Tuesday, February 2, 2021

ஏ.அ-73

 

இந்த விருது, எனக்கு ரூ.4000.மாதாந்திர மதிப்பூதியமும் தமிழ் நாடு முழுவதும் இலவச பேருந்து பிரயாணம் செய்ய உரிமை அட்டையும் வழங்கியது.இது எனக்கு மேலும் மகிழ்ச்சியூட்டியது. எத்தனையோ மனிதர்கள் வாழ்கின்றனர், அத்தனை பேருக்கும் அரசாங்கத்தின் அங்கீகாரம் என்பது சாதாரண மக்களுக்கு வழங்க முடியாது,சமுக சிந்தனையாளருக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும், அந்த வகையில் எனக்கு பெருமைதான்.

என் சிந்தனை விசாலமானது.இந்தியா முழுவதும் உள்ள குடும்பங்களில் சம்பரதாயம் சடங்கு என ஏராளமான மூட நம்பிக்கைகள் மண்டியுள்ளதை நான் அறிவேன்.இதற்கெல்லாம் மூல காரணம் ராமாயண மகாபாரத இதிகாசங்களின் தாக்கங்கங்களே. அதே கால கட்டத்தில் மத்திய தரைக் கடல் பகுதியில் வாழ்ந்த ஆரியர்கள் கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் பரவத்தொடங்கினர்.

இன்றைய ஆப்கானித்தான் அன்று தமிழர் வாழும் நிலப்பகுதியாக இருந்துள்ளது என சரித்திர சான்றுகளை அறிந்தேன். சிந்து சமவெளி நாகரிகம் தமிழர்களுடையதே என்பதை உணர ஆதாங்கள் கிடைத்துள்ளது. முன்னாள் இந்திய உச்சநீதி மன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜுவின் ஆய்வு நூலை படிக்க கிடைத்தது.

இன்றைய ஆப்பகனில் இன்றைய தமிழ் நாட்டின் ஊர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதை குறிப்பிடுகிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது? தமிழர்களை அங்கிருந்து அரபு நாட்டு இஸ்லாமியர்களால் விரட்டப்பட்டுள்ளனர் என தெரிகிறது. அது மட்டுமல்ல ஆப்கனிலிருந்து கிழக்கு நோக்கி பயணித்து சிந்து சம வெளியில் குடியேறினர் என்பது புலனாகிறது.அங்கு கிடைத்த கல்வெட்டு மற்றும் தாமிர பத்திர எழுத்துகள் தமிழை ஒத்த வட்டெழுத்துகள் காணப்படுகின்றன

No comments: