் நாட்டில் தமிழே பேசினாலும் அதற்குள் 5 சாதிய வேறுபாடுகள் உண்டு,இதே போல் மொழி வாரி மாநிலங்கள் உருவாகின,பின்பு சாதி வாரி மாநிலங்கள் உருவாகின.இந்தி பேசினாலும் ராஜபுத்ரர்கள் வாழும் ராஜஸ்தான், செட்டியார்கள் வாழும் குஜராத்,சிங் குகள் வாழும் பஞ்சாப், தகூர்கள் வாழும் அரியானா,எடையர்கள் வாழும் உத்தர் பிரதேசம், வன்னியர்கள்(குர்மி) வாழும் பீகார். பார்ப்பனர்கள் (முகர்ஜி,பேனர்ஜி} பெங்கால், பட்டியலின மக்கள் வாழும் மகாராட்ரம், ராயுடுக்கள், நாயுடுக்கள் வாழும் ஆந்திரம், ரெட்டிகள் வாழும் தெலங்கானா போன்ற மாநிலங்கள் உள்ளன

தமிழ் நாடு,கன்னடம்,மற்றும் கேரளா மூன்று மாநிலங்கள் மட்டும் சாதி வாரியாக பிரிக்கப்படாமல் உள்ளன.

தமிழ் இலக்கண இலக்கியங்கள் தோன்றி 2000 ஆண்டுகளாகிறது,அதற்கு முந்தைய நாட்களாக கூட இருக்கலாம்.

தமிழ் நாட்டில் 20ம் நூற்றாண்டில் பெரியார் எனும் சுயமரியாதை மற்றும் சுய சிந்தனையாளர் தோன்றிய பின்பே தமிழ் நாட்டில் ஐந்திணை மக்களில் தீண்டத்தகாத மக்கள் உள்ளனர்,அவர்களை தீண்டாமல் இருப்பது கொடிய சிந்தனை என மக்களிடையே மேடையேறி பேசினார்.

இந்தப்பேச்சு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருந்தது.

மனிதர்களுக்கு எப்படி குணங்கள் அமைகின்றன?

முன்னோர்கள் மூலமாக,வழி வழியாக,மரபு வழியாக, இதைத்தான் ஆங்கிலத்தில் genes ,

மரபணுக்கள் என்கிறோம். மனிதனுக்கு குணங்கள் பிறக்கும் போதே தோன்றிவிடுகிறது. ஒரு தொழிலை முன்னோர்கள் வழியாக மேற் கொள்ளும் போது, தொழில் ரீதியாக குணங்கள் அமைந்து விடுகிறது, அதாவது அணுக்கள் ரத்தத்தில் தோன்றி விடுகின்றன.

உழவுத்தொழில், தச்சுத் தொழில், தட்டான் தொழில்,மண் பாண்டம் செய்யும் தொழில்,படிப்புத் தொழில்(ஆசிரியர்),காவல் தொழில்,திருட்டுத் தொழில் இப்படியே குணங்களும் அமைந்து விடுவதால் சாதியங்கள் தோன்றின.

இது போன்ற சாதிகளில் இட ஒதுக்கீடு மூலமாக அரசுபணி கிடைக்கிறது, அரசு அதிகாரிகளாக ஆகிவிட்ட நிலையில் முன்னோர்கள் மரபு வழி குணங்களும் வெளிப்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

உலகின் மூத்த மூன்று மனித இனங்களில் தமிழினம் ஒன்று.இரண்டாவது யூத இனம்,

கிறித்துவத்தையும் இஸ்லாம் மத த்தையும் தழுவிக்கொண்டது, மூன்றாவது மங்கோலிய இனம் சீனாவில் பரவியது.இவர்கள் பின்பற்றிய கன்பூசியஸ் மதம்,பின்னாளில் புத்த மதத்தை தழுவிக்கொண்டது, இருப்பினும் அந்நாடு மாசே துங் தலைமையில் மதம் அற்ற கடவுள் மறுப்பு நாடாக மாறியது.

இந்தியாவில் புத்தர் தோன்றியதால் மனித உழைப்பை சுரண்டி வாழும்  பார்ப்பனர்களின் பொழப்பு சிக்கலாகி விட்டது.திட்டமிட்டு புத்தரை நாடு கடத்தி விட்டனர். புத்தரின் கொள்கைகளை கடைபிடித்தவர்கள், தூரக் கிழக்காசிய நாடுகளான கொரியா,வியட்னாம், கம்போடியா, ஜப்பான் போன்ற நாடுகளின் புத்த மதம் செழித்தோங்கிவிட்டது.

இந்து மதம் போர் நடப்பதையும் போர் மரணங்களையும் நியாப்படுத்துகிறது.ஆனால் புத்த மதம் போரே கூடா தென்கிறது, இதனால் தான் பின்னாளில் கலிங்கத்தின் மீது போர் தொடுத்த அசோக சக்ரவர்த்தி போர்

மரணங்களை கண்டுமனம் வேதனை அடைந்தார் .புத்த மதம் தழுவினார். தனது மகளான சங்கமித்தரா வை இலங்கைக்கு சென்று புத்த மதத்தை பரப்ப கட்டளையிட்டார்