Tuesday, February 23, 2021

ஏ.அ-78

 

எங்கள் நிறுவனத்தின் அதிகாரிகள் 90 சதவிகிதம் முன்னேறிய இன அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் நிரம்பி இருந்தனர்.

எல்லாருமே உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மக்கள். இவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது, இதோ-

அதிகாரிகள் உத்தரவிடும் போது முடியாத வேலைகளை முடியும் என பொய் சொல்ல வேண்டும்.

அதிகாரிகளை எதிர்த்து பேசக்கூடாது.

அதிகாரிகளிடமோ,நுகர்வோர் மீதோ கோவப்படக் கூடாது.

சக ஊழியர்களிடம் மனம் கோணாமல் வேலை வாங்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி மாறுதல் ஆணை வந்தால் உடனே சென்று மாற்று இடத்தில் பணியில் சேர்ந்துவிட வேண்டும்.

பணியில் சேர்ந்த பிறகு விருப்பமான இடத்தை கேட்டு மனு அளிக்க வேண்டும்.

ஆனால் என் விஷயத்தில் விருப்பமான இடத்தை கேட்டு பெற்று இன்னலை அனுபவித்துள்ளேன்.எனவே நிர்வாகம் பணி மாறுதல் செய்யும் இடத்திற்கு பணியில் சேர்ந்து விடுவேன்.அப்படி சென்று பணியாற்றியதால் எனக்கு பிற மாநில மக்களிடம் பழக வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு நல்ல அனுபவமாகவே எடுத்துக் கொண்டேன்.

தொழிலாளர் சங்கத்தில் இருந்தால் ஓரளவுக்கு பணி பாதுகாப்பு கிடைக்கும், இல்லையேல் அதிகாரிகளிடம் சுமுகமாக பழக தெரிந்திருக்க வேண்டும். ஊழியர்களின் இனம் சார்ந்த அதிகாரிகளுக்கு நல்ல சலுகை கிடைக்கும்.என் இனத்தில் எனக்கு தெரிந்த அதிகாரிகள் கிடையாது,

1995-96 ல் எனக்கு தெரிந்த ஒரு உறவுக்கார ஐஏஎஸ் அதிகாரி கிடைத்தார் ,அதே நேரத்தில் என் இனம் சார்ந்த ஒரு தொழிற்சங்க தலைவரின் நட்பு கிடைத்தது. அதன்பின் 10 ஆண்டுகள் நிம்மதியாக பணிபுரிந்து 2007 ம் ஆண்டுஆகத்து மாதத்திலிருந்து   ஒய்வை பெற்றேன்.

No comments: